Tuesday, December 30, 2008

கனவே கலையாதே..

கண்மூடிய கனவில்
கைக்கு எட்டியவை
எட்டாமல் ஓடியதேன்
நிற்காமல் நிஜத்தில்தான்!!!!!!

கனவே.. நீ கலையாதே..

இமையெனும் கதவிலே
இழுத்துபூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை
காணாமல் போய்விடுவாயே..

கனவே நீ கலையாதே..

Saturday, December 13, 2008

சின்ன சின்ன..

சின்ன சின்ன புள்ளிகள்தான்
பரந்தே விரியும் பெருங்கோலமாய்..
சின்ன சின்ன மழைத்துளிதான்
பெருகி யோடுமே வெள்ளமதுவாய்..

சின்ன சின்ன துகள்கள்தான்
உணவாகுமே சிற்றெரும் பதற்கே....
சின்ன சின்ன முத்துக்கள்தான்
கோர்த்தே மாலையாகும் கழுத்துக்கே..

சின்ன சின்ன தவறுகள்தான்
உணர வைக்குமே உண்மைநெறி..
சின்ன சின்ன தடைகள்தான்
படைக்க தூண்டுமே சாதனைதான்..

சின்ன சின்ன புன்னகைதான்
நட்பெனும் பூ மலரத்தான்..
நட்புவலைகள் விரியட்டுமே..
சின்ன சின்ன கவலையுந்தான்..
கற்பூரமாய் காற்றில் கரைய..

Sunday, December 7, 2008

அழகு மலராட...


பூசையிலும் நீதானே..
ஆசையிலும் நீதானே..
மணப்பதுவும் நீதானே..
மகரந்தசேர்க்கையிலும் நீதானே..

மலர்கொத்தாகி மணம் பரப்புவாயே....
மலர்வளையமாகி மனம் கனப்பாயே..
சூரியனைக் கண்டே சீக்கிரம் மலர்வாயே
நிலவின் ஒளியில் நிர்மலமாய் ஜொலிப்பாயே..

குழந்தை சிரிப்பில் உன்னழகே
குமரியின் தலையில் மின்னுமழகே
கலர்கலராய் கண்ணை கவருமழகே
கிளர்ச்சியும் ஊட்டும் கவிதையழகே..

காகிதப்பூக்கள் கடையிலே குவிந்துகிடக்க
கசங்கியே போனாலும் கவர்வது உன்னழகே..
வாழ்வு எனும் சிறுபயணத்தில்
வாடிப் போகிறாயே .. சீக்கிரந்தான்!!!!!

ஒருநாளே வாழ்ந்தாலும் ..
ஓராயிரம் தடம் பதித்தவளே..
மீதமுள்ள என்ஆயுள் தருகிறேன் நான் உனக்கு..
மறுக்காமல் ஏற்பாயா.. மலரே .. நீயுந்தான் ????

Friday, December 5, 2008

விடியலைத் தேடி..

இரவெனும் நாடகம்
இருளிலே அரங்கேறும்
திரைகிழிக்கும் கதிரவனே..
மறைபோற்றும் பகலவனே..

கூப்பிடும் சேவல்
குரல்கேட்டு வந்தாயா?
பறவையதன் கானம்தான்
உறக்கமதை கலைத்திட்டதா....?????
பூக்களின் வாசந்தான்
தாக்கித்தான் விழித்தாயா?????

சந்தேகம் எனக்குண்டு!!!!!!
எழுப்புபவன் நீயா???
எழுப்பப்படுபவன் நீயா?????
கிழக்கும் மேற்கும்
அறிந்தேனே உன்னாலே..
வாழ்க்கை வழக்கம்
வரைந்தனரே உன்வரவாலே..

நீயோ..
அண்டமுடியா அனல்கோளம்
உதயமது மறந்தாலோ
கண்டமதும் கருநிறமாய்
பூண்டிடுமே இருள்கோளம்....

விடியலைத் தேடும்
விட்டில்கள் பல உண்டு..
புலருமொரு காலையென்றே
புலம்புமொரு கூட்டமுண்டு..

காலை கதிரொளியே..
நீ..
என்வாசல் வந்தது..
எந்த விடியல் தேடித்தான்?????????

Wednesday, November 26, 2008

மேகமே.. மேகமே..

வெண்ணிற மேகமே..
கண்ணீரும் ஏன் தானோ????
காற்றது கலைப்பதனால்
கலங்காதே நீயுந்தான்..

ஓடியே திரிந்தாலும்
ஓர்சக்தி உனக்குண்டு..
ஓளிபரப்பும் கதிரவனை
ஒளியவே வைக்கவுந்தான்..

வாழ்க்கை பாடமதுவே.
வலிமையது உண்டுனக்கு
உணர்ந்திடு உன் திறனை
உலகமது உன்கையிலே..

Tuesday, November 25, 2008

கற்பனை என்றாலும்...

தட்டிவிட்டேன் கற்பனை குதிரையை..
அது..
ஓடி ஓடி களைத்தவேளை ..
கண்முன் நின்றது..
கசக்கும் நிஜம் .!!!!

கடவுள் உள்ளமே..


கண்விழித்தேன் உன்பேர் சொல்லி..-தின
கடமை முடித்தேன் உன் நாமத்தோடு..
ஆதியும் அந்தமும் நீயானாய்..-எந்த
தூணிலும் துரும்பிலும் வடிவானாய்..
கவிதை எனும் பெயராலே-நல்ல
கருத்துக்கள் பாட அருள்வாயே..