Saturday, November 9, 2019

விலைவாசி

 காய்கறிக் காரம்மா..
ரொம்ப கறாரு தானம்மா.
காசெல்லாம்  வேண்டாம்..
கணக்கு வெச்சிக்கறேன்..
காசோலையா கொடுத்திடு..
கரீட்டா..ஆமாம். ..என்றாள்..

மருந்து கடைக்காரரோ
இருக்கு இன்னும் ரெண்டு நாளு..
இருக்கற ஐநூறு ஆயிரத்தில்
இங்க மருந்தும்..சோப்பும் வாங்கென்றார்..

தையல் காரரோ..
துணி இங்கே இருக்கட்டும்..
பணத்தோட வாங்க என்றார்...

ஊரைச் சுத்திட்டு..
நிலவரம் தெரிஞ்சிண்டு..
வீட்டுக்குள் நுழைய..
வந்தாள் ..
வேலைசெய்யும் லஷ்மியுமே...
ஐநூறும் ஆயிரமும்..
யாரிடமும் வாங்காதே..
செல்லாது இப்போ ...
சொன்ன நேரம்..
சிரித்தபடி சொன்னாள்..
வாங்குற சம்பளம் ..
அட்வான்ஸ் ல கழிஞ்சாச்சு..
எட்டணா கையில் இல்லை..
எங்கிட்டு போவேன்..
ஆயிரமும் ஐநூறும்..

வைத்திருப்பவருக்கு தானே..
வயிறு கலங்கும்..

Thursday, November 7, 2019

Happy birthday kamal

கமல்..கமல்..கமல்
கள்ளமில்லா..களத்தூர்
கண்ணம்மா கமல்
குதப்பும் வெத்தலையுடன்
சப்பாணி கமல்

இளமை ஊஞ்சலாடி
நினைத்தாலே இனிக்கும்
பஞ்ச தந்திரம் அறியா
பம்மல் கே சம்பந்தம் ' கமல்'

மூக்கை சுருக்கும்
மீண்டும் கோகிலா கமல்..

சலங்கை ஒலி கமல்
சகலகலா வல்ல கமல்

வேலு நாயக்கர் கமல்
வசூல் ராஜா கமல்

மூன்றாம் பிறை கமல்
மகாநதிக் கமல்

புஷ்பக் கமல்
புன்னகை மன்னன் கமல்

காக்கிச் சட்டை கமல்
காதலா காதலா கமல்

அவ்வை சண்முகி கமல்
அன்பே சிவம் கமல்..

சிப்பிக்குள் முத்து கமல்
சிங்கார வேலன் கமல்

நம்மவர் கமல்..
நீயா..கமல் இது..?

'ஆள வந்தான்' மட்டும்
அப்போதே பிடிக்கலை..
இப்பவும் அதே கதைதான்
அப்பு ராஜாவுக்கே
இப்போதும் என் வோட்டு.

Wednesday, November 6, 2019

Happy diwali

happy diwali.
புள்ளிகள் ஒன்றில்லாமலே
'பா'ட்டில் மூடியும்..
பெயிண்ட் ப்ரஷின் முனையுடன்
புதுமையான கோலம்.

'you too can do ' என்று
YouTube உறுதியளிக்க..
உருவான சின்னகோலம்.

வண்ணங்கள் விளையாட
வெடிச்சத்தம் வான் பிளக்க
வந்தது தீபாவளி..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Monday, November 4, 2019

பக்கோடா..bond..

பக்கோடா..bond..

 அன்புள்ள சிங்காரச் சென்னை தோழமைகளே..
இந்த அடை மழைக்கு உங்கள் எல்லாருக்கும் ஒரு செட் பூரி் மசால் என் கிச்சனிலிருந்து..

ஆனால் மழைக்கு உகந்தது..  பக்கோடாதான் பண்ணி சாப்பிட்டு..பேஷா இருங்கோ..

தொப்பலா நனைஞ்சு, ஏழு கடல் ஏழு குழி தாண்டி வீட்டுக்குள் நுழையும்போது இழுக்கணுமே..ஆனியன் பக்கோடா வாசனையும் இஞ்சியும் ஏலமும் போட்ட டீயும்.
யார் முதல்ல வீட்டுக்குள் நுழையறாளோ அவர்கள் ட்யூட்டி ...கணவர் entry முதல்ல என்றால் கடலை மாவும் , கட் பண்ணி வெங்காயமும் போட்டு கமகமனு கைவண்ணம் காட்ட வேண்டியது தலையாய கடமை...மழையில் நனைந்து( நீந்தி) வரும் மனைவிக்கும் மகன்(ள்) க்கும் பக்கோடா நீட்ட...bond கெட்டியாகும். பக்கத்து வீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் பதமா எடுத்து கொண்டு போய்  கொடுக்கலாம்.

முதுமை நமக்கும் வரும்..மொறுமொறு சாப்பிட முடியாம போகும்..ஆனா மெல்லறதுக்கு இருக்கும் இந்த பக்கோடா நினைவுகள்..
அப்படியே..ஒரு பாட்டும் பாடிக்கலாம்.

அன்றொரு  நாள் .அதே மழையில்.
அவள் (ர்) இருந்தாள் என் அருகில்..நான்
அடைக்கலம் அடைந்தேன்..
ஆனியன் பக்கோடாவில்..
நீ அறிவாயே..,அடைமழையே

பக்கோடா பந்தம்..என்றும் நிலையானது..

Wednesday, October 30, 2019

Match fixing

Nandhu Sundhu sir..இப்படி flashback போக வெச்சிட்டீங்களே
matching fixing.
இரண்டு காலமாப் பிரிக்கலாம்..வெ.வா.கா(வெட்டி வாங்கிய காலம்) ஒ.வ.கா (ஒட்டி வந்த காலம்).
என் அம்மா இந்த ரெண்டு காலத்திலும் கலக்கியும் இருக்கா..கலங்கியும் போயிருக்கா. நல்லி,குமரனில் புடவை வேட்டை முடிந்தபின்..படையெடுப்பு ப்ளவுஸ் செக்‌ஷன் நோக்கி.. ஒரு மஞ்ச புடவை காண்பிச்சு மாட்ச்சிங் கொடு என்பாள்..அடுக்கி இருக்கும் வரிசையில் வெச்சு வெச்சு பார்ப்பார் சேல்ஸ்மேன். நாலஞ்சு எடுத்து போடுவார்..' இது கோவிந்தா மாதிரி இருக்கே..இது மஸ்ட்டர்ட் கொஞ்சம் தூக்கலா இருக்கு..அந்த மஞ்ச லைட்டை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கோ..கலர் சரியா தெரியல..ட்யூப் லைட் வெளிச்சம் எதுக்கு இந்த கவுண்டருக்கு..நற நறனு சேல்ஸ்மேன் பல்லைக் கடித்தபடி பல்லைக் காட்டுவார்..பழைய கஸ்(ஷ்)டமராச்சே..கடைசில முதல்ல காண்பிச்சதே சரியான மாட்ச்சோ என்று மனசு சொல்லும். எனக்கு கொஞ்சம் வெளிச்சத்துல காண்பிங்கோ என்பாள். அந்த floor கடைசியில் ஒரு குட்டி ஜன்னல் இருக்கும்..இந்த மாதிரி பாடாபடுத்துபவருக்கென்றே..முழு bundle ம் ஒருத்தர் சுமந்து வர..Z security level ல் ரெண்டு பேர் escort வேற..இத்துணூண்டு இடுக்குல வெயில்ல வெச்சு பார்த்து ஒரு 75 cm வாங்க முடிவாகும்.. (கடைக்காரரின் சொட்டைக்கு இவங்க எல்லாந்தான் காரணமோ)..
இதுக்கு அடுத்தது..ஒட்டி வந்த காலம்..அதான் attached blouse..introduce ஆனபோது இந்திர லோக சந்தோஷம்..இனிமே நோ blouse piece tension..ஆனா அதை டைலர்கள் எல்லாம் குழாய் மாதிரி தைக்க..அம்மா தையா தக்கானு குதிச்சு..சித்திகளின் அறிவுரையில attached blouse எல்லாம்் என் பெண்களுக்கு cute பாவாடை ஆனது..
மீண்டும் கஜினி படையெடுப்பு..கட் பீஸ் தேடி..
இப்போது என் காலம்..கலம்காரி காலம்..சம்பந்தமே இல்லாமல்..மாட்ச்சிங்..பூ போட்ட புடவைக்கு..புத்தர் டிசைன் ப்ளவுஸ்..
கோடுகட்ட புடவைக்கு பூப் போட்ட மாட்ச்சிங்..சத்தியமா..புடவைக்கு மாட்ச்சே இருக்கக்கூடாது இப்போ trend.
never ending ..this matching fixing..
இது எப்படி இருக்கு என் அனுபவம்  Nandhu Sundhu sir

Tuesday, October 29, 2019

சிறகுகள் முளைத்தே

சிறகுகள் முளைத்தே..

அப்பா தட்டிலிருக்கும் நெய் மணக்கும் ரசம் சாதமும்.
அம்மா வார்க்கும் ஒட்டவழித்த மாவின் கடைசி தோசையும்
இதமே..என்றும்
இறக்கை முளைக்குமுன்..

#treasures_preserved
Drawing by Aishwarya Ramasami -2010

Monday, October 28, 2019

கீரை

எச to Saraswathi Gayathri..

கீரை ஆய்தல்

கடைந்த பாற்கடலில்..
கிளம்பி வெளியேறியது...
ஆலகால விஷமென்றால்..
கடையும்..
கீரை எம்மாத்திரம்..
பழுதும்..பழுப்பும்..
படியும் அழுக்கும்..
பாங்காய் விலக்கி..
பருப்போடு கடைந்து..
A விட்டமின் சத்தோடு
அன்புமும் கூட சேர்த்து..
மசித்த கீரை..
மயக்க வைக்காதெனினும்
மறுபடி கேட்க வைக்குமே..
Saraswathi Gayathri

Monday, October 21, 2019

Trichy

அருமையான பதிவு... என்னையும் எங்கூர எட்டி பார்க்க வைச்சது. Shiv K Kumar sir

திருச்சி வாசம்..
TST bus..
TMS பாட்டு..
ஓர சீட்டில் ..
ஊரை வேடிக்கை..

மலைக்கோட்டை வரும்..
மாங்கு..மாங்குனு..
தெப்பகுளம் வழியா..
தாயுமானவருக்கு..
தோப்புக்கரணம் போட்டு..
சாரதாஸிலும்..கீதாஸிலும்..
கிடீஸ் கார்னரிலும்..
துணி வாங்கி..
பசியாற..போவோம்..
வசந்த் பவனுக்கு..
குடும்பம்..ரொம்ப ஒத்துமையா..
எல்லாரும்..ஒரே அயிட்டம்..
மசாலா தோசை ஆர்டர் பண்ணி..
முடிக்க முடியாம ..முழுங்கி..
தின்ன தோசை..
சீரணமாக..
பொடி நடையா நடந்து ..
வீடு வந்து சேர்வோம்..
வாங்கி வந்த துணியை
தினமும் எடுத்து பார்த்து..
புது வாசம் முகர்ந்து பார்த்து..
எப்போ தீபாவளி வரும்..
முதல் ஆளா..ரெடி ஆகி..
புதுத் துணி போட்டு
பட்டாசு வெடிச்சு..
ஊரை எழுப்பிய கதையெல்லாம்..
இப்போ சொன்னா..
So cheap ங்கறாங்க..
திரும்பிப் பார்த்தேன்..
திரும்பி வரா நாட்களை..
உங்கள் பதிவின் மூலம்..
Thanks Shiv K Kumar

Friday, October 11, 2019

Bye bye dolls

Bye bye dolls..
See you next year..

(My friend radha's golu)

கொண்டாட்டம் முடிவு
கொலு பொம்மைகள்...
பரணி வாசத்துக்கு..
பழையபடி போகும்..
மூச்சு முட்ட..
மூக்கு உடையாதிருக்க..
பழைய புடவையிலும்..
பேப்பர் சுருள்களிலும்..
தஞ்சம் புகுமே....
நம்மையே பார்த்த வண்ணம்..
நாளை ஓட்டிய இவை(வர்)கள்..

'என்னையே பார்க்கிறாப்போல
இருக்கு.'..கொலுவிருக்கும்
அவதாரங்களும்..
ஆன்மீக ஆசான்களுமென்று..
அடங்கி ஒடுங்கி..
அமைதி காத்த நமக்கு..
படுக்க வைத்த பொம்மைகள்..
படு சுதந்திரம் தருமோ..
கெடுபிடி ஏதுமில்லை..இனி
அப்பாடா..
அடுத்த நவராத்திரி வரை....

அவன் ஒரு தொடர்கதை

அவன் ஒரு தொடர்கதை..எச to Shiv K Kumar sir post

தலைச்சனாய்ப் பிறந்தது
தலைவவிதி இல்லையென்று
தலை நிமிர வைப்பான்..
தலைமுறைகள் புகழ்ந்திடவே..

பெட்டி போல அறையிலே
படுப்பர் நால்வர் அங்கே
பொட்டலச் சாப்பாடு வரும்
புளித்த தயிர் சாதத்துடன்.

உணவகம் பல உண்டு
ஊர் சுற்ற இடமுண்டு
முடங்கிக் கிடப்பா நினவனே
கிடங்கு அறை தனிலே

விடுப்புக்கு வரும் ஆசையிலே
விடிய விடிய உழைப்பான்
வளையலும்்  செயினு மாகும்
வங்கியில் சேர்த்த பணம்

சிக்கனம் நீயப்பா என
சுற்றம் கேலி செய்தாலும்
சிரித்தே மழுப்பிடுவான்..
சிந்தையில் ஆழ்ந்திடுவான்.

கடமைகள் முடிக்க..
கல்யாணம் நடக்கும்.
குழந்தைகள் வர
கதையும் தொடரும்.

வெளியூர் மாற்றலாகும்.
விட முடியா பள்ளிச்சீட்டு
வாட்ஸப்பும் வீடியோவிலும்
வாழ்க்கை நடத்திடலாம்
வந்த சந்தர்ப்பமிது
விட்டு விடாதே என்பாள்.

விடை கொடுத்தனுப்புவாள்
விலைவாசியும் கைகாட்டி..

பொட்டி அறை வாழ்க்கை
பொட்டலச் சாப்பாடு..
"செல்"லிலே வாழ்க்கை..( செல்- சிறிய அறை. ,ஃபோன்)
சேர்க்கணுமே இப்போது
செல்லங்கள் கண்மணிகள்
செழிப்பாய் வாழ்ந்திடவே..

அவன்..
ஒரு தொடர்கதைதான்

Wednesday, September 18, 2019

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க
. டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..

அந்தக் கோணக் கழுத்தோடயே பால் கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.
ரயில் பயணம் என்றும் சுகம்..மிடில் பெர்த் இடித்தாலும்..
இனிமே ஆறு மணிக்கு எல்லாரையும் எழுப்பிடுவாங்களாமே..
பரிதாபம்..அந்தோ பரிதாபம்..பாட்டு தான் இப்போ மனசில ஓடறது

Tuesday, September 10, 2019

Ammaa

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

Friday, September 6, 2019

என் ஜீவன் நீதானே

#படம்_பார்த்து_கதை
#madhyamar_Sunday_special க்காக எழுதிய so called என் கதை.

#என்_ஜீவன்_நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .

 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.

"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..

நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.

சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.

தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள்.
சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..

" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.."
மருமகள்கள் பேச்சுக் குரல்..

ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.
"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..
" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".
அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..

"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

Tuesday, September 3, 2019

கொடுப்பினை..படம் பார்த்து கதை

#சண்டே_ஸ்பெஷல்...
#madhyamar_Special. எல்லா வாரமும் ஒரு புது விதமாக தலைப்பு கொடுத்து ..சிந்தனை தூண்டும் விதம் எழுதத் தூண்டும் இடம்.

இந்த வாரம்  #படம்_பார்த்து_கதை.
4 படங்களில்..மூன்று படத்திற்க்கு எழுதினேன்.
அதில் இந்த படத்துக்கு என் கதை..

#கொடுப்பினை

"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.
இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"சகலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.
டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.
அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

ஏய கிரி்ஜா..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.

தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..?
யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.
இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.
அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..

மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம்
அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..
"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.

"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

Monday, September 2, 2019

Bandh day

எழுந்திருக்க மனமிலா..
சோம்பலான காலை..
எடுப்பாரன்றி..
வீசி எறியப்பட்ட...செய்தித்தாள்
தூக்கில் தொங்கும் பால் பாக்கெட்..
எதுக்குமே வாசப்படி இறங்க வேண்டாம்..
எது இருக்கோ..அதே போதும்..
அடைப்பட்ட குழந்தைகள்..
சனி ஞாயிறை விட..
சுகம் தருதோ..??

சுற்றி எல்லாரும் இருக்கும்..
சுறுசுறுப்பை சூறையாடும்
சிற்றின்பம் சிலருக்கும்..
பேரிழப்பு ..
பொருளாதாரத்துக்கும்..
தரும்..
வேலை நிறுத்தங்கள்..
வழி காட்டுமா..
வளர்ச்சிக்கு..!!!!

Friday, August 30, 2019

மாகிமை

மாகி(மை)
maggiyananda Mayi.என் கடைக்குட்டியின் செல்லப் பேர் ஒரு காலத்தில். A for apple சொல்லும்போது கூட M for maggiனு சொல்வோம் நாங்க.மாகி ban ஆனப்போ ஆடிப்போன குடும்பத்தில் நாங்களும் ஒண்ணு.
மாகி படைத்து விட்டால்
மாமலையும் ஓர் கடுகாய்
மளமளனு வேலை நடக்கும்.
காலம் மாறித்தானே போகும்.

ஏன்னா...இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டோமே.. weight conscious..diet plan..etc..etc..மாகிக்கு வந்தது முதல் வேட்டு.பாக்கெட் பாக்கெட்டா ரொம்பி வழிஞ்சது போய்..
போதும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு மாசத்துக்குனு மனதை அடக்க ஆரம்பிப்பு.
இரண்டு நாள் முன்னாடி ..இருந்த பொட்டலமெல்லாம் காலியாக எங்களுக்குள் நடந்த conversation.
அவள்: அம்மா..மாகி காலி.வாங்கிண்டு வா. ஒரே ஒரு பாக்கெட் போதும்.என்னை tempt பண்ற மாதிரி offer ல கிடச்சுதுனு அள்ளிண்டு வராதே.ஆமாம் சொல்லிட்டேன்.
நான்: அட என செல்லமே மாகியானந்தமயி..உன் சித்தம் என் பாக்கியம்.
பையை தூக்கிண்டு கடைக்கும் போயாச்சு.எல்லா சாமானும் வாங்கினப்பறம் என்னவோ மிஸ் ஆறதேனு மண்டை குடைய..(மைண்ட் வாய்ஸ் இதுக்குத்தான் வயசான காலத்தில லிஸ்ட் எழுதிண்டு வரணுங்கறதுனு என்னை உசுப்பித்து.)
பில் போடும் வேளையில் ..கண்டேன் சீதையை..மாகி ..மாகி..வரிசையா அடுக்கி வைத்தபடி ,என்ன தேடறீங்க அக்கா..என்னைக் கேட்டாள் கடையில் வேலை செய்யும் பெண்.இதே தான் ம்மா..
ஒரு பாக்கெட் கொடு என்றேன். பழக்கப்பட்ட அவள் சொன்னாள்..அக்கா இப்போ ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு சூப்பர் மாகி bowl free க்கா..இந்த offer
இப்பவே முடிஞ்சிடும் . ஒரு இரண்டாவது எடுத்துப் போங்க என்றாள்..ஓசிக்கு ஆசை யாரை விட்டது. very colorful and catchy bowl. வாங்கியாச்சு.
வீட்டுக்கு வந்ததும் மகளைக் கூப்பிட்டு மாகி இந்தாம்மா என்றேன்.
யக்..இது யார் கேட்டா..எனக்கு இந்த flavour பிடிக்காதே..அதைக் கூட பாக்க மாட்டியா.. ஏம்மா free கிடைச்சதால்் என் favourite மறந்து போச்சா ..சரி சரி..போ..adjust பண்ணிக்கறேன் இந்த டைம் என்றாள்.
டீவில  ஓடிக் கொண்டிருந்த ரஜினி பாட்டு..என்
காதில் இப்படி விழுந்தது..

cupக்கும் , glassக்கும், spoonக்கும் ஆசைப்பட்டு..
வாழ்கின்ற வாழ்வுக்கு
என்றைக்கும் அர்த்தமில்ல..
இதைப் புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..?
 culprit நான் தானே?

Shopping

புடவை ஷாப்பிங்.

காலேஜ் ethnic day..
கனவுடன் பட்டாம்பூச்சிகள்..

கறுப்பு கலர்..
கண்டிப்பா கலந்து இருக்கணும்..

கட்டிண்டால்..
கரீனா கபூர் மாதிரி தெரியணும்.

கண்ணை பறிக்கும் ஜரிகை கூடாது
கண்ணு போடறாப்போல இருக்கோணும் என் செலக்‌ஷன்..

கண்டிஷன் ...கடகடவென்று
கடைக்குட்டியும் போட்டாளே..

கூல் டிரிங்க்கும் கையுமா
கடை கடையா ஏறி இறங்கல்..

கலர் பிடிச்சா .பார்டர் படு 'போ'ர்
பார்டர்  பிடித்தாலோ..
ப்ளவுஸும் ஃப்ளாப்பாச்சு..

மால்கள் சுத்தி வந்தும்
மனசுக் கொண்ணும் பிடிக்கலை.

பெரிய கடைகளில் எல்லாம்
பெரிசா ஒண்ணும் புதுசா இல்லை..

பக்கத்து பொட்டிக்(boutique) கடையில்
புதுப்புது டிசைனில்
பளிச்சுனு புடவை கிடைக்க..
பிரித்து கட்டி அழகு பார்க்க
பிரமித்து நின்றேன்..
பாரம்பரிய உடை அழகே தனிதான்.

ethnic day க்கள்..
அடிக்கடி வரட்டும்..
எங்கோ மூலையில்..ஈனஸ்வரத்தில்
என் மைண்ட் வாய்ஸ்

Wednesday, August 21, 2019

தேடல்

தேடல்
எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..

மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேம்மா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..

Thursday, May 16, 2019

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3 கடிதம் 1

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3
கடிதம் 1

அன்புள்ள பவித்ரா அக்காவுக்கு

ஷேமம்.ஷேமத்திற்கு பதில்.
அம்மா என் பக்கத்திலே உட்கார்ந்து சொல்ல சொல்ல எழுதறேன்.
அங்கு உன்னோட ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி இருக்கு? நீ கிளம்பினதும் வீடே வெறிச்சுனு போச்சு. குழந்தை ராத்திரி பூரா அழுதா..உன்னைத் தேடிண்டே இருந்தா.

 இப்பொ நாலு நாளா அழுகை கொஞ்சம் குறைஞ்சுருக்கு. அம்மாவோடயும் என்னோடயும்  பழகிட்டா. பவுடர் பால் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறா. உன்னை பத்தி தான் நினைப்பு அம்மாக்கு எப்போதும்.

உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ. பளுவான வேலையெல்லாம் செய்யாம இருக்கச் சொன்னா..இன்னும் நீ பச்சை உடம்புக்காரிதான். இப்போ சரியா கவனிச்சுக்கலைனா பின்னாடி ரொம்பா வீக்காகிடுவேனு அம்மாக்கு கவலை.
அப்பா வார்த்தை க்கு வார்த்தை உன்னையே சொல்லிண்டு இருக்கா.
 குழந்தையப் பத்தி கவலைப் படாதே..இப்போ கூட இங்கேதான் என் மடியில் படுத்துண்டு தூங்கறா. உன் உடம்பைப் பார்த்துக்கோ.அத்திம்பேரைக் கேட்டதா சொல்லு.அடுத்த லீவு உனக்கு எப்போ?

அம்மா இப்போ எழுந்து போயாச்சு.
அக்கா..உனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.அடுத்த வாரம் புதன்கிழமை க்குள்ள ஃபீஸ் கட்டணும்.இல்லனா பரீட்சை எழுத விடமாட்டா. இந்த லெட்டரை தந்தி போல பாவித்து மணியார்டர் அனுப்பிடுக்கா..போன வருஷத்துக்கு முந்தின வருஷம் வாங்கின இங்க் பேனா.ரொம்ப இங்க் கொட்டறது. அதுக்கும் சேர்த்து ஒரு அஞ்சு ரூபா அனுப்ப முடியுமாக்கா..
இங்கே எல்லாரும் செளக்கியம். குழந்தை சமத்தா இருக்கா. கவலைப்படாதே.
இப்படிக்கு
அன்புத் தங்கை
சுசீ

Sunday, May 12, 2019

ராஜ ராகம்

ராஜ ராகம்..
Raaja sir music..a part and parcel of life)

 வழிந்தோடிய நதியாய்
வயலினும் விணையும்
வசப்படுத்த
செல்லோவும் சித்தாரும்
செல்லமாய் வருட
கிட்டாரின் தந்திகள்
கிறங்கத்தா னடிக்க
பியானோக்கள்..
புத்தம் புது மெட்டிசைக்க
தபேலாக்காளின் தாளங்கள்
தலையாட்டச் செய்ய
கோரஸின் குரல்களோடு
கூட்டத்தில் நாம்கலக்க
நாதஸ்வரங்கள்..
நாத வெள்ளத்தில் மூழ்கடிக்க
தாரையும் தப்பட்டையும்
தனை மறந்தாடச்செய்ய
புல்லாங்குழல்கள்
புதுராகம் பாட..
பேரறியாக் கருவிகளும்
மோட்சமடைந்ததுவே
மாஸ்ட்ரோ உன்னாலே..
சுகமொ சோகமோ
சுற்றி வரும்
மெட்டுனதே..
இசைஞானி உன்னாலே
இசையும் இயல்பானதிங்கே
தாலாட்டும் கரங்கள்
நம்மை விட்டுச் சென்றாலும்
தனிமைக்கு ஓர் துணை
தெவிட்டாத உன்னிசை தானே

Saturday, May 4, 2019

Soka mother- may 3rd 2019

soka mother
i am a soka mother.
I have no fear

welcoming each day with cheer
worries vanish and disappear.
my mission becoming clear
i never stop to persevere

gratitude filling my heart
I've learnt the living art.
every dawn is a fresh start
with power packed kick start.

hopping the hurdles with hope
stopping not till i win.

 I am a soka mother..and
i am very special.
thank u

finding the mission of life
triumphing

Wednesday, April 17, 2019

பெத்த மனசு..

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்

'வரட்டும் ..வரட்டும்..நன்னா  நாலு கேள்வி நறுக்குனு கேட்கணும்..'
Airport arrival வாசலில் விடிகாலை மூணு மணிக்கு வரும் flight  க்கு முந்திரிக் கொட்டையாய் பன்னெண்டு மணிக்கே வந்து..ஓரமா ஒரு எடம் பார்த்து உக்கார்ந்தாச்சு..
டாடா 'பை' 'பை'க்கள்..குடும்பத்தோட வந்து ஒரு குட்டி பிக்னிக் பலருக்கு.
கல்யாணக் களையோடு கடைகள். spoon ,fork ஆல குத்தி சண்டை போட்டும் கொஞ்சங்கூட கிழியாம அடம் பிடிச்ச தோசையை ,யாரும் பார்க்கலைனு நினைச்சுண்டு கையால லார்ட் லபக் தாஸ் மாதிரி விண்டு வாயில் போட்டு அனுபவிச்ச அரை டிராயர் இளைஞன், எக்கச்சக்க selfie புள்ளைகள்..PNR ஐ password போட்டு எப்படி பத்திரமா வைச்சுக்கணும்னு class எடுத்த ஒரு மலபார் மாமி. Placard வெச்சுண்டு பரபரனு அலைஞ்சிண்டிருந்த டிரைவர்கள்..மோப்ப நாய் வேற ரொம்ப சுத்திண்டு இருந்தது..hijack alertனு news வந்ததன் விளைவு..
லவ் ஜோடீஸ் ...கார் வராத கடுப்பில்
காள் காள் கத்தலுடன் கோட்டுசூட்டு ஆசாமி..
இப்படி பல விஷயம் சுத்தி நடந்தாலும்..மனசு மட்டும்..வரட்டும் இரு..வெச்சுக்கறேனு  கறுவிண்டு..
இங்கேர்ந்து கிளம்பும்போது பேசின பேச்சென்ன..'ரெண்டே மாசம் ஓடி வந்துடப் போறேன்..உன்னோட செல்லைக் கொடு..hang out  இல்லையே இறக்கிடறேன்..
Messenger install பண்ணி இருக்கேன்.அதுல easy ஆ இருக்கும்..இருக்கவே இருக்கு.எப்படியும் நீ தான் fb லயே குடி இருப்பியே..so no problem.
 watsapp video call இருக்கவே இருக்கு.
உன்னோட time ல ராத்திரி 9 மணிக்கு கூப்பிடுவேன்..நீ பாட்டுக்கு local call ல லொள்ளு சபா நடத்தாதே..அதே மாதிரி காலம்பற 10 மணிக்கு கூப்பிடறேன்..நான் தூங்க போறதுக்கு முன்னாடி..காய்கறி வாங்கப் போய்டாதே..இத்தனை இருக்கு..எதுக்கு உனக்கு கவலை'.
இப்படி சொன்னபோது ஆமாம்ல இது என்ன அந்தக் காலமா..கண்ணைக் கசக்கிண்டு நிக்க..தேத்தியாச்சு மனசை..முதல் ரெண்டு நாள்..சொன்னபடியெல்லாம் நடந்தது..
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு..நாம அனுப்பற hi க்கு half a day கழிச்சுதான் ஒரு blue tick வரும்..சரி சரி..9 மணிக்கு call வரும்னு நினச்சா..reached officeநு ஒரு ஒத்தை வரி..இனிமே மெஸேஜ் பண்ணாதேனு indirect ஆ..ம்ம்ம்ம்..
எப்படியும் காலம்பர கால் வரும்னு காத்திருக்க...காத்துண்டே இருக்க..
இப்படியே ரெண்டு மாசம் ஓட்டியாச்சு..
இன்னிக்கு  வரட்டும் உண்டு இல்லனு பண்ணிடறேன்..
மணி மூணு..தரை இறங்கியது விமானம்.. வரட்டும்..வரட்டும்..வெச்சுக்கறேன்..
அரை மணி அவஸ்தை..
அதோ..அதோ..அங்கே தெரியறது...
.yes..வந்தாச்சு..ஒத்திகைப்படி ஒழுங்கா நறுக்குனு கேட்டுடணும் முதல்லயே..
கண்ணாடி வாயில் திறக்க..கையசைத்தபடி..
Hi..maaa..wazaap என்று ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டவளை..என்னடா.இப்படி இளைச்சு போயிருக்க..சாப்பிட்டியா ..
இல்லையா..ரொம்ப miss பண்ணேண்டா..நான் சொல்ல..
'அதான் வந்துட்டேனே..
Chill maa'..அவள் பாணியில்.. அவள் தொனியில்....
தேன் வந்து காதில் பாய..
திட்டித் தீர்க்கணும், கொட்டிக் குதறனும்னு  போட்ட திட்டமெல்லாம்......???

Sunday, April 7, 2019

பள்ளி போகும் பாட்டி



தலை வாரிப் பூச்சூடி உன்னை..
பாட சாலைக்கு போ என்று
சொன்னாளோ  உன் அன்னை..

முடியிலுள்ள சிடுக்கெடுத்து
முடிந்து கொண்டை போடுவேன்..
உன் ...
முகத்திலுள்ள சுருக்கத்துக்கு
முழு டப்பா கிரீமும் போதாதே..
மூட் அவுட் ஆகாதே பாட்டி
முடிஞ்ச வரைக்கும் ..உன்
முதுமையையும் மறைப்பேனே..

மலர்ந்த புன்னகை நீ சிந்த
மறைந்தே போகுமே ..
உன்..
வயதைக் காட்டும் ரேகையெல்லாம்...

Friday, April 5, 2019

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..'

:ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'

'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..
தாயும் சொன்னாள் ...
'தலைப் பிரசவம்...
தாயும் சேயும் நலமா இருக்க
திருமலையானை தரிசனம் பண்ண
குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..
இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..
சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..
இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..
மகன் தந்தையிடம் சொல்வான்..
'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...
நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே
ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..
கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.
கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..

இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..
ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..

Sriram Jayaram Jaya Jaya ram

Wednesday, April 3, 2019

கரிசனம்

கரிசனம்..

Top up போட்டுத் தருவியா..
Tops ம் கொஞ்சம் இஸ்திரி பண்ணமுடியுமா..
Time table படி படிச்சாச்சு..
தாத்தாவுக்கு சமைச்சதே போதுமெனக்கு..
உதவி செய்யட்டுமா.
உனக்கேன் ம்மா..இவ்வளவு வேலை
கரிசனம் பொங்கக் கேட்டாள்..
போதுண்டா..
சுத்தி வளைக்காம சொல்லு
சுத்த எங்க போறேனு..
சூட்டிகை ம்மா நீ
சூட்டினாள் பட்டம்..
சுற்றி என்கழுத்தை கட்டியபடி
சிட்டாய்ப் பறந்தாள்..
சுளுவாய் காரியம் முடிய
குஷியில் பெண்ணுமே..