Monday, April 26, 2021

வாண்டு கூட்டமே

 ஒரு வாண்டுக் கூட்டமே...

(ராஜா சார் பாடல் வரி)..


வெறிச்சோடிய வராண்டாக்கள்

விழாக்கோலத்தில் இப்போ

விடுமுறை விட்டாச்சே..ஒரு

வழி பண்ணிடும் வாண்டுகள்.


பூங்காக்களில் பூத்தது

புத்தம்புது மழலைப் பூக்கள்.


ஓடிப் பிடித்து விளையாடி

ஒரு சிறு சிராய்ப்புக்காக

ஓவெனெ அழுது

ஊரைக் கூட்டிய குட்டீஸ்.


'பால்' பொறுக்கிப் போட்டா

'பாட்டிங்' உண்டு நாளையென

ஒட ஒட விரட்டிய

புதுசா மீசை முளைத்த

பந்தா பார்ட்டிகள்.


மாடிப்படி ஏறுகையில்

மறைஞ்சிருக்கேன் நானிங்கே

மாட்டி விட்டுடாதீங்கனு

மன்றாடிய மழலைகள்.


பாவனையாய் பெரியவன்

பின்னால் அமர 

பறக்குது தன் சைக்கிளென்று

பரவசத்தில் தம்பிகள்.


கதவைத் தட்டி விட்டு

காணாமல் மறைந்து போன

குறும்புக் குட்டி வால்கள்.


வெய்யிலை வீணாக்காமல்

விளையாடுவோர் பலரிருக்க

வீடியோ கேம்ஸ் போதுமென்று

வீட்டுக்குள் ஒரு கூட்டம்.


பாட்டி வீடு அத்தை வீடு

பக்கத்தில் இருந்தாலும்

பழகின என் வீடே

படு சொர்க்கம் என்றாச்சு


நாள் முழுதும் நாடகம்

நடப்பதெல்லாம் பரவசம்..

நாளும் போனதிங்கே

நானும் குழந்தையாய்..

இவர்களில் ஒருவராய்..


#Happyholidays

Friday, April 23, 2021

கோயில்

 அம்மா..இன்னும் எத்தனை சுத்து பாக்கி இருக்கு? 

கையைக் கூப்பியபடி 

சாய்ஞ்சு சாய்ஞ்சு 

நவக்கிரகம் சுத்தும

நண்டு சிண்டுகள்..


வரப்போகும் ரிஸல்ட்  வயிற்றைக் கலக்க..

வரேன் நானும் கோயிலுக்கென்று

விபூதிப் பட்டையுடன்

பட்டைய கிளப்பும் பசங்க..


பூவும் பொட்டுமாய் புதுசா அலங்காரம்..

பவ்யமாய் விளக்கேற்றி 

பாஸாக்கிடு பாஸ் என்று பக்தியில் பெண்குட்டிகள்..


'கண்ணை மூடி உம்மாச்சியை வேண்டிக்கோ'

பாட்டி சொல்லைத் தட்டாத பேத்தி..அவள்

பார்க்காத போது.. ஓரக் கண்ணால் என்னைப் பார்த்த அழகு..


கோயில்கள்..கோடை விடுமுறையில் 

குழந்தைகள் வரவால்..

சொர்க்கமாய்த் தெரிகிறது..


'மாமா..ப்ரசாதம்' ..இரண்டு கையிலும் தொன்னையில்  ரொப்பிண்டு 

இவர்கள் அங்கே மரத்தடியில் சாப்பிடும் அழகே தனி..


ஆனால் என்ன..

எனக்கும் ,என்னோடு சுத்தும் இந்த பூனையார்க்கும் ப்ரசாதம் கோட்டா கட் ஆகி விட்டது.


'ம்ம்ம்ம்ம்..வரும் வரும் ஜீன் வரும்..ஜூட் விட்டு விடுவார்கள் இவர்கள் எல்லாம்.

அப்புறம் நம்ம ராஜ்ஜியம் தான்' என்று நான் சொல்ல..


புரிந்தது போல போஸ் கொடுத்த பூனை..

Tuesday, April 13, 2021

பழி ஒரு இடம்...

 பழி ஒரு இடம்...


அணைந்து போன கைப்பேசி

அடிக்க மறந்த அலாரம்..

அதிகாலை நேரத் துவக்கம்

அரக்கப் பரக்க அவசரம்


காலியாய்த் தொங்கும் பால்பை

காலையில் வராத செய்தித்தாள்

கழுத்தை அறுக்கும் மின்வெட்டு

கிண்டிப் போன தோசை


கையில் கிட்டா காலுறை

காணாமல் போன ஐடி கார்ட்

கசங்கி கிடந்த பள்ளிச்சீருடை

காக்க மறுத்த ஆட்டோக்காரன்


மூடியைத் தேடிய பாட்டில்கள்

முடியல உடம்புக்கென்று

மூணு நாள் விடுப்பில் 

மூச்சிலும் மேலான முனியம்மா..


ஒண்ணுமே சரியா இல்லை

ஒரு வேலையும் நடக்கலையே


ஓடிய சிந்தனை கலைந்தது

'ஒன்னோட பொட்டு 

ஒருபக்கமா இருக்கேனு'

ஓடி வந்து ஆசையுடன்

ஒட்டிக் கொண்ட பெண்ணை

ஓங்கி விட்டாள் ஓர் அறை..


ஓவெனெ அழது புரண்டது

ஒண்ணும் புரியாத குழந்தை


சமாதானம் செல்லுபடியாகாதே

சாட்சியம் இருக்கே

சாத்திய அடியின் சுவடுகள்

சிவந்த அவளின் கன்னத்திலே


...

Saturday, April 10, 2021

ஆத்தா..நான் பாஸாயிட்டேன்..

 ஆத்தா..நான் பாஸாயிட்டேன்..


சொன்னபடி கேளு..மக்கர் பண்ணாதே

என்னுடைய ஆளு..இடைஞ்சல் பண்ணாதேனு..

செல்லக் குட்டி என்

ஸ்கூட்டிக்கு சொல்லியாச்சு.


லைசென்ஸ் வாங்கணும்

லைனல் நிக்கணும்..

இன்ஸ்பெக்டர் இருந்தாரு

இன்ஸ்ட்ரக்‌ஷன் தந்தாரு


என் முறை எப்போனு

ஏக்கமாய் நான் காத்திருக்க

driving school ஆளுமே

dive அடிச்சு வந்தாரு..என்

தலைக்கவசம் பார்த்துட்டு

தேய்ஞ்ச சட்டியா இதுன்னாரு.


பரிதாபப்பட்ட பக்கத்து மாமாவும்

பாய்ந்து வந்து உத்வினாரு

பாத்துக்கறேன் உங்களையென்று

பத்ரகாளியான மாமியும் முரைச்சாளே..


அப்பாடானு போன ஆளு

ஐயோனு ஓடிவந்தாரு

அண்டை மாநில ரெஜிஸ்ட்ரேஷன் வண்டியா

ஐயா ஒத்துக்க மாட்டாரே என்றாரு

அதுக்கென்ன இப்போ

அதுக்கும்் கவனிச்சுடலாம்னு

அறிவுரையும் சொன்னாங்க.


இரவல் தொப்பியும்..இரும்பு

இலுப்பச்சட்டி போல் கனக்க

இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டி

இறங்கினேன் களத்தினிலே


நாலு நாலு பேராக

நானும் டெஸ்ட் எடுப்பேன்னு

நாட்டாமை தீர்ப்புக்கு

நாங்கள் தலையாட்ட..


பரீட்சை ஆரம்பம்.

அபய ஹஸ்த முத்திரையை

ஆடாம காட்டணும்..அப்படியே

அலை பாயும் அழகையும்

அஞ்சு முறை காட்டணும்

ஓடாம ஓட்டணும் 

ஒரு ரவுண்டு அடிக்கணும்.


 U turn அடிச்சதும்

you passed என்றார்.


சதம் அடிக்கும்வரை

சாரதி வேலையும் தொடருமோ?


கொடுத்த வாக்கை காப்பாற்ற

கொடுத்தேன் ரெஸ்ட் ஸ்கூட்டிக்கு.


குரல்வளையைப் பிடிச்சபடி/(அதான்..breaku)

கொடுமை பண்ண மாட்டேன்னு

கொடுத்த சத்தியத்தை மட்டும்

காப்பாத்த முடியலையே..

கொல்லும் இந்த பெங்களூரு கூட்டத்திலே.

Tuesday, April 6, 2021

அடையாளம்

 அடையாளம்


குட்டி கண்ணா..பாலைக் குடிச்சிடுமா..சங்கர் மாமா..சங்கர் மாமா..சீக்கிரம் வாங்கோ..குழந்தையை டாடா கூட்டிண்டு போங்கோ...சொன்னது தான் தாமசம்..ஒரே உறியில் பால் உள்ளே போகும்..ஆச்சு அடுத்தது கொஞ்ச நேரத்தில நன்னா..குழைய பிசைஞ்சு மணக்க மணக்க நெய் விட்டு பருப்பும் ரசமும் கலந்து ஊட்டல் தொடங்கணும்..கண்ணப்பா..ஆ..அம்.tight lipped...ஆனை வரது..பூனை வரது ...என்ன சொன்னாலும்..திறக்காத வாய்..என் பெரியம்மா அடிக்கடி சொல்வா..இந்த குட்டீஸ் எல்லாத்துக்கும் ஒரு  zip வயத்தில இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்பிசைஞ்சமா உள்ள அடைச்சோமா..ஆஹா..என்ன சூப்பர் ஐடியா..உனக்கும் பெப்பே..உங்கப்பனுக்கும் பெப்பேனு ..ஒரு வாய் ஊட்டறதுக்குள்ள உசுரு பாதி போய்டும்..ஒரே ஒரு மந்திரத்துக்கு அடங்கும்..அதோ யாரு பாரு..சங்கர் மாமானு நான் சொல்ல..கங்க்கர் மாமா..கஙக்கர் மாமானு பின்பாட்டு ..

மாமா..கோந்தையை என்ன சொல்லி கொஞ்சுவா..செல்லமே..என் லட்டுவே..என் ஜாங்கிரியே..என் மைசூர் பாகே..இல்லடா..

வாயில் ஜொள் வழிய..கங்க்கர் கங்க்கர்னு ஜபிச்சுண்டே ஆகாரம் இறங்கும்..மாமா எந்த வண்டில வருவானு கேட்டா..புர் புர் புர்னு எச்சல் தெறிக்க சொல்லுவா..

அடுத்து ஒரு ஆளு..அப்பு தாத்தா..

இவா ரெண்டு பேரும் இருந்தாதான் சாப்பாடு இறங்கும்..

டெல்லியிலிருந்து வரும் Bangalore express மெதுவா..station ல நுழைய ஆரம்பிச்சது..second class பயணம்..ஜன்னல் வழியா..நம்ம மனுஷாளைத் தேடல்..நானும் அவரும் பார்வையை ஓட விட.ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடியபடி நானு..நானுனு வந்த குட்டிச் செல்லம்..திடீர்னு high pitch ல கங்க்கர் மாமா..கங்க்கர் மாமாநு சந்தோஷத்தில் கத்த...

அந்த ஒரு நொடி உலக மகா சந்தோஷமான நொடி..

ஏன்னு கேட்கிறேளா..

ஆறு மாசக் குழந்தையா டெல்லி போனதிலிருந்து..அன்னி வரைக்கும் கங்க்கர் என்ற சங்கர் ஃபோட்டோ பார்த்தே வளர்ந்த குழந்தை..டக்குனு அத்தனை ஜனத்திரள் ல அதுவும் train moving ல இருக்கும்போதே கண்டுபிடிச்சு ..அவள் முகத்தில தெரிஞ்ச சந்தோஷம்.மறக்க முடியாது..

Watsapp,fb, Skype,face time இதெல்லாம் தெரியாத 90s life. Kodak and Konica எங்க குடும்பத்தினால் நிறைய லாபம் சம்பாதிச்சிருப்பான்..அத்தனை photo க்கள்.. அதை செலவுனு நினைச்சதெல்லாம் தூசாக்கினது..

அவள் காட்டிய அடையாளம்.

Friday, April 2, 2021

ராம நவமி

 ராம்..ராம் ..ராம்..


தாழ்த்தினோம் சிரம்

கூப்பினோம் கரம்

சொல்வோம் உம் மந்திரம்

கேட்போம் வரம்

பற்றினோம் உன் பாதம்

தருவாய் நீ அபயம்..

எனக்கேன்.. இனி பயம்..🙏


ஸ்ரீராம்..ஜெய ராம்..ஜெய ஜெய ராம்..


முடிந்த அளவு அவன் நாமம் சொல்லுவோம் ..

மீள்வோம்..இவ்விடரிலிருந்து..


Prayed for all my friends here🙏🙏


அக்கார அடிசலோடு ..

அயோத்தி ராமன் பேர் சொன்னேன்..

அடியோடு ஓடிடட்டும்

ஆட்டி வைக்கும் துன்பமெலாம்🙏

Tuesday, March 30, 2021

Idli day

 ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும்.


ஆவியில் வெந்த இட்லி..நம்

ஆவியில் கலந்த இட்லி.


அரிசியும் உளுந்தும் ..

அளவாய் அள்ளிப்போட..

அரட்டை கச்சேரியோடு

ஆட்டுிக்கல்லில் அரைத்தெடுக்க..

ஆஹா..பேஷ்.பேஷ்..

அந்தக் கால இட்லி..


வெள்ளைத் துணியில் இட்டு

 வாகாய் வேக வைத்து..

வகையாய் சட்னி சாம்பாருடன்

விள்ளல் காட்டுமே விண்ணுலகம்


நாடு விட்டு போனாலும்

நா தேடும் ருசி..நினைத்தாலே..

நா ஊறும் ருசி..

நம்ம ஊரு இட்டிலி..


பட்டன் இட்லியது

பட்டர் போல கரையுமே..

ரவா இட்லியுமே..

அவாவும் தூண்டுமே..

மல்லிப்பூ இட்லிக்கு

மவுசு ரொம்ப அதிகம்.

குஷ்பூ இட்டிலிக்கோ..

கூட்டமிங்கு கூடுமே..


மிக்ஸி இட்டிலி

முழுங்கியும் வைக்க

க்ரண்டரும் வந்ததே

கவலை தீர்க்க..

ஆட்டும் எண்ணம்

அடியோடு தொலைய

பாக்கெட்டில் வந்தது..படும்

பாட்டை குறைத்திடவே


நோகாமல் கிடைத்தாலும்

நொந்து போக வைக்குமே..


அரைத்து வைத்த மாவுதான்

ஆபத்பாந்தவன் எப்போதும்..


இட்லிக்கு இணையொன்று

இங்குண்டோ சொல்வீரே..


மிளகாய்ப் பொடி இட்லிக்கு

மிஞ்சியதுண்டோ. ஓர் விருந்து?


#happy_idli_day

Monday, March 29, 2021

வந்துட்டாரையா_வந்துட்டாரு

 #வந்துட்டாரையா_வந்துட்டாரு..


சுப்ரபாதம் சொல்லாமலே..

சுறுசுறுப்பா வந்துட்டாரு..

சுட்டெரிக்கப் போறேன்னு

சூளுரைச்சு வந்துட்டாரு..


சத்தமிடும் குளிர்ப்பெட்டி

சன்னமாக்குது குயிலோசையுமே

சட்டுனு எழுந்திடவே

சுருங்குது மனமிங்கே..


ஓவர்டைம் செய்ய..

ஓடோடி வந்தவரே..

ஓடி வரும் மேகத்துக்கு

ஓரமாய் ஓர்  இடம் கொடப்பா..


ஈரம் காணா நிலமிங்கு.

ஈனஸ்வரத்தில் தவிக்கிறதே

வர மொன்று தாருமையா..

வான் மழையும் பொழிந்திடவே..


மின்னலும்் விளக்கேந்த்

இடியும் மத்தளம் முழங்க

கொட்டும் மழை சத்தம் கேட்டு

நாட்கள் ஆச்சு எத்தனையோ


கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்..

கூடட்டும் மேகங்கள்

கொட்டட்டும் மழை..

கொண்டாட்டம் துவங்கட்டும்..


#மழை_வேண்டி_பிரார்த்திப்போம்

Sunday, March 28, 2021

தங்கமணி

 Thangamani Srinivasan..three years gone without you. But no day passes without thinking of you .

 its not just a post to write about a mother in law. Just trying to learn the life of love and purely unconditional affection you poured on each and every member of the family and to anyone you came across.


தங்கமணி..எங்கே நீ..


2008..ஒரு மத்தியான நேரம். ஃபோன் பெல்லடிக்க..மறுமுனையில் தங்கமணி..(என் மாமியார்)..

என்ன பண்றே அகிலா..

ஒண்ணும் இல்லமா..இப்போதான் ஐஷுவோட ஒரு fight ..ஒரே மூட் அவுட்.

நீங்க சொல்லுங்கோம்மா..என்ன விஷயம்..

நான் சொல்றத கொஞ்சம் செய்வியா..எப்போதும் போல ஒரு அன்பு வழியும் தொனியில்..ம்ம்ம்ம்..என்னது ம்மா..

ஒரு கவிதை எழுதேன்.தலைப்பு .'தலைமுறை இடைவெளி'..

ஐயோ சாமி..அம்மா..are you OK? யாரைப் பார்த்து என்ன கேட்கிறேள்..no no no..ஷாருக் ஸ்டைலில் நான் அலற..நாளைக்கு அனுப்பு எனக்கு .bye ..என்றாள்.

இப்படியாக என் முதல் கவிதை அரங்கேறியது ..எனக்குத் தெரியும் உன்னால் முடியும்னு என்று mail அனுப்பினாள்..

அதற்கு பிறகு சந்த வசந்தத்தில் எல்லா கவியரங்கியிலும் என்னை சேர்த்து விடுவாள்..தங்கமணி மருமகளே..கொஞ்சம் இலக்கணம் கத்துக்கோயேன் உன் அம்மாவிடம்..செவிடன் காதில் ஊதிய சங்கு தான்...

நீ எழுது உன் பாணியில் என்பாள்.


கமகமனு சமையல்..

கைவந்த கலை..

கவிதை எழுதி..

கடவுளைக் கண்டாள்.

கணினி அவளுக்கு

கைப் பொம்மை

காமெரா கண்டாலே

காண்பதை படம்பிடிப்பாள்

குழந்தைகள் கண்டால்

குறையும் வயது

கடுகடு முகமே

கண்டதே இல்லை..

கடகடனு சொல்வாள்

கேட்டதும் ராகங்களை

குளுகுளு பானங்கள்

கொழுப்பாய் குடிப்பாள்

கொல்கொல் இருமலில்

கழிப்பாள் இரவுகளை..

ஆட்டோ பாட்டி பேரிலிவள்

ஆடாது அசையாதாள்

ஆட்டும் துன்பத்திலும்..

அன்பு தான் வெல்லும்

ஆணித்தரமாய் சொன்னாளே

அனைவரின் பிரியம்

அன்பின் உயரம்..

ஆண்டாள் அன்பினால்..

அடைந்தாள் அவனடி..

அரைமூச்சிலும்

அரை மயக்கதிலும்

அருகே வா என்றாள்..

அம்மாவை அழைத்துவா.

அருமையா பார்த்துக்கோ

அவளுக்கும் நீ வேணுமென்றாள்.

மனமொன்று வேண்டும்..தங்க

மணி போல் என்றும்.

மாய்ந்து பேசுகிறார்..நீ

மறைந்த பின்னும்..


தங்கமணி..

எங்கே நீ..

தங்கமணி

 சத்தம் போடாத..

சாதனை யாளர்கள்.

சரித்திரத்தில்...... பலர் 

எம் குடும்ப ….. சரித்திர நாயகி..

எங்கள் தங்கமணி நீதானே…


”வயசாச்சு எனக்கு..

வேறெதுவும் முடியாதுனு..”

வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை 

Versatile blogger award….

விருதுக்கு சொந்தக்காரி நீ


திருக்கயிலை நாதன் முதல்..

..திருவொற்றி யுறைக்கோன் வரையில்

திரும்பிய திசையெலாம்..

திருக்கோலம் கொண்டவனை..

தேடிப் போய்ப் பார்த்ததில்லை..

தேன் சொட்டும் பாவின் வழி

”என் பணி அரன்  துதியென்று”..

என்னாளும் துதித்த நீ..

எம்மை விட்டுச் சென்ற நாள்..


இன்னாள்..28-03-2014

வருத்தங்கள்….. …

தேடுது.. வார்த்தைகளை..

Miss you thangamani..


தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014

thangamani blog: http://kavidhaithuligal.blogspot.in/

Monday, March 22, 2021

தண்ணீர்..தண்ணீர்.

 தண்ணீர்..தண்ணீர்.


ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேனே மாமி எனலாம்..


அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..


அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..


Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.


'கண்ணீர் சுத்திகரிப்பு' நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.


திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..


நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..

அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.


Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்.


கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..


ஐயோ ..

நினைக்கவே நடுங்குதே..

நீயில்லாமல் நானா

நீரில்லாமல் வாழ்வா..?


நிறமில்லா நீர்..

நதியாய்..ஆறாய்

நானிலம் காக்க

சுயநல வாழ்வில்

கயவராய் மாறினோம்

தண்ணீர் தானே...

தாராளமாய்..

தண்ணீராய் செலவு..


விளைவோ..


ஒரு குடம் நீருக்கு

ஒரு மணி காத்திருப்பு


தவிக்கும் வாய்க்கு

தண்ணீர் தரவே

தயக்கமும்  ஆச்சு.


சேமித்த காசு..நீர்

சேந்தித் தரல..

சிந்திய துளிகளும்

சேர்க்க முடியல..


கங்கையும் யமுனையும்

காவிரியும் நர்மதையும்

கைக் கோர்க்கட்டும்..

கண்ணீர் துடைக்கட்டும்


நதியெல்லாம் இணையட்டும்..

நலமெல்லாம் பெருகட்டும்..

நாளை வரும் சந்ததிக்கு

நம்மால் முடிந்த உதவி..

நல்லக் குடிநீரும்

நோயில்லா வாழ்வுந்தானே..

Saturday, March 20, 2021

Happy

 happy இன்று முதல் happy


இந்த உலகத்திலே பெரிய பணக்காரன் யாரு?.கொஞ்சம் லிஸ்ட் போடுங்க..


கார் வெச்சிருப்பவரா..

கரன்ஸி கட்டு கட்டா வெச்சிருப்பவரா..

வீடு பெரிசா வெச்சுருப்பவரா..

நல்ல வேலையில் இருப்பவரா..

வெற்றி வாகை சூடுபவரா?

பெரிய பதவியில் இருப்பவரா..

பெரும் புகழோடு இருப்பவரா..


இத்தனையும் இருந்தாலும் இல்லாட்டியும் ...சந்தோஷமா happy ஆ யாரால் இருக்க முடிகிறதோ அவர்தானே உண்மையான பணக்காரர். சரிதானே?


கால் கிலோ கத்திரிக்காய் கொடுனு என்கிறமாதிரி எந்த சூப்பர் மார்க்கெட்லயாவது விற்கிறதா இந்த சந்தோஷம்?


எங்கே தேடுவேன்..சந்தோஷம் உனை

எங்கே தேடுவேன்னு எல்லாரும் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறோமா இல்லையா..

கவிதை என்னும் பேரில் நான் உளற ஆரம்பிச்ச புதுசு.

இப்படி ஒரு மொக்கை எழுதி வெச்சேன்.

'இறைவா

வேண்டும் இன்னொரு பிறவி..

போராட அல்ல..

வாழ்வதற்கு..'

இன்னிக்கு அதைப் படிக்கும்போது..என் மேலே வெறுப்பா வரும்.

போராடி ஜெயிக்கும் சந்தோஷம் போல உலகத்தில் வேற ஏதாவது சந்தோஷம் உண்டா..


பூக்கள் மகிழ்ச்சி..

பூலோகம் மகிழ்ச்சி

இயற்கை மகிழ்ச்சி

இல்லம் மகிழ்ச்சி.

இதெல்லாம் எப்போ மகிழ்ச்சியா தெரியுமென்றால்..நம் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான்.

மகிழ்ச்சியா இருக்கணும்நு சொல்லித் தர பல பேர் இப்போ கிளம்பி இருக்காங்க.


நிஜமாகவே தேடிக் கிடைக்கும் பொருளா..சந்தோஷம் என்பது.

நம்முள் எப்போதும் இருந்து கொண்டு வெளியில் வரத்் துடிக்கிறது..

டேய் சும்மா அடங்கு...இதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா என்ன ஆவுறதுனு அதை தட்டி உள்ளே உட்கார வெச்சிட்டு..அடுத்தது எது நமக்கு சந்தோஷம் தரும்னு தேடி அலையறோம்.

நல்ல சூப்பரா டிரஸ் பண்ணிட்டு சந்தோஷமா வெளியே கிளம்புவோம்..எதிர் வூட்டுக்காரம்மா ஒரு சோகக் குரலில் 'என்ன இன்னிக்கு கொஞ்சம் டல்லா இருக்கீகநு ' கேட்டதுமே..அத்தனை சந்தோஷமும் ஓட்டை விழுந்த பலூனாய் புஸ்ஸுனு இறங்ககிடும்.


நம்மைச் சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடானு கோடி negative energy சுற்றியபடி இருக்கு.

நாம் ஒரு நிமிஷம் தள்ளாடும் போது..டபால்னு வந்து நம் மேல உட்கார்ந்துக்கும். அப்பறம் சந்தோஷமா..அப்படின்னா என்னனு கேட்டு..டன் டன் ஆ சோகமோ..சோகம் தான்.

சந்தோஷம் என்பது ஒரு சின்ன விதை..

அதை நம் மனசிலும் , நம் சுற்றியுள்ளவர் மனசிலும் விதைக்கணும்.

நான் சந்தோஷமா இருக்கணும்னா அடுத்தவன் சாகணும் என்பது சந்தோஷமல்ல..


நாம் இருக்கும் இடத்தை, வீட்டை முதலில் சந்தோஷம் என்னும் சிமெண்ட் போட்டு strong ஆக்கணும்.


அதுக்காக இளிச்ச வாயனா இருக்க சொல்லலை..

நாம்.. எப்போ..எங்கே இருந்தாலும் அங்கே சந்தோஷ, மகிழ்ச்சி அலைகள் கரை புரண்டோடணும் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கணும். ஐயொ..வந்துட்டாடா..ஒப்பாரி வைக்கணு யாரும் சொல்லக்கூடாது.


எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை..

நான் சந்தோஷமா இருக்கிறேன்..இருப்பேன் என்பதை நாம் தான் நிர்ணயிக்கிறோம். live this moment happily.

இன்னிக்கு international day of happiness ஆமே..

வாங்க ..

let's be happy i say and spread the fragrance of happiness everywhere.


happy இன்று முதல் happy தான்.


சரிதானே..friends.

 Thanks  Chandrashekar Ramaswamy sir.

Your status today is the seed to this post

Friday, March 19, 2021

ஒத்திகை

 நெருடும் நிஜம்


கொளுத்தறது வெய்யில்

குளுகுளு பிரதேசத்துக்கு

குடும்பத்தோட போறேன்..

கொஞ்ச நாள் தப்பிக்க..


நீயெங்கே வரமுடியும்

நீட்டிப் படுத்துடுவியே..

நானும் இவளும் 

நண்டும் சிண்டோட

நாளைக்கு கிளம்பணும்..

நீ வேணா..

நாலு மனுஷாளோட

நாளைக் கழிக்கிறயா..

நல்ல பொழுதும் போகும்

நான் வரும் வரைக்கும்..


நனைத்த நார்ப்புடவை

படுக்கையாய் விரித்தபடி

புன்னகைப் பார்வையுடன்

 போய்ட்டு வா நீ 

 பார்த்துக்கறேன் நானென்றாள்


ஒத்திகை அத்தனையும்

ஒரு தூசானது..அவள்..

ஒற்றை வார்த்தையில்..

அம்மானா..

சும்மாவா..

Monday

 ஐயோ ..சனி ஞாயிறு எப்படிப் போச்சுனே தெரியல..எல்லாரும் புலம்புவது இது. திங்கள் கிழமை..ஆரம்பிக்கும் ஓட்டம்.

சும்மா ஒரு ஜாலி போஸ்ட்.

நீங்களும் உங்க வரிகளை எடுத்து விடுங்க..


weekend..ஆ....WEAKend..ஆ...

 வருவதும் தெரியாது

போறது தெரியாது..

வரிசையாய் செய்யணும்

விட்டுப் போன வேலையெல்லாம்.


மாவரைக்கணும்..துணி

மடிச்சு வெக்கணும்..

மளிகை வாங்கணும்..

'மாலு'க்கு போகணும்.


படிக்க வெக்கணும்

ப்ராஜக்ட் பண்ணனும்

 PTA போகணும்

progress reportம் வாங்கணும்.


பிடிச்சதை சமைக்கணும்

பில்லும் கட்டணும்.

பார்லரும் போகணும்.

ஃப்ளாட்டின் வம்பும் கேட்கணும்


குட்டித் தூக்கம் போடணும்

குழந்தைகளோட..

கொஞ்சி விளையாடணும்

கோயிலுக்கு போகணும்.


ஹோட்டலுக்கு போகணும்

ஹாய்யா இருக்கணும்..


இதுக்கு நடுவுல

ஈமெயிலும் பார்க்கணும்.

இன்ஸ்டண்ட் பதிலடிக்கணும்

இடித்தே உரைத்தாலும்

இடிச்ச புளியாட்டம் இருக்கணும்


அன்னபூரணி ..என்

கணினினு சொல்லணும்.


சனியும் ஞாயிறு

சட்டுனு ஓடிடும்.


 திங்களும் வந்திடும்

 சீக்கிரம் முழிக்கணும்.

சுறுசுறுப் பாகணும்.

சந்தோஷமா வரவேற்கணும்


அடுத்த weekend 

அஞ்சு நாளில் வந்திடும்

அதுவரை கொஞ்சம்..

ஆபீஸும்..வீடும்

அழகாய்ப் பார்த்துக்கணும்..


 திங்கள் கிழமை வந்தால்..

சொங்கி போல இல்லாமல்

தங்கம் போல ஜொலிக்கணும்..

ஆமாம்..

தங்கம் போல ஜொலிக்கணும்..


happy Monday to friday.

Tuesday, March 16, 2021

அனுபவம்

 இன்னிக்கு என் அனுபவம்..


என் மகளின் board exam ..the paper was good..

நான் என் சித்தப்பாவுக்கு அனுப்பிய watsapp msg .

நன்னா..(nanna) என்பதை type அடிச்சதா நினைத்து manna  என்று போக..ஐயோ என்ன 'மண்ணா 'போச்சா..என அலறி ஒரு ஃபோன்..


நாம் ஒன்று நினைக்க..அது ஒண்ணு அடிக்க..


Send button தட்டுமுன்...spelling சரி பாரு..

Sunday, March 14, 2021

காரடையான் நோன்பு

 #urvasi urvasi take it easy policy..


உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்தேன்..

(ஊரில் இருக்கும் கணவன்)  ஒருநாளும் பிரியாத வரம் தருவாய் என்று..

உருகி வேண்டும் உமைகள் ..


சைட்டில் (site)இருக்கும் சத்தியவானுடன்

Skype இல் சரடு கட்டிண்டு

கணினி முன் காலில் விழுந்து

காலம் மாறினால் நம் காதல் மாறுமா பாட்டு BGM உடன்..

காரடையான் நோன்பு..


வெல்ல அடை..

வெண்ணையோடு வழிச்சு ..

உப்பு அடை..

ஊ ஊனு ஊதி சூடா..

அப்படியேச் சாப்பிடணும்..

'ஆ'னு அவர் வாய் பார்க்க..


அடடடா..நாழி ஆகிடுத்து..

மெஸ் மூடிடப்போறான்..

காஞ்ச ரொட்டியும்..

கருப்பு தாலும்கூட

கிடைக்காம போய்டப்போறது..

போங்கோ..கிளம்புங்கோ..

நானும் போகணும்..

நாலு வீட்டுக்கு 

நம்மாத்து ப்ரசாதம்னா

நண்பிகளுக்கு உசுருனு..


Take it easy urvashi


மீள் தானுங்கோ..

Saturday, March 6, 2021

ராதே..என் ராதே

 ராதே..என் ராதே


இறக்கடி உன் கோபத்தை

இறகாக்கடி உன் மனத்தை..


போகும் பொழுதும் தெரியலையே..

பேதையுன் மொழிப் போதையிலே..

போதுமென்ற மனமும் இல்லையே..

போகா விடில் விழும் பழியே..


காத்திருப்பர் கோபியர் அங்கே

கண்கட்டி விளையாட்டும் ஆட

கொஞ்ச நேரம் போகவேணும்

கோபமேனோ சகியே உயிரே...


காதலன் மட்டுமல்லடி உன்கண்ணன்

காவலனாய் என்றும் காக்கும்

கடமை ஒன்றும் உள்ளதே

களங்கம் வரலாமோடி  

கண்ணன் உன் மன்னனுக்கு..


கனல் பார்வை நீ விட்டு

கனிவோடு வழி அனுப்பு

காத்திருப்பும் சுகமென

கண்டறி நீ கண்மணியே..


Thanks Padma Gopal for the pic.

Just tried to write something..but you rock

Wednesday, March 3, 2021

கோவில் மணியோசை

 கோவில் மணியோசை


பிரகாரத்தை சுற்றி முடித்து

பகவானே நான் சொன்னதெல்லாம்

நினைவில் வை..

பாவி எனக்கு உன்னை விட்டா யாரென்று

பக்திப் பரவசத்தில் இன்னோரு மீள் வேண்டல் தொடங்க

படியைத் தொட்டு கும்பிட்டபடி

பவ்வியமாய் நுழைந்த ஒருவர்

பிடித்து அடித்த கோவில் மணி


'பரமன் என் அருட்பார்வை 

பேதையே உனக்குமுண்டு

பதறாமல் போய் வா'வென

பாசமுடன் சொன்னதோ..


கோவில் மணியோசை..

இன்னும் ஒலிக்கிறது..

Monday, March 1, 2021

பரீட்சை

 '#ஏதாவது_எழுதலாமே' நம்ம மார்க்கு எப்பவுமே உசுப்பி விடுவார்.


' எதையாவது எழுதிட்டு வராதே..ஒழுங்கா கேள்வியைப் படிச்சுட்டு அப்பறம் எழுது என்று டென்ஷனோட இருப்பார் அம்மாவும் அப்பாவும்.


பரீட்சை ஜுரம்..ரம்பம் பம் பம் ..ஆரம்பம்..

இன்றிலிருந்து பல வீடுகளில்..


"மார்க்கு' நமக்கு  'பந்து' இல்லைனு கொஞ்ச நாள் டூ விட்டால் தான் 

மார்க் வரும்..

மார்க்கமும் கிடைக்கும்.


பொதுத் தேர்வு எழுதும் எல்லா வீட்டு செல்லங்களுக்கும் என்னோட அன்பான wishes. 


படிச்சதுதான் வரணும்னு வேண்டிக்காதீங்க..


எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் தரக்கூடிய wisdom and intelligence கொடு கடவுளே என்று வேண்டிக்கோங்க.


சிலபஸே இல்லாத வாழ்க்கைப் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு பதில் தருகிறோம்.


அப்படி இருக்கும்போது..சிலபஸ் உள்ள ஸ்கூல் பாடத்திலிருந்து வரும் கேள்விகள் பெரியதா  என்ன?


Confident ஆ போங்க ..over confidence இல்லாமல்..


All the very best to students of 10th and 12th

Tuesday, February 16, 2021

என்ன பேசியிருப்பார்கள்

 என்ன பேசியிருப்பார்கள்?


அவரு கடைசியா யார்க்கிட்ட பேசினார்ங்க ? என்ன பேசினாரு?

இந்த உரையாடல் எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் சாதாரணமாக நம் காதில் விழும்.


இந்த வண்டியில் போனவர்கள் என்ன பேசி இருப்பார்கள்?


'என் பொண்ணு இந்நேரம் வந்திருப்பா

' அம்மாவுக்கு ஃபோன் பண்ணி கவலைப்படாம இருக்கச் சொல்லணும்'

' தங்கை கல்யாணம் அடுத்த வருசம் லீவில முடிச்சுடணும்'

'ஊரிலிந்து வந்ததிலேர்ந்து வீட்டு ஞாபகமாகவே இருக்கு'

' comrades..let's get back to work ' என்று சொல்லியபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் , strategy என்று ஆணைகள் .


இப்படித் தான் அவர்கள் உரையாடல் இருந்திருக்குமொ?


எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற நிலை இருந்தாலும் ..

அடித்து சொல்கிறேன்..இவர்கள் உயிர் பிரியும் நொடிக்கு முன் கூட ..நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதே நினைத்திருப்பார்கள்.பேசியும்  இருப்பார்கள்.


எல்லாம் இருந்தும் நம் பேச்சு எப்படி இருக்கிறது?

இந்த நாடு எங்கே உருப்படப் போகிறது..அந்த்க நாட்டை பாரு ..இவனைப் பாரு என்று வெட்டிப் பேச்சும் வீண் விவாதமும் மேலோங்கி..

ஒவ்வொரு கட்டத்திலும் திசை திருப்பல்.

இனியாவது விழிிப்போம

இன்னொரு புல்வாமா தாக்குதல் 

இன்னுயிர்களை பறிக்காமல் இருக்க..

ஒன்றிணைவோம்.

ஓட ஓட விரட்டுவோம் 

ஒற்றுமைக்கு பங்கம் வரவைக்கும் 

தீய சக்திக்கு..


'He was a jawan. a jawan dies for the nation ' என்று பெருமையாக சொல்லும் ப்ரதீப் குமாரின் அண்ணன்.


' இப்படி செய்தால் நாங்கள் பயந்து போய் எங்க பிள்ளைகளை ராணுவத்துக்கு அனுப்பாமல் விட்டுவிடுவோமா 'என்று முழங்கும் முதிர்ந்த தாய்மார்கள்..

வணக்கங்கள் ..உயிர் நீத்தோருக்கும் அவர்களின் உயிரான குடும்பங்களுக்கும்


'Border " ஹிந்தி படத்தில் வரும் பாடல்.


Sandese aate hain 

. Humein tadpaate hain


. #Ki tum bin ye ghar soona soona soon a hai..


வாழ்வாதாரமாக இருந்தவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம்..

salutes to the bravo


டைம் இருந்தால் பாட்டு கேளுங்க


https://youtu.be/u0OKVB3Yp-U

Sunday, February 14, 2021

Valentines day

 Valentine's day.

எச to Rohini Krishna ji


shopping நீ போகையிலே

stand ஆக நானிருப்பேன்..


talk time ம் போட்டுத் தந்து

தூக்கத்தை தியாகம் செய்வேன்


மெனுகார்டை நீ பார்க்கையிலே

மாவாட்டத் தயார் ஆவேன்.


சர்வரிடம் சைகையிலே

சகலமும் தராதே என்பேன்.


பீட்டர் நீ விடுகையிலே

புரிந்தது போல் நடிப்பேனே..!!


கலாய்க்கும் உன் தோழிகளுக்கு

கையில் கட்டுவேன் ராக்கியுமே


உன் பேரைக் கேட்டாலே

தீயாய் வேலை செய்வேன்


Valentine day இதிலே..என்

wallet ம் திவாலாச்சே..


சும்மாத்தான் சொல்றேன் புள்ள..

சீரியஸும் ஆகாதே..

வழக்கம் போல சந்திப்போம்..

Valentine முடிந்தாலும்..

Saturday, February 6, 2021

ஆவிக்கும்_உண்டோ_அடைக்கும்_தாழ்

 #ஆவிக்கும்_உண்டோ_அடைக்கும்_தாழ்


கும்மிருட்டு..அவன் அந்த பங்களாவில் நடந்து கொண்டிருந்தான்.

கிரீச் என்ற கதவின் சத்தம்..காலில் ஏதோ ஒன்று இடிக்க.

ஆ..அம்மா என்று கத்தக் கூட பயந்து போனான்.

.மொபைல் டார்ச்சை வழிகாட்டியாக வைத்து..

காலடி ஓசை அவனுக்கே கேட்காத அளவுக்கு ஒவ்வொரு அடியும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தான்.


அவன் நினைத்த காரியம் அங்கே முடிந்தது ' என்னை யார்னு நினைச்சே' என்று கர்வமாய் அவன்  மை.வாய்ஸ் சொல்ல..

"இன்னும் ஒரு செகண்ட் தான் ..நீ இருக்கிற இடம் தெரியாமல் அழிவாய் ' என்ற கொக்கரிப்பில் .. 'தடயம் எதுவும் இல்லையே ' என்று ஒவ்வொரு இடமாக அவன் செக் செய்ய..

'டக் ' என்ற சத்தத்துடன் அந்த ரூமின் ட்யூப் லைட் எரிய..

' இங்கே என்ன பண்றீங்க..ராத்திரி ஒரு மணிக்கு செய்யற வேலையா இது'..


ஆவி பறக்கும் கர்நாடக ஃபில்டர் காஃபி டம்ளருடன் அவன் பேந்த்ப் பேந்த விழிக்க..

"காட்டிக் கொடுத்த ஆவியே' ..உன்னை..

என்று அவன் மனைவி ஷேர் கேட்கும் முன் கடகடவென்று குடித்து முடித்தான்.


Bala hari அவர் #YEN_பக்கத்தில்  சூப்பரா ஒரு கதை போடப்போறாராம்.


நானும் என் லெவலுக்கு எழுதிட்டேன்..


" ஆவிக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'

Tuesday, January 12, 2021

வெண்டைக்காய்த்துவம்

 #வெண்டைத்துவம் 


#எச_to Radha Sriram


தலையே போனாலும்

தளிகைக்கு தனிச்சுவை

கொண்டையிழந்த வெண்டையே

வாணலியில் வதங்கும் நேரம்

வலையில் மாட்டி முழிக்குமே

தயிரும்  கொஞ்சம் சேர்க்க

தடையும் தாண்டி வெளிவருமே

தீயும் கூட்டிக் குறைக்க

தன் அடையாளம் மீட்குமே..

வெண்டையும் வாழ்வும் ஒன்றே

வழவழப்பு வறுவலாய் மாற

வாழ்க்கைப் பாடம் புரியுமே.

பிணையிலிருந்து விடுபடவே

பெரு முயற்சி தேவையே..

Friday, January 1, 2021

2021

 வெள்ளைப் பூக்கள் 🌏 உலகம் எங்கும் மலரவே...


Bye bye twenty twenty..

நீ வந்தபோது .வெச்சோம் party..

ஆனால்..நீயோ..அழகு பார்த்தாய்..

எங்களை ஆட்டி..


Twenty twenty..வெறும் empty ..

சொல்வோரைப் பார்த்தால்..

எனக்குள் தோன்றும் pity..



Twenty twenty..நீ ஒரு

University..

கொண்டு வந்தாய் பல difficulty..

அதிலும் கொடுத்தாய் opportuntiy

கற்றுத் தந்தாய் simplicity..

ஊற்றெடுத்தது humanity..

மீட்டு வரத் துடித்தோம் immunity


இது எல்லாமே temporary..

புரிந்து கொண்டோம் reality..


கொடுத்தது போதும் penalty..

எல்லாத்துக்கும் மேல இருக்கான் almighty..

காத்திடுவான் எங்களை definitely.


மனசிலே வரட்டும் purity..

ஒழிப்போம் disparity



எடுப்போம் அழகா ஆரத்தி..

கழிப்போமே கண் திருஷ்டி..


வரவேற்போம் அடுத்த ஆண்டை..

With positivity..

எல்லாருமே ஆவோம் celebrity..


வல்லமை தாராயோ..


கோலம் போடறேளா..?..

கோலமாவு கோ(அ)கிலாவைப் பார்த்து பக்கத்து வீட்டு பெண் கேட்க..

இல்ல..இட்லி மாவு அரைக்கறேன் ..சொல்ல முடியாமல் விழுங்கி..புன்னகைக்கிறேன்..


லிஃப்டில் ஏறுகையில்..

"ஏன் முகம் வாடி இருக்கு?.."தெளிவா இருக்கும் என்னைப் பார்த்தும் கேட்கும் கேள்விக்கு புன்னகை ஒன்றை உதிர்க்கிறேன்..


எப்பதான் இந்த work from home.முடியுமோ..!?


எப்படித்தான் நீ இப்படி வீட்ட்லியே இருக்கியோ..!??

ஹோம் மேக்கர் என்னைப் பார்த்து ஏவப்படும் கேள்விக்கும் ..புன்னகைக்கிறேன்..


பக்கத்து வீட்டிலிருந்து வரும் பாசுமதி ரைஸ் வாசனை சூப்பர்னு சொல்லும் பெண்ணைப் பார்த்து புன்னகை உதிர்க்கிறேன்..


அவளே..


"Learn to say no..அம்மா'. ..என்று சொல்லித் தரும் போது...அடுத்த முறை கட்டாயம் என்று புன்னகை உதிர்க்கிறேன்..


சில சமயம் நர்த்தனமாடும் negative எண்ணங்களுக்கு..வடிவம் கொடுக்காமல்..வடிகட்டி..புன்னகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன்..


வரிசையாக வேண்டுதல்களுடன் அவன் முன் நிற்க..

"இன்னும் பாக்கி இருக்கா..நான் தான் இருக்கேனே பார்த்துக்க மாட்டேனா..என்று சொன்னாலும்..விடாது சொன்னதையே சொல்கிறேன்..

"அட அசடே".. இன்னுமா புரியல அவன் லீலை.." மை. வாய்ஸ் சொல்ல..அசட்டுப் புன்னகை உதிர்க்கிறேன்.



உள்ளே அடங்கு என்று ஊரடங்கு போட்டு வைத்த..

பேராசை,பொறாமை,கோபம், குதர்க்கம்..

"வெளியே வந்தாயோ....பிச்சு புடுவேன் பிச்சு என்று..மிரட்டி உருட்டி வெச்சாலும்..லேசா தலை நீட்டும்போது..போனால் போகட்டும்..ஒரு முறை வந்து போ என்று புன்னகைக்கிறேன்..


"கிளம்பறேன் நான்.." என்று நீ சொல்ல.


வெத்திலை பாக்குடன் வழியனுப்ப வந்த என்னைப் பார்த்து..

' உனக்கு கோபமே வரலையா என் மேல".. 

Twenty twenty என்னைப் பார்த்து கேட்க..

அதே புன்னகையுடன்..'

 சென்று வா..உனக்கு 

 முப்பதொன்று என்பது முடிவு..

 எனக்கு ..அது இன்னொரு நல்ல ஆரம்பத்தின் அறிகுறி" என்றேன்..

 

'மறக்க மாட்டியே என்னை? ..

" நர்ஸரி டீச்சரையே மறக்காத நான்..

நிரந்தரமில்லை இந்த வாழ்க்கைனு சொல்லிக் கொடுத்த உன்னை...'..என் புன்னகை மீதி கோடிட்ட இடத்தை நிரப்ப..


 

 அடுத்து பிறக்கப் போகும் ஒன்று..

 என் வாழ்க்கையில் இன்னோரு ஒன்று தான்..


"போய் வா..கெடுதல் செய்திட்டோமோ என்ற குற்ற உணர்வு உனக்கு வேண்டாம்.."..

கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் காட்டிக் கொடுத்த கள்ளன்.நீ..

.....

 


கை காட்டியபடி நிற்கிறேன்

கண் மறையும் வரை..


 வீட்டுக்குள்ளே ...அது..

 விட்டுப் போன தடயங்கள்..

வேண்டுமென்பதை..

எடுத்து பூட்டி வைத்தேன்..

வேண்டாததை விட்டெறிந்தேன்..


அடுத்த காலண்டர் மாட்ட இடம் செய்கிறேன்..

அது காலண்டரா..???

இல்லை..காலம் terror ஆ என்று புன்னைகையுடன் அதைப் பார்த்து கேட்கிறேன்...காத்திருக்கிறேன்..


ஒரு நிமிஷம்..ஓடி வந்தது மீண்டும்..

என்னாச்சு? என்றேன்..அதே புன்னகையுடன்..


மத்யமருக்கெல்லாம்..புத்தாண்டு வாழ்த்து சொல்லிடு..


வெள்ளைப் பூக்கள்..🌏 எங்கும் மலரவே..

அன்பு ஒன்று மட்டும் என்றும் நிலைக்கவே..




 



 


 

 


அப்பா சாமி ..கிளம்புய்யா..என்று 2020 ஐ எல்லாரும் வழியனுப்ப..

நீயும் புன்னகையுடன் விடை பெற்றுச் செல


மாவிலைத் தோரணத்துடன் அன்று நடத்தினாயே வரவேற்பு..

மனசு கனக்க நீ கிளம்புகிறாயோ என்று..

மனசு தவித்தாலும்..


மலரும் நாளைப் பொழுது..
















2020

 19 போச்சு..20 வந்தது.. டும்..டும்..டும்


Twenty twenty வருஷமிது

 Twist and turn இருக்குமது.


பிறந்தது january

நமக்கேன் இனி..worry..


Comes with an itenary

Let's make it extraordinary.


வந்து போகும் adversary

அது வெறும் temporary


அன்பிற்கு ஏது territory

கடப்போம் பல boundary.


வாழ்க்கை என்பது merry..

கிடைக்கட்டும் நமக்கு victory.


சென்ற வருடங்கள் memory

எழுதுவோம் புது history.


செய்து அசத்துவோம் cookery..

எழுதித் தள்ளுவோம் poetry..

 படைப்போம் பல story..

 ஆக்குவோம் நம் வாழ்க்கையை..glory..


Happy new year friends 

#நீங்களும்_எழுதுங்களேன்..