Monday, November 28, 2022

சென்னை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#சென்னை

காவேரிக்கரையில் பிறந்து..கூவம் நதிக்கரை வந்து சேர்ந்தபோது குழப்பம் தான் ரொம்ப அதிகம்.


படபடக்க வைத்த பட்டிணம் தான்..கூட்டுக்குள் புழுவாய் இருந்த என்னை..பட்டாம்பூச்சியாய் பறக்க வைத்தது நம்ம மெட்ராஸ் தானுங்கோ..


குரோம்பேட்டை ராதா நகருக்குள் ஒரு #மினி_இந்தியா

#பாரத_விலாஸ்


 குருவிக்கூடு வீடு தான் எங்கள் சொர்க்கம்.

சுருள் மாடி வீடு  ..சிம்ப்பிள் அடையாளம்.

மூன்றடுக்கு மாடி..


One India அப்போதே கண்டேன் அங்கிருந்த ஒன்பது வீடுகளில்..


சுந்தரத் தெலுங்கு கேட்கும் ஒரு வீட்டில்..

மலையாள மணம் வீசும் ஒரு வீட்டில்

மார்வாடி ஆண்ட்டியின் சப்பாத்தி சப்ஜியின் மணம் இன்னொர் வீட்டில்..

தம் ஆலு காந்தமாய் இழுக்கும் ஒரு வீட்டில்..

பிஸுபேளா..ப்ளேட்டில் தருவர் ஒரு வீட்டில்..

அன்புக்கு பஞ்சமில்லை..

பயமொன்று இருந்ததே இல்லை..


#கற்றதும்_பெற்றதும்_ஏராளம்.


வீடு பெரிசா இருந்தாலும் மனசு சின்னதாக இருக்கும் இந்த உலகத்தில்..

வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தகளை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி தன் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட வீட்டுக்கார மாமியின் #வாத்ஸல்யம்.


பாட்டியின் புடவைத் தலைப்பில் ஒளிந்திருந்த நாட்கள் போய்..

வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்த பட்டணம் இது.. என் வாழ்வில் #பட்டறையாய்..


பரீட்சையில் மார்க்கு வரதுக்கு முன்னாடி..ராமாஞ்சனேயர் கோவிலும்..ஸ்டேஷன் ரோட் பிள்ளையார் கோயில் என வளர்ந்தது #பக்தி.


மாம்பலம் போவது என்றால் #Manhattan போன ஸ்ரீதேவி மாதிரி..ட்ரெயின் ஏறி..foot board நின்று காற்று வாங்கிய #சந்தோஷம்.


சங்கீதம் என்பது ஸ்வரங்களின் ஜாலம் மட்டுமல்ல...அது ஒரு #தியானம்

என்று சொல்லிக் கொடுத்த வீணை மாமி.


வடாம்களுக்கு காவலோடு..விடலை அக்கா அண்ணாக்களுக்கு.. மெசெஞ்சர்..ஸ்பை..எல்லாமே எங்க வாண்டு க்ரூப்பு தான்.

அந்தக் கால 'அஞ்சலி' படம் போல எங்கள் அட்டகாசமான கூட்டம்.


நட்பு வட்டம்..நட்பு சங்கிலி..துவங்கியது இங்கே தான்.


Restaurants அப்போதெல்லாம் ஒன்று கூடகிடையாது..swiggy க்கு எதிர்பாக்காது ரெஸ்ட்டே எடுக்காமல் ..

அம்மாக்களின் கைமணத்திலும் காரியங்கள் கற்றபடி #வளர்ப்பு.


'வெற்றி'யின் வாசலில் அடிக்கடி நின்றதாலோ என்னவோ..

MIT..மண்ணைக் கூட மிதிச்சதில்லை.


முக்கியமாக..

வாழ்க்கையில் கடல் தண்ணீர் தவிர..உப்பு தண்ணீர் என்பது பைப்பிலும் வரும் என்ற உண்மை புரிய ..

ஒரு குடம் நல்ல தண்ணிக்கு...நடையாய் நடந்தது...தண்ணீர் சேமிப்புக்கு வித்தானது..


கிரோம்பேட்டை ..குறும்புடன் கூடிய கதம்ப வன வாச எண்ணங்களுடன் இன்றும் மனசில் .


எத்தனை வரவேற்புகள், எத்தனை வழியனுப்பதல்..கண்ட இந்த எங்க குடும்பத்து ஸ்டேஷன் இந்த கிரோம்பேட்டை ஸ்டேஷன்.


என் வாழ்க்கைப் பயணமும் தடம் புரளாமல்  சில நேரம் கூட்ஸ் வண்டி போலவும், சில நேரம் தடக் தடக் பயணமாக இருந்தாலும் இலக்கை அடைந்தே தீரணும்னு திடம் தந்த புடம் போட்ட இடம்.


புலம்பலில்லை..பொழுது போனதே தெரிந்ததில்லை.


க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்ததால்  இந்தப் பெயர் வந்தது என்றால்..அவர்கள் தள்ளி விட்ட கழிவு நீர் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஒரு காலத்தில் என்பது ஒரு வருத்தமே..இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.


கிரோம்பேட்டை க்கு #கும்மி அடித்து ஒரு #குறவஞ்சி பாடிட ஆசையும் தோணுது..

என்(அவர்)பேச்சிலர்_டேஸ்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#என்(அவர்)பேச்சிலர்_டேஸ்


ஏங்க..ஏங்க உங்க் பேச்சிலர் டேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...ஏதாவது விஷயம் மாட்டுமானு ஜொள்ளு விட்டபடி நான் கேட்க..


படு உஷாரு. ஐத்தான் படு உஷாரு..😄


கரோல் பாக்கில..அந்த கரோல் பாக்கில..எங்க பேச்சிலர் மேன்ஷன்ல..


ம்ம்ம்ம்..மேல சொல்லுங்க..கறுப்பா செவப்பா..சீக்கிரம் சொல்லுங்க..


இரும்மா..உனக்கு எல்லாத்துலயும் அவசரம்.

எங்க  ரூம்லே அஞ்சு  பேர் இடுக்கி இடுக்கி படுக்க..ஒருத்தர் எழுந்தா தான் நடக்கவே இடம் கிடைக்குமா..அப்போ..

காலையில் அந்த ரூம் ஜன்னல்லேர்ந்து....


ஜன்னல்லேர்ந்து..ஜன்னல்லேர்ந்து..


..பஞ்சாபியா..உ பி யா..டில்லியா..???


இரும்மா..முதல்ல சுந்தரம் எழுந்து எட்டிப்பார்ப்பானா..டேய் நகருடா..நான் பார்க்கறேன் நீ போய் உன் வேலையைக் கவனினு ராகவன் வெரட்டுவானா..?


ஏங்க..இப்ப அதுவா முக்கியம்?


சொல்ல விடலைனா எப்புடி..?


அதாங்க..அந்த விடலைப் பருவம்..சொல்லுங்க..சொல்லுங்க...


உன் டைம் ஸ்லாட் ஓவர்..noida பஸ்ஸு போய்ட்டா அப்பறம் நாய் பாடு தான்....என் டர்ன் இப்பொ..டிப் டாப்பா ராஜகோபால் சார் வந்து அவரோட கூலிங் க்ளாஸை அட்ஜஸ்ட் பண்ணி உட்காருவாரா....


" இவருக்குத் தான் இன்னிக்கு அதிர்ஷட்டம் அடிக்கப்போறதுனு..

கற்பூர ஆரத்தியுடன்..மூர்த்தி  வருவானா? 


வியாழக்கிழமை..கண்டிப்பா இன்னிக்கு மஞ்ச கலர் தான்..ஒரு பெரு மூச்சுடன் எட்டிப் பார்ப்பானா?..

" டேய்..டேய்..நேத்துதானே டா..அது..இன்னிக்கு பார்..மல்டி கலர்ல சும்மா தகதகனு...'..

" இல்லவே இல்ல..பெட் கட்றேன் ..இன்னிக்கு என் ஃபேவரிட் கலர் வொயிட் தான்..'..சுந்தரராஜன் சூ மந்திரக்காளி சொல்வானா..


ம்ம்ம்ம்ம்..சீக்கிரம்..சீக்கிரம்....எனக்கு ஹார்ட்டே வெடுச்சும் போல இருக்குப்பா.


எட்டடிக்க இன்னும் only 60 seconds இருக்க..

அந்த ரூமில்..லப் டப் லப் டப் சத்தம் மட்டுமே. கேட்க...

கடிகார முள் எட்டு நெருங்க..

சரக் சரக் சத்தம்...

வந்தாச்சு..வந்தாச்சு..

பல கண்கள்..அந்த ஜன்னல் ஓரத்தில் எட்டிப் பார்க்க..

யார் மீது  வீசப் போகிறதோ...இன்று..


ஐயோ.சஸ்பென்ஸ் தாங்கலைப்பா..

கடைக்கண் பார்வைதனை கன்னியர் காட்டி விட்டால்.மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்..இல்ல.....

சே..என்ன லைஃப் ப்பா..


இரு..இரு..ஸ்டாப் ஸ்டாப் ..

இங்கே கன்னியர் எங்கே வந்தா..?..ஒரு பெரிய குண்டை அவர் போட..

.' இல்லயா பின்ன..இன்னும் என்ன ஒளிவு மறைவு?..


" எங்கே நிறுத்தினோம்..ஜன்னல் பின்னாடி...?..


ம்ம்ம்ம்ம்ம்..அப்புறம்..

" சார்..தயிர் சாதம்,புளி சாதம்,லெமன் இருக்கு..


மையலோடு ஏதோடு சொல்லப் போறார்னு பார்த்தால்....

பார்த்தால்..


வேற யாரு..நம்ம சாப்பாடு பொட்டலம்  சங்கரன் ..

 அங்க நிப்பாம்மா..'..


நீ வேற வீணா எதேதோ கற்பனை பண்ணிண்டு..


"இட்லி போடவா சார்..?'


"சங்கரா..உன் இட்லியை தூக்கிப் போட்டு..இந்த செவுத்துள்ள ஓட்டை போட்டுடாதேப்பா..வூட்டுக்காரனுக்கு பதில் சொல்லணும்னு.. ராகவன் ஓடி வந்து மிஸ் பண்ணாமல் அந்த பொட்டல கேட்ச் புடிப்பாரா..ஏன் கேக்கற..


பொட்டலம் கையிலே..புத்தியோ..பஸ்ஸை பிடிக்கும் ஓட்டத்திலே.


இதுல ஃபிகரு எங்க..கலரு எங்க..?  கட்டபொம்மன் வசனம் பேசிக் கொண்டே போக..


அதுசரி..டபாய்க்காதீங்க..அத்தனை கண்ணிலும் உங்க கண் மிஸ் ஆறதே..அப்போ..அப்போ...நீங்க..நீங்க..

நான் கண்ணை கசக்கி..சந்திரமுகியாக..


" அப்படியெல்லாம் என்னை முறச்சு பாக்காதேம்மா..நான் ரொம்ப நல்லவன்..'. 


கரெக்டா அந்த நேரம்..

' பச்சை நிறமே..பச்சை நிறமே.." என் மொபைல் பாட..


ஆஹா..கரோல் பாக் பாலாஜி..

" பாலாஜி ..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்னு ' ..முதல் மரியாதை ஸ்டைலில் நான் பேசிக் கொண்டே போக..

' மாமி..ராமசாமி சார் பத்தி அப்படியெல்லாம் நினக்காதீங்க..இத்தனை களேபரத்திலும் அவர் இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருப்பார்..

சங்கரன் குரல் கேட்டதுமே..ஃபாக்டரி சங்கு ஊதினாப்போல..பத்து நிமிஷத்தில ரெடியாகி..சார்ட்டர்ட் பஸ்ஸுக்குள்ள போய் உட்கார்ந்துடுவாரு..அவரைப் போய் நீங்க..'...


ஏம்ப்பா..கரோல் பாக்,அஜ்மல் கான் ரோடு..ஆயிரம் வசதிகள் இருந்தும் உனக்கு ஒரே ஒரு ஆள் மாட்டலையாப்பா..நான் கேட்டது தான் தாமதம்..

" ஊர்ல ஜோஸியர் அம்மாகிட்ட  சொல்லிட்டாராம்..சிங்கப்பல்லோட சிங்கப் பொண்ணு ஒண்ணு வரப்போறா உன் குடும்பத்துக்கு மருமகளானு.. அப்புறம் எங்க..மானு மயிலுனு தேடறது..'..


என்னப்பா இது..உங்க பேச்சிலர் லைஃப் இப்படி சப்புனு போச்சு..'..


என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலைனு அவரோட எக்ஸ்பிரஷன்..😄😄😄😄


ஆனால் ஒண்ணுங்க..

அந்த பேச்சிலர் மேன்ஷன் நுழைஞ்சதுமே..

அப்படியே மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கும்..


ஒரு பெரிய அலுமினிய அண்டால..கோஸ் ,பீட்ரூட்,வெங்காயம் ,தக்காள்,முருங்கை,கீரை,பூசணி பரங்கி.. ஒரு மார்க்கெட் காய்கறியுமே ஒரே சாம்பாரில் மிதக்கும்..


பூண்டும் மாங்காயும் ரசமாக ..கொத்தமல்லி கருவேப்பிலையுடன் மிதக்கும்..


கிண்டலும் கேலியும் கும்மாளம் கலகலப்புனு  வெளியே தெரிந்தாலும்.


தங்கை கல்யாணம் செய்யணும்,அம்மாவை கவனிக்கனும், வீடு கட்டணும், மனைவிக்கு பணம் அனுப்பணும், அதைவிட ஊருக்குப் போக பணம் சேர்க்கணும்னு ..அவர்கள் மனக் கவலைகள் எப்போதாவது வெளியே வரும்..


சரி இந்தக் கதை தான் புஸ்ஸுனு போச்சு..

தம்பிக்கு மெசேஜ் பண்ணினேன்..

' டேய்..உன் பேச்சிலர் டேஸ் பத்தி....' 


பேச்சிலர் டேஸ் பத்தியா..எனக்கு பத்திக்கிட்டு வருது..

காலேஜ் டேஸ்லயும் உனக்கு காவலாப் போயே நேரம் போச்சு..

வேலை கிடைச்சு டெல்லிக்கு போனால்..எனக்கு முன்னாடியே அங்கே போய் நீ செட்டிலாகிட்ட.. இதுல பேச்சிலர் லைஃபா..பிச்சு புடுவேன் பிச்சு..'..


ஆத்தா..இறங்குனு..நான் மெசேஜை நிறுத்த..


' என் வாழ்விலே நீ வந்தது விதியானால்...நீ எந்தன் உயிரன்றோ'...பாட்டு ..டீவில வூட்டுக்காரர் பார்த்துக்கிட்டு இருக்காரு..😄😄😄😄


.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..

 #சும்மா_ஒரு_ஜாலி_போஸ்ட்


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..


POTW கிடைத்த சந்தோஷத்தில் ஊ..ல..லா.லா பாடிக் கொண்டே..

பெரிய பொண்ணுக்கு மெசெஜ் அடிச்சா..

அம்மா..its midnight here நு சொல்லிண்டே..

ஒரு dancing girl emoji அனுப்பிட்டு அவ மீண்டும் அவ dream தொடரப் போய்ட்டாள்..

சின்னவகிட்ட  சொன்னதும்..i know amma..you will get .. Appa க்கு போய் thanks சொல்லுனு என்னை விரட்ட..


வூட்டுக்காரரை தேடிப் போனால்...

....


கிச்சன் மேடையில் ..கைப்பற்றிய ஆயுதங்களை வரிசையாக மக்கள் பார்வைக்கு வைத்திருப்பது போல..

தேய்த்த கரண்டி,ஸ்பூன்களுடன் வூட்டுக்காரர்..


நான்: ஆஹா..என்னமா..பளபளனு தேய்ச்சு வெச்சிருக்கேள்..சூப்பர்ப்பா நீங்க..🤔

சொல்லிக் கொண்டே போக..


'அவர்; ' எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்'  ..முதல் மரியாதை செங்கோடன் போல சிவந்த கண்களுடன்..😠


" நான் வாங்கிய POTW காண்பிக்க வந்த என்னை..இப்படி கேள்வி கேட்கலாமானு'

நான் கண்ணை கசக்க.😭.( நோ..நோ..கண்ணை கசக்காதே..'கொ" ..வந்துடப் போறதுனு பதற..

உஸ் அப்பா..அவரை divert பண்ணியாச்சுனு நான் நகர..


அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த நம்ம கவுண்டமணி...அவரை உசுப்பி விட்டார் பாருங்க..


அவர்:' இன்னிக்கு எத்தனை ஐட்டம் நம்ம் வீட்ல?


நானு; என்ன..எல்லாம் கர்ஃப்யூ சமையல் தான். புடலங்காய் பொரிச்ச கூட்டு,உருளையும் ப்ரெட்டும் சேர்த்து காய், மிளகு ரசம்..சாப்ட்டு முடிச்சு இதென்ன கேள்வி?


அவர்; (கவுண்டமணி ஸ்டைலில்)..அப்போ எத்தனை கரண்டி இருக்கணும்?

நானு: சாதம் மோரும் சேர்த்து..1..2..3....


அவரு: மொத்தம் 5 கரண்டி.. ..கர்ஜனையுடன்👹


நானு;...🤒


அவர்: இப்போ ஸ்பூன் கணக்கு சொல்லு..


ஐயோ ராமா.. கணக்கு பாடத்துக்கே டிமிக்கி கொடுக்கும் எனக்கு..

இதென்னடா சோதனை தெய்வமே காப்பாத்துனு..


அவரு: நீ எண்ணறயா..இல்ல நானே எண்ணட்டுமா? என்று கர்ஜிக்கிற மாதிரி ஆரம்பிக்க..இல்ல..இல்ல...கனிவா..கேட்க..


நானு:  விரல் விட்டு எண்ண ஆரம்பிச்சேன்..

Only ஒரே ஒரு  டஜன் ஸ்பூன் தான் இருக்கு..

(இதுக்கு போய் அலட்டிகலாமானு நான் ரஜினி ஸ்டைலில் பேச.)


அவரு: ஒரே ஒரு ஐட்டமுக்கு ..ஒரே ஒரு ஸ்பூனு..( ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரே ராஜா..) பாடிக் கொண்டே..

வரிசையா சொல்லு..எதுக்கு எந்த ஸ்பூன்?


நான்: இது கதக்கு..இது பரத நாட்டியம் ,இது ஒடிஸி..

 கமல் பாஷையில் சொல்லிக் கொண்டே போக..


அவரு; tally ஆக மாட்டேன்கிறதே..திருப்பி சொல்லு..

நானு; (ரொம்ப பாவமா)..திருப்பி..1..2...3..


அவரு: என்னமோ போ.. நம்ம வீட்டு balanced sheet ம் tally ஆகாது....பத்து பாத்திரமும் tally ஆகாது..


நல்லவேளை கத்திரிக்கோல், கத்தி,peeler பத்தி கேட்டால் ..ஏதாவது பீலா விடலாம்னு இருந்தால்..


அது அவருக்கு out of syllabus..so ....me..escaped..


நானு; இதெல்லாம் daily யாராவது tally பண்ண முடியுமா..இருங்கோ..என் மத்யமர் ஃப்ரண்ட்ஸையே கேக்கறேன்..கரெக்டா சொல்வா..


சரிதானேப்பா..

சிங்க்கில் விழும் பாத்திரத்துக்கெல்லாம்..

"ஆடிட்" ஆரம்பிச்சால்..

நான் "ஆடிப் "போய்டமாட்டேன்..

தீராத_விளையாட்டுப்_பிள்ளை

 #ஸண்டே_ஸ்பெஷல்


#தீராத_விளையாட்டுப்_பிள்ளை..


நானா..இல்லவே இல்லை..


மிஸ்..எனக்கு இன்னிக்கு வயத்து வலி மிஸ்.. லேசா தலவலி மிஸ்..

மிஸ் மிஸ்..நளினி ஆசிரியை( தமிழ் டீச்சரை அப்படித்தான் கூப்பிடணும்) வினாத்தாள் திருத்தினதை எல்லாருக்கும் கொடுக்கணும் மிஸ்..' இப்படி பொய் சொல்லி சொல்லி..PT க்ளாஸுக்கு டிமிக்கி கொடுத்த நமக்கு ஸ்போர்ட்ஸ் எப்புடி வரும்?


அப்படியும் வேற வழியில்லைனு வந்தா..

ரொம்ப பிடிச்ச விளையாட்டு..சொன்னா நம்ப மாட்டீங்க..

#Lemon_and_spoon race தான்..😀

அப்பவே பாருங்க..நமக்கும் சமையலுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருந்திருக்கு ..


செலவே இல்லாத விளையாட்டு..

மத்த ஸ்போர்ட்ஸ் க்கு ஸ்கூல்ல ப்ராக்டீஸ் பண்ணனும்..இது நம்ம வீட்டிலேயே ப்ராக்டீஸ் நடக்கும்..


" ரெண்டு எலுமிச்சம் பழம் வெச்சிருந்தேனே..ஒண்ணு தானே இருக்கு..இன்னொன்னு எங்க?

அதான் இதுனு..கவுண்டமணி டயலாக் பேசிட்டு..பைக்குள் நைஸா ஒரு பழத்தை எடுத்து வெச்சுக்கறது..

இருக்கற 10x10 ரூமுல ஸ்பூன்ல 🍋 வைச்சு நடக்க..

' எச்சல் பத்து..ஒண்ணுமே கிடயாது இந்த வீட்லனு' ஆசாரப் பாட்டி அங்கலாய்ப்பாள்.


அந்த நாளும் வரும். அதான்..ஸ்போர்ட்ஸ் டே..


ஒச்சம்மா டீச்சர்..📚 விசில் ஊத..


ஸ்பூனை வாய்க்குள்ள கெட்டியா பிடிக்க..

அத்தனை நாள் சமத்தா ஸ்பூனுக்குள் உட்கார்ந்த லெமன்..விசில் சத்தம் கேட்டதும் டிஸ்கோ ஆட ஆரம்பிக்கும்..

கையை வேற பின்னாடி கட்டிக்கணும்..


போங்காட்டம் ஆடவே முடியாது..அது தான் கையும் வாயும் கட்டிப் போட்டு இருக்கே..


நம்ம க்ளாஸ் cheer girls வேற உசுப்பி விட..

'அகிலா..இன்னும் என்ன..உன் வீரத்தைக் காட்டுனு' மை வாய்ஸ் சொல்ல..


"மக்கு..ஒழுங்கா balance பண்ணுனு' லெமன் என்னைப் பார்த்து முரைக்கும்..

ஸ்பூனை இறுக்கிப் பிடிக்க வாய் வலிக்கும்..


பத்து தப்படி தாண்டறதுக்குள்ள..தாகம் எடுக்கற மாதிரி இருக்கும்..தொண்டை வறளும்..

என் லொள்ளு தாங்காத லெமன்..


ஆடி அடங்கும் வாழ்க்கையடா.இதில் ஆறடி நிலமே சொந்தமடானு..தத்துவப் பாடல் பாடியபடி..


இதோ..விழப் போறேன் விழப்போறேன்..விழுந்துட்டேன்னு பாண்டிய ராஜன் கார் சீன் மாதிரி..தொபுகடீர்னு லெமன் ..land ஆகிவிட..


அப்புறமென்ன..கொடுத்த பில்டப்பெல்லாம் பொடி பொடியாக..retired hurt ஆக pavilion க்குள் வந்து..

மீதி ஸ்போர்ட்ஸ் க்கு..cheer girls ஆகிட வேண்டியது..


" என்னடி..இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே ஆச்சே..  கப்பு  கிப்பு உண்டானு ' ஆபீஸிலேர்ந்து களைச்சுப் போய் வரும்  சித்தி கேட்க..' இந்தா..ரொம்ப களைச்சு போயிருக்கே..ஒரு கப் லெமன் ஜூஸ் போட்டு வெச்சிருக்கேனு' சொல்லி..சொல்லி..

என் 😢 சோகக் கதையைக் கேளு தாய்க்குலமேனு நான் புலம்ப..


"போனாப்போறது விடு..lemon and spoon game ல ஒரு அழகான தத்துவம் இருக்கு தெரியுமா..நம்மளோட வாழ்க்கையை எப்படி balance பண்ணனும்.. அந்த 🍋 கீழே விழாம இருக்க ,எத்தனை concentration and practice வேணும்'..இதெல்லாமாவது கத்துண்டியா ' that's more important அவள் சொல்லச் சொல்ல..


எப்பவும் ஸ்பூனும் லெமனுமா..ப்ராக்டீஸ்


அடுத்த தடவை try பண்றேனுனு சொல்லிட்டு..

அடுத்த வருஷம் பேர் கொடுக்கலாம்னு மிஸ் கிட்ட கேட்டால்..

" இந்த ரேஸ் இந்த வருஷம் event ல இல்லனுட்டாங்க'..


உன் குத்தமா..என் குத்தமா..யாரை நான் குத்தம் சொல்ல..

ஒரு நல்ல லெமன் and ஸ்பூன் ரேஸ் வின்னரை இந்த நாடு இழந்தது..😀😀


நாம ஃபோட்டோ புடிக்கற அளவுக்கு ஒண்ணும் சாதிக்கலை..அதான் ..இந்த அம்மா ஃபோட்டோ..

மன்னிச்சு🙏

Diet. Diet .diet..🍫🍬🍧🍒🥝🥦🥒🌽

 Diet. Diet .diet..🍫🍬🍧🍒🥝🥦🥒🌽



கட்டுவோமே bettu..🤦

வாயைக்....

கட்டி இருப்போமே டயட்டு🧘

வைப்போமே டார்கெட்டு..

வாங்க மாட்டோமே ஸ்வீட்டு.🥞🧇

வாங்கிக் குவிப்போமே ப்ராடக்ட்டு..🍈🍒🫐🍇🌽🍠🧅

குறையாதே வெயிட்டு..

கரையுமே wallettu..

ஆவோமே அப்செட்டு..

புரியுமே ஒரு secret tu..


Diet என்பது ..

உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல..

உள்ளத்தோடும் ஒன்றி இருப்பதென்று..


லேசா இருக்கணும் மனசு..

ஏசாதிருக்கணும் எவரையும் 

பேசாதிருக்கணும் ..தேவையில்லாததை..

காசா பணமா செலவு இதுக்கு?..😃😃😃😃


இதை உணர்ந்தால் ..

இனி இருக்காது regret ttu..

வாழ்க்கை ஆகுமே brighttu..☀️☀️☀️🦩

வழி எங்கும் விரிக்கப்படுமே..red carpettu.


அன்புடன்..

😃😃😃👍😃😃👍


திங்கட்கிழமை காலையிலே..

தொடங்கியாச்சா?

உங்க மை.வா கேட்கறது..😃😃😃😃


The word  diet actually comes from the Greek word “diaita,” which means “way of life.” 


அதுதான்..அதுதான்..அதுவே தான்..💪💪💪

Tuesday, November 22, 2022

Vihan

 A cute little new member arrived in our family..so happy for you vidya Shrividhya Harish

God bless you both and our family's  little prince..love and wishes from Akila Ramasami perimma


நீ வருவாய் என..


காக்குருவி கூட்டினிலே..

குட்டிக் குருவி ஜனனமின்று...

காத்திருப்பு பல நாளாய்..

கலி தீர்க்க வருவாய் என..


கவி யொன்று புனைந்திங்கே

காலமும் ஆச்சு கண்ணே..

கண் துஞ்சா காத்திருப்பு..

கனவோடு பல ராவும்..


கவலை போக்க வந்த

குலக்கொழுந்தே..

கோமேதகமே..


கண்ணீர் இனியில்லை..

காக்கும் கரம் உன்வரவால்..


குலமெம் தழைக்க வந்த..

குட்டிக் குருவியே..

குதூகல குடும்ப வலைக்குள்

கூடி  உனை வரவேற்கிறோம்..


குட்டிக் கிளை உனக்கும்...நம்

குடும்பமெனும் பெருமரத்தில்..

கூவி  நீ அழையாமலே..

கூடி உனைக் காப்போமே..


பெரியம்மா...நானானேன்

பிடிபடவில்லை..என்

பெருமையின்று..

பேணி உனைக் காப்போமே..

பேரோடும்.புகழும்..

பண்போடும்..அன்போடும்..

பல்லாண்டு வாழ்ந்திடவே..

பாமாலை..சூடுவேனே...

Sunday, November 6, 2022

Happy_birthday_appa 2019

 #Happy_birthday_appa


..


எங்க வீட்டு சூப்பர் ஸ்டார்

நடக்கும் எங்களுக்குள் அடிக்கடி "war"


செல்லமாய் எல்லார்க்கும் இவர் "அப்பு'..

வைக்கத் தெரியாது யாருக்கும் 'ஆப்பு'


(புதுக்)கோட்டையில் பிறந்த மகாராஜா

(குரோம்)பேட்டையில் வாழ்ந்த தனிக்காட்டு ராஜா..


வேலையில் எப்போதும் புலி..

வூட்டுக்கார அம்மாவைப் பார்த்தால் எலி..


பேத்திகள் தான் இவரின் pet

 அவர்கள் பேச்சுக்கு ஆடும் puppet.


அவரின் சிறு உலகில்..

எல்லாம் நாங்கள் தான்..


Kids ..cake கொடுக்க..

Kheer ம்..பூரியும் நான் சமைக்க..

கடந்து போகணும் கடைசி நாட்கள்

கவலை கண்ணில் தோன்ற..

கண்ணீரை மறைத்து..

கலகலப்பாய் என் அப்பா..


வாழ்த்தோடு நான் சொல்வேன்..உன்னை

விடமாட்டேன் என்றும் என்று..

Happy_birthday_Appa 2020

 இன்னிக்கு எங்க வீட்டு ஹீரோ..என் அப்பாவின் birthday..


#Happy_birthday_Appa..


புதுக்கோட்டை புத்திரனுக்கு..

பிறந்த நாள் இன்னிக்கு..

பாரதியின் பாட்டுதான் 

பொருந்தும் என் அப்பாவுக்கு..

என்னனு கேக்கறேளா..?


காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..

மாலை முழுதும் விளையாட்டு 

என் வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா..


இது தான் என் அப்பாவும்..

காலையில் எழுந்ததும்..

படிப்போ படிப்பு..நியூஸ் பேப்பர்..

பின்பு கனிவு கொடுக்கும் ..

நல்ல கர்னாடிக் பாட்டு..காதோடு பேசிக் கொண்டே இருக்கும்..

மாலை முழுதும்..

சப்த ஸ்வரங்களோடு..விளையாட்டு..


அப்பு ..அப்புனு..அவரைச் சுற்றி ஒரு 

அன்பு வட்டம்..

அதனால் இல்லை அவர் வாழ்வில் வாட்டம்..


அப்பா..என் தோழன்..

மழையும் மாட்சும் 

ஒண்ணா ரசிப்போம்..

மராமத்து வேலையும்

மகிழ்ச்சியாய் செய்வோம்..


அப்பா என் ஆசான்..

எதிலும் இருக்கும் ஒழுங்கு..

வயதோ எண்பத்தி நான்கு..

வாழும் பாங்கோ மிக அழகு..


அப்பா..ஒரு ஞானி..

அவருக்கென்று ஒரு தனி பாணி..

அவருக்குள்ளே அமர்ந்த 'வாணி'..

இன்னும் கொஞ்சம் வெளியே வா..நீ..


Appa is a wonderful guide

And i always love to abide


வார்த்தைகள் வரிசையில் நிற்கிறது..

வாழ்த்தொன்று உனக்கு சொல்ல..

வயது என்பது just a counttu..

நாங்க கொடுப்போம் ஒரு big soundu..

அதைக் கேட்டு நீயும் மயங்கு..


Happy happy birthday to you Appu..


அப்பாவுக்கு பிடிச்ச பாட்டை keyboard ல் try பண்ணினேன்..

என்ன பாட்டுனு கண்டுபிடிக்க முடியற அளவு வாசிச்சு இருக்கேனா?😀


https://youtu.be/mzGSAmI01iQ


இந்த YouTube link click செய்தால்..அவர் மாப்பிள்ளையும் ..அதான் என் வூட்டுக்காரரும்..அவரோட பேத்தியும் அட்டகாச performance கொடுத்திருக்காங்க...


https://youtu.be/Ge0qkXKiUuQ


Have a musical birthday Appa

Happy birthday Keerthivasan Rajamani 2020

 Happy birthday Keerthivasan Rajamani sir


பேரிலேயே இருக்கும் கீர்த்தி..

ஸ்ரீலக்ஷ்மியின் பதி

இருக்கு நிறைய இவருக்கு மதி..

இருப்பார் கொஞ்சம்  fb ல் கதி..


இவர் பதிவுகளில் இருக்கும் பல சேதி..

மின்னும் இவர் தலையின் பின்  ஒரு ஜோதி..( அதான்..ஒளி வட்டம்).

சிலசமயம் வேதாந்தி..

மிளிரும் இவர் எழுத்தில் தேசபக்தி..


செய்யும் வேலையில் நேர்த்தி..

இவர் எழுத்து என்றும் எனக்கு ப்ரீத்தி..

இவர் கற்றுத் தந்த  பல யுக்தி..

தந்ததே பலருக்கு சக்தி..(technical aspects you have taught us so much sir)


காணணும் இவர் பல அப்த பூர்த்தி

என் அன்பைச் சொன்னேன் இவரை வாழ்த்தி..🙏

செய்து தருவோம் இனிப்பு பாசந்தி..

வாழ்க நீ என்றும் கீர்த்தி..💐


( உங்களோட ஒரு ஃபோட்டோவும் எடுத்ததில்லை சார்..

மஹா பெரியவா அனுக்கிரகம் எப்பவும் உண்டு உங்களுக்கு)

Happy birthday Keerthivasan Rajamani sir 2021

 Happy birthday Keerthivasan Rajamani sir


கீர்த்தி என்ற பெயரைச் சொல்லும் போதே...

கீற்றாய் புன்னகை மலரும்.

வீற்றிருப்பார் என்றும் ஸ்ரீலஷ்மி மனதில்..

பெற்றவர் பெற்ற பே(ரு)று

பெற்ற பிள்ளைகளுக்கோ பெரும் பேறு


கற்றுத் தெளிந்ததை..

காற்றில் பறக்க விடாமல்..

மற்றவருக்கும் புரியச் செய்வார்..

வற்றாத அறிவுக் களஞ்சியம் இவர்.


சிற்றிளங்காலையும்..

சிறகடிக்கும் பறவைகளும்..

சிற்றாடை கட்டிய சாராதாவும்..

சுற்றி வரும் அனந்துவும்..கேமரா

சிறைக்குள் அடையும்..

சிறப்பும் அடையும்..


மேற்கோள்கள் பல தந்து

சுற்றமும் நட்பும் வாழ்த்த..

போற்றப்படும் ஒருவன் நீ..

ஏற்றமிகு நண்பன் நீ..


எட்டி நின்று காத்திருக்கேன்..

என் வாழ்த்தையும் ஏந்தியபடி..

இன்று போல என்றும் வாழ்க

இன்பங்கள் கூடை கூடையா பெருக..


உனக்கென்று பரிசொன்று 🎁 அனுப்பவில்லை..

உள்ளம் உருக வேண்டினேன்..

உலகிலுள்ள இன்பமெலாம் தா இவனுக்கென்று..

குருவருளும் குவியட்டுமென்று..


Happy Birthday sir.


என் வீட்டு அனுஷ பூஜை..அவர் அனுக்கிரகம் உங்களுக்கு ஸ்பெஷலாக உண்டு .

Happy birthday appaa..🎉🎁🎁🎁🎂🌟 2021

 Happy birthday appaa..🎉🎁🎁🎁🎂🌟



அப்பா..என்ற மூன்றெழுத்து..

இதில் அடங்கும் என் மூச்சு..

இவரில்லாமல் ..முடியாது என் பேச்சு..


இவரைப் போல அச்சு நானு..

சுற்றி வரும் அச்சும் அவரு..

பேச்சில் இல்லை பூச்சு..

ராகமும் தாளமும் இவர் மூச்சு..


என்னை எப்போதும் செயவார் வாட்ச்சு..

என் குட்டித் தப்புகளை பிடித்திடுவார் கேட்ச்சு..

பார்க்கப் பிடிக்கும்  மாட்ச்சு.

பொழுதை இனிமையாய் கழிப்பார்..கீ போர்டு வாசிச்சு..🌟🌟🌟


முத்துப் பற்கள் மின்னும் இன்னும்..

தங்கம் போல heart. ( stent வெச்ச்சாலும்  stunt பண்ணும்)

Demand எதுவுமில்லா diamonduu..

"க"ம்மு'னு இருக்கும் மாணிக்கம்.


எங்க வீட்டு செல்லம் என் அப்பா..

பேத்திகளின் ..pettu இந்த தாத்தா..

மாப்பிள்ளைக்கும் எப்போது இவர் மேல் குறையாத ❤️ அன்பு..♥️♥️♥️


அப்பு அப்பு என்று ..

அன்பு சூழ் அண்ணா, அக்கா, தங்கைகளுடன்..

அப்பாவுக்கென்ன..?

அன்றும் இன்றும்.

புதுக்கோட்டை ராஜாதான்..

ராஜகோபால்தான்..


ஆரோக்கியத்துடன் ..

ஆண்டுகள் கடக்கணும்..

அகிலாவின் பிரார்த்தனை 

இது ஒன்றே..


Happy birthday appaa..

Sunday, October 23, 2022

இது உணவுப் பதிவல்ல..

 இது உணவுப் பதிவல்ல..


உளவியல் பதிவு.. டிஸ்கி கொடுத்துட்டா நல்லது தானே😀😀


ஒரு டம்ளர் சேமியா எடுத்துக்கோ..

நல்லா வறுத்தியா..

வெங்காயம் நன்னா பளபளனு வேகணும்..

தக்காளி 🍅 பொடியா கட் பண்ணிக்கணும்..

பச்சை மிளகாய்..உன் இஷ்டம்

உப்பு ..namak shamak nu dance ஆடிண்டே போடாதே..

தண்ணீ..பார்த்து ஊற்று..கொழ கொழனு செஞ்சுடாதே..


இப்படி எந்த instruction ம் கொடுக்காமல்

தேமேனு அடுத்த ரூமில் ' லொக்கு  லொக்கு லொக்கு அரே  பாபா லொக்குனு ' நாம படுத்துக் கொண்டிருந்தாலே போதும்..


லுக்..லுக்..லுக்..அரே அம்மா லுக்..நு பாட்டு பாடிண்டே ப்ளேட்டில் வரும் ..

பாசக்கார பொண்ணு செய்த சேமியா உப்புமா..

'சேமி..yaa .இதை உன் உள்ளப் பெட்டகத்தில்னு..போட்டோ பிடிக்க..


#Keep_distance..

வாகனத்துக்கு மட்டுமல்ல..

வாரிசுகள்..வரிந்து கட்டி வேலை செய்யும்போதும்..


வைர(ல்) சிந்தனைகள்😀

சரிதானே..

அன்புடன்...

Missing..missing..those moments

 Missing..missing..those moments


என் பொண்ணு: அம்மா..என்னோட earphone காணாப் போயிடுத்து..😭


நான்: ஏண்டா காலேஜ்லேர்ந்து வரும்போது டெஸ்கெல்லாம் செக் பண்ணிட்டு வர மாட்டியோ?😡


அவள்: அதை ஏன்மா கேக்கற..

அன்னிக்கு desk மேல வச்சுட்டு வந்த cost accounts note அடுத்தநாள் போனா அதே எடத்தில இருந்தது..ஆனா..நேத்திக்கு விட்டுட்டு வந்த earphone எங்க போச்சுனே தெரியல..!!🙄😀🤔


#college_rocks😀💪🎵🎸

Friday, October 14, 2022

வாங்க_சாப்பிடலாம்

 #வாங்க_சாப்பிடலாம்


.


#Mustard_seeds_and_coconut_rice


#கடுகு_தேங்காய்_புளி_சாதம்😀

All in one


நவராத்தியில் கற்றுக் கொண்ட ரெசிபி.


To grind raw

1 grated coconut

1.5 fist of guntur chilli

1.5 fist of bedige chilli

1 spoon mustard

Tamarind 1 lemon size

Hing

Turmeric little

Salt

Grind well into a paste


Keep kadai, add oil, Hing mustard. After it splutters add chana dal, urad dal and peanuts. Add Curry leaves.

Now add the ground paste and fry for long untill the raw smell leaves.

Store this paste in the fridge..and mix it with rice.


இது என் ஃப்ரண்டோட ரெசிபி இது..


நம்ம modify.com  என்ன தெரியுமா?😀

இதே பேஸ்ட் உபயோகித்து மோர்க்குழம்பும் பண்ணிட்டேன். செம்மடேஸ்ட்.

பனீர்த்துவம்

 #பனீர்த்துவம்..


நான் தேமேனு சும்மா இருந்தேன்ப்பா..

இந்த Chandrashekar R sir..தான்..

இன்னிக்கு என்ன போஸ்ட்டுனு உசுப்பி விட்டார்..


அதுக்குள்ள Radha Sriram Vaidehi Jagannathan mam ரெண்டு பேரும் game ஆரம்பிச்சிட்டாங்க..


So..me continuing the game😀😁


Paneer


இந்தப் பேரைக் கேட்டாலே..

பலருக்கு வரும் ஆனந்தக் கண்ணீர்..


பால்கோவா மட்டும் சாப்பிட்ட நமக்கு..

பன்னீரின் அறிமுகம் கிடைக்க..

பாலெல்லாம்...பன்னீராக மாறி..

பல ஆகாரம் இப்போ இங்கே..


டக்குனு ஒரு tikka..

Breakfast க்கு burji

Better taste க்கு butter masala..

லக லகனு..பாலக் பன்னீர்..

Spicy ஆக பன்னீர் ரைஸ்..


ஆனா..

அதோட குணம் இருக்கே..

அதுக்குனு பெரிய டேஸ்ட் கிடையாது..

சேர்க்கும் மசாலாவில் மூழ்கி ..

😋 சுவையும் சேர்க்கும்..


ரொம்ப soft இருக்கும்..

ஆனா..உருகி ஓடாது..


Gravy ல் போட்டாலும் சரி..

கொதிக்கும் எண்ணெயில் போட்டாலும் சரி..

உடையாது ..உதிராது..


இப்போ புரியுதா..

நாம் எப்படி இருக்கணும்னு இந்த பன்னீர் பாடம் சொல்லித் தருகிறதா இல்லையா..?


Consistency ...ரொம்ப முக்கியம்..ஆமாம்..


அன்புடன்😀


Wednesday, October 12, 2022

ரசத்துவம்

 #ரசத்துவம்


..

ரசப் பாத்திரத்துடன் ..எப்போதும் எங்க வீட்டில் ..அது ஏன்..எங்க குடும்ப டயலாக்..இதுதான்..


தெளிவா வேணுமா..?

கொஞ்சம் கலக்கி விடலாமா?

இல்ல..கலக்கித் தெளிவா விடலாமா?..


சாப்பிடறவங்க கொஞ்சம் குழம்பிப் போய்..ஙேனு முழிக்க வைக்கறது ஒரு ஜாலி எப்போதும்..😀


என்னதான் தெளிவா இருந்தாலும் ..கடைசில ஒரு அடி வண்டல் இருக்கும் பாருங்க ..அதுக்கு ஒரு தனி சுவைதான்..


அதுனால..

தெளிவுதான் வேணும்னு சொல்றவங்களை..

தெளிவா இருக்கறவங்களை..அப்படியே தெளிவா இருக்க விட்டுடலாம்..


அதே கொஞ்சம் கலக்கி வேணும்னு சொன்னால்..

பார்ட்டி..பாவம்னு கொஞ்சம் கலங்கிப் போயிருக்காங்கனு அர்த்தம்..


அதுக்கு மேலே..

நல்லா கலக்கு கலக்கிட்டு .. தெளிவா விடுனு சொன்னால்..

எஸ்கேப்புனு ஓடிடலாம்😀


Over to Radha Sriram Shasri

Start music💃💃🎵🎶🎼🎤🎸🎷🎺

Aloo வும் பின்னே அகிலாவும்

 Navaratri Prasadham- today.


Navratri Prasadham- today


Aloo வும் பின்னே அகிலாவும் 


#ஆலூ(ஹ)ல்வா with #ஆலூ(அ)ப்பம்


ஆலூ 🥔🥔🥔🥔🥔..ஆலூனு ஆலாய்ப் பறந்த காலம் ஒண்ணு இருந்தது..

இப்போ..ஆலூவா..அளவாச் சாப்பிடணும்னு ..அறிவு வளர்ந்தாச்சு..😄😄😄


உருளையில்லா🥔🥔🥔 உலகமில்லை.. 🌎🌎🌎🌎🌎

உயிருள்ளவரை உன்னை விடமாட்டேன்னு..ஒரு பந்தம் எப்போதும்..


வேகவைத்த ஆலூ நாலு.

.

அதில் ஒண்ணு ஆச்சு ஹல்வா..


மீதி மூணுமாச்சு..

மொறு மொறு #ஆலூ_farali..

ஆலு mash செய்து , வேர்க்கடலை பவுடர், சாபுதானா பவுடர் + green chillies, coriander + salt சேர்த்து உருட்டி..

எண்ணெயிலும் போடலாம்..குழி ஆலூ(அ)ப்பமாவும் செய்யலாம்.


ஆலூல்வாவைத் தட்டில் கொட்ட..

அங்கேயும் தெரிந்தாள் அம்பாள்..🙏🙏🙏🙏


இந்த  ஆலூ(ஹ)ல்வா ..

வீட்டில யாருமே கண்டுபிடிக்கலை..

ரொம்ப..சூப்பர்னு சொல்லிண்டே ..

ஸ்பூன் ஸ்பூனா காலியாச்சு..😄😄😄😄😄..


 இந்த ஆலூப்பம் உள்ளேயும் green chutney stuff பண்ணலாம்..

அது வெளியே இருந்தும் ..

நமக்கு ஆதரவு கொடுக்கும்.


ஒரு tippu..


Green chutney அரைக்கும்போது .

ஓமப்பொடி அல்லது ratlam sev ஒரு ஸ்பூன் சேர்த்து அரைக்க..

சூப்பர் consistency + taste 🤤😄😄😄

Sunday, October 9, 2022

Prasadham -Navratri- day 3

 Prasadham -Navratri- day 3


வாங்க சாப்பிடலாம் friends.


Ulundhorai with 🥕🥕🥕 kheer


கறுப்பு உளுந்தில் ஒரு கலந்த சாதம்.

கறுப்பு உளுந்துடன் காய்ஞ்ச மிளகாயும்..கொப்பரையோ அல்லது தேங்காயோ சேர்த்து வறுத்து ..

கரகரனு அரைச்சு பொடி செய்ய..

கலந்த சாதத்துக்கு கை கொடுக்குமே எப்போதும்..


அதுசரி..

இது கறுப்பு..


So ...

Contrast color sweet dish..😄😄😄

Carrot🥕🥕🥕🥕🥕🥕🥕 kheer..


Black and orange..

புடவையோ..

பண்டமோ..


கண்ணைப் பறிக்குமே😄😄😄😄


Tuesday, October 4, 2022

நவராத்திரி

 #நவராத்திரி..


்(அவரவர்)..அம்மா அலமாரி முதல் (முன் ஜாக்கிரதை தான்)

அன்றையத் தேதி 

டிசைன் புடவைகள் வரை..

பாதுகாப்பு பெட்டகதிலிருந்து..

புது விடுதலை காணும்..

பளிச்சிடும் நகைகள்..

பாப் வெட்டிய சுட்டிகள்..

பட்டு கட்டிய பட்டாம்பூச்சிகள்..


அபார்ட்மெண்ட் வாழ்க்கை..

அலுப்பே இல்லா கொண்டாட்டங்கள்.

குஜராத்தியும்..கன்னடரும்..

தமிழரும்..தெலுங்கரும்..

மலையாளமும் மராட்டியரும்..

ஓரிடம் கூடி..

அம்பாள் நாமம்..

ஆயிரமதை..

அவரவர் மொழி வடிவில்

அழகாய்ச் சொல்லி..

ஆரத்தி எடுத்து..

அவனியில் அன்பைத் தா என்று..

பாடி முடித்து..

பாக்கும்  வெத்தலையும்..

பாங்காய் பெற்றுக் கொண்டு..


நாளை என் வீட்டில்..

ஞாபகமாய் வரணும்னு சொல்லி..

நங்கைகள் நயமாய் 

விடை பெறுவோம்..

எங்கிருந்தோ வந்தோம்.

இணைந்தோம்...

இவள் அருள் வேண்டி..


ஒன்பது நாள் ..

ஓடியேப் போகும்

ஒன்றிப் போகுமே

உள்ளங்கள்..


நவராத்திரி....நாயகிகள்

நம்மில்லம் வரட்டும்.

நல்லருள் தரட்டும்..

நன்மைகள் பெருகட்டும்...


Happy navratri to all my friends

Saturday, September 10, 2022

என் அம்மா..பிரேமா..

 என் அம்மா..பிரேமா..


உன் வீட்டுத் தோட்டத்தின்..

எலுமிச்சையும் கேட்டுப்பார்..


உன் பெயர் ..சொல்லுமே அம்மா..


ஆறாவது வருடம்..

ஆறவில்லை இன்னும்..


பாசம் என்றால் பிரேமா..

பாதாம் அல்வா என்றால் பிரேமா..


கறார் பேர்வழி பிரேமா..

கர கர தட்டைக்கு பிரேமா..


Punctualityக்கு பிரேமா

பச்சை இங்க்கில் கையெழுத்து போட்ட பிரேமா..


சுத்தத்துக்கு மறுபெயர் பிரேமா..கடைகண்ணி..

சுத்தவும் அலுக்காத பிரேமா..


மீசையில்லாத பாரதி பிரேமா..நம்ம

தோசை பாட்டியும் பிரேமா..


Sister களின் master பிரேமா..

Mr.அப்புவின் ..ring master பிரேமா.


பேரன் பேத்திகளின் pet பிரேமா..

பிள்ளையாருடன் பேரம் பேசும் பிரேமா


அகிலாவே அகிலம் என்ற பிரேமா.

அகம் முழுதும் அன்பே பிரேமா..


அகலாமல் அவளைக் காக்க..கடைசிக்

காலத்தில் வாய்ப்பு தந்தாள்..


உலகமாக இருந்தவள்..வேறு

உலகம் சென்ற நாள் இது..

உள்ளத்தின் பாரத்தை..

உங்களுடன் இறக்கி வைத்தேன்..


அவள் ஆசி நமக்கு என்றும் உண்டு.

அவள் ஆவியான பின்னும் கூட..


அன்புடன் அகிலா..

எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..

Thursday, September 8, 2022

அம்மா பொண்ணு

 'ஏய் அம்ம்மா'......( என் பெண் அழைக்கவும்..என்னடா இது இந்த அகிலாக்கு வந்த சோதனைனு மைண்ட் வாய்ஸை சொன்னதை தள்ளிட்டு..)

'சொல்லுடா..என்ன வேணும்?'

'எனக்கு நாளைக்கு ஒரு group assessment இருக்கு.. இப்போதான் watsapp group ல mam topic post பண்ணியிருக்கா..வேற இன்னிக்கு ஒரு வேலையும் உனக்கு இல்லையே.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் நீ என்றாள். 

டேய்..group project ல நான் எங்கடா வந்தேனு அலற..

அம்மா..உன்னை விட்டா எனக்கு யாரும்மா இருக்கானு ..ஒரே senti dialogue..

நாமதான் உடனே உருகி ஓடா தேய்வோமே..

புதுத் தெம்போடு..சொல்லுடா..என்ன பண்ண்ணும் ..அவள் லிஸ்ட் ஆரம்பிச்சது..அம்ம்மா..(இப்படி  ஒரு அழுத்தம் கொடுத்தா அந்த அம்மாக்குள்ள ஆயிரம் அர்த்தமாக்கும்).

business studies project...you have to write quotes on stereotypes, self- fulfilling prophecy and perception . we have to be creative. 

கண்ணே இதெல்லாம் நான் படிச்சதே இல்லையேடா..இதுல எப்படி..

அவள் தொடர்ந்தாள். கூகிள் ப்ண்ணி நான் quotes எடுத்து வெச்சுடறேன் ...ஆமா..chart paper and black sketch இருக்கில்ல வீட்டில..அவள் பேசப் பேச...கண்ணே நீ தான் டா படிக்கிற..இதெல்லாம் என்னக் கேட்டுண்டு..

chill maa..shelf clean பண்றேனு இடத்தை மாத்தி மாத்தி வைக்கிறது நீதானே..நான் என்ன பண்ண..சொல்லிண்டிருக்கும் போதே செல்லில் டொடங் டொடங்னு மெஸேஜ் வந்து விழுந்த வண்ணம் இருக்க..அம்மா..please white chart வாங்கிண்டு வந்துடேன்நு ஒரு அன்புக் கட்டளை வேற.. சரினு பை தூக்கிண்டு கிளம்பியாச்சு.. ஒரு வாயா வார்த்தையா சொல்லிட்டு கிளம்பினேன்.' வேற ஏதாவது ஞாபகம் வந்தா ஃபோன் பண்ணு'

stationery shop ல் chart வாங்கிண்டு இருக்கற நேரம்..புதை குழி (அதான் என் பர்ஸ்ஸில் )இருந்த மொபைல் பாட ஆரம்பிச்சது..அவளே தான்..அம்ம்மா..black sketch ஒண்ணுதான் இருக்கு..50 quotes எழுதணும்.. ஒரு 2 வாங்கிடு..

சரி..சொல்வதற்குள் செல் கட்..

அந்த கடைக்காரந் கிட்டே ஒண்ணே ஒண்ணு கண்ணேகண்ணுனு ஒரு black sketch மட்டும் இருக்க அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன். வாங்கிண்டு வெளியே வரேன்..திருப்பியும் அவளே அழைப்பு.. அம்ம்மா...ஒரு decorative thread ம் வாங்கிடு..சரி..சரி..வாங்கறேன்..வேற எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லு..திருப்பி வரமாட்டேன்..

இப்படியே  வீடு வந்தாச்சு.

நுழைஞ்சதும்...மீண்டும் அதே tone ல் ..அம்ம்ம்மா...எனக்கு ஒரு ஐடியா..

இந்த quotes எல்லாம் palm script மாதிரி பண்ணா ..நல்லா இருக்கும் இல்ல என்றாள். டேய்..ஓலைச் சுவடில business quotes aa.. இதுவும் நன்னா இருக்கே..சரி பண்ணிடு..நான் போய் டின்னர் பண்றேன் என்றேன். 

அம்ம்மா..அம்மா..அப்படியே ஒரு tea decoction போட்டு கொடேன்..சார்ட்ல ஒலைச் சுவடி effect கொடுத்துடலாம் ..ப்ளீஸ் மா..ப்ளீஸ் மா..

டிகாக்‌ஷன் ரெடி ஆச்சு.. ஆற வைச்சு தர..அழகா அவள் brush வெச்சு light ஆ ஒரு எஃபக்ட் கொடுக்க..

இப்போ அடுத்த கட்டம்..கோடு கட்டம் போட்டு ஒரே அளவுக்கு ஓலை வெட்டி..முதுகு லேசா பெண்டாக..போறுமா..நான் போகட்டா..permission கேட்டபடி நான் .

அதுக்குள்ள எங்க போற..அந்த போன வருஷம் பண்ண ப்ராஜக்ட் ல ஒரு மெழுகுவர்த்தி எரிச்சு ஒரு பொசுங்கின effect கொடுத்தோமே..அதை கொஞ்சம் பண்ணித் தாயேன்...ப்ளீஸ் மா..

உருகி ஓடானேன்.. ஒரு  so called chart paper ஓலைச் சுவடி ஓரத்தை பொசுக்கி டிசைன் பண்ணியாச்சு..

இப்போ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து டும் டும் டும் முடிச்சு போட்டு தாலி கட்டணுமே.. விடிய விடிய வேலை செய்யறதப் பார்த்து விசனத்துடன் வந்தார் அப்பா. ..நான் என்ன பண்ணட்டும் சொல்லு ..காத்திருந்த நான்..ஒரே பாய் பாஞ்சு..அப்பா..இதெல்லாம் ஒழுங்கா அடுக்கி கட்டணும்ப்பா..

தலையாட்டிண்டே..பொறுமையா..ஒவ்வொண்ணா ஓட்டை போட்டு..கோர்த்து ஒரு அழகா ஓலைச் சுவடி கட்டு ரெடி.

ஒவ்வொரு quotes ம் ஒரு சின்ன பாடம்.


காசிக்கு போனாலும்.......விடாது என்பது மாதிரி..

காலேஜ் போனாலும் இந்த கோடு கட்டம், project work விடாது போல இருக்கேனு சலிப்பில் ஆரம்பித்த வேலை..

முடிச்சு நிமிரும் போது சந்தோஷம் தந்தது காற்றில் படபடத்த அந்த ஓலைச் சுவடிகள்..

group project ..குடும்ப project..

எனக்கு கோபம் வந்தால்...

 எனக்கு கோபம் வந்தால்...



சப்பாத்தி...

அப்படியே பூரி மாதிரி உப்பி வரும்போது..

கிடைக்கிற சந்தோஷம் இருக்கே..😃😃😃😃


ஆஹா..அகில் நீ ஜெயிச்சுட்டேனு..

"ஆட்டா ".. சொல்லும்..

ஆட்டோகிராப் ஒண்ணு வாங்கி..

போட்டோகிராஃப் கலெக்‌ஷனில் சேர்க்கத் தோணும்..


அதே..கொஞ்சம்..சப்பாத்தினு பேருக்கு ஏற்ப...சப்பட்டையானால்..


உடனே மனசுக்குள் ஒரு லிஸ்ட் ரெடியாகும்.


இந்த தடவை வாங்கின மாவு சரியா இல்லை..

தண்ணி ஜாஸ்தியா போச்சு..


எதோ சொல்லி escape ஆக தோணும்..


"உன் குத்தமா..என் குத்தமா..யாரை நான் குத்தம் சொல்ல.."

சோகப் பாட்டு பாடும்..🎶🎶🎶🎼


இப்போ ஒரு ஐடியா..💡💡💡💡


Phulka ஆகாத ரொட்டியே.

பொறுமை சோதித்த ரொட்டியே

பாரு உன்னை என்ன பண்றேன்னு..கோபத்தில்

கிள்ளு கிள்ளுனு கிள்ள...மாறிடுமே..

கோபத்தில் ..அது

#Khoba_roti... ஆக..


யாரு கிட்ட..💪💪💪💪💪


இப்போ ..பாருங்க..

எனக்குத்தான் ..எல்லாமே எனக்குத்தான்னு..

இலையில் போடப் போட காலியாகும்..


உருமாறினால் என்ன..

உள்ளே போச்சுதானே..😄😄😄


இதுதான்..அமைஞ்சதுனு compromise ஆகாமல்..

கொஞ்சம்..

Courage எடுக்க..


Life jinga la la..💃💃💃💃

அன்புடன்

Wednesday, September 7, 2022

நாமளும்_புலம்புவோம்

 #நாமளும்_புலம்புவோம்.

பாத்திரத்தில் இருக்கறதை ஒட்ட வழித்து போடுடா என்றால் பொண்ணு முரைக்கறா..


பைப்பில் இருக்கறதை ஒட்ட விடுப்பா..என்றால்

பெட்ரோல் பம்பு பையன் முரைக்கிறான்..


உன் குத்தமா..என் குத்தமா..( ராஜா சார் மை.வாய்ஸில்)

bulb பலவிதம்

 💡💡💡💡💡💡 bulb பலவிதம்


..series


ஒரு சின்ன zucchini..அதான் ஜுக்கினி....

என்னை தலைகுனிய வைத்ததே..


எப்பவும் போல நேத்திக்கி..

காய்கார ராஜேஸ்வரி அம்மாகிட்ட லிஸ்ட் சொல்லிண்டிருந்தேன்..


Corn,capsicum, coconut..கத்திரி வெண்டை..

கடகடனு சொல்லிண்டு வந்த எனக்கு..

சட்னு மறந்து போச்சு..பொண்ணு சொன்ன காய் பேரு..


என்ன செய்யலாம்?

எப்படி புரிய வைக்கலாம்?..

ஏகத்துக்கு யோசனை..


ஒரு நிமிஷம் அவளைக் கேட்டிருக்கலாமேனு..நீங்க கேட்கறது எனக்கு காதில் விழுகிறது..

ஆனால்..விடிய காலையில இதுக்கா எழுப்பினே..கேள்விக் கணைக்கு பயந்து..


அடையாளம் சொல்ல ஆரம்பிச்சேன்..

அது ஒரு அன்னிய நாட்டு காய் ஆண்ட்டி..

Lettuce இல்ல..

பீர்க்கை மாதிரி இருக்கும்..

ஆனால்..டேஸ்ட் மண்ணு மாதிரி இருக்கும்..


நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள..

அட..ஜுக்கினி தானே..ஒண்ணா ரெண்டா..


போட்டாங்களே ஒரு போடு..


 இதை விட காலையில பல்பு ஒண்ணு கிடைக்குமா?..


வயசானால் மறதி..

ஒத்துக் கொண்டே ஆகணும்..


இன்னொன்று..

வெளிநாட்டு காயை சமைச்சு கொடுத்தால் மட்டும் போதாது..

வாய்க்குள் நுழையுதா..

மண்டைக்குள்ள நிக்குதா அது பேருனு செக் பண்ணிக்கணும்..

ஆமாம்..


பல்பு வாங்கினாலும்..

வீட்டில....புரையேறும் அளவுக்கு சிரிச்சு..

என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டிட்டாங்கப்பா..😄😄😄😄


படிப்பதனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு..🎵🎵🎵🎵

எம்.எஸ் .ராஜேஸ்வரி குரல் எங்கியோ கேட்டது..


அன்புடன்

🤦😄😄😄😄😄😄