Thursday, October 5, 2023

Madhyamar -தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா..

 #sunday_topic

தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா..



சுந்தரகாண்டத்தின் முதல் ஸர்கம்.

ஹனுமன் கடலை கடப்பது...ஒவ்வொரு முறை படிக்கும் போதும்..இவர் பார்க்காத தடைக்கலா நான் பார்த்தேன்னு என்னை நானே கேள்வி கேட்டுப்பேன்.


தடைக்கல் ..என்னை பொறுத்தவரை அதை இரண்டா பிரிப்பேன்.


ஒண்ணு..நம்ம மனசுக்குள்ள உட்கார்ந்து ..internal ஆ ..ஆடாம அசையாம ..

நான் இப்படித்தான்ன்னு வாதாடும் ஓரு கல்..


அடுத்தது..obviously ..external தடைக்கல்.


முதல்ல..மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கும் கல்லை தூக்கி எறிய முயற்சி செய்யும்போது..

வெளில காத்துக் கொண்டிருக்கும் கல்..இவ கிட்ட நம்ம பருப்பு வேகாதுனு ஜகா வாங்க ஆரம்பிக்கும்.


என்னடா..ஃபிலாஸஃபி பேசறேன்னு நினைக்கறீங்களா?.


அது எப்படித் தான் கரெக்டா அடுக்கி வெச்சிருப்பாரோ தெரியாது..

ஆஹா..இந்தக் கல்லை கடந்தேனு காலர் உயர்த்தும் போது....கவலைப்படாதே சகோதரினு அடுத்தது லைன்ல நிக்கும்.


யோசித்துப் பார்த்தால் ..இந்த தடைக்கல் இல்லாமல்..வாழ்க்கை smooth ஆ இருந்தால் ..எள்ளளவும் thrill இல்லாம....நினைக்கவே போரடிக்குது தானே..


கோவிட் ..கோவிட்னு ஒண்ணு வந்ததே..மறக்க முடியுமா?


எதோ வைரஸாம்..என் பொண்ணு கல்யாணத்துக்கு மண்டபம் fix பண்ணும் போது பேச்சு அடிபட்டது..


தடைக்கல்லுனு தெரியாமலே..ஏற்பாடுகள்..

நாள் ஆக ஆக..தீவிரம் உணர முடிந்தது.

இருந்தாலும் நப்பாசை யாரை விட்டது...


எத்தனையோ கடந்தோம்..இதுவும் கடப்போம்னு நினைச்ச கனவில் ..லாரி மண்ணு..

வெளிநாட்டிலிருந்து குழந்தைகள் வர முடியலை..எல்லாம் cancel.


தடைக்கல் தான்..துக்கம் தொண்டை அடைச்சது தான்.


ஆனால்..என்ன செய்ய..வழியே இல்லையே..


அந்த ஊர்லயே இருப்பதால்.. முதல்ல registered marriage நடக்கட்டும்னு அப்ளை பண்ணி ..பெரிய க்யூ அதுக்கும்.


ஒரு வழியா நாள் கிடைக்க..

இங்கேர்ந்து யாரும் போக முடியாத நிலை.


குடும்பத்தின் முதல் zoom wedding.

இங்கேர்ந்தே அட்சதை..ஆசீர்வாதம் எல்லாம்.


" செலவே இல்லாம கல்யாணம் பண்ணிட்ட..'..

கிண்டல் பேச்சு இன்னி வரைக்கும் தொடரும்.


ஆனால்..கோவிட் எப்ப முடியும்...குழந்தைகளுக்கு stamping  க்கு அப்பாயிண்ட்மெண்ட் எப்போ கிடைக்கும்..! 


தடை தான்..உடைத்தோம் ..


மனதிடத்தால் மட்டுமே.


இரண்டு பக்கமும் ஒரே wave length ல் இருந்து..

குழந்தைகள் வாழ்க்கையை நல்ல படியா ஆரம்பிக்கட்டும்னு நினைத்தோம்.


தடைக்கல்லுனு உட்கார்ந்து அழாமல்...

படிக்கல்லா மாற்றி...அவங்க வாழ்க்கையின் முதல் படியில் எடுத்து வைக்க..நாங்க எடுத்த முடிவு..


எங்களை என்றும் இயக்கும் தெய்வ சக்தி..அருளால் மட்டுமே முடிந்தது.


இப்போதான் ..இரண்டு வருஷம் கழித்து appointment கிடைத்து வர முடிந்தது அவர்களால்.


என் மாமியார் எப்பவும் சொல்வார்கள்..' நாம எல்லாரும் என்னிக்கு சேருகிறோமோ..அன்னிக்குத்தான் எனக்கு தீபாவளியும் ..பொங்கலும்'..

சத்தியமான வார்த்தை..


குறுகிய நாட்கள் வந்து இருந்தாலும்..குதூகலமா கொண்டாடினோம்.


இப்படி ஒரு தடைக்கல் வரும்னு நினைச்சு கூட பார்த்ததில்லை..


அதை கடந்தும் விட்டோம்னு... நினைக்கும் போது...feel happy.


மனதளவில் வளர்ந்து matured ஆ ஒரு முடிவு எடுத்த தருணம்.

 #மத்யமர்_5_வருடங்கள் ..

#கொண்டாட்டம்..


#Garden_city ல் ஒரு grand event.


Vanilla and mango  cake மத்யமருக்கு happy birthday சொல்ல..🥮


Bangalore Traffic ம்..distance ம் எங்கள் மத்யமர் மீட் கொண்டாட்டாத்திற்கு என்றுமே தடையாக இருந்ததில்லை..💪💪


ஆசையோடு கூடினோம்.

காஃபி குடித்தோம்

கேக்கும் வெட்டினோம்...

பிடித்ததை உண்டோம்..💃


பேச்சு..பேச்சு என்று பேசித் தள்ளினோம்.😄😄


வேறென்ன..

MTR முழுவதும்..

மத்யமர் ..மத்யமர் ...என்ற வார்த்தை தான்..

உணவு வாசனையையும் தூக்கிச் சாப்பிட்டது..


அருமையான மாலை..

அகம் மகிந்தோம்..நட்புகள் இங்கே..


நன்றி கோடி சொன்னோம்..

நம்மையெல்லாம் சேர்த்த மத்யமருக்கே..🙏🙏


பிரிய மனமின்றி பிரிந்தோம்..


அடுத்த சந்திப்புக்கு..ஆவலாய் காத்திருக்கோம்..🎆


Shankar Rajarathnam sir

Raghupathy N 

Gopalan Sankaran 

Revathy Janakiraman 

Bhanu Ram 

Geetha Manikantan 

Chitra Murali 

Saroja Arunachalam 

Kavitha satheesh

Bhanumathy Venkateswaran 

Kala Chandrashekar

அவளும் நானும்

 #PPAP_1 (20-05-23)

#அந்தாதி

அவளும் நானும்



என் பாட்டு நீ கேளு

கதையோடு கருத்தும் இருக்கு..


இருக்கு கொஞ்சம் இடமென்றே

இட்டேன் சில விதைகளுமே..


விதையும் வளர்ந்து செடியாச்சு

விளைச்சல் இப்போ மூணுபோகம்..


போகத்தில் பாகமும் பிரித்தேனே..

பழுத்த தக்காளியும் எலுமிச்சையும்..


எலுமிச்சை ரசம் கொதிக்க

எண்ணம் போனதே பின்னோக்கி!!!


பின்னொரு காலம் சொர்க்கமன்றோ..???

பின்னி எடுக்கலையே வெய்யிலுந்தான்..!!


வெய்யிலு வந்தும் போனதுவே

வைதல் இல்லாது திரிந்தோமே..


திரிந்த பாலில் திரட்டுப்பாலும்

கறந்த பாலில் காப்பியுமே..


காப்பி ராகம் பாடியபடி

கலகலப்பாய் கூட்டுக் குடும்பம்...


குடும்பம் இப்போ சிறுசாச்சு

குதூகலம் இப்பொ குறைஞ்சாச்சு


குறைஞ்ச வருமானக் குடித்தனத்தில்

நிறைஞ்ச மனசு இருந்ததுவே..


இருந்ததை பங்கிட்டு உண்டோமே..

ஆனந்தம் அதில் கண்டோமே..


கண்டங்கள் தாண்டி குடும்பங்கள்..

காண்பது இப்போ அரிதாச்சு..


அரிதாய் வரும் விருந்தாளிக்கு

பெரிதாய் என்ன சமைப்பேனோ???


சமையல் அறையும் அங்கிருக்கு..

சட்னு செல்லடி என் மீனாளே..!!

கனியுமா காலம்?

 #PPAP-1

#அந்தாதி

#கவிதை_1


கனியுமா காலம்?



கருவறையின் இருள் வாசத்திலும்

கைகால் வீசி மகிழ்ந்தேனே..


மகிழ்ச்சியில் மிதந்தது சுற்றமுமே..

குலவிளக்காய் நான் பிறந்ததுமே..


பிறந்த வீட்டில் எப்போதுமே

பொத்தி வைத்து கொண்டாட்டமே.


கொண்டாட்ட மிப்போ  திண்டாட்டமாச்சு

வெட்டினாரே பட்டென என்சிறகை.


சிறகெல்லாம் அழகுக்கு மட்டுமே

ஆட்டுவித்தாரே ஆளுக் கொருவர்.


ஒருவன் வருவான் கைபிடிக்க

உனக்குத் தருவான் சுதந்திரமே


சுதந்திர காற்றை சுவாசிக்க

சுற்றி அலைந்தது என்மனமே


மனதுக் கினியான் வருகைக்கே

மனமும் மிதக்குது கனவினிலே


கனவில் உலவும் அரசிளங்குமரன்

அவிழ்ப்பானா என் கட்டை?


கட்டுக்கட்டாய் நோட்டு கேட்டு

நோகடிக்கா குண

மிருக்கணுமே?


இருப்பது என்னிடம் அன்பொன்றே..

அள்ளித் தருவேன் ராசனுக்கு..


ராச வாழ்க்கை

தேடலிலில்லை..

ரசமிகு வாழ்வே போதுமெனக்கு..


எனக்குத் துணையாய் பறந்திடவே..

வண்ணச்சிறகோடு வரும் நாளெப்போ?


நாட்கள் ஓடுது நொடியாக

நானும் எடுத்தேன் புகைப்படமே..


புகைப்படம் சூசகமாய்க் காட்டிடுமே

அகப்படம் என்னுள்ளே எதுவென்று...!!!

Saturday, September 23, 2023

Ganapathi Bappa Moriya

 "தலை'யாய( போகிற) பிரச்சனை.


எங்க அபார்ட்மென்ட் புல்வெளியில் இப்போ ஒரு மாசமா ..ஒரே மாநாடு தான். வேற என்ன? பிள்ளையார் சதுர்த்திக்கு நடக்கப் போகும் cultural events க்கு செம்ம ப்ளான்.


குட்டீஸ்களின் குறும்பு..'aunty .நீங்க போடற ப்ளானை அங்கே போய் சொல்லிடட்டுமா " எந்று பயமுறுத்தியே.bribe ஆ chocolate வாங்கிண்டு போன சிட்டூஸ்.


இப்படியே போனால் தள்ளுவண்டி, சுண்டல் சுண்டல்னு வியாபாரம் ஆரம்பிக்கலாமோனு சில start up க்கள் யோசிக்க ஆரம்பிக்க..


மாஸ்டர் ப்ளான் மல்லிகாக்கள் எக்கச்சக்கம்.(சுருக்கமா..மா.பி.ம)


ஒரு குரூப்புக்கு பெரிய ப்ரச்சனை..இதிகாச காலத்திலேர்ந்து இருக்கிற அதே கூந்தல் பிரச்சனை.


:" என்னோடது step cut ஆச்சே ..இதுல எப்படி சவுரி முடி வைப்பேன்.

அட .அது ஒரு ப்ராப்ளமே இல்லை.. நிறைய pins நிறைய ஜெல் ( ஜொள் ..இல்லப்பா) போட்டு செட் பண்ணிடலாம்  .என் சுருள் முடிக்குள் எப்படி இந்த சவுரியை சொருகுவேன் பகவானே..ஆனை முகத்தோனை ஆஜராக வேண்ட..


அப்போதான் ஜோதியில ஐக்கியமாக வந்தவர்

i love your curly hair நு கடுப்பேத்த ஆரம்பிச்சா..


ஏய் ப்ளீஸ்ப்பா..i will do French plait. நு அடுத்தவ ஆலாபனை பிடிக்க  ஆரம்பிக்க...no...no..fish tail braid will suit you நு அவளை மீனம்மா ஆக்க முடிவோ(யோ) ட. ஒரு ஜால்ராஸ்.


"நான் பன் கொண்டை..அதை சுற்றி நல்லா கெட்டியா தொடுத்த மல்லி..that's my favourite நு அடுத்த பார்ட்டி..


ஐயோ.நல்ல வேளை ஞாபகப் படுத்தினே ப்பா..சவுரிக்கு பூ சுத்தணுமே..( நமக்கு காதுல பூ சுத்திதான் பழக்கம்னு மை.வா. வேற )


ஒரு ரவுண்டு கனகாம்பரம் ஒரு ரவுண்டு மல்லி will look stunning நு பழைய காலத்து ஐடியா எடுத்துக் கொடுத்த ஒரு மா.பி.மல்லிகா பெருமையா ஒரு ரவுண்டு பார்க்க..

she always comes out with an ethnic idea நு புகழ் மழையில் அவளை நனைய வைக்க...ஓகே..girls..i will supply flowers for all  நு சொல்லி அவள் பாலை வார்க்க.


.(பின்ன ..பண்டிகைன்னா..என்ன விலை தெரியுமா பூ...ஒரே ஒரு ஐஸ்..எப்படி நம்ம டெக்னிக்னு ..கண் ஜாடை பரிமாறல்கள😉்)


YouTube ல செக் பண்ணிட்டு , we will do it for each other நு முதல் நாள் எடுத்த முடிவு எப்போதும் போல மூலைக்கு தள்ளப்பட்டு ..

நம்ம  beautician பானுவை கூப்பிட்டுடலாம்நு ஏகபோக முடிவு.


பொட்டு, ஜிமிக்கி, வளையல் ..நெத்திச் சூட்டி வேணுமா வேண்டாமா..


அப்போது மூச்சிரைக்க ஓடி வந்த ..மா.பி.மல்லிகாவில் இன்னோருத்தி.."hey listen carefully .very important..எல்லாரும் ஒழுங்கா வகிடு எடுக்கணும். அதுக்கும் மார்க்க் உண்டாம். நம்ம ஜட்ஜ் பேசிண்டதா கேள்வி..ம்ம்ம்ம்..be careful. our team should not lose at any cost..


watsapp group ஒண்ணு " ஜடையும் ஜாடையும்" நு create பண்ணியாச்சு.

என்ன display pic வெக்கலாம்னு தீவிர ஆலோசனை..

சவுரியா, கொண்டையா, ஃபிஷ் டைலா..?


அதெல்லாம வேண்டாம்.. என்கிட்ட ஒரு cute ganesha pic இருக்கு..அதையே போடறேன்னு ஒரு சுப நாளில் create ஆன க்ருப்புக்கு வந்த முதல் msg..


' hey girls..இது மடிசார் புடவை competition. we forgot to discuss' .


பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பித்து பொங்கல் வரைக்கும் பண்டிகையோ பண்டிகைதான்.

இங்கே பதிவுகள் குவித்து பொழுதை பொன்னாக்கும் மத்யமர் அனைவர் வாழ்விலும் இன்பம் நிரம்பிய வழிய வாழ்த்துக்கள்.


Ganapathi Bappa Moriya

Friday, September 15, 2023

எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்_4

 #எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்_4


என் அன்பு பேரன் ராசாவுக்கு,


நல்லா இருக்கியாப்பா? உன் நினப்புத்தான் ராசா எப்பவும் இந்த அப்பத்தாவுக்கு.

 என்னடா இது...ஃபோன் தான் இருக்கே ..எதுக்கு அப்பத்தா கடிதாசி எழுதுதுனு உன் மனசில கேள்வி வருதா?

என்ன செய்ய ராசா?

நீ கொடுத்த ஃபோன் இப்போ என் கையில இல்ல . பசங்க படிப்பேல்லாம் மொபைல்ல தான் நடக்குது இங்கே. கிழவி உனக்கெதுக்கு இதுனு உன் சித்தப்பன் புடுங்கி அவன் பொண்ணுகிட்ட கொடுத்துட்டான்..

நீ வீடியோ வந்து பேசும்போதும் என்னய கூப்பிடறது இல்ல.." கிழவி உனக்கெங்கே காதுல விழப்போகுதுனு " சிரிக்கறானுக..


உங்கப்பா ..தலைச்சன்னாப் பொறந்த பாவத்துக்கு  இந்த குடும்பத்துக்கு ஓடா உழச்சு தேய்ஞ்சு..போயே சேர்ந்துட்டான். உன் ஆத்தா..என் ஆசை மருமவ ..அவளும் அவன் பின்னாடியே போய்ச் சேர்ந்தா.. இப்போ உன் இரண்டு சித்தப்பன் அத்தை நடுவில நீ மாட்டிக்கின..


அவங்களுக்கெல்லாம் உன் துபாய் பணந்தான் வேணும் ராசா..

உன் சித்தி அவ உறவுக்கார பொண்ணு ஒருத்த்திய உனக்கு பேசி முடிக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்குறா..உன் அத்தை..இருக்காளே..அவ பொண்ணை உனக்கு தரணும்னு நிதமும் சண்டை போடுறா..

எனக்கு அந்த பொண்ணுக உனக்கு செட்டாவாதுனு தோணுது ராசா..


முக்கியமா ஒரு விசயம் சொல்லத்தான் இந்தக் கடுதாசி..

நீ மாசா மாசம் அனுப்பற பணம் போதாதுனு உன் அம்மா நகைங்க மேல  ஒரு கண்  இவங்களுக்கு. 

நான் என்னா செஞ்சேன் தெரியுமா? அவங்களுக்கு தெரியாம நம்ம வீட்டு துளசி மாடத்துக்குள்ள ஒரு சொம்புல போட்டு அந்த நகைங்கள புதைச்சு வெச்சிருக்கேன்.  உன் ஆத்தா அவ மருமவளுக்கு கொடுக்கச் சொல்லி என் கிட்ட தந்துட்டு கண்ணை மூடிட்டா..

அது உன் சொத்து..உன் கையில ஒப்படைக்கணும்ப்பா..

இந்த வீடும் ரொம்ப ஓட்டையா இருக்காம்..இடிக்கணும்னு ஒரே புடியா இருக்கானுங்க.. அவங்க வீட்டை உடைச்சா..இந்த நகையும் அவனுங்க கையில கிடச்சுடும்.

உங்கிட்ட பணம் மட்டும் வாங்கிக்கிறது போதாதுனு....இந்த சொத்துல பங்கும் வேணாம்னு எழுதி வாங்கப் போறாகளாம்.


நான் கண்ணை மூடற வரைக்கும் இதெல்லாம் காப்பாத்துவேன். அதுக்கப்பறம் அவனுங்க ஓட்டல் கட்டப் போறாங்களா..இல்ல பத்து பதினஞ்சு வீடு கட்டி பிரிச்சுக்கப் போறாங்களோ தெரில..


இதெல்லாம் உனக்குத் தெரியணும் தம்பி. வெள்ளந்தியா இப்படியே எத்தனை நாளு இந்தக் குடும்பத்துக்குனு சம்பாரிப்ப?

இந்த அப்பத்தா கண்ணு மூடறதுக்குள்ள ஒரு வாட்டி வந்துட்டு போய்டு ராசா.


போன மாசம் ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சு..என்னை ஆஸுபத்திரியில் சேர்த்து விட்டுட்டு ஒருத்தனும் எட்டிக் கூட பாக்கல. அங்கே ஒரு நர்ஸு பொண்ணு தான் ' பாட்டி..பாட்டினு' என்னை நல்லா கவனிச்சுது.. பொண்ணும் நல்ல குணம்மா இருக்கு..அந்தப் பொண்ணை உனக்கு பேசலாமானு எனக்கு ஒரே ஆசை..


ஆனா..அன்னிக்கு  பக்கத்து வீட்டு சண்பகம் உன்னோட பேஸ் புக்காமே..அதுல ஒரு பொண்ணோட  நீ இருக்கற போட்டோ காட்டுச்சு..பொண்ணு லட்சணமா நல்லா இருக்குதுப்பா..அவளையே நீ கல்யாணம் கட்டிக்கிறயா?


உன் விருப்பம் என்னனு கடுதாசி போடு. 

இப்போ இருக்கும் தள்ளாமையில ஒவ்வொரு நாளு தள்ளுறதே பெரும் பாடா இருக்கு ராசா..


உன்ன ஒரே ஒரு முறை பார்த்துட்டு கண்ணை மூடணும்னு இந்த கிழவிக்கு ஆசை..

நம்ம குலதெய்வம் கோயிலுக்கு நேர்ந்துக்கிட்டு இருக்கேன்.

உன் உடம்பை நல்லா கவனிச்சுக்கப்பா. கெட்ட பழக்கம் ,கெட்ட சகவாசம் எதுலயும் மாட்டிக்கிடாதே..


நீ வர நாளுக்காக ஆசையா காத்திருக்கும்

 உன் அப்பத்தா..

Monday, August 21, 2023

பிள்ளையார் சதுர்த்தி

 Options பலவிதம்


வடை..

ஓட்டை வடையா..

ஆமை வடையா..


கொழுக்கட்டை.

கடை மாவா..

வீட்டில அரைச்சதா..?


சுண்டல்..

வெள்ளையா..

கருப்பு கொத்துக்கடலையா..


அப்பம்..

கோதுமையா?

அரிசியா?

குழியிலா?

கொதிக்கும் எண்ணெயிலா?


இப்படி யோசித்தது போக..

இந்த முறை for a change..


பிள்ளையாரை..

எப்படி செய்யறது?


களி மண்ணிலா?

காப்பி பொடியிலா?

மஞ்சளிலா?..கூட

மைதா சேர்த்தா?

கோதுமையிலா?..

கொழக்கட்டை மாவிலேயா?

🍫 சாக்லேட்டிலா?..

ஓட்ஸிலா?..


கடையில் வாங்கி மணையில் வெச்சது போதும்..உன்

கையால் என்னை உருவாக்கு..

உனக்கு உண்டு ஆக்கம்..நான்

தருவேன் ஊக்கம் ..


சொல்ல வந்தாரோ..

#சித்தி_விநாயகர்..


சரி..சரி..

இப்போதைக்கு..உங்க படம் மட்டும் ஒண்ணு வரைஞ்சேன்..


#turban_ganesha

YouTube learning😃

Wednesday, June 14, 2023

Vadai

 #வாங்க_சாப்பிடலாம்

#very_easy_vadai


உளுந்து ஊற வைக்கணுமா?

No..

அரைச்சு எடுக்கும் வேலை இருக்கா?

No.

தண்ணி ஜாஸ்தியா..கம்மியா? டென்ஷனா?

No..No..

அப்போ என்னதான் செய்யணும்?

சொல்றேன் சொல்றேன்.


நம்ம கிச்சன்ல , ஃப்ரிட்ஜில இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க..

கலக்குங்க..

காட்டுங்க உங்க creativity😋


For 15 vada

Soft dosai  -2 ( fresh ஆ ரெண்டு பண்ணுங்க)

Bread -2

புளிக்காத தயிர் ஒரு 2கரண்டி

தோசையும் ப்ரெட்டும் தயிரில் ஊறவைக்கவும்.( thanks Raghupathy N sir for the idea 🙏)

உளுத்தம் மாவு - ஒரு கரண்டி

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உருளை ஒன்று சின்னதா வேகவைத்தது

(Optional)

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

தேங்காய்ப் பல்

மிளகு

கொத்த்மல்லி

தேவையான உப்பு.

எலாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்க.


( உளுத்தம் மாவு last ஆ சேர்க்கணும்.)

எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுங்க..

Crispy tasty vada ready😀


இதை உதிர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்ட 

#வடை_உப்புமா ரெடி Bala Hari


Saturday, May 20, 2023

இப்படியும்_சிலர்

 #இப்படியும்_சிலர்


உள்ளே நுழையும்போதே .அவரை பார்த்ததும் எழுந்து ஹலோ சொன்னவர்களுக்கு ' உட்காருங்க' என்று கொஞ்சும் கன்னடத்தில்  ் கவனிப்பு..


சில நொடியில்..

தேனான குரலினிமையில் " வாதாபி கணபதிம் பஜே" பாட்டு  அந்த சூழ்நிலையை இசை மயமாக்குகுறது.


இந்த version கேட்டதில்லையே என்று அப்பா யோசிக்கும் வேளையில்..


கையை நீட்டு..விரலைக் காட்டு ..ஏறி நில்லு என சகலமும் நடந்து கொண்டிருக்க..


"நகுமோமோ.".ஆரம்பிக்கும் வேளையில் ..உள்ளே சென்றோம்.


உங்களுக்கு கர்னாடிக் ம்யூசிக் ரொம்ப பிடிக்குமா என்று இவர் கேட்க..

எனக்கு எல்லா இசையும்  பிடிக்கும் என்று அவர் சொல்ல..


இசையோடு அப்பாவின் இதயத் துடிப்பும் ..அவர் கேட்க..


"you are young  at 80 . be happy always.

ஆறு மாதம் கழித்து வாங்கோ என்று எங்கள் கார்டியாலஜிஸ்ட் சொல்லும் நேரம்..

துவங்கியது..


'மானச சஞ்சரரே'..

' இரும்மா..இருந்து கேட்டுட்டு போகலாம்..' 


க்ளினிக் போய்ட்டு வந்த உணர்வின்றி ஒரு பிக்னிக் போய்ட்டு வந்த ஃபீலிங் அப்பாவுக்கு.


அது என்னமோ தெரியல்..எங்க குடும்ப டாக்டர் எல்லாரும்  ரொம்ப கூல்.

Friday, April 28, 2023

பயங்கர terrific

 Bengaluru traffic..

பயங்கர terrific..


வாகனங்களின் வரிசை..

வழிகிடைக்கா..வாட்டம்..

புஸ்புஸ்ஸென்றே பஸ்கள்..

சிணுங்கும் சிங்கார ஊர்திகள்


அலறித் தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்..

off ஆகாத என் ஜின்கள்..

ஆவி்யில் கலக்கும் எரிபொருட்கள்..

இத்தனைக்கும் நடுவில்..

இத்துனூண்டு Scooty உடன்..

இறைவா!!!..நான்..!!


மாட்டிக் கொண்டால்..

மறுபிறவி வந்துடுமே..


அலைபாயும் கண்ணில்

கவலையும் கவ்வ..

ஆஹா..கண்டேன்..

அங்கே ஒரு gap..


வலதும் இடதுமாய்

வளைந்து நெளிந்து

வெளியே வந்தேன்..

விருட்டெனப் பறந்தேன்..

வெற்றி யின் துள்ளலோடு

வீட்டை நோக்கி...

பொருமலோடு பொறாமை சேர

பெருமூச்சுடன் பெரு வண்டி மக்கள்..


Scooty ஓட்டும் மாந்தர்க்கு கிட்டுமே

cycle gapல் வழி....

Sunday, April 23, 2023

Plan B

 நெட்ல பார்த்த ரெசிபி நாக்கில் ஊற..நாமும் செஞ்சு பார்ப்போமே இத்தனை சிம்ப்பிள் தோசை தானேனு ஜொள்ளுடன்..


millet மூணு மணி நேரம் ஊறினா போதும் கோதுமை ரவையும் ஒரு மணி நேரம் ஊறினா போதும். வெய்யிலில் சீக்கிரம் ferment ஆகி brunch க்கு வித்தியாசமா சாப்பிடலாம்னு ஐடியா.


நடு ராத்திரி எழுந்து ஊற வெச்சாச்சு.

காஃபி குடிச்சு எனெர்ஜி ஏத்தி, மிக்ஸில மில்லட்டை போட..


நேற்று பெய்த சொட்டு மழை..கரண்ட் கட் வேலை நடக்கிறது எப்போ கரண்ட் வரும்னு சொல்ல முடியாதுனு அபார்ட்மென்ட் எலக்ட்ரீஷியன் ஜாலி மூடில்.


சோக கீதம் நான் பாடும் வேளையில் டொக்கென்று விழுந்த watsapp msg.


"'never tell anyone your plans

show them your results ''


என் plan அப்பளமாய் நொறுங்க ..வேறொறு டிஷ் ரெடி ..


அதாங்க உப்புமா..

கைகொடுக்கும் கை..

( உப்புமா breakfast க்கு தான் சாப்பிடணும்நு இல்லை..சரிதானே..)


#holidaymood

Summer special

 அம்மா..இன்னும் எத்தனை சுத்து பாக்கி இருக்கு? 

கையைக் கூப்பியபடி 

சாய்ஞ்சு சாய்ஞ்சு 

நவக்கிரகம் சுத்தும

நண்டு சிண்டுகள்..


வரப்போகும் ரிஸல்ட்  வயிற்றைக் கலக்க..

வரேன் நானும் கோயிலுக்கென்று

விபூதிப் பட்டையுடன்

பட்டைய கிளப்பும் பசங்க..


பூவும் பொட்டுமாய் புதுசா அலங்காரம்..

பவ்யமாய் விளக்கேற்றி 

பாஸாக்கிடு பாஸ் என்று பக்தியில் பெண்குட்டிகள்..


'கண்ணை மூடி உம்மாச்சியை வேண்டிக்கோ'

பாட்டி சொல்லைத் தட்டாத பேத்தி..அவள்

பார்க்காத போது.. ஓரக் கண்ணால் என்னைப் பார்த்த அழகு..


கோயில்கள்..கோடை விடுமுறையில் 

குழந்தைகள் வரவால்..

சொர்க்கமாய்த் தெரிகிறது..


'மாமா..ப்ரசாதம்' ..இரண்டு கையிலும் தொன்னையில்  ரொப்பிண்டு 

இவர்கள் அங்கே மரத்தடியில் சாப்பிடும் அழகே தனி..


ஆனால் என்ன..

எனக்கும் ,என்னோடு சுத்தும் இந்த பூனையார்க்கும் ப்ரசாதம் கோட்டா கட் ஆகி விட்டது.


'ம்ம்ம்ம்ம்..வரும் வரும் ஜீன் வரும்..ஜூட் விட்டு விடுவார்கள் இவர்கள் எல்லாம்.

அப்புறம் நம்ம ராஜ்ஜியம் தான்' என்று நான் சொல்ல..


புரிந்தது போல போஸ் கொடுத்த பூனை..


Sunday, April 16, 2023

எந்தக் 'கொ' வும் ..

 எந்தக் 'கொ' வும் ..


(அதாங்க..எந்தக் "கொம்பனாலும்" மாற்ற முடியாது..)

என்னுள் இருக்கும் 'கு' வை..(குழந்தைத்தனத்தை💪 ..யார்கிட்ட😀😀)


Fry க்கு முன் flower ..🌸🌺🌻

சின்னச் சின்ன சந்தோஷங்கள்

 சின்னச் சின்ன சந்தோஷங்கள்..


குக்கர் விசில் சத்தம் கேட்டதும்..

கூப்பிட்டியாம்மா..என்று..

என் குழந்தை மட்டுமல்ல..

என் வீட்டு காக்காவும்...

காத்திருக்கும் அழகே தனி😃😃😃😋


Thursday, April 13, 2023

பழி ஒரு இடம்...

 பழி ஒரு இடம்...


அணைந்து போன கைப்பேசி

அடிக்க மறந்த அலாரம்..

அதிகாலை நேரத் துவக்கம்

அரக்கப் பரக்க அவசரம்


காலியாய்த் தொங்கும் பால்பை

காலையில் வராத செய்தித்தாள்

கழுத்தை அறுக்கும் மின்வெட்டு

கிண்டிப் போன தோசை


கையில் கிட்டா காலுறை

காணாமல் போன ஐடி கார்ட்

கசங்கி கிடந்த பள்ளிச்சீருடை

காக்க மறுத்த ஆட்டோக்காரன்


மூடியைத் தேடிய பாட்டில்கள்

முடியல உடம்புக்கென்று

மூணு நாள் விடுப்பில் 

மூச்சிலும் மேலான முனியம்மா..


ஒண்ணுமே சரியா இல்லை

ஒரு வேலையும் நடக்கலையே


ஓடிய சிந்தனை கலைந்தது

'ஒன்னோட பொட்டு 

ஒருபக்கமா இருக்கேனு'

ஓடி வந்து ஆசையுடன்

ஒட்டிக் கொண்ட பெண்ணை

ஓங்கி விட்டாள் ஓர் அறை..


ஓவெனெ அழது புரண்டது

ஒண்ணும் புரியாத குழந்தை


சமாதானம் செல்லுபடியாகாதே

சாட்சியம் இருக்கே

சாத்திய அடியின் சுவடுகள்

சிவந்த அவளின் கன்னத்திலே


...

Tuesday, April 11, 2023

C க்கு பின் D தானே.

 C க்கு பின் D தானே..நம்

Direction மாற்றியதே..


Desi food கிடைக்குது

Daadi's delicacies உடன்..

Daddy's kitchen ம்

Delicious menu வுடன்.


Doordarshan மட்டும் பார்த்து

Days கழியுமே devotion ல்


Distance குறைந்து

Dearer  ஆன family..


Dazzling bright ஆனது

Dull  tiles எல்லாம்..


Dependence குறைந்தது..

Daring to face..


Displeasure இல்லை

Disappointment இல்லை..


Distress யிலும்

Dissatisfaction இல்லை.


Divine power புரிகிறது

Devotion வளர்கிறது


Dramatic change வருமென்று

Dream வந்து போகிறது..


Dynamic க்காக ஆனாலும்

Deteriorate செய்யமாட்டோம்

Dear mother earth ஐ..

Determine செய்வோம்..

Dutiful ஆக மாறுவோம்.

Wednesday, April 5, 2023

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..'

 :ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'


'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..

தாயும் சொன்னாள் ...

'தலைப் பிரசவம்...

தாயும் சேயும் நலமா இருக்க

திருமலையானை தரிசனம் பண்ண

குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..

இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..

சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..

இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..

மகன் தந்தையிடம் சொல்வான்..

'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...

நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே

ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..

கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.

கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..


இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..

ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..


Sriram Jayaram Jaya Jaya ram

Sunday, April 2, 2023

ராம்..ராம் ..ராம்..

 ராம்..ராம் ..ராம்..


தாழ்த்தினோம் சிரம்

கூப்பினோம் கரம்

சொல்வோம் உம் மந்திரம்

கேட்போம் வரம்

பற்றினோம் உன் பாதம்

தருவாய் நீ அபயம்..

எனக்கேன்.. இனி பயம்..🙏


ஸ்ரீராம்..ஜெய ராம்..ஜெய ஜெய ராம்..


முடிந்த அளவு அவன் நாமம் சொல்லுவோம் ..

மீள்வோம்..இவ்விடரிலிருந்து..


Prayed for all my friends here🙏🙏


அக்கார அடிசலோடு ..

அயோத்தி ராமன் பேர் சொன்னேன்..

அடியோடு ஓடிடட்டும்

ஆட்டி வைக்கும் துன்பமெலாம்🙏

Friday, March 31, 2023

31st March

 31st March


நேற்று போல் இன்றில்லை..

இன்று போய் நாளையில்லை..


என்ன அருமையான பாட்டு..


முப்பத்தொண்ணு மார்ச்

முழி பிதுங்கும் நாள்.

வரவும் செலவும் இடிக்க

வரியும் ஏய்ப்பும் வயிற்றை பிசைய

வவுச்சர் போடறதா

வராதுனு மூடறதா..


Suspense ல வைக்கிறதா

Secretல அமுக்கறதா


அட்வான்ஸ் கழிக்கறதா

அடப் போகட்டும்னு விடறதா


Target க்கு ஓடறதா

Trial balance உடன் போராடறதா.


Accountsம் auditம்

ஆடின ஆட்டமெல்லாம்

அடங்கிப் போகுமே

தொடங்குமே வேலை.( இப்பவாவது)


தூங்காத விழி ரெண்டோடு

பாங்க் ஊழியர்கள்..

Guidelines எல்லாம்

கடகடனு கொட்டனுமே

Interest rate எல்லாம்

இம்மியும் மறக்கக்கூடாதே


விடிஞ்சதும் வீடு போய்..பல்

விளக்க ஆரம்பிக்கையில்

வீல் வீல்னு அலறும் கைப்பேசி

விஷயம் தெரியுமோ உமக்கு

வாட்ஸப்பில் fb எல்லாம்

விவாதம் ஆரம்பிச்சாச்சே

விதியெல்லாம் மாறியாச்சு

கதி கலங்கி பேதியாச்சு..

Reserve bank ஆ..இல்ல

Reverse bank aa

Respect இல்லையே

Remitters எங்களுக்கு..


உத்தரவு(உர்ஜித்) பட்டேல் சார்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..

பெட்ரோலிய ஓனரோ..

பொட்டிக்கடை ஓனரோ

உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு என் ராசா..

யாருக்காவது balance sheet tally 

ஆகி இருக்கா..

பல வருஷமா..நானும்  try பண்றேன்..என் வீட்டு balance sheet tally பண்ண..

முடியலையே..

நான் என்ன பண்ணுவேன்..ஹி..ஹி..ஹி..

என்னடா இது..

 என்னடா இது..

Curfew லயும் இப்படி kitchen பத்தியே போடறாளேனு பார்க்காதிங்க..


எது இல்லையோ அது தான் தேடும் மனசு..


சீந்தாமல் கிடக்கும் சில நாள்..


இப்போ..

Bread வாங்கப் போனேன்

வைரஸ் பிடித்து வந்தேன்னு 

பாடணுமோனு பயத்தில..


வர வர சாதம் கசக்குதையா..

மனம் தான் "பன்'னு..'பன்' னுனு துடிக்கும்..

ப்ரெட் இருக்கானு கேட்கும்..

வர வர சாதம் கசக்குதையா..


பாடும்.மனத்தை ..நீ அடங்கு அடங்கு என்று சொல்லி..


ஏன் துளி மாவு எடுத்து, சுத்தமான பொருட்களை சேர்த்து,  பேக்கரி அளவு இல்லாட்டியும் .bun செஞ்சு பார்த்தால் என்னனு ஒரு முயற்சி..


அதான்.. 

Eggless ,yeast less ..

Only curd and eno வைத்து செய்த ladi pav😁


நல்லா இருக்கும் side pic இது..


Backku சுட்டதடா..

Blacku ஆனதடானு..

பாட்டு பாடும் ..


நானே செஞ்சதாக்கும்😁

Tuesday, March 21, 2023

holi_hai_holi

 #rang_barse..

#holi_hai_holi


holiday ல ரொம்ப ஜாலி டே இந்த ஹோலி டே..

கலரைப் பார்த்ததும் கிலி

வயிற்றில் கரையும் புளி


எலியும் ஆவார் புலி

''பா"ங்கும் உருவாக்கும் சிரிப்பொலி


கலரு ரொம்பிய வாளி

தண்ணி ஆகும் காலி..


தயிர் வடையுடன் Thali..யார் 

வயிறும் இல்லை காலி..


சந்தோஷத்தில் இல்லை போலி

சிலரு செய்வார் 'பூரண்' போளி


சிரிப்பு கும்மாளம் கேலி

சிரித்தே வரும் வயிறு வலி


மெனுவில் இருக்கும் corn & chilli

உப்பிடும் எல்லார் belly


மகிழ்ச்சிக்கு இல்லை வேலி

எங்கும் holi hai holi ஒலி..

ஆம்..

நிரம்பி வழியும் ஜாலி

வசந்த விழாவாம் ஹோலி


Happy happy holi

Monday, March 13, 2023

என்ன ப்ளான் இது?

 நம்ம ப்ளான் படி இன்னிக்கு செய்துடலாமா? நு வாட்ஸப் க்ருப்பில் அட்மின் மெசேஜ் அனுப்பியாச்சு.


ஏய்..இன்னிக்கு வேணாம்ப்பா..என் நாத்தனாரோட ஒன்னு விட்ட மச்சினன் பொண்ணு கல்யாணம்..பெரிய family reunion.

.முடியாதுப்பா..


மெம்பர்2: சரியா நாள் குறிச்சீங்க போங்க..ஆஃபீஸில் இன்னிக்கு எங்க மேனேஜர் ரிடையர் ஆகறார்ப்பா .கண்டிப்பா முடியாது.


மெம்பர் 3:  உனக்கு ஒண்ணும் engagement இல்லனு எங்களை கூப்பிடறயாப்பா..

இன்னிக்கு என் பொண்ணோட ஃப்ரண்டு அரங்கேற்றம் போகணும்ப்பா இன்னொரு நாள் வெச்சுக்கலாம்.


மெம்பர்4: நான் இன்னிக்கு சொந்த ஊர் போறேன்ப்பா..so நான் ஜூட்.


மெம்பர்5: ஏன்ப்பா..இன்னிக்கு தான் என் புது புடவை ரிலீஸ்..சான்ஸே இல்லப்பா.


மெம்பர்5: no way..என்னால என்னிக்குமே இந்த ப்ளானுக்கு ஓகே சொல்ல முடியாதுப்பா..புரிஞ்சிப்பீங்கனு நினைக்கறேன்..😂😂😂


அட்மின்: எப்போதான்ப்பா செய்யறது..ஒரு முடிவெடுத்தால் அதை செயல்படுத்த வேணாமாப்பா?

(மை.வாய்ஸில்...ஐயோ..இவங்க எல்லாம் ஏதோ சொல்லி தப்பிச்சுட்டாங்களே..நான் என்ன செய்வேன்..என்ன செய்வேன்..வாக்குகொடுத்துட்டேனே..

எப்படி வாபஸ் வாங்கறது?


அட்மின் மெசேஜ்: பாவம்ப்பா..எல்லாரும் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கீங்க..இன்னிக்கி இல்லாட்டி என்ன?

April 1st வெச்சுப்போமா?


மெம்பர1்: 🙏


மெம்பர்2:   🙏🙏


மெம்பர்3:   🙏 


மெம்பர் 4 :🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏


என்ன ப்ளான் இது?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


கண்டுபிடிச்சாச்சா.?

#no_fb_day

நெட்டும் நோட்டிஃபிக்கேஷனும் இல்லாத ஒரு நாள்..

#one_day_challenge ..முடியுமா? 


V.n. Meenakshi Gayathri Ganesan

Saturday, March 11, 2023

நான்_அட்மின்_ஆனால்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#நான்_அட்மின்_ஆனால்


1.முதல்ல் ஒரு #chitty_robot பக்கத்துல வெச்சுக்கணும்னு நினைக்கிறேன்.

இருபதாயிரம் மெம்பர் பதிவுகள் போட்டாலும் ஒரே செகண்டல படிச்சு முடிச்சுடும்.


படிச்ச போஸ்ட் எல்லாம் எனக்கு prioritize பண்ணி அனுப்பும். 


யார் பதிவு மிக கம்மியான லைக்கும் கமெண்ட்டும் பெறுகிறதோ அது முதல்ல அப்ரூவ் ஆகனும்னு லிஸ்ட் மாடரேட்டர்க்கு போக வைப்பேன் ( அப்புறம்..நீ எதுக்கு?)


  V.n. Meenakshi Yoga Yogambal ஆஸ்தான tag queens.

they will takeover.


2. #madhyamar_membership_form எல்லாரும் ஃபில் பண்ணணும்.

 basic details இருக்கும். 

அதை வைத்து ஒரு data base உருவாக்குவேன்.

region age profession wise excel sheet ரெடியாக வைத்திருப்பேன்.


முதல் பதிவு போடுமுன் இந்த ஃபார்ம் பூர்த்தி ஆகவில்லை என்றால் பதிவருக்கு மெசேஜ் போகும்.


3.ஒவ்வொரு region க்கும் ஒன்று அல்லது இரண்டு பேர்கள் நியமித்து அந்த ஊர்களில் நடக்கும் பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் என்ன..ஆஸ்பத்திரி வசதி என்ன? இது போல பல தகவல்கள் சேகரிக்க சொல்வேன். 


அங்கு நடக்கும் விழாக்கள் ,camp களில் மத்யமரும் தங்கள் பங்கை அளிக்க வகை செய்வேன். 

அங்கிருக்கும்  மாணவ மாணவியருக்கு உபயோகமாக இருக்கும் வகையில் மத்யமர் நூலகம் அமைப்பேன்.


இத்றகு தேவையான புக்ஸ் ,நம் மத்யமர்களே அளிப்பார்கள்.


அந்த region ல் இருக்கும் மத்யமர்கள் கல்வியுடன் கை வேலைகள்,ஆங்கிலம் கற்பித்தல் ,personality development courses நடத்த வழி வகுப்பேன்.


4.கலை நிகழ்ச்சிகள் #exclusively_for_ youth நடத்துவேன் ஒரு குறிப்பிட மாதங்களில்..


அதில் தேர்ந்தெடுக்கப்படும் க்ரூப் ,சென்னையில் நடக்கும் வருடாந்திர மத்யமர் மீட்டில் பங்கேற்பர். சிறப்பு விருதுகளும் உண்டு.


5.nothing happens overnight and touching the lives of the people is more important for any organization to grow.


புயலும் மழையும் வந்தால் உதவ நிறைய சேவை மையங்கள் உண்டு.

மத்யமர் is #just_a_phone_call_away என்று மாறணும்..

அதுக்காக ' சார் எங்க ரோட்டில குழாய்ல தண்ணி வரலை ..சாக்க்டை அடைச்சிண்டிருக்கு' என்பதற்கெல்லாம் நாம் பொறுப்பல்ல..


just dial ல் கிடைக்கிறமாதிரி.

#madhyamar_dial ல் இங்கிருக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் சிறு தொழில் ..இன்னும் என்னென்ன சேவைகள் மத்யமர் உறுப்பினர்கள் செய்கிறார்களோ அத்தனையும் கிடைக்கச் செய்வேன்.


கடைசியா..எப்புடியாவது இந்த இளசு கூட்டத்தை உள்ள கொண்டாந்துடணும.


மத்யமர் கூப்பிட்டு ஒரு விழா நடத்தினால் தான் நமக்கு fund raise ஆகும்னு ஒரு நிலமையை கார்ப்பரேட் உலகுக்கு உருவாக்கணும்..(ரொம்ப ஓவரா இருக்கா?


6. #no_post_day.

அன்னிக்கு ஒரு நாள் அந்த வாரம் வந்த பதிவுகள் மட்டும் படித்து லைக் கமெண்ட் செய்யணும்.

அப்போதுதான் justify செய்ய முடியும் POTW என்பதை.


7.பதிவு செய்யும்போதே அது எந்த #category சேர்ந்தது என்று டிக் செய்தால் தான் போஸ்ட் submit செய்ய முடியணும்.


வாட்ஸப் க்ருப் அட்மின் ஆக இருக்கவே..ஆயிரம் அடி பாய்ந்து ஓடற உனக்கு இதெல்லாம் தேவையா..மை.வா...சொல்லுது....😂😂

Wednesday, March 1, 2023

ஏதாவது_எழுதலாமே

 '#ஏதாவது_எழுதலாமே' நம்ம மார்க்கு எப்பவுமே உசுப்பி விடுவார்.


' எதையாவது எழுதிட்டு வராதே..ஒழுங்கா கேள்வியைப் படிச்சுட்டு அப்பறம் எழுது என்று டென்ஷனோட இருப்பார் அம்மாவும் அப்பாவும்.


பரீட்சை ஜுரம்..ரம்பம் பம் பம் ..ஆரம்பம்..

இன்றிலிருந்து பல வீடுகளில்..


"மார்க்கு' நமக்கு  'பந்து' இல்லைனு கொஞ்ச நாள் டூ விட்டால் தான் 

மார்க் வரும்..

மார்க்கமும் கிடைக்கும்.


பொதுத் தேர்வு எழுதும் எல்லா வீட்டு செல்லங்களுக்கும் என்னோட அன்பான wishes. 


படிச்சதுதான் வரணும்னு வேண்டிக்காதீங்க..


எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் தரக்கூடிய wisdom and intelligence கொடு கடவுளே என்று வேண்டிக்கோங்க.


சிலபஸே இல்லாத வாழ்க்கைப் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு பதில் தருகிறோம்.


அப்படி இருக்கும்போது..சிலபஸ் உள்ள ஸ்கூல் பாடத்திலிருந்து வரும் கேள்விகள் பெரியதா  என்ன?


Confident ஆ போங்க ..over confidence இல்லாமல்..


All the very best to students of 10th and 12th

நினைப்பதெல்லாம் ..நடந்து விட்டால்

 நினைப்பதெல்லாம் ..நடந்து விட்டால்


பெரிய க்யூ அங்கே..

நான் முந்தி நீ முந்தி இல்லை..


"கண்ணுங்களா..எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கடா.'

நான் கேட்டதும் ..

வெட்கத்தில் முகத்தை மூடிச் சிரித்தனர்..

"நீங்களா..?

நோ ஆண்ட்டி..அது எப்புடி..நீங்க?:


முகம் சிவந்து அவர்கள் நாணிக் கோண..


"நான் அப்புடி என்னத்தைப் புள்ளங்களா கேட்டுப்புட்டேன்..?!!!


 என் பேச்சு வார்த்தை கடைசியில் தோல்வியைத் தழுவ..


ச்சே....என்னடா இது..இந்த அகிலாவுக்கு வந்த சோதனை நு மை.வாய்ஸ் சொல்ல..


வேற ஒண்ணுமில்லங்க..


பார்க்கில் வாக்கிங் போனபோது..

நானும் வரட்டா "சறுக்குமரம்" விளையாடனு கேட்டது தப்பாங்க?😁😁😂