Thursday, December 15, 2016

அழியாத கோலங்கள்

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..



கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..


நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமொ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

பிரியா விடை

தென்னை மரமேற ஆள் வருவான்
தெண்டச் செலவென திருப்பி அனுப்பல்..
பக்கத்து வீட்டு மாமரம்..
நம்பக்கம் காய் தருகையிலே..
அக்கப்போர் ஒன்னு வந்ததில்ல..
அது கிடக்கு விடுங்கனு..
அமைதிப் புறா பறக்கும்..
உலகக் கோப்பை கிரிக்கெ்ட் வரும்..
உளுத்த கம்பமும் சாய்ந்து போகும்.
இழுத்துக் கட்டு இப்போதைக்கு..
இன்னிங்ஸ் முடிஞ்சிடும்னு இம்சைகள்..
தன்னலம் ...தலை தூக்கும்

பாலம் பல கட்டணும்..
பாதை பல ஆகணும்..
புதிய ஊராய் மாறணும்
பாவப்பட்ட் மரங்களை
பலி கொடுத்தோம் என்றும்..
வரும் என் முறை எப்போனு
வருத்தத்தில் வாடிய மரத்துக்கு
வந்ததே வார்த் புயலும்..
வெட்டி வீழ்த்துமுன்..
வேரோடு சாய்க்கவே..
வலியில்லா...சாவோ..
வழியில் கிடக்கும் மரங்களுக்கு..
வண்டியில் ஏற்றுமுன்னே
வணங்கி வேண்டுவோம்..
வேரோ..விதையோ
 விட்டுப் போ..
வரும் சந்ததிக்கு காட்ட

Oh butterfly

திறந்த ஜன்னல் வழி..
தெரிந்து தான் வந்தாயா..???
தேடி எதுவும் வந்தாயா..???
தேவை என்ன சொல்..??
தட்டாமல் தருவேனே.
பட்டாம்பூச்சி உனக்கே..

அடைபடாதே ..சிறையிலிங்கே..
அங்கே தெரியுது பார்..
அழகான என் தோட்டம்..
ஓடிப் பிடிச்சு விளையாட..
ஓயும்போது நானும் வரேன்..
ஓடிப் போ நீயும்..
படபட பட்டாம்பூச்சியே..

Tuesday, December 13, 2016

வர்தா

வேரோடு வீழ்ந்த் மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடந்தோறும் வருதே..
வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்கு திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
வேண்டுமிங்கே..
வருடத்துக்கோர் முறை..
ek KitKat break tho bantha ha Yar



Thursday, December 8, 2016

கட்டுரை..கவிதை

பொருள் வாங்கிக் கொடுக்க செலவழிக்கும் நேரம்..
பேசி கழிக்க பெற்றோருக்கு ஏன் இல்லை..
கட்டுரை தலைப்பை கண்டதும்...
கட்டுக்கடங்காத சந்தோஷம் என்று..
கேள்வித்தாளோடு வந்தாளே..
வாதம் எனது முன் வைப்பேன்..
நேரம் கிடைத்தால் நீயும் படி..

தவழ்ந்து நகர துவங்கையிலே
நானும் உன்னை விலகலையே..
நிலா காட்டி சோறு ஊட்டையிலே..
நானும் நிலவை ரசிச்சேனே..
மழலை மொழியில் நீ கொஞ்சையிலே..
நானும் என் மொழி மறந்தேனே..
தங்கப் பாதம்  நடக்கையிலே..
தன் கை கொடுத்து வெச்சேனே..
பள்ளி வாசல் அனுப்பிவிட்டு..
பரிதவிப்போடு காத்து கிடந்தேனே..
பாடம் நீ படிக்கையிலே..
புதிதாய் மீண்டும் படித்தேனே..
வளர்ந்து நீ வருகையிலே..
விலகாது நானும் தொடர்ந்தேனே.
காற்று புகாத இடைவெளியில்..
காத்தே நானும் இருக்கையிலே.
மூச்சு முட்டத் துவங்கியது உனக்கு
முணுமுணுப்பும் அங்கே முளைவிட்டது.
தலை வாரும் நேரம் ..
தலையாட்டியபடி..பாட்டு கேட்பாய்..
பஸ் ஏற்ற போகையிலே..
பள்ளித் தோழியுடன் அரட்டை அடிப்பாய்..
சாப்பாட்டு நேரம் ..வருவேன் பேச
கொட்டாக் கண்ணோடு டீவியில் மூழ்குவாய்..
விடுமுறை நாளில் வெளியே போலாம்னா..
விடேன் கொஞ்சம் தூங்க என்பாய்..

காத்துக் கிடந்து சலிப்புடனே..
முகநூலில் என்ன நடக்குதுனு..
நுழையும் போது வருவாய் நீயும்..
சரி சரி..நீ பேசிக்கோ..உடன்பிறவா
சக தோழி பலரோடு..
உனக்கேது நேரம் எனக்காக..
முறுக்கிக் கொண்டு போவாயே..
கதவும் அடையும்..உன்..
மனம் போல..

நம் நட்புக்கு ஒரு ஜே

Happy birthday kalai
orkut ஆ..ஐயோ..
அதெல்லாம் சரியில்லை..
id  எல்லாம் வேண்டாம்..
அக்கடானு கிடந்தேன்..
அசட்டுத் துணிச்சல் வர..
அதுவும் தான் என்னதுனு..
அலசிப் பார்போமே..
அதிரடியா நுழைந்தேன்..
scrap ,friend request ..
 சுத்தமா ஒன்னும் புரியல..
சத்தமில்லாமல்...
சகி ஒருத்தி வந்தாள்....
இளையராஜா இசையால்..
இனிதாய் ஒரு அறிமுகம்..
scrap அதிகமானது ..
சொந்தமும் இறுகியது..
சொல்றேன் ஒரு தலைப்பு..
சும்மா எழுதலாம் வாங்கன்னா..
எங்கள் கூட்டணி..
எண்ணிக்கை கூடியது..
எங்கோ இருந்தாள்..
என்னை..ஆட்கொண்டாள்..
எல்லையிலா அன்பிலே..
ஊடகங்கள் மாறியது..
உறவு எமது மாறலையே..
எந்தப் பயணத்திலும்..
என் கூடவே வருவாள்..
பத்திரமா இருக்கீங்களா..
ஊர் போய் சேர்ந்தாச்சா..
கடல் கடந்து வாழ்ந்தாலும்..
குறுஞ்செய்தியில்.. தொடர்வாள்..
நல்லதோ கெட்டதோ..
வருத்தமோ..சந்தோஷமோ..
வரி விடாமல் பகிர்வோமே..

ஆச்சரியம் உண்டு இதிலே
ஆண்டு எட்டாச்சு..
அவளை இன்னும் பார்த்ததில்லை..
அதனால் துளி வருத்தமில்லை..

நட்பெனும் கடலினிலே
நல்லதொரு முத்து நீ..
நலமுடன் வாழ்க நீ..
கலை நீயும் என்றென்றும்..


இந்த உன்  பிறந்த நாள்..
இப்படியே கொண்டாடுவோம்..
அடுத்த வருஷமும் வரும்..
அதற்குள்ளாவது பார்ப்போமா..

Tuesday, December 6, 2016

போய் வா..மகளே.போய் வா

போய் வா..மகளே ..போய் வா

எப்போதும் போல வீட்டு எஜமானி ..எடுத்து வைத்தாள்..பழைய சோற்றை..வேலைக்கு உதவும் பெண்ணுக்கு..
ஐயே....சோறு வேண்டாம்மா .ரவைக்கே grinder ல மாவு போட்டாச்சு..mixie ல ஒரு சட்னி அரைச்சா போதும்...
laptop ல வேலை செய்யும் புள்ளைக்கு கொடுத்துட்டு..
table fan காத்தில..TV கொஞ்ச நேரம் பார்த்துட்டு...அடுத்த வேலைக்கு ஓடணும்..
அம்மா..உணவகம்..அம்மா..குடிநீர்..எங்களுக்கு என்ன குறை..
தலை நிமிர்ந்த பல குடும்பங்கள்... அம்மாவின்..அதே..
ஆற்றலுடன் முன்னேறும் மக்கள்..
இழந்தோம்....ஒரு சக்தியை....

வெண்ணிற ஆடையில்..
எங்கிருந்தோ வந்த
சந்திரோதயம் நீ..
யார் நீ என்றால்..
தனிபிறவி என்றாய் நீ
அடிமைப் பெண்ணல்ல நீ
சவாலே சமாளி நீ..
மணிமகுடம் சூடிய..
குமரிப் பெண் நீ.
எங்கள் தங்கம் நீ..
ஆதி பராசக்தி நீ
அன்னை வேளாங்கண்ணி நீ.
அன்னமிட்ட கை நீ..
சூரிய காந்தி நீ..
வைர நெஞ்சம் நீ
ஒளிவிளக்கு நீ..
அரச கட்டளையாய்
ஒரு தாய் மக்களென
புதிய பூமியாய்
நம் (தமிழ்) நாட்டை ..
காவல் காத்து..
பொம்மலாட்ட உலகில்..
திக்கு தெரியாத காட்டில்..
சக்தி லீலை புரிந்து..
குடியிருந்தாய் ..
மக்கள் மனமெனும்..
கோவிலிலே..
அன்பைத் தேடி ..
பட்டிக்காடும்..
பட்டணமும் விட்டு..
நதியை தேடும் கடலில்..
கரைந்தே போவாயோ..
கந்தன் கருணயுண்டு..
காவல்காரனில்லை இப்போ..
ரகசிய போலீசாய்...
காப்பாய்..
கண்டிப்பாய்..எம்மை..
Rest in peace Amma..

Monday, December 5, 2016

ரயில் பயணங்கள்

காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .
காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்
சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்
சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்
சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.
சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..
குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.
கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..
ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..
உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..
வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..
வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..
ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..
அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..
விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..
விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..
வருமான வரி விவரித்தல் ஒருபுறம்
வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்
அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..
கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..

சென்ட்ரல் வந்ததும்
சிதறும் இக்கூட்டம்..
சுவாரசியம் என்றும்..இந்த
சிக்கு புக்கு ரயில் பயணம்

Tuesday, November 29, 2016

கொண்டை சேவல் கூவும் நேரம்

தானியம் தேடப் போனேன்..
தனமும் அங்கே கண்டேன்..
கொக்கரக்கோ மறந்தேன்..
கொட்டி இருக்கு பணமென்றேன்..
குறட்டை விட்டவனும்..
குப்பற அடிச்சு ஓடி வந்தான்..
செல்லாத நோட்டை கண்டான்..
சீறி விழுந்தான் என் மேலே
சுத்த அறிவு கெட்டவனே..
சொப்பனத்தில் நானிருந்தேன்..
கத்தையாய் நூறு நடுவில்..
நிம்மதியை கலைத்தேனோ..
நழுவினேன்..அங்கிருந்தே..
நாளை..
கூவலாமா..வேண்டாமா..
குழப்பத்துடன்..நானிங்கே

சகிப்புத் தன்மை

வாயில போடுமுன்னே
வளையல் போடணுமே..
வக்கணையா சமைச்ச கைக்குனு..
விழுங்கி முடிக்கும்....வீட்டுக்காரர்..
சகிப்புத் தன்மை தொடங்குமங்கே

வாரி இறைத்த புடவைக் குவியலில்..
வரிக் குதிரை டிசைன்..
வாங்கினதே இல்லனு..வாங்கி
விமர்சனமே இல்லையேனு..
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்..
சகிப்புத் தன்மை...உண்டிங்கே

amazon ..ஆடித் தள்ளுபடி.
அலுக்காமல்..ஆயிரம் தந்து
அதே செருப்பை வாங்கி..
அப்பா..எப்படி இருக்குனு
அருமை மகள் கேட்க..
அப்பா ..சகிப்புத் தன்மை..

மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு
மாறாத மெனுவுடன்..
மாமியாரும் பறிமாற..
மண்டையாட்டி...
மாறாத அசடு வழிதலுடன்..
மாப்பிள்ளை..சகிப்புத் தன்மை..

senti போடாத..
சிரித்தே மழுப்பும்..
சகிப்புத் தன்மை..
சரிதானே..

Monday, November 28, 2016

அப்படியே சாப்பிடும்..
ஹார்லிக்ஸ் நீ..
அரக்க பறக்கும்..
காபி நான்..
சாந்தம் நீ..
சத்தம் நான்..
பாடல் நீ...
பருப்புப் பொடி நான்..
மாண்புமிகு...
மகரம் நீ..
விஷமில்லா..
விருச்சிகம் நான்..
விவேகம் நீ..
வேகம் நான்..
வலிமை நீ..
வளவள நான்..
பொறுப்பு நீ..
போராட்டம் நான்..
பொறுமை நீ..
புலம்பல் நான்..
கை பிடித்தோம்..அன்று
கடவுள் அமைத்த மேடையில்..
இரும்பு மனிதன் நீ..
இளகும் மனமும் நீ..
சாதுவும்...நீ..
சாமர்த்தியமும் நீ...
ஓயாத அலைகளை
ஒன்றாய் கடப்போம்
சோர்வை எறிந்து
சேர்ந்தே நடந்து..
சோதனைகள் கடந்து
சாதனை படைப்போம்..
சாகரமாம் இவ்வாழ்விலே

Saturday, November 26, 2016

நான் கண்ட பாரதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் style..
ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..
சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..

நெஞ்சும் நிறைந்திடுமே

கொஞ்சும்  குழவியின் மழலை மொழியில்
நெஞ்சும் இங்கு நிறைந்திடுதே..
கூட்டில் வாழும் குருவிகள் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே..
கூடி வாழும் குடும்பம் கண்டு..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
கும்பிடும் தெய்வம் கண்ணில் தெரிய..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
இருள் நீக்கும் விடியல் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
வானில் மின்னும் விண்மீன் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
மழையும் நீரும் நதியும் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
காதல் சொல்லும் தென்றல் வருடலில்
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
பனியும் துளியும் படரும் கொடியும்
நெஞ்சும் இன்று நிறைத்திடுதே
மலையும் முகிலும் மோதக் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்தததுவே
பஞ்ச பூதங்கள் புவியைக் காக்க
நெஞ்சும் இன்று நிறைந்ததே..
பாவக் கறைகள் கற்பூரமாய் கரைய..
புது உலகம் ஒன்று பிறந்திடவே..
உண்மை,நேர்மை பொறுமை கொண்டே..
உள்ளங்கள் வெல்ல உழைப்போமே..
நெஞ்சும் நிமிர்த்தி சூளுரை செய்வோம்..
வஞ்சம் லஞ்சம் இங்கில்லை யென்றே..
மனிதமும் மானுடமும் ஓங்கும் தருணம்
நெஞ்சும் நிறையுமே
உண்மையில்..அன்று

before i die


வாசல் திறந்தேன்..
வாடிய.. நீ அங்கே..
வந்தாய் எப்படி...??
வருடினேன் உன்னையே..
மடியும் நாள் வந்தாச்சு..
மூச்சது முடியுமுன்..
உள்ளுக்குள் ஓர் ஆசை..
உவகையில் கேட்டேன்..
உன் உள்ளத்திலுள்ளது..
உதிருமுன் சொல்லென்றேன்..
ஒன்னும் பெரிசா இல்லை..
ஒரு போட்டோ புடி என்றாய்..
பள்ளிகொண்ட பெருமாள் போல்..
படுத்தபடி நீ இருக்க.
பருவப் பெண்ணைப் போல்..
புன்முறுவல் நீ பூக்க..
பிடித்தேன்..படம்
அடைத்தேன்..உன்னை
என் நெஞ்சுக் கூட்டில்..
போய் வா…இலையே
போய் வா..
மீண்டும் நீ வரும்போது..
மண்ணில் இருப்பேனோ
மறக்காமல் சொல்வேன்..
மகளும் அவளிடமே..

வருவாய் நீ என..

Friday, November 25, 2016

குட்டிக் குருவி...வருக வருக

காக்குருவி கூட்டினிலே..
குட்டிக் குருவி ஜனனமின்று...
காத்திருப்பு பல நாளாய்..
கலி தீர்க்க வருவாய் என..
கவி யொன்று புனைந்திங்கே
காலமும் ஆச்சு கண்ணே..
கண் துஞ்சா காத்திருப்பு..
கனவோடு பல ராவும்..
குருவியும் நீ வந்தாய்..
கண்ணீர் இனியில்லை..
காக்கும் கரம் உன்வரவால்
குலமென் தழைக்க வந்த..
குட்டிக் குருவியே..
குதூகல குடும்ப வலைக்குள்
கூடி  உனை வரவேற்கிறோம்..

குட்டிக் கிளை உனக்கும்...நம்
குடும்பமெனும் பெருமரத்தில்..
கூவி  நீ அழையாமலே..
கூடி உனைக் காப்போமே..

பெரியம்மா...நானானேன்
பிடிபடவில்லை..என்
பெருமையின்று..
பேணி உனைக் காப்போமே..
பேரோடும்.புகழும்..
பண்போடும்..அன்போடும்..
பல்லாண்டு வாழ்ந்திடவே..
பாமாலை..சூடுவேனே

மழை வருமோ..

இராத்திரியில் வராதே.
லைட்டும் போய்டுமே.
ராவெல்லாம் படிக்கணுமே..
வேண்டினான்..
பொதுத் தேர்வு மாணவன்..
காலையிலே வராதே..
காஞ்சிபுரம் பட்டுடுத்தி..
கல்யாணம் போகனுமே..
கவலையுடன்..கன்னியுமே..
மத்தியானம் வராதே..
மொறுமொறுனு..
மாவு வடாம் காயனுமேனு..
மாமியும் வேண்டினாளே..
சாயுங்காலம் வராதே..
சோடியோட..
சினிமா போணும்..
சின்னப் பையன்..
சேவித்து நின்றான்..
வெடித்து விரிந்த மண்ணோ..
என் வாசனை வந்து..
எத்தனை நாளாச்சு..
மழையே..
மறுபடியும் எப்போ வருவே..
மனிதக் குரல் கேட்குமுனக்கு..
மண் குரல் விழவில்லையா..
மழையே..வருவாயே..
மழையே வருவாயே..

யாதும் ஊரே யாவரும் கேளிர்

உடன்பிறப்பு இல்லையென
உள்ளூர அழுதேனே.
இருந்தும்...இல்லா
இக்கட்டு ஓரிடம்..
இல்லையென்பதால்..
இழந்தது ஒன்றில்லையென..
தெளிந்தேன்..அன்று..
வாழப் பழகினேன்..
வழங்கத் தெரிந்தேன்..
வானுமோர் எல்லையிலா..
வற்றாத அன்பையுமே..
பூங்குன்றன் பாடல் போல்.
பூந்தோட்டமாய் என் வாழ்வு..
கவிபாடும்..
காயத்திரி பூவும்
கண்டிப்பாய் அதிலுண்டு.
சுருங்கினாலும்..மலர்வோம்..
மணம் பரப்புவோம்..வா..
வெல்வோம்..வா

வெற்றி என் பக்கம்

பூவும் காயும் வித்து
பொழுதும் உழைக்கும் அம்மா..

பட்டம் பெறுவேன்..நானும்..
பட்டத்து ராணி..யாவாய் நீயும்..

வீணாகும் விளக்கு வெளிச்சம்..
விதி எமது மாற்றும்..

விட்டில் பூச்சி நானல்ல..
வீழ்ந்தே மடிய ..பிறப்பல்ல..
வருமிடர் களைந்தே நானும்..
தருவாய் தாங்குவேன் உனையே

கதையாகும்.. கடந்த காலமுமே
கரமுனது பிடித்தே நானும்..
கண்டு களிப்பேனே..அன்று
கையளவு உலகம் இதையுமே..

Tuesday, November 22, 2016

காக்குருவி...கதைகேளு

ஒத்தையா.. நீ
ஒடன்பொறப்பு??
ஒட்டு உறவெல்லாம்..
ஒனக்கெங்கே புரியும்..
மறைவிலும்..முகத்திலும்..
மோவாகட்டை இடித்து பேசி
மனசை புண்ணாக்கிய..
மஹானுபாவர்களுக்கு..
ஒட்டி உறவாடுனதெல்லாம்..
வெட்டியே..வெளியே போக..
ஒத்தை காக்குருவிக்கு
ஊரெல்லாம் சொந்தமாக..தன்
குஞ்சு குட்டிக்கெல்லாம்..
கத்து கொடுத்துச்சாம்..
கூடப் பொறந்தாதான்..
சொந்த பந்தமில்ல..
காட்டு ..உன் அன்பை
கலப்படம் இல்லாம..நீ.

கூவிக் கரஞ்சா போது..
கூட்டம் ஒன்னும் வந்திடுமே..
காலம் போனாலும்..
காக்குருவி எங்கூடு..
கலகலப்பா இருந்திடுமே..
பலகூட்டு பறவைங்க..
பறந்து வந்திடுமே..
விருந்தொன்னு..உண்பதற்கே

Saturday, November 19, 2016

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
எடுத்து தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க

morning click

அந்த வீட்டு கூரையில் மட்டும்..
அப்படி என்ன சுகம் கண்டாய்?
அசையாமல் அசை போடும்..

அந்த நினைவுகள் தான் என்னவோ?

Thursday, November 17, 2016

மை


மை...
அன்று உரிமை..
இன்று கடமை..
நேர்மை வழி நின்று..
கருமை களைவோம்..
பொறுமை காப்போ.

நான் கண்ட பாரதம்

வெள்ள நீரதுவுமே
வீதிியெல்லாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை...
நானறியேன்..
queue  வில் நிற்கும்வேளை
quotes கூட தோணுமோ..

Monday, November 14, 2016

நான் கண்ட பாரதம் ...நேற்று

மூணு நூறு ரூபாய் கையில்.
மூக்கைப் பிடிக்க சாப்பிட ஆசை..
உணவகம் நுழைந்தேன்..
உவகையாய் உண்டேன் ..
சர்வர் வந்தார் பில் கொண்டு..
கர்வமாய் நீட்டினேன் கார்டையுமே..
சர்வர் டவுனு...சொறிந்தார் தலை..
சரியாப் போச்சு.. சங்கடத்தில் நான்..
இருப்பதைக் கொடுத்தால்..
இன்னிக்கு வீடு சேரமுடியாதே..
இக்கட்டில் சிக்கிய நேரம்..
இளையராஜா பாட்டு.
எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்
என் மனதில் ஓட..
சகஜமாய் சொன்னார்..
சரி சரி ..நளைக்குத் தாங்க..
மனுசனுக்கு மனுசன்
உதவலனா எப்படி என்றே..

கடன் உறவை முறிக்கும்
கடையில் மாட்டிய போர்டு..
கண்சிமிட்டியது..
என்னைப் பார்த்து..

நான் கண்ட பாரதம்

வீட்டு வேலை எல்லாம் முடித்து
Water bottle biscuit சகிதம்..
வர ரொம்ப நாழியாகும்..
வழி மேல் விழி வைக்க வேண்டாம்..
வங்கியில் இன்று பணமெடுக்கணும்..
வேகமாய் கிளம்பினேன்..
வங்கி வாசல் வரை
கூட்டம் இருந்தது..
குழப்பம் இல்லை..
கத்தல் இல்லை..
சண்டை இல்லை..
தெரியாதவர் ..தெரிந்தவருக்கும்..
தெளிவாய் சொல்லித் தந்தனரே
தரும் ஃபாரம் எப்படி நிரப்ப என்று..
மடமட என்று நகர்ந்தது வரிசை..
மணிக் கணக்காகுமென்ற
மனக்கணக்கு தப்பியது..
அவரவர் உரிமையும்..
அவரவர் கடமையும்..
அவரவர் புரிந்து நடந்தமையால்..
அமைதியாய்...அரங்கேறுகிறது..
அசகாயப்் புரட்சி..
(நான் கண்ட பாரதமிது..என் அனுபவம் இந்த இரண்டு நாளில்)