Sunday, October 23, 2022

இது உணவுப் பதிவல்ல..

 இது உணவுப் பதிவல்ல..


உளவியல் பதிவு.. டிஸ்கி கொடுத்துட்டா நல்லது தானே😀😀


ஒரு டம்ளர் சேமியா எடுத்துக்கோ..

நல்லா வறுத்தியா..

வெங்காயம் நன்னா பளபளனு வேகணும்..

தக்காளி 🍅 பொடியா கட் பண்ணிக்கணும்..

பச்சை மிளகாய்..உன் இஷ்டம்

உப்பு ..namak shamak nu dance ஆடிண்டே போடாதே..

தண்ணீ..பார்த்து ஊற்று..கொழ கொழனு செஞ்சுடாதே..


இப்படி எந்த instruction ம் கொடுக்காமல்

தேமேனு அடுத்த ரூமில் ' லொக்கு  லொக்கு லொக்கு அரே  பாபா லொக்குனு ' நாம படுத்துக் கொண்டிருந்தாலே போதும்..


லுக்..லுக்..லுக்..அரே அம்மா லுக்..நு பாட்டு பாடிண்டே ப்ளேட்டில் வரும் ..

பாசக்கார பொண்ணு செய்த சேமியா உப்புமா..

'சேமி..yaa .இதை உன் உள்ளப் பெட்டகத்தில்னு..போட்டோ பிடிக்க..


#Keep_distance..

வாகனத்துக்கு மட்டுமல்ல..

வாரிசுகள்..வரிந்து கட்டி வேலை செய்யும்போதும்..


வைர(ல்) சிந்தனைகள்😀

சரிதானே..

அன்புடன்...

Missing..missing..those moments

 Missing..missing..those moments


என் பொண்ணு: அம்மா..என்னோட earphone காணாப் போயிடுத்து..😭


நான்: ஏண்டா காலேஜ்லேர்ந்து வரும்போது டெஸ்கெல்லாம் செக் பண்ணிட்டு வர மாட்டியோ?😡


அவள்: அதை ஏன்மா கேக்கற..

அன்னிக்கு desk மேல வச்சுட்டு வந்த cost accounts note அடுத்தநாள் போனா அதே எடத்தில இருந்தது..ஆனா..நேத்திக்கு விட்டுட்டு வந்த earphone எங்க போச்சுனே தெரியல..!!🙄😀🤔


#college_rocks😀💪🎵🎸

Friday, October 14, 2022

வாங்க_சாப்பிடலாம்

 #வாங்க_சாப்பிடலாம்


.


#Mustard_seeds_and_coconut_rice


#கடுகு_தேங்காய்_புளி_சாதம்😀

All in one


நவராத்தியில் கற்றுக் கொண்ட ரெசிபி.


To grind raw

1 grated coconut

1.5 fist of guntur chilli

1.5 fist of bedige chilli

1 spoon mustard

Tamarind 1 lemon size

Hing

Turmeric little

Salt

Grind well into a paste


Keep kadai, add oil, Hing mustard. After it splutters add chana dal, urad dal and peanuts. Add Curry leaves.

Now add the ground paste and fry for long untill the raw smell leaves.

Store this paste in the fridge..and mix it with rice.


இது என் ஃப்ரண்டோட ரெசிபி இது..


நம்ம modify.com  என்ன தெரியுமா?😀

இதே பேஸ்ட் உபயோகித்து மோர்க்குழம்பும் பண்ணிட்டேன். செம்மடேஸ்ட்.

பனீர்த்துவம்

 #பனீர்த்துவம்..


நான் தேமேனு சும்மா இருந்தேன்ப்பா..

இந்த Chandrashekar R sir..தான்..

இன்னிக்கு என்ன போஸ்ட்டுனு உசுப்பி விட்டார்..


அதுக்குள்ள Radha Sriram Vaidehi Jagannathan mam ரெண்டு பேரும் game ஆரம்பிச்சிட்டாங்க..


So..me continuing the game😀😁


Paneer


இந்தப் பேரைக் கேட்டாலே..

பலருக்கு வரும் ஆனந்தக் கண்ணீர்..


பால்கோவா மட்டும் சாப்பிட்ட நமக்கு..

பன்னீரின் அறிமுகம் கிடைக்க..

பாலெல்லாம்...பன்னீராக மாறி..

பல ஆகாரம் இப்போ இங்கே..


டக்குனு ஒரு tikka..

Breakfast க்கு burji

Better taste க்கு butter masala..

லக லகனு..பாலக் பன்னீர்..

Spicy ஆக பன்னீர் ரைஸ்..


ஆனா..

அதோட குணம் இருக்கே..

அதுக்குனு பெரிய டேஸ்ட் கிடையாது..

சேர்க்கும் மசாலாவில் மூழ்கி ..

😋 சுவையும் சேர்க்கும்..


ரொம்ப soft இருக்கும்..

ஆனா..உருகி ஓடாது..


Gravy ல் போட்டாலும் சரி..

கொதிக்கும் எண்ணெயில் போட்டாலும் சரி..

உடையாது ..உதிராது..


இப்போ புரியுதா..

நாம் எப்படி இருக்கணும்னு இந்த பன்னீர் பாடம் சொல்லித் தருகிறதா இல்லையா..?


Consistency ...ரொம்ப முக்கியம்..ஆமாம்..


அன்புடன்😀


Wednesday, October 12, 2022

ரசத்துவம்

 #ரசத்துவம்


..

ரசப் பாத்திரத்துடன் ..எப்போதும் எங்க வீட்டில் ..அது ஏன்..எங்க குடும்ப டயலாக்..இதுதான்..


தெளிவா வேணுமா..?

கொஞ்சம் கலக்கி விடலாமா?

இல்ல..கலக்கித் தெளிவா விடலாமா?..


சாப்பிடறவங்க கொஞ்சம் குழம்பிப் போய்..ஙேனு முழிக்க வைக்கறது ஒரு ஜாலி எப்போதும்..😀


என்னதான் தெளிவா இருந்தாலும் ..கடைசில ஒரு அடி வண்டல் இருக்கும் பாருங்க ..அதுக்கு ஒரு தனி சுவைதான்..


அதுனால..

தெளிவுதான் வேணும்னு சொல்றவங்களை..

தெளிவா இருக்கறவங்களை..அப்படியே தெளிவா இருக்க விட்டுடலாம்..


அதே கொஞ்சம் கலக்கி வேணும்னு சொன்னால்..

பார்ட்டி..பாவம்னு கொஞ்சம் கலங்கிப் போயிருக்காங்கனு அர்த்தம்..


அதுக்கு மேலே..

நல்லா கலக்கு கலக்கிட்டு .. தெளிவா விடுனு சொன்னால்..

எஸ்கேப்புனு ஓடிடலாம்😀


Over to Radha Sriram Shasri

Start music💃💃🎵🎶🎼🎤🎸🎷🎺

Aloo வும் பின்னே அகிலாவும்

 Navaratri Prasadham- today.


Navratri Prasadham- today


Aloo வும் பின்னே அகிலாவும் 


#ஆலூ(ஹ)ல்வா with #ஆலூ(அ)ப்பம்


ஆலூ 🥔🥔🥔🥔🥔..ஆலூனு ஆலாய்ப் பறந்த காலம் ஒண்ணு இருந்தது..

இப்போ..ஆலூவா..அளவாச் சாப்பிடணும்னு ..அறிவு வளர்ந்தாச்சு..😄😄😄


உருளையில்லா🥔🥔🥔 உலகமில்லை.. 🌎🌎🌎🌎🌎

உயிருள்ளவரை உன்னை விடமாட்டேன்னு..ஒரு பந்தம் எப்போதும்..


வேகவைத்த ஆலூ நாலு.

.

அதில் ஒண்ணு ஆச்சு ஹல்வா..


மீதி மூணுமாச்சு..

மொறு மொறு #ஆலூ_farali..

ஆலு mash செய்து , வேர்க்கடலை பவுடர், சாபுதானா பவுடர் + green chillies, coriander + salt சேர்த்து உருட்டி..

எண்ணெயிலும் போடலாம்..குழி ஆலூ(அ)ப்பமாவும் செய்யலாம்.


ஆலூல்வாவைத் தட்டில் கொட்ட..

அங்கேயும் தெரிந்தாள் அம்பாள்..🙏🙏🙏🙏


இந்த  ஆலூ(ஹ)ல்வா ..

வீட்டில யாருமே கண்டுபிடிக்கலை..

ரொம்ப..சூப்பர்னு சொல்லிண்டே ..

ஸ்பூன் ஸ்பூனா காலியாச்சு..😄😄😄😄😄..


 இந்த ஆலூப்பம் உள்ளேயும் green chutney stuff பண்ணலாம்..

அது வெளியே இருந்தும் ..

நமக்கு ஆதரவு கொடுக்கும்.


ஒரு tippu..


Green chutney அரைக்கும்போது .

ஓமப்பொடி அல்லது ratlam sev ஒரு ஸ்பூன் சேர்த்து அரைக்க..

சூப்பர் consistency + taste 🤤😄😄😄

Sunday, October 9, 2022

Prasadham -Navratri- day 3

 Prasadham -Navratri- day 3


வாங்க சாப்பிடலாம் friends.


Ulundhorai with 🥕🥕🥕 kheer


கறுப்பு உளுந்தில் ஒரு கலந்த சாதம்.

கறுப்பு உளுந்துடன் காய்ஞ்ச மிளகாயும்..கொப்பரையோ அல்லது தேங்காயோ சேர்த்து வறுத்து ..

கரகரனு அரைச்சு பொடி செய்ய..

கலந்த சாதத்துக்கு கை கொடுக்குமே எப்போதும்..


அதுசரி..

இது கறுப்பு..


So ...

Contrast color sweet dish..😄😄😄

Carrot🥕🥕🥕🥕🥕🥕🥕 kheer..


Black and orange..

புடவையோ..

பண்டமோ..


கண்ணைப் பறிக்குமே😄😄😄😄


Tuesday, October 4, 2022

நவராத்திரி

 #நவராத்திரி..


்(அவரவர்)..அம்மா அலமாரி முதல் (முன் ஜாக்கிரதை தான்)

அன்றையத் தேதி 

டிசைன் புடவைகள் வரை..

பாதுகாப்பு பெட்டகதிலிருந்து..

புது விடுதலை காணும்..

பளிச்சிடும் நகைகள்..

பாப் வெட்டிய சுட்டிகள்..

பட்டு கட்டிய பட்டாம்பூச்சிகள்..


அபார்ட்மெண்ட் வாழ்க்கை..

அலுப்பே இல்லா கொண்டாட்டங்கள்.

குஜராத்தியும்..கன்னடரும்..

தமிழரும்..தெலுங்கரும்..

மலையாளமும் மராட்டியரும்..

ஓரிடம் கூடி..

அம்பாள் நாமம்..

ஆயிரமதை..

அவரவர் மொழி வடிவில்

அழகாய்ச் சொல்லி..

ஆரத்தி எடுத்து..

அவனியில் அன்பைத் தா என்று..

பாடி முடித்து..

பாக்கும்  வெத்தலையும்..

பாங்காய் பெற்றுக் கொண்டு..


நாளை என் வீட்டில்..

ஞாபகமாய் வரணும்னு சொல்லி..

நங்கைகள் நயமாய் 

விடை பெறுவோம்..

எங்கிருந்தோ வந்தோம்.

இணைந்தோம்...

இவள் அருள் வேண்டி..


ஒன்பது நாள் ..

ஓடியேப் போகும்

ஒன்றிப் போகுமே

உள்ளங்கள்..


நவராத்திரி....நாயகிகள்

நம்மில்லம் வரட்டும்.

நல்லருள் தரட்டும்..

நன்மைகள் பெருகட்டும்...


Happy navratri to all my friends

Saturday, September 10, 2022

என் அம்மா..பிரேமா..

 என் அம்மா..பிரேமா..


உன் வீட்டுத் தோட்டத்தின்..

எலுமிச்சையும் கேட்டுப்பார்..


உன் பெயர் ..சொல்லுமே அம்மா..


ஆறாவது வருடம்..

ஆறவில்லை இன்னும்..


பாசம் என்றால் பிரேமா..

பாதாம் அல்வா என்றால் பிரேமா..


கறார் பேர்வழி பிரேமா..

கர கர தட்டைக்கு பிரேமா..


Punctualityக்கு பிரேமா

பச்சை இங்க்கில் கையெழுத்து போட்ட பிரேமா..


சுத்தத்துக்கு மறுபெயர் பிரேமா..கடைகண்ணி..

சுத்தவும் அலுக்காத பிரேமா..


மீசையில்லாத பாரதி பிரேமா..நம்ம

தோசை பாட்டியும் பிரேமா..


Sister களின் master பிரேமா..

Mr.அப்புவின் ..ring master பிரேமா.


பேரன் பேத்திகளின் pet பிரேமா..

பிள்ளையாருடன் பேரம் பேசும் பிரேமா


அகிலாவே அகிலம் என்ற பிரேமா.

அகம் முழுதும் அன்பே பிரேமா..


அகலாமல் அவளைக் காக்க..கடைசிக்

காலத்தில் வாய்ப்பு தந்தாள்..


உலகமாக இருந்தவள்..வேறு

உலகம் சென்ற நாள் இது..

உள்ளத்தின் பாரத்தை..

உங்களுடன் இறக்கி வைத்தேன்..


அவள் ஆசி நமக்கு என்றும் உண்டு.

அவள் ஆவியான பின்னும் கூட..


அன்புடன் அகிலா..

எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..

Thursday, September 8, 2022

அம்மா பொண்ணு

 'ஏய் அம்ம்மா'......( என் பெண் அழைக்கவும்..என்னடா இது இந்த அகிலாக்கு வந்த சோதனைனு மைண்ட் வாய்ஸை சொன்னதை தள்ளிட்டு..)

'சொல்லுடா..என்ன வேணும்?'

'எனக்கு நாளைக்கு ஒரு group assessment இருக்கு.. இப்போதான் watsapp group ல mam topic post பண்ணியிருக்கா..வேற இன்னிக்கு ஒரு வேலையும் உனக்கு இல்லையே.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் நீ என்றாள். 

டேய்..group project ல நான் எங்கடா வந்தேனு அலற..

அம்மா..உன்னை விட்டா எனக்கு யாரும்மா இருக்கானு ..ஒரே senti dialogue..

நாமதான் உடனே உருகி ஓடா தேய்வோமே..

புதுத் தெம்போடு..சொல்லுடா..என்ன பண்ண்ணும் ..அவள் லிஸ்ட் ஆரம்பிச்சது..அம்ம்மா..(இப்படி  ஒரு அழுத்தம் கொடுத்தா அந்த அம்மாக்குள்ள ஆயிரம் அர்த்தமாக்கும்).

business studies project...you have to write quotes on stereotypes, self- fulfilling prophecy and perception . we have to be creative. 

கண்ணே இதெல்லாம் நான் படிச்சதே இல்லையேடா..இதுல எப்படி..

அவள் தொடர்ந்தாள். கூகிள் ப்ண்ணி நான் quotes எடுத்து வெச்சுடறேன் ...ஆமா..chart paper and black sketch இருக்கில்ல வீட்டில..அவள் பேசப் பேச...கண்ணே நீ தான் டா படிக்கிற..இதெல்லாம் என்னக் கேட்டுண்டு..

chill maa..shelf clean பண்றேனு இடத்தை மாத்தி மாத்தி வைக்கிறது நீதானே..நான் என்ன பண்ண..சொல்லிண்டிருக்கும் போதே செல்லில் டொடங் டொடங்னு மெஸேஜ் வந்து விழுந்த வண்ணம் இருக்க..அம்மா..please white chart வாங்கிண்டு வந்துடேன்நு ஒரு அன்புக் கட்டளை வேற.. சரினு பை தூக்கிண்டு கிளம்பியாச்சு.. ஒரு வாயா வார்த்தையா சொல்லிட்டு கிளம்பினேன்.' வேற ஏதாவது ஞாபகம் வந்தா ஃபோன் பண்ணு'

stationery shop ல் chart வாங்கிண்டு இருக்கற நேரம்..புதை குழி (அதான் என் பர்ஸ்ஸில் )இருந்த மொபைல் பாட ஆரம்பிச்சது..அவளே தான்..அம்ம்மா..black sketch ஒண்ணுதான் இருக்கு..50 quotes எழுதணும்.. ஒரு 2 வாங்கிடு..

சரி..சொல்வதற்குள் செல் கட்..

அந்த கடைக்காரந் கிட்டே ஒண்ணே ஒண்ணு கண்ணேகண்ணுனு ஒரு black sketch மட்டும் இருக்க அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன். வாங்கிண்டு வெளியே வரேன்..திருப்பியும் அவளே அழைப்பு.. அம்ம்மா...ஒரு decorative thread ம் வாங்கிடு..சரி..சரி..வாங்கறேன்..வேற எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லு..திருப்பி வரமாட்டேன்..

இப்படியே  வீடு வந்தாச்சு.

நுழைஞ்சதும்...மீண்டும் அதே tone ல் ..அம்ம்ம்மா...எனக்கு ஒரு ஐடியா..

இந்த quotes எல்லாம் palm script மாதிரி பண்ணா ..நல்லா இருக்கும் இல்ல என்றாள். டேய்..ஓலைச் சுவடில business quotes aa.. இதுவும் நன்னா இருக்கே..சரி பண்ணிடு..நான் போய் டின்னர் பண்றேன் என்றேன். 

அம்ம்மா..அம்மா..அப்படியே ஒரு tea decoction போட்டு கொடேன்..சார்ட்ல ஒலைச் சுவடி effect கொடுத்துடலாம் ..ப்ளீஸ் மா..ப்ளீஸ் மா..

டிகாக்‌ஷன் ரெடி ஆச்சு.. ஆற வைச்சு தர..அழகா அவள் brush வெச்சு light ஆ ஒரு எஃபக்ட் கொடுக்க..

இப்போ அடுத்த கட்டம்..கோடு கட்டம் போட்டு ஒரே அளவுக்கு ஓலை வெட்டி..முதுகு லேசா பெண்டாக..போறுமா..நான் போகட்டா..permission கேட்டபடி நான் .

அதுக்குள்ள எங்க போற..அந்த போன வருஷம் பண்ண ப்ராஜக்ட் ல ஒரு மெழுகுவர்த்தி எரிச்சு ஒரு பொசுங்கின effect கொடுத்தோமே..அதை கொஞ்சம் பண்ணித் தாயேன்...ப்ளீஸ் மா..

உருகி ஓடானேன்.. ஒரு  so called chart paper ஓலைச் சுவடி ஓரத்தை பொசுக்கி டிசைன் பண்ணியாச்சு..

இப்போ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து டும் டும் டும் முடிச்சு போட்டு தாலி கட்டணுமே.. விடிய விடிய வேலை செய்யறதப் பார்த்து விசனத்துடன் வந்தார் அப்பா. ..நான் என்ன பண்ணட்டும் சொல்லு ..காத்திருந்த நான்..ஒரே பாய் பாஞ்சு..அப்பா..இதெல்லாம் ஒழுங்கா அடுக்கி கட்டணும்ப்பா..

தலையாட்டிண்டே..பொறுமையா..ஒவ்வொண்ணா ஓட்டை போட்டு..கோர்த்து ஒரு அழகா ஓலைச் சுவடி கட்டு ரெடி.

ஒவ்வொரு quotes ம் ஒரு சின்ன பாடம்.


காசிக்கு போனாலும்.......விடாது என்பது மாதிரி..

காலேஜ் போனாலும் இந்த கோடு கட்டம், project work விடாது போல இருக்கேனு சலிப்பில் ஆரம்பித்த வேலை..

முடிச்சு நிமிரும் போது சந்தோஷம் தந்தது காற்றில் படபடத்த அந்த ஓலைச் சுவடிகள்..

group project ..குடும்ப project..

எனக்கு கோபம் வந்தால்...

 எனக்கு கோபம் வந்தால்...



சப்பாத்தி...

அப்படியே பூரி மாதிரி உப்பி வரும்போது..

கிடைக்கிற சந்தோஷம் இருக்கே..😃😃😃😃


ஆஹா..அகில் நீ ஜெயிச்சுட்டேனு..

"ஆட்டா ".. சொல்லும்..

ஆட்டோகிராப் ஒண்ணு வாங்கி..

போட்டோகிராஃப் கலெக்‌ஷனில் சேர்க்கத் தோணும்..


அதே..கொஞ்சம்..சப்பாத்தினு பேருக்கு ஏற்ப...சப்பட்டையானால்..


உடனே மனசுக்குள் ஒரு லிஸ்ட் ரெடியாகும்.


இந்த தடவை வாங்கின மாவு சரியா இல்லை..

தண்ணி ஜாஸ்தியா போச்சு..


எதோ சொல்லி escape ஆக தோணும்..


"உன் குத்தமா..என் குத்தமா..யாரை நான் குத்தம் சொல்ல.."

சோகப் பாட்டு பாடும்..🎶🎶🎶🎼


இப்போ ஒரு ஐடியா..💡💡💡💡


Phulka ஆகாத ரொட்டியே.

பொறுமை சோதித்த ரொட்டியே

பாரு உன்னை என்ன பண்றேன்னு..கோபத்தில்

கிள்ளு கிள்ளுனு கிள்ள...மாறிடுமே..

கோபத்தில் ..அது

#Khoba_roti... ஆக..


யாரு கிட்ட..💪💪💪💪💪


இப்போ ..பாருங்க..

எனக்குத்தான் ..எல்லாமே எனக்குத்தான்னு..

இலையில் போடப் போட காலியாகும்..


உருமாறினால் என்ன..

உள்ளே போச்சுதானே..😄😄😄


இதுதான்..அமைஞ்சதுனு compromise ஆகாமல்..

கொஞ்சம்..

Courage எடுக்க..


Life jinga la la..💃💃💃💃

அன்புடன்

Wednesday, September 7, 2022

நாமளும்_புலம்புவோம்

 #நாமளும்_புலம்புவோம்.

பாத்திரத்தில் இருக்கறதை ஒட்ட வழித்து போடுடா என்றால் பொண்ணு முரைக்கறா..


பைப்பில் இருக்கறதை ஒட்ட விடுப்பா..என்றால்

பெட்ரோல் பம்பு பையன் முரைக்கிறான்..


உன் குத்தமா..என் குத்தமா..( ராஜா சார் மை.வாய்ஸில்)

bulb பலவிதம்

 💡💡💡💡💡💡 bulb பலவிதம்


..series


ஒரு சின்ன zucchini..அதான் ஜுக்கினி....

என்னை தலைகுனிய வைத்ததே..


எப்பவும் போல நேத்திக்கி..

காய்கார ராஜேஸ்வரி அம்மாகிட்ட லிஸ்ட் சொல்லிண்டிருந்தேன்..


Corn,capsicum, coconut..கத்திரி வெண்டை..

கடகடனு சொல்லிண்டு வந்த எனக்கு..

சட்னு மறந்து போச்சு..பொண்ணு சொன்ன காய் பேரு..


என்ன செய்யலாம்?

எப்படி புரிய வைக்கலாம்?..

ஏகத்துக்கு யோசனை..


ஒரு நிமிஷம் அவளைக் கேட்டிருக்கலாமேனு..நீங்க கேட்கறது எனக்கு காதில் விழுகிறது..

ஆனால்..விடிய காலையில இதுக்கா எழுப்பினே..கேள்விக் கணைக்கு பயந்து..


அடையாளம் சொல்ல ஆரம்பிச்சேன்..

அது ஒரு அன்னிய நாட்டு காய் ஆண்ட்டி..

Lettuce இல்ல..

பீர்க்கை மாதிரி இருக்கும்..

ஆனால்..டேஸ்ட் மண்ணு மாதிரி இருக்கும்..


நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள..

அட..ஜுக்கினி தானே..ஒண்ணா ரெண்டா..


போட்டாங்களே ஒரு போடு..


 இதை விட காலையில பல்பு ஒண்ணு கிடைக்குமா?..


வயசானால் மறதி..

ஒத்துக் கொண்டே ஆகணும்..


இன்னொன்று..

வெளிநாட்டு காயை சமைச்சு கொடுத்தால் மட்டும் போதாது..

வாய்க்குள் நுழையுதா..

மண்டைக்குள்ள நிக்குதா அது பேருனு செக் பண்ணிக்கணும்..

ஆமாம்..


பல்பு வாங்கினாலும்..

வீட்டில....புரையேறும் அளவுக்கு சிரிச்சு..

என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டிட்டாங்கப்பா..😄😄😄😄


படிப்பதனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு..🎵🎵🎵🎵

எம்.எஸ் .ராஜேஸ்வரி குரல் எங்கியோ கேட்டது..


அன்புடன்

🤦😄😄😄😄😄😄

Sunday, August 28, 2022

Happy birthday ரோஹிணி ..

 Happy birthday ரோஹிணி ..


"கண்ணுக்குள் இத்தனை பவரா?'

இப்படிநு  பாட மாட்டார்..


"கண்ணு காட்டு போதும்' நு சொல்லிடுவார்..


"கண் டாக்டரே....என் ஸ்பெக்ஸை நேற்றோடு காணவில்லன்னு வருவாங்க இவரைத் தேடி..


"கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்" ..ரோ ..பாட..


"உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே"..என்று கிருஷ்ணா  சார் டூயட் பாடுவார்.


' கண்ணான வருணே..கண்ணான வருணே' ..என பாடும் அன்பான அம்மா ரோ.


"சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா'..

ஆமாங்க..சுட்டிக் காட்டுவாங்க தப்பை எங்கிருந்தாலும்..


இவங்க கண்ல உண்டு..gun..


கண்ணும் கண்ணும் நோக்கியா..உன் பார்வை ..ரவை கொண்ட துப்பாக்கியா..?


கண் கண்ட தெய்வம் இவர்..பலருக்கு..


"உன்னைக் கண் தேடுதேனு..'

இவர் பதிவைத் தேடும் நட்புக் கூட்டம்..


கலங்கும் கண்கள் ..இவர் பதிவால்..

அட..சிரிச்சு சிரிச்சு..கண்ல தண்ணி வரும்ங்க..

காமெடி பதிவில் crown வெச்ச ராணி இவங்க..


கண் எதிரே தோன்றினாள்..

கனி முகத்தை காட்டுவாள்..

வேதனையும்  மாற்றுவாள்..


கண்ணம்மா..கண்ணம்மா..நீ அழகுப் பூஞ்சிலையன்றோ..?


கண் வழியே உள்ளத்தையும் பார்க்கும் உன் லென்ஸ் பார்வைக்கு ..

ஆயிரம் வந்தனம்.


"கண்ணால் பேசும் பெண்ணே..'

கோடி வாழ்த்துக்கள் உன் பிறந்த நாளுக்கு..


#Happy_birthday Rohini Krishna..

Wednesday, August 24, 2022

இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

 இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

"சொன்னபடி கேளுு மக்கர் பண்ணாதே"னு பாடினப்பறமும் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை.

எந்தக் கிக்குக்கும்..கிக்கே ஆகாமல்..மெளனமே பார்வையாய்..

'ஸ்கூட்டி இல்லாத வாழ்வு என்னது.?.என்று ரேவதி ஸ்டைலில் என் மை.வா. பாட..

"நான் அசைந்தால் அசையும் அகில(லா)மெல்லாமும்'னு என் ஸ்கூட்டி எச பாட..

என் சோகத்தை பார்த்த பக்கத்தில் கருமமே கண்ணாய் கார் துடைத்தபடி இருந்த பையன்..'என் கிட்ட மோதாதேனு'  வீரமா ஸ்கூட்டியை உதை உதைனு உதைக்க ஆரம்பிச்சான்.

'உனக்கும் பெப்பே..உங்க அப்பாவுக்கும் பெப்பேனு ' என் 'pep'.. நக்கலாய் ஒரு சிரிப்புடன்.

hato  hato..mein karunga நு நேபாளி செக்யூரிடி வந்து ஒரே கிக்..வண்டி வேதனையில் முனக ஆரம்புச்சது..அடுத்த அடியில்.."பறந்து செல்லவா..பறந்து செல்லவா" நு பாட்டு பாட ஆரம்பிச்சது..


செக்யூரிட்டி ஒரே குஷியில் ' mere paas maa hai' என்று கழுத்தில் போட்ட டாலரை கண்ணில் ஒற்றியபடி..கார் துடைத்த பையனுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

பாவம்..அந்தப் பையன்..கால் மணி நேரம் போராடியதன் பலனை செக்யூரிட்டி தட்டிச் சென்றார். இவன் செக்யூரிட்டி இல்லை..சகலகலா வல்லவன்னு அந்த வழியா போன மாமா..கொஞ்சம் ஐஸ் வெச்சுவிட்டு போனார்.


நன்றி சொல்லவே எனக்கு ஒரு வார்த்தையில்லையேனு சுவர்ணலதா என் மன BGM ல் ..

ஃப்ரண்டுக்காக காத்திருந்த வேளையில்..இப்படி எத்தனை பல்பு வாங்கியிருக்கோம்னு ஒரு 

மண்டையில் flash back ஓடியது..


'பா'ட்டில் மூடியே தாழ் திறவாய'்னு  தட்டிப் பார்த்து..திருகு திருகுனு திருகினப்பறம் கழற்ற வராத மூடி..

வூட்டுக்காரர் 'திறந்திடு சீசே(சா)'நு சொல்றதுக்கு முன்னாடியே..வாயைப் பிளக்க..

அதெல்லாம் ஒரு technique நு சொல்லிண்டே போக  .நானோ..'உன்  பார்வையில் ஓராயிரம்  சயின்ஸ் நான் தெரிஞ்சுப்பேன்..வாழ்வில் தானேனு '  அம்மன் கோயில் கிழக்காலே ராதா மாதிரி ஆனந்தக் கண்ணீருடன் .


flash back வளையம் இன்னொரு முறை சுற்றியது. இப்போ..பெண்ணோட turn.


பெண்ணின் கட்டுரைப் போட்டிக்கு கண் முழிச்சு..நோட்ஸ் எடுத்து ..கருத்து கொப்பளிக்க எழுதி கொடுக்க..அங்கே வந்த தோழி..ஒரே ஒரு quote  சொன்னாள்.

ஸ்கூல் போய்ட்டு வந்த பெண்..Amma..aunty சொன்ன quote...made my day என்று சொல்ல.. heart ல லேசா  crack விழற சத்தம்..

'பெத்த மனசு..பித்தத்திலும் பித்தமடானு..அடுத்த போட்டிக்கு நோட்ஸ் ரெடி செய்ய துவங்கினது..ஞாபகம் வர..


ஹலோ..எந்த உலகத்தில இருக்கே? எத்தனை தடவை ஃபோன் பண்ணியிருக்கேன் பாருனு..என்ன மத்யமருக்கு எழுத ஏதேனும் topic கிடைச்சுடுத்தா.. வா கிளம்பலாம்னு வண்டியை கிளப்ப..

அங்கே ஒரு scene.் என் அபார்மெண்ட்டின் குட்டி வால்..அவன் குட்டி சைக்கிளின் செயின் கழன்று..அவன் கூட இன்னும் சில வாண்டுகள் பிரம்ம பிரயத்தனத்தில் செயினை மாட்ட..

அப்போது அங்கே வந்த அபார்ட்மெண்ட்டின் அண்ணங்கள் ரெண்டு பேர்..அசால்ட்டா மாட்டிக் கொடுத்துவிட்டு போக...'அண்ணா சூப்பர் ண்ணா..' வாழ்த்து மழை


' இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..' என்ற SPB யின் குரல்..எங்கிருந்தோ காதில் வந்து விழுந்தது.

Prelude to diwali

 Prelude to diwali

ஒரு மாசம் முன்பே..

அட்டை டப்பாவில்..

புஸ்வாணமும்..சக்கரமும்..

லக்‌ஷ்மியும்..குருவியும்..

மத்தாப்பும்....ராக்கெட்டும்.

அட்டத்தை அடையும்..


வெயில் இருக்கானு பார்த்து..

வடாம் மாறி பரப்பி...

வரிசையா அடுக்கி வெச்சு..

தம்பியுடன் பாகம் பிரிச்சு..

தப்பக் கூடாது வாக்குனு..

தலையிலடிச்சு..சத்தியம் வாங்கி..

திருட்டுத் தனமா..

திருடு போகலயேனு..

திடம் பண்ணிண்டு..

தீபாவளி சூடுபிடிக்கும்..


முதல் நாள் சாயந்திரமே..

மூக்கை பிடிக்க..

மெனுக்கள் துவங்கும்..

போட்டது போட்டபடி..

கோப்புகளை விட்டுவிட்டு..

அம்மா ஓடி வருவாள்..

ஆபீஸ் வேலை விட்டு..


புகுந்த வீடு பெருமை காக்க

புதுக்கோட்டை வழக்கம்..

பஜ்ஜியும்..பக்கோடாவும்..

பறிமாறியே ஆகனும்..

இரவுச் சாப்பாடு..

இருக்குமே ஒரு லிஸ்ட்.

சேமியா பாயசமும்..

சின்ன வெங்காய சாம்பாரும்..

உருளைக்  கறியோடு..

அப்பளம் பொரியலோடு..

ஆடைத் தயிரோடும்..

கண்ணை சொருகும் தூக்கம்..


மூணு மணி அலாரம்..

முணுமுணுக்க தொடங்கும்...

பல் விளக்கி வருமுன்..

பலகையில் போட்ட கோலம்..

பாத்திர த்தில் நல்லெண்ணெய்..

பாங்காய் மடித்த ..

பாக்கு வெத்தலையுடன்..

கெளரி கல்யாணம் பாடி..

சொட்ட சொட்ட எண்ணெய்..

சீயக்காய் போட்டு நீராடி..

குங்கும மிட்ட துணியுடுத்தி..

பட்டாசு வெடிக்க..

சிட்டாய் பறக்கும் வேளை..

சின்ன கிண்ணியில்..

சுருளக் கிளறிய

மருந்து உருண்டை.

விடாது கருப்பாய் தொடர..

விட்டேன் ஜூட்டென்று..

வாசலுக்கு ஒடிப் போய்..

வெடிக்க துவக்கம்..

தம்பி..தைர்யசாலி..

நீள ஊதுவத்தி..

ஊதி ஊதி..

ஓடிப் போய் வைப்பான்..

சரமும்..யானையும்..

அட்டகாச atom bomb ம்..


அடுத்த வேலை..

பக்கத்து வீட்டுக்கெல்லாம்

பக்‌ஷண பரிமாறல்..

அங்கொரு பாட்டி உண்டு..

பத்து ரூவாய் தருவாள்..

பக்கத்து கடைக்குப் போய்..

கேப்பு வாங்கி வந்து.

சுத்தியலை வெச்சு..

ஒவ்வொண்ணா..அடிச்சு..

மிஞ்சிய ஒத்தையும் .

ஊசி வெடியும் 

மனசு வராமல்..

காலி பண்ணி. 

கடைசியில்..

சுருளும் பாம்புடன்..

குப்பையயும் சேர்த்து கொளுத்தி..

குட்பை...சொல்லி விட்டு..

குட்டித் தூக்கம் போட்டு..

புதுப்படம் ஒன்னு பார்த்து..

புதுத் துணிகள் கதை பேசி..

வந்திருந்த சித்தி சித்தப்பா..

தம்பியுடன் கிளம்பியதும்..

வெறிச்சோடிப் போகுமே..

வீடும் மனமும்..

ஆண்டுகள் போனாலும்..

அசை போடும் எண்ணங்கள்..

என்றென்றும்..சுகமே..சுகமே

மூழ்காத ship..ஏ friendship aa..

 மூழ்காத ship..ஏ friendship aa..

எத்தன தடவ சொல்றது இந்த ராஜியோட சேர்ந்து மழையில கும்மாளம் அடிக்காதேனு....லொக்கு லொக்குனு இரும்பிண்டு..தொண்டை வலி வந்து அவளா கஷ்டப்படறா..இதே பொழப்பா போச்சு உனக்கு..

அம்மா ,சித்திகளின் திட்டுகளின் மழையில்..

எப்ப போனாலும் அந்த டாக்டர் 50 ரூபாய் வாங்கிண்டு அதே pendits எழுதி கொடுக்கப்போறார்...வீட்டிலிருந்த tablet போட்டுண்டு..school க்கு ஓடி..ஒரு பாவ மூஞ்சி வெச்சுண்டு..friends எல்லாரும்..miss miss இவளுக்கு ரொம்ப தொண்டை வலினு சொல்ல..ஒரு சோக கீதம் தான்..

இப்படியே..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண மாய்..என் தொண்டை அடைபட..ஒரு level க்கு மேல..காலம்பற எழுந்து good morning சொல்லலாம்னா..காத்து மட்டுமே வரும்..எல்லாம் உப்பு தண்ணி போடு கொப்பளிச்சா.. சரியாகிடும்..காப்பி கிடைக்காது.. உப்பு தண்ணி தான்....அம்மா அப்போ..finance officer....எல்லா மெடிகல் காலேஜ் professor paybill table ல வந்து குவியும்.. கண்ணு ..கண்ணுனு..ஒரு கடைநிலை ஊழியர்..பாப்பாவுக்கு எப்பபார்த்தாலும் கஷ்டப்படுதே..இங்கின் இருக்கற நல்ல specialist கிட்ட காட்டலாமேனு வழி சொல்ல..

 ENT department head..தலைமையில் சிகிச்சை ஆரம்பம்..

நீங்க MMC வந்துடுங்கோ ..அங்கே எல்லா check up பண்ணிடலாம்நு சொல்லிட்டு..தலை சொறிந்தவாறே..madam..arrears வரணும்   ..கொஞ்சம் ஹெல்ப் பண்னுங்கோ..

ஐயோ..சாமி..எங்கே வந்து மாட்டிண்டோம்னு நானும் அம்மாவும் விழிக்க..

நான் ENT ward நுழஞ்சதும்...ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்கார வெச்சுடுவா.. திடீர்னு..திபுதிபுனு..ஒரு பத்து பதினஞ்சு வெள்ளை க் கோட்டு போட்டுண்டு students ...எல்லாரும் என்ன சுத்தி நிப்பா..டாக்டர்..வரார்..டாக்டர் வரார்..ஆஜானுபாவான டாக்டர்..என்னோட வாயை ஒரு clip போட்டு திறந்து வெச்சு..இது ஒரு serious case of tonsillitis.. கேள்வி க் கணைகளை தொடுக்க ஆரம்பிப்பார்..நீயெல்லாம் எப்படி முன்னேறப் போற..திட்டு வேற..(வசூல் ராஜா.. அந்த கால ஸ்டைல்)...doctor..doctor..என் வாய் வலிக்கறது....சொல்ல முடியாமல்..திரு திரு முழியில் நான்..என்னைப் பார்த்ததும்..பல்லை நற நறனு கடிச்சு..எனக்கு சாபம் கொடுக்கும்..students . 

அந்த நாளும் வந்தது..ஆபரேஷன் தான்..முடிவாச்சு..ராஜீயும் கூட கண்கலங்க...மயக்க மருந்து கொடுத்தாச்சு..உலகம் கொஞ்சம் கொஞ்சமாக..

நழுவியது..எல்லார்க்கும் பத்து நிமிஷத்தில நடக்கற விஷயம்..நமக்கு ஒரு மணி நேரம் ஆச்சு..ரொம்ப சோர்ந்து போன டாக்டர்..'its a medical miracle'...என்னொட தொண்டையிலிருந்த எடுத்த சதை போல..இதுவரை யாருக்குமே..இருந்ததில்லையாம்..

அப்பறம் என்ன..இது வரை ice cream கண்ணால கூட பார்க்கக் கூடாதுநு மெரட்டிய அப்பா...டப்பா டப்பாவா.ice cream வாங்கி வர..ஐயோ...எறியுது எறியுது..ice cream வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்னு..நான் அழ....

சொட்டு தண்ணீர் பட்டாலே சொர்ருனு எறியற தொண்டையில...ஒரு கரண்டி உப்பை போட்டு..மூணு வேளையும்.. கொப்பளிச்சு..எனக்காக வாங்கிண்டு வந்த குலாப் ஜாமுன்..எல்லாரும் ரசிச்சு ருசிக்க...

national channel 1.30 மணி news வாசிக்கறாப்போல..சைகையில் காரியம் நடக்க..

ஒரு பத்து நாள்..பண்டிகை போல எல்லாரும் ஒரே தாங்கல்..

பதினோறாவது நாள்...எப்பவும் போல.. திறந்தா ..காத்து தானே வரப்போறதுனு பழக்க தோஷத்தில் ..நினக்க..ஆஹா..என் குரல் வெளியே வர...

ஓ..என் குரலா....ராஜீ....ராஜீ... மூணாவது மாடியில் குடியிருந்த அவள்..பாரதிராஜா தேவதைகள் style இல் slow motion ல ஓடி வர..

இனிமேல் canteen la ice cream சாப்பிடலாம் ஜாலியா மழையில நனையலாம்..அவள் சொல்ல.

அங்கே வந்து ஆடி மாசம் அம்மன் போல என் சித்தி வந்து பிரசன்னமாக..

எத்தன தடவை சொல்றது..இவ கூட சேராதேனு..அதே பல்லவி..


இன்றுவரை உறுதியாய்..

தொடர்கிறது எங்கள் நட்பு..

Monday, August 22, 2022

கண்ணனின் கருணை

 கண்ணனின் கருணை


தட்டைக்கு மாவு பிசைந்து பிள்ளையாரும் பிடிச்சு வெச்சு..


கண்ணா..நாலே நாலு தட்டை..ரவுண்ட் ரவுண்டா வரணும்ப்பா..ஃபோட்டோ போடாட்டி சாமி குத்தமாகிடும்னு நான் வேண்டிக்க..


நாலு என்ன நாற்பதும் நல்லா வரும்ணு அருள்புரிந்த..கண்ணா..really you are so chweetu..


நாம வேலை செய்யணும்னுனா பக்கத்தில் ராஜா சாரோ ரஹ்மானோ..கண்டிப்பா வேணும்..


டப்பா ரொம்பி நான் ஃபோட்டோ எடுக்கும்போது..

YouTube ல் பாடிக் கொண்டிருந்த பாடல்..

#மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..

ஆஹா..சந்தோஷம் இரட்டிப்பு😀


கொசுறு_தந்த_கொடை_வள்ளல்

 #..கொசுறு_தந்த_கொடை_வள்ளல்




கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தி பின்னோக்கி போறேன்..


போன வருஷம்


பிள்ளையாரை வாங்கிக் கொண்டு பெருமிதத்தோட வீட்டுக்குள் நுழைஞ்சேன்..


என் extra 😃 சந்தோஷத்துக்கு காரணம்..

பிள்ளையார் விற்றவர் கொடுத்த கொசுறு தான்...


Guess what..


#கொஞ்சம்_களிமண் 😃


"ஏம்மா...கொத்தமல்லி கருவேப்பிலை தான் கொசுறு வாங்குவே..இப்போ வேற லெவலுக்கு போய்ட்டியா? ..' 

பெண் சொல்ல..


" களிமண் godown ..மண்டையில் வெச்சுண்டு....கொசுறு வாங்கிண்டு வந்திருக்கா பாருடா அம்மானு' 

வூட்டுக்காரார் கண் ஜாடையில் சொல்ல..


Me ..no tension.. As usual..ஊ..லல..லா..பாடிக் கொண்டு..

உள்ளே வைத்தேன்..


இந்த லாக் டவுனில்....அந்தக் கொசுறு தான்..கைக்கு அடக்கமா ஒரு cute pillaiyar ஆனார்


ஆனால்..அதை எடுத்து..பிள்ளையார் செய்ய ஆரம்பிக்கும் போது..

ஏனோ..அந்த வியாபாரி கண் முன்னால் வந்தார்..

இந்த வருஷம் என்ன வியாபாரம் செய்து கொண்டிருக்கிறாரோ தெரியாது..

முதல் பிரார்த்தனை அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அனுப்பிட்டேன்..


#குடை


Glitter craft sheet வெட்டி..grand ஆ ஒரு குடை..


விக்னம் நீக்க..விரைந்து வாப்பா🙏

Thursday, August 11, 2022

தாயின்_மணிக்கொடி_பாரீர்

 



#செவ்வாய்_கவிதை


#தாயின்_மணிக்கொடி_பாரீர்



Thanks sankari CA 


தறியிலே நெய்த கொடி

பறையரை வென்று

நிலைநாட்டிய கொடி

நொடியில் வந்ததல்ல சுதந்திரமென்று...

நித்தமும் உணர்த்தும் எம் கொடி


சிறை விடுத்து..

சிறகடித்து ..சீறிப் பறக்க

தடை உடைத்து

தரணி வெல்ல..

தாரகம் சொல்லும் எம் கொடி.



அன்பில் ..

ஆன்மீக த்தில்

இயலில்

இசையில்

உழைப்பில்

ஊக்கத்தில்

எந்திரமயமாக்கலில்.

ஏவுகணை சோதனையில்

ஐக்கிய சபையில்..

ஒருமைப்பாட்டில்

ஓங்கும் புகழில்

ஒளடத ஆராய்ச்சியில்


கொடிகட்டி பறக்குதே..

கொடி கட்டிப் பறக்குதே..இந்தியக்

குடிமகனின் பெருமை.



தலைமைப் பொறுப்புகள் பல

தானாய் வந்து சேருதே..

இணையில்லை இந்தியர்க்கென்றே..

அண்டை தேசமெலாம் ..வியக்குதே


கடமை உணர்ந்த மக்களும்

கைக் கோர்த்த.. நாள் வந்ததே..

தூய்மை நாட்டை உருவாக்கும்

திண்ணமும் பிறந்ததே..


வீழும் இந்த தேசமென்று...

பாழாய்ப் போனோர்..

கண்ட கனவு..

பாதாளத்தில் வீழ்ந்ததே..


பாரத மணிக் கொடியும்

பட்டொளி வீசிப் பறக்குதே..

எட்டுத் திக்கும் எம் புகழும்

வெற்றி முரசும் கொட்டுதே


வீடு தோறும் ..தேசியக் கொடி

நாடெங்கும் ஒற்றுமையின் ஒலி..

சங்க நாதம் ஒலிக்குதே..

இதயங்கள் இணையுதே..



நிமிர்ந்த நெஞ்சுடன்

நேர்கொண்ட பார்வையுடன்

தாயின் மணிக் கொடி வணங்குவோம்..

தரணியில்..நமக்கு

ஈடில்லை என உணர்த்துவோம்.






















 

Friday, August 5, 2022

ஒரு நாள்

 மொபைலில் வந்து விழுந்த Watsapp msg.. .,'our day out tomorrow . be ready'.. oh..சொன்னபடியே..

காலம்பர எழுந்து வந்து பார்த்தா..'Paa ' ல வர அமிதாப் பச்சன் மாதிரி...ready aa..எங்கே போகணும்..மார்க்கெட் தானே..நானும் வரேன்..ஒவ்வொரு இடமா நின்னு நின்னு காய்,பழமெல்லாம் நான் வாங்க..ஒரே கடையில வாங்காம..இது எதுக்கு இப்படி அலையறே..கொடு என்கிட்ட பையை..நான் தூக்கிண்டு வரேன்..ஆஹா..என்ன ஒரு கரிசனம்..எல்லாம் வாங்கிட்டு கடைசில கொத்தமல்லி கொசுறு கேட்ட நேரம்...விட்ட ஒரு முரையில்..(சரி..சரி..நாளைக்கு கொசுறு வாங்கிக்கலாம்..நல்ல மூட் ஏன் கெடுக்கணும்)..

வீடு வந்ததும் கூட மாட ஒரே உதவி..திக்கு முக்காடிட்டேன்..என்ன சமைக்கட்டும்..என்று கேட்க..அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..இன்னிக்கு..வெளிய சாப்பிட்டுக்கலாம்..அந்த pink saree கட்டிக்கறயா..மந்திரத்தில் கட்டுண்டது போல..துரித கதி்யில்...uber book பண்ணியாச்சா...நான் கேட்டு முடிப்பதற்க்குள்..இல்ல இல்ல..இன்னிக்கு உனக்கு பிடிச்ச மாதிரி பஸ்லயே போலாம்..ஐயோ..நிசமாவா...பஸ் பயணம் எனக்கு அலாதிப் பிரியம்..நிறைய மனிதர்கள்..உயரத்திலேர்ந்து எல்லாரையும் பார்க்கலாம்...சீட்டில் அமர்ந்ததும்...முன் சீட் பெண் கட்டியிருந்த புடவையின் கலர் கண்ணை க் கவர...வாய் திறந்து சொல்ல எத்தனித்த வேளை...என் மனசப் படிச்சாப்போல..வீட்டுக்குப் போய் பேசிக்கலாமே...ஒகே..ஓகே..

பஸ்ஸை விட்டிறங்கி ஓட்டல் நுழைந்தோம்..எனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து...பாந்தமாய் எனக்கு அந்த ஹண்டி லேர்ந்து பரிமாறி..ஐயோ..சாமி நான் எந்த உலகத்தில இருக்கேன்...பில்லுக்கு காசு கொடுத்து கிளம்பும்வேளை..கால் பாட்டில் aquafina  என்னை விட்டுட்டு போறியேநு பார்க்க..லபக்கென்று எடுக்க முனைந்த என் கையை...டபக்கென்று பிடித்து.. வெச்சுடு அங்கேயே..வா போலாம்..(இது cheap ஓ...)

வெளியே வந்த நேரம் ,மெல்ல சொன்னேன்..எதுத்த நகை கடையில ஒரு சின்ன விளக்கு வாங்கனும்னு..அவ்ளோதானே...selection over..கையில் கிடைச்ச பில்லை தூக்கிண்டு manager கிட்ட போய் ...என் அம்மா..பாட்டி..கொள்ளு பாட்டியெல்லாம்..உங்க கடையில தான் வாங்கிண்டிருந்தா..நாங்கள்ளாம்..very old customers..சேதாரம் கொஞ்சம் கம்மி பண்னுங்கோனு சொல்ல..முன்னேற்பாட்டின்படி..அவர்  100 ரூபாய் கம்மி பண்ண..இது தேவையானு முரைப்பை தள்ளிவிட்டு..போலாமா..என்ற கேள்விக்கு.. ஐயோ ஒரு நிமிஷம்....பில்லை காம்பிச்சு..காலண்டர் வாங்கனும்..shelfக்கு பேப்பர் போடணும்..இவா காலண்டர் தான் ரொம்ப நாள் நன்னா இருக்கும்..அப்படியே குட்டி மணிபர்ஸ் வாங்கணும்...நான் அடுக்கிக் கொண்டே போக..இப்பொ போலாமா..(சரி சரி..நாளைக்கு இந்த பக்கம் வரும்போது வாங்கிக்கலாம்..)....காலாற கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சோம்...எதிர்க்க பார்த்த சக ஊழியரோடு பேச..அவர்..உங்களைப் பத்தி பேசாத நாளில்லை..உச்சி குளிர்ந்து..ஓ..அப்படியா..அடக்கிய ஆனந்தத்துடன்..

ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்...அடுக்களையில் நுழைந்த எனக்கு மீண்டும் ஒரு Watsapp msg..' how was the day out with me maa...?..

என்ன சொல்ல..precious and  treasurable moments da..பதில் தந்தேன்....

இன்னும் blue tick வரவில்லை..என் பதில் கூட பார்க்க நேரமில்லாமல்...மீண்டும் விட்ட இடத்தில் தொடர work from home..பாவம்..இந்த காலத்து குழந்தைகள்..

Happy birthday geethmala

 Happy birthday Geethmala Raghavan 


அஞ்சு ஆகஸ்ட்டில் பிறந்த

அஞ்சாத (பெண்) சிங்கம்..🦁


பஞ்சாய்ப் பறக்குமே கவலையெலாம்.

பதிவு இவளது படிக்கையிலே...


கஞ்சத் தனம் இல்லாது..

காமெடி அள்ளித் தருவாள்..


வஞ்சனை இல்லாது ..

வெடிச் சிரிப்புக்கு கியாரண்டி.


அஞ்சாத இவளும் ..அஞ்சும் ஒரு 

ஆள் உண்டு.

அஞ்சனா என்ற பெயர் கொண்டு..இவளை

மிஞ்சும் பெண்ணுண்டு..


வெங்கலக் குரலுண்டு..

விவேகமான பேச்சுண்டு..

வட்டமடிக்கும் நட்புண்டு..எதிலும்

விடா முயற்சி உண்டு..


வஞ்சி இவளைப் பாடவே..

வார்த்தைகள் வரிசையில் நிற்க..

வளமும் நலமும் நீ பெற

வாழ்த்துக்கள் பல சொல்லிடுவேனே..💐🎊🎉



#கீத்மாலா..


பழமொழியா..

பாசுரமா?


பாகவதமா?

பகவான் நாமமா?


படபட பேச்சா?

பட்டாசுப் பதிவா?


பட்டு மாமியா?

படா ஷோக்கா?


பாசமுள்ள அக்காவா?

பழகும் இனிய நட்பா?


பக்குவமான தயிர் வடையா?

பேச்சில் என்றும் பலாச்சுவையா?


பெண்ணுடன் எப்போதும் போட்டியா?

அடிப்பது எப்போதும் லூட்டியா?


பதிவைப் படித்தால் போதும்...மனக்

கவலையும் பறந்து ஓடும்..


நகைச்சுவை மன்னி  இவளுக்கு..

நகையென்ன தருவேன் நானும்..


ஸ்கூட்டியில் சுற்றி எங்கும்..தன்

ட்யூட்டியை செய்து முடிப்பாள்..


கேக்கும் ஹல்வாவும் ..

கேட்காமலேயே வீட்டில் கிடைக்க..


கொடுப்பேனே தோழிக்கு

கோர்த்த மாலையில் 💐 ஒன்று..

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி..


Happy birthday Geethmala Raghavan💐🎂🍰🍭🍫🍬🍪🍩🍨🍧🍦🍡😃🍡


Happy birthday Geethmala Raghavan


geethu..

பேரைக் கேட்டாலே பிறக்குமே enththu.

பேச்செல்லாம் படா கெத்து


இவ போஸ்ட்டுன்னா எனக்கு பித்து

எங்க நட்பு ஒரு பூங்கொத்து.


இவ செய்யும் தயிர்வடை மெத்து

எழுதித் தருவேனே என்் சொத்து.


சிரிக்க வைக்கும் கீத்து..நீங்க

சிறப்பாய் வாழ என் வாழ்த்து.



Wednesday, July 27, 2022

Happy birthday sankaran mama

 Happy birthday Gopalan Sankaran  mama..


சங்கரன் மாமா..

வார்த்தைக்கு வார்த்தை தெறிக்கும் காமெடி..

ஜானகி மாமியின் சூப்பர் ஜோடி..

சரியான ஜாடிக்கேத்த மூடி..


இவர் இருக்குமிடம் அதிரும் சிரிப்பு சரவெடி.

நடிப்பிலே ..நாட்டுவார் கொடி..

உதவுவார் எல்லாருக்கும் ஓடி ஓடி..


பெண்களுக்கு இவர் சூப்பர் டாடி..

இருக்க மாட்டார் ..moody..


அப்பப்போ பிடிப்பார் கரண்டி..

அவர் சமையலுக்கு மாமி கியாரண்டி .


இவரைச் சுத்தி எப்பவும் நண்பர்கள் கோஷ்டி..

கடி ஜோக் சொல்லி அடிப்பாரே லூட்டி..


இவருக்கில்லை போட்டி..

இவர் ஒரு சகலகலா கில்லாடி..


இவர் இருப்பது பெங்களூரு சிட்டி..

இருந்தும் செல்ல முடியவில்லை பறந்தோடி..


வாழ்த்துக்கள் இன்று குவிந்திருக்கும் கோடி..

என் வாழ்த்தும் சேரட்டும் இவரை நாடி..


Happy birthday mama


Happy birthday gopalan sankaran mama.


சங்கரன் மாமானு சொன்னதுமே..

சரளமாய் அன்புடன் பழகும் முகம் கண்முன் வரும்..


சரவெடியாய் 

சிரிப்பு வெடி வெடிக்கும் ..அவர் இருக்கும் இடம்


Sankaran..

என் நட்பு வட்டத்தில்..

பளிச்சிடும் 'kiran"..


இவர் பேச்சிலே தெறிக்கும் fun

இவருக்கோ இருக்கு ... பல. .."fan"..


வாங்கோ மாமா..போடலாம் ஒரு மீட்னு சொன்னால் போதும்..

கிலோ மீட்டர் பல கடந்து ( பெங்களூரு traffic அப்படி)..

கிலோ கிலோவாக அன்பு சுமந்து ..மாமியுடன் வந்து ..மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்.


உங்க special day இன்று.

என் அன்பான நமஸ்காரங்கள் மாமா.


உட்கார்ந்திருப்பது எங்க வீட்டு சோஃபா..


ஆனால்..எப்போதுமே எங்க எல்லாரின் மனசிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்..

Sankaran mama..very sweet and simple mama








Friday, July 22, 2022

திங்களும் வந்தது..

 திங்களும் வந்தது..


Tiffin box எடுத்து வெச்சுட்டு 

"#share பண்ணிக்கோடா உன் ஃப்ரண்ட்ஸோட..".. என்று பெண்ணிடம் நான் சொல்ல..


யார் பொண்ணு அவ?


போட்டாளே ஒரு போடு..


"Fb லயா..Instagram ஆ.. இல்ல watsapp லயா?


Share என்று சொன்னதும்..

செயலிகள் தான் ஞாபகம் வருதோ?


ஆத்ம நண்பர்கள்

"App" வழி வந்தவர்கள்

Appreaciate பண்ணுவாங்க..

Applause 👋 தருவாங்க.


Correct தானே?😀


திங்கள் கிழமை

Thought ம் வந்தது..

தோழமைகள் இங்கிருக்க

தொய்வு என்பதேது வாழ்க்கையில்..?


Start muzic நட்பூஸ்..


அன்புடன்..