Monday, January 30, 2023

எண்ணங்கள்

 எண்ணங்கள்


சைக்கிளில் போற மாதிரி

செயினாக இழுவை எண்ணங்க்ள்

ஸ்கூட்டியில் போற மாதிரி

பிரேக் போடும் எண்ணங்கள்

காரில் போற மாதிரி

கியர் போடும் எண்ணங்கள்

ர்யிலில் போற மாதிரி

தடக் தடக் எண்ணங்கள்

பஸ்ஸில் போற மாதிரி

விசிலக்கும் எண்ணங்கள்

விண்ணில் பறக்கிற மாதிரி

வினோத எண்ணங்கள்..


இந்த போக்குவரத்து நெரிசல்

இருப்பதாலே என்றும்..

இனிக்குதிங்கே வாழ்க்கையே

இனியும் சலிக்காதீர்..

என்னதான் சிந்தனையோ...இந்த

சின்ன மூளைக்கென்று...


முடுக்கி விடாமல் போனால்..

முடங்கிப் போவோமே நாமும்.

Keep calm

 Keep calm..its a weekend ம்மா..


பொண்ணு சொன்னாலும்..


அடப் போடா ..

எத்தனை #काम ..

Queue ல நிக்குது..

 

Calm..calm.calm.நு ஒரு பக்கம்..

काम..काम..काम நு வேலைகள் இன்னொரு பக்கம்..


இந்த काम களை முடிச்சால் அப்புறம் வந்து

 .com களில் மூழ்கணும்..


இப்படி நான் சொல்லிக் கொண்டே போக..


Calm ஆ இருக்கற என்னை..

பேசிப் பேசியே காளியாக்கிடாதே ம்மானு..சொல்லலை..😄😄😄

ஒரே ஒரு லுக்கு மட்டும் விட்டுட்டு போய்ட்டா..😄😄😄😄


என்ன டிசைனோ..போங்க😄😄😄

Wednesday, January 11, 2023

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

#நாடு_புகழும்_பரிசினால் நன்றாகச்

#சூடகமே_தோள்வளையே_தோடே #செவிப்பூவே

#பாடகமே_என்றனைய #பல்கலனும்_யாம் #அணிவோம

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


ஆண்டாள் கேட்டாள் அன்று..

அவளடியார் நாமும் கேட்போம் இன்று😃😃😃😃


ஆனால் ஒண்ணு..


எத்தனை பொன்னகை அணிந்தாலும்..

புன்னகை ஒன்று இருந்தால்..

🌏 புவியில் இன்பம் தானே😃😃😃😃


எதுக்கும் கேட்டு வைப்போம்னு நாம் இருக்க😃😃


Status போட்ட பின் உன் stand ஐ மாற்றாதேனு ..வூட்டுக்காரர் சொல்ல..😃😃😃😃


என்ன செய்யலாம்..🤔🤔


பொன்னோடு..புன்னகையும்..

எல்லார் வாழ்விலும் நிரம்பி வழிய

வாழ்த்துக்கள்..💎💎💎💎💎


அன்புடன்😃😃


Saturday, January 7, 2023

முயல்(ற்)சி

 Aahaa..

புள்ளிகள் நான் வைக்க..

துள்ளி ஓடி வந்ததே

வெள்ளை வெளேர் முயல் குட்டிகள்..

துணைக்கு நானும் வரேன்னு 

Teady ம் சொல்ல..

Carrot party ஒன்று..

கலகலப்பாய் நடந்தது...


கலர் கொடேன் எனக்கென்று..

கள்ள முயல் கண்ணைக் கசக்க..


உன் originality போய்விடுமே..

போட்ட சாயம் வெளுத்து போகும்..

உன் புன்னகையும் கூட போகும்..

கஷ்டமெல்லாம் உனக்கெதற்கு..

உன் கலரே..உனக்கு சிறப்பு...


சரிதானே நட்பூஸ்😀😀😀


அவங்க எல்லாம் மீட் பண்றாங்க..ம்ம்ம்ம்🤔😀😀😀

அன்புடன்😀😀


Find and feel the light inside U..

 Find and feel the light inside U..



எனக்கு இந்த quote ரொம்ப பிடிக்கும்.


இந்த light கிடைச்சால்..எப்படி light ஆகிடுவோம் இல்ல?..


Finding is very difficult என்று நினைக்கும்போது..


அதை..

Feel பண்ணுவது..very very difficult..


ஆனால்... இரண்டும் கிட்டினால்..


கிடைப்பது வேற லெவல் அமைதி..


நான் தேடிக் கொண்டே இருக்கேன்னு நினைக்கும் போது..சில சமயம் உணர்கிறேன்..


இன்னும் பல பாதைகள் கடக்கணும்..

பதை பதைப்பு அடங்கணும்..

அவன் பாதம் ஒன்றே கதினு மனசு நினைக்கணும்..🙏🙏


அப்போ நீங்க?

Friday, January 6, 2023

இன்னிக்கு வேஷ்டி தினமாமே😀😀

 இன்னிக்கு வேஷ்டி தினமாமே😀😀



அதான் புடவையும் பூவும் வெச்சு கோரிக்கை..


திருப்பித் திருப்பி அதே வேஷ்டி தானே..

அதனால...ல..ல..


நம்பள்க்கி ஒகே ஒக்க புடவை..😀😀😀😀


யாராவது bed sheet நு சொன்னீங்கோ😀😀


கொஞ்ச நாளில் இப்படியும்.வேஷ்டி வரலாம்..


ராமராஜுக்கே வெளிச்சம்😀😀

ரயில்த்துவம்

 Train அடுத்த station க்கு போக வேகமெடுத்தாச்சு..


ஒவ்வொரு station கடக்க கடக்கத்தான் destination reach பண்ண முடியும்.


அதுபோலத்தானே வாழ்க்கையும்..


#ரயில்த்துவம்



சில சமயம் slow , சில சமயம் fast..

நடுவுல derail ஆகலாம்..

விபத்துக்கள் சந்திக்கலாம்..


தட்டி விட்டுட்டு ஓடத்தான்..

கடைசியா...நாம் போய் அடைய வேண்டிய இடம் தென்படும்.

பின்னாடி  திரும்பிப் பார்த்து..

கடந்தவைகளை அசை போடுவோம்..

கசப்புகளை மறப்போம்..

களிப்புகளை மனதில் இருத்துவோம்..


பயணங்கள் தொடரும்....


வாங்க வாங்கனு வரவேற்போம் 2023.


Advance happy new year to all my friends

Welcome 2023.

 Dhol baje..Dhol baje..


Welcome 2023.



மத்தளம் முழங்க..

மகிழ்ச்சி பரப்ப..

வா..புது வருடமே..வா..


வரவேற்கிறோம்..

தோரணம் கட்டி..


Happy new year friends

வைகுண்ட ஏகாதசி

 அடடே..நான் வரதுக்குள்ள..இத்தனை delivery boys வந்து பழம் கொடுத்துட்டு போய்ட்டாங்களே..🤔🤔


அட ஆமாம்..இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி....


என்ன இருந்தாலும் ..என் கடை பழம் தான் சூப்பர் டேஸ்ட் ...அகிலாமாவுக்கு தெரியும்.🍓🍒🍎🍉🍑


பெருமாளை தரிசனம் பண்ணிட்டு

பிரசாதம் வாங்கிண்டு..

பளபளனு ..

பழக்கோலம் போட்டாச்சு..🍍🍌🍋🍈🍏


அவசரக் கோலம்

 அவசரத்தில பண்ணும் ரசம் ..

அமோகமா அமைஞ்சுடற மாதிரி..


அவசரக் கோலம் அள்ளித் தெளித்த போது கூட..


அகிலா..உன்னைக் கைவிட மாட்டேன்னு ...


அழகா..( நானே சொல்லிக்கறேன்) வந்த கோலமே...


இந்தக் கலரில் ஒரு புடவை உன்கிட்ட இல்லையேனு ...

கலர் கொடுத்த பின் கண் திறக்க வைத்த கோலமே..😄😄


இன்னிக்கு ஏனோ தானோ தான்னு நினைக்கும் போது..


Enjoy ..enjoy நு நம் mood மாறும் கணம் இருக்கே..


அங்க தான் இருக்கான் ...அவன்🙏🙏🙏


Take what you need..

 Take what you need..


இப்படி யாராவது சொன்னால்...???

ஒரே confusion தான். 

எதை எடுப்பது எதை விடுப்பதுனு போட்டியில்..

சில சமயம்..

நீ தருவதில் நான் தேடுவது இல்லைனு..நகர்ந்துடறோம்..


அப்புறமா .அடடா..என்ன முட்டாள்தனம்னு நம்ம மை.வாய்ஸ் திட்றதை வாங்கிப்போம்.


கடவுள் இப்படித்தான் நமக்கு..

எக்கச்சக்கமா offer பண்றார்..


நாம்..ரொம்ப அதி புத்திசாலியா..வேறு எதையோ எடுத்துண்டு..திண்டாடறோம்.

இந்த புதுவருஷத்திலேர்ந்து..

அவன் தருவதை ..தர நினைப்பதை..


லாவகமாகப் பிடித்துக் கொண்டால்..💪


பீடு நடை போட்டு..

அவன் பாதம் அடையலாம்.

சரிதானே😄😄😄


What a coincidence..

 What a coincidence..

இன்னிக்கு காலம்பற..

Daily calendar கிழிச்சால்..


என் ராசிக்கு..'களிப்பு'னு..

போட்டிருக்கு..😄😄😄


ஆமாம்..ஆமாம்..

'களி'ப்பேதான்..


நடராஜனும்..சத்திய நாராயணனும்..

கைக்கோர்த்து..என் இல்லம் வரும் நாள்..🥁🥁


களியும் ..கேஸரியும் இல்லாமலா..?


வரவேற்பு அவர்களுக்கு..

வண்ணக் கோலத்துடன் .என்

எண்ணத்தில் தூய்மை நிரப்ப..

எழுந்தருள்வீரே....🙏🙏🙏


கடைசியா..

இந்த கலர் புடவை..எனக்கு ரொம்ப பிடிக்கும்..😄😄😄


We all grow at different pace

 Don't panic


We all grow at different pace



நமக்கு நாமே இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டால்..🤔🤔


அப்புறம் என்ன?


Life jingalala தான்.😄😄😄🥁🎻🪘


Every minute we grow..we fall..get up again ..thats the awesome way to live..

சரிதானே💪💪💪💪😄😄

Thursday, December 29, 2022

Door)Mat finish..😃😃😃🌟⭐

 (Door)Mat finish..😃😃😃🌟⭐


போட்டிருந்தேன் வேறொரு திட்டம்..

பொழுதைப் புதிதாக்க அழகாய் ஒரு பூக்கோலம்..


வாசலில் இருந்த மிதியடியோ..

வாட்டமாய் எனை பார்க்க..

வந்ததே ஒரு எண்ணம்..

வா..வா..என்றேன்..

வண்ணத்தை அதில் நுழைத்தேன்..

வாவ்..வாவ்..என சொல்ல வைத்தது..

வஞ்சி நான் போட்ட கோலம்..

(நாமளே சொல்லிப்போம்😃😃💪)..


மிதி தாங்கும்   உன் விதியை..

மாற்றினேன் இன்று ஒரு நாள் மட்டும்..


மகிழ்ந்திருப்பாய் நீயும்..

மலர்ந்த புது திங்கள் நாளில்..


Let's bring a broad smile in everyone and everything around us..


Mogambo kush hua..இல்ல இல்ல..

எங்க வீட்டு door mat ம் இன்று மகிழ்ச்சியில்😃😃


Border..ம்ம்ம்ம் நிச்சயம் உண்டு😃😃


அன்புடன்😃😃


என் உருவைக் கொஞ்சம் மாற்றி

 என்னைக் கொஞ்சம் மாற்றி..

என் உருவைக் கொஞ்சம் மாற்றி..

----------------------------------------------------

நேற்றும் இன்றும் வேறு..🎵🎵🎵🎵🎶🎼


இந்தப் பாட்டை .நான் பாடலை..எங்க வீட்டு அப்பம் பாடியதே..🤦


ஆசையாகச் செய்தேன்..

ஆனைமுகனுக்கு அப்பம்..

அடுப்பிலிருந்து எடுத்துக் கொடுக்க..

Awesome awesome என்றார்கள்..


அடுத்த நாள் கேட்க..

அப்புறம் சாப்பிடறேனே..என்று

அங்கிருந்து நகர்ந்தார்கள்..

வேற யாரு..நம்ம வீட்டு மக்கள் தான்..


ஐஸ் பெட்டிக்குள் வைத்தேன்..

அக்கடானு உள்ளே இருனு..

'அவனில்'(oven) சுட வைத்ததில்..

ஆளுக்கு அரை உள்ளே போச்சு..


நாலே நாலு..மீந்து போக..

ஸேல் இதை எப்படி செய்வேன்னு திணற.


உள்ளே பிரகாசித்தது..

ஒளி தரும் பல்பு ஒண்ணு...💡💡💡💡💡


உதிர்த்தேன் அப்பத்தை..

ஓட விட்டேன் மிக்ஸியில்..

வெல்லமும் ஏலமும் சேர்த்து பொடி செய்ய..


நெய்யில் முந்திரி வறுத்து..

நெய்யப்ப பொடியை..

நோகாமல் சேர்த்தேன்..

நொடியில் ஒரு டிஷ் ரெடி..


அவலப்பம்..அவலப்பம்..

ஏலம் போடாமலேயே..

எல்லாமே காலி..

இன்னும் இல்லையானு கேள்வி😄😄😄😄😄


இது எப்படி இருக்கு..


யாரு கிட்ட???💪💪💪


என்_சமையலறை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#என்_சமையலறை


Shankar sir ..நிறைய டிப்ஸ் கேட்டிருந்தார் இந்த டாபிக்கில்.


அதெல்லாம்..எனக்கு தெரியாது.

ஏன்னு கேட்டால்..இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ஊர் ஊரா திரிஞ்சு..இன்று வரை அதே நிலமைதான்.


கண்டது..கிச்சன்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.


ஒரு ஆள் மட்டுமே நிற்கக்கூடிய  கிச்சன்.. சதுர கிச்சான்.செவ்வக கிச்சன்..டெல்லி வீட்டில்..ரூம் எல்லாம் தாண்டி வெளியே இருக்கும் கிச்சன்...


நமக்கு ஏத்த மாதிரி இல்லனா என்ன?..நாம அதை நமக்கு ஏத்த மாதிரி  மாத்திடுவோம்னு இன்று வரை தொடரும் ..கிச்சன் வைபவங்கள்.


பாத்திரங்கள் எண்ணிக்கையை விட..எங்க கிச்சனில் சமைத்த பாத்திரங்கள் ..

அதாங்க characters ஏராளம்.😄😄😄


உங்க கிச்சனுக்குள்ள வரலாமானு யாரும் கேட்டுடக் கூடாது..🤣


இக்கட சூடு, அல்லி நோடு, உதர் தேகோ....இப்படி எல்லா சாமான்களையும் காண்பிச்சுவிட்டு

உன்னால் முடியும் தம்பி ..மனோரமா ஸ்டைலில்..me ..enjoy தான்.💪💪


" சமையலறை..எனக்கு மட்டும் சொந்தமா.?..நீயும் வந்து சமைத்து பாருனு" ..வரவங்களையும் இழுத்துப் போட்டுடுவோம்ல.


என்ன செய்யறது..நம்ம டிசைன் அப்படி..


கல்யாணம் முடிஞ்சு ,டெல்லிக்கு போனால்..அங்கே ஞாயிற்று கிழமைகளில் என் கிச்சன்..இவரோட ஃப்ரண்ட்ஸ் பேச்சிலர்கள் கையில் போக..நான் பேச்சு மூச்சு இல்லாம அவங்க அட்டகாசத்தை பார்த்து..மயங்கி விழாத குறைதான்.


ஒரே குக்கரில் ஓஹோ production செய்யும் ஒருத்தர்..

ஒண்ணு விடாம் எல்லாப் பாத்திரத்தை யும் அள்ளிப் போடும் ஒருத்தர்..

சமைத்தபடியே..துடைக்கும் ஒருத்தர்..( வேற யாரு எங்க அம்மா தான்)..

கப்பும் டம்ளரும் அடுக்குப் பாத்திரமும் ,டவராவும் ஸ்பூனும் அழகா பார்த்து பார்த்து அடுக்கும் ஒருத்தர்..( என் மாமியார் தான்)


எங்க வீட்டு கிச்சன் மேடைகள் ..எத்தனை பேரை ..master chef ஆக்கின புகழ்பெற்ற மேடைகள் தெரியுமா?..


இவரோட ஃப்ரண்ட்ஸ், என் பெண்கள், அவங்களோட ஃப்ரண்ட்ஸ் ,அவங்க அம்மாக்கள், மாமியார், அம்மா, அத்தை, சித்தி, நாத்தனார் ,கொழுந்தனார்னு எல்லாரையுமே அவங்க signature dish அரங்கேற உதவியது ..my super kitchen மேடை.


இப்போ லேட்டஸ்ட்டா என் வூட்டுக்காரரையும் நள பாகத்தில் இறக்கி, பெருமைப்படுத்திய மேடையாக்கும்..

இன்னும்..மாப்பிள்ளை மட்டும் வந்து ..அவர் திறமையைக் காட்டணும்..me ..waiting


அந்த அடுப்பு இருக்கே ..அடுப்பு..

அப்படியே மூளையில பொறி பறக்க வைக்கும் ஒரு creativity.


பாஸ்ட்டாக்கள்..வெறும் டோஸ்ட்டாக மாறினால்கூட..டேஸ்ட்டாக..பாஸ் மார்க்கு வாங்குமிடம்..

பிட்ஸாக்கள் ..best ஆ மாறுமிடம்

பக்கோடாக்கள்..பக்காவா கிடைக்குமிடம்..

தோசைகள்..உருமாறும்.


உப்மாக்களோ..உவகை தரும்..


பானி பூரிக்கள்..பூரித்து மகிழும்


சாட் ஐட்டமெல்லாம்..சகட்டு மேனிக்கு கிடைக்குமிடம்..


ஜவ்வரிசி கள் ..ஜாலம் காட்டுமிடம்..

வடையோ..தடையில்லாமல் கிடைக்கும்..


"வந்தவரெல்லாம் தங்கி விட்டால்..இந்த அகிலாவுக்கு கிச்சனில் வேலையேதுனு"...உங்க மை வாய்ஸ் கேக்கறது.😄


அப்போ நீ எப்போதான் சமையல் செய்வ..?..

கரெக்ட்டு தான்..

நிறைய செய்வேன்.நிறைவாகச் செய்வேன்.


துடைப்பது, அடுக்குவது, தூஸி தட்றது..

எல்லாமே..வலது கை செய்ய்றது இடதுகைக்கு தெரியாது.


புடிச்சது சுத்தம்..

இல்லாட்டி..வீட்ல சத்தம் தான்.


நம்ம சமையலறை என்பது..வெறும் மசாலாக்களும் பொடிகளும், பாத்திரமும் மட்டும் இருக்கும் இடமல்ல..நிறைய memories ம் இருக்குமிடம். 


வாணலியைப் பார்த்து...ஹலோ இன்னிக்கு உன்னைத்தான் போட்டு வறுக்கப் போறேன்னு சொல்லுவேன்..


குக்கரே..இன்று ..நோ மக்கர்னு சொல்லி ..வேலை ஆரம்பிப்பேன்..


பால் வழியும் பாத்திரமாகிடாதேனு..பால் பாத்திரத்துக்கு சொல்லிடுவேன்.


கட்டரே..வெட்டு நீ காயை மட்டும்னு caution செய்வேன்..


ஒரு positive vibration கொண்டு வந்ததால்..

என் சமையலறை ..மையல் கொள்ள வைக்கும் அறை..


ஒவ்வொரு shelf லும்..பல நினைவுப் பொக்கிஷங்கள் உண்டு..


இருந்த கிச்சன் , இருக்கும் கிச்சன் எல்லாம் பெரிசா ஒரு aesthetic sense இல்லாட்டாலும்..

இங்கே தான் "அகிலாஸ்..அசத்தல்" சமையல் நடக்கும்.


என் சமையலறை ..எங்கேயும் எப்போதும் இப்படித்தான்.


 இந்த போட்டோ எங்கம்மா வீட்டு கிச்சன்😄😄


Wednesday, December 28, 2022

முருகனை நினை மனமே..

 முருகனை நினை மனமே..



ஆமாம்..இன்னிக்கு வருஷத்தின் கடைசி சஷ்டி விரதம்..


என்ன கோலம் போடலாம்னு யோசனை..


ஆஹா..

madhubani..

மாக்கோலத்தில் வருமா?..


சரி. சரி..அவன் பெயர் சொல்லி போட ஆரம்பிக்க..

அவனே கொடுத்தான் ஐடியா..


மயிலிறகை..வேல் போல் வரை என்று..


முருகா..முடிஞ்ச அளவு முயற்சிக்கிறேன்னு...


வண்ணம் நிரப்ப..நிரப்ப..

வாசலில் வந்தாடியது அழகு மயில்..


தோகைகள் வேல் போல விரிய..

வேலுண்டு..வினையில்லை..

மயிலுண்டு ..

மனக்கவலையில்லை..


முருகா..முடியப் போகும் வருடம்..

முழுமையாய் வாழ்ந்தேனா தெரியவில்லை..


மலரப் போகும் வருடம்..

மாந்தர்க்கெல்லாம் மகிழ்ச்சி தரட்டும் என்ற பிரார்த்தனை யுடன்..


இந்த நாள் இனிய நாள்


ரங்கோலியிலும் எனை நினைக்க..

அங்கே வந்து மகிழ்வேன் என்றான்..


அவன் தத்துவம்

Monday, December 26, 2022

Sikku kolam..கம்பி கோலம்..

 Sikku kolam..கம்பி கோலம்..


#சிக்குத்துவம்


இதுக்குள்ள சிக்கினா நமக்கு வெளியே வரத் தெரியாதுனு..எப்பவும் ஒரு பயம்..


அன்பு வலையில் சிக்கற ஆளு நாம..

கம்பி கோலத்துக்குள் எப்படி போறது..


ஆரம்பித்தால் கை எடுக்காம போடணும்..

அங்கிங்கு கவனம் போச்சோ..

அம்புட்டுதேன்..

ஆட்டம் close...

Adjust எல்லாம் பண்ண முடியாது..


எத்தனை பாடம் இந்த கோலத்துக்குள்..


Mallika Ponnusamy  mam..போடும் கோலம்.பார்த்து ..

மலைத்துப் போவேன் நான்..


#inspiration அவங்க தான்..


Ration இல்லாம கிடைக்கும் ஒன்று..

நம்மை வளர்க்கும் ஒன்று..இந்த

Inspiration தாங்க..


முயற்சி இருந்தால்..

மாமலையும் ஓர் கடுகாம்..

.

அதுதான்..

குட்டிக் கோலத்தில் ஆரம்பம்..( இந்த தம்மாத்தூண்டு கோலத்துக்கு..

இம்மாம் பெரிய அலப்பறையா?..

உங்க மை.வாய்ஸ் கேட்குதே😃😃😃😃)


அம்மா..சொன்னது நினைவில் வந்தது..

தோசை வார்க்குமுன் குட்டி தோசையில் ஆரம்பிக்கணும்..

சிறுகக் கட்டி பெருக வாழ்..

எப்போதும் சொல்வாள்..


இப்படி தத்துவத்தில் சிக்க வைத்ததே .

இந்த..

Sikku kolam😃😃😃😃


அன்புடன்😃😃


கோலக்கதைத்துவம்

 #கோலக்கதைத்துவம்


இந்த ரங்கோலி மனசில் வந்ததும்..ஒரு குட்டிக் கதையும் எழுதலாமானு தோணித்து..😄😄


Bird 1- அந்த மரம் எத்தனை அழகா இருக்குல்ல..வாயேன் அங்கே போகலாம்.🐦🐦


Bird -2 : no.. no..என் dress எல்லாம் அழுக்காகிடும். அந்த மரம் ஒரே colorful aa இருக்கே🕊️🕊️

Bird -1: அட பைத்தியமே..கலர் போய் ஒட்டுமா..அழகழகா பூவும் பழமும் இருக்கே..போகலாமே..( கெஞ்சலுடன்)


Bird -2: சொன்னால் புரியாதா..இந்த மாதிரி மரத்தில தான்  வேடர்கள் வலை விரிச்சிருப்பாங்களாம்..

நான் வரலைப்பா..👀


Bird-1 : ஐயோ..அப்படியா..ஆனால் எனக்கு ஆசையா இருக்கே..


Bird-2: ஆசைப்படறது சில சமயம் ஆபத்தில் முடியும்னு தெரியும் தானே உனக்கு...வேணும்னா..

அங்கே கீழே விழுந்திருக்கே..அதை எடுத்து சாப்பிடு..🍋🍋🍋


Bird-2: ரிஸ்க் எடுக்காம எப்படி ரஸ்க் சாப்பிடறதாம்..நீ போ.நான் ஜாலியா இந்த மரத்தில் enjoy பண்ணிட்டு வரேன்..😄😄😄


Bird -2 : அடிபட்டால் தான் உனக்கு புத்தி வரும்னு நினைக்கிறேன்..bye..bye.🙏🙏


Bird 1 ..சந்தோஷமா பறந்து அந்த மரத்தில் உட்கார்ந்து தான் நினைச்சதை சாதித்ததா??

இல்ல..bird 2 சொன்னது போல வேடன் கிட்ட மாட்டிண்டதா..


எப்புடி கண்டுபிடிக்கறது..??


நம்ம வாழ்க்கையிலும் இப்படித்தானே..


தூரத்தில் இருந்து பார்த்து judge பண்ணி ..

சிலவற்றை கோட்டை விடறோம்..


கோடு தாண்டலாம் வான்னு போகும்போது ..கோட்டைக்குள் சிக்கிக்கறோம்..


வாழ்க்கையே ஒரு நாடகம்..

அதில் wisdom தான் முக்கிய பாத்திரம்..


சரியா..😄😄😄


Happy birthday Mythili aunty

 Happy birthday Mythili aunty


Mythili aunty..என்

மனம் கவர் aunty.

மனசில் இருப்பதை சொல்வாள்

மனதில் என்றும் நிற்பாள்.


மகளும் பேத்தியும் சகலமுமென்றாலும்

மத்யமரில் மாபெரும் உலகம் கண்டாள்.

மதிப்பிற்குரிய இடம் பிடித்தாள்..

மேடம்..மாமி என உறவானாள்..


Spring..samosa..sunset..savoury..

the S(ess)ence of her life..

 potato and rice..her

forever choice..


 waves of a beach and 

wind of the himalayas

wander she wishes..

with a book in hand..


albums of her grand daughter

all time her pastime..

humor she likes..

honesty she salutes..


plunging into her bookshelf..

passionate about her writing..

Living the present 

Munching the past

Inspiring everyone..


உபாதைகள் பல இருந்தபோதும்..

உறுதி மட்டும் விடாதவள்..

ஊக்குவிப்பாள் தன் பதிவால்..என்

உள்ளத்திற்கு என்றும் அருகிலிருப்பாள்..


முகநூலில் மின்னும் நட்சத்திரம் 🌟

Mythili எனும் நட்சத்திரம்.


வாழ்த்த வயதில்லை..

வணங்குகிறேன் மேம்..


அன்புடன்

Akila


Happy birthday Mythili Varadarajan  mam


நானறிந்த சூப்பர் சீனியர் சிட்டிஸன்களிலே ..இவரைப் போல சூப்பர் பெண்மணியைக் கண்டதில்லை.


எதையுமே ஒரு தராசில் வைத்து 

தரமான கருத்துக்கள் ..

Positive ஊக்கம் தரும் 

அற்புதப் பெண்ணிவர்.


என்னை ' அகிலா எப்போ வர என்னைப் பார்க்க ? ' உரிமையுடன் அன்புடன் கேட்கும் அன்பு வட்டத்தில் முக்கியமானவர்.


பட்டென்று மனதில் இருப்பதை சொல்லக்கூடிய இவரின் straight forwardness எனக்கு மிகவும் பிடிக்கும்.



விரைவில் இந்த வைரஸ் பயம் ஒழிந்து..

வயதானவர்கள் எல்லாரையும் சென்று பார்க்கணும்..


மீட்..ஸ்வீட்டு, ஸ்நாக்ஸ்...


Love you mam.

Happy birthday to you.🎊🎉🎂💐🎁

எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்டோ இது😄



Saturday, December 24, 2022

முதுமையின் சில அடையாளங்கள்

 முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..


தூக்க மருந்து  தாலாட்டுமுன்

தூக்கிப் போடுமே இருமல்

என் லொக் லொக்  சத்தம்

கொர் கொர் குறட்டைக்காரரையும்

கூப்பிட்டு எழுப்புமே..

தலைகாணி உயரமாகும்..

தலை விதி நொந்து..

தாரையாய் கண்ணீர் அருவி..

.

கோழிக் கூவும் நேரம்..

கண்ணும் சொக்கும் தூக்கம்..

எட்டு மணி ட்ரெயின் பிடித்து

எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து

ஓட்டமும் நடையுமாக..

ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..

ஓரமாய்..சின்ன நினைவாய்..

 விழிப்பும் ஒரு வழியாய் வர..

வேகத்தில் இயங்கும் வீடு..

பெண்ணும் பேத்தியும்..

பேச்சா..சண்டையா..??

புரியாத புதிராய் நான் முழிக்க..

சூடாக் குடித்த காபி..

சுட சுட செய்தியுடன் பேப்பர்

வெது வெது நீரில் குளியல்..

வேண்டுதல் நாளின் இனிமைக்கு..

பசித்து புசித்த காலம்..

பழங்கதையான ஏக்கம்..

மாத்திரைகள் பாதி உணவாக..

மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..

ஒற்றை வரியில் பேசிய நானோ

ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!

வலிகள் தரும் வேதனை..

விடுதலை வேண்டி ப்ராத்தனை..

கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய

நிகழும் காலம் நீளமாய்த் தெரிய

வரப்போகும் விடியல்..

விரட்டுமென் சோதனையென

விழித்தபடி படுத்திருக்கேன்..

விடிய இன்னும் நேரம் இருக்கே..


I feel women are more positive and energetic to surpass the ageing.

Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Happy 60 Vaijayanthy Srinivasan MANNI.

 Happy 60  Vaijayanthy Srinivasan MANNI.

You don't look like i swear.


வைஜயந்தி மன்னிக்கு ஒரு வாழ்த்து


மன்னிக்கு ஒரு வாழ்த்து..அன்பு 

மன்னிக்கு  ஒரு வாழ்த்து..

வாழ்வில்  நல்லவை அமைவதற்கு..நான்

சொல்லும் தமிழ் பாட்டு.


நெய்வேலியில் பூத்த தங்கப்பூ..இவளை

நினைத்தாலே மனசில் தித்திப்பு.


ஓடி வந்து உதவுவதைப் பார்க்க..

எனக்குத் தோன்றும் திகைப்பு..


சுரங்கத்திலிருந்து வந்ததனால்..வற்றாது

சுரக்கும் எப்போதும் அன்பு.


நீல நிறம் இவள் பிடிப்பு

பிடிக்காது இவளுக்கு நடிப்பு.


 உறவு என்ற போதிலும்..அதைவிட

வேண்டும் என்றும் இவள் நட்பு.


எல்லைகள் தாண்டியும்

வைத்திப்ருப்பாள் தொடர்பு.


தகவல் களஞ்சியத்தின் கோப்பு

தருவாள் அள்ளி குறிப்பு.


#just_dial_Jayanthi என 

ஜோக்காய் எங்கள் அழைப்பு


உனக்கு..

அறுபது என்றால்..

ஆச்சரியரம் எனக்கு..


போட மாட்டாயே மேக்கப்பு

உன்னோடிருந்தால் கலகலப்பு


என்றும் இளமை காப்பு

அந்த secret எனக்கு செப்பு ..


கொடுங்க எங்களுக்கு டிப்பு

நீங்க எப்பவுமே டாப்பூ..


உனக்கு ஒரு அன்பளிப்பு..இந்தச்

சின்னதா ஒரு கவிதைப்பூ..🎁🎂🌹🌺

3D kolam

 3D kolam


போடேன் ..

Friend சொன்னாள்..


அதுக்கெல்லாம் ஞானம் வேணும்..ஞானம் வேண்டும் டோய் ..கரெக்டா😃😃😃


நமக்கு புடிச்ச.. 3D..


Determination 

Dedication

Devotion....


இதிலேர்ந்து deviation இல்லாமல் dynamic ஆ கொஞ்சம் denomination கூட இருக்க..

வாழ்க்கை சொர்க்கம்தான்..


கரெக்டா😃😃😃😃


அன்புடன்😃😃

Friday, December 23, 2022

எளியமனிதர்கள்

 #எளியமனிதர்கள்


"உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லே யா..அரே ஹோயானு ரஜினி பாட்டு பாடிண்டே பதிவெல்லாம் படிக்கலாம்..ஹே யா..அரே ஹோயா..


சிலிண்டர் சுப்பையா..


(rhyming க்காக இல்லை இந்தப் பெயர்)


'கவலையேப் படாதீங்க ம்மா..காலைல 8.10 க்கு நீ வூடு பூட்டறதுக்கு முன்னால நான் முதோ லோட்ல உங்களுக்கு கொண்டாந்து போட்டு போயிர்ரேன்..

சொன்னபடி .ஏஜன்சியில் லோட் வந்ததும் ஒரு மெரி மிரிச்சு எங்கத் தெருவில வேலைக்கு போகும் அம்மாக்களுக்கு சிிலிண்டர் வந்து இறக்கிட்டுப் போகும் சுப்பையா அண்ணா.

5 ரூவா கொடுத்தாலே ஏதோ லட்சம் கிடைத்த திருப்தி..


சிலிண்டரை செக் பண்ணிட்டு 'அம்மா..அடுப்பு துடைக்க ஞாயிற்றுக்கிழமை வந்துடறேன்.

சுத்தமா கெரசின் போட்டு ஓட்டையெல்லாம் அடைப்பை சரி செஞ்சு பளபளக்க வைப்பார்.


பாவம் ..ஞாயிறு கிடைக்கும் அரை நாள் லீவிலும் இதேப் போல எல்லார் விட்டிலும் வேலை. 

ஒரு நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோயேன் ப்பானு அப்பா சொல்லும்போது..' இன்னா சார் பண்றது ..ரெண்டு பிள்ளைகளை படிக்க வெக்கணுமே..என்னை மாதிரி அவங்களும் ஆகிடக் கூடாது..அதான் சார்.


மிகக் குறைந்த ஆட்களுடன் இயங்கிய அந்த ஏஜென்சியில் ஒரு நாள் எத்தனை ட்ரிப் அடிப்பார் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


சில வருடங்களுக்கு பின்..

டெல்லிலேர்ந்து வந்து சூறாவளிச் சுற்றுப் பயணத்தில்  இருந்தேன். திருச்சியில் இருந்து ட்ரெயினில் வர..அப்பா ஃபோன் செய்தார். ஸ்டேஷனுக்கு சுப்பையா வருவார். நீ அவரோட வீட்டுக்கு வந்துடுனு சொல்லி டொக்குனு ் லைன் கட்.


தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கியதும் என் கோச் வாசலில் வரவேற்ற சுப்பையா அண்ணா..'அப்பாவுக்கு பாவம் அவசர வேலை..அதான் என்னை அனுப்பிச்சாரு.. நடந்துகொண்டே பேசியவர்..பளபளக்கும் ஆட்டோவை காண்பித்து ..

' குந்தும்மா..நம்ம வண்டிதான்..மூணு சக்கர வண்டி மெரிச்சு முட்டிக்காலெல்லாம் வீங்க ஆரம்பிச்சது..கடனை உடனை வாங்கி இந்த ஆட்டோ வாங்கி ஓட்டறேன். வருமானம் பரவாயில்ல..என் பையனுக்கு மெரிட்ல சீட் கிடைச்சு காரைக்குடில படிக்கிறான்மா..

வாயைப் பிளந்தபடி அவர் கதையை கேட்டு வந்தேன்.


விடிகாலம் வண்டி எடுத்தேன்னா..வூடு போய் சேரும்போது நடுநிசி ஆகிடுதும்மா என்றார். அண்ணா உங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றேன்.


அப்பா அம்மாவுக்கு ஆஸ்பிட்டல் போறது, கடைத்தெரு ,பாங்க் எல்லா இடமும் கூட்டிக் கொண்டு போக ஒரு நம்பிக்கையான ஆள். எங்க காலனிக்கேனு சொல்லலாம்.


அடுத்த வருடம் போனபோது..' சின்னதா ஒரு கிரவுண்ட் வாங்கி ஒரு ரூம் கட்டிட்டேன்மா' என்றார். அதுகொஞ்சம் கடன் இருக்கு இப்போ..அடுத்த வருசம் புள்ளைக்கு காம்பஸ்ல வேலை கிடைச்சா கொஞ்சம் காசு சேர்த்து பொண்ணை ஒரு நல்ல எடத்தில புடிச்சி கொடுக்கணும்..


அதெல்லாம் உங்களுக்கு அருமையா கிடைக்கும்ண்ணா என்றேன்.


எப்போதும்போல உலக விஷயம் ஒலிபரப்பும் அம்மா ஒரு நாள் சொன்னாள்.' 'சொல்ல மறந்துட்டேனே்..நம்ம சுப்பையா பையனுக்கு நல்ல வேலை கிடைச்சு இப்போ US போறானாம்.பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான்.


அவன் கனவும் உழைப்பும் வீண் போகலை..

ஆனா..என்ன ..இன்னும் முடிஞ்ச வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கறேங்கறான்.


அம்மா இறந்தபோது கூடமாட உதவிக்கு வந்த சுப்பையா அண்ணா சொன்னார்..

' வாழ்க்கையில் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்லை கண்ணு..எனக்கு தெரிஞ்சதெல்லாம் உண்மையா இருக்கணும்..ஓடாத் தேஞ்சாலும் உழைக்கணும்.

பக்கத்தில் நின்றிருந்த அவர் மனைவி கண்ணில் ஒரு பெருமிதம்.

Thursday, December 22, 2022

மார்கழி

 ஒரே மரத்தில் பூத்தாலும்.

ஒவ்வொரு பூவுக்கும் ஒரு 

தனி அழகுண்டு..


இறைவன் படைத்த தோட்டத்து

அழகுப் பூக்கள் நாம்..


இந்த வாழ்க்கை வரமே..

வரங்களைக் கொண்டாடுவோம்..

வலிகளை 💪 வலிமைகளாக மாற்றுவோம்..


( எல்லா பூவும் ஒரே அளவில் வராவிட்டாலும்..

அட்வைஸ் வந்துடுத்தே..😃😃😃😃)


நான் escapeuuuuu😃😃😃😃😃😃


அன்புடன்😃😃


ஸில்