Friday, April 28, 2023

பயங்கர terrific

 Bengaluru traffic..

பயங்கர terrific..


வாகனங்களின் வரிசை..

வழிகிடைக்கா..வாட்டம்..

புஸ்புஸ்ஸென்றே பஸ்கள்..

சிணுங்கும் சிங்கார ஊர்திகள்


அலறித் தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்..

off ஆகாத என் ஜின்கள்..

ஆவி்யில் கலக்கும் எரிபொருட்கள்..

இத்தனைக்கும் நடுவில்..

இத்துனூண்டு Scooty உடன்..

இறைவா!!!..நான்..!!


மாட்டிக் கொண்டால்..

மறுபிறவி வந்துடுமே..


அலைபாயும் கண்ணில்

கவலையும் கவ்வ..

ஆஹா..கண்டேன்..

அங்கே ஒரு gap..


வலதும் இடதுமாய்

வளைந்து நெளிந்து

வெளியே வந்தேன்..

விருட்டெனப் பறந்தேன்..

வெற்றி யின் துள்ளலோடு

வீட்டை நோக்கி...

பொருமலோடு பொறாமை சேர

பெருமூச்சுடன் பெரு வண்டி மக்கள்..


Scooty ஓட்டும் மாந்தர்க்கு கிட்டுமே

cycle gapல் வழி....

Sunday, April 23, 2023

Plan B

 நெட்ல பார்த்த ரெசிபி நாக்கில் ஊற..நாமும் செஞ்சு பார்ப்போமே இத்தனை சிம்ப்பிள் தோசை தானேனு ஜொள்ளுடன்..


millet மூணு மணி நேரம் ஊறினா போதும் கோதுமை ரவையும் ஒரு மணி நேரம் ஊறினா போதும். வெய்யிலில் சீக்கிரம் ferment ஆகி brunch க்கு வித்தியாசமா சாப்பிடலாம்னு ஐடியா.


நடு ராத்திரி எழுந்து ஊற வெச்சாச்சு.

காஃபி குடிச்சு எனெர்ஜி ஏத்தி, மிக்ஸில மில்லட்டை போட..


நேற்று பெய்த சொட்டு மழை..கரண்ட் கட் வேலை நடக்கிறது எப்போ கரண்ட் வரும்னு சொல்ல முடியாதுனு அபார்ட்மென்ட் எலக்ட்ரீஷியன் ஜாலி மூடில்.


சோக கீதம் நான் பாடும் வேளையில் டொக்கென்று விழுந்த watsapp msg.


"'never tell anyone your plans

show them your results ''


என் plan அப்பளமாய் நொறுங்க ..வேறொறு டிஷ் ரெடி ..


அதாங்க உப்புமா..

கைகொடுக்கும் கை..

( உப்புமா breakfast க்கு தான் சாப்பிடணும்நு இல்லை..சரிதானே..)


#holidaymood

Summer special

 அம்மா..இன்னும் எத்தனை சுத்து பாக்கி இருக்கு? 

கையைக் கூப்பியபடி 

சாய்ஞ்சு சாய்ஞ்சு 

நவக்கிரகம் சுத்தும

நண்டு சிண்டுகள்..


வரப்போகும் ரிஸல்ட்  வயிற்றைக் கலக்க..

வரேன் நானும் கோயிலுக்கென்று

விபூதிப் பட்டையுடன்

பட்டைய கிளப்பும் பசங்க..


பூவும் பொட்டுமாய் புதுசா அலங்காரம்..

பவ்யமாய் விளக்கேற்றி 

பாஸாக்கிடு பாஸ் என்று பக்தியில் பெண்குட்டிகள்..


'கண்ணை மூடி உம்மாச்சியை வேண்டிக்கோ'

பாட்டி சொல்லைத் தட்டாத பேத்தி..அவள்

பார்க்காத போது.. ஓரக் கண்ணால் என்னைப் பார்த்த அழகு..


கோயில்கள்..கோடை விடுமுறையில் 

குழந்தைகள் வரவால்..

சொர்க்கமாய்த் தெரிகிறது..


'மாமா..ப்ரசாதம்' ..இரண்டு கையிலும் தொன்னையில்  ரொப்பிண்டு 

இவர்கள் அங்கே மரத்தடியில் சாப்பிடும் அழகே தனி..


ஆனால் என்ன..

எனக்கும் ,என்னோடு சுத்தும் இந்த பூனையார்க்கும் ப்ரசாதம் கோட்டா கட் ஆகி விட்டது.


'ம்ம்ம்ம்ம்..வரும் வரும் ஜீன் வரும்..ஜூட் விட்டு விடுவார்கள் இவர்கள் எல்லாம்.

அப்புறம் நம்ம ராஜ்ஜியம் தான்' என்று நான் சொல்ல..


புரிந்தது போல போஸ் கொடுத்த பூனை..


Sunday, April 16, 2023

எந்தக் 'கொ' வும் ..

 எந்தக் 'கொ' வும் ..


(அதாங்க..எந்தக் "கொம்பனாலும்" மாற்ற முடியாது..)

என்னுள் இருக்கும் 'கு' வை..(குழந்தைத்தனத்தை💪 ..யார்கிட்ட😀😀)


Fry க்கு முன் flower ..🌸🌺🌻

சின்னச் சின்ன சந்தோஷங்கள்

 சின்னச் சின்ன சந்தோஷங்கள்..


குக்கர் விசில் சத்தம் கேட்டதும்..

கூப்பிட்டியாம்மா..என்று..

என் குழந்தை மட்டுமல்ல..

என் வீட்டு காக்காவும்...

காத்திருக்கும் அழகே தனி😃😃😃😋


Thursday, April 13, 2023

பழி ஒரு இடம்...

 பழி ஒரு இடம்...


அணைந்து போன கைப்பேசி

அடிக்க மறந்த அலாரம்..

அதிகாலை நேரத் துவக்கம்

அரக்கப் பரக்க அவசரம்


காலியாய்த் தொங்கும் பால்பை

காலையில் வராத செய்தித்தாள்

கழுத்தை அறுக்கும் மின்வெட்டு

கிண்டிப் போன தோசை


கையில் கிட்டா காலுறை

காணாமல் போன ஐடி கார்ட்

கசங்கி கிடந்த பள்ளிச்சீருடை

காக்க மறுத்த ஆட்டோக்காரன்


மூடியைத் தேடிய பாட்டில்கள்

முடியல உடம்புக்கென்று

மூணு நாள் விடுப்பில் 

மூச்சிலும் மேலான முனியம்மா..


ஒண்ணுமே சரியா இல்லை

ஒரு வேலையும் நடக்கலையே


ஓடிய சிந்தனை கலைந்தது

'ஒன்னோட பொட்டு 

ஒருபக்கமா இருக்கேனு'

ஓடி வந்து ஆசையுடன்

ஒட்டிக் கொண்ட பெண்ணை

ஓங்கி விட்டாள் ஓர் அறை..


ஓவெனெ அழது புரண்டது

ஒண்ணும் புரியாத குழந்தை


சமாதானம் செல்லுபடியாகாதே

சாட்சியம் இருக்கே

சாத்திய அடியின் சுவடுகள்

சிவந்த அவளின் கன்னத்திலே


...

Tuesday, April 11, 2023

C க்கு பின் D தானே.

 C க்கு பின் D தானே..நம்

Direction மாற்றியதே..


Desi food கிடைக்குது

Daadi's delicacies உடன்..

Daddy's kitchen ம்

Delicious menu வுடன்.


Doordarshan மட்டும் பார்த்து

Days கழியுமே devotion ல்


Distance குறைந்து

Dearer  ஆன family..


Dazzling bright ஆனது

Dull  tiles எல்லாம்..


Dependence குறைந்தது..

Daring to face..


Displeasure இல்லை

Disappointment இல்லை..


Distress யிலும்

Dissatisfaction இல்லை.


Divine power புரிகிறது

Devotion வளர்கிறது


Dramatic change வருமென்று

Dream வந்து போகிறது..


Dynamic க்காக ஆனாலும்

Deteriorate செய்யமாட்டோம்

Dear mother earth ஐ..

Determine செய்வோம்..

Dutiful ஆக மாறுவோம்.

Wednesday, April 5, 2023

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..'

 :ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'


'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..

தாயும் சொன்னாள் ...

'தலைப் பிரசவம்...

தாயும் சேயும் நலமா இருக்க

திருமலையானை தரிசனம் பண்ண

குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..

இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..

சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..

இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..

மகன் தந்தையிடம் சொல்வான்..

'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...

நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே

ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..

கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.

கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..


இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..

ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..


Sriram Jayaram Jaya Jaya ram

Sunday, April 2, 2023

ராம்..ராம் ..ராம்..

 ராம்..ராம் ..ராம்..


தாழ்த்தினோம் சிரம்

கூப்பினோம் கரம்

சொல்வோம் உம் மந்திரம்

கேட்போம் வரம்

பற்றினோம் உன் பாதம்

தருவாய் நீ அபயம்..

எனக்கேன்.. இனி பயம்..🙏


ஸ்ரீராம்..ஜெய ராம்..ஜெய ஜெய ராம்..


முடிந்த அளவு அவன் நாமம் சொல்லுவோம் ..

மீள்வோம்..இவ்விடரிலிருந்து..


Prayed for all my friends here🙏🙏


அக்கார அடிசலோடு ..

அயோத்தி ராமன் பேர் சொன்னேன்..

அடியோடு ஓடிடட்டும்

ஆட்டி வைக்கும் துன்பமெலாம்🙏

Friday, March 31, 2023

31st March

 31st March


நேற்று போல் இன்றில்லை..

இன்று போய் நாளையில்லை..


என்ன அருமையான பாட்டு..


முப்பத்தொண்ணு மார்ச்

முழி பிதுங்கும் நாள்.

வரவும் செலவும் இடிக்க

வரியும் ஏய்ப்பும் வயிற்றை பிசைய

வவுச்சர் போடறதா

வராதுனு மூடறதா..


Suspense ல வைக்கிறதா

Secretல அமுக்கறதா


அட்வான்ஸ் கழிக்கறதா

அடப் போகட்டும்னு விடறதா


Target க்கு ஓடறதா

Trial balance உடன் போராடறதா.


Accountsம் auditம்

ஆடின ஆட்டமெல்லாம்

அடங்கிப் போகுமே

தொடங்குமே வேலை.( இப்பவாவது)


தூங்காத விழி ரெண்டோடு

பாங்க் ஊழியர்கள்..

Guidelines எல்லாம்

கடகடனு கொட்டனுமே

Interest rate எல்லாம்

இம்மியும் மறக்கக்கூடாதே


விடிஞ்சதும் வீடு போய்..பல்

விளக்க ஆரம்பிக்கையில்

வீல் வீல்னு அலறும் கைப்பேசி

விஷயம் தெரியுமோ உமக்கு

வாட்ஸப்பில் fb எல்லாம்

விவாதம் ஆரம்பிச்சாச்சே

விதியெல்லாம் மாறியாச்சு

கதி கலங்கி பேதியாச்சு..

Reserve bank ஆ..இல்ல

Reverse bank aa

Respect இல்லையே

Remitters எங்களுக்கு..


உத்தரவு(உர்ஜித்) பட்டேல் சார்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..

பெட்ரோலிய ஓனரோ..

பொட்டிக்கடை ஓனரோ

உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு என் ராசா..

யாருக்காவது balance sheet tally 

ஆகி இருக்கா..

பல வருஷமா..நானும்  try பண்றேன்..என் வீட்டு balance sheet tally பண்ண..

முடியலையே..

நான் என்ன பண்ணுவேன்..ஹி..ஹி..ஹி..

என்னடா இது..

 என்னடா இது..

Curfew லயும் இப்படி kitchen பத்தியே போடறாளேனு பார்க்காதிங்க..


எது இல்லையோ அது தான் தேடும் மனசு..


சீந்தாமல் கிடக்கும் சில நாள்..


இப்போ..

Bread வாங்கப் போனேன்

வைரஸ் பிடித்து வந்தேன்னு 

பாடணுமோனு பயத்தில..


வர வர சாதம் கசக்குதையா..

மனம் தான் "பன்'னு..'பன்' னுனு துடிக்கும்..

ப்ரெட் இருக்கானு கேட்கும்..

வர வர சாதம் கசக்குதையா..


பாடும்.மனத்தை ..நீ அடங்கு அடங்கு என்று சொல்லி..


ஏன் துளி மாவு எடுத்து, சுத்தமான பொருட்களை சேர்த்து,  பேக்கரி அளவு இல்லாட்டியும் .bun செஞ்சு பார்த்தால் என்னனு ஒரு முயற்சி..


அதான்.. 

Eggless ,yeast less ..

Only curd and eno வைத்து செய்த ladi pav😁


நல்லா இருக்கும் side pic இது..


Backku சுட்டதடா..

Blacku ஆனதடானு..

பாட்டு பாடும் ..


நானே செஞ்சதாக்கும்😁

Tuesday, March 21, 2023

holi_hai_holi

 #rang_barse..

#holi_hai_holi


holiday ல ரொம்ப ஜாலி டே இந்த ஹோலி டே..

கலரைப் பார்த்ததும் கிலி

வயிற்றில் கரையும் புளி


எலியும் ஆவார் புலி

''பா"ங்கும் உருவாக்கும் சிரிப்பொலி


கலரு ரொம்பிய வாளி

தண்ணி ஆகும் காலி..


தயிர் வடையுடன் Thali..யார் 

வயிறும் இல்லை காலி..


சந்தோஷத்தில் இல்லை போலி

சிலரு செய்வார் 'பூரண்' போளி


சிரிப்பு கும்மாளம் கேலி

சிரித்தே வரும் வயிறு வலி


மெனுவில் இருக்கும் corn & chilli

உப்பிடும் எல்லார் belly


மகிழ்ச்சிக்கு இல்லை வேலி

எங்கும் holi hai holi ஒலி..

ஆம்..

நிரம்பி வழியும் ஜாலி

வசந்த விழாவாம் ஹோலி


Happy happy holi

Monday, March 13, 2023

என்ன ப்ளான் இது?

 நம்ம ப்ளான் படி இன்னிக்கு செய்துடலாமா? நு வாட்ஸப் க்ருப்பில் அட்மின் மெசேஜ் அனுப்பியாச்சு.


ஏய்..இன்னிக்கு வேணாம்ப்பா..என் நாத்தனாரோட ஒன்னு விட்ட மச்சினன் பொண்ணு கல்யாணம்..பெரிய family reunion.

.முடியாதுப்பா..


மெம்பர்2: சரியா நாள் குறிச்சீங்க போங்க..ஆஃபீஸில் இன்னிக்கு எங்க மேனேஜர் ரிடையர் ஆகறார்ப்பா .கண்டிப்பா முடியாது.


மெம்பர் 3:  உனக்கு ஒண்ணும் engagement இல்லனு எங்களை கூப்பிடறயாப்பா..

இன்னிக்கு என் பொண்ணோட ஃப்ரண்டு அரங்கேற்றம் போகணும்ப்பா இன்னொரு நாள் வெச்சுக்கலாம்.


மெம்பர்4: நான் இன்னிக்கு சொந்த ஊர் போறேன்ப்பா..so நான் ஜூட்.


மெம்பர்5: ஏன்ப்பா..இன்னிக்கு தான் என் புது புடவை ரிலீஸ்..சான்ஸே இல்லப்பா.


மெம்பர்5: no way..என்னால என்னிக்குமே இந்த ப்ளானுக்கு ஓகே சொல்ல முடியாதுப்பா..புரிஞ்சிப்பீங்கனு நினைக்கறேன்..😂😂😂


அட்மின்: எப்போதான்ப்பா செய்யறது..ஒரு முடிவெடுத்தால் அதை செயல்படுத்த வேணாமாப்பா?

(மை.வாய்ஸில்...ஐயோ..இவங்க எல்லாம் ஏதோ சொல்லி தப்பிச்சுட்டாங்களே..நான் என்ன செய்வேன்..என்ன செய்வேன்..வாக்குகொடுத்துட்டேனே..

எப்படி வாபஸ் வாங்கறது?


அட்மின் மெசேஜ்: பாவம்ப்பா..எல்லாரும் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கீங்க..இன்னிக்கி இல்லாட்டி என்ன?

April 1st வெச்சுப்போமா?


மெம்பர1்: 🙏


மெம்பர்2:   🙏🙏


மெம்பர்3:   🙏 


மெம்பர் 4 :🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏


என்ன ப்ளான் இது?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


கண்டுபிடிச்சாச்சா.?

#no_fb_day

நெட்டும் நோட்டிஃபிக்கேஷனும் இல்லாத ஒரு நாள்..

#one_day_challenge ..முடியுமா? 


V.n. Meenakshi Gayathri Ganesan

Saturday, March 11, 2023

நான்_அட்மின்_ஆனால்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#நான்_அட்மின்_ஆனால்


1.முதல்ல் ஒரு #chitty_robot பக்கத்துல வெச்சுக்கணும்னு நினைக்கிறேன்.

இருபதாயிரம் மெம்பர் பதிவுகள் போட்டாலும் ஒரே செகண்டல படிச்சு முடிச்சுடும்.


படிச்ச போஸ்ட் எல்லாம் எனக்கு prioritize பண்ணி அனுப்பும். 


யார் பதிவு மிக கம்மியான லைக்கும் கமெண்ட்டும் பெறுகிறதோ அது முதல்ல அப்ரூவ் ஆகனும்னு லிஸ்ட் மாடரேட்டர்க்கு போக வைப்பேன் ( அப்புறம்..நீ எதுக்கு?)


  V.n. Meenakshi Yoga Yogambal ஆஸ்தான tag queens.

they will takeover.


2. #madhyamar_membership_form எல்லாரும் ஃபில் பண்ணணும்.

 basic details இருக்கும். 

அதை வைத்து ஒரு data base உருவாக்குவேன்.

region age profession wise excel sheet ரெடியாக வைத்திருப்பேன்.


முதல் பதிவு போடுமுன் இந்த ஃபார்ம் பூர்த்தி ஆகவில்லை என்றால் பதிவருக்கு மெசேஜ் போகும்.


3.ஒவ்வொரு region க்கும் ஒன்று அல்லது இரண்டு பேர்கள் நியமித்து அந்த ஊர்களில் நடக்கும் பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் என்ன..ஆஸ்பத்திரி வசதி என்ன? இது போல பல தகவல்கள் சேகரிக்க சொல்வேன். 


அங்கு நடக்கும் விழாக்கள் ,camp களில் மத்யமரும் தங்கள் பங்கை அளிக்க வகை செய்வேன். 

அங்கிருக்கும்  மாணவ மாணவியருக்கு உபயோகமாக இருக்கும் வகையில் மத்யமர் நூலகம் அமைப்பேன்.


இத்றகு தேவையான புக்ஸ் ,நம் மத்யமர்களே அளிப்பார்கள்.


அந்த region ல் இருக்கும் மத்யமர்கள் கல்வியுடன் கை வேலைகள்,ஆங்கிலம் கற்பித்தல் ,personality development courses நடத்த வழி வகுப்பேன்.


4.கலை நிகழ்ச்சிகள் #exclusively_for_ youth நடத்துவேன் ஒரு குறிப்பிட மாதங்களில்..


அதில் தேர்ந்தெடுக்கப்படும் க்ரூப் ,சென்னையில் நடக்கும் வருடாந்திர மத்யமர் மீட்டில் பங்கேற்பர். சிறப்பு விருதுகளும் உண்டு.


5.nothing happens overnight and touching the lives of the people is more important for any organization to grow.


புயலும் மழையும் வந்தால் உதவ நிறைய சேவை மையங்கள் உண்டு.

மத்யமர் is #just_a_phone_call_away என்று மாறணும்..

அதுக்காக ' சார் எங்க ரோட்டில குழாய்ல தண்ணி வரலை ..சாக்க்டை அடைச்சிண்டிருக்கு' என்பதற்கெல்லாம் நாம் பொறுப்பல்ல..


just dial ல் கிடைக்கிறமாதிரி.

#madhyamar_dial ல் இங்கிருக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் சிறு தொழில் ..இன்னும் என்னென்ன சேவைகள் மத்யமர் உறுப்பினர்கள் செய்கிறார்களோ அத்தனையும் கிடைக்கச் செய்வேன்.


கடைசியா..எப்புடியாவது இந்த இளசு கூட்டத்தை உள்ள கொண்டாந்துடணும.


மத்யமர் கூப்பிட்டு ஒரு விழா நடத்தினால் தான் நமக்கு fund raise ஆகும்னு ஒரு நிலமையை கார்ப்பரேட் உலகுக்கு உருவாக்கணும்..(ரொம்ப ஓவரா இருக்கா?


6. #no_post_day.

அன்னிக்கு ஒரு நாள் அந்த வாரம் வந்த பதிவுகள் மட்டும் படித்து லைக் கமெண்ட் செய்யணும்.

அப்போதுதான் justify செய்ய முடியும் POTW என்பதை.


7.பதிவு செய்யும்போதே அது எந்த #category சேர்ந்தது என்று டிக் செய்தால் தான் போஸ்ட் submit செய்ய முடியணும்.


வாட்ஸப் க்ருப் அட்மின் ஆக இருக்கவே..ஆயிரம் அடி பாய்ந்து ஓடற உனக்கு இதெல்லாம் தேவையா..மை.வா...சொல்லுது....😂😂

Wednesday, March 1, 2023

ஏதாவது_எழுதலாமே

 '#ஏதாவது_எழுதலாமே' நம்ம மார்க்கு எப்பவுமே உசுப்பி விடுவார்.


' எதையாவது எழுதிட்டு வராதே..ஒழுங்கா கேள்வியைப் படிச்சுட்டு அப்பறம் எழுது என்று டென்ஷனோட இருப்பார் அம்மாவும் அப்பாவும்.


பரீட்சை ஜுரம்..ரம்பம் பம் பம் ..ஆரம்பம்..

இன்றிலிருந்து பல வீடுகளில்..


"மார்க்கு' நமக்கு  'பந்து' இல்லைனு கொஞ்ச நாள் டூ விட்டால் தான் 

மார்க் வரும்..

மார்க்கமும் கிடைக்கும்.


பொதுத் தேர்வு எழுதும் எல்லா வீட்டு செல்லங்களுக்கும் என்னோட அன்பான wishes. 


படிச்சதுதான் வரணும்னு வேண்டிக்காதீங்க..


எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் தரக்கூடிய wisdom and intelligence கொடு கடவுளே என்று வேண்டிக்கோங்க.


சிலபஸே இல்லாத வாழ்க்கைப் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு பதில் தருகிறோம்.


அப்படி இருக்கும்போது..சிலபஸ் உள்ள ஸ்கூல் பாடத்திலிருந்து வரும் கேள்விகள் பெரியதா  என்ன?


Confident ஆ போங்க ..over confidence இல்லாமல்..


All the very best to students of 10th and 12th

நினைப்பதெல்லாம் ..நடந்து விட்டால்

 நினைப்பதெல்லாம் ..நடந்து விட்டால்


பெரிய க்யூ அங்கே..

நான் முந்தி நீ முந்தி இல்லை..


"கண்ணுங்களா..எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கடா.'

நான் கேட்டதும் ..

வெட்கத்தில் முகத்தை மூடிச் சிரித்தனர்..

"நீங்களா..?

நோ ஆண்ட்டி..அது எப்புடி..நீங்க?:


முகம் சிவந்து அவர்கள் நாணிக் கோண..


"நான் அப்புடி என்னத்தைப் புள்ளங்களா கேட்டுப்புட்டேன்..?!!!


 என் பேச்சு வார்த்தை கடைசியில் தோல்வியைத் தழுவ..


ச்சே....என்னடா இது..இந்த அகிலாவுக்கு வந்த சோதனை நு மை.வாய்ஸ் சொல்ல..


வேற ஒண்ணுமில்லங்க..


பார்க்கில் வாக்கிங் போனபோது..

நானும் வரட்டா "சறுக்குமரம்" விளையாடனு கேட்டது தப்பாங்க?😁😁😂

Sunday, February 26, 2023

கார்' கட்டு

 Ganesh Bala sir.

நானும் முயன்றேன் இந்தப் படத்துக்கு ஒரு கதை.


'கார்' கட்டு


...(சிறுகதை)


' லோகு..எங்கடி போய்த் தொலைஞ்சான் உன் புள்ளையாண்டான் இன்னிக்கும்? மாப்பிளை அழைப்புக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு ' சாமிநாதன் போட்ட சத்தம்  கேட்டு ஓடிவந்தாள் பட்டு மாமி 

' 'வந்துடுவாண்ணா.. ரோகு என்கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான்.ஏன் இப்படி கத்தி ஊரைக் கூட்டறேள்னு ' மாமா வாயை அடைத்தாள்.


" ஆமாம்டி..அவன் சரியான 'ரோகு' தான். மாமாவின் கோபம் தலைக்கேறியது.


மாமிக்கு 'ல' வராது. "எர்ராமே"..சாரி..சாரி..எல்லாமே "ர' தான்.


லோகு என்ற லோகநாதன் தன் அத்தை பெண்ணு சுதாவுடன் கடைசி நிமிஷ மேக்கப்புக்காக பார்லர் போயிருந்தான். 

வெளியே வந்து சுதாவைத் தேடியவனை நாலு குண்டர்கள் அலாக்காக தூக்கி...சுதாவுடைய சிவப்பு நிறக் காரின் ரூஃபில் போட்டு கட்ட ஆரம்பித்தனர்.

"என்னடா நடக்குது இங்கே..சுதா.. சுதா ..எங்கே இருக்கே..என்னை காப்பாத்து..காப்பாத்துனு அவன் கத்தலை காரின் ஸ்டியரிங்கில் ஸ்டைலாக உட்கார்ந்தபடி ரசித்துக் கொண்டிரருந்தாள் சுதா..


கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. பஸ்ஸிலும் பைக்கிலும் போவோர் வருவோர் எல்லாம் ஃபோட்டோ எடுக்க, லோகு ஒரு லோக்கல் ஹீரோ போல ஊர்வலம் வந்து கொண்டிருந்தான்.


' ஜானவாச கார்ல போக வேண்டியவனை இப்படி ஊர்வலமா இழுத்துண்டு போறியே ..சுதா நீ நன்னா இருப்பியா என்று அவன் குரல் ஹாரன்கள் சத்தத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை.


பஸ்ஸிலேர்ந்து இந்தக் கண்றாவியைப் பார்த்த.சாமிநாதனின் ஒண்ணு விட்ட மாது மாமா..' டேய் சாமிநாதா....உன் பிள்ளையாண்டான் ஜானவாசம் இப்படி நடத்தப் போறேனு சொல்லவே இல்லையேனு ஃபோனில் விஷயத்தை சொல்ல..

ட்ராஃபிக்கில் மாட்டி இருந்த காரை நோக்கி கொஞ்ச நேரத்தில் சாமிநாதன் பட்டு மாமி , விச்சு சித்தப்பா, அங்கிச்சி சித்தினு படையே கிளம்பி வந்து ரோட் ரோக்கோ பண்ண ஆரம்பித்தார்கள்.


"ஏண்டி சுதா..இப்படி செய்ய எப்படிடி உனக்கு மனசு வந்தது..உங்கம்மா ஸ்தானத்திலேர்ந்து பார்த்துக்கற எனக்கு ..நீ செய்யற உபகாரமா இது' ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் பட்டு மாமி.

 '  ஸ்டாப் ஸ்டாப்..நான் என்ன மாமி தப்பு பண்ணேன்..நீங்க தானே ரோகுக்கு ' 'கார்'கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும்னு சொன்னேள்..அதான் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க ஆசையை நிறைவேத்திடலாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டு .உஸ் அப்பா....அவள் தொடரவும்..


சுற்றியிருந்த எல்லாரும் கொல்லென்று சிரித்தே விட்டார்கள்..

பின்ன என்ன '#கால்கட்டு போட்டா சரியாகிடும்னு சொல்ல வேண்டியதை 'ல' வராத பட்டு மாமி #கார்_கட்டு போட்டா சரியாகிடும்னு சொன்னால்..பாவம் சுதா என்ன செய்வாள்.


அவள் வெகுளித்தனத்தை சொல்லிச் சிரித்தபடி கும்பல் கல்யாண மண்டபத்தை நோக்கி கலைய ஆரம்பித்தது. 

கட்டை அவிழ்த்து வெளியே வந்து சுதாவை ஒரு லுக்  விட்டபடி உள்ளே போனான் லோகு.


 ' ஆசை வார்த்தை காட்டி என்னை ஏமாத்தி இப்போ பெரிய இடம் கிடைச்சுதுனு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கபோறயா நீ....

'ரோகு' ..உன் அம்மா உன்னை கூப்பிடறது சரிதாண்டா..என் ப்ளான் சக்ஸஸ்.

நடுத்தெருவில உன்னை கட்டிப் போட்டு.இழுத்துண்டு வந்தேன் பாரு..உனக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்.


மண்டபத்தின் உள்ளே நுழைந்தவளின் கன்னத்தை கிள்ளி.பலரும் நமுட்டுச் சிரிப்புடன் வரவேற்றனர் #அசடு_அசடு ' என்று.

காந்தி தாத்தா..

 ப்ராஜக்ட்  மக்களோடு..

படபடக்கும் குரலில்

பீட்டர் விட்டபடி.. ஒருத்தர்.


போகாதே..அங்கே..

பொழுது போகலையா உனக்குனு

பிள்ளையை விரட்டும் 

பெங்காலி அம்மணி..


வடா பாவ் இல்லாமல் 

வயிறு ரொம்புமா..

வடையாம்..வடை..

வெடிக்கிறார் ..மும்பைக்காரர்..


தண்ணியாக் குடுத்தாலும்..

தரமாக் கொடுக்கலாமே..

தமிழ்நாட்டுக் காரி நான்..


ஏதேதோ புலம்பல்கள்..


எதுவும் எனக்கில்லை என்று..


விளம்பரத்தில் ..அவர் வார்த்தைகளோடு

வெள்ளந்தியாய் சிரித்துக் கொண்டு..


காந்தி தாத்தா..

Saturday, February 25, 2023

அம்மா கை மணம்..சும்மாவா😂

 "நான் எவ்வளவு try பண்ணாலும் .நீ பண்ற டேஸ்ட் வர மாட்டேங்கறது ம்மா.."😁


பொண்ணு இப்படி சொல்லும் போது..

சொக்கிப் போகாத அம்மா உண்டா..?


அதான். ..ரவா உப்புமா பண்ணிக் கொடுத்துட்டேன்..


அம்மா கை மணம்..சும்மாவா😂

Wednesday, February 22, 2023

ஒரு சின்ன மூடியா..நம் mood ஐ ஆஃப் செய்வது?

 ஒரு சின்ன மூடியா..நம் mood ஐ ஆஃப் செய்வது?


வேலையெல்லாம் முடிச்சு கதவை சாத்திட்டு வந்த நேரம் ..காலிங் பெல் கூப்பிட்டது.

எதிர்த்த வீட்டு மாமி தான். 

" வாங்க உள்ளே ' நான் சொல்ல..

ஒண்ணுமில்லை நேத்திக்கு ஒரு " veg cutter ' வாஙிண்டு வந்தேன் .எங்க சரஸு சொன்னாள்  உன் கிட்டயும் இதே மாடல் தான் இருக்காமே .எப்படி use பண்றதுனு கொஞ்சம்.சொல்லேன் என்றார்.


ஆமாம் same தான். சொல்லிட்டு டெமொ செய்து காண்பிக்க ஆரம்பித்தேன்.

"இது கதக்கு..இது பரத நாட்டியம்'னு சலங்கை ஒலி ஸ்டைலில் சொல்லிக் கொடுத்து முடிச்சாச்சு.


காய் கட் பண்ற blade , தயிர் கடையறது இருக்கு..ஒரு மூடி இருக்குமே எங்கனு கேட்டேன்.


மூடியா..அப்படி ஒண்ணு இருக்கறதையே மூடி மறைச்சுட்டானே அந்த கடைக்காரன்னு  மாமி ஒரே டென்சன்.


எதுக்கும் அதோட டப்பாவில் இருக்கும் செக் பண்ணுங்கோனு சொல்லி மாமி check out ஆனப்பறம் வந்து தூங்கிட்டேன்.


விடிகாலையில் பால் கவரை எடுக்க கதவை திறந்த்போது கோலம் போட்டுக் கொண்டிருந்த மாமி..' அதையேன் கேக்கற போ..மூடி இல்லவே இல்லை இந்த மாடலுக்கு' என்று சொல்லவும் எனக்கு முதலில் தலையும் புரியல வாலும் புரியல.

பையெல்லாம் கூட தேடிப் பார்த்துட்டேன் ..என்று சொல்லிட்டு 'தூங்காத கண்ணென்று ஒன்று' நு ராத்திரி முழுதும் மூடியை தேடிய களைப்போடு மாமி உள்ளே போக..


அட ராமா..ஒருத்தரோட நிம்மதியான ராத்தூக்கம் கெடுத்த பாவி ஆகிட்டேனோனு மனசுக்கு கொஞ்சம் ஆகிவிட்டது..


நான் நல்லவ தான்ப்பா ..moment

Wednesday, February 15, 2023

காது_கொடுத்துக்_கேட்டேன்_ஆஹா_ஹலோ_ஹலோ_சத்தம்

 #காது_கொடுத்துக்_கேட்டேன்_ஆஹா_ஹலோ_ஹலோ_சத்தம்..


ஹலோ டாடி ..எப்போ வருவீங்க..உங்க பாஸ் ஏன் லீவு தரலை.. இழுத்து இழுத்து பேசும் குட்டிப் பொண்ணு..

ஃபோனை பிடுங்கியபடி 

ஹலோ என்னங்க அந்த தயிர் வெளியே இருக்கு . ஃப்ரிஜ்ல வெச்சுடுங்க.. அவள் அம்மா


ஹலோ...ஹலோ..மத்யானம் விசாகா ஹரி கேட்டு முடிச்சுட்டு கிளம்பியாச்சு..என்னமா பிச்சு உதறா

தாத்தா ஒருத்தர் .


ஹலோ..ஹலோ...என் லாப்டாப்பில் கீ போர்டு வேல பண்ணலை சார். so எல்லாமே வாட்ஸப்பு மெசஞ்சர் தான்.. ஒரு tech savvy.


ஹலோ..ஹலோ..40 பேர் target. இன்னிவரைக்குமே 167 பேர் ஆன்லைன் payment பண்ணிட்டாங்க..

சக்ஸஸ் ..சக்ஸஸ் ..சீட்டு கம்பெனி காரர் போலருக்கு..


ஹலோ..சொல்றதைக் கேளு ராத்திரிக்கு சாப்பாடு வெக்க வேணாம்.

வீட்டு சாப்பாட்டில் விடுதலை ஆன ஒரு மாமா..


ஹலோ ..ஹலோ...நான் சொல்ற steps எல்லாம் நோட் பண்ணிக்கோ அப்போதான் இந்த sum solve பண்ண முடியும்.. பையன் பரீட்சைக்கு on the wheels இலும் கருமமே கண்ணான அப்பா..


ஹலோ..ஹலோ..லக்‌ஷ்மி..நான் தான் பேசறேன்.

நாளைலேர்ந்து வேலைக்கு வந்துடு ..

வலது கரத்துக்கு ரிமைண்டர் கொடுக்கும் என்னை மாதிரி ஒரு பெண்..


இரண்டு மணி நேரமா..இதே மாதிரி ஹலோ ஹலோ ஹலோனு ..என்னை சுத்தி..

earphone போட்டுக்காமல் travel செய்யணும் என்கிற என் பாலிஸி ..

இன்று பல ஹலோக்கள் கேட்கணும்னு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கோ?

Monday, February 13, 2023

சமகாலப்_பாடல்கள்

 #செல்லமே_புதுயுக_சிறுவர்_இலக்கியம்

#சமகாலப்_பாடல்கள்


#தீராத_விளையாட்டுப்_பிள்ளை..

இந்தப் பாடல் பிடிக்காதவர்களே யாரும் கிடையாது.

இந்தப் பாடலை வைத்து ..ஒரு negative ..

ஒரு positive பாடல் எழுதினேன்.


என் பெண் அதைப் படித்துவிட்டு சொன்னாள்..

Negative is the reality..

Positive shows your quality.

So always positivity is eternity..


எழுதியதை..பாட்டாவே படிச்சுட்டயானு உங்க மை.வா கேட்கிறது..


இதோ பாடல்..


தேடினாலும் கிடைக்காத பிள்ளை..

கண்ணன்

குடும்பத்தில் எல்லார்க்கும்  மிகசெல்லப் பிள்ளை.(2)


தின்ன பிஸ்கட் ஒன்று கேட்பான்..பாதி 

பங்கை பிரித்து தன்  தம்பிக்குத் தருவான்..


என்னுலகம் என் குடும்பம் என்பான்..(2)

வீட்டுப்பெரியோரை 

என்றுமே மதித்து  நடப்பான்..(தேடினாலும்)


ஆப்பிலே கேம்ஸை இறக்கி.

.செல்லை.அழ அழச் செய்துமே

பாட்டரியை கரையான்..

ப்ளே ஸ்டேஷன் வேண்டுமென்று கேளான்..(2)

ப்ளே கிரவுண்டில் விளையாட  அடமும் பிடிப்பான்.. (தேடினாலும்)


வாட்ஸப்பில் ஹோம்வொர்க்கும் கேளான்.(2)

தனக்கு தெரிந்ததை முடித்து கைத்தட்டல் பெறுவான்..


பாடங்களை ஒழுங்காகப் படிப்பான்..அவன்

நண்பருக்கும் நாலுமே சொல்லித் தருவான்..(தேடினாலும்)


பள்ளியிலும் செல்லப் பிள்ளை அவன் தான்..(2)

அவன் பண்போடும் பணிவோடும்..

பேரெடுத்து..சிறந்தான்..


 ..நெஞ்சிலே இடமும் பிடிப்பான்....

 நெஞ்சிலே இடமும் பிடிப்பான்..

 துணிவோடு தப்பை தட்டியும் கேட்பான்..

( தேடினாலும்)

அன்புடன்

Akila Ramasami

Wednesday, February 8, 2023

namma_bengaluru_traffic

 #namma_bengaluru_traffic


ஆட்டோ,activa, Audi எல்லாம் ஹாரன் அடித்தபடி நிற்க..

அடிப் பிரதக்ஷணத்தில்

அரைமணியில் வீடு வந்தாச்சு.

Bike க்கு  bye bye ம்

காருக்கு farewellம் கொடுக்கும் காலம்..

தூரமில்லை..வெகு தூரமில்லை..


ரெண்டு,நாலு காலை நம்பறதை விட..

நம்ம கால் தான் நமக்குதவி

சரிதானே

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

 காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..


வேலைக்குப் போன அம்மாக்கள்

விவரம் தெரியாத பிள்ளைகள்

விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்

வினையேதும் ஆனதில்லை அப்போது..

தலைகீழ் எல்லாமாச்சு இப்போது..


முகமூடித் திருடர் போல்

மூடர்கள் வெறிக்கு பயந்து

முகத்தை துணியால் மறைத்தும்

மறைத்தே வீசும் அமிலத்தால்

மங்கிய வாழ்விங்கு ஏராளம்.


ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்

உள்ளூர பயமும் தொற்றிடுதே

உதறல் எடுத்தே உயிர் போய் வருதே

பேருந்து பயணம் இரவிலென்றால்

அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே

அரை வயிற்று உண்வோடு

அடக்கியே செல்லணுமே வீடுவரையில்.


ஊருக்குள் இருக்கையிலே

காருக்குள் போகையிலே

பேசத் துவங்கிடுவாள் அம்மா

பிடுங்கிப் பேசிடுவார் அப்பா

வழித்துணையாய் உரையாடல்

வீடு வந்து இறங்கி்யதும்

விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு


வயிற்றில் ஓர் நெருப்பு

வயதுப் பெண்...

்வீட்டிலிருந்தால்.

வெளியே சென்றால்..


வருமா ஒரு காலம்..

வெறிச்சென்ற தெருவிலும்

வெளிச்ச மில்லா வீதியிலும்

அச்சமின்றி இவள் நடக்க..

timing

 பள்ளிப் பேருந்து ஓட்டுனருடன் ஒரு பெரிய விவாதம்.

ஏம்ப்பா..'அழைச்சிண்டு' போவேன்னு சொல்லிட்டு இப்படி 'அடைச்சிண்டு' போறியே..

உங்களுக்கு சரியா காதுல விழலனா நானா பொறுப்பு..

#timing