காத்திருந்த அந்நாளும்
கடைசியாய் வந்தது..
பரீட்சையும் முடிந்தது..
பாட்டி வீடு நான்போக.
fan இல்லை..
phone இல்லை..
கணிணிதான் அங்கில்லை..
கண்கவரும் தொலைக்காட்சி ..
கண்டதும் தானில்லை.
வீடெங்கும் கும்மாளம்
மழலைகளின் பட்டாளம்
மேகமின்றி இடிமுழக்கம்....
சுவைதரும் கூட்டஞ்சோறு
கூடியே பெரியோர் சமைக்க
வட்டமாய் முற்றத்தில்
சட்டமாய் அமர்ந்தேதான்
உருட்டியும் தருவாளே
பாட்டியும் அன்புடனே..
நான் நீ என்றே போட்டி..
சிரிப்பாளே பாட்டி
காலியான பாத்திரம் காட்டி..!!!
கட்டிலில்லை.. மெத்தையில்லை
கட்டாந் தரையினிலே
கையே தலையணையாய்
கொள்ளை சிரிப்புடனே..
கிண்டல் கேலி கூத்துடனே..
கண்ணுறங்கிய நாட்களது..
அந்த நாளும் வந்திடாதோ..
ஆனந்தமது தந்திடாதோ!!!!
நினைத்தே ஏங்குகிறேன்....
திரும்பிவாரா தினங்கள் எண்ணி!!!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம் தோழி.நலம் நலமறிய ஆசை.இந்த கவிதை என் தாய் தமிழ்நாட்டுக்கே கொண்டு போய்விட்டது.நான் வீரா அதிகாலை இணையதளத்தின் துபாய் செய்தியாளராக வேலை செய்து வருகிறேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கிறேன்..தொடர்புக்கு
veera766@gmai.com
நன்றி வீரா அவர்களே..
உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு
அன்புடன்
akilacsr
Post a Comment