Sunday, July 3, 2016

ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்

ஸ்ரீராம்..ஜயராம்..ஜயஜயராம்..
ராமநாமம் சொல்லும் பேர்க்கு
நானிருக்கேன் என்பான் இவன்..
பொட்டிட்டு வேண்டும் பக்தரின்
பெருவினையும் பொடியாக்குவன் இவன்..
வடை மாலை சார்த்தி வழிபடுவோர்க்கு
வர மாலை தந்தருளுவன் இவன்..
அச்சம் தவிர்ப்பவன் இவன்..
அன்பரின் நண்பன் இவன்..
மலையாய்த் துயரம்..
பனிபோல் விலகும்..
மாருதி நாமம் சொல்கையிலே..
இவன் என் தோழன்.
என் மனம றிந்தவன்..
அசாத்தியன் இவன்..

அஞ்சனி புத்திரன் இவனைத்
தஞ்சம் அடந்தோர்க்கு..
சஞ்சீவன் இவன்..
பாதம் இவன் தொழுகையிலே..
பாவம் யாவும் விலகிடுமே..

No comments: