Wednesday, September 7, 2016

எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்..
எலி உனையே ..
எங்கே தேடுவேன்..


அனுமதி வாங்காமலே
எனக்குத் தெரியாமயே
என்வீட்டில்..
நுழஞ்ச உனை
எங்கே தேடுவேன்..

கட்டிலுக்கடியிலே
cupboard இடுக்கிலே
அட்டை டப்பாவிலே
அடைசல். பரணியிலே
எங்கே தேடுவேன்...

கண்டதெல்லாம்..நீயுமிங்கே
கடிச்சு குதறுவியா..
கம்பளி மட்டும்..உன்
கால் ..வயிற்றுக்கு..போதுமா..
எங்கே தேடுவேன்..

நிம்மதி போச்சதிங்கே
நித்திரையும் ஓடிப் போச்சே
நினப்பு எப்பவுமே
நீயாக இருக்கறியே..
எங்கே தேடுவேன்..

மசால் வடை வேணுமா..
bread butter போதுமா..
எது பிடிக்கும் உனக்குனு
எங்கிட்ட மட்டுஞ் சொல்லு..
எங்கே தேடுவேன்.

காணாததை தேடித் தரும்..
கால..பைரவருக்கு..
காசும் வெச்சாச்சு..
காலையும் புடிச்சாச்சு..
எங்கே தேடுவேன்..

காத்து கூட புகாத..
கான்க்ரீட்டு பொந்துக்குள்ளே..
வழிதவறி வந்த உன்னை..
வீடு தான் சேர்த்திடவே..
எங்கே தேடுவேன்..

சுதந்திரமா சுத்தின நீ
செல்லுக்குள்ள..
சிக்கிக்கொண்டு
சுகம் என்ன காண்பாயோ..
எங்கே தேடுவேன்..

வாய்ப் பேச்சு கேட்காத..
வயசுப் பசங்களை..நீ.
வந்த ஒரு நாளிலேயே
வழிக்கு கொண்டு வந்தியே..
எங்கே தேடுவேன்..

அலமாரி மூடியிருக்கு..
அடுக்கி எல்லாமிருக்கு..
அமைதி புரட்சியொன்று..
அரை நாளில் செய்த உனை..
எங்கே தேடுவேன்..

கொல்லி வெச்சு உனையிங்கே
கொல்ல எனக்கு் ஆசையில்ல..
சொல்லாம கொள்ளாம..
வந்த வழி போயி விடேன்..
எங்கே தேடுவேன்....

எம்பாடு புரியலையா..
என் சோகம் அறியலையா..
என்னோட தங்கம் நீ..
எம்மை விட்டு ஓடிவிடு..
எங்கே தேடுவேன்..

எலிகொரு எசைப்பாட்டு..
என்னை இங்கே.
பாட வெச்ச..
ஆண்டவா நீயே சொல்லு..
எங்கே தேடுவேன்..

தம்மாத்தூண்டு எலி ஒன்னு
இம்மாம் பாடு
படுத்துதடா..
இஷ்டதெய்வமெலாம்..எந்தன்
கஷ்டத்ததான் போக்கணுமே..









No comments: