Thursday, January 25, 2018

Jan 23rd 2004

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்
jan 23 rd 2004..
மறக்கமுடியாமல் தவிக்கும் போது மார்க்கு மீண்டும் வந்து வந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கார் முகநூலில்..

சீரங்கம்..
சீரங்கம்..
சோகத்தில் தத்தளித்த நாள்..
சீவிச் சிங்காரிச்சு சென்றவரில் சிலர்
சீறிய நெருப்பில்..
செத்து மடிந்த கோர நாள்..
ரங்கா..ரங்கா..ரங்கா..
கங்கும் தீயில் கதறினார் பலர்.
கல்யாணம் ஒன்று காரியத்தில் முடிவு..
பூ சரியா வெச்சிருக்கேனா..
புடவை இந்த கலர் சரியா.
புதுப் பெண்போல புறப்பட்டாள்..
பூகம்பம் காத்திருப்பது அறியாமலே
அலங்கரித்த மேடை..
அழகாய் மணமக்கள்..
அவசரமாய் போட்ட பந்தல்
அதில் வந்தான் எமன்..
வீடியோ பிடிக்க வந்தவனோ
விதியை மாற்ற வந்தவனோ..
சிறுபொறியை புறக்கணிக்க
சீரழிந்தது பலர் வாழ்வு..
சிறு வழி ஒன்றுதான்..
சிக்கிய பெருங்கூட்டம்..
தப்பிக்க வழியில்லை..
தலையில் விழுந்தது நெருப்பு
அமைதியாய் இருப்பவள்
அழுத குரல் கேட்கலையே..
அலறல்கள் வானைப் பிளக்க..
அரங்கனும் கலங்கியிருப்பானோ
புதுசாய் போட்ட மூக்குத்தி
பளிச்சென்று காட்டியது
போர்த்திய அவள் உடலை..

ஆண்டு பதினைன்ந்து ஆனாலும்..
ஆறாத காயம் நெஞ்சில்..
அன்பான என் சித்தி..
அவனடி சேர்ந்து விட்டாள்..

உயிர் பெற்று உற்சாகத்துடன்
உயிர் குடித்த மண்டபம்..
தெருவழியே நடந்த போது..
தாரையாய் கண்ணீர் ..தடுக்க முடியவில்லை..

தீயில் சுட்ட இந்தப் புண் ஆறவே மாட்டேங்கிறதே..
எத்தனை குடும்பங்கள்..இழந்தன சொந்தங்களை..
எந்த ஒரு function என்றாலும்..safety measures சரியாக இருக்கா என்று முதலில் பார்க்க..அரங்கன் கொடுத்த அலாரமோ..
















No comments: