தண்ணீர்..தண்ணீர்..
நாளைக்கு டாங்க் க்ளீனிங். முழு நாள் தண்ணீர் கிடையாதுனு அபார்ட்மென்ட் நோட்டீஸ் போர்டு பார்த்ததும்..அட ராமா என்று அலறி அடித்து வீட்டில் இருக்கும் சொப்பு சாமான்ல கூட தண்ணீர் ரொப்பி வெச்சேன். என்ன ஒரு நாள் தானே என்றாலும் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் செலவு பண்ணும்போதும் ஒரு அதீத டென்சன். காத்தும் மட்டும் குழாயில் வரும்போது கலக்கமும் கூட வந்தது.அப்போது பகீர்னு ஒரு பயம் தொற்றியது.
அதாங்க..day zero
day zero is approaching in cape town.
dream ல் நினைச்சாலும் திகிலா இருக்கு.
ஏகப்பட்ட விதிமுறைகள் தண்ணீரை உபயோகிக்க அங்கே.
இதை ஒரு அலாரமாக வைத்து நாமும் சேமிக்க துவங்கனும்..எப்படி?
காலையில் பல் தேய்க்கும்போது பைப்பை மூடி வைக்கணும்.
ஷவரில் குளிக்காமல் பக்கெட்டில் power bath எடுக்கணும்.
தோய்க்கிறேன் பேர்வழினு டாங்க் தண்ணீர் தீர்க்கக் கூடாது.
RO system இருந்தால் , வெளியேற்றும் தண்ணீரை சரியான முறையில் உபயோகிக்கணும்.
முக்கியமாக, நம்ம வீட்டு வலது கரத்துக்கு விளக்கமா சொல்லணும்.பைப்பை திறந்து விட்டு பாத்திரம் தேய்ப்பதில் அவர்கள் குஷியே தனி. ( ஆனா..handle with care. விவகாரம் பிடிச்ச அம்மானு வேலையை விட்டு ஓடிப் போய்டுவாங்க.)
வாட்டர் டாங்கர் எல்லாம் வழிய விடும் நீரை வாரம் பூரா உபயோகிக்கலாம். அங்கே கொஞ்சம் அவங்களை டைட் பண்ணனும்.
தோட்டம் துறவுமா இருக்கிற வீட்டுக்காரங்க..கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்கப்பா..
இன்னும் பெரிய லிஸ்ட்..அதையெல்லம் நீங்க சொல்லுங்க..
நீரின்றி அமையாது உலகு. இதை புரிந்து நடப்போம்.
திரவத் தங்கம்..இந்த தண்ணீர்.லாக்கரில் வைத்து பூட்ட முடியாது. என் லாக்கரில் 5 லிட்டர் தண்ணீர் வெச்சிருக்கேனு சொல்லும் காலமும் வருமோனு ஒரு பயமும் உண்டு.
அடுக்கு மாடிக் கட்டிடங்களும், ஆழ்கிணறுகளும் அசுர வேகத்தில் வளர்கிறது.
உறிஞ்சி எடுத்தோம்..உருவாக்க முடியாது இந்தத் தண்ணீர் என்ற பயமின்றி..
வற்றாத கண்ணீரையும்
வாளியில் பிடித்துவை
வீணாக்கும் ஒரு சொட்டும்
விதி மாற்றும் நாளையுமே.
வரப்போகும் நாட்களிலே.
விஞ்ஞானம் வளரந்துவிடும்.
கண்ணீரும் இங்கேதான்
குடிதண்ணீரா மாறிவிடும்.
எச்சரிக்கை மணியதுவே
எங்கோ ஒலிக்குதப்பா
எனக்கென்ன மனக்கவலை
என் வீட்டில் கொட்டிடுதே
எல்லா நேரமும் தண்ணீரே.
எண்ண்மதை ஒழித்திடுவோம்
நீரைப் போலச் செலவென்பது
கானல் நீராப் போகுமிங்கே
தங்கமும் பிளாட்டினமும்
தாராளமாய்ச் சேமியுங்க..
தண்ணீரை மட்டும் கொஞ்சம்
சிக்கனமாய்ச் சேமியுங்க.
வருங்காலச் சந்ததிக்கு
வாட்டர் என்பதை காண்பிக்க..
நிறமே இல்லாத நீர் தான்..நம் வாழ்வை வண்ண மயமாக்கும்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகனும்னா..நிறைய YouTube ம் கூகுளாண்டவரும் நிறைய சொல்றாங்க.
படிச்சு பயன் பெறுங்கள்.
தண்ணீர், பானி, வெள்ளம்,நீரு..எல்லாம் நம்ம சந்ததியும் அனுபவிக்க இன்னிக்கே உங்க வேலையை ஆரம்பிங்க..

No comments:
Post a Comment