Wednesday, August 29, 2018

.உன்னை விட

உன்னை விட..

விதையே இருக்காது..
 காயே கனியாய் இனிக்கும்..
நான் வெச்ச கொய்யா மரம்..

இது என் பொண்ணு
நட்ட மாமரம்..
மல்கோவா ...சுவையோ சுவை..
மண்ணு நல்ல மண்ணு இது..

அளவில சிறிசுதானாலும்
அன்னாசிப் பழம்..
அருமையா இருக்கும்..

வாழை இலைக்கு..
வெளியே போறதே இல்லை

இந்த மரக் கிளை இருக்கே
மங்களத்தின் அடையாளம்..

இந்தப் பூச்செடி ..
புது வகையாக்கும்..
பார்க்கவே கொள்ளை அழகு..

பக்கத்து வீடு நல்லவங்க..
பக்கத்துணையா இருப்பாங்க..

சுவற்றில் தொங்கும் படம்..
சின்னப் பைய்யன் வரைஞ்சது..

அணில் புறா மைனா எல்லாம்..
அடிக்கடி வந்து விளையாடும்..

தண்ணீர் வருகை பார்த்து
தவறாமல் மோட்டார் போடணும்..
இந்த குழாய் மட்டும்..
கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..

திருட்டு பயமே இல்லையிங்கே..
தைரியமா இருக்கலாம்..

ராசியான வீடுங்க..
வரிசையாய்..விளக்கங்கள்

வீட்டுச் சாவியை
வீட்டுச் சொந்தக்காரர் கையில்
் கவலையுடன் கொடுத்தபடி.
பல ஆண்டாய்...
குடியிருந்தவர்..

வாங்கிய வீடோ..
வாடகை வீடோ..
வாழ்ந்த விட்டை
விட்டு வரும் வலி..
வலி ....வலி்தான்...

No comments: