#அரசு_அலுவலக_அனுபவம்
மிடுக்காக அந்த பெண் ஆஃபிஸர் உள்ளே தன்
சின்ன..ஒரு பழைய கால மின்விசிறி சுற்றும் கேபினுக்குள் நுழையும்போதே..வழியில் ஃபைலோடும் பெட்டிஷன் லெட்டரோடும் உட்கார்ந்திருப்பவர்களை ஓரக் கண்ணால் பார்த்தபடியே செல்வார்கள்.
வரிசையா வெச்சிருக்கேன் மேடம் எல்லா ஃபைலும் என்று உதவி அதிகாரி சொல்லும் முன்னே..அங்கே பச்சை புடவை கட்டிக்கிட்டு ஒரு அம்மாவும் அவங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற பையனையும் உடனே அனுப்பு என்பார்.
கொஞ்சம் ஏமாற்றறத்துடன் ..(இதே வேலை இந்த அம்மாவுக்கு..நான் தான் எல்லா அடுக்கி வெச்சிருக்கேனே..உதவியின் மை.வாய்ஸ் சொல்ல..' எனக்கு தெரியாதா..யாரைக் கூப்பிடணும்னு' ஆஃபிஸர் எச மைண்ட் வாய்ஸ் பேச..
பென்ஷன் , வந்தது வர வேண்டியது, arrears கணக்கு, அன்ன்னிக்கு காலம்பற வந்த G.O
எல்லாம் விரல் நுனியில் இருக்கும்.
நாம் எல்லாம் government என்னும் machinery ந் அங்கம். நம் பொறுப்பு உணர்ந்து பணியாற்றணும்நு லெக்சர் கொடுக்கும் ஒருவர்.
வீட்டாள் வெளியாள் வித்தியாசமே கிடையாது.
உங்கள் உழைப்புக்கு இது கண்டிப்பா கிடைக்கணும்னு உறுதி அளித்தபடி அந்த ஆஃபீஸர்.
வேற யாருமில்லைங்க எங்க அம்மா தான்.
ஒரே ஒரு நாள் ஆபீஸ் போனேன்.
ஒரு சமயம் "அம்பி" இன்னொரு சமயம் ரெமோ..
குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் , நட்பு வட்டங்களுக்கும், தெரிந்த தெரியாத எல்லாருக்கும் பென்ஷன்னு சொன்னதும் எங்க அம்மா பேர் தான் ஞாபகம் வரும்.
.ஜோசியர் சொன்னாரு..இந்த திசையில் இருக்குற வூட்ல தான் பேப்பர் திருத்தறாங்கனு
மஞ்சப் பையோடு வீட்டு வாசலில் டிபார்ட்மெண்ட் தேர்வுகள் முடிஞ்சவுடன் காத்திருக்கும் ஒரு கும்பல். மஞ்சப் பை காண்பிச்சா மயங்கிடுவேனானு மறுபரிசீலனைக்கே இடமில்ல்லை..போங்க இங்கிருந்துநு அவர்களை அனுப்ப அம்மாவுடன் சேர்ந்து நானும் பாடு பட்டிருக்கேன்.
ரிடையர் ஆகிய போதும் , எல்லா ஆர்டரும் டிப்பில் வைத்து உடனே யார் யாருக்கு என்ன வரும்..அதுக்கு என்ன என்ன செய்யணும்னு ஃபோன் பண்ணி சொல்லிடுவாள்.
எங்க அம்மா எழுதிய கடைசி மெயிலும் கூட கணவனை இழந்த ஒரு சகோதரிக்கு இன்னும் அவர்களுக்கு வர வேண்டிய தொகையை கணக்கு போட்டு ..இந்த இந்த ரெகார்ட்ஸ் எல்லாம் எடுத்துப் போய் செய்து முடி' என்றது தான்.
நேற்றும் கூட எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் சொன்னார்.." அம்மா இருந்திருந்தா..கரெக்டா எங்களுக்கு சொல்லிடுவாங்க'..
பாஸ்போர்ட் வாங்க காசும், ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க காசும் கொடுத்து அலைந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அம்மா படத்திலிருந்து சிரிக்கிற மாதிரி இருக்கு.
இந்தப் பதிவு என் அம்மா போன்ற பல அரசு ஊழியர்களுக்கு என் dedication கூட.
இந்த தலைப்பில் என்னை அவள் என்னை விட்டுப் பிரிந்த இந்நாளில் (நாளை)எழுத வைத்த மத்யமருக்கு நன்றி.
No comments:
Post a Comment