(உயிர்)பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றேன்..ஐயனே..என் ஐயனே..
உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.
2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.
ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..
gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.
குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.
பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..
குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து.
counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.
குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..
மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.
கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.
மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.
மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை. அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.
திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.
ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை).
இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..
வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.
வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.
மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..
மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aao maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன்.
என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான்.
வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..
நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.
cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும் செய்திகள்..
கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.
காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம்.
எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே
அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..
எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும் பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன். No prayers go unanswered
வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.

No comments:
Post a Comment