Monday, December 16, 2019

செல்லுமிடமெல்லாம் செல்லு..

செல்லுமிடமெல்லாம் செல்லு..

ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்.
காலிங்பெல்லை அழுத்த  கவச குண்டலம் மாதிரி "காதோடு தான் நான் பேசுவேன்" ஸ்டைலில் செல்லில் சொல்லாடியபடி..சைகையில் என்னை வரவேற்றாள்.
சோஃபாவைக் காண்பித்து உட்காரு..என்றாள் சைகையில்..
காஃபி கலக்கட்டுமா..டீயா என்று ஆத்திக் காண்பித்தாள்..
சரி பேசிண்டிருக்கா பாவம் என்று..
டீவியில் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழு மூஞ்சி சீரியலை மாற்றி..
அவள் புதுசா வாங்கியிருப்பதாக சொன்ன ஒரு புத்தா பொம்மையும் பார்த்துக் கொண்டே..
கிச்சனுக்குள் நுழைந்தேன்..
காஃபி ஆத்தறதுக்கு..இரண்டு கை வேணுமே..
இப்போ ..அவள் 'செல்ஃபோன்"..காதுக்கும் கழுத்துக்கும் நடுவில் சாண்ட்விச்சாகி கொண்டிருந்தது..
அடிப்பாவி...கொடு ..நானே கப்பிலே விட்டுடறேன்..
"Snacks.. Snacks .."அங்கே இருந்த டப்பாக்களை காட்டி சொல்லவும் ..
ஒரு தட்டில் போட்டேன்..

சோஃபாவுக்கு மீண்டும் வந்தோம்.
" நான் அப்பறமா பேசறேன் அத்தை...இப்போ என் ஃப்ரண்ட் வந்திருக்கானு' ஒரு வழியா பேச்சை முடிச்சு..
" நான் பாதில கட் பண்ணினா அத்தைக்கு கோவம் வந்துடும்..என் கூட பேச மட்டும் உனக்கு டைமே கிடைக்காதுனு குத்தம் சொல்வாடி.. Hope you understand ' என்றாள்..
நானும் இப்படி யாராவது வரும்போது ..இதே மாதிரி ஃபோனில் மாட்டி அவஸ்தை பட்டிருக்கேன்.
எங்க அரட்டைக் கச்சேரி ஆரம்பிச்சது..
ஆனால்..
கழுத்தை சாய்ச்சுண்டே பேசிண்டிருந்தா..
ஃபோன் அதே சாண்ட்விச் நிலையில்..
சிரிப்பு தாங்கலை எனக்கு..
" ஏய்..வா ஒரு செஃல்பி எடுக்கலாம்" ..நான் சொல்ல..
எப்பவும் போல நாக்கை வெளியே தள்ளி,கண்ணை உருட்டி ஒரு போஸ் செட்டாக..
" ஐயோ..என் செல்லை காதிலேயே வெச்சிருக்கேனேடி ..பாவி ..சொல்லமாட்ட நீ"..
அன்புக் கோவத்தில் அவள்..என்னை அடிக்க ஓங்க..
ஆஹா..அற்புதமான எங்கள் candid photos click click..click..

இதனால் சொல்ல வருவது என்னவென்றால்..

" பேசுங்க..பேசுங்க..பேசிக் கிட்டே இருங்கனு" ..
ஃபோன் service providers சொல்லிக்கிட்டே இருப்பாங்க..
ஆனால்..நாம் தாங்க..நம்மள இந்த சுழல்லேர்ந்து காப்பாத்திக்கணும்..

No comments: