#Sunday_topic
#valentine's day
#நானறிந்த_(என்)_காதல் கதை
*சாப்பிட்டியா நீ என்று கேட்கும்போது காதலை விட கரிசனக் காதல்.❤️❤️
*பசங்க ஸ்கூல்லேர்ந்து இன்னும் வரலையானு கேட்கும்போது கண்டிப்போட கவலை காட்டும் காதல் ❤️
*புடவை கடைக்கு கூட்டிப் போய் ' உனக்கு பிடிச்ச பத்து முதல்ல செலக்ட் பண்ணு..அதிலிருந்து ஒன்று எடுத்துக்கோ என்று வாய் சொல்லிவிட்டு பக்கத்து கவுண்டரில் தனக்கு பிடித்த கலரை நாலு தடவை உற்று பார்த்துவிட்டு..' இதை எடுத்துக்கோயேன்' என்று வாய் விட்டு சொல்லாத வாத்ஸல்யக் காதல் ❤️
( பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் இந்த expression புரிஞ்சது)🤩
*சாப்பாடு வாயில் போடும் முன்னே சூப்பரா இருக்கு என்று சொல்லும் சொக்கத் தங்கம். எத்தனை ❤️❤️
( பின்ன..அடுத்த வேளை half boiled தட்டுல விழுமே)💃💃
*நீ போய்ட்டு வா.நான் இருக்கேன் இங்கனு சைக்கிள் கேப்பிலும் சுதந்திரம் தேடும் ஜீவன்.😀😀. அப்படினு வெளியே அனுப்பிட்டு..
எங்க இருக்க..location share பண்ணுனு..பின்தொடரும் ❤️❤️
*மெயில் அடிச்சாலும் சரி ,மெசேஜ் செஞ்சாலும் தன் மனைவி கண்டிப்பாக பார்க்க மாட்டாள்னு தெரிஞ்சும் விடா முயற்சி விக்கிரமாதித்தர்.
பொறுமை காக்கும் ❤️❤️
( எத்தனை group ல இருக்கோம்..எத்தனை போஸ்ட் போடணும் நமக்கு)😃😃.
*valentine day க்கு gift என்னன்னு கேட்டால் ..என் "wallet "மட்டுமல்ல என் " வாழ்க்கையும்' உன் கையில் தானே இருக்குனு கவி பாடும் ❤️❤️🤔
*ஊர் வம்பு சொல்லும்போது தலையை தலையை ஆட்டி கேட்டுபுட்டு நாம கேள்வி கேக்கும்போது 'இப்ப யாரைப் பத்தி சொன்னே' என்று பல்பு கொடுக்கும் (life) partner ❤️❤️❤️..💡💡
இன்னிக்கு கூட பாருங்க..
Train ல ..வெய்யிலடிக்கற side ல ..நான் உட்கார்ந்துக்கறேன்னு சொல்ற....❤️
வள வளனு பேசாத ❤️
நாளும் வளரும் ❤️❤️


No comments:
Post a Comment