#ஸண்டே_ஸ்பெஷல்..
#வைராக்கியம்
இப்படியெல்லாம் யாருக்காவது பிரச்சனை வந்து ..வைராக்கியமா இருக்கணும்னு என்கிற எல்லைக்கு தள்ளப்பட்டிருக்கீங்களாப்பா?
இருக்கேனே..நான் இருக்கேனே..!!!!
என்னை மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்க..அதுவும் ..
குட்டிப் பசங்க நிறைய இருக்காங்கனு ..
"நீயா நானா" ப்ரோக்ராம் பார்த்ததும் தெரிஞ்சது.
அதில் நிறைய குழந்தைகள் சொன்ன குற்றச்சாட்டு..' எங்க வீட்டில யாருக்கும் என் close friend ஐ பிடிக்கலை'.
காதலுக்கு தடை.. சரி..
நட்புக்கு தடையா?..
அதே தான் அந்தக் காலத்திலும். இந்தக் காலத்திலும்.
திருச்சில பாட்டி வீட்ல வளர்ந்த நானு ..சென்னைப் பட்டணம் பார்க்க லீவுக்கு மட்டும் வருவேன். அப்போ அந்த குட்டியூண்டு வயசிலே..' இவ தான் உன் ஃப்ரண்டு..அம்மா அப்பா ஆஃபிஸ் போய்ட்டு வர வரைக்கும் விளையாடுனு'..ஹவுஸ் ஓனர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு துறு துறு குட்டிப் பொண்ணை காண்பிச்சாங்க.
அப்போ ஆரம்பிச்சது எங்க நட்பு.
அவளுக்காவே லீவு விட்டதும் சென்னைக்கு வரணும்னு ஆசையா இருக்கும். மத்தபடி சென்னை ..எனக்கு அத்தனை பிடிக்காது.
ஆறாங்கிளாஸ் வந்ததுமே..இனிமே நீ சென்னைல தான் படிக்கணும்னு என் தோழி ஸ்கூல்லயே என்னையும் சேர்த்து விட்டாங்க.
இவளோட தான் நீ இனிமே சமத்தா ஸ்கூல் போய்ட்டு வரணும். அவ சொல்றபடி கேளு. ட்ரெயின் ஏறும் போதோ, ரோட் க்ராஸ் பண்ணும் போதோ அவளோடயே தான் இருக்கணும்னு..ஒரே அறிவுரை.
அவ தான் என் ஹீரோ(யின்).
அவளைப் பார்த்தாலே ஆச்சரியமா இருக்கும்.
பட் பட்னு கேட்கற கேள்விக்கு பதில் சொல்வா..( நான் திரு திரு தான்)
இங்க்லீஷல பிளந்து கட்டுவா..
( ஆ..நு ..வாயில ஈ போனாலும் தெரியாது..அப்படியே அவளை பார்த்து ரசித்தாலும்..ஐயோ..நம்மள இங்கிலிபிஸ்ல பேசச் சொல்லுவாளோனு ஒரு நடுக்கம்).
நேர்கொண்ட பார்வை,நிமிர்ந்த நடை..எல்லாம் அவளோட speciality.
என்னை விட ஒரு க்ளாஸ் பெரியவ. எனக்கு ரிங் மாஸ்டர் அவளாகிட்டா..
முதல்ல..இந்த பயத்தை விடு..தெளிவா பேசுனு..சொல்லிக் கொடுத்ததே அவ தான்.
இங்கிலீஷ்ல பேசலைனா..என் கூட பேசாதேனு..மிரட்டுவா..
தப்பா பேசினாலும்..dont worry ..I will correct nu..சொல்லி கொடுத்த ஆசான்.
வா..சைக்கிள் ஓட்டலாம், கடைல சாமான் வாங்கலாம், பேரம் பேசலாம், தப்புனு தெரிஞ்சா கண்டிக்கலாம்..இப்படி என்னை செதுக்கிய சிற்பி
So...அம்பி லெவல்ல இருந்த அகிலாவை ..ரெமோ லெவலுக்கு மாத்தினாள்.
இப்போதான் ஆரம்பிச்சது பிரச்சனை..
அம்மா புடவை தலைப்புக்குள் மறைஞ்சு பதில் சொன்ன நான்..
Point ..pointnஆ பேச ஆரம்பிச்சேன்.
சில விஷயங்கள் ஏகத்துக்கு பாராட்டு கிடைக்கும்.
நிறைய நேரம்..' அவளோட சேர்ந்ததுமே..அவள மாதிரியே பேசறா பாருனு'..சித்தி ..எங்கம்மாவை உசுப்பி விடுவா..
நாளைலேர்ந்து என்னோட வா..நானும் அதே ட்ரெயினில் தான் போறேன்.. அவளோட ஒண்ணும் நீ போக வேண்டாம்னு..தடா ..எனக்குத் தடா வரும்..
நாம..ஜகஜ்ஜாலக் கில்லாடி யாச்சே..
இன்னிக்கு சீக்கிரமே போகணும்ம்னு ..ஜூட்..ஜாலியா அவளோட போய்டுவேன்.
சில சமயம் comparison செய்து ..என்னை complex mind க்கு தள்ளி விடும் ஏவுகணைகள் விடப்படும்.
சில சமயம்..complaints ஆக மாறி..எங்க bond ஐ கட் பண்ண சதிகள் நடக்கும்.
"இவளோட சேர்ந்ததிலேர்ந்து முன்னாடி மாதிரி இல்ல நீ இப்போ...உன் நல்லதுக்குதான் சொல்றேன்..அவளை மாதிரி அதிரடியா இருக்காதேனு'..sentiment ஆ scene நடக்கும்.
ஆனா..நாம் எடுத்த முடிவு.."இதுதான் என் தோஸ்த்..இவ நல்லவ..யார் என்ன சொன்னாலும் இவ தான்..இவ தான்னு"..
அன்னிக்கு மனசில பதிஞ்ச வைராக்கியம்..( அப்பாடா..தலைப்புக்கு வண்ட்டேன்). இன்னிக்கும் ,ஒரு 45 வருஷமா தொடர்கிறது.
இதுக்கு நடுவுல சைக்கிள் கேப்பில் என் க்ளாஸ் மேட் ஒருத்தி வீட்டுக்கு வர ஆரம்பிச்சாள்.
செம்ம சீன் போடுவா.
அந்த சீனில் மயங்கிய எங்கம்மாவும் சித்தியும்..' இவளெல்லாம் உன் ஃப்ரண்டா வெச்சுக்க தோணாதேனு' ஒரு இடி இடிப்பா..
நமக்கு தெரியாதா..யார் அசல்..யார் நகல்னு..
எத்தனை இடி இடிச்சாலும்..நான் எடுத்த முடிவிலேர்ந்து ..ஒரு அடி நகரலையே..
"என்னைக் கொஞ்சம் மாற்றி..'
இல்ல இல்ல..என்னை ரொம்பவே மாற்றி....எல்லாத்தையும் face பண்ணக்கூடிய தைரியத்தை கற்றுக் கொடுத்தாள். வாஞ்சையுடன்.. Wisdom சொல்லிக் கொடுத்தாள்.
அன்னிக்கு..ஒரு நிமிஷம் slip ஆகி இருந்தாலும் ..ஒரு ஆகச் சிறந்த நட்பை இழந்திருப்பேன்.
எங்கேர்ந்து அப்படி ஒரு strong opinion வந்ததுனு இன்னி வரைக்கும் தெரியாது.
Still going strong.
ஆனா என்ன?..
தினமும்..நீ செளக்கியமா..நான் செளக்கியமா..என்ன சமையல் ..இப்படி watsapp எல்லாம் கிடையாது.
அது எதோ ஒரு டெலிபதி எங்களுக்குள் உண்டு.
எப்படினே தெரியாது. We stand by each other at all times.
இது ஒரு நட்பு வைராக்கியம்.
அன்னிக்கு தளர்ந்திருந்தால்..இன்னிக்கு எனக்கு தோள் கொடுக்கும் ஒரு அழகான நட்பை இழந்திருப்பேன்னு..எப்பவுமே நினைப்பேன்.
இதெல்லாம் ஒரு வைராக்கியமானு தோணும்..
அப்போ.அவங்க போட்ட pressure இருக்கே..சாமீ...விளிம்புக்கு கொண்டு போய்டுவாங்க..
எதை செஞ்சாலும்..
அவ சொல்லிக் கொடுத்தாளா..?
இப்படியே டார்ச்சர்..😩😩
ஆனா..அன்னிக்கு நான் எடுத்த முடிவு..'
இவ நல்லவ..வல்லவனு..'....💪💪💪
அப்புறம் ஒரு லெவல்ல..என்னை கீழே போட்டுட்டு..அவளை கொண்டாட ஆரம்பிச்சாங்க..அதுல எனக்கு மகா சந்தோஷமே..
என் வைராக்கியம் என்பது..இந்த நட்பு பந்தம் என்றும் நிலைக்கும்னு ..மனசு சொன்னத கேட்டேன்.. இன்னிக்கும் happy aa...ஓஹோ மேகம் வந்ததோனு ..சைக்கிள்ள கை கோர்த்து பாடிண்டு சென்றதை ..அசை போட்டபடி இருக்கேன்..
Its a coincidence..இன்னிக்கு அவ பிறந்தநாள் கூட..
happy birthday to you dear.💐💐💐💐💐

No comments:
Post a Comment