Thursday, October 5, 2023

Madhyamar-வந்ததும்_வருவதும்

 #Sunday_topic


#வந்ததும்_வருவதும்..


Roller coaster life .

Role பல காத்திருக்கும்.

Rule போட்டு நடக்க நினைத்தாலும்..

Ride செய்வது என்னமோ அவன் தான் ..அவனே தான்.🙏🙏🙏🙏


2020 ல் தடைபட்டால் என்ன..

2021 ..இருக்கே..

எப்போதும் போல நம்பிக்கை இழக்காத எண்ணங்கள்.💪


ஜாம் ஜாம்னு செய்யணும்னு ப்ளான் செய்த பெண்ணின் திருமணம் 

Zoom zoom என்று நடந்தது..

Virtual வாழ்த்து ..

வைரஸ் விரித்த வலையில்..

விஸா கிடைக்காது என்று உறுதியாக..

வாழ்க்கையை துவக்குங்கள் என்று.. ..  இரு தரப்பினரும் வழி காண்பித்தோம்.

வாழ்த்தியவர்கள் பலர் ...  விஷ வார்த்தைகளும் சேர்த்தனர் சிலர்

அன்பு வேர் ஆழமாக பதிந்திருக்க..

எந்த அம்புக்கும் சாயவில்லை.


வீழ்வோம் என்று நினைத்தாயோ..

வாக்கு மட்டும் மை.வாய்ஸில் எப்போதும் உண்டு.


"காசே செலவழிக்காம கல்யாணம்னு".. இன்னும் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு..

No reaction. But respond with a smile.


"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்னு "....சோகப் பாட்டு பாடாமல்..

நடப்பதெல்லாம் நல்லதே என்ற மனப்பக்குவம் தந்த ..என் குலதெய்வத்துக்கும் குருவான மஹா பெரியவாளுக்கும் என் பூரண சரணாகதி.🙏🙏🙏


வரவு ..ஒரு அருமையான மாப்(பிள்ளை)

அகிலாக்கு மாமியார் போஸ்ட்.😄😄😄💃👍💐💪💪💪


எப்போதும் போல..2021 லயும் வித விதமா உப்புமா செய்தேன்.🥕🥬🍅🤦


வரலாறு முக்கியம்..😄😄😄


சமையல்  , சந்திப்புகள்..

சமயோஜிதமா ஃபோட்டோ எடுத்து வைத்து விட்டேன்.📷📷📸


என்னிக்காவது கஜினி சூர்யா மாதிரி ஆனால் உதவுமே அதுதான்..😄😄😄


இழப்புகள் ..எக்கச்சக்கம்..

எதுவுமே வேண்டாமென்று ..

முகனூலிலிருந்து வனவாசம் சென்றேன்..

நாட்டம் குறைந்தது..

எட்டிப் பார்ப்பேன் ..எப்போதாவது.


நல்ல குரு அமைய..

சுந்தர காண்டம் பாராயணம் விடாமல் படித்தேன்.


ஒவ்வொரு ஸர்கமும் , ஒவ்வொரு முறை படிக்கும்போதும்..புதுத் தெளிவு கொடுத்தது.


கதவு திறந்தது.. நவம்பரில் ..

கடல் கடந்து செல்ல..

முதல் முதல் வெளிநாட்டுப் பயணம்..அதுவும் அகிலா..akela வாக( தனியாக)...😄💪💪💪


முதல் முறையாக அப்பாவை விட்டு வந்திருக்கேன். மாப்பிள்ளையின் அன்பில் நான் இங்கு  திளைக்க..

என் அப்பா..அவரின் மாப்பிள்ளை..அதான் என் வூட்டுக்காரரின் கவனிப்பில் இருக்க..🙏🙏


முதல் முதல் முறை..வெளிநாட்டில் புது வருடக் கொண்டாட்டம்.


2022 பிறந்தாச்சு..


வருவது என்ன வென்று யாரரிவார்?


வரம் என்ன வாங்கி வந்தேன்..

விடை தெரியாக் கேள்விகள்..

வருவது எதுவாகிலும்

வலிமை மட்டும் தந்துவிடு..

வலி தந்தாலும்..வெளியேற

வழி காட்டிவிடு..


முதுகு நிறைய கர்மா எனும் மூட்டை இருக்க..

நல்ல சொல், செயல் ,எண்ணம் கொண்டு ..ஒவ்வொன்றையும் என் வாழ்க்கையின் mission ஆக மாற்ற முயற்சியில் இன்னும் தீவிரமாக இருக்க முடிவு.


வாழும் வரை..வாய் விட்டு சிரி..

இதுதான் நம்ம பாலிஸி..


ரொம்ப முக்கியமா ..

உள்ளுக்குள்ளே இருந்து தலை நீட்டும் அகிலானந்தமயியை..

ஆத்மார்த்த ஸ்நேகிதியை..

அவள் தத்து பித்து தத்துவங்களை....தட்டிக் கொடுப்பேன்.


வருங்காலம்..

வர வர பார்த்துக் கொள்ளலாம்.


' நீ நதி போல ஒட்டிக் கொண்டிரு'..

இந்த வரிகள்..எப்போதும் என் எனர்ஜி பூஸ்ட்டர்

No comments: