Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Sunday, December 7, 2008

அழகு மலராட...


பூசையிலும் நீதானே..
ஆசையிலும் நீதானே..
மணப்பதுவும் நீதானே..
மகரந்தசேர்க்கையிலும் நீதானே..

மலர்கொத்தாகி மணம் பரப்புவாயே....
மலர்வளையமாகி மனம் கனப்பாயே..
சூரியனைக் கண்டே சீக்கிரம் மலர்வாயே
நிலவின் ஒளியில் நிர்மலமாய் ஜொலிப்பாயே..

குழந்தை சிரிப்பில் உன்னழகே
குமரியின் தலையில் மின்னுமழகே
கலர்கலராய் கண்ணை கவருமழகே
கிளர்ச்சியும் ஊட்டும் கவிதையழகே..

காகிதப்பூக்கள் கடையிலே குவிந்துகிடக்க
கசங்கியே போனாலும் கவர்வது உன்னழகே..
வாழ்வு எனும் சிறுபயணத்தில்
வாடிப் போகிறாயே .. சீக்கிரந்தான்!!!!!

ஒருநாளே வாழ்ந்தாலும் ..
ஓராயிரம் தடம் பதித்தவளே..
மீதமுள்ள என்ஆயுள் தருகிறேன் நான் உனக்கு..
மறுக்காமல் ஏற்பாயா.. மலரே .. நீயுந்தான் ????