Tuesday, December 17, 2019

சமையல்_பாடம்

#சமையல்_பாடம்

"மாமி..பாயசம், தயிர் பச்சடி,ஸ்வீட் பச்சடி, கோஸ்மல்லி, கறி, அவியல்,போளி, துவையல் மாங்காய் பிசறல்..எல்லாம் வரிசையா வெச்சிருக்கேன். மிஸ் பண்ணாமல் பரிமாறுங்கோ'
 அஸிஸ்டெண்ட் ஆணை பிறப்பிக்க ..சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பரிமாறும் படலம் ..

இலை ரொம்பியாச்சு..சிக்னல் கிடைச்சாச்சு..அட்டாக் ஆரம்பம்..

என்னை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் ஒரு மை.வாய்ஸ்.

பாயஸத்தில் கை வைக்கும் நேரம்...
ஒன்பது கஜப் புடவை லேசாக தெரிய..காலில் இட்ட மஞ்சளும் குங்குமம் ஜொலிக்க..கதவோரத்திலிருந்து ரெண்டு கண்கள் மட்டும்..தேர்வு எழுதிய மாணவனாய்..

புரிந்தது..அவள் தவிப்பு..
சமைத்து கொடுத்து விட்டு...சாமியை வேண்டியபடி நின்றவள் உள்ளத்தை...
' கண்டு கொண்டேன் ..கண்டு கொண்டேன்'
அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூஜிக் தான்..

"பாயஸம் மதுரமா இருக்கு' ஆரம்பித்தேன் நான்.

பக்கத்திலிருந்த என் அத்தை பெண் ' மாமி போளி என் favourite . சூப்பரா இருக்கு' .

எதிரில் உட்கார்திருந்த ஒரு வயதான மாமி..' பருப்பு உசிலி வாயில போட்டு பார்...ஏக ஜோர்'

'மாமி..அந்த பைனாப்பிள் பச்சடி ரெசிபி எனக்கு கொடுங்கோ.
.'மாமி..இப்படி தெளுவா எப்படி ரசம் வெக்கறேள்'..
#Ripple_effect

வெந்து புழுங்கும் வெயிலில் பொங்கி போட வந்தவள்..மனசு  இன்பத்தில் வழிய..

' மாமி..உங்க அட்ரஸ் கொடுங்கோ' பரிமாறல்கள் ஆரம்பம்.

வெத்தலை பாக்கு வாங்கி கிளம்பும்போது.. 'மாமி.. இந்தாங்கோ ரெண்டு வடையும் போளியும் எடுத்துண்டு போங்கோ உங்க அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ' என்று special கவனிப்பு எனக்காக்கும்.

#பாராட்டு. .இது வாங்கும்போது சந்தோஷப் படறோம்.
கொடுக்கும்போது ஏன் கஞ்சத்தனம் படறோம்?

யார்  எதை எப்போது  செய்தாலும் ஒரே ஒரு சின்ன பாராட்டை கொடுத்துப் பாருங்க..
வ்டையும் போளியும் மட்டுமல்ல.
கூடை கூடையா அன்பும் கிடைக்கும்.

என்னடா இது..சனிக்கிழமை காலையில் சமாராதனை சாப்ப்பாட்ட்டுக்கு போயாச்சானு நினைக்கிறீங்களா..?
உள்ளே இருக்கும் அகிலானந்தமயி கொஞ்சம் வெளியே தலை காட்டினாள்..நீங்க மாட்டிக்கிட்டீங்க அம்புட்டுதேன்.😀😀

சமையல்_பாடம்

#சமையல்_பாடம்

"மாமி..பாயசம், தயிர் பச்சடி,ஸ்வீட் பச்சடி, கோஸ்மல்லி, கறி, அவியல்,போளி, துவையல் மாங்காய் பிசறல்..எல்லாம் வரிசையா வெச்சிருக்கேன். மிஸ் பண்ணாமல் பரிமாறுங்கோ'
 அஸிஸ்டெண்ட் ஆணை பிறப்பிக்க ..சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பரிமாறும் படலம் ..

இலை ரொம்பியாச்சு..சிக்னல் கிடைச்சாச்சு..அட்டாக் ஆரம்பம்..

என்னை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் ஒரு மை.வாய்ஸ்.

பாயஸத்தில் கை வைக்கும் நேரம்...
ஒன்பது கஜப் புடவை லேசாக தெரிய..காலில் இட்ட மஞ்சளும் குங்குமம் ஜொலிக்க..கதவோரத்திலிருந்து ரெண்டு கண்கள் மட்டும்..தேர்வு எழுதிய மாணவனாய்..

புரிந்தது..அவள் தவிப்பு..
சமைத்து கொடுத்து விட்டு...சாமியை வேண்டியபடி நின்றவள் உள்ளத்தை...
' கண்டு கொண்டேன் ..கண்டு கொண்டேன்'
அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூஜிக் தான்..

"பாயஸம் மதுரமா இருக்கு' ஆரம்பித்தேன் நான்.

பக்கத்திலிருந்த என் அத்தை பெண் ' மாமி போளி என் favourite . சூப்பரா இருக்கு' .

எதிரில் உட்கார்திருந்த ஒரு வயதான மாமி..' பருப்பு உசிலி வாயில போட்டு பார்...ஏக ஜோர்'

'மாமி..அந்த பைனாப்பிள் பச்சடி ரெசிபி எனக்கு கொடுங்கோ.
.'மாமி..இப்படி தெளுவா எப்படி ரசம் வெக்கறேள்'..
#Ripple_effect

வெந்து புழுங்கும் வெயிலில் பொங்கி போட வந்தவள்..மனசு  இன்பத்தில் வழிய..

' மாமி..உங்க அட்ரஸ் கொடுங்கோ' பரிமாறல்கள் ஆரம்பம்.

வெத்தலை பாக்கு வாங்கி கிளம்பும்போது.. 'மாமி.. இந்தாங்கோ ரெண்டு வடையும் போளியும் எடுத்துண்டு போங்கோ உங்க அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ' என்று special கவனிப்பு எனக்காக்கும்.

#பாராட்டு. .இது வாங்கும்போது சந்தோஷப் படறோம்.
கொடுக்கும்போது ஏன் கஞ்சத்தனம் படறோம்?

யார்  எதை எப்போது  செய்தாலும் ஒரே ஒரு சின்ன பாராட்டை கொடுத்துப் பாருங்க..
வ்டையும் போளியும் மட்டுமல்ல.
கூடை கூடையா அன்பும் கிடைக்கும்.

என்னடா இது..சனிக்கிழமை காலையில் சமாராதனை சாப்ப்பாட்ட்டுக்கு போயாச்சானு நினைக்கிறீங்களா..?
உள்ளே இருக்கும் அகிலானந்தமயி கொஞ்சம் வெளியே தலை காட்டினாள்..நீங்க மாட்டிக்கிட்டீங்க அம்புட்டுதேன்.😀😀

சொர்கத்தின் வாசப்படி..

சொர்கத்தின் வாசப்படி..

என்ன அப்பு..ராத்திரி நன்னா தூங்கினியா..
நான் போட்ட சூடான சுவையான hatti kaapi உறிஞ்சியபடி ஊரிலிருந்து வந்த அத்தை தன் அண்ணாவைப் பார்த்து கேட்க..
எங்க இப்போ எல்லாம் ..எத்தனை mg dosage ஏத்தினாலும் தூக்கம் மட்டும் வரமாட்டேங்கிறது.
போறாததுக்கு இந்த வயித்து பிரச்சினை வேற..பசியே இல்ல..சாப்பிடணுமேனு இருக்கு..
இதுக்கு நடுவுல பொட்டாசியம் ஜாஸ்தியாச்சு. சோடியம் ஒரேடியா இறங்கிடுத்து..BP யும் கூட சேர்த்து ஏறிக்கிடக்கு..அத விடு..உன்னோட சக்கரை என்ன சொல்றது..report வந்தாச்சா..
பதில் சொல்ல ரெடியாய் இருந்த அத்தை Eveready போல charge ஆனா..
அதை ஏன் கேட்கிற அப்பு..ஒரு சமயம் 100,200,250,300..ஏதோ கிரிக்கெட் score போல சொல்லத் துவங்கினாள். எலை தழை சாப்பிடுங்கறா சில பேர்..சாதமே கூடாதுங்கறா..பழம் பக்கமே போக முடியறதில்ல.இந்த மாத்திரை மருந்து இல்லாட்டி எப்பவோ டிக்கட் வாங்கியிருக்கணும்..ம்ம்ம்.
என்னத்த செய்ய..இப்படித்தான் காலத்தை ஓட்டணும்னு தலை எழுத்து.. .குழந்தைகளுக்கு சிரமத்தை கொடுத்துண்டு..
.கிச்சனிலிருந்து கரண்டியும் கையுமா இவாளை இந்தச் சோகக் கடலிலிருந்து காப்பாற்ற நான் ஓடி வந்தேன்.
அன்ணனும் தங்கையும் அந்த காலத்து விஷயத்தை..புதுக்கோட்டை பொக்கிஷங்களை எடுத்து விடுவேள்னு பார்த்தா..இப்படி சந்தோஷமில்லா சம்பாஷணையா..
அலோபதியும் ஆயுர்வேதமும் பேசவா இப்படி ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஓடோடி வந்தே அத்தை..நான் வீர வசனம் பேச..
அப்பறம் தோணித்து ..எத்தனை சுலபமா சொல்லிட்டேன்..
வலிகள்.. உடல் மன ரீதியாக வயதான காலத்தில் இவர்கள் படும் அவஸ்தை..நாம் நம் குழந்தை களுக்கு பாரமாகி விட்டோமோ என்கிற ஒரு உறுத்தும் உணர்வு..
அவர்கள் இன்றைய கவலை..நாளை எனக்கும் வரும்..
மனதளவில் தயார் படுத்திக் கொள்ள பள்ளிப்பாடம் எதுவுமில்லை.. மனத்தை பக்குவப்படுத்த கத்துக்கணும்..
Prayers for the dignity at the end of life for the elders and for myself too.

Monday, December 16, 2019

செல்லுமிடமெல்லாம் செல்லு..

செல்லுமிடமெல்லாம் செல்லு..

ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்.
காலிங்பெல்லை அழுத்த  கவச குண்டலம் மாதிரி "காதோடு தான் நான் பேசுவேன்" ஸ்டைலில் செல்லில் சொல்லாடியபடி..சைகையில் என்னை வரவேற்றாள்.
சோஃபாவைக் காண்பித்து உட்காரு..என்றாள் சைகையில்..
காஃபி கலக்கட்டுமா..டீயா என்று ஆத்திக் காண்பித்தாள்..
சரி பேசிண்டிருக்கா பாவம் என்று..
டீவியில் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழு மூஞ்சி சீரியலை மாற்றி..
அவள் புதுசா வாங்கியிருப்பதாக சொன்ன ஒரு புத்தா பொம்மையும் பார்த்துக் கொண்டே..
கிச்சனுக்குள் நுழைந்தேன்..
காஃபி ஆத்தறதுக்கு..இரண்டு கை வேணுமே..
இப்போ ..அவள் 'செல்ஃபோன்"..காதுக்கும் கழுத்துக்கும் நடுவில் சாண்ட்விச்சாகி கொண்டிருந்தது..
அடிப்பாவி...கொடு ..நானே கப்பிலே விட்டுடறேன்..
"Snacks.. Snacks .."அங்கே இருந்த டப்பாக்களை காட்டி சொல்லவும் ..
ஒரு தட்டில் போட்டேன்..

சோஃபாவுக்கு மீண்டும் வந்தோம்.
" நான் அப்பறமா பேசறேன் அத்தை...இப்போ என் ஃப்ரண்ட் வந்திருக்கானு' ஒரு வழியா பேச்சை முடிச்சு..
" நான் பாதில கட் பண்ணினா அத்தைக்கு கோவம் வந்துடும்..என் கூட பேச மட்டும் உனக்கு டைமே கிடைக்காதுனு குத்தம் சொல்வாடி.. Hope you understand ' என்றாள்..
நானும் இப்படி யாராவது வரும்போது ..இதே மாதிரி ஃபோனில் மாட்டி அவஸ்தை பட்டிருக்கேன்.
எங்க அரட்டைக் கச்சேரி ஆரம்பிச்சது..
ஆனால்..
கழுத்தை சாய்ச்சுண்டே பேசிண்டிருந்தா..
ஃபோன் அதே சாண்ட்விச் நிலையில்..
சிரிப்பு தாங்கலை எனக்கு..
" ஏய்..வா ஒரு செஃல்பி எடுக்கலாம்" ..நான் சொல்ல..
எப்பவும் போல நாக்கை வெளியே தள்ளி,கண்ணை உருட்டி ஒரு போஸ் செட்டாக..
" ஐயோ..என் செல்லை காதிலேயே வெச்சிருக்கேனேடி ..பாவி ..சொல்லமாட்ட நீ"..
அன்புக் கோவத்தில் அவள்..என்னை அடிக்க ஓங்க..
ஆஹா..அற்புதமான எங்கள் candid photos click click..click..

இதனால் சொல்ல வருவது என்னவென்றால்..

" பேசுங்க..பேசுங்க..பேசிக் கிட்டே இருங்கனு" ..
ஃபோன் service providers சொல்லிக்கிட்டே இருப்பாங்க..
ஆனால்..நாம் தாங்க..நம்மள இந்த சுழல்லேர்ந்து காப்பாத்திக்கணும்..

Sunday, December 15, 2019

என்னை மறந்ததேன்...???

என்னை மறந்ததேன்...???

நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....

காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.
ஒரு flash back..
ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..
எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..
எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..
என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..
அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல
எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...

மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..

பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Oh butterfly..butterfly..

Today's visitor..
Oh butterfly..butterfly..

திறந்த ஜன்னல் வழி..
தெரிந்து தான் வந்தாயா..???
தேடி எதுவும் வந்தாயா..???
தேவை என்ன சொல்..??
தட்டாமல் தருவேனே.
பட்டாம்பூச்சி உனக்கே..

அடைபடாதே ..சிறையிலிங்கே..
அங்கே தெரியுது பார்..
அழகான என் தோட்டம்..
ஓடிப் பிடிச்சு விளையாட..
ஓயும்போது நானும் வரேன்..
ஓடிப் போ நீயும்..
படபட பட்டாம்பூச்சியே..

Saturday, December 14, 2019

Seetharaman mama

சென்ற வருடம் ..வெள்ளம் வடிய ஆரம்பித்த வேளை..oven எல்லாம் இல்ல..சுட வைக்க...வாங்கோ ..சாப்பிடுடலாம்.' மாமி சொல்ல..என்றைக்குமே உடனே வந்து கலத்தில் உட்காராத மாமா..தட்டின் முன் உட்கார..வந்தது..நாளு நாளாய் காணாமல் போய் இருந்த கரெண்ட்..இரு இரு ..போய் motor போட்டுட்டு வந்துடறேன்..சட்டென கிளம்பினார்..
கொஞ்ச நேரம் ஆச்சு..என்ன இந்த மனுஷன் சத்ததையே காணும்..மோட்டார் போட்டுட்டு தோட்டத்தை நோண்ட போய்ட்டாரோ..பொறுமையிழந்த மாமி சமையல் கட்டிலிருந்து வெளிய வந்து பார்த்தாள்..அங்கே மாமா..மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறார்..
வந்த டாக்டர் சொன்னார் ..'மனுஷர் போய் சேர்ந்துட்டார்..அரை மணி ஆச்சு..shock அடிச்சிருக்கு..
electricity board ல் நல்ல பதவியும் பேரும் வாங்கிய இவருக்கு எப்படி..
மோட்டார் வயரைத் துருவிப் பார்த்ததில் ஒரு சிறு இடத்தில் இருந்த கசிவு ஒரு பேரிழப்புக்கு காரணமாயிற்று..
சீத்தாராமன் மாமா..சுத்தக் கார மாமா எப்போதும்..எங்கும் எதிலும் சுத்தம்..சுத்தம்..
எங்கள் குட்டி வீட்டில் வந்து வாழ்ந்த முதல் tenant..
இன்னிக்கி நான் ஊரெல்லாம் Scooty ல் சுத்த காரணம் அவர்தான்..என் ஆசான்..
அதோ அங்கே குழி இருக்குனு..அப்பா அலற வைத்த போது..
akils வாடா..பத்து தடவை எட்டு போடு..பறக்கலாம் நீனு
எனக்கு TVs champ ஓட்டக் கத்துத் தந்த மகராசன்..
காடு மேடெல்லாம் ஒட்ட உதவியது..அன்று அவர் கற்றுத் தந்த பாடம்....
miss you mama..
just through this post i request all my nears and dears to be doubly careful while handling the electrical equipments and please take all precautionary measures before hand to avoid accidents like this..
Disclaimer: I am not good at science..the reason for the untimely death as told written here

அவளுக்கும் அச(ட்)டு என்று பேர்.

14-12-18
அவளுக்கும் அச(ட்)டு  என்று பேர்.

அவள் நெஜமாவே இப்படித்தான் சொன்னாளா? இல்லை எனக்குத்தான் காதில அப்படி விழுந்ததா?
சே..சே..அவளுக்கு தான் தமிழ் தெரியாதே..
என் மை.வா. எனக்கு ஆறுதல் சொல்ல..
நடந்தது இதுதான்ங்க

morning walk முடிச்சு திரும்பி வரும் போது ரொம்ப நாளா பார்க்காத ஒரு தோழி எதிரில் வந்தாள்.
அபார்ட்மெண்ட் அரசல் புரசல் அரட்டை எல்லாம் முடிச்சோம்.
"உன்னோட NGO வேலையெல்லாம் எப்படி இருக்குனு 'நான் கேட்க ..அங்கே அவள் கொடுக்கும் training பற்றி சொல்லி சிலாகித்தாள்.
'ஒரு நாள் நானும் உன்னோட இதில் இணையணும் ' நு நான் சொல்ல..

சொன்னாளே ஒரு வார்த்தை.' you will be an asset' to us'. ஆ...மயக்கமே வந்துடுத்து.
பட்டர்ஃப்ளை தேவதை போல வந்தவள் bye சொல்லிச் சென்றாள் .

'அசடு' என்று எனக்கு நானே கொடுத்துக் கொண்ட டைட்டிலுக்கு..ஒரே ஒரு 'ட்' சேர்த்து
"asset' அசால்ட்டா சொல்லி அல்லேக்கா என்னை அந்த் வானத்துக்கே தூக்கிச் சென்ற அந்த வார்த்தை....அந்த நொடி..
இன்னிக்குப் பூரா..asset is the secret of my energyநு ..நடைப்பயிற்சியிலிருந்து வந்த என்ன ஓட ..பறக்க விட்ட வார்த்தை..

( நட்பூக்களே..'அகிலா நீ அசடு இல்ல'னு எனக்கு ஐஸ் வைக்காம..நீங்க இன்னிக்கு சொன்ன ..சொல்லப் போற அந்த வார்த்தை என்ன?..முடிவு பண்ணுங்க..
அன்புடன்
அகிலானந்தமயி

Friday, December 13, 2019

பிரியா விடை.....

பிரியா விடை.....

தென்னை மரமேற ஆள் வருவான்
தெண்டச் செலவென திருப்பி அனுப்பல்..
பக்கத்து வீட்டு மாமரம்..
நம்பக்கம் காய் தருகையிலே..
அக்கப்போர் ஒன்னு வந்ததில்ல..
அது கிடக்கு விடுங்கனு..
அமைதிப் புறா பறக்கும்..
உலகக் கோப்பை கிரிக்கெ்ட் வரும்..
உளுத்த கம்பமும் சாய்ந்து போகும்.
இழுத்துக் கட்டு இப்போதைக்கு..
இன்னிங்ஸ் முடிஞ்சிடும்னு இம்சைகள்..
தன்னலம் ...தலை தூக்கும்

பாலம் பல கட்டணும்..
பாதை பல ஆகணும்..
புதிய ஊராய் மாறணும்
பாவப்பட்ட் மரங்களை
பலி கொடுத்தோம் என்றும்..
வரும் என் முறை எப்போனு
வருத்தத்தில் வாடிய மரத்துக்கு
வந்ததே வார்த் புயலும்..
வெட்டி வீழ்த்துமுன்..
வேரோடு சாய்க்கவே..

வலியில்லா...சாவோ..
வழியில் கிடக்கும் மரங்களுக்கு..

வண்டியில் ஏற்றுமுன்னே
வணங்கி வேண்டுவோம்..
வேரோ..விதையோ
 விட்டுப் போ..வரும்
என்  சந்ததிக்கு காட்ட..

Wednesday, December 11, 2019

Comfort zone

11-12-18
#coming_out_of_your_comfortzone.
comfort zone..நமக்கு போட்டுக் கொள்ளும் ஒரு boundary.
இந்த வட்டத்துக்கள்தான் நமக்கு ஆறுதல், சுகம் இன்பம் எல்லாம் இருக்குநு ஒரு மாயை.
இதிலேர்ந்து வெளியே வர நம்மை தடுப்பது எது தெரியமா? nothing but பயம்.குழந்தை தன்னோட முதல் அடியை எப்படி பயந்து பயந்து வைக்குமோ..அப்படி ஒரு feeling.
ஒரு அடி எடுக்க..கால் முளைத்த பூக்கள் தான்.
இப்போ என்னையே எடுத்துக்கோங்க சீரியஸா ..செண்டிமெண்டா எழுதுவேன் எப்போதும். இப்போது இங்கே சில மூத்த முகனூல் நட்புகள் காமெடி பதிவு படிக்கும் போது , எப்படி இவங்களால் இப்படி யோசிக்க முடிந்ததுனு நானும் முயற்ச்சிக்கிறேன். உடனே success கிடைக்காது. ஆனால் சந்தோஷமா இருக்கு.

#ஒரு_சீன்.
#சீனா_ஏர்ப்போர்டில்_ட்ராலி_தேடணும்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது. மொபைலும் ஆப்பும் ஆப்பு கொடுத்தது..இப்போ என்ன செய்வேன்.

என் version இதோ

என்னிக்கு இந்த ரெண்டு பொண்ணுக்கும் சீனாவில கல்யாணம் பண்ணிக் கொடுத்தேனோ அன்னிலேர்ந்து இப்படி ஷாங்காய் ஏர்ப்போர்ட்டுக்கும் பெய்ஜிங் ஏர்ப்போர்ட்டுக்கும் சீ பட்டு அலையறேன்.

இன்னிக்கு பார்த்து மொபைல சார்ஜ் வேற இல்ல. பொரியவ என்னடானா..' பெங்களூரு ஏர்ப்போர்ட்லேர்ந்து ஆத்துக்கு போற நேரம் தான் ..2 மணி நேரத்தில் போய் எறங்கிடலாம்னு தேற்றி அனுப்பி விட்டா.
.ஃப்ளைட் லாண்ட் ஆகவும் லவுஞ்சுக்கு போய் முதல்ல ட்ராலி எடுத்துக்கோனு பெரியவ சொன்னது ஞாபகம் வர..என் முன்னாடி நடந்தவர் கொஞ்சம் நல்லவர் மாதிரி தெரிய..அவர் பின்னாடியே ஓடினேன். கிடுகிடு நடந்தவர் நேரே ஒரு பளபள ரூமுக்குள் நுழஞ்சார். ஜாங்கிரி எழுத்து ஒரு மண்ணும் புரியாட்டாலும் அங்க தொங்கிண்டிருந்த  பொம்மை பார்த்து அது பாத் ரூம்னு புரிஞ்சது.
நான் பராக்கு பார்த்த நேரம் அந்த மனுஷர் வெளியே வந்து நடக்க ஆரம்பிச்சு காஃபி ஷாப் கிட்ட நின்னுட்டார்.
ஐயோ இந்த மனுஷன் பாம்பு நூடுல்ஸ் வாங்கி தின்ற வரைக்கும் நான் இங்கே நிக்கணுமே பகவானேனு நினைக்க விருட்டுனு பெட்டி எல்லாம் உருண்டு வருமே அங்கே போய் நின்னுட்டார். பெரிய பெட்டி அவரோடது பல்ட்டி அடிச்சிண்டு வர.." பெருமாளே.அதுக்குள்ள இருக்கற ஊறுகாய் கொட்டாம இருக்கணுமேனு" அவர் வாய் விட்டு புலம்ப..." ஐயோ நீங்க தமிழா?..
என் வாயெல்லாம் 32 பல்லாக..
உங்களைப் பார்த்தா..நான் இழுக்க..' மாமி..எங்க அப்பா ஐயங்கார் ..அம்மா சைனா..
சப்பை மூக்கெல்லாம் சைனாக்காரனில்ல..புரிஞ்சதோனு பாடம் நடத்தி
ட்ராலி என்ன .ட்ராப்பும் பண்ணிட்டு போனார்.

எப்படி இருக்கு?. மொக்கைதான் . இருந்தாலும் ..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

Radha Sriram Yoga Yogambal Selvi Shankar Mahadevan Srinivasan Venkatesh Veeraraghavan Radhai Sairam உங்க ஐடியா என்னப்பா?

Thursday, December 5, 2019

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

அங்கங்கே தலை காட்டிய வெள்ளிக் கம்பிகளுக்கு 'டை ' அடிச்சாச்சு.. எந்த புடவை பாந்தமா இருக்கும்..தேடலுக்கு பின் தேர்ந்தெடுப்பு ஒரு சிவப்பு கறுப்பு புடவை..
ஃபோட்டோவில் இருப்பது போல இருக்கணுமே ..ஒரு கவலை..சின்ன விபூதிக் கீற்று பயம் போக்க இட்டாச்சு..வாட்ச் வடிவில் அம்மாவையும் கூட கூட்டிண்டாச்சு.
என்ன வாங்கிண்டு போகலாம்..?.பழமா..பலகாரமா..
வென்றது பழம்..பொறுக்கி எடுத்து வாங்கியாச்சு..புஸ்தகம் நிறைய படிப்பார்னு கேள்விப் பட்டிருக்கோமே..சரி ..புக் ஹவுஸில் ஒரு மேய் மேய்ந்து மனசுக்கு ஓகேனு சொன்ன ஒரு எழுத்தாளர் படைப்பை pack செய்தாச்சு..
எதில் ஆரம்பிக்கலாம்  பேச்சை...? இதுவரையில் எழுத்தில் தானே அறிமுகம்...
இந்த சந்திப்பு ஒரு மிக சந்தோஷமான ஒன்றாக இருக்கணுமே...ஆட்டோ பிடித்த வேளை..லேசாக ஒரு excitement. அபார்ட்மென்ட் வாசல் இறங்கியதும் பேரும் ஃபோட்டோவும் பிடித்த  செக்யூரிட்டி 'உள்ளே காத்திருக்கிறார்கள்' வழி சொன்னான். பிள்ளையார் சிலை ஒன்று போய் வா உள்ளே என்றது..வழியெங்கும் வண்ணப் பூக்கள்..சிவப்பாய் ஒரு மைக் பூ ஒன்று தலையாட்டி வரவேற்க..துறு துறு கைகள் காமிராவில் படம் பிடிக்க..அங்கே அழகான குழலூதும் கண்ணன் முன்  கானமிசைத்தபடி அங்கிருந்த வயதில் மூத்தோர்..
மணிகளும் தோரணமும் தொங்கும் வாசல் முன் நிற்க..படபட மனசை அடக்க..மணிச் சத்தம் கேட்டு வந்து திறந்தாள் ..பதிவுகள் மூலம் பரிச்சயமான saraswathi..நம்ம் Mythili Varadarajan  aunty ந் வலது கரம்.

எங்கே வந்தேன்னு புரிஞ்சதா..great meeting with such a wonderful fb friend Mythili Varadarajan aunty.

'உன்னை first time பார்க்கிற மாதிரியே இல்லையே.'.அவர் உதிர்த்த முதல் வாசகம்..சந்தோஷம் சந்தோஷம்.அப்பப்பா...
பேச்சு..பேச்சு..பேச்சு..
அடக்க முடியாமல் ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்துத் தள்ளும் Mythili aunty. கன்னடத்தில் செல்லமாய் கண்டித்த சரஸ்வதி..
அவரது அக்கா சரயூ aunty வீடு..
வீடல்ல..அது ஒரு அழகான art gallery.. ஒரு கோயில் போல..எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் சுற்றி வந்த பிரமிப்பு..
பசுமையான செடிகள் தொட்டிகளிலும்.. தொங்கிக் கொண்டும்..
ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.

நேரம் போனதே தெரியவில்லை..
மீண்டும் வந்து meet பண்றேன்..வாக்கு கொடுத்தபடி மனசில்லாமல் நான் கிளம்ப..
வீட்டில் கொடியிலிருந்து வெத்தலை பறித்து தாம்பூலம் கொடுத்து மிக அன்பாய் வழியனுப்பிய அவர் அக்கா.. (அந்த வெத்தலை மென்ற சுகம்..இன்னும் நாக்கில்)
வாசலை அடைவதற்கு முன் ..Facebook status போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட...ஒரு அருமையான நட்பை..
.என்ன தவம் செய்தனை..இத்தனை அன்பும் ஆசையும் கிடைக்கச் செய்த மார்க்குக்கு ஒரு சலாம் ..
FB உங்களைப் பொறுத்த வரை என்ன என்று பதிவில் கேட்டிருந்த Shankar Rajarathnam sir..
பதிவுகளும்..அதைத் தொடரும் unconditional அன்பு காட்டும் இந்த பந்தங்கள் தான் என் பதில்.

Wednesday, December 4, 2019

சங்கல்பம்

#04-12-18

#start_your_day_with_a_சங்கல்பம்.

பூஜைக்கு மட்டுமல்ல..பொழுது விடியும்போதே செய்யப் பழகணும் சங்கல்பம்.

சங்கல்பம்..செய்வது ரொம்ப சிம்ம்பிள்..செயலில் காட்டுவதற்குு..கொஞ்சம் மெனக்கெடனும்.

நாம் எடுத்த சங்கல்பத்தை செங்கப்பொடி மாதிர் ஆக்க..சங்கடங்கள் பல வரும்.

வேற யாருமில்லை...சந்துக்குள் உட்கார்ந்திருக்கும் சோம்பேறித்தனம் தான் .. சிந்து பாட வந்துடும்.
' அது கிடக்கு..அப்பறம் செய்யலாம்னு அட்வைஸ் கொடுத்து , அரக்கனாய் மாறிடும்.

இது ஒரு பெரிய விஷயமில்லை.நம்மிடம் இருக்கும் சின்ன விஷத்தையும் வித்தாக மாற்றும்.
நம் மனசுக்கு நாமே போடும் ஒரு சின்ன கடிவாளம்..கட்டளை..அவ்வளவுதான்.

சங்கல்பம்..
அழித்து மாற்றும் பலப்பம் கொண்டு எழு்றீங்களோ..அழிக்க முடியாத ball point எழுதறீங்களோ..பலவீனம் ஆகாமல்..(மன)பலத்தோடு முன்னேற..
நாமும்_வாழ்க்கை_எனும்_போர்க்களத்தில் 'பயில்'வான்_ஆகலாம்.

' நீதான் என்னை எப்பப்பாரு படுத்தறம்மா' என்று சண்டை போட்ட காலமுண்டு.
' எப்படி வேண்டுமானாலும் வாழலாம்
இப்படித்தான் வாழணும்னு இருந்து பார்..அப்போது தெரியும் வாழ்வின் சுவை'
அம்மா சொல்லும் மந்திரம்..இன்னும் என் வீட்டில் ஒலிக்கிறது.

#sankalpa_is_a__promise_to_oneself
அன்புடன்
அகிலானந்தமியி😀🙏

Tuesday, December 3, 2019

பெங்களூரு ட்ராஃபிக்கு

03-12-18
#பெங்களூரு_traffic
#சிந்தனை_செய்மனமே_சிக்னலிலும்

#அலர்ட்டா இருக்கணும்..இல்லாவிடில் அலைக்கழிக்கும்.
ர்வூண்டு தூரத்தை அடைய ரவுண்ட்டு அடிக்க வைக்கும்.
one way ல் மாட்ட வைத்து 'ஓ' நு அழ வைக்கும்.
 #உசுப்பேத்தும்_சக்திகளுக்கு_ஓகே_சொல்லப்படாது.
பச்சை விழுமுன்னே..போ போனு ஹாரன் அடிச்சாலும் ..பரப்பிரம்மமா இருக்கணும்.

கோடு_தாண்டி நின்று காக்கி சட்டைக்கிட்ட கால்ல விழப்படாது.

தலைக்கவசம் போடாமல்..சஷ்டி கவசம் சொல்லிட்டேனு அசால்ட்டா இருக்கப் படாது..

'விதிகள் மீறுவதற்கே' என்று நம் தலை விதியை மாற்றாமல் இருக்க முயற்சிக்கணும்.

வாழ்க்கை பாடம்..எங்கும் எதிலும்.
சாலையிலும் ..சம்சாரத்திலும்..சமூகத்திலும்..
அன்புடன்
அகிலானந்தமயி்.

Monday, December 2, 2019

பொரி உருண்டை

தோழியைத் தேற்றினேன் ஃபோனில்..
.'ஏய் ..உருண்டையா இருந்தா என்ன..உடைச்சு தின்னா என்ன..? பொரி உருண்டைனு மட்டும்  சொல்லாதே..அவ்வளவுதானே..இதுக்குப் போய்.....வார்த்தை முடிப்பதற்குள் வள்ளென்று விழுந்தாள்..
ம்ம்ம்ம்..இருக்கட்டும்டி..இந்த தடவை அதிசயமா உருண்டை பிடிச்சிட்டேனு பெருமை பீத்தி ஃபோட்டோ போட்டுக்காதே..
டொக்...ஃபோன் கட்..
Happy karthigai friends

#karthigaikalakkam

Sunday, December 1, 2019

Jothika

கன்னம் கிள்ளும் மாமி..
காதைத் திருகும் மாமா..
............,.........
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு..

ஜோதிகா  பூவெல்லாம் உன் வாசம்
பட த்தில ஆடிக் கொண்டிருக்க..

ஆஹா..
என் மனமும் கொஞ்சம் சிறகடித்து reverse ல் பறந்தது..
கட்டுச்சாதைக் கூடை மணமணக்க ரெடி..
கண்ணீரும் கம்பலையுமா நான் அழ..அப்பா அம்மா அழ..
யார் டெல்ல்லிக்கு வந்தாலும் டப்பா டப்பாவா சாமான் ..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கொஞ்சம் தடம் புரண்டு போனாலும் என் பேர் அதில் மாட்டிக்கும்..பொடிகள், அப்பளம், நொறுக்குத் தீனி, அரிசி மாவு...அதைவிட..காய்ச்சிய நெய்..அஞ்சாறு சம்ப்டத்தை திறக்க அரைக் கிலோ நெய்..கவர் கட்டி, துணியால் கட்டி மாவடு, ஆவக்காய்.காப்பிப் பொடிக்கு ஒரு தனி பாக்கிங்...
.இப்படி ஒரு லிஸ்ட்..

டெல்லில எல்லாம் புடவை விலை ஜாஸ்தினு பண்டிகைக்கு புடவைகள்.மாட்ச்சிங் ப்ளவுஸ்..
ஃபோன் அடிக்கடி பேச முடியாது..ஒரு நிமிஷம் பேசினாலே 300 ரூபாய் சொளையா எடுத்து வெக்கணும்..ஒரு புடவைக்குள் பத்திரமா இருக்கிற மாதிரி அம்மா அப்பாவின் லெட்டர்ஸ்.. முதல்ல வேகமா படிச்சு முடிச்சுட்டு..திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து படித்து..
இதே காலப் போக்கில் ஊர்கள் பழக..இதெல்லாம் அங்கெயே கிடைக்கிறதம்மா..ரெசிபி சொல்லு நானே ட்ரை பண்றேனு..கை காலை சுட்டபடி..கற்றுக் கொள்ள ஆரம்பித்து..பின் ஒவ்வொரு முறை பிறந்தகம் வரும்போதும் புதுசா கற்றுக் கொண்டதை டப்பாவில் கொண்டு வந்து கொடுத்து..வீடே மணக்க நான் சமைக்கிறேன் என்று அம்மாவை ஒரங்கட்டி..( சாமான் யத்தில கிச்சன் தர மாட்டா அம்மா..)
எத்தனை instant , ready to eat வந்தாலும்..இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே ஒட்டிக் கொண்டுதான் இருக்கு. இப்போ எல்லாம் அம்மா.. மாமியார் எல்லாரும் expert ..domestic ,international pack செய்து அனுப்புவதில்..
காலி டப்பாக்கள் கதை பல சொல்லும்..
வருஷம் போனாலென்ன..வயசும் ஆனாலென்ன..
இந்த tradition இன்னும் தொடர்கிறதுதானே
01-12-2018
#december_not_a_deadend_a_doorway_to_delight
டிக் ..டிக் ..டிக்.
ஆஹா..
கடைசி மாதம் காலண்டரில் காண்பிக்க.. கடந்து வந்த பாதை ..குதூகலமும் கடினமும் கலந்து கட்டிய நாட்கள்..

இழந்தது..இணைந்தது ..இயற்கைச் சீற்றங்கள்..இப்படி ஒரு mixed menu நம்மோட வாழ்க்கையில்..

எடுத்த சபதங்கள்..எல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டு..

' இந்த இடத்தில் வேற மாதிரி react பண்ணி இருக்கலாமோனு ' நம்மை நாமே நொந்து கொண்ட தருணங்கள்..
அடடே .' நானா ..இது நானா..' என்று சமாளித்த சவால்கள்..

rewind பட்டன் தட்டுவோம்
recollect பண்ணுவோம்
refine ஆகுவோம்
refresh mode ல்
receive பண்ணுவோம்..
வரப் போகும் வருஷத்தை..

so..மக்களே..இன்னும் 30 நாள்தான் இருக்கு..
முப்பது நாளில் மொழி கற்கிறோம்...
Life  எனும் ் language கொஞ்சம் கஷ்டம் தான்.

முயன்றால் முடியாதது இல்லை..

என்ன நான் சொல்றது?
அன்புடன்
அகிலானந்தமயி

ரயில் பயணம்

சும்மா..ஒக்கார முடியல..

காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .
காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்

சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்
சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்

சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.
சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..

குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.
கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..

ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..
உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..

வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..
வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..

ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..
அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..

விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..
விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..

வருமான வரி விவரித்தல் ஒருபுறம்
வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்

அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..
கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..

சென்ட்ரல் வந்ததும்
சிதறும் இக்கூட்டம்..
சுவாரசியம் என்றும்..இந்த
சிக்கு புக்கு ரயில் பயணம்

Saturday, November 30, 2019

மாற்றம்

Starting a morning with a positive note..nothing is impossible or unreachable ..
Thanks my friend

டைலர் காலில் விழுந்தவனெல்லாம்..
Reid and Taylor உடுத்துகிறான்..
ரெடிமேட் பேரே அறியாதவனோ..
Raymond சட்டையில் உலவுகிறான்..
காக்கித் துணி சட்டை விட்டு..
colorplus ஆல் வண்ணமறிகின்றான்..
ஒட்டி தைத்து போட்டவனெல்லாம்..
Otto வுக்கு ஓட்டுபோடறான்..
புள்ளி போட்ட ரவிக்ககாரி..
புளியம்பு சேலைகாரிகளோ..
போத்தீஸும்..நல்லியும்..
போகாத நாளில்லை..
காஞ்சிப் பட்டுடுத்திய தேவதைகள்..
கோரா சில்க்குக்கு மாறியாச்சு..
ஆயிரம் யோசனை..
அதுவா..இதுவா..எதுவென்றே..
அள்ளி குமிஞ்ச அலமாரியுமே..
அழாத குறையில்..அறைக்குள்ளே..
படிப்பும் உழைப்பும் உயர்ந்த்தனால்
பழைய வாழ்வு ஒழிந்ததுவே..
உலகமயமாக்கல்....கொள்கையொன்று
உபகாரமாய்..
உபகரணமாய்..
உலகம் புதிதை உணர்த்தியதே..
நிலையில்லா வாழ்வினிலே..
நினைத்தும்் பாராதது நிகழ்கையிலே..
நாமும்..கொஞ்சம் ..
நம் மனம் போல் வாழ்வோமே

முடக்கத்தான்

#morning_with_முடக்கத்தான்
காலிங் பெல் சத்தம். காலங்கார்த்தால யார் என்று கதவை திறக்க..கையில் கவருடன் காய்கறிக்காரம்மா..

"என்ன aunty நு கேட்பதற்குள்.." இந்தா புடி..கால் வலி..கால் வலினு சொல்லுவியே கிராமத்திலேர்ந்து நேத்து கொண்டாந்தேன் இந்த முடக்கத்தான் கீரை.
கொஞ்சம் நீ லேட்டாக்கினா கூட அல்லாம் வித்து பூடும்.. அதான் வந்து கொடுத்துடலாம்நு'.

அம்பாள் பெயர் கொண்ட அன்பு இவளோ?
அவர்களுக்கு என்ன அவசியம் எனக்கு வந்து கொடுக்கணும்னு?

அன்பு..நம்ம சுற்றம் நட்புகள் அள்ளி வழங்கினாலும்..இது எனக்கு பெரிய bonus booster அன்(ம்)பு.

எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் குறையாத ஒன்று இந்த அன்பே.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
 அதை லாக்கரில் பூட்டி வைத்து ..அழகு பார்க்காமல்..அள்ளி வீசுங்க..

 அப்புறம் பாருங்க.. .மனசு எப்போதுமே துள்ளி குதிச்சு விளையாட weight less ஆ இருக்கும்.

'ரா..ஜி..பாட்..டீ.. என்று கூவியபடி எங்க அபார்ட்மெண்ட் குழந்தை அவளைத் தேடி ஓடும் அர்த்தம்..எனக்குப் புரிந்தது. உங்களுக்கு?

மத்தாப்பு புன்னகையுடன் முடக்கத்தான் நோக்கி நான்..
முடக்கத்தான் ..அன்பையும் முடங்காமல் இருக்கச் செய்யட்டும்.
அன்புடன்
அகிலானந்தமயி😝

Thursday, November 28, 2019

காலை வேளை

Good morning🤗🌞msg from my friend.,

Health  wealth and wisdom come to those who embrace the morning and make full use of it!

Correct தானே..
So..
காஃபி குடிங்க..
கைப்பேசியை கடாசுங்க
காலாற நடங்க..
காய்கறியும் வாங்குங்க..
கம கமனு சமைச்சு..
குடும்பத்தோடு சாப்பிடுங்க..

கலகலப்பா இருங்க..
கெட்ட எண்ணம் விலக்குங்க..
காசு பணம் வரும் போகும்..இந்த்க
காலை திரும்பி வருமா..
யோசியுங்க..யோசியுங்க..
அன்புடன்
அகிலானந்தமயி😀😝

Thursday, November 21, 2019

வேண்டும் வேண்டும்

வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..

இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..

கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..
ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)

தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.

படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..

மழையோ குளிரோ..fan சுத்தணும்..

உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.

பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.

செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..
என்கூட என் காமெராவும் இருக்கணும்..

வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..

முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..

லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..

உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Tuesday, November 19, 2019

தேன்மொழி

எச to Saraswathi Gayathri

தேன்மொழி
ஒல்லியா தெரியற என்றால்..
உச்சி குளிர்வாளே
கொஞ்சம் சதை போட்டியோ என்றால்..
நெஞ்சும் சுருங்கிப் போவாளே..
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு..
எதுத்த வீட்டு் அம்மாவை நினைப்பாள்..
உபாதைகளை ..
ஊருக்கெல்லாம் சொல்வாள்..
google செய்தே
cancer எனக்கில்லையே என்று..
கலங்கியும் போவாளே..
argue செய்வாள்..
அடங்கியும் போவாள்

harmony கெடுக்கும்..இந்த
hormone வேலையை..
மாத்திரை மருந்தோடு..கொஞ்சம்..
மன உறுதியும் சேர்த்துக் கொள்வோம்..
அசுரர் இவரை வெல்ல..
ஆயுதம்..இது ஒன்றே..

Happy men's day

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
அதிசயமா..
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
 தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க..

Sunday, November 17, 2019

What's in store

வெள்ள நீரது
வீதியெலாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை..
what's in store?..
quotes கூட தோணுமோ
queue வில் நிற்கும்போது..!!!

வீரபாண்டிய கட்டபொம்மன் style.

வீரபாண்டிய கட்டபொம்மன் style..

ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..

சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..