அடடே..பொழுது விடியப் போகுது..எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்களே..எல்லாப் பக்கம்மும் சுத்தமா இருக்கா...ஒரு வருசம் ஓடிப் போச்சு...
அட..யாரது அங்கனே..புதுப் பவுனு பளபளனு..நம்ம பொன்னாத்தாவா..ஆளே அடையாளம் தெரியாமா பெருத்து கிடக்காளே..
அதோ அவ கூட யாரு...செவந்தியா.. கூட யாரு..புது மாப்பிள்ள.. சரி சரி..தாலி பிரிச்சு கட்ட வந்திருக்காக போல இருக்கு..என் கால்ல விழுந்து கும்பிட்டப்போ..அடுத்த வருசம்..கையில் ஒண்ணு கூட கூட்டியானேன்..வெக்கபட்டு போச்சு... அதுக்குள்ள ஒரு பரிச்சயமான குரல்..என்ன ஆத்தா..என்னை மறந்துட்டியா..போன தபா வர முடியாம போச்சு..உடம்புக்கு முடியாம கிடந்தேன்..இந்த தடம் எப்படியும் உன்னை பார்த்தே ஆவணும்னு புள்ளைய கூட்டிகிட்டு வந்தேன் ஆத்தா..அடுத்த முறை இந்த கட்டை இருக்குமோ..இருக்காதோ..புலம்பியபடி நாச்சியம்மை..எல்லாம் நல்லா இருப்பே போ..சீக்கிரம் மவனுக்கு ஒரு கால் கட்டு போடு...ராசா..கால்ல விழுந்து கும்பிட்டுக்கப்பா...
அங்கிட்டும் இங்கிட்டும் குழந்தங்கள ஓட.. துரத்தியபடி மாடசாமி.. .. . எலேய்..நில்லுங்கடா...கூட்டத்தில எங்கினாச்சும் தொலஞ்சு போயிறப்போறீக...அத்தை ,மாமா எங்கேடா..சாமி கும்பிட்டு ..பொறவு..கொண்டு வந்த சோத்தை தின்னுட்டு..ஊரப் பாக்க போவனுமப்பா..சோலி இருக்கில்ல..
எப்பவுமே இவனுக்கு அவசரந்தான்.. இருப்பா..ஒரு நா..கொஞ்சம் என் கூட இருந்திட்டு போயேன் ...நான் சொல்வதை காதில் வாங்கவே இல்ல..
இந்த செம்பகம் புள்ளை எங்கே காணும்னு்...நினைச்ச நேரம் ...ஆத்தா...உன்னை பார்க்க வராம இருப்பேனா..இப்பொ அப்பாவுக்கு வேற ஊர்க்கு மாத்தலாகிடுச்சு..அழுது பொரண்டு உன்ன பாக்கனும்னு கூட்டியாந்தேன்..எத்தனை ஆசை..ராசாத்தி..நல்லா இருப்பே..
ஈ எறும்பு க்கு கூட இடமில்லாம கூட்டம்..
வெளக்கு வச்சு..பூ,தாம்பூலம் ,கலந்த சோறு எல்லாம் வச்சு படயலாச்சு..
. சனம் பூரா ஒத்துமையா..வந்துட்டு போறத பார்க்க ..இன்னொரு நாள் இருந்துட்டு போமாட்டாங்களானு ஏக்கமாச்சு..
பொழுது சாய ஆரம்பிக்க... அவுங்கவுங்க..ஊருக்கு பஸ் ஏறி..புறபட்டாச்சு..
ஒரே வெறிச்சோடி போச்சு..
என்னை சுத்தி இப்பொ இருக்கறது...இவுக எல்லாம் விட்டறிஞ்சிட்டு போன ...குப்பை தான்
எம்புட்டு சுத்தமா காலைல இருந்த இந்த இடம்..
கும்பிடத்தானே வந்தீக..
என்னை..இப்படி
குப்பை மேடாக்கிட்டு போக ..
எப்படி மனசு வந்துச்சு..
குமுறலில்..
காவிரித்தாய்...

No comments:
Post a Comment