காஃபி சிந்து..( காவடிச் சிந்து இல்லை)
கண் மூடித் தேடினாலும்
கண்டே பிடித்திடுவேன்..
கள்ளி உனையே..
கள் சொட்டும் காஃபிப் பொடியே..
காலன் கதவு தட்டினாலும்
குடித்துட்டு வரேனே ...
காபி ஒரு முழுங்கென்பேன்.
காபி யில்லா வாழ்வு
கனவிலும் கண்டதில்லை..
பாலும் டீயும் பூஸ்ட்டும்
பல பானம் இருந்தாலும்
பரவசம் தருமே என்றும்..ஆவி
பறக்கும் சூட்டில் காபி..
தூக்கிக் குடிக்கையிலே
தொண்டைக்கு சுகமே
சீப்பிக் குடிக்கையிலே
சொர்க்கமும் தெரியுதிங்கே
சிக்கரி காஃபிக் கோர்
சங்கமும் உண்டிங்கிங்கே.
இவனன்றி அசையாதே
என்னில் ஒரு அங்கமுமே..
ஒர் இழு இழுக்கையிலே
உடம்பில் தெம்பு ஏறுமே
உனக்கென்றும் என் ஓட்டே
உன்னடிமை நான் தானே.
பார்த்து சிரிக்குது பொம்மை..
பரம சாதுவாய் குரங்கு பொம்மை
காந்தி ரசித்த பொம்மை..மன
சாந்தி தரும் பொம்மை
கொலுவில் அமர்ந்த பொம்மை
கள்ளமிலா..குரங்கு பொம்மை
தாவிக் குதிக்கா பொம்மை
தத்துவம் சொல்லும் பொம்மை
வால் செய்யா பொம்மை
வாழ்வியல் விளக்கும் பொம்மை
கண்டதைப் பார்க்காதே என
கண் மூடிய பொம்மை
கண்டதைப் பேசாதே என
கையால் வாய்மூடிய பொம்மை
கண்டதைக் கேளாதே என
காதும் மூடிய பொம்மை.
அடபோங்கப்பா.
ஒன்றை அடக்கலாம்னா
ஓவராப் பண்ணுதே
கூராகி மற்றிரண்டும்
ஒரு வழி மூடினால்
மறு வழி திறக்குமென்ற
மாற்றுப் பொருள் பேசி
மறக்கடித்தோம் தத்துவத்தை
ஒன்றைக் கட்டுப்படுத்த
ஒராயிரம் பிரயத்தனங்கள்.
மூன்றையும் வென்ற வீரர்
மூவுலகில் இங்குண்டோ..
அஹிம்சை எல்லாம்
இம்சை என்றோம்..
non violence என்பதை
நான் violent என்றோம்..
சாந்தி என்ற சொல்லே
சங்கடமென நினைத்தோம்
தூளி ஆட்டி ..
தாலாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்தோம்..
தூங்கட்டுமே ..
உண்மையென்றோம்..
பொய் பேச
கூச மாட்டோம்..
காந்தி ஜயந்தியன்று
காந்தி புகழ் பாடுவோம்..
ஆஹா.
காந்தி மகான் என்போம்..
காகத்தின் உறைவிடமாம்
காந்தி சிலையெல்லாம்..
காணுமே புதுப் பொலிவு..
தேடாதே..சிலை ஓடி..
தோண்டி எடு ..உன்னுள்ளே
தூங்கிக் கிடக்கும்
காந்தி மகானை..
மகான்
கண் மூடித் தேடினாலும்
கண்டே பிடித்திடுவேன்..
கள்ளி உனையே..
கள் சொட்டும் காஃபிப் பொடியே..
காலன் கதவு தட்டினாலும்
குடித்துட்டு வரேனே ...
காபி ஒரு முழுங்கென்பேன்.
காபி யில்லா வாழ்வு
கனவிலும் கண்டதில்லை..
பாலும் டீயும் பூஸ்ட்டும்
பல பானம் இருந்தாலும்
பரவசம் தருமே என்றும்..ஆவி
பறக்கும் சூட்டில் காபி..
தூக்கிக் குடிக்கையிலே
தொண்டைக்கு சுகமே
சீப்பிக் குடிக்கையிலே
சொர்க்கமும் தெரியுதிங்கே
சிக்கரி காஃபிக் கோர்
சங்கமும் உண்டிங்கிங்கே.
இவனன்றி அசையாதே
என்னில் ஒரு அங்கமுமே..
ஒர் இழு இழுக்கையிலே
உடம்பில் தெம்பு ஏறுமே
உனக்கென்றும் என் ஓட்டே
உன்னடிமை நான் தானே.
பார்த்து சிரிக்குது பொம்மை..
பரம சாதுவாய் குரங்கு பொம்மை
காந்தி ரசித்த பொம்மை..மன
சாந்தி தரும் பொம்மை
கொலுவில் அமர்ந்த பொம்மை
கள்ளமிலா..குரங்கு பொம்மை
தாவிக் குதிக்கா பொம்மை
தத்துவம் சொல்லும் பொம்மை
வால் செய்யா பொம்மை
வாழ்வியல் விளக்கும் பொம்மை
கண்டதைப் பார்க்காதே என
கண் மூடிய பொம்மை
கண்டதைப் பேசாதே என
கையால் வாய்மூடிய பொம்மை
கண்டதைக் கேளாதே என
காதும் மூடிய பொம்மை.
அடபோங்கப்பா.
ஒன்றை அடக்கலாம்னா
ஓவராப் பண்ணுதே
கூராகி மற்றிரண்டும்
ஒரு வழி மூடினால்
மறு வழி திறக்குமென்ற
மாற்றுப் பொருள் பேசி
மறக்கடித்தோம் தத்துவத்தை
ஒன்றைக் கட்டுப்படுத்த
ஒராயிரம் பிரயத்தனங்கள்.
மூன்றையும் வென்ற வீரர்
மூவுலகில் இங்குண்டோ..
அஹிம்சை எல்லாம்
இம்சை என்றோம்..
non violence என்பதை
நான் violent என்றோம்..
சாந்தி என்ற சொல்லே
சங்கடமென நினைத்தோம்
தூளி ஆட்டி ..
தாலாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்தோம்..
தூங்கட்டுமே ..
உண்மையென்றோம்..
பொய் பேச
கூச மாட்டோம்..
காந்தி ஜயந்தியன்று
காந்தி புகழ் பாடுவோம்..
ஆஹா.
காந்தி மகான் என்போம்..
காகத்தின் உறைவிடமாம்
காந்தி சிலையெல்லாம்..
காணுமே புதுப் பொலிவு..
தேடாதே..சிலை ஓடி..
தோண்டி எடு ..உன்னுள்ளே
தூங்கிக் கிடக்கும்
காந்தி மகானை..
மகான்
No comments:
Post a Comment