சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..
ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..சாமானெல்லாம் தூங்கிண்டிருந்தது..மெதுவா.... முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க ஆரம்பிச்சுட்டார். டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன் கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..
அந்தக் கோணக் கழுத்தோடயே பால கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..
ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..சாமானெல்லாம் தூங்கிண்டிருந்தது..மெதுவா....
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க ஆரம்பிச்சுட்டார். டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன் கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..
அந்தக் கோணக் கழுத்தோடயே பால கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.
No comments:
Post a Comment