#ஸண்டே_ஸ்பெஷல்
#ஹாஸ்டல்_கதை..
Thanks Swaminathan Ramasubramanian sir for suggesting this youthful topic
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே..
அகில்ஸ்... ஹாஸ்டல் கதை எழுதச் சொன்னால் ,why this ஒப்பாரினு..உங்க மை.வாய்ஸ் கேட்கிறது.
பின்ன என்னங்க..
ஹாஸ்டல்லா..அதெல்லாம் கூடவே கூடாதுனு day scholar ஆ என்னை படிக்க வெச்சு, அதே சென்னை மாநகரத்தில ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்த அம்மா..
நைஸா..வெளியூர்ல தான் போஸ்ட்டிங் இருக்கு..புதுசா கிடைச்ச ப்ரமோஷனுக்குனு ..ஒரு வருஷம் , குடும்பப் பொறுப்பை..குறும்பா சுத்த வேண்டிய காலத்தில், 🐜 எறும்பு மேலே..ஏகக் குடும்பச் சுமையை ஏத்திப்புட்டு, ஹாஸ்ட்டல் வாழ்க்கைக்குள் புகுந்த எங்கம்மா கதை தானே நான் எழுத முடியும்.
மிகப் பெயர் பெற்ற அந்த ஹாஸ்ட்டலுக்குள் அடி எடுத்த வெச்சதுமே..அம்மா அலப்பறைஸ் அங்கே started.
அரசாங்கத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் ஆபிஸர், தங்கள் ஹாஸ்ட்டலுக்குள் வந்து தங்குவதை பெரும் பாக்கியமாக நினைத்த வார்டன்.
எல்லாருக்கும் 6.30 மணிக்கு காஃபி டைம்னு இருக்கும். ஃபைல் பார்க்கும் அம்மாவுக்கு , first decoction coffee 4.30 க்கு.
இனிமே தான் இருக்கு சேதி.
ஹாஸ்ட்ட்ல் லைஃப் எஞ்சாய் பண்ண வந்த அங்கே பல ஆஃபீஸ் போகும் பெண்களுக்கு வேட்டு..
' என்ன இப்படி 7 .30 வரை தூக்கம். காலங்கார்த்தால சீக்கிரம் எழுந்துண்டா தான் உடம்பும் மனசும் fresh aa இருக்கும்னு "..breakfast சாப்பிட வருபவரின் ..இதயத்தை break பண்ணிடுவா.
முதல் கட்டமா..அம்மா கட்சிக்கு ஒரு மூணு பேரு சேர்ந்தாங்க..
மச மசனு இருக்காம..
கோயிலுக்கு கிளம்புங்க.."
"மேடம்..இன்னும் திறக்க மாட்டாங்களே.."
"ஆமாம்..சன்னதி திறக்காது தான். அங்கே போய்..
பிரகாரம் ,படியெல்லாம் சுத்தமா அலம்பி துடைக்கலாம் வாங்க..உண்டியல்ல காசு போட்டா போதாது..உடம்பால எதாவது செய்யணும்..அதுதான் நல்லது.."
இப்படி சொன்னதுமே..
எதிர்க்கவும் முடியாமல், என்னடா இது நம்ம ஹாஸ்டல் வாழ்க்கைக்கு வந்த சோதனைனு மென்னி முழுங்கி..
மூப்பெரும் தேவியர் கூட்டணி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக..வளர..
கோயில்ல வரும் கும்பலை விட..இவங்க கும்பல் ஜாஸ்தியாக..அம்மா..ஒரு டைம்டேபிள் போட்டு..எல்லார்க்கும் கோயில் வேலை allocation.
ஹாஸ்ட்டல் பளிங்கு மாதிரி ஜொலிக்க ஆரம்பிச்சது.
வீடு மாதிரியே அங்கேயும் அட்டகாசம்.
" எடுத்த எடத்தில வைக்கணும்..சாப்பிட்ட இடம் க்ளீனா இருக்கணும், ஆளுக்கொரு வேலை செய்யணும்....தரையை எப்படி பெருக்கணும்..இண்டு இடுக்கு விடாம எப்படி துடைக்கணும்னு ஹாஸ்ட்டல் வலது கரங்களுக்கு க்ளாஸ்.
' உன் பொண்ணு என்ன மார்க்கு?..
சரி இனிமே தினமும் சாயங்காலம் வந்து என்கிட்ட கணக்கு கத்துக்க சொல்லு..இப்படி ஒரு பக்கம்.
தோட்டக்காரர் முதல் ..அங்கே வேலை செய்யும் பணியாளர் குடும்பத்திற்கு அரசு கொடுக்கும் free bees ஒண்ணு விடாம வாங்கி கொடுத்து..ஸ்ஸ்..அப்பா..
இன்னிக்கு என்ன ..ரசம் என்னமோ மாதிரி இருக்கு...
சட்னியில தேங்காயே காணும்..
அட ராமா..இப்படி கொள்ளு போட்டு அரைச்சி சட்னியானு..
வாயில வைக்க முடியாம இருந்த ஹாஸ்ட்டல் சாப்பாடை..வழித்து மிச்சம் வைக்காமல் சாப்பிடும் அளவுக்கு கொடி தூக்கிய குமரி..
வார்டன் யாருனு ...சந்தேகம் வரும் அளவுக்கு...diet, discipline மட்டும் சொல்லிக் கொடுத்தது போதாது என்று..எப்படி determination உடன் career and family ரெண்டுத்துலயும் முன்னேறணும்னு உற்சாகப்படுத்தி...
இதுக்கு நடுவுல..என்னோட ஆஃபிஸுக்கு ஃபோன் பண்ணி, மளிகை கடை லிஸ்ட், பால் காரன் கணக்கு, பேங்க் வேலை என்ன பாக்கி இருக்குனு..மூச்சு விடாம பாடற எஸ்.பி.பி.கணக்கா..
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சறது போல..
" நாங்க எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு சின்ன டூர் போறோம். ஒரே கலர் புடவை வாங்கிண்டு இருக்கோம்னு..பெருமை வேறு நடக்கும்..
நான் இங்கே,பாட்டியோடு சேர்ந்து ஓட்டமும் நடையுமா சமையல் வேலை, சுத்து வேலை எல்லாம் செஞ்சுட்டு ஆபீஸுக்கு ஓட ரெடியாகும்போது, landline phone அடிக்கும்.
இப்பொதான் சந்திர விலாஸில் சூடா இட்லி சாப்ட்டேன். உனக்கும் அப்பாவுக்கும் லஞ்ச் பேக்கிங் ரெடியானு..கேட்கும்போது..
" அம்மா..நான் இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்க ம்மானு"..
பெருமூச்சு தான்
அம்மா..உன் அட்டகாசம் தாங்கலைனு ..மை.வாய்ஸ் சொன்னாலும்..
பாவம் ம்மா..you also need a break நு தோணும். Second Saturday leave வந்ததுமே..பாவம் ஒரு லொடக்கான் பஸ்ல ஏறி, இங்கே வந்து, எங்களுக்கு பதினைஞ்சு நாளுக்கு வேண்டிய ஐட்டமெல்லாம் ரெடி பண்ணி,
அதோடு கூட..
ஹாஸ்டலில் இவளுக்கு இது பிடிக்கும்,அவளுக்கு..வயிற்றுப் ப்ரச்சனை ..இந்த பொடி நன்னா இருக்கும்..ஹாஸ்டலுக்கும் சேர்த்து snacks and sweets டப்பாவில் ரெடி பண்ணி....
அரக்க பரக்க மீண்டும் ஞாயிறு இரவு கிளம்பி ஓடும்போது பாவமா இருக்கும்.
But..அந்த ஒரு காலம்..அம்மாவுக்கும் மட்டுமல்ல..எனக்கும் நிறைய படிப்பினை தந்தது என்பது மறுக்க முடியாத ...மறக்க முடியாத உண்மை.
அம்மாவின் ஹாஸ்டல் வாழ்க்கை முடிந்து ,காலி பண்ணும்போது நானும் சென்றேன்.
அத்தனை ஃப்ரண்ட்ஸ் , well wishers , அம்மாவால் inspire ஆகி..பல பெண்கள்.
விடை பெற்றபோது..விடை எனக்கும் கிடைத்தது..
"Amma had truly a mission in her life here' என்பதுதான்.

No comments:
Post a Comment