Thursday, October 5, 2023

Madhyamar-அரசியல் பதிவு

 #Sunday_special

அரசியல் பதிவு...

நான் கொஞ்சம் அப்படிக்கா ஓடிடுவேன்..


தலைவர் சொன்னதும் தட்ட முடியலை..அதான்..


நரேந்திர மோடிஜி:..


இவர் பேர் கேட்டதுமே..நரம்புகளில் ஒரு புது ரத்தம் பாயும் .


ஒரு well behaved person. 


சொல்லில் செயலில் 💪 வலிமை. 

தீர்க்கமான பார்வையும் பேச்சும்..

இந்த நாட்டை எப்படியும் முன்னேற்றியே தீரணும்னு ராப்பகல் பாராமல் உழைக்கும் ஒரு உன்னத தலைவர்.


இவர் எப்பொ தூங்குவார்னு எனக்கு எப்பவுமே கேள்வி..


 ray of hope லிருந்து..rock solid roads to development செய்து காட்டத் துடிக்கும் ஒரு தலைவர்.


Swachh bharat,make in India,clean ganga என்று விழிப்புணர்வு  இஞ்ஜெக்‌ஷன் நம் மனதில் ஏற்றியவர் என்றே சொல்லலாம்..


🍫 சாக்லேட் பேப்பரை விட்டேத்தியா ரோட்ல தூக்கிப் போட்ட காலம் போய் ..நம்ம பைக்குள்ள ஒரு ஓரத்தில போட்டு ..வீட்டுக்கு வந்து நம்ம வீட்டு குப்பைத் தொடிக்குள்ள போடும் போதெல்லாம்.. ..change begins from every individual என்று நினைக்க வைத்தவர்.


எதிரணியில் இருப்பவர்கள் கூட.." என்ன மனுஷன்ப்பானு இவருனு" 👏 மனசுக்குள்  பாராட்டுவாங்களோனு நினைப்பேன்..


அவரோட தொலைநோக்குப் பார்வை..சான்ஸே இல்ல..


EPS;


இவர் வந்து என்ன செய்வார்..எப்படி செய்வார்..எல்லாம் கொஞ்ச நாள் தான்..

இப்படி நினைச்சவங்க தான் என்னைப் போல நிறைய பேர்.


ஆனால்..going strong..


Rahul Gandhi:.


எப்படிப்பட்ட பாட்டிக்கு பேரன்..சும்மா அதிருதில்லனு இருந்திருக்க வேண்டியவர்..


பாவம்..அன்னை காட்டிய வழியம்மானு..

எங்கே செல்லும் இந்தப் பாதைனு கொஞ்சம் என்ன..முதலேர்ந்தே தடுமாற்றம் தான்..


ஒரு இளைஞர் அணித்தலைவராக நல்லது செய்யும் இள ரத்தமாக உருவாகி இருக்கலாம்..

என்னமோ போங்க..


ஸ்டாலின்:


எப்போ பார்த்தாலும்..இது சரியில்லை அது  சரியில்லனு குத்தம்.சொல்லிக்கிட்டே இருக்காரு..


என்ன செய்யறது..ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி..


அம்புட்டுதேன் எனக்கு தெரியுமுங்க..


தவறு இருந்தால் ..மன்னிச்சு..🙏🙏🙏🙏

No comments: