Thursday, October 5, 2023

Madhyamar- சண்டை

 #சண்டே_டாபிக்


#சண்டை


சண்டே டாபிக்..

சண்டை பத்தி எழுதுங்கனு

சிண்டை முடித்து..

சீண்டிப் பார்க்கும்..

சங்கர் ஸாரே...🤣🤣


டை போட்டால் ..

முடி கறுக்கும்..

சண்"டை" போட்டால்..

உறவு சறுக்கும்.😄😄😄😄


மண்டை உருளும் சண்டயுண்டு

மண்டை உடையும் சண்டையுண்டு

மண்டை மழுங்கும்.. சண்டைபல..

மண்டை கனத்தால் சண்டையுண்டு..


பவரு காட்ட சண்டை💪💪💪

தவறை மறைக்க சண்டை.

சுவரெழுப்பும் சண்டை..

சீரழிக்கும் சண்டை..


குடி நீருக்கு சண்டை..

அடிதடியில் முடியும் சண்டை..

நிலத்துக்கு சண்டை..

நில்லாமல் சண்டை..


பக்கத்து வீட்டு சண்டை

பங்காளி சண்டை

பணத்துக்கு சண்டை

பதவிக்கு சண்டை..


எந்த சண்டை சொல்லுறது

வம்புல வந்து முடியுமே..🤔🤔🤔


குடும்ப சண்ட சொல்ல பயமே..

குழுவில் குடும்பம் இருக்குதே..😄😄😄


கூடின நட்பின் விரிசல் சொல்ல

கூடுதில்லையே மனசுமே..


இன்னிக்கு சண்டை..

நாளை சமாதானம்..


மறக்கணும் சண்டை எண்ணமெனில்..

மரத்து போக வேணுமானு..

மன உளைச்சல் வேணாமே


வாரில் வரும் ..

வெற்றியும் தோல்வியும்..

வந்து ஒட்டும் சில உறவுகள்

வெட்டி நகரும் சில நிகழ்வுகள்..


..

இருக்கப் போகும் நாளு கொஞ்சம்.

இதில் எதுக்கு ..மனசில் வஞ்சம்..

இளிச்ச வாய்னு சொல்லும் உலகம்..

இதை நினைச்சு வேண்டாம் கலக்கம்..


சண்டை சச்சரவு இருந்தாலும்

சமரசமும் சமாதானமும்..கூடவே 

இருக்கையில்.

இறுக்கமாகுமே உறவுகள்...

இதை புரிஞ்சு நடக்கணும் நாமே..💪💪💪

No comments: