#midweek_topic
பத்து லட்சம் கிடைத்தால்..
நினைக்கவே ஜிவ்வுனு இல்ல இருக்கு...
பத்து லட்சம் கிடைத்தால்..
பத்து முறை எண்ணிப் பார்ப்பேன்..
பத்திரமா வைக்க ஒரு
பொட்டி ஒண்ணு வாங்குவேன்.
பட்டுப் புடவை வாங்கவா..
பிடிச்ச
பாத்திரம் பண்டம் வாங்கவா..
பத்திரம் மட்டும் வாங்காதேனு..
பட்டுனு சொல்லிப் போட்டாரு தலவரு..
பத்து லட்சம் வந்ததை
பக்கத்து வீட்டில் சொல்லலாமா?
பிறந்த வீட்டுக்கு பகிரவா?
புகுந்த வீட்டில் பங்கு போடவா?..
பயணம் ஒண்ணு போகவா..
பழைய வீட்டை புதுப்பிக்கவா?
பிரித்துத் தரவா பொண்ணுகளுக்கு..?
பத்து பவுனு வாங்கவா?
இப்படி கவிதையில் களமிறங்கிய போது...பல்பு ஒண்ணு எரிஞ்சது.
"ஐஷு..நீ ரொம்ப நாளே ஒண்ணு கேட்டுக் கொண்டு இருந்தியே..அதை அம்மா வாங்கப் போறேன்...
"நிஜம்மாவா..உனக்கு காசு ஏது?"
"பத்து லட்சம் டா..பத்து லட்சம்..சங்கர் சார் தராரு..அதுல உனக்கொரு கிஃப்ட் டா"
உன் ஃப்ரண்ட் கிட்டே கேளுடா..அவ எங்கேர்ந்து வாங்கினாள் என்று"
சந்தோஷத்தில் துள்ளினாள் என் பொண்ணு..
அம்மா....என்ன பேரு வைக்கலாம்..
Simba ..
So, first shopping is ....
...
....
Golden retriever dog.
அது ஒரு அரை லகரம் ஆகுமாம்.
அதுக்கு ஒரு மாசத்துக்கு எப்படியும் 2000+ செலவாகுமாம்.
அதனால், ஒரு ஒன்றரை லட்சம் தனியா ஒதுக்கி வைத்து....அப்படி இப்படி ஒரு சைடு டுமீல் ..
இதுவரைக்கும் pet எல்லாம் வாங்கறது பத்தி யோசிச்சதே இல்லை. ஆனால் இப்போ ஆசை வந்தது..
ஸிம்பா ...ஸிம்பா...கூப்பிட்டு பார்த்துக்கொண்டுருக்கோம்..
எங்கே அதுக்கு இடம் செட் பண்ணலாம்னு...
மீதி இருக்கற லட்சம் என்ன பண்ணலாம்?..
யோசனையில் இருந்தாலும் ...அடுத்தடுத்த வேலையில் மும்மரமாய்..
வாசல்ல யாரோ பெல் அடிக்கறாங்களே?..இந்த வீட்ட்ல யாருக்குமே காதுல விழலையா?
பாட்டுப் பாடி கூப்பிடற இந்த ஃபோனை யாராவது வந்து எடுத்தா..குறைஞ்சா போய்டுவீங்க....
லக்ஷ்மி மா..அங்கே இடுக்குல குப்பை இருக்கே..கொஞ்சம் சரியா பெருக்கினால் தேவலை..
இப்படியே கிச்சன்லேர்ந்து எல்லாரையும் வேலை வாங்கிக் கொண்டு இருந்தபோது..
ஒரு flash..
Aahaa..
எனக்கொரு ரோபோட் வேணுமடா...
அம்புட்டுதே..கூகிள் பண்ண ஆரம்பிச்சேன்.
ரூம் துடைக்க ஒரு roomba..மட்டும் வாங்கவா..இல்லாட்டி
கூப்பிட்ட குரலுக்கு ..வந்தேன்னு நிக்குமே ..அந்த ரோபோ வாங்கலாமானு இப்போ யோசனையில் இருக்கேன்..
நிறைய startup கிட்ட , quotation கேட்டு இருக்கேன். எப்படியும் ஒரு நாலு லகரம் ஆகும்னு சொல்றாங்க..
Discount கிடைக்குமானு deal போட்டுக் கொண்டிருக்கேன்.
Robot க்கு பேரு கூட வெச்சுட்டேன்..
சிம்னி..சிம்னி...
எப்படி இருக்கு?
சரி சரி...தனக்கே செய்து கொண்டால் போதுமா?..
தான தர்மம் எதாவது செய்ய வேண்டாமா?..
மை.வாய்ஸ் மண்டைல போட..
இரு இரு வரேன்..
எப்பவுமே முக்கியமானதை கடைசில தான் எழுதணும்..
நிறைய பேர் கடைசி வரியை கரெக்டா படிப்பாங்க..
அதான்..
எங்க புகுந்த வீட்டு குல தெய்வம் சிவன் கோயில் புனருத்தாரணப் பணி நடந்து கொண்டிருக்கு..
அதுக்கு மீதி இருக்கும் பணத்தைக் கொடுத்துடுவேன்.
சிம்பா ,சிம்னி...
என் வாழ்க்கையில் வருவாங்களானு தெரியாது..
வரலைனாலும்.கவலையில்லை..
ஆனால்..சிவன் கண்டிப்பா மீண்டும் அந்தக் கோயிலில் எழுந்தருளி ,எல்லாருக்கும் அனுக்கிரகம் செய்யணும்னு ஆசை..
அதுக்கு கூட பாருங்க ...அவரை தன் பெயர் உள்ள சங்கரைத் தான் தேர்ந்தெடுத்து இருக்கார் பாருங்க..
அது தான் அவன் செயல்.
'

No comments:
Post a Comment