Tuesday, February 26, 2019

தங்லீஷ்துணுக்குகள்

#தங்லீஷ்துணுக்குகள்

'பாட்டில்' லயித்ததில்...எண்ணெய்
'பாட்டில் 'கை நழுவ
'பாட்டும்' கிடைத்தது..
'பாட்டு 'என்ன வேண்டிகிடக்கு
"பாட்டை' பார்க்கும் வேளையிலே..

#பட்டால்தெரியும்

Monday, February 18, 2019

வாக்காளர் அட்டையும்

வாக்காளர் அட்டையும்..வாயில்லாப் பூச்சி நானும்..

எதுக்கும் சும்மா வாங்கி வெச்சுக்கலாமேனு பல விஷயங்கள் நம்ம வீட்ட்ல இருக்கு.
அப்படித்தான்....இந்த வோட்டர் ஐடி கார்டும்.

கல்யாணம் ஆன புதுசுல டில்லி வாசம். ஜுனூன் ஹிந்தி தான் வாழ்வாதாரம்.கதவை திறக்கவே பயம்.யாராவது எதாவது ஹிந்தில கேட்டுட்டா என்ன பண்றதுனு ஒரே உதறல்.

ஒரு நாள்..என் உப்பரிகையில் நின்னு வேடிக்கை பார்த்தபடி இருந்தப்போ..ஒரு ஃபைலும் கையுமா ஒரு வாட்டசாட்டமா ஒரு ஆள் என் வீட்டை நோக்கி வந்தார். கீழே வீட்டுக்கார அம்மாவோடு ஏதோ பேசி விட்டு..படி ஏறி மேல வர ஆரம்பிக்க..என் லப்டப் அதிகரிக்க..வாக்காளர் அட்டை பதிவுக்கு வந்தேன் என்று புரிய வைத்தார்.

அவர் கேட்ட அத்தனையும் ஒன்று விடாமல் நான் ஆங்கிலத்தில் எழுதித் தந்தேன். குடும்ப விவரம் உட்பட. வந்தது அட்டை.
கால் கிழமான என் வயதை அநியாயம்.. சாளேஸ்வரம் வயது என காண்பித்த அட்டை.. ஒரு நொடி சுக்கு நூறான இதயத்தை கெட்டியாக பிடித்தேன்.
அடுத்த இடி..என் கணவர் பெயர் ராமசாமி. அவர் அப்பா பெயர் ராம் பகதூர்.
பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கி..
எப்படி இப்படி ஒரு தப்பு செய்ய முடியும் என்றே யோசனை.
சீனிவாசன் என்று எழுதியது எப்படி ் ராம் பகதூர் ஆனது.
million dollar question.
அதுவும் அப்போது வாக்காளர் பட்டியலையும் அட்டையயும் ஒழுங்குப் படுத்திய சிம்ம சொப்பனம் பதவியில் இருந்த காலம்.
அந்த வோட்டர் ஐடியினால் பெரிதாக ஒரு பயனுமில்லை.

அதே சமயம் விடுமுறைக்காக சென்னை வந்தேன். அப்பா ஒரே டென்சனாக.."ஊருக்கு போறதுக்குள் வோட்டர் ஐடிக்கு formalities முடி என்றார்.
டெல்லியில் வாங்கிட்டேன்ப்பா என்றேன். காதிலே போட்டுக்கவில்லை.
அங்கேயும் போய் க்யூவில் நின்று அழுது வடிந்து ஃபோட்டோ எடுத்து..ஐடியும் வந்தது.

என் டெல்லி அட்டையை ஒருவரும் மதிக்கவில்லை. ' அது  அந்த ஊருக்கு சார்' கேட்டால் பதில் இப்படி.
நாடோடிகளான நாங்கள் அடுத்த ஊருக்கு மூட்டைக் கட்டினோம். டாடா நகர். அங்கேயும் இதே கதை. வோட்டர் ஐடி வாங்கியே ஆகணும் என்று.
நான் இந்தியாவில தானேப்பா இருக்கேன்னு நான் கேட்ட கேள்விக்கு..முரைப்பு த்கான் பதில்.

அடுத்த மூட்டை தேவ பூமி..Dehradun. அந்த வார்டு கவுன்சிலர் ( டம்மி மனைவி...தேவபூமி ராப்ரி தேவி)
அங்கே தேர்தல் வர..' அண்ணிக்கு உங்க வீட்டு ஓட்டு ..அவசியம் போடணுமென்றார்.

என் டெல்லி, தமிழ்நாடு வோட்டர் ஐடி செல்லாது..இங்கே நான் புதுசா ஒண்ணு இந்த வீட்டு முகவரியில் வாங்கித் தரேன் என்றார். அதே போல ஒரு சுபயோக தினத்தில் "akila 'வை ' akela' ஆக்கி ஒரு வாக்காளர் அட்டை வந்தது..
அந்த 'e ' ஐ' i' ஆக்கச் சொல்ல .. akhila
என்று ஒரு h ம் சேர்த்து..உஸ் அப்பாடா..
இப்பொழுது கர்நாடகா. அதே கதை. மீண்டும்.
கர்னாடகாவில் கால் பதிக்க..

அவள் ஒரு தொடர்கதை மாதிரி..

சீட்டுக் கட்டு விளையாடலாம் .இப்படி state to state போனால் .
one India..அப்படினா என்ன சார்?

Thursday, February 14, 2019

துணுக்குகள்

விரதமிருந்த அடுத்த நாள்..
வெயிட் அரை கிலோவாவது
குறைஞ்சிருக்கா..🍇🍉🍍
வயிறு ஒரு சுத்து உள்ள போயிருக்கானு செக் பண்ற அதீத டிசைன் நம்மளோடது..
அப்ப நீங்க..?

Wednesday, February 13, 2019

பிச்சை பாத்திரம்

(உயிர்)பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றேன்..ஐயனே..என் ஐயனே..

உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.

2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.
ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..

gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.
குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.

பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..
குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து.

 counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.

குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி  குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..

மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.

கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.
மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.

மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை. அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.

திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.

ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை).

இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..

வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.
வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.

மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..

மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aao maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன்.
என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான்.

 வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா  காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ  தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..

நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.

cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும்  செய்திகள்..
கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.

காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம்.
எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே
அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..

எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும்  பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன். No prayers go unanswered

வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.

Saturday, February 9, 2019

Park ஆ இல்லை bark aa

Park or Bark🐕

Park ஆ..இல்லை bark aa..
காய்ந்த இலைப் படுக்கை..
kurl on மெத்தையோ..
குலைக்கும் சில.
குதறத் தயாராக சில
குலையும் நடுங்கி..
குண்டும் குழியானாலும்
கட்டினேன் நடையை..
கவர்மெண்ட்டு சாலையே மேலென்று..

(ஃபோட்டோ கொஞ்சம் shake.. ஒரு பயம் வேண்டாம் என்கிட்டனு முரைச்சு பார்த்தா..நடுங்காதா பின்ன..??)
#morningmusings

Friday, February 8, 2019

Timing

பள்ளிப் பேருந்து ஓட்டுனருடன் ஒரு பெரிய விவாதம்.
ஏம்ப்பா..'அழைச்சிண்டு' போவேன்னு சொல்லிட்டு இப்படி 'அடைச்சிண்டு' போறியே..
உங்களுக்கு சரியா காதுல விழலனா நானா பொறுப்பு..
#timing

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

வேலைக்குப் போன அம்மாக்கள்
விவரம் தெரியாத பிள்ளைகள்
விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்
வினையேதும் ஆனதில்லை அப்போது..
தலைகீழ் எல்லாமாச்சு இப்போது..

முகமூடித் திருடர் போல்
மூடர்கள் வெறிக்கு பயந்து
முகத்தை துணியால் மறைத்தும்
மறைத்தே வீசும் அமிலத்தால்
மங்கிய வாழ்விங்கு ஏராளம்.

ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்
உள்ளூர பயமும் தொற்றிடுதே
உதறல் எடுத்தே உயிர் போய் வருதே
பேருந்து பயணம் இரவிலென்றால்
அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே
அரை வயிற்று உண்வோடு
அடக்கியே செல்லணுமே வீடுவரையில்.

ஊருக்குள் இருக்கையிலே
காருக்குள் போகையிலே
பேசத் துவங்கிடுவாள் அம்மா
பிடுங்கிப் பேசிடுவார் அப்பா
வழித்துணையாய் உரையாடல்
வீடு வந்து இறங்கி்யதும்
விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு

வயிற்றில் ஓர் நெருப்பு
வயதுப் பெண்...
்வீட்டிலிருந்தால்.
வெளியே சென்றால்..

வருமா ஒரு காலம்..
வெறிச்சென்ற தெருவிலும்
வெளிச்ச மில்லா வீதியிலும்
அச்சமின்றி இவள் நடக்க..

Thursday, January 31, 2019

நற்றமிழித்துணுக்கு

#நற்றமிழ்த்துணுக்கு
கரு ஒண்ணு உருவாச்சு காலம்கடந்தாலும் மகிழ்ச்சியில் மனைவி..
கரு கவிதைக்கும் கிடைத்தது ...இரட்டிப்பு மகிழ்ச்சியில்..
கவி பாடும் கணவன்.

Tuesday, January 22, 2019

நாளாம்..நாளாம்..திருநாளாம்

நாளாம்..நாளாம்..திருநாளாம்

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் கூவும்் கடிகாரம்
முடிந்ததே இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை.
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை.
மேகத்துக்கு முதுகு வலியில்லை.

அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை.

சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.

மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க.
Thanks to Swaminathan Ramasubramanian sir. உங்கள் அருமையான பதிவுக்கு இந்த கிறுக்கல் சமர்ப்பணம்.
Happy week ahead friends.
#myclick

Monday, December 24, 2018

முதுமையின் அடையாளங்கள்

முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர் அருவி..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை..
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..

I feel women are more positive and energetic to surpass the ageing.
Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Thursday, December 20, 2018

கா..கா..கா

@myclick ...
Chandrashekar Ramaswamy sir..ரொம்ப கேட்டேளே..காக்கா

அக்கம் பக்கம் பாருடா..சின்னராசா.
ஆகாஸப் பார்வை என்ன..
சொல்லு ராசா..
சிக்னல் என்ன மந்திரமா..
மனுஷன் என்ன எந்திரமா..
சார்ஜண்ட்டு..அங்கே இல்லை..
அர்ஜண்ட்டு ..உனக்கு என்ன..
அம்புக்குறி பார்த்து நீயும்.
வம்பு ஏதும் பண்ணாம..
தடத்திலே  ஓட்டு சாமீ
வழியும் கிடைச்சு விடும்..
வீடும் விரைவில் வரும்..
அக்கம் பக்கம் பாருடா..சின்ன ராசா

Friday, December 14, 2018

அழியாத கோலங்கள்

அழியாத கோலங்கள்..

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..

கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..

நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமோ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

Wednesday, December 12, 2018

புயல் நாள்

வேரோடு வீழ்ந்த மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடாந்திர விருந்தாளி..

வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்குத் திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
விளக்கிடுமோ..
வாழ்வின் பிடிப்பை..

ek KitKat break tho bantha hai Yar

Saturday, December 8, 2018

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

Tuesday, December 4, 2018

நம்பிக்கை

நம்பிக்கை
"எத்தனை தடவை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிண்டு..reminder கொடுத்துண்டே இருப்பியா...?" சீறினேன்   சின்னவளிடம்..
சாமியிடம் கைக்கூப்பி  வரங்கள் வரிசையாய்க் கேட்டபடி பூஜையிலிருந்த நான்..
'சாமி பாவம் ம்மா'..நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தாள்.. எப்படியும் தன் வேலை அம்மா செய்து முடித்து விடுவாள் என்ற நம்பிக்கையில்..

Friday, November 30, 2018

உலகமயமாக்கல்

Starting a morning with a positive note..nothing is impossible or unreachable ..
Thanks my friend

டைலர் காலில் விழுந்தவனெல்லாம்..
Reid and Taylor உடுத்துகிறான்..
ரெடிமேட் பேரே அறியாதவனோ..
Raymond சட்டையில் உலவுகிறான்..
காக்கித் துணி சட்டை விட்டு..
colorplus ஆல் வண்ணமறிகின்றான்..
ஒட்டி தைத்து போட்டவனெல்லாம்..
Otto வுக்கு ஓட்டுபோடறான்..
புள்ளி போட்ட ரவிக்ககாரி..
புளியம்பு சேலைகாரிகளோ..
போத்தீஸும்..நல்லியும்..
போகாத நாளில்லை..
காஞ்சிப் பட்டுடுத்திய தேவதைகள்..
கோரா சில்க்குக்கு மாறியாச்சு..
ஆயிரம் யோசனை..
அதுவா..இதுவா..எதுவென்றே..
அள்ளி குமிஞ்ச அலமாரியுமே..
அழாத குறையில்..அறைக்குள்ளே..
படிப்பும் உழைப்பும் உயர்ந்த்தனால்
பழைய வாழ்வு ஒழிந்ததுவே..
உலகமயமாக்கல்....கொள்கையொன்று
உபகாரமாய்..
உபகரணமாய்..
உலகம் புதிதை உணர்த்தியதே..
நிலையில்லா வாழ்வினிலே..
நினைத்தும்் பாராதது நிகழ்கையிலே..
நாமும்..கொஞ்சம் ..
நம் மனம் போல் வாழ்வோமே

Monday, November 26, 2018

மனிதற்கு மொழியே..தேவைதான்..

மனிதற்கு மொழியே..தேவைதான்..

ஆட்டோல போகணும்் ..app வேணும்.
அரிசி வாங்க போகணும் ..app வேணும்..
எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..
ஏதாவது கேட்கணுமா..app வேணும்..
வேற என்ன ..learn Kannada app தான்..

இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..
 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..
ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..
relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.
 ஹிந்தியுடன் உயிர் வாழலாம்..ஆனால்..சில உணர்வுகள் புரிய ..learning local language is a must)
எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..
வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..
but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..
ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..
இப்பொழுது மீண்டும்..பாடம் துவக்கம்..
I loved this quote too..
"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞
‒Nelson Mandela..

இந்த today's word..நானும் சொல்ல வாழ்த்துங்களேன் friends..

Happy Sunday

Wednesday, November 21, 2018

வேண்டும் வேண்டும்

வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..

இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..

கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..
ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)

தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.

படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..

மழையோ குளிரோ..fan சுத்தணும்..

உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.

பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.

செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..
என்கூட என் காமெராவும் இருக்கணும்..

வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..

முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..

லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..

உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Monday, November 19, 2018

Happy men's day

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
அதிசயமா..
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
 தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க..

தேன்மொழி

எச to Saraswathi Gayathri

தேன்மொழி
ஒல்லியா தெரியற என்றால்..
உச்சி குளிர்வாளே
கொஞ்சம் சதை போட்டியோ என்றால்..
நெஞ்சும் சுருங்கிப் போவாளே..
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு..
எதுத்த வீட்டு் அம்மாவை நினைப்பாள்..
உபாதைகளை ..
ஊருக்கெல்லாம் சொல்வாள்..
google செய்தே
cancer எனக்கில்லையே என்று..
கலங்கியும் போவாளே..
argue செய்வாள்..
அடங்கியும் போவாள்

harmony கெடுக்கும்..இந்த
hormone வேலையை..
மாத்திரை மருந்தோடு..கொஞ்சம்..
மன உறுதியும் சேர்த்துக் கொள்வோம்..
அசுரர் இவரை வெல்ல..
ஆயுதம்..இது ஒன்றே..

Saturday, November 10, 2018

kindergarten முதல் college வரை ( கல்லறை வரையும் கூட)

kindergarten முதல் college வரை
( கல்லறை வரையும் கூட)

டீல் தான் எப்பவும் லைஃப்ல..ஸ்கூல் அட்மிஷனுக்கு சுக்லாம்பரதரம் போட்ட நேரம். வீட்டுக்காரர் கிட்ட 'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி கண்டிஷனுடன்..' capitals to capitation fee வரை உங்க syllabus. கரோல் பாக்..கத்திரிக்காய் எல்லாம் என்னோடுதுனு பாகம் பிரிச்சாச்சு.
நடுக்கத்தோடு பிரின்சிபால் ரூம் கதவை தட்ட..ரம்பம்பம் .ஆரம்பம்..ரம்பம்பம் ..பேரின்பம் ..intro எல்லாம் முடிஞ்சது..பக்கத்திலிருந்த coordinator ஐ பார்த்தபடி principal ' கேள்விகளை நீ கேட்கிறாயா..நானே கேட்கட்டுமா என்ற தொனியில்..
தொண்டையில் கிச் கிச் கணைத்தபடி  coordinator என் கணவரைப் பார்த்தபடி being an engineer we hope that you will help your daughter in her studies. வேகமா அவர் மண்டையாட்ட..கேள்விகள் இப்போ என்னை குறி வைத்து..
' உங்களுக்கு பாடத் தெரியுமா..ஆடத் தெரியுமா..(rhymes சொல்லி கொடுக்க)
கதை சொல்லத் தெரியுமா..
copy, paste தெரியுமா..கட் பண்ணி ஒட்டத் தெரியுமா..collage தெரியுமா..
வீட்டில  magazines வாங்கறீங்களா..அதுல வர அட்வெர்டைஸ்மெண்ட் எல்லாம் collect பண்ணி வெச்சிருக்கீங்களா..see we want creativity in every project we do.
well..
ஆலாய்ப் பறந்த அட்மிஷன் அல்வா மாதிரி கிடைக்க..
welcome to our ________ group of institutions. these years are going to be very crucial for  your child ...coordinator கை குலுக்குவார்.
இதே கதை தான் ஒவ்வொரு ஊர்..ஒவ்வொரு கிளாஸும் மாறும் போது..these years are going to be very crucial in your child's life.
middle school வந்தபோதும்..மீண்டும் orientation. mike பிடித்த madam கள் மழையாய்  advice. அம்மாக்களின் மொழி அறிவு பெருகும் நேரம். கதை, கவிதை, கட்டுரை ( எங்கே போனாலும் ஹிந்தி இங்கிலீஷ்  புஸ்கதம் வாங்கி அடுக்கப்படும்). science project ..பல்பு மாட்டி respiratory system, nervous system எல்லாம் செய்யணும்..இருக்கும் அறிவு பத்தாத நிலையில் விலை கொடுத்து சந்து பொந்து தேடி project ready made ஆ விற்பவர் காலில் விழுந்து வாங்கினால் internal லில் அரை மார்க் கூடும். அடுத்த ஊர் அடுத்த ஸ்கூல்..அதே welcome address.. இன்னும் கொஞ்சம் extra பயமுறுத்தலுடன்.ரிசல்ட் ரொம்ப முக்கியம். hardஆ hard work பண்ணனும்.கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், quilt லிருந்து வெளிவரா முடியா குளிரிலும்...குழந்தைகள் படிப்பு.
அப்பாடா..ஒரு வழியா.இப்போ இறுதி கட்டத்துக்கு வந்தேன்..அதான் காலேஜ்க்கு..
அதே பல்லவி,சரணம்..இன்னும் improvised version. ' we prepare the students to face corporate pressures'
இது என்னடா...இந்த அம்மாவுக்கு வந்த சோதனை..
படுக்கை தட்டி தூங்கபோகும் போது..டொக் டொக்னு மெசேஜ் மழை பெண்ணின் வாட்சப்பில் பொழியும்..தூங்காத விழிகள் நாலாய் நாங்க மாறணும்..
விடியறதுக்குள்ள ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பேர் சூட்டி, பொருளை வித்து, profit காண்பிச்சு, மார்க்கெட் சர்வே எடுத்து..competitor strategy analyse பண்ணி, மாத்திரை போட்டுக்க போகும் அப்பாவை , மைக் பிடிச்சு இண்டெர்வியூ பண்றம மாதிரி ஃபோட்டோவும் எடுத்து...audio ,video எல்லாம் ஒட்டி ஒரு ppt பண்ணி printout எடுக்க 'போயேப் போச்சு தூக்கம்..நான் கிளாஸில் தூங்கிக்கறேன்மா என்று..app ல் எடுக்கும் attendance ..ஆப்பு அடிக்குமுன் அவள் ஓட..
ஆறிப்போன காபி டம்ளருடன்..இப்படித்தான்...நம்ம வாழ்க்கை..this is going to be a crucial phase என்று..present ஐ அனுபவிக்க நேரமுன்றி..எதிர்காலத்த்தை நோக்கி எகிறிப் பாய்ந்தபடி.
ஜன்னல் திறக்கிறேன்..வேலைக்கு போகும் தன் மகனை ஆதரவாய் தலையை கோதியபடி..' இப்ப ஓடாம எப்படா ' என்றபடி இன்னோரு அம்மா..

Thursday, November 8, 2018

எங்கேயோ கேட்ட விசில்...

எங்கேயோ கேட்ட விசில்...


( காலங்கார்த்தால மணி அடித்தபடி வந்த குப்பை வண்டி, ரிவர்ஸ் பண்ணுனு விசில் பாஷையில் சொன்னபடி பணியாளர்..
ஆ..விசில்.. எங்கும் விசில்..எதிலும் விசில்.. விசிலடிச்சேன்..
ரைட்..ரைட்..(write)..

கடுப்பிலிருக்கும் கண்டக்டர்
காட்டமாக அடிக்கும் விசில்
கிளம்பச் சொல்லி கொடிகாட்டும் 'கா'ர்ட்டின்  டாடா விசில்.
பொங்கி வழியட்டுமா என்றே
பால் குக்கர் கூவும் விசில்
போதுமே வெந்த தென்று
ப்ரெஸ்டீஜ் பொங்கும் ் விசில்
பிரம்பும் கையுமாக அலையும்
பி. டி . மாஸ்டர்  பய விசில்..
விடலைப் பசங்க ளடிக்கும்
விவேகமில்லா வெத்து விசில்..
வசூல் ராஜாக்கள் வாயினிலே
விரட்டி மிரட்டி பிடிங்கும் விசில்..
விழுந்தடித்து ஓட வைக்கும்
watsapp toneல் விசில்..

கத்துக்கலாமே அடிக்கவென்றால்
காத்து தானே வருகுது
கிழவிக்கென்ன கேடாச்சு
கிறுக்கா நீயு் மென்றே
கைக்கொட்டி கலாய்த்தபடி
 கேலி பேசுதே உலகமிங்கே..
( காலங்கார்த்தால மணி அடித்தபடி வந்த குப்பை வண்டி, ரிவர்ஸ் பண்ணுனு விசில் பாஷையில் சொன்னபடி பணியாளர்..
ஆ..விசில்.. எங்கும் விசில்..எதிலும் விசில்.. விசிலடிச்சேன்..
ரைட்..ரைட்..(write)..

கடுப்பிலிருக்கும் கண்டக்டர்
காட்டமாக அடிக்கும் விசில்
கிளம்பச் சொல்லி கொடிகாட்டும் 'கா'ர்ட்டின்  டாடா விசில்.
பொங்கி வழியட்டுமா என்றே
பால் குக்கர் கூவும் விசில்
போதுமே வெந்த தென்று
ப்ரெஸ்டீஜ் பொங்கும் ் விசில்
பிரம்பும் கையுமாக அலையும்
பி. டி . மாஸ்டர்  பய விசில்..
விடலைப் பசங்க ளடிக்கும்
விவேகமில்லா வெத்து விசில்..
வசூல் ராஜாக்கள் வாயினிலே
விரட்டி மிரட்டி பிடிங்கும் விசில்..
விழுந்தடித்து ஓட வைக்கும்
watsapp toneல் விசில்..

கத்துக்கலாமே அடிக்கவென்றால்
காத்து தானே வருகுது
கிழவிக்கென்ன கேடாச்சு
கிறுக்கா நீயு் மென்றே
கைக்கொட்டி கலாய்த்தபடி
 கேலி பேசுதே உலகமிங்கே..

Monday, November 5, 2018

நல்ல மனம் வாழ்க.

நல்ல மனம் வாழ்க.

பேஷா இருந்தது எல்லாம்..
புல்லரித்தது..
பந்தியிலிருந்த..
பிராமணர் சொன்னபோது..

நானே..நானா..
என் சமையல் தானா..
அமைஞ்சே போச்சா..
அட..ஆகாசத்தில் நானா..

ஆவலாய் சுவைக்க..
அலற வைத்தது..
அவரையில் உப்பு...
வடையோ..
வடிக்க வடிக்க எண்ணை..
கல்லாய் போனது..
எள்ளு்ருண்டையும்..
அதிரசமோ..
அள்ளும்படி..
திரட்டுப்பாலோ..
ரப்பர் பாலோ....

வாய் திறக்காமல்..
வாழ்த்தி விட்டு போன..
வேதமோதும் வித்தகருக்கு..
வந்தனம் பல சொல்லி..

கோணல்களை நேராக்கி..
குடும்பத்துக்கு பரிமாறி..
பூரித்த வேளை
கும்பிடத் தோன்றியது..
குற்றங்  காணா ..இவர்
நெஞ்சங்கண்டு..

Thursday, November 1, 2018

தாயத்து

கோயிலில் கண்ட காட்சி..

காத்து கருப்பு பட்டதோ
கருத்தோடு கட்டினாள்
கையில் தாயத்து..
காதல் நோயது ..தன்வீட்டு
காளைக்கு வந்ததறியா
கவலையில் தாய்.

மந்திரத் தாயத்து
மாற்றணுமே மகனிவனை
மருமக வரணுமே..எல்லார்
மனசையும் கவரும்படி..

வேடிக்கை மனிதரென
வேங்கடனும் நினைப்பானோ..
வேடிக்கை விட்டு..என்
வேண்டுதலை தொடர்ந்தேனே

மழைக்காலம் மேகம் ஒன்று..

மழைக்காலம் மேகம் ஒன்று..

'பொத்துக் கிட்டு ஊத்துமடி வானம்...
சொட்டு கூட புலம்பலில்லா காலம்.'

அப்போ எல்லாம்  வீட்டு ரமணன்கள் அப்பாக்கள் தான்.. பேப்பரை மேஞ்சு மேஞ்சு படிப்பு.. அதில் weather forecast வரும். map ல கூப்பிட்டு காண்பிப்பார்கள்..கிழக்கிலிருந்து மேகம் தெற்கு நோக்கி வரது பாரு.  ஒரு சுழல் மாதிரி தெரியறதா..அது அப்படியே நகரும்னு கிளாஸ் எடுக்கப்படும்.  நம்ம வீட்டு வாசலில் நாளை மழை பெய்யும் கண்டிப்பா அடித்து சொல்வர். google map, google earth எல்லாம் குடும்பத் ்தலைவர்களே..
கண் விழிச்சதும் வாசலில் வந்து கை நீட்டிப் பார்க்கப்படும்..
அடுத்த நடவடிக்கை. raincoat..
 தங்கத்தில குடை ஜிமிக்கி போட்டு அனுப்புவா ஸ்கூலுக்கு...சத்தியமா குடை மட்டும் தரமாட்டார்கள்.
தொலைச்சுட்டு வந்து நிப்பேனு வசவு விழும். கலர் குடை கொண்டு வரும் ஃப்ரண்டை பார்த்தா ஒரு காண்டாகும்.
பீரோலேர்ந்து பாண்ட்ஸ் பவுடர் போட்டுண்ட பஞ்சு மிட்டாய் ரெயின் கோட் எடுத்து தரப்படும்..கவரோட பத்திரமா கொண்டுவானு கட்டளையுடன்.லேசா தூறல் போட ரெயின் கோட்டின் பவுடரும் கரைந்து ஒடும்.. ஹவாய் செருப்பு கரும்புள்ளி செம்புள்ளி அடிக்கும். அந்த பிளாஸ்டிக் ஒரு 'க'ப்படிக்க..மழையின் ஜில் காற்றை அனுபவிக்க முடியாதபடி் புழுங்கித் தள்ளும். தெரு முனை தாண்டியதும்...ரெயின்கோட் பைக்குள் போகும்..ஆனந்த கூத்தாட்டம் கொட்டும் மழையிலே..
அடுத்த குஷி..மாநிலச் செய்தியில் லீவ் சொல்லிடுவார் செல்வராஜ். லேசா தூற ஆரம்பிச்சதும் கரண்ட் கட் ஆகிடும். inverter இல்லாத இன்பமான காலம்..no படிப்பு.no home work..எல்லார் வீட்டு வாசலிலும் குட்டி குட்டி மாநாடு நடக்கும்..குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..ராம ராம ராம சொல்லுங்கோ கரண்ட் வரும்னு வயசான பாட்டி சொல்ல..வரக்கூடாது லைட்டுனு வேண்டியபடி ராம மந்திரம் தெருவில் ஒலிக்கும்..
பளபளனு துடைச்சு வெச்ச லாந்தர் விளக்குகள் மின்மினிப் பூச்சி மாதிரி அழகா எரியும்.அம்மாக்கள் சூடா சாதம் வெச்சு, காலையில் செய்த ரசத்தில் மிளகும் பெருங்காயமும்,
கருவேப்பிலையும் போட்டு கொதிக்கவிடும் வாசம் ஊரைத் தூக்கும்.பசியைக் கிளறும்..மெழுகு வர்த்தியும் அங்கங்கு எரிய.. ஆவி பறக்கும் சாப்பாடு அரை நொடியில் காலியாகும்.சாப்பிட்டு முடித்து இருட்டில் இன்னோரு ரவுண்டு anthakshari  நடக்கும்.
புயல் பற்றி பெரியவர்கள் பேச..பொழுது நாளைக்கு எப்படி கழிக்கலாம்னு வாண்டூஸ் ப்ளான் நடக்கும்.
ஒருவழியாக அவரவர் வீட்டுக்குள் தஞ்சம் அடைய..
நானும் அப்பாவும் காற்றில் ஆடும் மரத்தையும், கருமை கட்டிய வானத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்க...சரக் சரக் என்று சிலரின்  செருப்பு சத்தம் மட்டும் கேட்க..
மழை நாட்கள்..மனசுக்கு பிடித்த நாட்களாய் இருந்ததை..இன்னும் மனசு நினைத்து ஏங்குவது ஏனோ?