Thursday, October 5, 2023

Madhyamar-அமானுஷ்யம்

 இது அமானுஷ்யமா?..

அகஸ்மாத்தா?..

அனுக்கிரகமா?..

யான் அறியேன் பராபரமே..🙏🙏


நேத்து கீரை கதை போஸ்ட் போட்டேனா..விரலுக்கு exercise கிடைக்கும்னு..


காலைல வாக்கிங் கிளம்பினேன்.. எப்பவுமே ஒரே பார்க்குக்குள் சுத்த பிடிக்காது..கால் போன போக்கில் நடக்க..m

ஒரு கோயிலுக்கு போய்ட்டு..

பிரசாதம் கிடச்சா அப்படியே சாப்ட்டு வருவேன்.

இன்னிக்கு திருமலா கோயில் போகணும்னு ப்ளான்.


வழியில் ஒரு ஆட்டோ குடை சாய்ஞ்சு கிடக்க..

அதிலேர்ந்து ஒரு பெண்ணை கஷ்டப்பட்டு எல்லாரும் வெளியே வர உதவி செய்துட்டு, அவங்கள  வேற ஆட்டோவில் உட்கார்த்தி வெச்சுட்டு,நகரும் போது." 


"அடடா..நேரமாச்சே..இனிமே நடந்தால், அப்பாவுக்கு கஞ்சி கொடுக்க லேட்டாகிடுமேனு மனசு ஒரு பக்கம் சொல்ல..' 


இல்ல இல்ல..போட்ட திட்டம் படி போ..பெருமாளை தரிசிக்கனு இன்னொரு மனசு சொல்ல..

நடையை கட்டினேன்.


கோயில்ல நாலு கல்யாணம். பராக்கு பார்த்து விட்டு,சன்னதி இன்னும் அஞ்சு நிமிஷத்தில திறக்கும்னு சொல்ல..


பார்த்தால்..

..கதவு கிட்ட என் வயதொத்த பெண்மணி..கூடை நிறைய துளஸியை எடுத்து ,

எல்லாருக்கும் வினியோகம் செய்ய ஏதுவா துளஸி இலையை மட்டும் உருவிக் கொண்டிருந்தாங்க.


' நான் உதவட்டுமானு ' கேட்க..

ரெண்டு பேரும் வேலை செய்ய..


'அப்படியே போட்டுட்டு வாங்க..விஸ்வரூப தரிசனம் பார்த்துட்டு வந்துடலாம்னு ' என்னை கையைப் பிடிச்சு இழுத்து கூட்டிண்டு போனாங்க அந்தப் பெண்.


அடேங்கப்பா..

வாழ்நாள்ள முதல் முறையா..அந்த ஒரு நொடி விஸ்வரூப தரிசனத்தை கண் குளிரக் கண்டேன்..


இப்படி ஒரு தரிசனம் எனக்கு கிடைக்கும்னு ,நான் நினைச்சு கூட பார்க்கலை..கண்ல பொல  பொலனு கண்ணீர்..


திருப்பியும் சன்னதி அலங்காரத்துக்காக மூடப்பட..


அவங்களோட சேர்ந்து..

நானும் அந்த கூடை முழுசுமிருந்த துளஸியை ஒவ்வொன்றாக பார்த்து கிள்ளி எடுத்துக் கொடுத்துட்டு கிளம்பினேன்.


" இன்னிக்கு உங்களுக்கு கைங்கர்யம் பண்ணனும்னு அவன் சித்தம் '..அவர்கள் சொல்லிக் கொண்டே..

' இந்தாங்க..இந்த நெல்லிக்காய்..எனக்கு முதல் பிரசாதம் கிடைச்சது..

நீங்களும் ரெண்டு எடுத்துக்கோங்க' என்றாள்.


யோக நரசிம்மரையும், பெருமாளையும் தாயாரையும் ,

ரங்கநாதரையும் சேவித்து விட்டு..

மனசெல்லாம் லேசாக..

வீடு வந்தேன்..


என் விரல்களுக்கு இன்று அவனுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது.


அந்த நெல்லிக்காய்..சாதமாக்கி எல்லாருக்கும் பிரசாதம் தர..

இந்த நாள்..

இனிய நாளாச்சு🙏🙏


உங்களோட பகிர ஆசை..

அதான் ..பதிவாக ..🙏🙏

No comments: