#VPKP3
#முதல்_படத்துக்கான_கதை
#பதிவு 2
#உச்சிதனை_முகர்ந்தால்
Word count 287
டீச்சர்களின் ஸ்டாஃப் ரூம் சலசலப்பு..
பிரின்ஸிபால் ராஜலக்ஷ்மி மேடமை.. கண்டதுமே அடங்கியது.
ராஜலக்ஷ்மி ..சன் ஷைன் பப்ளிக் ஸ்கூலின்( SPS) பிரின்ஸிபால்.
அவள் கம்பீரம்..
கண்ணில் காணும் உறுதி, பேச்சில் இருக்கும் கண்டிப்பு கலந்த கருணை, குழந்தைகளைக் கண்டதுமே அவள் காட்டும் பரிவுடன் கலந்த அன்பு ...
எல்லாவற்றிற்கும் மேலே..மிக நேர்த்தியாக அவள் செய்யும் அலங்காரம் ...டீச்சர்கள் மாணவ மாணவிகள் எல்லாருமே அவள் விசிறி.
இரண்டு மாதங்களுக்குப் பின் வரப்போகும் பள்ளி நிகழ்ச்சிக்கான திட்டமிடும் மீட்டிங்
கொண்டாட்ட நாளும் வந்தது.
SPS Welcomes you all to the
Grand Parents day.
வரவேற்பு வளையங்களுடன் , தோரணங்களுடன் அந்தப் பள்ளி ஜொலித்தது.
அங்குமிங்கும் ஓடியபடி டீச்சர்களும், விதவிதமான வேஷத்தில் குழந்தைகளும்...
"மிஸ் மிஸ்..என் ட்ரெஸ்ஸை பிடிச்சு இழுக்கறான்.."
"மிஸ்...மி...ஸ்.."தன் சுண்டு விரலைக் காட்டி அவசரத்தைக் காட்டிய வாண்டுகள்.
"மிஸ்..என் லிப்ஸ்டிக் கலர் நல்லாவே இல்லை .." மிடில் ஸ்கூல் மாணவிகள்.
ஸ்டேஜ் முதல் சாப்பாடு வரை எல்லாம் மிக நேர்த்தியான ஏற்பாடுகள்.
மணி 4 .
பாட்டிகளும் தாத்தாக்களும் ரெட் கார்ப்பெட்டில் கைகோர்த்து நடந்து வந்து..
"நான் காவ்யாவோட பாட்டி..
"நான் தான் வினோத்தோட தாத்தா"..
பரஸ்பர அறிமுகங்கள்
பாட்டு, டான்ஸ் , மாறுவேடம், நாடகம்..
ஒவ்வொரு தாத்தா பாட்டியின் முகத்திலும் பெருமிதம்.
" இப்போது..
நம் குழந்தைகளின் தாத்தாக்களும் பாட்டிகளும் இம்மேடைக்கு வந்து ..
அவரவர்கள் தனித் திறமையை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் "..பிரின்ஸ்பலின் அழைப்பு.
ஒரு நிமிடம் அங்கே மெளனம்.
பின் களத்தில் குதித்து தூள் கிளப்பினர்.
கட்டபொம்மன் வீர வசனத்துடன் மீசை முறுக்கி தாத்தா..
அபிநயம் பிடித்து ஆடும் பாட்டி..
" நான் இங்கிலீஷில் கதை சொல்றேன்"..வந்தார் ஒரு தாத்தா.
" மேஜிக் செய்யட்டுமா?..மனதைக் கவர்ந்தார் ஒருவர்.
Catwalk ஜோடிகள்.
அரங்கமே அதிர்ந்தது சிரிப்பலையில்.
கடைசி நிகழ்ச்சியாக...
" குழந்தைகளே..அவரவர் தாத்தா பாட்டியை போய் கட்டி அணைத்து வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்'..
அறிவிப்பாளர் சொன்னது தான் தாமதம்..!!
குழந்தைகள் எடுத்தனர் ஓட்டம் தங்கள் சொந்தம் தேடி.
ஃபோட்டோ க்ளிக் சத்தத்துடன்...
கொஞ்சும் குரல்கள்..
" தாத்தா,..பாட்டி ..உனக்கு இதெல்லாம் தெரியுமா?..
அங்கே ஒரு அன்பின் சங்கமம் நிகழ்ந்தது. உச்சி முகர்ந்து ஆசிகள் அளித்த... பெரியோர்களின் கண்கள் தேடின..ஸ்கூல் பிரின்ஸிபால் மேடம் ராஜலக்ஷ்மியை.
இரண்டு மாதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற உழைத்த டீச்சர்களின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
" நம்ம பிரின்ஸிபால் மேடம் ..அவங்க லெவலே தனி".
பெருமை கொண்டனர்.
இருக்காதா பின்னே..!!!
நியூக்ளியர் குடும்பச்சூழலில்..
தாத்தா பாட்டிக்கும் ஏக்கம்..குழந்தைகளுக்கும் அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில்..இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு பெரிய இடைவெளியைக் குறைக்க ஒரு சிறு முயற்சி எடுத்த பள்ளி நிர்வாகம்.
'சன்ஷைன்'..அங்கே எல்லார் முகத்திலும் கூடத்தான்.

No comments:
Post a Comment