ஸண்டே ஸ்பெஷல்.
ஙே பதிவு
குட்டிப் பாப்பாவா நான் இருக்கும் போது..என்னோட பாட்டி எப்பவும் ங்கு..ங்கா..நு மூக்கை சுருக்கி, தொண்டைக் குழிக்குள்ளேர்ந்து கொடுத்த குரல் எனக்கு வேறு மாதிரி கேட்டதோ என்னமோ தெரில..
ங்கு..ங்கா..சொன்னதை ..ஙே நு முழிச்சு முழிச்சு பார்த்தேனோ என்னவோ தெரியலை..👀
நீ போகுமிடமிடமெல்லாம் ..நானும் வருவேன்..ஙே..ஙே ..ஙே..தான்..
நம்ம நேரம் அப்படி..
ஙே..வாங்காத உலகத்திலே..நிம்மதி இல்லைனு. ..பாட்டுதான்....குடும்பப் பாட்டுதான்..
ஸ்கூல் ஙேஸ் இருக்கே..sorry ..days இருக்கே..
டீச்சருக்கு எடுபிடி வேலை செய்யறதுல இருக்க்ற சுகமே தனி..
டீச்சரோட ஹேண்ட் பேக்கும், சாப்பாடு பை ,குடை ..ஏந்தியபடி அவங்க கூட நாம் நடந்து போகும்போது.. ஒரு புகை எழும்பும் பாருங்க. அதுவே பல பகைக்கு..காரணமாகும்..
நாலாங் கிளாஸ்..
எங்க க்ளாஸ் டீச்சர் ,உடம்பு சரியில்லனு லீவ்ல இருந்தாங்க. அந்த இடத்தில டெம்ப்ரரியா ஒரு டீச்சர்.
நானும் என் ஃப்ரண்ட் ஹில்டாவும் அந்த
டீச்சரின் பெட் ஆகிட்டோம்.💪💪💪
நோட் புக் தூக்குவது, ஓடிப் போய் கப் போர்டிலிருந்து அவங்க கேட்பதை எடுக்கறது, அப்பறம்..ஹி..ஹி..ஹி..மிஸ் மிஸ்..அவ எப்பப் பார்த்தாலும் பேசிக் கிட்டே இருக்கா மிஸ்ஸுனு கோள் மூட்டறது..😃😃😃
எங்க ஸ்கூல்ல இருந்த ஸ்டேஷனரியில் நோட்டுபுக்கெல்லாம் கொஞ்சம் கம்மி விலையில் கிடைக்கும்.
ஸ்டூடண்ட்ஸ் வாங்கிக் கொள்ள வசதியா இருக்கும்.
" அகிலா..ஹில்டா'..மிஸ் இப்படி கூப்ப்டதும் தேன் வந்து பாயும்..
" எஸ் மிஸ்.. "..
ஒரு துண்டு சீட்டை நீட்டி அதில பெரிய லிஸ்ட்.. குட்டி நோட், பெரிய நோட்,ரெக்கார்ட் நோட்னு ..
பவ்யமா நானும் அவளும் போய்..இரண்டு கை பத்தலடானு வறுமையின் நிறம் சிவப்பு எஸ்.வி.சேகர் ஸ்டைலில் தூக்கிக் கொண்டு வர..
எங்க க்ளாஸுக்குள் நுழைய இன்னும் சில அடிகள் தான்...
" கேர்ள்ஸ்..எங்க போறீங்க..க்ளாஸ் நேரத்தில?"..
ம்ம்ம்ம்ம்.மாட்டிகின..moment..
ஙே..ஙே..ஙே...👀👀👀👀👀
வேற யாரு? எங்க ஹெட்மிஸ்ட்ரஸ் தான்..
நானும் ஹில்டாவும் ரொம்ப வெள்ளந்தி..
எங்க கையில் இருந்த லிஸ்ட்டை
பய பக்தியா அவங்க கிட்ட கொடுத்து....கொடுத்து..
அவங்க நேரே எங்க கிளாஸ் நோக்கி படையெடுக்க..
அங்கே எங்க மிஸ் ..ஙே நு முழிக்க..
அடுத்த நாள் காலையில்..நானும் ஹில்டாவும் மிஸ்ஸைத் தேட..
" உங்க பழைய க்ளாஸ் டீச்சர் வந்தாச்சு..'..
ஙே..ஙே..ஙே..
இனிமே எங்க காட்ல ஏது மழை? ..
விஜி..ரமா..ஷர்ட் காலரை உசத்தியபடி...நோட் புக்கை தூக்கிக் கொண்டு..
இன்னொரு ஙே...
ஆறாவது படிக்கும்போது.. அப்போதுதான் திருச்சி to சென்னை School.
மெளனராகம் ரேவதி மாதிரி..புது இடம் ,புது பாஷை..ஆனால்..கொஞ்சம் குறும்பும் சேர்ந்து போச்சு..
புதுசா ஒரு மிஸ் அன்னிக்கு சயின்ஸ் எடுக்க வந்தாங்க..
மழை சூப்பரா கொட்டிக் கொண்டிருந்தது.🌧🌧🌨☔
நானும் என் பக்கத்தில இருக்கும் கோமளவல்லியும் தொண தொணனு ..மழை சத்தத்தில ..டீச்சருக்கு 👂 காதுல எங்க விழப்போறதுனு பேச..
" will you pls stop talking' ..ரேவதி வாங்கும் திட்டு அப்பவே..நாங்க வாங்கிக் கொண்டிருக்க..
அந்த மிஸ் கண் எப்போதும் எங்க மேலேயே இருக்க..செம்ம டோஸ் ..வாங்கிக் கொண்டே இருக்க..
ஒரு ஞாயிற்றுக் கிழமை..
வீட்ல... மைசூர் போண்டாவும் சட்னி சாம்பாரும் ,மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த என்னை சுண்டி இழுக்க..
வீட்டுக்கு ஓடினேன்..
' வா..வா..உனக்கு ஒரு சர்ப்ரைஸ்"..சித்தி சொல்ல.
ஆஹா..ஏதாவது 🎦 சினிமா டிக்கட்டா என்று நான் ஜொள்ளு விட..
" இவ தான் என் ஃப்ரண்ட் ......'..
என்னைக் கண்டு ஙே ஆக..
உன்னைக் கண்டு நான் ஙே ஆக..
உல்லாசம் பொங்கும் அங்கே ஙே..ஙே..ஙே..
வேற யாரு ?..!!
என் டீச்சர்....என் சித்தி ஃப்ரண்ட்டு..😃😃😄
விட்டேன் ஜூட்..
ஆனால்..அப்புறம் ..ஞாயித்துக் கிழமை அவங்களுக்கு எங்க வீட்ல treattu..🍧🍬🍨🍡🍭🍦🍰
மத்த நாள்ள. அகிலாவுக்கு special treatmenttu..
இந்த ஙே போதுமா..இன்னும் கொஞ்சம் என்ன..கூடை கூடையா இருக்கு..
அள்ள அள்ளக் குறையா ஙே..க்கள்😃😃😃😃
"

No comments:
Post a Comment