Thursday, October 5, 2023

Madhyamar-வாழ்க்கையும்_பாடலும்

 #சண்டே_ஸ்பெஷல்..

#வாழ்க்கையும்_பாடலும்


பாடல்கள் இல்லாத வாழ்க்கையா..?


எலக்ட்ரிக் ட்ரெயினில்..அந்த டடக் டடக் சத்தோடு..

சந்தத்தோடும் பாட்டு பாடி ..

சில்ல்றை கேட்க வருவோர் பலர்.


சிலர் பாடற பாட்டு..ரொம்ப அருமையா இருக்கும்.

ஹார்மோனியத்துடன்..கணீர் குரலில்..' இறைவனிடம் கையேந்துங்கள்..அவன் இல்லையென்று சொல்லுவதில்லைனு'....டெய்லி அவர் அந்த ஒரே பாட்டை பாடினாலும்..மனசுக்குள் அப்படியே ஒரு பந்து உருண்டு போகும்..


அம்மா கிட்ட எதுக்காவது காசு கேக்கணும்னா..இந்தப் பாட்டுதான்...கை கொடுக்கும்..😄😄💪💪💪


அடுத்து இன்னொருத்தர் மனைவி குழந்தைகள் ஹார்மோனியத்துடன் வருவார்.ஹிந்தி தான் பாடுவார்..

' ஏக் ப்யார் கா நக்மா ஹை..ஜிந்தகி அவுர் குச் பி நஹி..தேரே மேரே கஹானி ஹைனு.." பாடி முடிச்சுட்டு..ஒரு அர்த்தமுள்ள சிரிப்பு சிரிப்பாங்க..❤️❤️


அந்த லவ்வை பாருடினு ..கண்டிப்பா ஒரு கிசு கிசு அங்க ஓடும்..


சில நாட்கள்..பக்தி மணம் கமழும் ஒருத்தர் வருவார்..

வெங்கலக் குரலில் ' "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதர் அரசாங்கம்'

அவர் பாடற பாட்டு ..அன்னிக்கு பூரா ..மனசில ரீங்கரிச்சு ..பக்தி பழமா ஆக்கிடும்..🪗🪗🪗


இப்படி ஒரு 🎵 கச்சேரி ஒரு பக்கம் நடக்க..


லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ..ஏகத்துக்கு கச்சேரி, பஜனைனு நடக்கும்..


செவ்வாய் வெள்ளிக்கிழமை...

' கற்பூர நாயகியே கனகவல்லினு ஆரம்பிச்சு...செல்லாத்தா ..செல்ல மாரியாத்தானு '....

நம்மள சாமி ஆட வைக்கும் ஒரு ட்ரூப்..


ஆஃபீஸ் போற இளம்பெண்கள்..

தங்கள் மாமியாரோட படற பாட்டையும்..மறக்க..

பாட்டா பாடித் தள்ளுவாங்க..

' ஒரு தென்றல் புயலாகி வருமேனு"/..

ஆத்தீ..கொஞ்சம் ஸ்லோ மா..நாங்க கொஞ்சம் பரீட்சைக்கு படிக்கறோம்னு அப்பீல் பண்ணாலும்..அலட்டிக்காமா..அடித் தொண்டையிலிருந்து பாடி..களைப்பாங்க..


இப்படி மின்சார 🚃 ரயிலோடு..பாட்டுப் பயணம் ..

அடுத்து..


சம்சார சாகரத்திலும் நிறைய situation பாட்டு..


பாட்டில்லாத கல்யாணமா?..

பாட்டு போட்டியில்லா நலங்கா?..


  ஒரு நெருங்கின உறவினர் வீட்டு  கல்யாணம்.

நலங்கு..ஜாலியா நடக்க..

" ம்ம்ம்ம்..பொண்ணை ..ஒரு பாட்டு பாடச் சொல்லுங்கோ"..நேயர் விருப்பம் வர..


வெட்கம் தாங்காமல்.." உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்..என்னைப் பாடச் சொன்னால்..என்ன பாடத் தோன்றும்னு "...பொண்ணு பாட...

' வெள்ளி பனி உருகி ..மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்னு" ..பையன் பாட..

திடீர்னு பையனோட அம்மா..விசும்பி விசும்பி அழ ஆரம்பிச்சாங்க..

ஓஹோ..இந்த பாட்டெல்லாம் மாமிக்கு ரொம்ப பிடிக்கும் போலருக்குனு ..எங்க பாட்டி அவங்க கிட்ட..போய் சமாதானம் சொல்லப் போக..

" இப்பவே என் பையன் அவள் வலையில் விழுந்துட்டானேனு .'..கண்ணீரும் கம்பலையுமா...

ஒரு டூயட் ..இப்படி முதல்லயே மாமியாரும் மாட்டுப்பெண்ணும் டூ விட காரணமா போச்சே...


இதை விட அடுத்த பாட்டு..


அதே குடும்பத்தில் இன்னொரு கல்யாணம். 

 நலங்குக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தா..

" அம்மா தாயே..ஒழுங்கா நல்ல பாட்டா பாடு..ஏடாகூடமா எதாவது பாடி வெச்சு..வாழ்க்கை பூரா இடி வாங்காதேனு'..

" அம்மா..chill maa'..பொண்ணு கூலா சொல்லிட்டு போய்ட்டா.


நலங்கு ஆரம்பிச்சது..


தேங்காய் உருட்டியாச்சு..அப்பளம் உடைச்சாச்சு..

இப்போ..பாட்டு டைம்..


"எதேதோ எண்ணம் வளர்த்தேன்..உன் கையில் என்னை கொடுத்தேன்.."..

அவள் பாட..


' நீ பாதி..நான் பாதி..கண்ணே'...


நானும் கல்யாணப் பெண்ணின் அம்மாவும் thumbs up செஞ்சுண்டோம்..

சம்மந்தி மாமி வாயெல்லாம் பல்லாக ..அப்படியே அங்கே எல்லாருக்கும்  கொடுத்துக் கொண்டிருந்த   மிக்ஸரை வாயில் போட்டதும்..

பெண் வீட்டு சைட்லேர்ந்து ஒரு குரல்..' சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்'...வெகு சங்கோஜக்காரி எங்கள்...'..


ஒரே வெடிச்சிரிப்பு..


பாவம்..சம்மந்தி மாமியும் சிரிப்பில் கலந்து கொண்டு..ரொம்ப ஜோவியலா இருந்தா..


சரி..நலங்கை முடிக்கலாமானு ..ஒரு குரல்..


" இன்னும் நான் எனக்கு புடிச்ச பாட்டை பாடவே இல்லையேனு "..கல்யாணப் பொண்ணு ஒரு குண்டைப் போட ..


பையனும் ஜொள்ளிண்டே..' உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில்னு'....


பாடும்மா ..பாடு..ஒரே cheer girls ..


தொண்டை கனைத்தபடி..


' இவன் யாரோ..இவன் யாரோ வந்தது எதற்காக..

 சிரிக்கின்றான் ..ரசிக்கின்றான் எனக்கே எனக்காக..'..


பொண்ணு கை காட்டி காட்டி மாப்பிள்ளைய பார்த்து பாட..

பையனோட அம்மா..ஓரமா போய் நின்னு..விசும்பல்..


" ஏன் என்ன ஆச்சு'/.


" பாருங்கோ..என் புள்ளய எப்படி வளர்த்தேன்..இன்னும் கல்யாணம் ஆகி சில மணி நேரம் கூட ஆகல..' இவன் தானா ..இவந்தானானு ' கையை கையை.. காட்டி . எப்படி மரியாதையே இல்லாம பாடறா..'..


எங்கோ..கோபம்..எங்கோ வெடிக்க..

இந்த குடும்பத்துக்கும் நலங்குக்கும் ஆகவே ஆகாது போல இருக்கேனு...


விவேக் என் மை.வாய்ஸில்..

இந்தப் பாட்டெல்லாம் எங்கே கேட்டாலும் கொசுவத்தி சுத்தும்..


என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத..என்றும் என் கூடவே ..மனசுக்குள் பொத்தி வெச்ச பாட்டு.


என் கல்யாணம் முடிஞ்சு..கட்டு சாதம்..

😭 ஒரே அழுகை..நானும் அப்பாவும்..

எங்க அம்மா.. ..'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி..' இப்போ என்ன உங்க பொண்ணு கல்யாணம் ஆகித் தானே போறா..மானத்தை வாங்காதீங்கனு' மிரட்ட..


வேன் கிளம்பி..ஓசூரை நோக்கி.


ஓசூர் கிட்டக்க வந்ததும்..


என் நாத்தனாரும் நாத்தனார் ஹஸ்பெண்டும் ஒரு இடத்தில் இறங்கி..அங்கே நிறுத்தி வெச்சிருந்த பைக்கில் வீட்டுக்கு போய்ட்டா..


எங்க வேன்..ஆடி ஆடி..வீட்டை அடைந்தது..


வேன்லேர்ந்து இறங்கி..மாடிப் படி ஏறியாச்சு..

வீட்டு வாசல்ல நானும் அவரும் நிற்க..

ஆரத்தி தட்டுடன் என் நாத்தனார்..

ஹால்லேர்ந்து..சத்தமா..டேப் ரிகார்டர்லேர்ந்து..


"மண மகளே மண மகளே 

வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 

குண மகளே குல மகளே 

பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே

குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே

மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே.."..


"தேவர் மகன்ல "வருமே அந்தப் பாட்டு..


அப்படி ஒரு சந்தோஷ feeling. எப்பவுமே..இருக்கும் ஒரு traditional பாட்டை விட்டுட்டு..


இது கரெக்டா நாங்க உள்ளே நுழையும் போது பாடணும்னு..வேக வேகமா முன்னாடி போய்..வீட்டை ரெடி பண்ணி..காஸெட்டை கரெக்டா செட் பண்ணி...

வாய் நிறைய புன்னகையுடனும் ,சந்தோஷத்துடனும் என்னை வரவேற்ற விதம் இருக்கே...

Hats off to my beloved sister in law.


ராஜா சார் இசை..அன்று நுழைய ஆரம்பிச்சது..இந்த மண்டைக்குள்...

அதுக்கப்பறம் என் cousin sister கல்யாணம் முடிஞ்சு அவளை கொண்டு விடப் போனபோது..என் வீட்டுக்காரர் மொபைல்லேர்ந்து இந்த பாட்டை பாட வெச்சேன்.


இப்படி எல்லாத் தருணங்களிலும் நம்ம வாழ்க்கையோட ஒன்றி இருப்பது இசை தான்..


இசையோடு இணைந்து இனிமையா வாழ்வோம்.


Madhyamar-ஆண்_மனது

 #sunday_topic


#ஆண்_மனது.

என் கணவர் பார்வையில் என் குறைகள்..


சொல்லித்தான் ஆகணுமா Shankar Rajarathnam  sir.


" ஏம்மா..ஏற்கனவே இந்த விஷயத்தை மூணு தடவை சொல்லிட்ட..!!! 

கீறல் விழுந்த record player மாதிரி நான் சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்றேன்னு..

முதல் குறை இது.


அவருக்கு இன்னும் நான் சொல்ல வருவது புரியலையோனு  ரிப்பீட் mode ல திரும்ப திரும்ப சொல்லறேனே..பாவம் அவர்.


' இந்த ஹால்ல நான் மட்டும் தானே இருக்கேன்....கொஞ்சம் decibal குறைக்கலாமே...'..


மெதுவா பேச இந்த அகிலா கத்துக்கலையேனு குறைதான்.


என்ன செய்ய..அப்பாவுக்கு கொஞ்சம் காது கேக்கறது கஷ்டம். அவரோட பேசிப் பேசி குரல் உசந்து போச்சு..


Accountant நு பேரு..ஒரு budget உண்டா..எப்ப கணக்கு கேட்டாலும் " suspense " ஆ பேசினால் எப்புடிமா...


"இத்தனை புடவை இருக்கு..திருப்பியும் ஷாப்பிங்கா.."


" முழுசா ஒரு சினிமாவை உட்கார்ந்து பாக்கறயா....pause பண்ணி பண்ணி..படமே பார்க்க interest போச்சு..

( பின்ன..நடுவுல காஃபி,ஸ்னாக்ஸ்..வேண்டாமா?)


எதாவது முக்கியமான வேலை செய்யணும்னு வெச்சுக்கோங்களேன்..


அவர் documentation எல்லாத்திலும் perfect. 

என்னொட பார்ட் வேலை என்னனு கரடியாய் கத்துவார்.


நான் கழுவும் நீரில் ..நழுவும் மீனாய் ...

" இருங்கோப்பா..கிச்சன் வேலை இருக்குனு தப்பிச்சிங்..

அப்புறம்..அப்பா..ரொம்ப தூக்கம் வரதுனு'..ஓடிங்.

அவரும் விடாது கருப்பாய்..நான் எதாவது சொதப்பாம இருக்கணுமேனு..

" நான் பேசறது கேட்கிறதா..புரியறதா..??'..

புரியாத புதிராய் நான் அவரைப் பார்க்க....

அவர் சொல்றது முடிக்கும் போது..அதான் எனக்கு தெரியுமேனு துள்ளி குதிப்பேன்..


கரெக்டா..அந்த வேலைக்கு கிளம்பும்போது..

" அப்பா..( அப்படித்தான் me calling)..

அவங்க என்ன கேள்வி கேட்பா..நான் என்ன பதில் சொல்லணும்???.நான் கேட்க..ஐத்தான் ஒரு முர தான்


இது என்னோட  biggest குறை.. I know


ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போகும்போது..கொஞ்சம்..

கொஞ்சம் வேகமா ரோட்டை cross பண்ணிடுவேன்..


நான் தேவையில்லாத சில responsibilities எடுத்துக் கொண்டு சில சமயம் திண்டாடறேனு குறைதான்.


நானே லொட லொடனு பேசாமல்.. இன்னும் கொஞ்சம் listening attitude இல்லைனு குறைதான்..


சமையலில் கொஞ்சம் காரம் ஜாஸ்தி...

இது எப்போதும் உள்ள குறை..


குறையில்லாத மனிதர் யார்..

ஆனா..என் குறை எதுவும் பலூன் மாதிரி ஊதி ..பயம் காட்டாமல்..நீ..நீயா இருனு சொல்லி..என்னை என் இஷ்டத்துக்கு இருக்க வெச்சு இருக்கார் பாருங்க..


அதுக்காவாவது...இந்தக் குறையெல்லாம் கொஞ்சம் சரி பண்ணனும்.


ஆனா..

அரைக்கிழம் ஆயாச்சு..இனிமே நீ என்னத்த மாத்தி..என்ன சாதிக்கப்போறேன்னு உள்மனசு..


எப்படியோ..

ஆணின் மனசு..

அழுத்தத்திலும் அழுத்தமடானு..

அடிக்கடி பாட்டு மட்டும் பாடுவேன்..😄


Happy international men's day..

Madhyamar-பொய்

 #Sunday_topic


#பொய்..


பொய்க்கும் உண்டோ  பூட்டு..


இந்த பச்சைக் குழந்தைக்கு எப்போது 'பொய் '..அப்படினு ஒரு விஷயம் இருப்பது தெரிஞ்சது என்றால்...

" காலேஜ் கட் அடிச்சு ..அழகே உன்னை ஆரத்திக்கிறேன்" சினிமா பார்த்த கதையை..என் சித்தி அவ ஃப்ரண்டோட discuss செய்ய..பக்கத்திலிருந்த அணுகுண்டு அகிலா..

பாட்டியிடம் போய் வத்தி வைக்க..

" பொய் இனிமே சொல்லுவியானு ..சித்தி வாங்கின டோஸில்..first first..face to face அறிமுகம் ஆச்சு பொய்க்கு..


ஃபர்ஸ்ட் ராங்க் மட்டுமே வாங்கும் நான்..முதன் முறையாக..

வகுப்பில் மூணாவது ராங்க் வாங்கிட்டு..தாத்தாவிடம் progress report ல் sign வாங்க பயந்து..' தாத்தா ஊரில் இல்லனு' டீச்சரிடம் பொய் சொல்லி..

டீச்சர் தாத்தாவை மார்க்கெட்டில் பார்த்து..

அப்புறமென்ன?..வெள்ளித்திரைக்கு பின் என்ன நடந்திருக்கும்..


ஏன் பொய் சொன்னேன்?..


ஆஃபிஸ் போகும் அம்மா..எனக்கு லீவு நாளில் டப்பாவில் தயிர் சாதம் ,மாவடு வெச்சுட்டு போவார். நமக்கு நாக்கு நமுநமுனு  எதாவது கேட்கும். சுவடே தெரியாம . சேமியா உப்புமா பண்ணி சாப்பிட்டுட்டு..வீட்டு வேலைக்கு வரும் பாட்டிக்கிட்ட தயிர் சாதம் கொடுத்திடுவேன்.

அம்மா வந்ததும்..கிச்சன் செக்கிங் நடக்கும்..இது என்ன கடுகு ?..

🍅 ஒண்ணு ஏன் குறையறது?..பச்சை மிளகாய்...???


எனக்கென்ன தெரியும்.. ?..me நைஸா நழுவிங். 

உப்புமா பண்ணி சாப்பிட்டேன் ஏன் உண்மை சொல்லலை..இப்போது தோன்றும்.


இப்படி உட்கார்ந்து.. பொய் சொன்னதெல்லாம்..flash back ல் ஓட....


" ஏம்மா..ragigudda ஆஞ்சநேயர் போய் பார்த்துட்டு வரலாமா?..

வீட்டுக்காரர் கேட்க..

" அப்பா..இன்னிக்கு செம்ம கால் வலி..இங்கே பக்கத்தில இருக்கும் ஆஞ்சுவையே பார்த்துடலாம்"..( எனக்கு இந்த டாபிக்கை எழுதி முடிக்கணுமேனு கவலை..சொன்னேன் ஒரு பொய்). மத்யமர்ல எழுதணும்னு சொன்னால் அவர் என்ன சொல்லப் போறார். But ஒரு குட்டி ஜாலி பொய்.


பாவம்..அவரும் சரி சொல்லியாச்சு. லிஃப்ட் கிட்ட வரும்போது..எதிர்த்த வீட்டு மாமி..கை கொள்ளா கோயில் பிரசாதத்துடன்." இன்னிக்கு ராகிகுட்டா  கோயில்ல செம்ம சூப்பர் அலங்காரம்..

பிரசாதம்..டின்னர் ஆச்சு எனக்குனு.."..மாமி 

சொன்னதுதான் தாமதம்...நாமளும் அங்கேயே போய்டலாம்னு நான் துள்ள..

வீட்டுக்காரர் வுட்டார் பாருங்க ஒரு லுக்கு..லுக்கு லுக்கு லுக்கு தான்.


பிரசாதம்னு சொன்னதும்..

பொய்..பொய்த்தது.


நமக்கு லொட லொடனு பேசிண்டே போனால் தான் ஆச்சு..அவரும் பாவம் உம் கொட்டிண்டே வர..நான் என் ஃப்ரண்டா இருந்து இப்போ விலகிப் போன ஒருத்தியை பத்தி..ஒப்பித்த படி நடக்க..எதிரே..சாட்சாத் அவளே..


" ஐயோ..பார்த்து எவ்வளவு நாளாச்சு.. நம்ம morning walk எப்படி மிஸ் பண்றேன் தெரியுமானு அவள் சொல்ல.." I miss your yummy pulao"..நான் சொல்ல..( சோறு முக்கியம்)

இப்போ விட்டார் பாருங்க ஒரு லுக்கு....அடிப்பாவி..

அண்டப்புளுகு..

ஆகாசப்புளுகு..


இதெல்லாம் சகஜம்ப்பானு நான் நடக்க..

கடையில் சாமான் வாங்க நிக்கறேன்.. பில் போட்டதும்..

" அப்பா..என் network சரியா இல்ல...நீங்களே..."..நான் இழுக்க..


அடிப்பாவி..லுக்கு..லுக்கு..

லுக்கு..

அடுக்குமா சாமி இந்தப் பொய்..


பின்ன.." என் பணம்..என் பணம்..உன் பணம்..என் பணம்..'..


ஒரு பொய் கணக்கு காட்ட முடியறதா இந்த உலகத்தில..

Golgappa சாப்பிட்டாலும்..google pay சொல்லிக் கொடுத்து மாட்டி விட்டுடறதே..


நான் தான் ஏதோ குட்டிப் பொய் சொல்றேன்னு பார்த்தால்..என்னை சுத்தி கவனித்தால் நிறைய பேர்....same pinch தான்.


இரண்டு இளைஞர்கள்..

கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்க..

ஒரு இளைஞனுக்கு ஃபோன்.


' yes I am on the way ..'..

உட்கார்ந்து ஜம்முனு வெண்பொங்கல் சூடா சாப்பிட்டுக்கொண்டே பதில்..


பொய்...இங்கே ஒரு relaxation க்கு இருந்திருக்கலாம். Probably he  needed a break.


என் முன்னால் நடந்த இரண்டு பெண்மணிகள் பேசறதை .ஒட்டுக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.


" ரொம்ப லேட் ஆகிடுத்து..வீட்ல போனால் டோஸ் தான் '..ஒருத்தி சொல்ல.' 

" அட..இதுக்குப் போய் டென்ஷனா..பெங்களூரு traffic மேல பழியை போடு..டூப் விடு அவ்வளவுதான்'..


ஆஹா..இன்னிக்கு என்னாச்சு..

பொய் பேசற பார்ட்டீஸா நம்ம கண்ல சிக்கறாங்களேனு'..எனக்கு செம்ம ஜாலி..


ஒரு குட்டிப் பையன்... எல்லாரையும் பயமுறுத்திக் கொண்டு இருந்தான்..அவன் கையில் ஒரு பொய் 🔫 துப்பாக்கி..

தேவுடா..இது என்ன சோதனை..

பொய்யா கூட ..இதை கையில் வெக்காதே கண்ணானு சொல்லிட்டு நடையைக் கட்ட..


அடுத்த ஃப்ரண்ட்..

அஞ்சு நிமிஷம் அரட்டை..


"சரி..see you tomorrow".. அவள் சொல்ல..

நங்குனு யாரோ மண்டையில் கொட்டின feeling.


" வாழ்க்கையில்..இன்று.. என்பது மட்டுமே நிஜம். 

நாளை என்பது விடிந்தால் மட்டும் நிஜம்..இல்லை பொய் தான்.


So live the present.


என்னோட பாலிஸி..


அலைபோல அடுத்தடுத்து நமக்கு ஆப்பு வந்தாலும்..


புன்னகையில் மட்டும் பொய்யைக் கலக்கக்கூடாது..

சரிதானே..???


"

Madhyamar-சுயமரியாதை

 #Sunday_topic

#சுயமரியாதை..


அடடா..இந்த டாபிக் எழுத ஆரம்பிச்சேனா..

அப்படியே Disney hotstar ல என்னோட favourite movie " sound of music " பார்க்க ஆரம்பிச்சேன்.


அதில் ஏழு குழந்தைகளுக்கு அப்பா..அவர்களைப் பார்த்துக் கொள்ள வரும் governess.

குழந்தைகளை விஸில் அடிச்சு கூப்பிட்டு introduce பண்ணுவார்.


Governess க்கு சொல்வார்..

"நான் இப்படி விஸில் அடிச்சா..உங்களைக் கூப்படறேன்னு அர்த்த்ம்"..


Governess Maria..ஒரே ஷாக்காடிடுவாள்.

பேரு வெச்சு அழகா கூப்பிடாமல் இது என்ன விஸில் அடிச்சு கூப்படற வழக்கம்னு...


குழந்தைகளுக்கும் சுயமரியாதை உண்டுனு ...லைட்டா புரிய வைப்பாள்..

What a coincidence..தலைவர் தலைப்பு கொடுத்தால்..திரைப்பட சீன் கூட ..


அது என்னனா..இந்த சுயமரியாதை இருக்கே..

ஒரு குட்டியூண்டு பாய்ண்ட் ஏறினால்..அது arrogance நு பேராகிடும்.


அதே..துக்கினியூண்டு கீழே போனால்..ஏளனம்


சுயமரியாதை..நாமே சுயமா நமக்குள் போட்டுக் கொண்டிருக்கும் லக்ஷ்மண் ரேகாவோ..என்று தோணும்.


இந்த சுயமரியாதைனு கட்டிண்டு அழுதால் ..சில சமயம் சிலவற்றை சாதிக்க முடியாது..


நான் அப்படியெல்லாம் பெரிய சாதனையெல்லாம் செஞ்சதில்ல..


ஆனா..என் குழந்தைகள்னு வரும்போது..உஸ் உஸ்ஸுனு படமெடுக்கும்  சுயமரியாதையை தலையில் தட்டி உள்ளே அமுக்கிடுவேன்.


தேஹ்ராடூனில் இருந்தபோது..என் பொண்ணுக்கு maths tuition க்கு ஒரு சார் வீட்டு வாசலில் தவமாய் தவமிருந்தேன்.

ரொம்ப ரொம்ப நல்லா சொல்லித் தரும் டீச்சர்.

Plus வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர். ஆனால் இரண்டு மூணு தடவை போய்க் கேட்டும்..மாட்டவே மாட்டேன்..எனக்கு டைம் இல்ல..already many batches are there நு..


விடாது கருப்பாகிட்டேன்.

கரெக்ட்டா நாலு மணிக்கு அவர் வீட்டு வாசலில் ஆஜர் ஆகிடுவேன்.

' அவர் ஏப்ரல் மாசமே batch finalise பண்ணிடுவார்..

இப்போ போய் அவர் வீட்டு வாசலில் நின்னால்...'...என் பக்கத்து வீட்டுக்காரி கொஞ்சம் நக்கலாக சொன்னாள்.


கதவுக் கண்ணாடி வழியே என்னை பார்க்கும் சார்..ஒரு மாணவன் / மாணவியை அனுப்புவார்.


" மேம்..சார் உங்களை இங்கேர்ந்து போகச் சொல்லிட்டார்'..


எல்லாக் குழந்தைகளும் என்னை பாவமா பார்க்கும்.

அடுத்த நாளும்..சூடு சுரணை இல்லாம போய் நிப்பேன்.


என்ன..இந்த டீச்சர் இல்லாட்டி வேற ஆளே இல்லையானு நீங்க கேட்கலாம்.

வீட்டுக்காரர் வெளியூரில் இருந்ததால்..

ரொம்ப தூரம் எல்லாம் போக முடியாது..ஊரும் புதுசு..


என் பொண்ணு ஒரு நாள்..அம்மா நானே படிக்கிறேன் மா..நீ ஏன் இப்படி அவர் வீட்டு வாசலில் போய் நிக்கற..he doesn't seem to give admission there."நு சொல்ல ஆரம்பித்தாள்.


அப்படி இல்லடா..he teaches the concepts very well நு சொல்றா..

எனக்கும் கணக்கு வராது. I can't take risk in 10 th std.


ஒரு மாசம்..அவர் வீட்டு வாசலில் பழியா போய் நின்னுடுவேன்.

ஒரு நாள்..என்ன தோணித்தோ

 " மேடம்..உங்களை சார் கூப்பிடறார்னு"...ஒரு குழந்தை வந்து சொல்ல..

 

  மேடம்..I feel so bad. உங்களை மரியாதை குறைவா நடத்திட்டேன்னு...நாளையிலேர்ந்து உங்க பொண்ணை கூட்ட்டிண்டு வாங்கனு அவர் ஹிந்தில சொன்னதுமே..என் காதில் தேன் வந்து பாய

 அப்புறம் என்ன..வரலாறு என் பெண் படைக்க ..அவர் தான் முக்கிய காரணம்.

 வீக்கோ வீக்கா கணக்கில் இருந்தவள் 99 மார்க் + ஸ்கூல் first .

சுய மரியாதை குறைஞ்சு எதுக்கு போய் கெஞ்சணும்னு ஒரு மனசு சொன்னாலும்..

இதில் நீ இழக்கப் போறது ஒண்ணுமில்லனு இன்னோர் மனசு சொல்ல..


இப்படித்தான்..

ஸ்கூல் , டியூஷன் ,மார்க்கெட் எல்லாம் பக்கத்தில் இருக்குமாறு வீடு பார்ப்போம். இவர் ஸைட்டில் வேலை என்பதால் தனியாக சமாளிக்க ஏதுவா இருக்குமே என்று..


ஒவ்வொரு வீட்டு ஓனரும் ஒவ்வொரு விதமா ....நம்ம சுயமரியாதைக்கு சூடு வைத்தார்கள்

நானோ கருமமே ..

கண்ணாயினார்னு..

என் பணி..என் பெண்களைப் படிக்க வைத்து பாதுகாப்பதேனு ...

இருந்து..

வீட்டை காலி பண்ணும் போது..

" உன்னை மாதிரி ஆளை நான் பார்த்ததே இல்லனு '..வஞ்சப் புகழ்ச்சி அணியோட பேசும் போது..


பாதி எழுதிண்டே இருக்கும்போது..அடடா குக்கர் ரிப்பேர் பண்ண போகணுமேனு கடைக்கு ஓடினேன்.


அங்கே ..


" sorry bhaiya..'..தன் கையிலிருந்த நசுங்கி உருமாறிப் போன குக்கருடன்..

எனக்கு முன்னால் ஒரு பெண் ..

அந்த ஹிந்திக்கார ரிப்பேர் பையனிடம் சொன்னாள்.


அட..காதை கொஞ்சம் கூராக்கி ஒட்டுக் கேட்டேன்.

" அன்னிக்கு பாவம்..நீ சொன்னாய் ..இந்தக் குக்கரை யூஸ் பண்ணாதீங்க..

வெடிச்சுடும்னு'..நான் தான்..நீ புது குக்கர் உன் கடையில வாங்கறதுக்கு அடி போடறயோ நினைச்சு எல்லார் எதிரிலும் உன்னை கத்திட்டேன். But ...அடுத்தநாள் இந்த குக்கர் வெடிச்சு..₹40000  சிம்னியில் மூடி போய் ஒட்டி விட்டது..நல்லவேளை யாருக்கும் ஒண்ணும் ஆகல..'..

Sorry pa..மீண்டும் சொன்னபடி சென்றாள்.


குக்கருடன் நான் நிற்க..

" மேடம்..இன்னிக்கு அவங்க ஈஸியா sorry சொல்லிட்டு போய்ட்டாங்க..ஆனா..

அன்னிக்கி கடையில் அவ்வளவு கூட்டம். அவங்க சத்தம் போட்டப்போ..

எல்லாரும் என்னை பார்த்த பார்வை இருக்கே..

கூனிக் குறுகி போய்ட்டேன் மேடம்'.

ஹிந்தியில் அவன் மனசில் உள்ளதைக் கொட்ட..


பக்கத்தில் கல்லாவில் இருந்த முதலாளி.' இதெல்லாம் வியாபாரத்தில் சகஜம்ப்பா.. இப்ப பாரு..கடைல ஒரு பொருள் வாங்க வராங்க..நம்மளோட பேரம் பேசிக்கிட்டே.

.அமேசான்லயும், flipkart லயும் விலை செக் பண்றாங்க.... நான் இத்தனை வருஷமா கடை வெச்சிருந்தாலும்..என் கடை  பொருள்களின் தரம் எனக்குத் தெரிந்தாலும்...நம்ம சுயமரியாதை ..இவங்கள கடையை விட்டுப் போகச்சொல்லுனு சொன்னாலும்..

முடியாது..என்ன செய்யறது..


அவர் பேசப் பேச.. 


சுயமரியாதை..இந்த வலைக்குள்..சிக்கியும் இருக்கணும்.. 

சிக்காமல் வெளியே வரத்  தெரியணுமோ?


உப்பி உப்பி..பூரி பொரிச்சு கொடுத்தாலும்..

அந்த ஹோட்டல் பூரியும் சப்ஜியும் ரொம்ப சூப்பரா இருக்கும்ல..

சொல்லும்போது.

.சுருக்குனு இருந்தாலும்..

சுயமரியாதை பார்க்கறோமா என்ன?

அம்புட்டுதேன்..வாழ்க்கை.


இந்த வருடத்தின் கடைசி பதிவு..


மீண்டும் அடுத்த வருஷம் ..பல புதிய தலைப்புகளுடன் சந்திப்போம்.


Wishing you all  very happy new year friends.🎆🎆🥁🪘🎻

Madhyamar-பொறுப்பு

 #Sunday_topic


#பொறுப்பு.


"பொறுப்பு என்பது முள்கிரீடம்..அது தூங்க விடாது."


சங்கர் சார் பதிவில் எழுதியிருந்த இந்த வாசகம் ஏனோ மனதைக் குடைந்தபடி இருந்தது..


பொறுப்பு ...இந்த வார்த்தை பிறந்ததிலிருந்து கேட்கும் ஒரு வார்த்தை..


பொறுப்பா நடந்துக்கோ..

பொறுப்பா பேசு..இப்படியே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாம்.

இங்கே பல பதிவுகள் படித்தபோது ஒரு self appraisal செய்ய முடிகிறது.


Yes..நான் இதே மாதிரி situation ல் நான் என்ன செய்தேன் என்று யோசிக்க வைத்தது.


இப்படியே அசை போட்டபடி போஸ்ட் ஆஃபிஸில் அப்பாவுக்க்காக ஒரு speed post செய்யப் போனேன்.


வரிசையில் என் முன்னால் ஒரு 80+ தாத்தா அவர் கூட பொறுப்பா அவரின் college going பேத்தி போல இருக்கு.


"Passbook update பண்ணுவதற்கு நீ எதுக்கு தாத்தானு..அந்தப் பெண் கேட்க.

"இல்லமா..எனக்கும் கொஞ்சம் வெளி உலகம் பார்த்த மாதிரி இருக்கும்.

என்னதான் SMS ல வந்தாலும் இப்படி அச்சடிச்சு வாங்கி வெச்சுண்டால் தான் எனக்கு தூக்கம் வரும்னு '..தாத்தா..


அந்தப் பெண் குழந்தை ..

 ஓட்டை போட்ட கவுண்ட்டரில் கை நீட்டி..

பொறுப்பாய்..வேலை முடிக்கவும்..

' கொடு கொடு..எவ்வளவு இப்ப சேர்ந்திருக்குனு பார்க்கறேன்னு"..

பிடுங்காத குறை..


அரசாங்க ஓய்வூதியம் வாங்குபவர் என்று அவர் சொல்லாமலே புரிந்தது.


என் வேலை டக்குனு முடிய..

நானும் அங்கிருந்து நடையைக் கட்ட ஆரம்பித்தேன்.


அப்போது..


"தாத்தா..you have got so much money.. பேத்தி குதித்தாள்.


" இது போதாதே கண்ணம்மா'..இன்னும் இது போல ஒரு மடங்கு சேர்க்கணுமே..'


உடனே பேத்தி..துள்ளிக் கொண்டு..

" என் கல்யாணத்துக்கு சேர்க்கறயா தாத்தா...அப்ப நிஜமா இது போதவே போதாது.'..

கிண்டல் த்வனியில் அவள் சொன்னாள்.


"அதெல்லாம்..பொறுப்பா உன் அப்பாவும் அம்மாவும் ஜம்முனு சேர்த்து வெச்சிருக்கா..இந்த தாத்தாவோட துக்கினியூண்டு பணம் ..அதுக்கெல்லாம் போறாதுடா'...லேசாக குரல் கம்மியது.


' சரி ..பின்ன எதுக்கு பணம் சேர்க்கறேள்?..அப்பாவுக்கு பொட்டில போட்டு தரவா?..


' இல்லடா கண்ணா..தாத்தா ..வேற ஒரு காரணத்துக்காகப் பணம் சேர்க்கறேன்'...


காதைத் தீட்டி கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் ..அவர் எதுக்காக சேர்க்கறார்னு தெரிஞ்சுக்க ஆசை.


அதுக்குள்ள..மனசு கணக்கு போட்டது. 


தாத்தா is right. அவரோட கடைசி காலம் வரைக்கும் யாரிடமும் கை ஏந்தாமல் , தன் சொந்த செலவுகளும், மருந்து மாத்திரையும் ...

அதெல்லாம் விட பெரிய விஷயம்..டக்குனு கையில் காசிருந்தால்..தனக்கு மனசுக்கு பிடிச்சவங்களுக்கு உபகாரம் செய்ய தேவையாச்சே..அதுதான் பொறுப்பா ஒவ்வொரு காசும் இன்னும் சேர்க்கிறார்னு நான் நினைத்துக் கொண்டிருந்த போது ..டமால்னு ஒரு குண்டு போட்டார்.


ஜனனிம்மா..( அவர் பேத்தி பேரை இப்போதான் சொன்னார்).


இது எதுக்கு தெரியுமா?..

வாழறதுக்கு எப்படி பணம் தேவையோ..அது போலத் தான்..இந்தத் தாத்தா திடீர்னு மண்டையைப் போட்டேனா..

என்னோட ஈமக்காரியங்களுக்கும் பணத்தை வெச்சுட்டு போறது என் பொறுப்பு தானே..'..


இப்படி ஒரு ஆங்கிளா?..

நானும் ஜனனியும் அதே அதிர்ச்சியில் அவரைப் பார்த்தோம்.


' உளறாத தாத்தா'..


அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது...

எதோ ஒரு இறப்புக்கு போய்ட்டு வந்த அவர் மருமகள்..." இப்போ எல்லாம்  சில லட்சங்கள் இல்லனா ..ஈமக்கிரியை கூட பண்ண முடியாது போல இருக்கு'


அந்த வார்த்தைகள்  தாத்தாவின்  மனசில் ஆழமா போய் உட்கார்ந்து விட்டது..என்பதை கதை போல சொன்னார்.


( ரொம்ப interesting ஆ இருந்ததா..அதான் ஒட்டுக் கேட்டுண்டே போனேன்.)


அவர்கள் தெரு வந்ததும் திரும்பி விட்டார்கள்..

ஆனால்.என் மனம் திரும்பத் திரும்ப அதே யோசித்தது.


எத்தனை பொறுப்புகளை சுமந்து, கடந்து..அப்பாடானு இருக்க வேண்டிய காலத்தில்..

இது எதுக்கு இவராகவே ஒரு பெரிய பொறுப்பு தனக்கு இருக்குனு மண்டையில் ஏற்றிக் கொண்டு....


மரணத்துக்குப் பின்னும் தன் குழந்தைகள் கஷ்ட்டப்படக்கூடாதுனு நினைப்பில்..மீண்டும் பொறுப்பாக ..குருவி போல பணம் சேர்க்கும் அவரைப் பார்த்து சிரிப்பதா..salute செய்வதா?..


வீடு வந்து சேர்ந்ததும்..

' எங்க..அந்த speed post receipt ஐ கொடு..பத்திரமா வெச்சுக்கணும்னு'..

86 வயதிலும் ...தன் பொறுப்பு..தன் கடமை..என்று இருக்கும் என் அப்பாவைப் பார்த்ததும்..


' அப்பா..you are a super man' என்றேன்.

என்ன ஆச்சு இவளுக்குனு அவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டார்..


பொறுப்புகள்..இதிலேர்ந்து 

தப்பிச்சு ஓடணும்னு .

.ready ..steady ..go ..

mode ல் பலர் இருக்க...

இது போல வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம்..


' தாத்தா கிட்டேர்ந்து கத்துக்கோ'.

எங்க வீட்டு குடும்ப வாசகம் இது..

Madhyamar-ஆன்மிக_குரு_அவசியமா

 #Midweek_topic


#ஆன்மிக_குரு_அவசியமா?


( என் மனதில் பட்டதை எழுதி இருக்கேன். தவறிருந்தால் மன்னிக்கவும்)


ஆன்மிக குரு அவசியமே..


ஆனால் அது யார் ..அவரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதில்தான் track மாறி விடுகிறது.


சில குடும்பங்களில் வழி வழியாக வழிபடும் குரு ஆராதனை உண்டு.


Instant solution தேடும் உலகத்தில்..

Consistency in thoughts கம்மியானதால்..

எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று..ஓட்டமாய் கூட்டமாய் ஒரு வழி தேடும் நேரத்தில்..


இப்படி புற்றீசல் போல புதுப்புது ஆன்மிக குருக்கள் முளைப்பதில் ..ஆச்சரியமில்லை.


வாய்ப் புண் அடிக்கடி வருகிறது என ஒரு 'நல்ல" டாக்டர் கிட்ட போனால்..வேரான உன் வயிற்றில் தான் பிரச்சனை என்று treatment ஆரம்பித்து....

நமக்கு முழு வலி நிவாரணம் அளிக்க உதவுவார்.


மேலோட்டமாக பார்த்துவிட்டு..

கட்டுக்கட்டாய் மருந்து எழுதி..

இதுவும் இல்லயா சர்ஜரி..

அதுவும் இல்லையா நீ பிழைக்க மாட்டாய் என்று சொன்னால்..


ஆன்மிக குரு போர்வையில் இருப்பவர்கள்..


எடுக்கும் ஆயுதம்

அந்த ..நம் பயம் ..தான்..


 temporary relief மட்டுமே கிடைக்கும் .

 

இன்னொரு பெரிய பிரச்சினை..

இங்கேயும் peer pressure.


இவரை அடைந்தால் இனியெலாம் சுகமேனு ..

ஒவ்வொருத்தர் சொல்வதைக் கேட்டு..

வீடு நிலம் வாங்க இவர் ஸ்பெஷலிஸ்ட், கல்யாணமா..இவர்கிட்ட போங்க..

சொத்து தகராறா..சுமுகமா இவர்கிட்ட போனால் முடியும்னு..

ஒரு மெனு கார்ட் கையில்..


இன்னொரு பக்கம்..

டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல..

என்ன ப்ராப்ளம் எடுத்துண்டு போனாலும்.. பீஸ் பீஸாகிடும்..


யோசித்து பார்த்தால்..

வரும் கஷ்டங்கள் கொடுக்கும் அழுத்தம் தான்..

கன்னா பின்னா வென்று மனசை அலைய வைக்கிறது.


ஒரு நல்ல ஆன்மிக குரு மட்டும் கிடைத்தால் போதும்..

"கஷ்டம் வருவது எல்லாம்..கர்மாவை குறைக்கத்தான்...தைரியமா..

"அவன்" நாம ஸ்மரணம் பண்ணு..

நான் இருக்கேன்னு ..கூட வருவான்னு" ..கடவுளைக் காண்பிப்பவர்...தான் ஆன்மிக குரு.


போலியையும் அசலையும் எப்படி கண்டுபிடிப்பது..உணர்வது?


மாயம் செய்து மகிழ்விப்பவர் ஒருவர்.

மாயை உலகு இது என்று  நமக்கு காட்டிக் கொடுப்பவர் இவர்.


தியானமும் யோகமும் கற்றுத் தருபவர் ஒருவர்


நிதானமும் ஞானமும் தருபவர் இவர்.


படையல் என் பேரில் போடு என்பவர் ஒருவர்.

படைத்தவன் அவன் பேரைச் சொல்லு என்பவர் இவர்.


நான் கடவுள் என்பவர் ஒருவர்.


நம் எல்லார் உள்ளிலும் கிடக்கிறான் கடவுள் என்பவர் இவர்.


அடையாளம் தேடி அலைபவர் ஒருவர்.


நம் அடையாளத்தை காண வழி செய்பவர் இவர்.


காசு வைத்தால் கர்மா தொலைந்திடும் என்பவர் ஒருவர்.


உன் கர்மாவை நீயே இந்த ஜன்மத்தில் கழிக்க..நல்ல காரியம் செய் என்பவர் இவர்.


ஆன்மிக குரு ..அவரை உணரணும்..

எங்கு சென்றாலும் அவர் கண் என் மீது இருக்கு என்ற எண்ணம் மேலோங்கும்.


ஒரு பாதுகாப்பு வளையம் நம்மைச் சுற்றி இருப்பது போல உணரச் செய்பவர் ..ஒரு ஆன்மிக குரு.


அப்பா கிட்ட எதாவது சொல்லணும்னா...

முதல்ல அம்மாகிட்ட அப்ளிகேஷன் போடறோம்.

ஏன் அப்பா கிட்டயே கேட்கலாமே நேரடியா..என்று சொன்னாலும்..


அம்மா..சொல்லும்போது

 weightage  இன்னும் கூடும் என்று நம்புகிறோம் இல்லையா?


நம்பிக்கை ..

இந்த நம்பிக்கை தான் ....முக்கியம்.


எப்படி நம்பிக்கை வரும்?


அவர்கள்


வளைத்துப் போட்ட கூட்டத்தினால் ..வருமா?

வரவழைக்கும் மாயப் பொருளினால் வருமா?


No way..


அவர்கள்


 வாழ்ந்து காட்டிய முறை..

வளர்த்த நல்ல சிந்தனைகள்.


வலைபோல பின்னிக் கிடக்கும் வாழ்க்கையை புரிந்து கொள்ள..

கை பிடித்து அழைத்துப் போகும் பாங்கு...


ஆன்மிக குரு இருப்பது அவசியமே..

அவர் கிடைத்து விட்டால்..அப்புறம்

சரணாகதி தத்துவம் தன்னால் புரியும்.


#Guidance_shopping செய்வதை நிறுத்தினாலே..பாதி டென்ஷன் குறையும் என்பது என் கருத்து.


இந்த குரு வாரத்தில் ..

அவரவர் குருவை நம்புவோம் வணங்குவோம். 

போலிகளைக் கண்டு ஏமாறோம்🙏🙏🙏

Madhyamar-valentine's day

 #Sunday_topic


#valentine's day



#நானறிந்த_(என்)_காதல் கதை


*சாப்பிட்டியா நீ என்று கேட்கும்போது காதலை விட கரிசனக் காதல்.❤️❤️


*பசங்க ஸ்கூல்லேர்ந்து இன்னும் வரலையானு கேட்கும்போது கண்டிப்போட  கவலை காட்டும் காதல் ❤️


*புடவை கடைக்கு கூட்டிப் போய் ' உனக்கு பிடிச்ச பத்து முதல்ல செலக்ட் பண்ணு..அதிலிருந்து ஒன்று எடுத்துக்கோ என்று வாய் சொல்லிவிட்டு பக்கத்து கவுண்டரில் தனக்கு பிடித்த கலரை நாலு தடவை உற்று பார்த்துவிட்டு..' இதை எடுத்துக்கோயேன்' என்று வாய் விட்டு சொல்லாத வாத்ஸல்யக் காதல்  ❤️


( பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் இந்த expression புரிஞ்சது)🤩


*சாப்பாடு வாயில் போடும் முன்னே சூப்பரா இருக்கு என்று சொல்லும் சொக்கத் தங்கம். எத்தனை ❤️❤️

( பின்ன..அடுத்த வேளை half boiled தட்டுல விழுமே)💃💃


*நீ போய்ட்டு வா.நான் இருக்கேன் இங்கனு சைக்கிள் கேப்பிலும் சுதந்திரம் தேடும் ஜீவன்.😀😀. அப்படினு வெளியே அனுப்பிட்டு..

எங்க இருக்க..location share பண்ணுனு..பின்தொடரும் ❤️❤️


*மெயில் அடிச்சாலும் சரி ,மெசேஜ் செஞ்சாலும் தன் மனைவி கண்டிப்பாக பார்க்க மாட்டாள்னு தெரிஞ்சும் விடா முயற்சி விக்கிரமாதித்தர்.

பொறுமை காக்கும் ❤️❤️

( எத்தனை group ல இருக்கோம்..எத்தனை போஸ்ட் போடணும் நமக்கு)😃😃. 


*valentine day க்கு gift என்னன்னு கேட்டால் ..என் "wallet "மட்டுமல்ல என் " வாழ்க்கையும்' உன் கையில் தானே இருக்குனு கவி பாடும் ❤️❤️🤔


*ஊர் வம்பு சொல்லும்போது தலையை தலையை ஆட்டி கேட்டுபுட்டு நாம கேள்வி கேக்கும்போது 'இப்ப யாரைப் பத்தி சொன்னே' என்று பல்பு கொடுக்கும் (life) partner ❤️❤️❤️..💡💡


இன்னிக்கு கூட பாருங்க..

Train ல ..வெய்யிலடிக்கற side ல ..நான் உட்கார்ந்துக்கறேன்னு சொல்ற....❤️


வள வளனு பேசாத ❤️

நாளும் வளரும் ❤️❤️

-நானே_நான்_தான்

 #VPKP1

#கதை1

#நானே_நான்_தான்



என் பெயர் நிகிலா..


டாக்டர் நிகிலா.

இன்னிக்கு இந்த புது வரவைக் கையில் ஏந்தியபோது..

' என் குறை தீர்க்க வந்த குட்டிப் பொண்ணேனு"..கண்ணீர் மல்க நிற்கிறேன்.


நான் குட்டியூண்டு பொண்ணா இருக்கும்போதே...

' நீ படிச்சு ..பெரியவளாகி என்ன ஆகப் போறனு ' யார் கேட்டாலும்..

டக்குனு ' டாக்டர்" ஆகப்போறேன்னு தான் சொல்லுவேன்.


இன்ஜினியரும் ,கணக்கரும் மட்டுமே இருக்கும் என் 

குடும்பத்தில் ..டாக்டர் ஆசை உனக்கு எங்கேர்ந்துடி வந்ததுனு அம்மா சத்தம் போடுவாங்க.


' டாக்டரா ..நீயா..ஊசியைப் பார்த்தாலே பயந்து ஓடற ..பயந்தாங்கொள்ளி நீ..டாக்டர் ஆகப் போறாளாம்ல"..கிண்டல் செய்யும் அண்ணனும் தங்கையும்


" அதெல்லாம் சீட்டு கிடைக்கறது குதிரைக் கொம்பு . எம்புட்டு படிக்கணும் தெரியுமா.?..அதுவும் படிச்சிக்கிட்டே இருக்கணும்.அப்போதான் நல்ல பெரிய டாக்டராக முடியும் ..தெரியுமில்ல"..நம்ம கிட்ட அம்புட்டு வசதி எல்லாம் இருக்கா என்ன?'.

துளிர் விடும்போதே..திசை திருப்ப அல்லது வெட்டியே விட்டுடணும்னு துடித்த பெற்றோர்.


பத்தாம் வகுப்பில் நான் தான் அந்த மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்கினேன்.

நீயூஸ் பேப்பருக்கு பேட்டி எல்லாம் கொடுத்தேன்.

டாக்டராகணும்னு ஆசை ..இதையே திருப்பித் திருப்பிச் சொன்னேன்.


ஃபோட்டோவுக்கு சிரித்தாலும்..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் மேலே கொஞ்சம் கோவம் தான்.


இருக்காதா பின்ன?

எங்க அண்ணன் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுத்து..படிச்சு ..இன்னிக்கு பெரிய ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் கை நிறைய சம்பாதிக்கிறான். குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறான்.

' இந்த டாக்டர் படிப்பெல்லாம் நமக்கு சரிப்படாதும்மா..அதுக்கெல்லாம் வழி வழியா குடும்பத்தில் டாக்டர்கள் இருக்கணும்.சொந்த க்ளினிக் இருக்கணும்..நீங்க நினைக்கற மாதிரி இந்த தொழிலில் காலூன்றது சுலபமில்லை'..அப்பா எப்படியாவது என்னை அவர் வழிக்கு இழுக்கப் பார்த்தார்.


அசையலையே நான்.


..தெய்வம் மாதிரி எங்க பள்ளி தலைமை ஆசிரியர் எனக்கு உதவி செய்ய முன் வந்தாங்க..

அவ ஆசைப்பட்டதைப் படிக்கட்டும். நான் முடிஞ்ச அளவு ஸ்காலர்ஷிப் வாங்கித் தரேன்." வாக்கு கொடுத்து ..அதையும் நிறைவேத்தினாங்க.

எங்க அண்ணன் பாவம்..' நீ படி நிகிலா..நான் இருக்கேன் உனக்கு'னு தோள் கொடுத்தான்.


12 ம் வகுப்பு படிக்கும் போதே..நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்தேன் .

கண்ணை மூடினாலே..

ஸ்டெதஸ்கோப்புடன் நான் ஹாஸ்பிட்டலை வளைய வர மாதிரியே இருக்கும்.


அவ்வளவு வெறி இந்தப் படிப்பு மேலே..


அப்பா அம்மாவுக்கும் புரிஞ்சது..நான் சும்மா எதுவும் சொல்லலைனு..


என் உழைப்பு, சுத்தி இருக்கறவங்க கொடுத்த ஊக்கம்..


நல்ல அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்க..என் கனவுப் பயணம் ஆரம்பம்.


எம்.பி.பி.எஸ் என்ற நாலெழுத்து வார்த்தை என் பேருக்குப் பின்னாடி வந்த அன்று..

அப்பாடி..சந்தோஷத்தின் உச்சிக்கே போனேன்.


பகுதி நேர வேலை...மீண்டும் முதுகலை படிப்புக்கு தயார் செய்தேன்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் நான்..இந்த முறை இரண்டாவது நுழைவுத் தேர்வில் தான் வெற்றி பெற்றேன்.


' மகப்பேறு மருத்துவப்" படிப்புக்குள் நுழைந்தேன். படித்தேன் ..முடித்தேன்..

நிறைய பெரிய மருத்துவமனைகளில் எத்தனை எத்தனையோ கேஸ்களைக் கையாண்டேன். ஒவ்வொரு நாளும் பாடம் கற்றேன்.


எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும்   ரொம்ப பெருமை.

"பாரு..எப்படி சாதிச்சுட்டா பாரு"


டாக்டர் பிரதீப்பை மணம் முடித்தேன்.


சொந்தக் கிளினிக் வைத்தோம்.


அங்கே தான் ஆரம்பித்தது..எனக்கு கஷ்டகாலம்.


என்னிடம் சிகிச்சைப் பெற்று..

என் வழி நடத்துதலில் குழந்தை பெற்றுக் கொள்ள வந்தனர் பல பெண்கள்.


கிளினிக் திறந்ததும் வந்த முதல் பிரசவ கேஸ்.


ஆசையாய் இருந்தேன்..

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்த போது..கடைசி நிமிட சிக்கலில் ..ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்து..தாயும் சேயையும் காப்பாற்றினேன் என்ற சந்தோஷம் ஒரு நொடியில் கரைந்தது..


' என்ன டாக்டர்..இப்படி சிஸேரியன் பண்ணிட்டீங்க. நார்மல் டெலிவரி ஆகும்னு சொன்னீங்களே. "


என் பேஷண்ட்டின் பெற்றோரின் அதிருப்தி குரல்.


" சிசேரியன் செஞ்சா ..காசு எக்கச்சக்கமா வரும்ல"..கூட இருந்தவர் சொன்னபோது உடைந்து அழுதேன்.


எப்படி சொல்வது..உயிர்களைக் காப்பாற்ற உள்ளே நடந்த போராட்டத்தை....


என் நேரம் ..அடுத்து வந்த சில  பிரசவங்களும்  சிஸேரியனில் முடிய..

" அந்த ஆஸ்பத்திரி போனால் கண்டிப்பா ஆபரேஷன் தான் செஞ்சுடுவாங்க அந்தம்மானு"..

என் பெயர் எள்ளி நகையாடப் பட்டது.


என் டென்ஷன் பல மடங்காகியது.

என்னோட எண்ணம் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது அல்ல..ஆனால்..ஒரு டாக்டராக ..நான் சமயத்தில் எடுக்கும் முடிவு தான் ..அவர்களுக்கு நல்லது என்று எப்படி புரிய வைப்பேன் .


என் தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது..


இப்படி யோசனையில் இருந்த ஒரு காலை

' டாக்டர்..உள்ளே வரலாமா?"

பரிச்சயமான குரல்..


எல்லா டெஸ்ட்டும் அவள் தாயாகப் போவதை ஊர்தி செய்ய..

என் மனதில் இருந்த கவலை..இதுவும் சிஸேரியன் ஆகிவிட்டால்..


தொண்டையில் நின்ற வார்த்தைகளைச் சேகரித்தேன்.


" இங்க பாரு...என் ஃப்ரண்ட் இப்போ லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தோடு பக்கத்தில் தான் கிளினிக் ஆரம்பிச்சிருக்காள். நான் எழுதித் தரேன் ..நீ அங்கே போய் உன் ட்ரீட்மெண்ட் தொடர்ந்து கொள்"..

நான் என் பேச்சை முடிக்குமுன்..

' எனக்கு அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் எப்போ'?..

கேட்டபடி வெளியேறி விட்டாள்.


அவளுக்கு சில தீவிர  உடல் உபாதைகள் இருந்தது.

என்னால சரி பண்ணிட முடியும். ஆனால்.பாழாய்ப்போன இந்த பயம்..

பழைய நிகிலா எங்கே?..முகம் பார்க்கும் கண்ணாடி கூட என்னைப் பார்த்து கிண்டலடித்தது..

பிரதீப்புக்கும் என்னோட இந்த்ச் மனநிலை கோபத்தைக் கொடுத்தது.


 மாதங்கள் ஓடின.

 ஒரு டாக்டர் நீ...உன்னைதேடி வருபவர்களை நல்ல முறையில் வழிகாட்டுவேன் என்று எடுத்த சபதம் ..மீண்டும் மீண்டும் என்னைத் துளைக்க..

 தூக்கி எறியத் துணிந்தேன் என் தேவையில்லா பயத்தை.


சரியான ஆலோசனைகள் கொடுத்தேன்.


 அவளுக்கு எப்படியும் ஆபரேஷன் தான் செய்ய வேண்டி இருக்கும் என சக மருத்துவர்கள்  அபிப்ப்ராயப் பட்டனர்.


தலை தூக்கிய பயத்தை 

தட்டி விரட்டினேன்.

 

 ஊர் பேசினால் பேசட்டும்.

 எனக்குத் தெரியும் ..ஒரு உயிரல்ல..உயிர்களின் உன்னதம்.

அந்த நேரத்தில் எது சரியோ ..அதைச் செய்வேன் என்று உறுதியெடுத்தேன்.


என் பழைய உற்சாகத்தைப் பார்த்து..பிரதீப்புக்கும் ஆச்சரியம்.


இதோ..இன்று காலை.

கிளினிக் கிளம்பிய போது..மொபைல் சிணுங்கியது.


" டாக்டர்..சீக்கிரம் வாங்க'..


ஓடினேன்.


எல்லாம் ரெடியாக காத்திருக்க..


அவன் மேல் பாரத்தைப் போட்டு என் கடமையைத் துவக்கினேன்.


அரை மணிப் போராட்டத்துக்குப் பின் ..


ஆபரேஷனுக்கு தேவையே இல்லாமல்..

தேவதை வெளியே வந்தாள்..

நார்மல் டெலிவரியில் ...


அழுகைச் சத்தம்..ஆஸ்பத்திரியை கலக்க..

உன்னைக் கையில் தாங்கிய நேரம்...

" நார்மலி டெலிவரி..நார்மல் டெலிவரி'..


என் கிளினிக் கொண்டாடியது.


இனியெலாம் சுகமே..சுகப் பிரசவமே'..


நர்ஸ் ஒருத்தி பாடிக் கொண்டாடினாள்.


ஆனால்..நானோ..


என்ன ஆனாலும்.. ஒரு மருத்துவராக 

என்னைத் தேடி வருபவருக்கு எது சரியோ . அதை மட்டுமே செய்வேன் என்ற திண்ணத்துடன்..


டாக்டர் நிகிலாவாகிய நான்.


PC: Govindaraj Lakshminarayanan sir

Madhyamar-என்_இனிய_அரவிந்தா

 #VPKP_3

#படக்கதை 1

(Word count 280)


#என்_இனிய_அரவிந்தா


...


"டேய்..அரவிந்தா..வெயிலு வீணாப் போகாம ஏண்டா இப்படி அங்கேயே நிக்குற??.

 வள்ளியம்மாள் குரல் அவனுக்கு கேட்டால் தானே..

"அம்மா...இன்னிக்கு என்ன கிழமை?

"அதுக்கென்னடா இப்போ?"


"உனக்கு எல்லாம் மறந்துடும் இன்னிக்கு செல்வி பெரியம்மா வர நாளு..அது கூட மறந்துட்டீங்களா?.."


"அட ஆமாம் ராசா.. எங்க ஞாபகம் இருக்கு எல்லாம்..'


மனசுக்குள் சொல்லியபடி தன் வேலையைப் பார்க்க நகர்ந்தாள்.


" இந்த ரெட் கலர் டீ ஷர்ட் தான் பெரிம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். வாட்ஸப்பில அன்னிக்கு  என்னோட ஃபோட்டோ அனுப்பினதும்..என் கண்ணே பட்டுடும் போல இருக்குனு  சொன்னாங்களாம்.'

அரவிந்த் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.


" பாருங்க நம் அரவிந்தை..

இன்னிக்கு ஒரு சேட்டையும் செய்யாம ...அழகா பவுடர் பூசி தலை வாரி ..ஒழுங்கா டிஃபனை சாப்பிட்டுட்டு.

காலையிலேர்ந்து இந்த கேட்டைப் பிடிச்சுகிட்டு காத்து கிடக்கான்"..


சனிக்கிழமை வந்தா போதும்..அரவிந்திற்கு இருப்பே கொள்ளாது..

வெறென்ன ..அவன் செல்ல பெரிம்மா செல்வி வரும் நாளாச்சே.


" அம்மா..மணி என்ன ஆச்சு..?

பஸ் வந்திருக்குமா?..

எங்க வந்திட்டு இருக்காங்கனு கேளுமா??'

" கண்ணா..பஸ் சத்தத்தில ஃபோன் சரியா கேட்காதுடா'..

தவித்தான்.


" என்ன கண்ணு....தனியா எதுக்கு வாசல்ல நிக்குற??"..


போற வரவங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ..ஒரே பதில்..

" இன்னிக்கு எங்க பெரியம்மா வராங்களே"..பெருமித பதில் தான்.


பெரிம்மா வந்தாச்சு.


என் செல்லமே..வாரி அணைத்து ..

கொஞ்சினாள்.


தான் செய்த சேட்டை முதல்..போட்டுக் கொண்ட சட்டை வரை எல்லாத்தையும் ஒப்பித்தான்.


பையிலிருந்து பண்டங்கள் எல்லாம்.எடுத்துக் கொடுத்து ..

' அரவிந்து..உன் ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாமும் கொடுக்கணும் என்ன.."..அன்பாய் ஆணையிட்டாள்.

மடியில் வந்து படுத்துக் கொண்ட அரவிந்தின் தலையைக் கோதி விட்டாள்.

" இவனுக்குத்தான் என் மேலே எத்தனை உசுரு"..சந்தோஷமாய் இருந்தது செல்விக்கு.


கிளம்பியவளிடம்..


" அடுத்த வாரம் எனக்கு கேக் கண்டிப்பா வேணும் பெரியம்மா"...

அவள் கிளம்புவது பிடிக்கலை என்றாலும்..இது வாரா வாரம் நடப்பது தானே..


கேட்டில் நின்றபடி டாட்டா காட்டிக் கொண்டே இருந்தவன்....


"திங்கட்கிழமை சரண்யா சித்தி என்னைப் பார்க்க  வருவாங்களே. என்னை பார்க் கூட்டிட்டு போவாங்களே .."நையாண்டியாய் சொல்ல..

நீ..போ..போ..என்னைப் பார்க்க நிறைய பேர் வரதுக்கு இருக்காங்க..என்ற தோரணை அவன் குரலில்.


திரும்பித் திரும்பி பார்த்த படியே நடந்த செல்வியின் கண்ணில் 

' அன்பு அனாதை இல்லம்'..என்று 

 அந்த வீட்டு போர்டின் எழுத்துக்கள் அவளை அறியாமல் வடிந்த  கண்ணீரில் மங்கலாகத் தெரிந்தது.

 

ஆம்..

அன்பு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாருக்குமே அங்கு அவர்களைப் பார்க்க வரும் எல்லாருமே ..பெரியம்மா, சித்தி,அத்தை,  மாமா தான் .


அம்மாவாய் வள்ளியம்மையும் அவளுக்கு வலதுகரமாய் கைகொடுக்கும் அவள் கணவனும் இருக்கையில்....அரவிந்த் மட்டுமல்ல ..அங்கே இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் வாழ்க்கை  அன்பு சூழ்ந்தது தான் .


 அடுத்த வாரத்திற்காக..

 காத்திருக்காள் செல்வி பெரியம்மாவும் தான்.

Madhyamar-உச்சிதனை_முகர்ந்தால்

 #VPKP3

#முதல்_படத்துக்கான_கதை

#பதிவு 2


#உச்சிதனை_முகர்ந்தால்


Word count 287


டீச்சர்களின் ஸ்டாஃப் ரூம் சலசலப்பு..

பிரின்ஸிபால் ராஜலக்ஷ்மி மேடமை..  கண்டதுமே அடங்கியது. 


 ராஜலக்ஷ்மி  ..சன் ஷைன் பப்ளிக் ஸ்கூலின்( SPS) பிரின்ஸிபால்.

 

அவள்  கம்பீரம்..

கண்ணில் காணும் உறுதி, பேச்சில் இருக்கும் கண்டிப்பு கலந்த கருணை, குழந்தைகளைக் கண்டதுமே அவள் காட்டும் பரிவுடன் கலந்த அன்பு ...

எல்லாவற்றிற்கும் மேலே..மிக நேர்த்தியாக அவள் செய்யும் அலங்காரம் ...டீச்சர்கள் மாணவ மாணவிகள் எல்லாருமே அவள் விசிறி. 


இரண்டு மாதங்களுக்குப் பின்  வரப்போகும் பள்ளி நிகழ்ச்சிக்கான திட்டமிடும் மீட்டிங்


கொண்டாட்ட நாளும் வந்தது.


SPS Welcomes  you all to the  

Grand Parents day.


வரவேற்பு வளையங்களுடன் , தோரணங்களுடன் அந்தப் பள்ளி ஜொலித்தது. 


அங்குமிங்கும் ஓடியபடி டீச்சர்களும், விதவிதமான வேஷத்தில் குழந்தைகளும்...


"மிஸ் மிஸ்..என் ட்ரெஸ்ஸை பிடிச்சு இழுக்கறான்.."


"மிஸ்...மி...ஸ்.."தன் சுண்டு விரலைக் காட்டி அவசரத்தைக் காட்டிய வாண்டுகள்.


"மிஸ்..என் லிப்ஸ்டிக் கலர் நல்லாவே இல்லை .." மிடில் ஸ்கூல் மாணவிகள்.


ஸ்டேஜ் முதல் சாப்பாடு வரை எல்லாம் மிக நேர்த்தியான ஏற்பாடுகள். 


மணி 4 .

 பாட்டிகளும்  தாத்தாக்களும் ரெட் கார்ப்பெட்டில் கைகோர்த்து நடந்து வந்து..

"நான் காவ்யாவோட பாட்டி..

"நான் தான் வினோத்தோட தாத்தா"..

 பரஸ்பர அறிமுகங்கள் 


பாட்டு, டான்ஸ் , மாறுவேடம், நாடகம்..

 ஒவ்வொரு தாத்தா பாட்டியின் முகத்திலும் பெருமிதம். 


" இப்போது..

நம் குழந்தைகளின் தாத்தாக்களும் பாட்டிகளும் இம்மேடைக்கு வந்து ..

அவரவர்கள் தனித் திறமையை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் "..பிரின்ஸ்பலின் அழைப்பு.


ஒரு நிமிடம் அங்கே மெளனம்.

 பின் களத்தில் குதித்து தூள் கிளப்பினர்.


கட்டபொம்மன்  வீர வசனத்துடன் மீசை முறுக்கி தாத்தா..

அபிநயம் பிடித்து ஆடும் பாட்டி..

" நான் இங்கிலீஷில் கதை சொல்றேன்"..வந்தார் ஒரு தாத்தா.


" மேஜிக் செய்யட்டுமா?..மனதைக் கவர்ந்தார் ஒருவர்.


Catwalk  ஜோடிகள்.

அரங்கமே அதிர்ந்தது  சிரிப்பலையில்.


கடைசி நிகழ்ச்சியாக...

" குழந்தைகளே..அவரவர் தாத்தா பாட்டியை போய் கட்டி அணைத்து வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்'..


அறிவிப்பாளர் சொன்னது தான் தாமதம்..!!


குழந்தைகள் எடுத்தனர் ஓட்டம் தங்கள் சொந்தம் தேடி.


 ஃபோட்டோ க்ளிக் சத்தத்துடன்...

 கொஞ்சும்  குரல்கள்..

" தாத்தா,..பாட்டி ..உனக்கு இதெல்லாம் தெரியுமா?..


அங்கே ஒரு அன்பின் சங்கமம் நிகழ்ந்தது. உச்சி முகர்ந்து ஆசிகள் அளித்த... பெரியோர்களின் கண்கள் தேடின..ஸ்கூல் பிரின்ஸிபால் மேடம் ராஜலக்ஷ்மியை.


இரண்டு மாதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற உழைத்த டீச்சர்களின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

" நம்ம பிரின்ஸிபால் மேடம் ..அவங்க லெவலே தனி".

 பெருமை கொண்டனர்.


இருக்காதா பின்னே..!!!

நியூக்ளியர் குடும்பச்சூழலில்..

தாத்தா பாட்டிக்கும் ஏக்கம்..குழந்தைகளுக்கும் அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில்..இந்த நிகழ்ச்சி மூலம்  ஒரு பெரிய இடைவெளியைக் குறைக்க ஒரு சிறு முயற்சி எடுத்த பள்ளி நிர்வாகம்.


'சன்ஷைன்'..அங்கே எல்லார் முகத்திலும் கூடத்தான்.

Madhyamar-நானே_வருவேன்

 #PVPK-1

#நானே_வருவேன்



"எப்படி இதை தடுக்கறது?"இதே கேள்விதான் சாமிக்கண்ணுவின் மனசை ஒரு வாரமாக குடைந்து கொண்டிருந்தது.


பஞ்சாயத்து கூடி எடுத்த முடிவு. இது தான் நம்மூருக்கு நல்லதுனு பெரியவர்கள் சொல்லி, ஊரே தலையாட்டி முடிச்ச ஒரு விஷயத்துக்கு எப்படி நான் முட்டுக்கட்டை போடுறது?...நிலை கொள்ளாத் தவிப்பில் அவன் .


" போய் வேலை வெட்டி பாருய்யா..புள்ளைங்களுக்கு பீஸ் கட்டோணும்.... புதுத் துணி எடுத்து கொடுக்கோணும்..'..சீறினாள் அவன் மனைவி ராசாத்தி.


"மனசாட்சியே இல்லாம பேசுறாளே...சாமி ..எனக்கு ஒரு வழி காட்டு'..

ஆழ் மனசு இதையே நினைக்க..

அன்றிரவு தூங்க ஆரம்பித்தவன்..எதோ ஒரு குரல் கேட்டு தன்னை மறந்து குரல் வந்த திசை பின்னே நடக்கலானான். 


" ம்ம்ம்..நான் சொல்றதைச் செய்..'

ஆணைக்கு அடி பணிந்து

சொன்னதை முடித்த கையோடு வீடு திரும்பினான்.


"யோவ்..எந்திரிய்யா..ஊரே அல்லோலகல்லோலப் படுது..நீ பாட்டுக்கு தூங்கினு இருக்க'

என்னான்னு போய் பார்த்துட்டு வருவோம்

ராசாத்தியின் மிரட்டலால் கண்ணைக் கசக்கி விழித்தவன்..எல்லோருடனும் சேர்ந்து ஓடினான்.


 ஆத்தா...ஆத்தா..'எப்புடிய்யா சாத்தியம்?

எல்லார் கண்ணிலும் பக்தியின் உச்சம் . ஊரே ஆச்சரியத்தில்..


மஞ்சள் புடவை, வேப்பிலை மாலை அணிந்து உக்கிரக் கண்ணுடன் ..

"என்னை நானே காத்துக் கொள்வேன்..

இனி உங்களையும் காப்பேன்" என்ற பார்வையில் ..

வேப்பமரத்தில் ..ஆத்தாளின் உருவம்.


"ஆத்தா ..எங்களை மன்னிச்சுடு..காசுக்கு ஆசைப்பட்டு ..எங்க நிலத்தை மட்டுமில்ல..காலங்காலமா எங்களோட இருந்த இந்த மரங்களையும் வெட்டச் சொன்ன பாவிகள் நாங்க...'


தூரத்தில் தெரிந்த பன்னாட்டு நிறுவன அதிகாரியின் வாகனம்,  ஊருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.


அன்றிரவு...நீண்ட நாளுக்குப் பிறகு ..சாமிக்கண்ணு அமைதியாக உறங்கினான்.

-இதெல்லாம்_ஜகஜம்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#இதெல்லாம்_ஜகஜம்


..!!


இப்பவே சொல்லிட்டேன் எல்லார்க்கும்..

இந்த அகிலா ரொம்ப நல்லவ..ரொம்ப பொறுமைசாலி..போனால் போகட்டும் விடுனு கண்டுக்காம கண்டிக்காம விடற ..நல்ல மனசுக்காரி..


நான் அர்ச்சனை பண்ணனும்னா..எப்படி atrocious  ஆ வீட்டுக்காரர் வேலை செய்யணும்..?


அப்பப்ப...ஒரு இரண்டு நாளைக்கு ..கல்யாணம் காட்சினு வீட்டை விட்டு எப்படா எஸ்கேப்புனு ..தப்பிச்சு ஓடுவேனா..


ஃபிரிட்ஜ் ஃபுல்லா ரொப்பிட்டு ..மேடை யெல்லாம் அழகா நீட் செஞ்சு வைச்சுட்டு போவேனா..

ஆனா..வீடு திரும்பினால்..

மேடை ஃபுல்லா சாமான் ரொம்பி கிடக்கும்.


அரிசி சம்படம் ..

"ஹையா..நான் எப்புடி உசரத்தில் வந்து உட்கார்ந்துட்டேன் பார்னு 

மேடையிலே ஏறி ..பாதி இடத்தை அடைச்சிருக்கும்.

ஷெல்ஃபில் இருப்பதெல்லாம் ..காத்து வாங்கப்போறேன்னு...மேடை மேலே முகாமிட்டு இருக்கும்.


அப்....பா....( அதுதான் என் வீட்டுக்காரர்)


ஏன்ப்பா..இப்படி கொலு வெச்சிருக்கீங்க..? 

அடுக்கி வெச்சதெல்லாம்..அடங்காப் பிடாரியா ..அங்கொன்றும் இன்கொன்றும் இருக்கேனு..

எரிச்சலில்..நம்ம BP ஏற..


எதுவுமே நடக்காத மாதிரி ஆஜர் ஆகிட்டு..

" நீ அரிசி சம்படம் எங்க வெச்ச?..இதோ இந்த பொந்துக்குள்ள..அதிலேர்ந்து ஒரு டம்ளர் அரிசி எடுக்க..நான் என் உடம்பை அரை அடி குறுக்கணும்..குனியனும்...இதெல்லாம் நடக்கற காரியமா. ?


"சூப்பர் ஸ்டார்...டான்ஸ் பார்த்திருக்க இல்ல?

எப்படி அலுங்காம குலுங்காம ஸ்டெப்ஸ் போடுவார்..

அதுமாதிரி..நான் இப்படி கை நீட்டினால் அரிசி, அப்படி தூக்கினால் பருப்பு..அஞ்சறைப் பெட்டி..அஞ்சடி தள்ளி இல்லாம..

அப்படியே அள்ளி போடற distance ல


ஆனால்..அந்த டான்ஸ் எப்படி சூப்பர் ஹிட்டாகுமோ..அதே போல...

'".மாப்பிள்ளை ..அகிலா சமையலை விடஉங்க சமையல் சூப்பர்னு ...


எல்லா ஐட்டமும் மீதி வெக்காம சாப்டார் தெரியுமோ?..


பாத்திரம் எங்கே இருந்தால் என்ன?..பக்குவம் தானே முக்கியம் சமையலுக்கு????


நற..நறனு...நான் பல்லைக் கடிக்க..

இந்தா..டயர்டா வந்திருக்கே..இட்டிலியும் சட்னியும் பண்ணி வெச்சிருக்கேன்..சாம்பார் சுட பண்ணட்டுமானு கேட்கும்போது..


அடப்பாவமே..இவர்கிட்ட போய் ..சத்தம் போட்டமே ..நானு sympathy mode க்கு போக..


அடுத்த முறை ஊருக்கு போய்ட்டு வந்தாலும்..

' நீ கத்தறது எல்லாம் ஜகஜம் போ..ஜகா வாங்காம..ஜோலியை ஜம்முனு முடிக்கிறேனா இல்லலையானு...

" காற்றில் எந்தன் கீதம் ..காணாத ஒன்றைத் தேடுதேனு"..

ராஜா சார் பாட்டு அவர் கேட்க..

" காணாமல் போன கத்தியை தேடுதேனு"..

நான் திரும்ப கத்த ஆரம்பிக்க...

ஜாலி தான்..

ஜகஜம் தான்..


இந்த கிளி கூட என் பேச்சைக் கேக்குது..ஹீம்..

Madhyamar-மனம் வலித்த தருணம்(ங்கள்)

 #சண்டே_ஸ்பெஷல்

மனம் வலித்த தருணம்(ங்கள்)


கீழ விழுந்து..அடிபட்டு இருக்குனு தெரிஞ்சும்..சில குழந்தைகள் சத்தம் போடாம கண்டிக்காம இருக்கும்.

அப்போ..யாராவது கூப்ட்டு..' வலிக்கிறதா கண்ணானு..கேட்கட்டும் பாருங்க..

குழந்தை ஓனு அழும்.அது ஓலத் தானே..நாங்களே தட்டி விட்டு ஓட நினைச்சாலும்..தட்டி எழுப்புனு தலைப்பு கொடுத்த தலைவரே..


வாடகைக்கு குடியிருந்த வீடுகளில்..கொடுத்த வலிகள்..


சொந்த வீட்டில் சுகமா இருந்துட்டு..டெல்லில கரோல்பாக்கில் ஒரு சிங்கிள் பெட் ரூம் வீடு...

சம்மர் வந்தால் தண்ணீர் ப்ரச்சனை தலை விரித்தாடும்.

காலைல 7 to 8 தான் தண்ணி வரும். அதுக்குள்ள முதல் நாள் துணிமணி, பாத்திரம் எல்லாம் க்ளீன் செஞ்சு, பக்கெட்டெல்லாம் காலியா வெச்சால் தான் ..இருக்கற சொப்பு சாமான்லயும் ரொப்பி வைக்கணும்..

கீழ வீட்டில் ஹவுஸ் ஓனர். பெரிய குடும்பம். மூட் இருந்தால் நிறைய தண்ணீர் வுடுவா..இல்லாட்டி , தண்ணியே வரலைனு ..சத்தியம் அடிப்பா..

அவங்க மருமகள்..கொஞ்சம் நல்லவ..அவளோட குழந்தைக்கு டெய்லி ப்ரேக்ஃபாஸ்ட் எங்க வீட்ல தான்.

' அகிலா..இட்லி கே சாத் சட்னி யா சாம்பார்னு' வந்துடும் ..

அந்த நன்றி விசுவாசத்தில் ஒரு 2 பக்கெட் தண்ணி நைசா கொடுப்பா..இப்படி காலம் ஓடும் போது..பொண்ணுக்கு கல் எறியும் தூரத்தில் சூப்பர் ஸ்கூல் கிடைச்சது.. 

ஸ்வீட் எடுத்துக் கொண்டு சொல்லப் போனேன்.

அப்படியா..ரொம்ப சந்தோஷம்..அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்ணுங்க'..


ஏதோ காரணம் சொல்லி....

யப்பா..மனசே கஷ்டமா போச்சு..


அட போயா..போயா உலகம் பெர்சுனு ..இன்னொரு வீடு..

ராமானுஜம் மெஸ் கிட்ட..


அங்கேயும் விடாது தண்ணி ப்ரச்சனை..

மோட்டர்ல அடிக்கடி air lock ஆகிடும்


மோட்டார் ..வீட்டோட பின் பக்கம்..அடுத்த தெருவில இருக்கும்.

அவங்க வீட்டுல ஒரு குட்டி வழி திறந்தால்..நான் போய் அதில் அரை மக் தண்ணி ஊற்றினால் ஏறிடும்.

அப்போ ரெண்டாவது பெண் வயிற்றில்.

' கொஞ்சம் கதவு திறக்க முடியுமானு " கேட்டால்..

நிர்தாட்சண்யமாய் மாட்டேன்னு பதில் வரும்

அப்புறம் 10 நிமிஷம் சுத்தி போய் ..மோட்டரில் தண்ணி ஊத்தி எடுக்க வெச்சுட்டு வரும்போது...

சீ..என்ன மனிதர்கள்னு நினைச்சாலும்..இன்னிக்கும் மனசு வலிக்கும்..


அட அப்பாடா..கங்கை பாயும் டெஹ்ராடூனுக்கு வந்தாச்சு..இனிமே ஏது தண்ணி கஷ்டம்னு நினைச்சா..

அங்கே சம்மரில் ..tanker இல்லாமல் உயிரே வாழ முடியாது.


மாடி வீட்டில் நான்..கீழே ஹபுஸ் ஓனர்.

மொட்டை மாடியில் tank.


Tanker காசு ஆளுக்கு பாதி..

ஹவுஸ் ஓனர்..மோட்டர் போடும் போது..அவர் பையனை மாடில போய் நிக்க வெச்சு..

என் tank ல இருக்கற வால்வை மூடிட்டு..அவனை அங்கே காவலுக்கு வெச்சுடுவார்.


என்னடா இது ..மோட்டர் ஓடறது ..தண்ணீர் வரலையேனு போய் கேட்டால்..

' full tank ரொப்பினேன்.. நீதான் செலவழிச்சுட்டேனு"..சொல்லிக் கொண்டே..மோட்டார் ரூமை பூட்டிட்டு போய்டுவார்.

அப்புறம் சமைக்க முடியாது..ஒண்ணும் பண்ண முடியாது..

என் வீட்டுக்காரரோ சைட்டில் வேலை..இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை தான் வருவார்.

அவர் வரும்போது 'பெஹன் பெஹன்னு" தேனாய்ப் பேசுவார்


தடுமாறி ....


ஒருநாள்..அந்தப் பையன் போய் நிக்கும்போது..தைரியம் வரவழைத்துக் கொண்டு..


வால்வை மூடி இருப்பதை காண்பித்தேன்..


அது சின்னப் பையன்..தெரியாம செஞ்சான் என்றாரே பார்க்கணும்..

பையன் பாவம் ..ஹிந்தியில்..

"அப்பா..நீ தானே மூடச் சொன்நேனு சொன்னதும்..

அவன் சோட்டா பச்சானு ..டபாய்த்து விட்டார்..


ரொம்ப மனசு வலித்த தருணங்கள் அவை...


ஆனால் அதே பையனுக்கு..என் பெண்கள் படிக்கற ஸ்கூலில் அட்மிஷன் வாங்கிக் கொடுத்தேன்..

இன்னிக்கு பெரிய வேலையில் இருக்கான்..


அடுத்து..அங்கேயே வேறு ஒரு வீட்டுக்கு மாறினோம்.

அதுவும் ஒரு நெருப்பு குழி தான்.


வீட்டுக்காரர் டெல்லில் இருந்தாலும்..அந்தம்மா ஃபோன் பண்ணி பண்ணி என் உயிர் எடுப்பா..ரீஸனே இல்லாமல் கத்துவா..


அந்த வீடு தோட்டம் எல்லாம் நான் இருந்த ஏழு வருஷத்தில் ஜொலித்தது..


அங்கிருந்தும் மூட்டை கட்டி யாக வேண்டிய ட்ரான்ஸ்ஃபர்.


வீட்டுக்காரர் டெல்லிலேர்ந்து வந்து எல்லாம் செக் பண்ணிட்டு..

ஓகே சொல்லிட்டு..


நாங்க இன்னும் இரண்டே நாள் இருக்கபோறோம்னு தெரிஞ்சும், நாங்க ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு போய்ட்டு வருவத்கற்க்குள் எங்க மீதி இருந்த சாமானை ஒரு சின்ன ரூம்ல அடைச்சுட்டு..

' வீட்டுக்கு அடுத்த ஆள் வர, வைட் வாஷ் பண்ண்ப்போறேன்னு"..

அந்த மாசம் ஃபுல் வாடகை கொடுத்தும்..அவர் செஞ்ச செயல் வலி மட்டுமல்ல..ஒரு பெரிய வடுவாய் இன்னிக்கும் என் மனசில்..


சரி பெங்களூரில் வீடு பார்த்த போது..

மெட்ரோ சிட்டியிலும் எங்கள் சிந்தனையில் மண்ணை வாரிப் போட்டார் வீட்டுக்கார தாத்தா..


சும்மா வரேன்னு வந்துட்டு..

வீட்டைப் பார்க்கணும்னு சொல்லி..

குழந்தைகளோட ஷெல்ஃப் முதற்க் கொண்டு திறந்து பார்த்து..


இப்போ வேற வீடு..வேற ஓனர்..

இப்படித்தான் வாழ்க்கை..


சொந்த வீடு இருந்தும்..சில காரணங்களால் வெளி ஊரில் தங்குபவர்களை ..

ஹவுஸ் ஓனர்கள் ..நாம் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிந்து..மனவலி கொடுப்பது என்ன நியாயம்?


இருப்பவனுக்கு ஒரு வீடு..இல்லாதவனுக்கு உலகமே வீடுனு சொன்னாலும்...


ஆறாத வடுக்களை ஏற்படுத்திய இவர்கள் ...நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


கொஞ்சம் மனிதத்துடன் இருக்கலாமேனு ...


இதற்கு குடித்தனக்காரர்களை குறை சொல்வோர் நிறைய இருக்கலாம்.


ஆனால்..நான்..என்றும் ..வாழும் வீட்டை..நல்லபடியாக வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு நல்ல tenant. அது அவர்கள் அறிந்திருந்தும் ஏன் இப்படி?


புரியாத புதிர்..

Madhyamar-ஜோதிடம்

 #sunday_special 28-10-21


ஜோதிடம்..

இந்த வார்த்தைக்குள்ளேயே இருக்கு..திடம்.


கொட்டப்போகுது அதிர்ஷ்டம்னு சொல்லும்போது ..மனசே அடங்குனு திடமா இருக்கணும்..


குழில விழ வாய்ப்பு இருக்குணு சொல்லுப்போதும்..

மனசில் வேண்டும் திடம்


நான் காலேஜ் படிக்கும்போது ..எங்கம்மா என் ஜாதகத்தை ரொம்ப தெரிஞ்சவரிடம்   காட்ட....

' இனிமே தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும்னு ஆரம்பிச்சு..

இவளுக்கு நடக்கற நேரம் இருக்கே...

பஸ்ஸுக்காக பல மணி நேரம் காத்திருப்பாள் ஆனால் ,அது வந்து நிக்கும்போது ஏற மாட்டாள்"..

அம்புட்டுதேன்..

" அம்மா பஸ் லேட்டுனு " சொன்னால் போதும்..

"அதான் ..அவரே.. சொல்லிட்டாரே.." அங்கலாய்ப்புகள்.


Actually, சிட்டியை விட்டு ஒதுக்குப்புறமாக வீடு வாங்கி விட்டு, இரண்டு மணி நேரத்துக்கு ..ஒரு பஸ் வரும். அது ஏற்கனவே ரொம்பி வழிய..போனால் போகட்டும் போடானு ..பாட்டுப் பாடி..பொடி நடையா போறவளேனு..நம்ம மை வாய்ஸ் உள்ளே சோக கீதம் பாட..

வீட்டுக்கு வந்தால்..அம்மா செண்டிமெண்ட்..


Human psychology எப்படினா. முதல்ல ஒரு நல்லதுனு நடக்கும்னு நம்பிக்கை கிடைச்சால் போதும்..எத்தனை கெடுதல் க்யூவில் நின்றாலும் வெட்டி வீழ்த்த முடியும்..

நமக்கு.. ஸ்டார்ட்டிங்கே trouble ஆக..அப்புறம் ஒதுங்கிடலாம்னு ஒரு எண்ணம் தோணிப் போச்சு..


அப்படியும்....நப்பாசை யாரை விட்டது. அவர் சொல்றது சரி..இவர் சொல்றது சரினு ..வாழ்க்கையில் போராட்ட விளிம்பில் இருந்தபோது..இது உதவுமோ என்று..ஊன்றுகோல் தேடியதுண்டு..


ஆனால் ஒன்று மட்டும் தெளிவா புரிஞ்சது..

அகிலா..உனக்கு இது செட்டாகுதுனு ..நயன்தாரா ஸ்டைலில் சொல்லிக் கொண்டு..


பகவானிடம் பூரண சரணாகதி ஒன்றே போதும்....எந்தக் கர்மாவிலிருந்தும் விடுபட முடியாது..ஆனால் at least இந்த ஜன்மாவில் நல்ல சிந்தனை ,நல்ல சொல் ,நல்ல செயல்னு இருந்து கொண்டு, கண்ணுக்கு தெரியும் தெரியாத எதிரிகளிடம் போராட தெம்பு கொடு பகவானே..


சரி தானே நான் சொல்றது.


நம்ம வாழ்க்கையின் steering நமக்கு மேலே ஒருத்தன் இருக்காரே..நம்மை இந்த உலகுக்கு அனுப்பினாரே ..அவரிடம் தான் இருக்கு.


நாம் செய்யும் நல்ல செயல்களில், நாம் பேசும் சொற்களில் ,நம் தூய்மையான எண்ணங்களில் இருக்கு வாழ்க்கையின் அடிநாதம்.


கேட்காதவரை குழப்பமில்லை.

வாழ்க்கை அதன் பாதையில் போகும் . 


"அவர் என்ன சொல்லப் போகிறாரோ"..என்று மன உளைச்சலில் இருப்பதை விட..


"அவன் எல்லாம் பார்த்துப்பான்..இவ்வளவு தூரம் படைத்தவன்..படுத்தினாலும்

பொழிவான் கருணை மழையைக் கண்டிப்பாக ...என்று அதீத நம்பிக்கையில்  ஓடும் எங்கள் வாழ்க்கை வண்டி..


ஒரே மாதிரி உடல் உபாதைகள் இருந்தாலும்..ஒருத்தருக்கு ஒத்துக் கொள்ளும், நிவாரணம் அளிக்கும் மருந்து..மற்றொருவருக்கு சிறிது கூட பலன் கொடுக்காமல் போகும்..

அது போலத்தான்..நமக்கு ஒத்து வரலைனு ..நகர்ந்தாச்சு..

இங்கு நிறைய பேரின் பதிவுகள். ..அவர்களுக்கு கிடைத்த வழிகள் படிக்கும் போது..அதுக்கும் சேர்த்து அதிர்ஷ்டம் வேணும்னு தோணுது..


ஆண்டவன் சொல்றான்..நம்பள் கேக்கறான் ..அவ்வளவுதான்

Madhyamar-சின்னச்_சின்ன_சந்தோஷங்கள்

 #ஸண்டே_ஸ்பெஷல் 09-06-22


#சின்னச்_சின்ன_சந்தோஷங்கள்


இலக்கே இல்லாமல் நடப்பதில் சந்தோஷம்..


அடுத்து என்ன பாட்டு வரும்னு ரேடியோவில் காத்திருப்பு சந்தோஷம்.😄


Agenda எதுவுமே இல்லாமல்..

I came just to see you என்று ஒரு தோழி சொல்லுவது சந்தோஷம்..

அவளோடு கை கோர்த்து கோயில் செல்வது சந்தோஷம்..🙏


கூட்டத்தில் முண்டியடித்து ..பகவானின் முக தரிசனம் கிடைத்தால் சந்தோஷம்..😊


மணமணக்கும் பிரசாதம்..மடக்கு மடக்குனு விழுங்குவது சந்தோஷம்..🤤


பஸ்ஸில் உட்கார்ந்து பராக்கு பார்த்து ஊருக்கு செல்வது சுகம்..

ரயிலில் ஓரச்சீட்டில் உட்கார்ந்து..

காற்று தழுவ..கடக்கும் மரங்களுக்கு டாட்டா சொல்வது சந்தோஷம்.


வாழ்த்து சொல்வதில் சின்ன

 சந்தோஷம்..

கவிதையோ,கார்டோ..என் கையால் செய்து கொடுப்பதில் சின்ன சந்தோஷம்..


புதுசா உருவாக்கின...

குண்டக்க மண்டக்க டிஷ்ஷுக்கு..பாராட்டு குவியும் போது சின்ன சந்தோஷம்.🤣🤣🍨🍧


உதிரிப்பூ வாங்கி தொடுத்து ..மாலை சாற்றி அழகு பார்ப்பத்தில் சின்ன சந்தோஷம்..


டயலாக் ஒண்ணு விடாமல் தெரிந்தாலும்..ஆயிரமாவது முறையாக ..டீவியில் ..மீண்டும் மீண்டும் மெளனராகம் பார்ப்பதில் சின்ன சந்தோஷம்..💪💪💪


ராஜா சார் பாட்டில் ..ஐயோ..இது எந்த பாட்டில் வரும் interlude நு மண்டை பிச்சு..விடை கிடைச்சதும்..சின்ன சந்தோஷம்.💪


சுமார்னு நினைச்சு வாங்கின புடவை..சூப்பரா இருக்குனு சுற்றம் நட்பு பாராட்டும்போது..சின்ன சந்தோஷம்.🤣


அடுத்த முறையும் உன் வீட்டுக்கு கண்டிப்பா வருவேன்னு..முதல் முறை வந்த விருந்தாளி . சொல்லிட்டு போகும்போது சந்தோஷம்..🙏


நல்ல சுட்ட அப்பளத்தில்..நெய் ஊற்றி..அது உருகி ஓடும்போது..நொறுக்கி சாப்பிடுவதில் சந்தோஷம்..🤤


நான் இன்னிக்கு உனக்கு உப்மா பண்ணித் தரேன்னு.daughter  சொல்லும்போது ..துளிர் விடும் சந்தோஷம்..😄


வேலையெல்லாம் முடிச்சதும்..gas cylinder தீர்ந்து போனால் ஒரு குட்டி சந்தோஷம்..🤣💪


நதிக்கரையில் மெல்ல மெல்ல கால் வைத்து ..சில்லிப்பை உணரும் போது சின்ன சந்தோஷம்..


அங்கே மரத்தில் பாடும் குயில்..என் குரலுக்கு எச பாடும்போது சின்ன சந்தோஷம்..


காக்கா ..குருவி..புறா கூட ..என் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் சின்ன சந்தோஷம்.


சந்தோஷம் ..சின்னதோ பெரிசோ..எந்தக் கடையிலயும்..என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காதுனு..கொஞ்சம் கொஞ்சமா புரிவது..சின்ன சந்தோஷம்..


இந்த சந்தோஷம் போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமானு கடவுள் நம்மள கேட்கற மாதிரி கனவு வரும்போது..

சின்ன..பெரிய சந்தோஷம்.😄😄


இன்னிக்கு பாருங்க..பருப்புத் தேங்காயை ஃபோட்டோ எடுக்க போனால்..அதில் பிள்ளையார் உருவம் தெரிஞ்சால்..சின்ன சந்தோஷம்..

கரெக்டா..??

Madhyamar-என்னை_ஆச்சரியப்படுத்தும்_மத்யமர்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#என்னை_ஆச்சரியப்படுத்தும்_மத்யமர்.


என்னிக்கு friend ஆனோம்..எப்ப அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம்..

எதுவும் சுத்தமா நினைவில்லை..


மத்யமர் தளம் ஆரம்பிச்ச நேரம்..பதிவுகள் மூலம் தான் பரிச்சயம் அதிகமாச்சு.


ஆனைமங்கலத்தில் உதித்த

அற்புத மனிதரிவர்.


ஆயிரம் பிறைகள் கண்ட போதிலும்

அன்று போல் இன்றும் இளமையானவர்.


புனர் பூசத்தில் பிறந்த

பூலோக ரகுபதி இவர்.


வார்த்தை விளையாட்டு..

வாய் பிளந்து கேட்பேன்


வாஞ்சையான பேச்சு..

வரம் பெற்றேன் நானே..


அமெரிக்காவில் இருந்தாலும்..

அகிலாவை மறப்பதில்லை..


என்ன தவம் செய்தேன் நானும்..

இவர் போல் சான்றோர் நட்பு கிட்ட..🙏🙏🙏🙏


சார் என்று கூப்பிடத் தொடங்கி..

ரகுபதி மாமா என்று..

உறவு ..பலம் அடைய..

உள்ளத்து மகிழ்ச்சியை..

என்னவென்று சொல்லுவேன்..

எங்க குடும்பத்தில் இப்போ இவரும் ஒருவர்.


நான் வெளியே போகப் போறேன்னு சொல்லி இருப்பேன்.

கரெக்டா கிளம்பும் போது ..

'பத்திரமா போய்ட்டு வா'..மெசேஜ் வந்து விழும்.


ரகுபதி மாமாவுடன் என் டெலிபதி அப்படி.


லயோலாவில் படித்து, UPSC தேர்வெழுதி, பல உயர் பதவிகள் வகித்து, பல நாடுகள் பயணம் செய்து, தலாய் லாமாவை இந்திய அரசுப் பிரதிநிதியாகக் காணச் சென்று..இவரின் பணிக்காலப் பெருமைகள் எழுத பதிவொன்று போதாது.


இவரின் பேச்சைக் கேட்பதே ஒரு ஜாலி..

Pun உடன் பேசுவதில் பன்முகத் திறமையாளர்.


அமெரிக்கா அலப்பறையில் அசத்துவார்


மெல்லிசைப் போட்டியிலோ ..melody கிங்கானார்..


வாங்கி இருக்கும் பொட்டிகள் ஏராளம்.


முதன் முதல் மத்யமர் தளத்தில் #red_carpet வாங்கிய பெருமைக்குரியவர்.


அவர் காட்டும் அன்புக்கும் பாசத்துக்கும் ..இந்த அகிலா என்ன செய்யப் போகிறேன்னு ..மனசு நினைச்சாலும்..

அடப் பைத்தியமே.." You are so blessed' நு மைண்ட் வாய்ஸ் என்னை மண்டையில் தட்டும்.


நீங்க விற்punனராக இருந்தாலும்..

World பூரா சுத்தினாலும்..

வீற்றிருப்பவர் எங்கள் மனமென்னும் சிம்மாசனத்தில்..என்றும்


NY ல் இப்போ இருந்தாலும்..

I am near to you என்று ..

எங்க எல்லாரிடமும் ..

Communication ல் இருப்பவர்.


வாஞ்சை, வாத்ஸல்யம்,வாரி வழங்கும் அன்பு....இவரிடம் இருப்பது போல..எவரிடமும் கண்டதில்லை.


மத்யமர் தந்த அற்புத நட்பு....நீங்கள்.


மத்யமர் இல்லாவிட்டால்..இப்படி ஒரு மாணிக்கம் எங்கள் வாழ்வில் கிடைத்து இருக்க முடியாது.


Thanks to madhyamar and Shankar Rajarathnam  sir


என்ன தவம் செய்தனை..

Raghupathy N uncle.

feeling blessed


"என்னை இப்போ எடு ஒரு ஃபோட்டோ" என்று..

நீங்க கொடுத்த pose..அன்று 2019ல்.

Madhyamar-நாகரிகம்

 #sunday_topic 17-07-22


#நாகரிகம்


கட்டிய புது வீட்டில்

கலைநயமிக்க தனியறை 

குழந்தைகள் மகிழவென்றே

தட்டித் தான் செல்லணும் என்ற..

கற்ற புது நாகரிகம்..😊


கைப்பேசியின் கடவுச் சொல்லை..

காலன் வந்து கதவு தட்டினாலும் .

கட்டினவனு( ளு)க்கும் ..

காட்டாத நாகரிகம்🤣


கடைக்குள் நுழைந்து..

புடவை செலக்ட் செய்து..

கையில் வைத்து அழகு பார்க்க..

கலர் இது ரொம்ப நல்லாருக்கேனு ..

கையிலிருந்து பிடுங்கி..

காசைக் கொடுக்கும் மக்கள் முன்னே..

காட்டாத கோபம்..நாகரிகமா?😄😄


கையேந்தி பவனில்..

காசுக்கு தண்ணீர் வாங்கி

கொஞ்சம் மீதியிருக்கேனு..

கையிலடக்க..

கஞ்சப் பிரபு என்று ..கலாய்க்கும் கூட்டம் முன்

காட்டாத..கோபம்..நாகரிகமா?😄😄


காய்கறிக் கடையில்...

கணவன் முறைப்பாரே என்று..

கொசுறு வாங்காத சோகம்..

நாகரிகத்தின் உச்சமன்றோ..😄😄


குடும்பமோ..குழுமமோ..

கூட்டமா பேசும்போது..

குறுகுறுக்கும் எண்ணங்கள்

கொட்டித் தீர்க்க நினைத்தாலும்..

கொஞ்சம் சும்மா இரு..

குறுக்கே பேசாமல் இருந்து...

கடமையே கண்ணாயிருப்பதும்..

நாகரிக வகையன்றோ.😩


கத்திப் பேசாதே..

சுத்தி முத்தி பாரு.

சொந்தக் கதை பேசாதே.

வந்த வேலை மட்டும் பாரு..

வரிசையாய் கற்கிறோம்..

வாழ்க்கையின் வளைவிற்கேற்ப..🤔


நாகரிகம்..

நம்மை சுருக்குவதிலா?..

நாலு பேருக்கு பிடித்த மாதிரி நடப்பதிலா?..

Adjust செய்வதிலா?

அடப்போப்பா..இதுதான் நான் என்பதிலா?🤦


நாகரிகம் என்ற பெயரில்

நரகத்துக்குள் இருக்கோமா?

நாகரிகம் என்பது..

நாலும் கற்று அறிவதிலா?

நயமும் பண்புடன் இருப்பதிலா?

நையாண்டி செய்து நோகடிப்பதிலா?..

நாகரிகம்..நாகரிகமாக..

நம்முள் வளரட்டும்..

நல்ல மணம் பரப்பட்டும்.🙏🙏

Madhyamar-சிட்டுக்குருவி_தினம்

 #சிட்டுக்குருவி_தினம் 19-03-22



குட்டியூண்டு பறவைக்கு

பட்டித் தொட்டியெல்லாம் கொண்டாட்டம்..

சர்வதேச தினமென்று..

சவக்குழியில் தள்ளி விட்டபின்

பாவ மன்னிப்பு கேட்கும் தினமோ..


சின்னதொரு sparrow வையும்

Spare செய்யாத. 

சகட்டு மேனி வளர்ச்சியோ..?

சந்ததியின் வீழ்ச்சியோ..?


வீட்டுக்குள்ளே கூடு கட்டி..நீ

கூடி வாழ்ந்ததொரு காலம்..

குளிர் பெட்டி வந்ததும்..

குட்டிக் குருவி காணலையே..


தோட்டத்து செடியிடையே..உன்

கொடியிடை அசைத்து..

நடை போட்ட அழகென்ன?


பறந்து போன மாயமென்ன?

பூச்சிக் கொல்லி யின் நெடியாலோ?


நாடார் கடை வாசலில்..

நடை போட்ட அழகென்ன?

சிதறிக் கிடந்த தானியங்கள்..உன்

சின்ன வாய்க்குள் போனதென்ன?..

பல்பொருள் அங்காடி வந்ததுமே..

பசியால் தவித்து அழுதாயோ?


மின்கம்ப வரிசையிலே

 மிரளாமல் அமர்ந்ததென்ன?

முக்கிய கூட்டம் நடத்தும் அழகென்ன?

மடியும் வரை மகிழ்ச்சி அளிப்போமென்று..

மாநாட்டில் தீர்மானம் எடுத்தீரோ?


தேங்கும் தண்ணீரில் உன்

ஆட்டம் கண்டேன்...நீ

கோதிக் கொள்ளும் அழகை ரசித்தேன்..அதிலிருந்து

சிதறும் நீர்த்துளியில்..

நானும் நனைந்தேன்..


மனிதனோடு வாழ்வதிலே..

மகிழ்ச்சி உனக்கு..ஏனோ

மனிதம் மறைந்தது?..உன் 

மனமும் ஒடிந்ததோ?


நாகரீக வளர்ச்சியிலே..

நாசமாகிப் போன வர்க்கம் நாங்கள்..


நச்சென்று அறிந்த பின்னும்

நட்டோமே..நாடு முழுதும்..

நாளும் பேச உதவும்..

அலைபேசி டவர்களையே..


காந்தமாய் எமை இழுத்த

சின்னத் 👼 தேவதையே..மின்

காந்த அலைக்கு 

பயந்து நீ ஓடினாயோ?

லேகியத்துக்கு உன் பேர் சூட்டி

லாபம் பார்க்கும் உலகத்திலே

பாவம் பிழைத்து போவென்றே..

பறந்தேதான் மறைந்தாயோ?


மறைந்து போன உன்னையுமே

மறக்கத்தான் முடியலையே..

செயற்கை கூடு வாங்கி வந்து

சத்தமிடும் குருவி பொம்மை வைத்து..

சந்ததிக்கு காட்டுகிறேன்..

சொல்லிக் கொடுக்கிறேன்..


"வழியொன்று கிட்டி..உன் 

வாசலுக்கு ஒருநாள் வந்தால்..சிறு

வீடு ஒன்று அது கட்ட..

சின்னதாக ஒரு இடம் தா என்று.."


ஏ குருவி..சிட்டுக்குருவி..

உன் சோடி எங்க அதை கூட்டிக்கிட்டு..

என் வீட்டுக்குள்ள வந்து கூடுகட்டுனு..


வரவேற்பு மடல் வாசிப்போம்..

வண்ணக் கோலமிட்டு வரவேற்போம்..

Madhyamar-தீபாவளி பட்சணம்

 #Midweek_topic 

தீபாவளி பட்சணம்..29-10-21



ஆஹா..இது topic..

இழுக்க இழுக்க அல்வா போல..மனசை கரைய வைக்கும் மைசூர்ப்பா போல..

மத்யமரையே சுற்றி சுற்றி வரும் ஜாங்கிரி போல..

நானே ராஜா...எனும் பாதுஷா போல..

கலந்து கட்டி..குதூகலமாய் இங்கே வலம் வரும் நமக்கு ..மிக்ஸர் போல...


போதும்மா போதும்..

பாயிண்ட்டுக்கு வா.உங்க மை .வா கேட்கிறது.


வருஷத்தில் மத்த பண்டிகைக்கெல்லாம்..

YouTube குடைந்து , குண்டக்க மண்டக்கனு செய்வேன்..ஆனால் தீபாவளி என்றால்..நிலைய வித்வான் தான்..

வேற என்ன?..

லட்டுவும்,காரா பூந்தி, மிக்ஸர் தான்.

அதுவும்..கல்யாணம் ஆகி வந்த போது ..சித்தியின் கையால் எழுதிக் கொடுத்த. அதே பழைய டைரி..அதிலிருக்கும் அளவுதான்..


இப்போ கிடைக்கும் பொருட்களின் தரம் கொஞ்சம் வேறுபடுவதால்..

Latest update in measurement சித்தி சொல்லிடுவா..


எந்த சொத்திலும் ஆசைப்படாத நான்..முதல் முறையாக..

பதுக்கியது எது தெரியுமா?..


எங்கம்மாவோட பூந்தி கரண்டி..

" என் .... ஞாபகமா வெச்சுக்கறேனே.." உறவு ஒன்று சொல்ல..

வெரி சாரினு வெடுக்கென்று சொல்லிட்டோமோனு இன்னி வரைக்கும் ஒரு உறுத்தல் உண்டு..


ஆனா..


முத்து முத்தா பூந்தி மணி அள்ளத்தான் வேணும்னு ..அன்னக்கிளி சுஜாதாவாக மாறும் போது..மகிழ்ச்சியே😄😄📦📦


வளையோசை கலகல கலனு கவிதை படிக்கிற மாதிரி..

டக் ..டக்..டக்னு ..அந்த தட்டை தட்டும் ஓசை இருக்கே..


பக்கத்து வீட்டுக்கும் தெரியும்..பூந்தி வேலை நடக்குதுனு..


இதில் ஒரு செளகரியம் என்னன்னா..

முதல்ல..டக் டக்..டொக் டொக்குனு லட்டுக்கு பூந்தி தேய்த்து விட்டு..


அடுத்து....காரா பூந்திக்கு இறங்கிடலாம்..


பதம் மட்டும் வேற..

ஒண்ணு..அரை வேக்காட்ல இருக்கணும்..

இன்னொன்னு..கரகரனு வாயில் போட்டால் கரையணும்.


சில சமயம்..வால் முளைத்த பூந்தியும் ..கொஞ்சம் வாலாட்டும்..

எல்லாம் ..வாய்க்குள்ள தானே போகப்போறதுனு ..😄😄👍


அதுவும்..அந்த லட்டு....🤤🤤

ஒவ்வொரு லட்டுலயும் ..ஒரு கிராம்பு , இரண்டு கல்கண்டு, 2 திராட்சை, நுணுக்கின முந்திரி ..சேர்த்து பிடித்து..

அப்படியே சில மணி நேரம்.கழிச்சு..

சக்கரை மலர்ந்து...பச்சை கற்பூரம் ஏலாக்காய் மணத்தோட..அப்படி எடுத்து ..

இரண்டா உடைச்சு வாயில் போட..

சொர்க்கமே என்றாலும்.

அது பூந்தி லட்டு போலாகுமானு..பாட்டு பாடத் தோணும் ..பாருங்க..ஆஹா..


அடுத்து..காராபூந்தி..

அதோட..கமகமனு கருவேப்பிலை..

கரகரனு வேர்க்கடலை..

கொழுப்புக்கு ..முந்திரி..

அளவா..உப்பு காரம் பெருங்காயம் 

அப்படியே கலந்து வைக்க..

பூந்தியைப் போலொரு ..பட்சணம் இனிதாமோனு....


இதுபோக..மீதி..கொஞ்சம் பாதுஷா..கொஞ்சம் சாக்லேட் பர்ஃபியும் பண்ணி வெச்சால்..


சுற்றம் நட்புகளுக்கும் ..கொடுத்து மகிழலாம்..


Wishing all my madhyamar friends a fabulous and safe deepavali 🪔🪔🪔🪔🪔🪔

Madhyamar-

 #Sunday_topic


#2022


11:59 pm ...2021.


Count down started.

4,3,2,1...


எங்கும் மத்தாப்புகளும்..

வான வேடிக்கைகளும் வாழ்த்து சொல்வதற்கு கலர் கலராய் விண்ணில் வெடித்து சிதற..


. Happy new year ..என்ற வாசகங்கள் விண்ணையும் மண்ணையும்  அலங்கரிக்க...


மக்கள் வெள்ளம் தெருக்களில்  திரண்டு ஆர்பரிக்க...தெரிந்தவர் தெரியாதவர் அனைவரும் சந்தோஷ வாழ்த்துக்கள் பரிமாற...


சொர்க்க பூமியாம் 

Las Vegas ல்...கூட்ட நெரிசலில்..


"  அம்மா..உன் கையை கெட்டியா பிடிச்சிண்டிருக்கேன்...

you enjoy the moment" என்று..

வலமும் இடமும் என்னை பாதுகாத்த..என் பெண்கள் என் கையை இறுக்கிப் பிடிக்க...

சந்தோஷக் கண்ணீர் என் கண்களில்..


அது தான் 2022 புத்தாண்டில் நான் கேட்ட முதல் வார்த்தைகள்..


இறைவா..இது போதும் எனக்குனு..


நான் ரொம்ப senti ங்க.


முதல் முதல் தனியாக பயணம் US க்கு.. இரண்டு மாதங்கள்..பெண் மாப்பிள்ளையின் அன்பு மழையில் நனைந்தேன்..


#உல்லாசம்_உற்சாகத்துடன் #தொடங்கிய_2022


இப்படியே சந்தோஷமா இருக்க முடியுமா என்ன..?


இரண்டு மாதத்துக்குள் ஓடி வந்துவிட்டேன். பெரிய இழப்பை என் குடும்பம் சந்தித்தது.

என் சொந்த சகோதரியாய் இருந்த என் நாத்தனார் ..நான் ஊரில் இருந்தபோது அகால மரணமடைந்தார்.

மனதுக்குள் ஒரு சங்கல்பம் செய்தேன். அவர்களின் வருஷாப்தீகம் வரை..மாதா மாதம் செய்யும் கிரமங்களுக்கு என் அண்ணாவுடன் துணையாய் இருப்பேன் என்று..

அவனருளால்..என்னால் முடிந்த உபகாரம் செய்து..உறுதுணையாய் நின்றேன்.

#உருக்குலைய_வைத்த_

#இழப்பை #தந்த_2022


நான் எங்கேயும் வந்ததில்லை..உன் வீட்டில் வந்து எப்படி?..

தயங்கின தோழி வந்து தங்கிச் சென்றாள் ஒரு வாரம் என் இல்லத்தில்..என் பெண்ணும்..அப்பாவும்..என்னை மறந்தே போகும் அளவுக்கு அவள் அன்பில் திளைத்தார்கள்.


நட்பு ஒரு பெரும் பாக்கியம். அதுவும் அவள் வந்து இருந்தது..இன்னும் நாங்கள் அசை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு அருமையான நினைவுகள்.


#உற்ற_தோழமையை_காட்டிக் #கொடுத்த_2022


சந்தோஷங்கள் சில நம்மைத் தேடி வரும்.சிலவற்றை நாம் உருவாக்கணும்..


எங்கள் அண்ணாவின் குலதெய்வக் கோயில் இருக்கும் அழகான கிராமம்.


அங்கே..துள்ளித் திரியும் வாண்டுகள்.

ஞாயிற்றுகிழமை காலை ஒன்றரை மணி நேரம்

ஆன்லைனில் ஒரு சத்சங்கம் அண்ணா ஆரம்பிக்க ...


அணிலாய் எப்போதும் போல அகிலா.

குழந்தைகளோடு குழந்தையா இருக்கச் சொன்னால் கசக்குமா என்ன?


எனக்குத் தெரிஞ்ச பக்தி பாடல்கள், கதைகள்..

அவங்களோட creativity வளர்க்க..

குட்டி குட்டி craft session.


 " mam..எப்ப்போ வரீங்க..உங்களுக்கு நாங்க சமைச்சு போடறோம்..எங்க ஊரைச் சுத்திக் காண்பிக்கிறோம்னு "...

 

 ஒரு அன்பு வலையில் அகிலா சிக்கிய வருஷம் இந்த 2022.

 

#உன்னால்_முடிந்ததை_

ஊருக்கும் செய் என்று #கற்றுத்_தந்த #2022


எல்லாத்துக்கும் மேல..

அவ்வப்போது எதாவது ஒரு event என்ற பெயரில் ..மத்யமர் நட்புகள் ஒன்று கூடி..

ஒரு குடும்பம் கூடியது போல..ஒவ்வொரு எங்கள் சந்திப்பும்..


கடைசி நாளான 31 ஆம் தேதி..மைதிலி மேடம் அவர்களின் 80 வது வயது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடினோம்.


#மத்யமர் ..என் வாழ்வில் அங்கம். அது எங்கள் குடும்பம்னு மேலும் #உறுதிப்படுத்திய_2022.


2023 .

அதுவும் ஒரு mixed bag உடன் தான் நம்மிடம் வரும்.


Take life as it comes...

என் குருவின் வார்த்தைகள் எப்போதும் என் மனதில் ஒலிக்க..


வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் 2023 வருடத்தை..


2023..வருடம்..

வருடலா இருக்குமா..

வாரி விடுமா..

வெள்ளித் திரையில் காண்போம்.

Madhyamar-படக்கதை

 #VPKP_3

#படக்கதை 1 9).



(Word count 280)


#என்_இனிய_அரவிந்தா...


"டேய்..அரவிந்தா..வெயிலு வீணாப் போகாம ஏண்டா இப்படி அங்கேயே நிக்குற??.

 வள்ளியம்மாள் குரல் அவனுக்கு கேட்டால் தானே..

"அம்மா...இன்னிக்கு என்ன கிழமை?

"அதுக்கென்னடா இப்போ?"


"உனக்கு எல்லாம் மறந்துடும் இன்னிக்கு செல்வி பெரியம்மா வர நாளு..அது கூட மறந்துட்டீங்களா?.."


"அட ஆமாம் ராசா.. எங்க ஞாபகம் இருக்கு எல்லாம்..'


மனசுக்குள் சொல்லியபடி தன் வேலையைப் பார்க்க நகர்ந்தாள்.


" இந்த ரெட் கலர் டீ ஷர்ட் தான் பெரிம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். வாட்ஸப்பில அன்னிக்கு  என்னோட ஃபோட்டோ அனுப்பினதும்..என் கண்ணே பட்டுடும் போல இருக்குனு  சொன்னாங்களாம்.'

அரவிந்த் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.


" பாருங்க நம் அரவிந்தை..

இன்னிக்கு ஒரு சேட்டையும் செய்யாம ...அழகா பவுடர் பூசி தலை வாரி ..ஒழுங்கா டிஃபனை சாப்பிட்டுட்டு.

காலையிலேர்ந்து இந்த கேட்டைப் பிடிச்சுகிட்டு காத்து கிடக்கான்"..


சனிக்கிழமை வந்தா போதும்..அரவிந்திற்கு இருப்பே கொள்ளாது..

வெறென்ன ..அவன் செல்ல பெரிம்மா செல்வி வரும் நாளாச்சே.


" அம்மா..மணி என்ன ஆச்சு..?

பஸ் வந்திருக்குமா?..

எங்க வந்திட்டு இருக்காங்கனு கேளுமா??'

" கண்ணா..பஸ் சத்தத்தில ஃபோன் சரியா கேட்காதுடா'..

தவித்தான்.


" என்ன கண்ணு....தனியா எதுக்கு வாசல்ல நிக்குற??"..


போற வரவங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ..ஒரே பதில்..

" இன்னிக்கு எங்க பெரியம்மா வராங்களே"..பெருமித பதில் தான்.


பெரிம்மா வந்தாச்சு.


என் செல்லமே..வாரி அணைத்து ..

கொஞ்சினாள்.


தான் செய்த சேட்டை முதல்..போட்டுக் கொண்ட சட்டை வரை எல்லாத்தையும் ஒப்பித்தான்.


பையிலிருந்து பண்டங்கள் எல்லாம்.எடுத்துக் கொடுத்து ..

' அரவிந்து..உன் ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாமும் கொடுக்கணும் என்ன.."..அன்பாய் ஆணையிட்டாள்.

மடியில் வந்து படுத்துக் கொண்ட அரவிந்தின் தலையைக் கோதி விட்டாள்.

" இவனுக்குத்தான் என் மேலே எத்தனை உசுரு"..சந்தோஷமாய் இருந்தது செல்விக்கு.


கிளம்பியவளிடம்..


" அடுத்த வாரம் எனக்கு கேக் கண்டிப்பா வேணும் பெரியம்மா"...

அவள் கிளம்புவது பிடிக்கலை என்றாலும்..இது வாரா வாரம் நடப்பது தானே..


கேட்டில் நின்றபடி டாட்டா காட்டிக் கொண்டே இருந்தவன்....


"திங்கட்கிழமை சரண்யா சித்தி என்னைப் பார்க்க  வருவாங்களே. என்னை பார்க் கூட்டிட்டு போவாங்களே .."நையாண்டியாய் சொல்ல..

நீ..போ..போ..என்னைப் பார்க்க நிறைய பேர் வரதுக்கு இருக்காங்க..என்ற தோரணை அவன் குரலில்.


திரும்பித் திரும்பி பார்த்த படியே நடந்த செல்வியின் கண்ணில் 

' அன்பு அனாதை இல்லம்'..என்று 

 அந்த வீட்டு போர்டின் எழுத்துக்கள் அவளை அறியாமல் வடிந்த  கண்ணீரில் மங்கலாகத் தெரிந்தது.

 

ஆம்..

அன்பு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாருக்குமே அங்கு அவர்களைப் பார்க்க வரும் எல்லாருமே ..பெரியம்மா, சித்தி,அத்தை,  மாமா தான் .


அம்மாவாய் வள்ளியம்மையும் அவளுக்கு வலதுகரமாய் கைகொடுக்கும் அவள் கணவனும் இருக்கையில்....அரவிந்த் மட்டுமல்ல ..அங்கே இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் வாழ்க்கை  அன்பு சூழ்ந்தது தான் .


 அடுத்த வாரத்திற்காக..

 காத்திருக்காள் செல்வி பெரியம்மாவும் தான்.

Madhyamar-இருப்பதும் இல்லாததும்..


 #sunday_special


இருப்பதும் இல்லாததும்..


இருப்பது என்பது எதுவுமில்லை..

இல்லாதது என்பதும் மாயையின் எல்லை..


நம்மளப் பத்தி ஒரு  செல்ஃப் analysis செஞ்சு முடித்துவிட்டு..லிஸ்ட் போட்டு வைத்துவிட்டேன்..


ஒரு சல்வார் வாங்கினால் கூட..செல்ஃபி எடுத்து ,பின்னூட்டம் வாங்குவோமே..இதை எப்படி அப்படியே எழுதறது..!!!!


சரி ..சரி..எப்பவும் போல மக்கள் என்ன சொல்றாங்கனு மைக்கைத் தூக்கிக் கொண்டு..

முதலில் சென்றது அப்பாவிடம்..


ஒரு நப்பாசை தான்..இருப்பது மட்டுமே தான் சொல்லுவாரு..

அன்பு கண்ணை மறைக்கும்னு நினைச்சு போக ...காத்திருந்தவர் போல..போட்டாரே ஒரு போடு

உன் கிட்ட இருப்பது..பது..பது..

Dedication...

Aahaa...ibaco ice cream குளிர்ச்சி தலையில் இறங்கும் வேளையில்..

ஓ..good good என்று மனசு பறக்க..

வலிக்காமல் ஒரு குட்டு வெச்சாரே பாக்கணும்.

உங்கிட்ட இல்லாதது ..தது..தது..

Decision making and risk taking..

ஆமாம்ல....🤔🤔🤔🤔


கொஞ்சம் சந்தோஷம் ..கொஞ்சம் துக்கத்துடன்..வூட்டுக்காரரை அணுக..

முதல்ல கொஞ்சம் பயந்தார் பாவம்..அடுத்த வேளை..சாப்பாடு கிடைக்கணுமே..

வந்து..வந்து..சொல்லிடட்டுமா?

சொன்னால்..கோவிச்சுக்க மாட்டியே..?!!!

ஐயா..சாமி..

சொல்லுங்க..சொல்லுங்க. 😄😄😄

.மைக் பிடிச்ச கை வலிக்க..

உன் கிட்ட இருக்கு action..

Aahaa..அப்புறம்..அப்புறம்..

இல்லாதது சொல்லணுமா?...

அது...வந்து..

இல்லாதது.. attention...


 ஏன் இப்படி சொன்னாரு தெரியுமா?...

For example..நான் ஒரு உப்பு சப்பில்லாத கேள்வி கேட்பேனா..😄😄😄

அவரு அதுக்கு அகழ்வாராய்ச்சி லெவெல்ல பதில் சொல்லுவாரு

அம்ம்புட்டு அறிவு..💡💡💡💡💡

ஆனால்..நமக்கு..

 அடுப்புல பாலு பொங்கும், காய் கருகும்..குக்கர் விசிலடிக்குமா...😄😄😄

அவரு சொல்ற முக்கால் வாசியும் மூளையில ஏறாது..என்ன பண்ண..நம்ம டிசைன் அப்புடி..


சரி..கடைசியா..கரெக்ட்டான ஆளு. எம் பொண்ணு..

சம்மட்டியில் அடிக்கற மாதிரி எனக்கு நல்லதும் கெட்டதும் இப்போ இருக்கற நிலமைக்கு ஏற்ப சொல்லித் தரும் ஆசான்..


சொந்த செலவில சூன்யம் வெச்சுக்கறது இதுதான்..

நானே போய் குழியில் விழ..அப்புறம் என்ன..லெஃப்ட் ரைட் செண்டர் தான்..


உனக்கு ரொம்ப நல்ல குணம்ம்மா..

ஆஹா..சிறகடித்து பறக்க...


But you don't have the guts to say No ..

ம்ம்ம்ம்ம்..இல்லாத குணத்தை ..டபக்குனு புடிச்சு போட்டாள்..🤔🤔


நெக்ஸ்ட்டு..நெக்ஸ்ட்டு..

நான் ரொம்ப..excite ஆக..

உங்கிட்ட இல்லாத ..ஒரு பாஸிடிவ் விஷயம்  ..


மத்தவங்க privacy ல் மூக்கை நுழைக்க மாட்டாய்.

ஆனா...சில சமயம்..நீ நினைக்கறது மட்டுமே , நாங்க செய்யணும்னு ஒரு எதிர்பார்ப்பு உங்கிட்ட இருக்கு..அது கொஞ்சம் கஷ்டப்படுத்தும்..


யோசிக்க வெச்சுட்டாளே.....!!!!


சரி ..சரி..போதும் போதும்னு நான் நகர..ஓட... ஆரம்பிக்க.

picture abhi baaki hai நு..மைக்கு கிடைச்சால் போதும்னு ....

ரொம்ப முக்கியம் ஒண்ணு இருக்கு..


" எங்க generation விஷயங்கள் சில சமயம் உனக்கு புரியாது . ஆனால் நான் explain பண்ணும்போது ,

இந்த generation இப்படித்தான்னு ..you are not judgemental..you try to understand."..

இருப்பது புரிதல்..இல்லாதது திணித்தல்..


காலம் மாற நிறைய புரிதல் அவசியம். 


இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷப்படுவதா...?

இல்லாததை ...இனிமே நமக்கு இல்லைனு நினைக்காமல்..

இருப்பதா..


இது ஒரு சுழல்..


ஆனால் ஒன்றே ஒன்று..எப்பவும் இருக்கும்...இருக்கணும்..


அன்பே எங்கள் உலக தத்துவம்னு....யாதும் ஊரே ..யாவரும் கேளிர்னு..

கலகல..அகிலாவாக இருக்கணும்.


எதுக்கு இந்த ஃபோட்டோனு கேட்கலாம்..

இது பேரு 

#கொழுக்கட்டை_சுண்டல்..

இதுல இருக்கு கொழுக்கட்டை..

Why sundal then?😄😄😄😄

சுண்டலுக்கு கொடுப்பது போல தாளிப்பு கொடுத்ததும்....


அதில் இல்லாதது இருப்பது போல தெரியுதா?..


அம்புட்டுதேன்😄😄😄😄

Madhyamar-december_not_a_dead_end_

 #december_not_a_dead_end_

#a_doorway_to_delight

Hh

டிக் ..டிக் ..டிக்.

ஆஹா..

கடைசி மாதம் காலண்டரில் காண்பிக்க.. 

கடந்து வந்த பாதை ..

குதூகலமும் கடினமும் கலந்து கட்டிய நாட்கள்..


இழந்தது..இணைந்தது ..

இயற்கைச் சீற்றங்கள்..

இப்படி ஒரு mixed menu நம்மோட வாழ்க்கையில்..


எடுத்த சபதங்கள்..எல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டு..


' இந்த இடத்தில் வேற மாதிரி react பண்ணி இருக்கலாமோனு ' நம்மை நாமே நொந்து கொண்ட தருணங்கள்..


அடடே .' நானா ..இது நானா..' என்று சமாளித்த சவால்கள்..


rewind பட்டன் தட்டுவோம்

recollect பண்ணுவோம்

refine ஆகுவோம்

refresh mode ல்

receive பண்ணுவோம்..

வரப் போகும் வருஷத்தை..


so..மக்களே..இன்னும் 30 நாள்தான் இருக்கு..

முப்பது நாளில் மொழி கற்கிறோம்...


Life  எனும் ் language கொஞ்சம் கஷ்டம் தான்.


முயன்றால் முடியாதது இல்லை..


என்ன நான் சொல்றது?

Madhyamar-நானே_நான்_தான்

 #VPKP1

#கதை1

#நானே_நான்_தான் 19-02-229


என் பெயர் நிகிலா..


டாக்டர் நிகிலா.

இன்னிக்கு இந்த புது வரவைக் கையில் ஏந்தியபோது..

' என் குறை தீர்க்க வந்த குட்டிப் பொண்ணேனு"..கண்ணீர் மல்க நிற்கிறேன்.


நான் குட்டியூண்டு பொண்ணா இருக்கும்போதே...

' நீ படிச்சு ..பெரியவளாகி என்ன ஆகப் போறனு ' யார் கேட்டாலும்..

டக்குனு ' டாக்டர்" ஆகப்போறேன்னு தான் சொல்லுவேன்.


இன்ஜினியரும் ,கணக்கரும் மட்டுமே இருக்கும் என் 

குடும்பத்தில் ..டாக்டர் ஆசை உனக்கு எங்கேர்ந்துடி வந்ததுனு அம்மா சத்தம் போடுவாங்க.


' டாக்டரா ..நீயா..ஊசியைப் பார்த்தாலே பயந்து ஓடற ..பயந்தாங்கொள்ளி நீ..டாக்டர் ஆகப் போறாளாம்ல"..கிண்டல் செய்யும் அண்ணனும் தங்கையும்


" அதெல்லாம் சீட்டு கிடைக்கறது குதிரைக் கொம்பு . எம்புட்டு படிக்கணும் தெரியுமா.?..அதுவும் படிச்சிக்கிட்டே இருக்கணும்.அப்போதான் நல்ல பெரிய டாக்டராக முடியும் ..தெரியுமில்ல"..நம்ம கிட்ட அம்புட்டு வசதி எல்லாம் இருக்கா என்ன?'.

துளிர் விடும்போதே..திசை திருப்ப அல்லது வெட்டியே விட்டுடணும்னு துடித்த பெற்றோர்.


பத்தாம் வகுப்பில் நான் தான் அந்த மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்கினேன்.

நீயூஸ் பேப்பருக்கு பேட்டி எல்லாம் கொடுத்தேன்.

டாக்டராகணும்னு ஆசை ..இதையே திருப்பித் திருப்பிச் சொன்னேன்.


ஃபோட்டோவுக்கு சிரித்தாலும்..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் மேலே கொஞ்சம் கோவம் தான்.


இருக்காதா பின்ன?

எங்க அண்ணன் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுத்து..படிச்சு ..இன்னிக்கு பெரிய ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் கை நிறைய சம்பாதிக்கிறான். குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறான்.

' இந்த டாக்டர் படிப்பெல்லாம் நமக்கு சரிப்படாதும்மா..அதுக்கெல்லாம் வழி வழியா குடும்பத்தில் டாக்டர்கள் இருக்கணும்.சொந்த க்ளினிக் இருக்கணும்..நீங்க நினைக்கற மாதிரி இந்த தொழிலில் காலூன்றது சுலபமில்லை'..அப்பா எப்படியாவது என்னை அவர் வழிக்கு இழுக்கப் பார்த்தார்.


அசையலையே நான்.


..தெய்வம் மாதிரி எங்க பள்ளி தலைமை ஆசிரியர் எனக்கு உதவி செய்ய முன் வந்தாங்க..

அவ ஆசைப்பட்டதைப் படிக்கட்டும். நான் முடிஞ்ச அளவு ஸ்காலர்ஷிப் வாங்கித் தரேன்." வாக்கு கொடுத்து ..அதையும் நிறைவேத்தினாங்க.

எங்க அண்ணன் பாவம்..' நீ படி நிகிலா..நான் இருக்கேன் உனக்கு'னு தோள் கொடுத்தான்.


12 ம் வகுப்பு படிக்கும் போதே..நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்தேன் .

கண்ணை மூடினாலே..

ஸ்டெதஸ்கோப்புடன் நான் ஹாஸ்பிட்டலை வளைய வர மாதிரியே இருக்கும்.


அவ்வளவு வெறி இந்தப் படிப்பு மேலே..


அப்பா அம்மாவுக்கும் புரிஞ்சது..நான் சும்மா எதுவும் சொல்லலைனு..


என் உழைப்பு, சுத்தி இருக்கறவங்க கொடுத்த ஊக்கம்..


நல்ல அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்க..என் கனவுப் பயணம் ஆரம்பம்.


எம்.பி.பி.எஸ் என்ற நாலெழுத்து வார்த்தை என் பேருக்குப் பின்னாடி வந்த அன்று..

அப்பாடி..சந்தோஷத்தின் உச்சிக்கே போனேன்.


பகுதி நேர வேலை...மீண்டும் முதுகலை படிப்புக்கு தயார் செய்தேன்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் நான்..இந்த முறை இரண்டாவது நுழைவுத் தேர்வில் தான் வெற்றி பெற்றேன்.


' மகப்பேறு மருத்துவப்" படிப்புக்குள் நுழைந்தேன். படித்தேன் ..முடித்தேன்..

நிறைய பெரிய மருத்துவமனைகளில் எத்தனை எத்தனையோ கேஸ்களைக் கையாண்டேன். ஒவ்வொரு நாளும் பாடம் கற்றேன்.


எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும்   ரொம்ப பெருமை.

"பாரு..எப்படி சாதிச்சுட்டா பாரு"


டாக்டர் பிரதீப்பை மணம் முடித்தேன்.


சொந்தக் கிளினிக் வைத்தோம்.


அங்கே தான் ஆரம்பித்தது..எனக்கு கஷ்டகாலம்.


என்னிடம் சிகிச்சைப் பெற்று..

என் வழி நடத்துதலில் குழந்தை பெற்றுக் கொள்ள வந்தனர் பல பெண்கள்.


கிளினிக் திறந்ததும் வந்த முதல் பிரசவ கேஸ்.


ஆசையாய் இருந்தேன்..

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்த போது..கடைசி நிமிட சிக்கலில் ..ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்து..தாயும் சேயையும் காப்பாற்றினேன் என்ற சந்தோஷம் ஒரு நொடியில் கரைந்தது..


' என்ன டாக்டர்..இப்படி சிஸேரியன் பண்ணிட்டீங்க. நார்மல் டெலிவரி ஆகும்னு சொன்னீங்களே. "


என் பேஷண்ட்டின் பெற்றோரின் அதிருப்தி குரல்.


" சிசேரியன் செஞ்சா ..காசு எக்கச்சக்கமா வரும்ல"..கூட இருந்தவர் சொன்னபோது உடைந்து அழுதேன்.


எப்படி சொல்வது..உயிர்களைக் காப்பாற்ற உள்ளே நடந்த போராட்டத்தை....


என் நேரம் ..அடுத்து வந்த சில  பிரசவங்களும்  சிஸேரியனில் முடிய..

" அந்த ஆஸ்பத்திரி போனால் கண்டிப்பா ஆபரேஷன் தான் செஞ்சுடுவாங்க அந்தம்மானு"..

என் பெயர் எள்ளி நகையாடப் பட்டது.


என் டென்ஷன் பல மடங்காகியது.

என்னோட எண்ணம் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது அல்ல..ஆனால்..ஒரு டாக்டராக ..நான் சமயத்தில் எடுக்கும் முடிவு தான் ..அவர்களுக்கு நல்லது என்று எப்படி புரிய வைப்பேன் .


என் தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது..


இப்படி யோசனையில் இருந்த ஒரு காலை

' டாக்டர்..உள்ளே வரலாமா?"

பரிச்சயமான குரல்..


எல்லா டெஸ்ட்டும் அவள் தாயாகப் போவதை ஊர்தி செய்ய..

என் மனதில் இருந்த கவலை..இதுவும் சிஸேரியன் ஆகிவிட்டால்..


தொண்டையில் நின்ற வார்த்தைகளைச் சேகரித்தேன்.


" இங்க பாரு...என் ஃப்ரண்ட் இப்போ லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தோடு பக்கத்தில் தான் கிளினிக் ஆரம்பிச்சிருக்காள். நான் எழுதித் தரேன் ..நீ அங்கே போய் உன் ட்ரீட்மெண்ட் தொடர்ந்து கொள்"..

நான் என் பேச்சை முடிக்குமுன்..

' எனக்கு அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் எப்போ'?..

கேட்டபடி வெளியேறி விட்டாள்.


அவளுக்கு சில தீவிர  உடல் உபாதைகள் இருந்தது.

என்னால சரி பண்ணிட முடியும். ஆனால்.பாழாய்ப்போன இந்த பயம்..

பழைய நிகிலா எங்கே?..முகம் பார்க்கும் கண்ணாடி கூட என்னைப் பார்த்து கிண்டலடித்தது..

பிரதீப்புக்கும் என்னோட இந்த்ச் மனநிலை கோபத்தைக் கொடுத்தது.


 மாதங்கள் ஓடின.

 ஒரு டாக்டர் நீ...உன்னைதேடி வருபவர்களை நல்ல முறையில் வழிகாட்டுவேன் என்று எடுத்த சபதம் ..மீண்டும் மீண்டும் என்னைத் துளைக்க..

 தூக்கி எறியத் துணிந்தேன் என் தேவையில்லா பயத்தை.


சரியான ஆலோசனைகள் கொடுத்தேன்.


 அவளுக்கு எப்படியும் ஆபரேஷன் தான் செய்ய வேண்டி இருக்கும் என சக மருத்துவர்கள்  அபிப்ப்ராயப் பட்டனர்.


தலை தூக்கிய பயத்தை 

தட்டி விரட்டினேன்.

 

 ஊர் பேசினால் பேசட்டும்.

 எனக்குத் தெரியும் ..ஒரு உயிரல்ல..உயிர்களின் உன்னதம்.

அந்த நேரத்தில் எது சரியோ ..அதைச் செய்வேன் என்று உறுதியெடுத்தேன்.


என் பழைய உற்சாகத்தைப் பார்த்து..பிரதீப்புக்கும் ஆச்சரியம்.


இதோ..இன்று காலை.

கிளினிக் கிளம்பிய போது..மொபைல் சிணுங்கியது.


" டாக்டர்..சீக்கிரம் வாங்க'..


ஓடினேன்.


எல்லாம் ரெடியாக காத்திருக்க..


அவன் மேல் பாரத்தைப் போட்டு என் கடமையைத் துவக்கினேன்.


அரை மணிப் போராட்டத்துக்குப் பின் ..


ஆபரேஷனுக்கு தேவையே இல்லாமல்..

தேவதை வெளியே வந்தாள்..

நார்மல் டெலிவரியில் ...


அழுகைச் சத்தம்..ஆஸ்பத்திரியை கலக்க..

உன்னைக் கையில் தாங்கிய நேரம்...

" நார்மலி டெலிவரி..நார்மல் டெலிவரி'..


என் கிளினிக் கொண்டாடியது.


இனியெலாம் சுகமே..சுகப் பிரசவமே'..


நர்ஸ் ஒருத்தி பாடிக் கொண்டாடினாள்.


ஆனால்..நானோ..


என்ன ஆனாலும்.. ஒரு மருத்துவராக 

என்னைத் தேடி வருபவருக்கு எது சரியோ . அதை மட்டுமே செய்வேன் என்ற திண்ணத்துடன்..


டாக்டர் நிகிலாவாகிய நான்.


PC: Govindaraj Lakshminarayanan sir

Madhyamar-அன்பே_எங்கள_உலக_தத்துவம்

 #ஸண்டே_ஸ்பெஷல் (14-02-21)

#அன்பே_எங்கள_உலக_தத்துவம் 


*சாப்பிட்டியா நீ என்று கேட்கும்போது காதலை விட கரிசனம் இருக்கும்.👌👌👌👌


*பசங்க ஸ்கூல்லேர்ந்து இன்னும் வரலையானு கேட்கும்போது கண்டிப்போட  கவலை இருக்கும்...


*புடவை கடைக்கு கூட்டிப் போய் ' உனக்கு பிடிச்ச பத்து முதல்ல செலக்ட் பண்ணு..அதிலிருந்து ஒன்று எடுத்துக்கோ என்று வாய் சொல்லிவிட்டு பக்கத்து கவுண்டரில் தனக்கு பிடித்த கலரை நாலு தடவை உற்று பார்த்துவிட்டு..' இதை எடுத்துக்கோயேன்' என்று வாய் விட்டு சொல்லாத வாத்ஸல்யம்.

( பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் இந்த expression புரிஞ்சது)


*சாப்பாடு வாயில் போடும் முன்னே சூப்பரா இருக்கு என்று சொல்லும் சொக்கத் தங்கம்.

( பின்ன..அடுத்த வேளை half boiled தட்டுல விழுமே)💪💪💪💪


*நீ போய்ட்டு வா.நான் இருக்கேன் இங்கனு சைக்கிள் கேப்பிலும் சுதந்திரம் தேடும் ஜீவன்.😄😄😄😄


*மெயில் அடிச்சாலும் சரி ,மெசேஜ் செஞ்சாலும் தன் மனைவி கண்டிப்பாக பார்க்க மாட்டாள்னு தெரிஞ்சும் விடா முயற்சி விக்கிரமாதித்தர்கள்

( எத்தனை group ல இருக்கோம்..எத்தனை போஸ்ட் போடணும் நமக்கு)😄😄😄


*valentine day க்கு gift என்னன்னு கேட்டால் ..என் "wallet "மட்டுமல்ல என் " வாழ்க்கையும்' உன் கையில் தானே இருக்குனு கவி பாடும் திறமை.💕💕💕


*ஊர் வம்பு சொல்லும்போது தலையை தலையை ஆட்டி கேட்டுபுட்டு நாம கேள்வி கேக்கும்போது 'இப்ப யாரைப் பத்தி சொன்னே' என்று பல்பு கொடுக்கும் (life) partner கள்..💡💡💡💡💡


உஸ் ..அப்பா...என்னால் முடிஞ்சதை சொல்லிட்டேன்.


அன்பே எங்கள் உலக தத்துவம்..

அன்பும் புரிதலும் இருக்க..

வருடம் பூராவும் valentine day தான்..


ஆனா..நமக்கு..#வம்பிழுக்கும்_day தான் எப்போதும்..

உண்மையை சொல்லிப் போட்டேனுங்க😄😄😄


இந்த பாட்டை key board ல வாசிச்சு ..அசத்திப்புட்டாரே மனுஷன்😄😄😄