Thursday, February 25, 2016

வாக்கிங்..


வாக்கிங்..
 

சாயங்கால வேளையிலே

சற்று பருமன் குறைத்திடவே

சாலையோர பூங்காவுக்கு

செல்லோடு சென்றேனே..
 

 நடை பாதை வழியிலே

நாயும் ஒன்று படுத்திருக்க

நடுங்கியே நானும் நிற்க

நல்ல மன நாயும் எழுந்து

வாலாட்டி உடல் முறுக்கி

வேறு இடம் போனதப்பா..
 

 ஊஞ்சல் ஆடும் இடத்திலே

ஊர்க் குழந்தைகள் வரிசை

 
கிழவரெலாம்் ஒன்று கூடி

கும்மாளம் கொண்டாட்டம்…
 

 கணினியும் கையுமாக

கண்துஞ்சா கூட்டமொன்று…
 

மாமியும் மருமகளும்

மனமொத்து பரிமாறல்கள்…

 
பேத்தியோடு பாட்டியும்

பேண வந்தாள் தன்னுடம்பை..
 

 இருட்டில் இடம் தேடி

இளவட்டச் சிணுங்கல்கள்…

முகம் மூடி முக்காடிட்டு

முத்திப்போன காதலர்கள்

முறைதவறும் தருணங்கள்..

 

இளையராஜா இசை கேட்டு

இன்னும் ஒரு ரவுண்டடிக்க

இந்த மனமும் ஏங்கிடவே

இல்லத்தி லிருந்து போன்கால்…

இட்டிலி செய்ய நீயும்

இப்பவே வரியா என்று…!!!!!!!!

வேகமாக ஒடறேன் இப்பொ

வேக வைக்க இட்டிலியும்

வெங்காயச் சட்னி அரைக்க..