Saturday, November 30, 2019

மாற்றம்

Starting a morning with a positive note..nothing is impossible or unreachable ..
Thanks my friend

டைலர் காலில் விழுந்தவனெல்லாம்..
Reid and Taylor உடுத்துகிறான்..
ரெடிமேட் பேரே அறியாதவனோ..
Raymond சட்டையில் உலவுகிறான்..
காக்கித் துணி சட்டை விட்டு..
colorplus ஆல் வண்ணமறிகின்றான்..
ஒட்டி தைத்து போட்டவனெல்லாம்..
Otto வுக்கு ஓட்டுபோடறான்..
புள்ளி போட்ட ரவிக்ககாரி..
புளியம்பு சேலைகாரிகளோ..
போத்தீஸும்..நல்லியும்..
போகாத நாளில்லை..
காஞ்சிப் பட்டுடுத்திய தேவதைகள்..
கோரா சில்க்குக்கு மாறியாச்சு..
ஆயிரம் யோசனை..
அதுவா..இதுவா..எதுவென்றே..
அள்ளி குமிஞ்ச அலமாரியுமே..
அழாத குறையில்..அறைக்குள்ளே..
படிப்பும் உழைப்பும் உயர்ந்த்தனால்
பழைய வாழ்வு ஒழிந்ததுவே..
உலகமயமாக்கல்....கொள்கையொன்று
உபகாரமாய்..
உபகரணமாய்..
உலகம் புதிதை உணர்த்தியதே..
நிலையில்லா வாழ்வினிலே..
நினைத்தும்் பாராதது நிகழ்கையிலே..
நாமும்..கொஞ்சம் ..
நம் மனம் போல் வாழ்வோமே

முடக்கத்தான்

#morning_with_முடக்கத்தான்
காலிங் பெல் சத்தம். காலங்கார்த்தால யார் என்று கதவை திறக்க..கையில் கவருடன் காய்கறிக்காரம்மா..

"என்ன aunty நு கேட்பதற்குள்.." இந்தா புடி..கால் வலி..கால் வலினு சொல்லுவியே கிராமத்திலேர்ந்து நேத்து கொண்டாந்தேன் இந்த முடக்கத்தான் கீரை.
கொஞ்சம் நீ லேட்டாக்கினா கூட அல்லாம் வித்து பூடும்.. அதான் வந்து கொடுத்துடலாம்நு'.

அம்பாள் பெயர் கொண்ட அன்பு இவளோ?
அவர்களுக்கு என்ன அவசியம் எனக்கு வந்து கொடுக்கணும்னு?

அன்பு..நம்ம சுற்றம் நட்புகள் அள்ளி வழங்கினாலும்..இது எனக்கு பெரிய bonus booster அன்(ம்)பு.

எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் குறையாத ஒன்று இந்த அன்பே.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
 அதை லாக்கரில் பூட்டி வைத்து ..அழகு பார்க்காமல்..அள்ளி வீசுங்க..

 அப்புறம் பாருங்க.. .மனசு எப்போதுமே துள்ளி குதிச்சு விளையாட weight less ஆ இருக்கும்.

'ரா..ஜி..பாட்..டீ.. என்று கூவியபடி எங்க அபார்ட்மெண்ட் குழந்தை அவளைத் தேடி ஓடும் அர்த்தம்..எனக்குப் புரிந்தது. உங்களுக்கு?

மத்தாப்பு புன்னகையுடன் முடக்கத்தான் நோக்கி நான்..
முடக்கத்தான் ..அன்பையும் முடங்காமல் இருக்கச் செய்யட்டும்.
அன்புடன்
அகிலானந்தமயி😝

Thursday, November 28, 2019

காலை வேளை

Good morning🤗🌞msg from my friend.,

Health  wealth and wisdom come to those who embrace the morning and make full use of it!

Correct தானே..
So..
காஃபி குடிங்க..
கைப்பேசியை கடாசுங்க
காலாற நடங்க..
காய்கறியும் வாங்குங்க..
கம கமனு சமைச்சு..
குடும்பத்தோடு சாப்பிடுங்க..

கலகலப்பா இருங்க..
கெட்ட எண்ணம் விலக்குங்க..
காசு பணம் வரும் போகும்..இந்த்க
காலை திரும்பி வருமா..
யோசியுங்க..யோசியுங்க..
அன்புடன்
அகிலானந்தமயி😀😝

Thursday, November 21, 2019

வேண்டும் வேண்டும்

வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..

இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..

கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..
ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)

தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.

படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..

மழையோ குளிரோ..fan சுத்தணும்..

உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.

பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.

செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..
என்கூட என் காமெராவும் இருக்கணும்..

வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..

முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..

லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..

உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Tuesday, November 19, 2019

தேன்மொழி

எச to Saraswathi Gayathri

தேன்மொழி
ஒல்லியா தெரியற என்றால்..
உச்சி குளிர்வாளே
கொஞ்சம் சதை போட்டியோ என்றால்..
நெஞ்சும் சுருங்கிப் போவாளே..
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு..
எதுத்த வீட்டு் அம்மாவை நினைப்பாள்..
உபாதைகளை ..
ஊருக்கெல்லாம் சொல்வாள்..
google செய்தே
cancer எனக்கில்லையே என்று..
கலங்கியும் போவாளே..
argue செய்வாள்..
அடங்கியும் போவாள்

harmony கெடுக்கும்..இந்த
hormone வேலையை..
மாத்திரை மருந்தோடு..கொஞ்சம்..
மன உறுதியும் சேர்த்துக் கொள்வோம்..
அசுரர் இவரை வெல்ல..
ஆயுதம்..இது ஒன்றே..

Happy men's day

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
அதிசயமா..
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
 தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க..

Sunday, November 17, 2019

What's in store

வெள்ள நீரது
வீதியெலாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை..
what's in store?..
quotes கூட தோணுமோ
queue வில் நிற்கும்போது..!!!

வீரபாண்டிய கட்டபொம்மன் style.

வீரபாண்டிய கட்டபொம்மன் style..

ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..

சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..

Thursday, November 14, 2019

Children's day

Myclik @ mullandiram.. A small village with big hopes..
Happy children's day

போட்டோ புடி என்னை'
பொங்கும் ஆசையில்..என்
பின்னே வந்தாள்.
பிரகாரம் சுற்றினாள்.

நில்லென்றேன்..நின்றாள்..
சிரியென்றேன் சிரித்தாள்..
நல்லா வருமா..என்றாள்
நண்பர்களும் சேர்த்தாள்.

உடுத்திய சீருடை..
உணரவைத்தது..
உள்ளூர் பள்ளியில்
ஒண்ணாம் வகுப்பென்று

வீடெது என்றேன்..
விரல் நீட்டி காட்டினாள்
கோயில் கோபுரம் முன்
குடிசை எனதென்றாள்..

பெயர் கேட்டேன்..
பூரிப்புடன்..
பிரியா..
விஷ்ணுப் பிரியா என்றாள்.

விலாசமிலா ..இவ்
விண்மீன்கள்..
விண்ணை எட்டட்டும்..
வெற்றி வாகை சூடட்டும்..

அடுத்த முறை போகணும்..
அவளிடம் கொடுக்கணும்..
அவளின் முக மலர்ச்சியை..
அழகா படம் பிடிக்கோணும்..

பட்டது மனதில்..
பளிச்சென்று உண்மை
படிக்கும் இவளோ..
படு அதிர்ஷ்ட்டக்காரியென்று

விட்டேன் ஊரை..
வழியில் கண்டேன்..
வழி பிறக்கா
வாண்டுகளை..

மாறுமெப்போ இந்நிலை..

பூ ..கட்டும்.. பூக்கள்
பூமி ஆளட்டும்..
பாத்திரம் விளக்கும்..
பிஞ்சுக் கரங்கள்..
பாரை வெல்லட்டும்..

தம்பியை தாலாட்டும்..
தளிர்கள் பலவும்..
தடையை உடைக்கட்டும்..
தரணி ஆளட்டும்..

கூலிக்காக..
பள்ளி மிதிக்கா..
பாலகரும்..
காலணி துடைக்கும்..
கறுத்த கரங்களும்
காவியம் படைக்கட்டும்

சின்ன பசங்களெல்லாம்
சிறை உடைக்கட்டும்..
சிட்டாய்ப் பறக்கட்டும்
சீறாய் வாழட்டும்..

நமக்கும் பங்குண்டு..
நல்லதை செய்வோமே..
நாலு காசு தருவதை விட்டு
நம் நேரமதை தருவோமே..
நல்ல சமுதாயம் படைப்போமே..

Wednesday, November 13, 2019

நான் கண்ட பாரதம்....(நேற்று)

நான் கண்ட பாரதம்....(நேற்று)

மூணு நூறு ரூபாய் கையில்.
மூக்கைப் பிடிக்க சாப்பிட ஆசை..
உணவகம் நுழைந்தேன்..
உவகையாய் உண்டேன் ..
சர்வர் வந்தார் பில் கொண்டு..
கர்வமாய் நீட்டினேன் கார்டையுமே..
சர்வர் டவுனு...சொறிந்தார் தலை..
சரியாப் போச்சு.. சங்கடத்தில் நான்..
இருப்பதைக் கொடுத்தால்..
இன்னிக்கு வீடு சேரமுடியாதே..
இக்கட்டில் சிக்கிய நேரம்..
இளையராஜா பாட்டு.
எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்
என் மனதில் ஓட..
சகஜமாய் சொன்னார்..
சரி சரி ..நளைக்குத் தாங்க..
மனுசனுக்கு மனுசன்
உதவலனா எப்படி என்றே..

கடன் உறவை முறிக்கும்
கடையில் மாட்டிய போர்டு..
கண்சிமிட்டியது..
என்னைப் பார்த்து..

Sunday, November 10, 2019

Kindergarten to college

kindergarten முதல் college வரை
( கல்லறை வரையும் கூட)

டீல் தான் எப்பவும் லைஃப்ல..ஸ்கூல் அட்மிஷனுக்கு சுக்லாம்பரதரம் போட்ட நேரம். வீட்டுக்காரர் கிட்ட 'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி கண்டிஷனுடன்..' capitals to capitation fee வரை உங்க syllabus. கரோல் பாக்..கத்திரிக்காய் எல்லாம் என்னோடுதுனு பாகம் பிரிச்சாச்சு.
நடுக்கத்தோடு பிரின்சிபால் ரூம் கதவை தட்ட..ரம்பம்பம் .ஆரம்பம்..ரம்பம்பம் ..பேரின்பம் ..intro எல்லாம் முடிஞ்சது..பக்கத்திலிருந்த coordinator ஐ பார்த்தபடி principal ' கேள்விகளை நீ கேட்கிறாயா..நானே கேட்கட்டுமா என்ற தொனியில்..
தொண்டையில் கிச் கிச் கணைத்தபடி  coordinator என் கணவரைப் பார்த்தபடி being an engineer we hope that you will help your daughter in her studies. வேகமா அவர் மண்டையாட்ட..கேள்விகள் இப்போ என்னை குறி வைத்து..
' உங்களுக்கு பாடத் தெரியுமா..ஆடத் தெரியுமா..(rhymes சொல்லி கொடுக்க)
கதை சொல்லத் தெரியுமா..
copy, paste தெரியுமா..கட் பண்ணி ஒட்டத் தெரியுமா..collage தெரியுமா..
வீட்டில  magazines வாங்கறீங்களா..அதுல வர அட்வெர்டைஸ்மெண்ட் எல்லாம் collect பண்ணி வெச்சிருக்கீங்களா..see we want creativity in every project we do.
well..
ஆலாய்ப் பறந்த அட்மிஷன் அல்வா மாதிரி கிடைக்க..
welcome to our ________ group of institutions. these years are going to be very crucial for  your child ...coordinator கை குலுக்குவார்.
இதே கதை தான் ஒவ்வொரு ஊர்..ஒவ்வொரு கிளாஸும் மாறும் போது..these years are going to be very crucial in your child's life.
middle school வந்தபோதும்..மீண்டும் orientation. mike பிடித்த madam கள் மழையாய்  advice. அம்மாக்களின் மொழி அறிவு பெருகும் நேரம். கதை, கவிதை, கட்டுரை ( எங்கே போனாலும் ஹிந்தி இங்கிலீஷ்  புஸ்கதம் வாங்கி அடுக்கப்படும்). science project ..பல்பு மாட்டி respiratory system, nervous system எல்லாம் செய்யணும்..இருக்கும் அறிவு பத்தாத நிலையில் விலை கொடுத்து சந்து பொந்து தேடி project ready made ஆ விற்பவர் காலில் விழுந்து வாங்கினால் internal லில் அரை மார்க் கூடும். அடுத்த ஊர் அடுத்த ஸ்கூல்..அதே welcome address.. இன்னும் கொஞ்சம் extra பயமுறுத்தலுடன்.ரிசல்ட் ரொம்ப முக்கியம். hardஆ hard work பண்ணனும்.கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், quilt லிருந்து வெளிவரா முடியா குளிரிலும்...குழந்தைகள் படிப்பு.
அப்பாடா..ஒரு வழியா.இப்போ இறுதி கட்டத்துக்கு வந்தேன்..அதான் காலேஜ்க்கு..
அதே பல்லவி,சரணம்..இன்னும் improvised version. ' we prepare the students to face corporate pressures'
இது என்னடா...இந்த அம்மாவுக்கு வந்த சோதனை..
படுக்கை தட்டி தூங்கபோகும் போது..டொக் டொக்னு மெசேஜ் மழை பெண்ணின் வாட்சப்பில் பொழியும்..தூங்காத விழிகள் நாலாய் நாங்க மாறணும்..
விடியறதுக்குள்ள ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பேர் சூட்டி, பொருளை வித்து, profit காண்பிச்சு, மார்க்கெட் சர்வே எடுத்து..competitor strategy analyse பண்ணி, மாத்திரை போட்டுக்க போகும் அப்பாவை , மைக் பிடிச்சு இண்டெர்வியூ பண்றம மாதிரி ஃபோட்டோவும் எடுத்து...audio ,video எல்லாம் ஒட்டி ஒரு ppt பண்ணி printout எடுக்க 'போயேப் போச்சு தூக்கம்..நான் கிளாஸில் தூங்கிக்கறேன்மா என்று..app ல் எடுக்கும் attendance ..ஆப்பு அடிக்குமுன் அவள் ஓட..
ஆறிப்போன காபி டம்ளருடன்..இப்படித்தான்...நம்ம வாழ்க்கை..this is going to be a crucial phase என்று..present ஐ அனுபவிக்க நேரமுன்றி..எதிர்காலத்த்தை நோக்கி எகிறிப் பாய்ந்தபடி.
ஜன்னல் திறக்கிறேன்..வேலைக்கு போகும் தன் மகனை ஆதரவாய் தலையை கோதியபடி..' இப்ப ஓடாம எப்படா ' என்றபடி இன்னோரு அம்மா..

Saturday, November 9, 2019

விலைவாசி

 காய்கறிக் காரம்மா..
ரொம்ப கறாரு தானம்மா.
காசெல்லாம்  வேண்டாம்..
கணக்கு வெச்சிக்கறேன்..
காசோலையா கொடுத்திடு..
கரீட்டா..ஆமாம். ..என்றாள்..

மருந்து கடைக்காரரோ
இருக்கு இன்னும் ரெண்டு நாளு..
இருக்கற ஐநூறு ஆயிரத்தில்
இங்க மருந்தும்..சோப்பும் வாங்கென்றார்..

தையல் காரரோ..
துணி இங்கே இருக்கட்டும்..
பணத்தோட வாங்க என்றார்...

ஊரைச் சுத்திட்டு..
நிலவரம் தெரிஞ்சிண்டு..
வீட்டுக்குள் நுழைய..
வந்தாள் ..
வேலைசெய்யும் லஷ்மியுமே...
ஐநூறும் ஆயிரமும்..
யாரிடமும் வாங்காதே..
செல்லாது இப்போ ...
சொன்ன நேரம்..
சிரித்தபடி சொன்னாள்..
வாங்குற சம்பளம் ..
அட்வான்ஸ் ல கழிஞ்சாச்சு..
எட்டணா கையில் இல்லை..
எங்கிட்டு போவேன்..
ஆயிரமும் ஐநூறும்..

வைத்திருப்பவருக்கு தானே..
வயிறு கலங்கும்..

Thursday, November 7, 2019

Happy birthday kamal

கமல்..கமல்..கமல்
கள்ளமில்லா..களத்தூர்
கண்ணம்மா கமல்
குதப்பும் வெத்தலையுடன்
சப்பாணி கமல்

இளமை ஊஞ்சலாடி
நினைத்தாலே இனிக்கும்
பஞ்ச தந்திரம் அறியா
பம்மல் கே சம்பந்தம் ' கமல்'

மூக்கை சுருக்கும்
மீண்டும் கோகிலா கமல்..

சலங்கை ஒலி கமல்
சகலகலா வல்ல கமல்

வேலு நாயக்கர் கமல்
வசூல் ராஜா கமல்

மூன்றாம் பிறை கமல்
மகாநதிக் கமல்

புஷ்பக் கமல்
புன்னகை மன்னன் கமல்

காக்கிச் சட்டை கமல்
காதலா காதலா கமல்

அவ்வை சண்முகி கமல்
அன்பே சிவம் கமல்..

சிப்பிக்குள் முத்து கமல்
சிங்கார வேலன் கமல்

நம்மவர் கமல்..
நீயா..கமல் இது..?

'ஆள வந்தான்' மட்டும்
அப்போதே பிடிக்கலை..
இப்பவும் அதே கதைதான்
அப்பு ராஜாவுக்கே
இப்போதும் என் வோட்டு.

Wednesday, November 6, 2019

Happy diwali

happy diwali.
புள்ளிகள் ஒன்றில்லாமலே
'பா'ட்டில் மூடியும்..
பெயிண்ட் ப்ரஷின் முனையுடன்
புதுமையான கோலம்.

'you too can do ' என்று
YouTube உறுதியளிக்க..
உருவான சின்னகோலம்.

வண்ணங்கள் விளையாட
வெடிச்சத்தம் வான் பிளக்க
வந்தது தீபாவளி..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Monday, November 4, 2019

பக்கோடா..bond..

பக்கோடா..bond..

 அன்புள்ள சிங்காரச் சென்னை தோழமைகளே..
இந்த அடை மழைக்கு உங்கள் எல்லாருக்கும் ஒரு செட் பூரி் மசால் என் கிச்சனிலிருந்து..

ஆனால் மழைக்கு உகந்தது..  பக்கோடாதான் பண்ணி சாப்பிட்டு..பேஷா இருங்கோ..

தொப்பலா நனைஞ்சு, ஏழு கடல் ஏழு குழி தாண்டி வீட்டுக்குள் நுழையும்போது இழுக்கணுமே..ஆனியன் பக்கோடா வாசனையும் இஞ்சியும் ஏலமும் போட்ட டீயும்.
யார் முதல்ல வீட்டுக்குள் நுழையறாளோ அவர்கள் ட்யூட்டி ...கணவர் entry முதல்ல என்றால் கடலை மாவும் , கட் பண்ணி வெங்காயமும் போட்டு கமகமனு கைவண்ணம் காட்ட வேண்டியது தலையாய கடமை...மழையில் நனைந்து( நீந்தி) வரும் மனைவிக்கும் மகன்(ள்) க்கும் பக்கோடா நீட்ட...bond கெட்டியாகும். பக்கத்து வீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் பதமா எடுத்து கொண்டு போய்  கொடுக்கலாம்.

முதுமை நமக்கும் வரும்..மொறுமொறு சாப்பிட முடியாம போகும்..ஆனா மெல்லறதுக்கு இருக்கும் இந்த பக்கோடா நினைவுகள்..
அப்படியே..ஒரு பாட்டும் பாடிக்கலாம்.

அன்றொரு  நாள் .அதே மழையில்.
அவள் (ர்) இருந்தாள் என் அருகில்..நான்
அடைக்கலம் அடைந்தேன்..
ஆனியன் பக்கோடாவில்..
நீ அறிவாயே..,அடைமழையே

பக்கோடா பந்தம்..என்றும் நிலையானது..