Thursday, June 24, 2021

காட்டு மல்லி...

 காட்டு மல்லி...

கடுகளவும் கசப்பில்லை..

கடவுள் தந்த வாழ்வுக்கு..


ஆஹா..மல்லி..

அருகே வருவார்..

ஐயே..காட்டுமல்லி..

அகன்று போவார்..


மணமணக்கும் மல்லியாய்..

மண்ணில் பிறக்கலையே..

மருகியதே இல்லை..

குண்டும்..ஜாதியும்.

கூறும் குறைகேட்டு..


மொட்டிலே கிள்ளி ..

மருந்தும் அடித்துவிட்டு..

மூட்டையாய்க் கட்டி..

மூச்சு திணற..

மோட்டரில் ஏற்றி..

மார்க்கெட் டுக்குப் போய்

கூடையிலே கொட்டி

கூறு போட்டு

கூவிக் கூவி வித்து..

பேரம் பேசி..

அய்யோ சாமி..


இன்று இதன் வாசம்..

கல்யாணத்திலா..

கருமாதியிலா..

குரங்கு கைப் பூமாலையாய்..

குமுறும் வாழ்வு..


காட்டு மல்லியே..

கடவுளால் இரட்சிக்கப்பட்டவன்..

நீ... என்றது ..

கனத்த மன(ண)த்துடன்..

swachh bharath

 swachh bharath


வாசல் விட்டு இறங்கியதும்

வரவேற்குமே..

வாரி அள்ளப்படாத குப்பைகள்.


கண்ணும் முக்கும் மூடியிங்கே

கடப்போம் கண்டு கொள்ளாமலே..


காரிலிருந்து வீசி எறிவார்..

காரிருளில் வந்தும் வீசிடுவார்..

காய்கறிக் காரம்மாவும் வீசிடுவார்.

குவியும் போராய் குப்பையுமே


குப்பை மேடு கோபுரமாகும்

கொஞ்சிக் குலாவும் நாயுமங்கே.


பக்கத்தில் பானி பூரிக்கடை

பறக்கும் ஈயும் கொசுவும்.

பிழிந்த பழங்களும் தோலுமங்கே

பசியாற்றுமே பல உயிருக்கங்கே..


எட்டிப் பார்ப்பாரே எலியாரும்

என் பங்கு எங்கேயென்றே..


பச்சை சிவப்பு டப்பாவென்றே

பிரிக்கச் சொல்லி சட்டமுண்டு

நேரம் ஏது இத்ற்கென்றே

நியதிகள் உடையும் சாபமிங்கே..


garden city அன்று

garbage city அல்லவோ இன்று.


swachh bharath திட்டமெல்லாம்

சரிப் படாது நமக்கென்று

சுத்தமா என் வீடிருக்க..

சுத்தி எப்படி இருந்தாலென்னெ?


நாடும் வீடும் ஒன்றென்ற

நல்ல சிந்தனை பிறக்கணுமே

நானென்ன செய்ய முடியுமென்று

நாமும் தப்பித்து ஓடாமல்..

நம்மால் முடிந்ததை செய்வோமென்று

நல்ல நினைவும் செய்கையுமே

நல்ல பாதை காட்டிடுமே.

Tuesday, June 22, 2021

குட்டிக்கதை- போதனை

 போதனை..


ஈஸிச்சேரில் படுத்தபடி மோட்டுவளையை பார்த்துண்டே அப்படி என்ன யோசனைப்பா உங்களுக்கு? கேட்டபடி வந்தான் கிட்டு. லாப்ட்டாப் பையை பவ்யமா வைத்தபடி ,'சொல்லுங்கோப்பா ..

இன்னிக்கு பொழுது எப்படி போச்சு. வாக்கிங் போனேளா? புஸ்தகம் படிச்சேளா? கொஞ்ச நேரமாவது Casio வாசிச்சேளா?அந்த பழைய பாட்டோட ஸ்வரம் printout எடுத்துக் கொடுத்தேனே.. பழகினேளா..ஈஸியா இருந்ததா? வயிறு எதுவும் தொல்லையில்லையே? மாத்திரை ஒழுங்கா போட்டுண்டேளா?

அடுக்கிக் கொண்டே போனான்..அந்தப் பக்கத்திலேர்ந்து பதிலே இல்லை.. 'என்னப்பா..என்னதான் ஆச்சு.. சொன்னாதானே தெரியும்.'.பொறுமை எல்லை மீறும் வேளையில் வாய் திறந்தார் அப்பா..' எனக்கு எதுக்கும் இன்னிக்கு மூட் இல்ல' ஒரே வரியில் கிட்டுவின் வாய் அடைத்தார்.

ஒரு வாரமா இதே கதை தான். 'அப்பா என்னாச்சு உங்களுக்கு..உன்னை விட பெரிப்பா எத்தனை பெரியவர் . ஸ்டிக் வெச்சுண்டு எல்லா எடத்துக்கும் தானே போய்ட்டு வரார். அத்தைய பாரு..எல்லா வீட்டு வேலையும் தானே செய்யறா..கீழாத்து மாமா ..மாமிக்கு எல்லா வேலையும் அவர் தான் செஞ்சு தரார். இப்படியே ஈஸி சேரில் உட்கார்ந்தா நீ டல்லா தான் இருப்பே..you should make an effort to move from the comfort zone. அப்ப்போ இந்த வேண்டாத சிந்தனையெல்லாம் வரவே வராது'. பிரசங்கம் பண்ணி முடிச்சு ஆபீஸ் வேலையைத் தொடர உள்ளே போனான் கிட்டு. 'எனக்கும் வயசாகறது டா..முன்னாடி மாதிரி ஒரு தைரியம் இல்ல' ..தொண்டைக் குழியில் நின்றது வார்த்தைகள் ..

தொடர்ந்தது அவர் மோட்டுவளைப் பயணம்..அதில் தெரிந்தது ் flash back . 'கண்ணா..ராஜா..பக்கத்தாத்து ராமுவைப் பாருடா..எப்பவுமே அவன் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அதோ ..அந்த முக்கு வீட்டுல முனிசிபல் ஆபீஸர் பைய்யன் என்னமா பாடறான்..படிப்பிலயும் கெட்டியாம் அவன். அதெல்லாம் வுடு உன் அண்ணாவைப் பாரு ஆத்து வேலையிலும் கூட மாட ஒத்தாசை பண்ணிண்டு எல்லா பொறுப்பையும் எடுத்துக்கறான் பாரு' .. சுகவாசியா இப்படியே இருக்க முடியாதுடா..'.. black and white  படம் ஓட..கூடவே திரண்டு வந்தது அவர் கண்ணில் நீரும்.

நடத்திய பாடங்கள் ..நமக்கே திருப்பி வருதோ..இனிமே..no மோட்டுவளை..

வேகமாக ஈஸிச் சேரை மடித்தபடி..மருமகளுக்கு குரல் கொடுத்தார்..'அம்மா..பக்கத்து கடையில் என்னமோ வாங்கணும்னு சொன்னியே..நான் போய் வாங்கிண்டு வரேன்'. விறு விறு நடையில் நடையில் அவர் செல்ல..வாயைப் பிளந்து ஆச்சரியத்தில் ' என்னண்ணா..இங்கே வாங்கோளேன் சீக்கிரம்'..அவள் குரல் .

காலை நேர ராகமே

 காலை நேர ராகமே..


கோயில் மணி யோசை..

குயில்களின் குக்கூ..


பூவெல்லாம் ..கேட்டுப்பார் என் விலை

என்று பெருமையில்..


மூட்டையிலிருந்து  விடுதலை மூச்சு விட  ..

உருண்டோடிய உருளையும் கோஸும்.

களை கட்டிய.. காலை மார்க்கெட்.


அருகம்புல்லும்  அலோவேராவும் 

அதிகாலைப் பானமாய்..பாண்டத்தில்

முளை கட்டிய பயறு

மும்முரமாய் வியாபாரம்.


ஓலாவும் ஊபரும்..ஒட்டமாய் ஓட்டம்.

கம்பெனி பஸ்ஸுக்கு காத்திருக்கும் கூட்டம்.

காண்ட்ராக்டர் வேலை தருவாரா என

கவலையுடன் தினக் கூலி ஆட்கள்.


ப்ராஜக்ட் ..PTA .

படு கவலையில் அம்மாக்கள்

வண்டியில் பசங்களை இறக்கிவிட்டு

வெயிட்டைக் குறைக்க.

ஜாகிங் போறேன்னு 

ஜகா வாங்கும் அப்பாக்கள்


அம்பது ரூபாய்க்கு பூ வாங்கின பின்னும்

அடுத்த வீட்டு காம்பவுண்டிலிருந்து

அலாக்காய் பறிக்கும் செம்பருத்தி

அம்பாளுக்கு உகந்ததென்று

அசட்டுச் சிரிப்புடன் ..மாமி.


இதெல்லாம் எப்போதும் தானே..

இழுத்து நிறுத்தியது ஒரு காட்சி.


' அங்கே சரியா குப்பையை பெருக்குங்க'

வாக்கருடன்..வயது முதிர்ந்த பாட்டி

அவர் ஆணைப்படி ..

' சொல்லு வேற எங்க குப்பை இருக்குனு '

சுவற்றைப் பிடித்தபடி..வாசலை

சுத்தம் செய்த தாத்தா..


ஒவ்வொரு விடியலும் ஒரு சேதி தரும்.

இன்று ஒரு சேதி எனக்கு கிடைத்தது..

உங்களுக்கு?

( வேலைக்கு ஏன் ஆள் வெச்சுக்கலை..இந்த கேள்வி மனசில் எழுந்தாலும்..இதில் அவர்களுக்கு ஒரு திருப்தி கிடைப்பது.வேறு எங்கு கிடைக்கும்)

Sunday, June 20, 2021

Instant_wheat_halwa

 #Dish_covery

நாமளே யோசிச்சு..ஒரு டிஷ் செய்து..அது சூப்பர் ஹிட்டானால்..கிடைக்கிற குஷி இருக்கே..aahaa.💪😋


#Instant_wheat_halwa


ஹல்வாவுக்கே..ஹல்வா குடுப்போமே நாங்க..


அன்று..

அல்வா கிண்டுவாள் அம்மாவும்

அஞ்சு மணி நேரம் கை விடாமல்..

அவள் பெண் அகிலாவோ..

அஞ்சு நிமிஷத்தில் ..

அசத்திடுவாளே😃


அப்பாவுக்காக வறுத்தேன்

அபாரமாக கஞ்சி மாவு..


கோதுமையை வறுத்து ..பொடிக்க..

கம கமனு வாசனை..

மாவை சலித்துக்கணும்..


1 டம்ளர் கோதுமைப் பொடி

One and half  டம்ளர் சக்கரை

1/4 டம்ளர் நெய்...( if you want add extra )


நெய்யில் கோதுமைப் பவுடரை வறுத்தேன்..

சக்கரையும் சேர்த்து பிரட்டி தனியாக வைத்தேன்

Boiled water..

மாவைக் கொட்டிக் கிளறினேன்..


Organic food color , elaichi, cashew add செய்தேன்..


Halwa ready..😀😋

Thursday, June 17, 2021

குட்டிக்கதை-திரைக்குப்பின்

 #திரைக்குப்பின்

#குட்டிக்கதை


"காக்க ..காக்க ..கனகவேல் காக்க..' சஷ்டிக் கவசம் பாடிக் கொண்டிருக்க..சாம்பிராணி மணம் அந்த வீட்டையே பக்தியில் ஆழ்த்திய அந்தக் காலைப் பொழுது..


 " கண்ணா..டிஃபன் ஒழுங்காச் சாப்பிட்டு போப்பா..இந்த வயசில் சாப்பிடாமல் எப்படி?' வாஞ்சையுடன் தன் மகனின் தலையை வருடிய அந்த வீட்டு எஜமானி சிவகாமி.

 டேபிள் மேல் லேசாக சாம்பார் சிந்திக் கிடந்தது..வந்ததே..கோவம்..' " "உங்களையெல்லாம் கட்டி வேலை வாங்கறதுக்குள்ள..வாங்க சம்பளத்துக்கு ஒழுங்கு வேண்டாம்..' அவள் அதட்டல் ..

 

 அதற்குள் டிரைவர் வாசலில் வந்து நிற்க' என்ன கண்ணன்..குழந்தை உடம்பு எப்படியிருக்கு..? செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதே..' அவளின் கருணை முகம்.

" அம்மானா அம்மா தான்' மகிழ்ச்சியில் காரை ரெடி செய்ய கிளம்பினான்.


சிவகாமி எண்டர்பிரைஸ் எம்.டி என்றால் சும்மாவா? 

கணவன் இறந்த பிறகு, அந்த பிஸினஸ் முழுதும் கவனித்து கொள்பவளாச்சே..


ஃபாக்டரிக்குள் நுழையும்போதே அவள் கண்ணில் படாமல் எதுவும் தப்பிக்க முடியாது.


" செக்யூரிட்டி..யூனிஃபார்ம் ஏன் கசங்கி இருக்கு? என்பதில் தொடங்கி..

" இந்த மிஷினின் சத்தம் ஏன் சரியா இல்லை..ஆறுமுகம் என்ன கவனிக்கிறீங்க நீங்க?..குரலில் ஒரு அதிகாரத்துடன் தன் கேபினில் நுழையப் போனவள்..


"ஹேய்..ரோஸி...இன்னிக்கு இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்கே?..'


மேடம் தன்னை கவனித்து பாராட்டியது செக்ரட்டரி ரோஸிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை..


தன் சீட்டில் உட்காரப் போனவள் அங்கே போட்டோவில் மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து..

' இப்படி என்னை தனியா விட்டுட்டு போய்ட்டீங்களே..நம்ம பையன் இந்த நாற்காலில வந்து உட்காரும் வரைக்கும் எனக்கு மனசுலயும் உடம்புலயும் தெம்பு கொடுங்க..' நடுங்கும் குரலில் வேண்டிக்கொண்டு..

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு..

இருக்கையில் அமர்கையில்..


"மேடம்..பிரமாதமா பண்ணிட்டீங்க..

ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம்..அந்த மெகா சீரியல் யூனிட்டே கைத் தட்டியது .


'டைரக்டர் சார்..நம்ம சுதா எங்க கூப்புடுங்க"....சொல்லிக் கொண்டிருந்தாள்

சிவகாமி ..அதான்  சின்னத்திரை ஸ்டார் ஊர்வசி. 

" சொல்லுங்க மேடம்'..வந்தாள் சுதா.


"இதப்பாரும்மா..கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.. எல்லா expression ம் உங்க குரலில் அமர்க்களமா.. டப்பிங்கில் கொண்டு வந்துடணும்..சரியா?'..

அந்த காரெக்டராவே மாறிடணும் ..புரிஞ்சதா..?

நாளைக்கு டெலிகாஸ்ட்டில் நம்ம சீரியல்

 டி.ஆர்.பி ஏறணும்..'..

ஊர்வசி சொல்லிக் கொண்டே போக..


அவள் சொந்தக்குரல்..

கேட்கும்படி இல்லை..

குட்டிக்கதை-விளிம்பு_வரையில்_செல்

 #

#விளிம்பு_வரையில்_செல்


" எவ்வளவு ஜில்லுனு   இருக்கு இல்ல இங்க..

காரின் கதவைத் திறக்க..தூறலாய் ஆரம்பித்த பனிப் பொழிவு..

க்ளவுஸ் போட்ட வலது இடது கைகளில் கொட்டும் பனியை பிடிக்க...

சிந்துவும் அவள் ஃப்ரண்ட்ஸ் ராஜி, மோனா, கவியும்  ஏதோ ஹீரோயின்கள் போல நினைப்பில் அந்தப் பனியில் ஆட ஆரம்பித்தார்கள்..


" ஹாய்..பேபி..ரீச் ஆகிட்டீங்களா? ' ..சதீஷ் தான். சிந்துவின் பாய் ஃப்ரண்ட்.

" நீங்களும் வந்திருக்கலாம் இங்கே..எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா..மிஸ் யூ பேபி..'..

செல்ஃபி ஒன்று எடுத்து அனுப்பினாள்..


 சிந்து தன்னுடைய தோழிகளுடன் சுற்றுலா பயணத்திற்காக குலு மணாலி 

  வந்திருந்தாள் .

நாலு நாள் ட்ரிப்..

ஹோட்டல் மேனேஜரே கார் அரேஞ்ச் செய்து கொடுத்தார்..கைட் ஒருத்தரையும் அனுப்புவதாகச் சொன்னார்.


முதல் நாள்..பக்கத்திலிருக்கும் மணிகரன், அதை சுற்றி இருக்கும் இடமெல்லாம் போனார்கள்.


கேக்கணுமா..ஃபோட்டோ..ஃபோட்டோ .ஃபோட்டோ..சுட்டுத் தள்ளினார்கள்.


சிந்து ஒரு செல்ஃபி பிரியை..

எடுத்த மாத்திரத்தில் சதீஷுக்கு ஷேர் செய்து கொண்டிருந்தாள்.


அவள் இங்கே இருந்தாலும் மனசென்னவோ..சதீஷை சுற்றியே இருந்தது.


 " ஹாய் பேபி.. எங்க இருக்க ?

  சதீஷ் தான் . "பத்திரமா இருப்பா..'

  விசாரித்துக் கொண்டே இருந்தான்.

  

  அவன் கால் வந்ததுமே ஓரமாக ஒதுங்கி போய்விடுவாள்.உலகமே மறந்து விடுவாள்.

  

"என்னதான் பேசுவியோ..நாள் முழுசும்..?"

மற்றவர்கள் கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

 

    இன்று இரண்டாவது நாள் .

    அந்த கைடு புதுசாக ஒரு வ்யூ பாயிண்ட் கூட்டி போவதாக சொன்னார்.

     எல்லாரும் ரெடியாகி காருக்குள்ளே ஏறியாச்சு.

      இத்தனை அழகான இடத்தை இதுவரை அவர்கள் பார்த்ததே இல்லை.

       ஆமாம் சென்னையில இருந்து கொண்டு.. இதுக்கெல்லாம் ஆசைப்பட முடியுமா ?

      இஞ்ச் இஞ்ச்சாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

       அப்போது சிந்துவுக்கு எப்போதும்போல் சதீஷ் கால் வந்தது

       " எங்கப்பா இருக்க இப்போ ?

       அவன் கேட்கவும்...

       

  "இரு காண்பிக்கிறேன்.. ரொம்ப பியூட்டிஃபுல் லொகேஷன் . டாப் மோஸ்ட் பாய்ண்ட்ல நான் இப்போ நிக்கறேன்..

  நீயும் வந்திருந்தால்  எவ்ளோ நல்லா இருந்திருக்கும் தெரியுமா..' சிந்து குழைய..

  

   " உன் பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்கும் போது நான் எப்படி வரமுடியும் ?..

   ஆச்சு இன்னும் ஆறு மாசத்துல நம்ம கல்யாணம் . எல்லா இடத்தையும் பார்த்து வை .ஹனிமூனுக்கு போய்டலாம்..

   வீடியோவில் கண்ணடித்தான்.

   

 பேசிக்கொண்டே.இருந்தவளை..

 

 "ஏய்ய்..நில்லு..நில்லு.. அந்த உன்னோட பேக்ரவுண்ட் ரொம்ப நல்லா இருக்கு..

 இன்னும் ரெண்டு ஸ்டெப் மேலே போ..சூப்பர் லொகேஷன்..

 அழகா சிரிச்சுக்கிட்டு ஒரு க்ளிக் பண்ணு..இது உன் ஃபேஸ்புக் dp  க்கு சூப்பரா இருக்கும்'..

 

அவன் சொல்லி விட்டு காலை கட் செய்தான்.

ஜிவ்வுனு ஒரு சந்தோஷம்..


காற்று அவள் கூந்தலை அலைக்கழிக்க..

ஆரஞ்சு சூடிதாரில்..பச்சை பசேலும்..மேகக் கூட்ட பேக்ரவுண்டில்..தேவதை போலத் உணர்ந்தாள்..சிந்து..


எடுத்த செல்ஃபியை உடனே அவனுக்கு ஷேர் செய்ய..

" ப்யூட்டிஃபுல் பேபி' அவன் பதில் அவளைக் கிறங்க வைத்தது.


"போதும்டீ..கீழே எறங்கி வா..மழை வரும்னு அந்த கைட் சொல்றார்"

..ஃப்ரண்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.

மீண்டும் வீடியோவில் சிரித்தான் சதீஷ்..


" இன்னும் ஒரு ஸ்டெப் மேலே ஏறு..that will be a mind blowing click'..

அவன் சொல்லச் சொல்ல..பின்நோக்கி காலை வைத்தாள்..


" அம்மா.....'..அந்தப் பிரதேசம் முழுவதும் அவள் குரல் எதிரொலித்தது..

ஆம்..சிந்து..

அந்த உச்சியிலிருந்து கீழே விழுந்து விட்டாள்..

கூட்டம் கூடியது..

ஆம்புலன்ஸ் வந்தது..


   "ஏன்மா ..இப்படியா உயிரை கொடுப்பீங்க ஒரு செல்பி எடுக்க .?

   போலீஸ்காரர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் ஏகத்துக்கு இவர்களைத் திட்டினார்கள்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது .

    பக்கத்திலிருந்தும் காப்பாற்ற முடியாத நிலைமை ஆகிவிட்டதே என்று தோழிகள் கதற ஆரம்பித்தார்கள்.

    

         அடுத்த நாள் காலை எல்லாம் நியூஸ் பேப்பரிலும் தலைப்புச் செய்தி..

         "செல்ஃபி மோகத்தில் இளம்பெண் பலி'..


' என் ப்ளான் சக்ஸஸ்..யாருக்கும் என் மேலே சந்தேகம் வராது..எப்படி உன்னை என் வாழ்க்கையில் இருந்தே ஒழித்தேன் பார்த்தியா?.

வில்லச் சிரிப்பில். ..சதீஷ்..


         

       "ஹாய் பேபி.. இன்னைக்கு பீச் ரிசார்ட் போலாமா?..

புதுக்காதலியுடன் வீடியோ சாட்.. ஆரம்பித்தான்..

குட்டிக்கதை-முதிர்ச்சி

 #முதிர்ச்சி


#குட்டிக்கதை


" அம்மா..எனக்குத்தான் ஜன்னல் சீட் வேணும்' ட்ரெயின்ல் ஏறினதுமே குதிக்க ஆரம்பித்தான் ஆகாஷ்.


" கண்ணா..முதல்ல நம்ம லக்கேஜ் வெக்கலாம்டா..கொஞ்சம் சும்மா இருக்கியா..அனும்மா..இவனைப் பிடிடா '..

பெண்ணுக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்தாள் ஜமுனா..இந்த வாண்டுகளின் அம்மா..

" அம்மா..நோ..எனக்குத் தான் அந்த விண்டோ சீட் வேணும்..' அனுவும் சுருதி சேர்க்க ஆரம்பித்தாள்..

வியர்க்க விறுவிறுக்க ..சூட்கேஸ்களை அடுக்கிக் கொண்டிருந்தவளுக்கு கோபமாய் வந்தது..

" கண்ணப்பா..அவன் உன் தம்பி தானே..

அவனுக்கு நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டாமா?..

"போம்மா..எப்பவுமே நீ இப்படித்தான்..' அழ ஆரம்பித்தாள்.

" சரி..பாதி நேரம் நீ..பாதி நேரம் அவன்'..

ஜமுனா சொல்ல..அனு ஒத்துக் கொண்டாள்.

இருந்தாலும் ஆகாஷோடு இடுக்கி உட்கார்ந்து கொண்டு . வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாலும்..அந்த ஜன்னல் ஓரம் காற்று முகத்திலடிக்க உட்காரும் சுகம் ..கிடைக்காத சோகம்.

பாதி தூரம் வந்ததும் ..

அம்மா..இப்போ என் டர்ன்..நான்தான் ஓரத்திலே உட்காருவேன்' ..அனு வேடிக்கை பார்க்க ஆசையாய் ஓரத்தில் உட்கார்ந்தாள்.

ஆனால் அவள் அதிர்ஷ்டம்....இருட்ட ஆரம்பித்தது..

"ஒண்ணுமே தெரில போம்மா'..சொல்லிக் கொண்டே தூங்கி விட்டாள்.


ஒவ்வொரு பயணமும் இப்படித்தான்..


அனுவுக்கும் ஆகாஷுக்கும் வெறும் இரண்டு வயது வித்தியாசம் தான்.

" அக்கா..நீதான் விட்டுக் கொடுக்கணும்..'.." நீ பெரியவ இல்ல..பாவம் இல்லையா தம்பி'..

எல்லா விஷயத்திற்கும் இதே பேச்சு கேட்டு வளர்ந்தவள் அனு.

ஆனால்..என்றுமே தம்பி மீது அலாதி பாசம்..


பள்ளிப் படிப்பு,கல்லூரி முடித்து...இப்போது ஒரு நல்ல வேலையில் அமர்ந்தாள் அனு.


மாதத்தில் பதினைந்து நாள் வெளியூர்ப் பயணங்கள் தான்.


"விண்டோ சீட்".. புன்னகையுடன் விமானப் பணிப் பெண் அவள் சீட் நம்பர் சொல்லும்போது  ஒரு அலாதி சந்தோஷம்.


ஆகாஷும் இப்போது கடைசி வருடம் படிக்கிறான்.அதற்கு பிறகு அவனும் மேல் படிப்புக்கு சென்று விடுவான்..


இப்போதெல்லாம் இவர்களும் இருவரும் சேர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டவில்லை..


இதோ..இன்றும்..மீண்டும் அவள்..அதே ட்ரெயினில்..ஏஸி கம்பார்ட்மெண்ட்டில் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்..


அம்மாவுடனும் ஆகாஷுடனும் பாட்டி வீட்டுக்கு சென்ற பயணங்கள்..அந்த ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டைகள்,அழுகை ..ஒவ்வொன்றும் அவள் கண் முன் வந்தது..


மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.


எதிர் சீட்டில் ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தாள்..கூடவே இரண்டு குட்டிப் பையன்கள்.


" அம்மா..எனக்குத்தான் ஜன்னல் சீட்' சின்னனவன் அழ..

" நான்தான் உட்காருவேன் ..' பெரியவன் மல்லுக்கு நிற்க..


" நீ பெரியவன் இல்லையா..தம்பிக்கு விட்டுக் கொடுப்பா' ..அந்த அம்மா பேசினாள்..


அன்று ஜமுனா பேசிய அதே வசனம்..

சின்னவன் ஜன்னலோரம் உட்கார..பெரியவன் பாவம்..இடுக்கிக் கொண்டு அவன் பக்கத்தில்..


இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனு..அந்த பெரிய பையனைப் பார்த்து..


" வரியா இங்கே..என்னோட இந்த விண்டோ சீட்ட்ல உட்காறியா?'

கண் சிமிட்டி கேட்கவும்..துள்ளி குதித்து ஓடி வந்தான் .


.அவர்கள் இருவரின் உரையாடலைக் ரசித்தபடி..

ஏதோ சாதித்து விட்ட மகிழ்ச்சியில் அனுவுக்கு இந்த ஜன்னலோரச் சீட் கிடைக்காத பயணமும் இனித்தது.

குட்டிக்கதை

 #உயர்ந்த_உள்ளம்

#குட்டிக்கதை


சுந்தர்நகர்..ஒடிஷாவில் எந்தப் புயல் வந்தாலும் முதலில் பாதிக்கப்படும் கிராமம் அதுதான். புயலின் சீற்றம்..மீண்டு எழுவதற்குள்..அடுத்தது வந்து விடும்.


ப்ரேம்..பதினாறு வயது இளைஞன்

அம்மாவையும் தங்கையும் காப்பாற்ற ..சென்னை பட்டணம் கிளம்பி விட்டான்.


அவன் தோழன்   சஞ்சய் இருக்குமிடம் தேடிச் சென்றான்.

மெட்ரோ வேலையில் அவனும் ஒரு நாட்கூலியில் வேலை செய்பவன். 

அவன் சொல்லி பல இடங்களில் வேலை செய்தான். ஒரு ஓட்டலில் வேலை செய்தபோது, அங்கே அடிக்கடி வரும் வாடிக்கையாளர் ஒருவர் பழக்கமானார்.


 'ப்ரேம்..எங்க அபார்ட்மெண்ட்டில் நிறைய கார்கள் இருக்கு..ஒரு கார் நீ சுத்தம் செய்தாலே ஐநூறு கிடைக்கும்..'அட்ரஸ் கொடுத்துவிட்டு..' நாளைக்கு வா..என் ஃப்ரண்ட்ஸிடம் சொல்லி உனக்கு வேலை வாங்கித் தரேன் ' என்றார்..


இவன் சுத்தமாக வேலை செய்வதைப் பார்த்து..அந்த அபார்ட்மெண்ட் டின் எல்லா கார்களின் துடைக்கும் வேலையும் அவன் கையில் கொடுத்தார்கள்.


சம்பளப் பணத்தில் பாதியை  அம்மாவுக்கு மாசா மாசம் அனுப்பினான்..

 ..அங்கு ஃப்ளாட்டில் இருக்கும் எல்லாருக்கும் ஓடி ஓடி முகம் சுளிக்காமல் வேலை செய்தான்..

அங்கேயே அவனுக்கு ஒரு ரூம் கொடுக்க..அவன் ஓட்டம் ஓடியபடி இருப்பான்.

ப்ரேம்..பேருக்கு ஏற்றாற்போல எல்லாரிடமும் அன்பாகப் பழகும் ஒரு இளைஞன் 👨.


அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள் அந்த அபார்ட்மெண்ட் மக்கள்

 . தங்கை திருமணம் நடந்தது. அம்மா மட்டும் இங்கே வர மறுத்து விட்டாள்.

 

உயிரும் விட்டாள்.

 

மனசு முழுதும் அம்மா சொன்ன  வார்த்தைகள்

" எங்கே இருந்தாலும் ஒழுக்கமா நடக்கணும்..நல்ல பேர் எடுக்கணும்..நாலு பேருக்கு உதவி செய்யணும் நீ'..

 அவனுக்கு உந்து சக்தி அதுதான்


அந்த அபார்ட்மெண்ட்டுக்கு புதிதாக ஒரு வயதான அம்மாள் குடி வந்தாள்.

"யாரு  நீ.." .....ப்ரேமை.. அதட்டினாள்


' நான் உன்னைக் கூப்பிட்டேனா இங்கே..போய் உன் வேலையைப் பார்" கத்தினாள்.

அந்த அம்மாவின் பெயர் புஷ்பா.

அவளுக்கு ஏனோ ப்ரேம்மை பிடிக்கவே இல்லை.. அவனை வெளியே அனுப்ப வேண்டுமென்று சண்டை பிடிப்பாள்..


'எங்கம்மா வயசு..போனால் போகட்டும் .

அவங்களுக்கு மனசில என்ன உளைச்சலோ?  ' நினைத்துக் கொள்வான்.

'

புஷ்பா அம்மாவின் குரல் சிறிது நாளாக கேட்காமல் போக ..

விசாரித்ததில் ..அவர்கள் 

 உடம்பு சுகமில்லாதது தெரிய வந்தது. அமெரிக்காவிலிருந்து அவர் ஒரே மகன் வரப்போவதாக பேசிக் கொண்டார்கள்.


மனசு கேட்கவில்லை ப்ரேமுக்கு.

மெதுவாக அவர்கள் ஃப்ளாட் அருகில் சென்றான்..

அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் கதவைத் திறக்க..


கத்தி ஊரைக் கூட்டப் போகிறாள் என்று நினைத்தவனுக்கு..

வா..என்று தலையசைத்து கூப்பிட்டாள்.

அவனால் நம்பவே முடியவில்லை..

மிக இளைத்திருந்தாள்..சோர்வு கண்ணிலும் உடலிலும்..கண்ணிலிருந்து நீர் மட்டும் வழிந்தபடி..


வயசாச்சு..பாவம்..ஒரு பயத்தில் யாரையும் சேர்க்காமல் இருந்திருப்பாங்க..ப்ரேம் சமாதானப் படுத்திக் கொண்டு..தினமும் அவர்களைச் சென்று பார்ப்பான்.


அடுத்த வாரம் அவர் மகன் வந்துவிடுவார்.


ஆனால்..அதுவரையில் காத்திருக்க புஷ்பா அம்மாவின் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை..

கண் மூடினார்..

நியூயார்க் நகரத்தில் வைரஸ் தொற்று பரவ. அனைத்து விமானமும் ரத்து செய்யப்பட்டது.அவர்கள் மகன் வருவது கேள்விக் குறியான வேளை..


' யார் இவங்களுக்கு ....செய்யறது'..

அபார்ட்மெண்ட் குடிவாசிகள் குழம்பிய வேளை..


" நான் செய்யறேன் சார்..அம்மாவுக்கு இறுதி மரியாதை'

ப்ரேம்மின் குரல் ஆச்சரியப் படவைத்தது எல்லாரையும்..


அவர்கள் மகனும் ஒப்புதல் அளிக்க..


புஷ்பா அம்மாவின் இறுதிச்சடங்கை முடித்து விட்டு வந்த ப்ரேம்மின்  அழுகை சத்தம்..அந்த அபார்ட்மெண்ட்டையே கலங்க வைத்தது..


தன் சொந்த அம்மாவுக்கு செய்யமுடியா விட்டால் என்ன?..


இந்த அம்மாவுக்கு செய்ய முடிந்ததே..🙏🙏


..

குட்டிக்கதை

 #Unlock_1.0

#குட்டிக்கதை

"ஏங்க..அடுத்த திங்கள் முதல் வேலைக்கு வர ஆரம்பிக்கணும்னு மெயில் வந்திருக்கு..'

 மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்த கோபி குட்டியின் தலையை வருடியபடி கவலையில் ஆழ்ந்தாள் சரயு.

 

" எப்படி இருந்தாலும் வேலைக்கு போய்த் தானே ஆகணும்ப்பா..இப்படி வீட்லயே உட்கார்ந்து இருக்க முடியுமா?'

அவள் கணவன் க்ருஷ்.


"இல்லங்க..இந்த மூணு மாசமா வீட்லயே இருந்திட்டேனா..இவன் இப்ப என்னை விடவே மாட்டேங்கிறான்..எல்லாம் நானே செஞ்சு செஞ்சு பழகிட்டான்ங்க..இப்போ பழையபடி  விட்டுட்டு போனால்..உடம்புக்கு எதுனாச்சும் வந்துடுமோனு பயமா இருக்கு'..

ஒரு அம்மாவின் கவலையில் சரயு..


உள்ளிருந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார் பாக்கியம்..

" நான் தான் இருக்கேன்ல..ஒரு ரெண்டு நாள்ள சரியாகிடுவான்' என்றாள்.


சரயு ஒரு பெரிய மாலில் பில்லிங் செக்‌ஷனில் வேலை பார்க்கிறாள்.

காலையில் கிளம்பினால் ராத்திரி ஆகிடும் வீட் வந்து சேர.அவள் கணவன் கிருஷ்...மெடிக்கல் ஷாப் வைத்து இருக்கிறான்.

அவ்வப்போது வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவான்.


அவர்கள் உலகமே கோபிதான்.


நான் ஒரு ஐடியா சொல்றேன் ஆரம்பித்தான் க்ருஷ்..


" நாளையிலேர்ந்து நீ என்ன செய்வியாம்..சும்மா பையைத் தூக்கிட்டு அவனுக்கு டாட்டா காட்டிட்டு வெளியே போற மாதிரி போ.. 

எப்படியாவது இந்த ஒரு வாரத்துக்குள்ள அவனை ட்ரெயின் பண்ணிடுவோம்" சமாதானப் படுத்தினான்.

'ஆனால்..மாஸ்க் போட்டுக்ககணும் கண்டிப்பா' என்று சொல்லி கண்ணடித்தான்.


அடுத்த நாள் காலை..


"கோபி..செல்லம்..அம்மா டாடா போய்ட்டு இதோ வந்துடுவேனாம்..சமத்தா நீ இருப்பியாம்'

சரயு சொல்லிக் கொண்டே

ஹேண்ட் பேக்கை மாட்டிக கொண்டாள்..


"டாடா...அம்மா ..டாடா.." அவள் கையசைக்க..


 கோபி குட்டி வேக வேகமாக அவளோட வெளியே கிளம்ப  தாவினான்.

 

 பாவம்..அவனுந்தான் வெளியே போய் எவ்வளவு நாளாச்சு..ஆனால் குழந்தைகளும் பெரியவர்களும் வெளியே தலை காட்டக் கூடாது என்ற தடையை மீற முடியாதே..


"அவனும் என்  கூட வரணுமாம் பாருங்க.".சிரித்தபடியே சரயு..


" நீ பாட்டி  கிட்ட கொஞ்ச நேரம்.இருப்பியாம்..சரியா..?என்று மழலையில் கொஞ்சினாள்.


ஒவ்வொரு நாளும் வெளியே இருக்கும் நேரத்தை அதிகரித்தாள்.

கிளம்பும் முன்னமே அவனுக்கு கொஞ்சம் வயிற்றை ரொப்பினாள். பக்கத்தில் அவனுக்கு பிடித்த விளையாட்டு சாமானெல்லாம் பரத்தி வைத்தாள்.


" அம்மா..அவன் மேல ஒரு கண் வெச்சுக்கோங்க' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு கிளம்புவாள் சரயு..


' இது ஒண்ணுதுக்கே இந்தப் பாடா?


பாக்கியம் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்..


சரயு வெளியே இருந்து வருவது தான் தாமதம்..

இத்தனை நேரம் அவளைக் காணாத ஏக்கத்தில்  அவளை விடவே மாட்டேன்னு ஒரே அடம் பிடிப்பான் கோபி..


இப்போது ..கொஞ்சம்.கொஞ்சம் மாமியாரிடம் செல்ல ஆரம்பித்திருக்கிறான்


ஆச்சு..எதிர்ப்பார்த்த திங்கட் கிழமை வந்தது....

க்ருஷ் காலையிலேயே போய் விட்டான்..


சரயுவும் ..வேலைக்கு கிளம்பி விட்டாள்..

"பத்திரமா பார்த்துக்கோங்கம்மா.. எதுவானாலும் ஃபோன் பண்ணுங்க". சரயு சொல்லிக் கொண்டே புறப்ப்ட்டாள்.

மனசெல்லாம் வீட்டிலேயே இருந்தது..


அடிக்கடி வீட்டுக்கு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டே இருந்தாள்..


அப்பாடா..ஒரு வழியா வேலை முடிஞ்சு கிளம்பினாள்..


" அம்மா..கோபியை உள்ளேயே வெச்சிருங்க..நான் குளிச்சுட்டு சானிடைஸர் எல்லாம் போட்டுட்டு வர வரைக்கும் என்னை பார்க்க வேண்டாம் அவன்'..


பூனை போல வீட்டுக்குள் நுழைந்து சுத்தம் செய்து ஹாலுக்கு வந்த போது..


ஒரே ஓட்டமாக வந்து அவள் மேல் ஏறி துகைத்து கொஞ்சி..மடியில் படுத்துக் கொண்டு ..அவள் முகத்தையே பார்த்தான் கோபி.


' பாட்டி கிட்ட சமத்தா இருந்தியா ..? Good boy..'

அவள் தன்னோட செல்ல நாய்க்குட்டி கோபியை கொஞ்ச..


 'சீக்கிரமே இவனோட விளையாட ஒரு கேசவ் பொறக்கணும் ...கிருஷ்ணா.. கண் திறப்பா'.🙏🙏.மனதுக்குள் நினைத்தபடி..

 தோசை தட்டை நீட்டினாள்  பாக்கியம்.

குட்டிக்கதை

 #வீடு


#குட்டிக்கதை


"பகவானே..இந்த மாசம் லம்ப்பா ஒரு அமெளண்ட் வர மாதிரி ஒரு கிராக்கியும் இன்னும் கிடைக்கலையே..கொஞ்சம் கருணை காட்டுப்பா..: 

சுவாமி ரூமிலிருந்து கவலையுடன்   வெளியே வந்தவரை...


"என்னங்க..இந்த மாசம் இன்னும் வீட்டு வாடகை, மளிகை, ஸ்கூல் ஃபீஸ் எல்லாம்  கட்ட்ணுமே ..எப்படிங்க ச்மாளிக்கப் போறோம் ..?

மனைவி சங்கீதாவின் குரல் சோக கீதத்தில்  ..வீட்டு ப்ரோக்கர் ரமணனனை இன்னும் பயமுறுத்தியது..


' நானும் நாள் பூரா அலையறேன்..வீடு காண்பிக்கிறேன்.. ஃபோன் பண்றேன்னு சொல்றாங்க..அப்புறம் வீட்டு ஓனரும் வீடு பார்க்கறவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து..வீடு காண்பிச்ச என்னை கழட்டி விட்டுடறாங்களே..நான் என்ன செய்வேன்?..

மனசுக்குள் கவலையில் அவர் தன் ரியல் எஸ்டேட் ஆபீஸ் திறந்து உட்கார்ந்தார்.


போன் அடிக்கவும்.. அவரோட பழைய நண்பர்.. குசலம் விசாரித்து விட்டு..

' நான் இன்னிக்கு ஒரு பார்ட்டியை அனுப்பறேன். இந்த ஏரியாவிலேயே இருக்கும் சூப்பர் வீடுகள், அபார்ட்மென்ட் எல்லாம் காண்பி..எப்படியும் இந்த டீல் முடிக்க முயற்சி பண்ணு ' என்று பாலை வார்த்தார்.


இரண்டு நாளாக..அந்தத் தம்பதியுடன் சுற்றி ..அந்த ஏரியாவில் இருக்கும் அத்தனை அபார்ட்மெண்ட் களையும்.காண்பித்தார்.

ஒவ்வொரு அபார்ட்மெண்ட்ட்டும் ஒன்றை மிஞ்சும் வசதிகளுடன்..


ஒரு வீடும் அவர்களுக்கு மனசுக்கு பிடிக்கவில்லை.


"வேற இருக்கா..இன்னும் கொஞ்சம் வீடு பார்க்கலாமே.."


 இருக்கற எல்லா வீட்டையும் காண்பிச்சாச்சு.. 

 சார்..அவங்களுக்கு எந்த வீடுமே பிடிக்கலை சார்'

இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்கு...


ஆனால்..

அது ..ஒரு பழைய காலத்து தனி வீடு.

நடுவில வீடு..சுத்தி அழகா வித விதமா மரங்கள்..பூச்செடிகள்.பின்னாடி ஒரு சின்ன கிணறு.

இருந்து என்ன?

இப்போ எல்லாம் யாருக்குமே தனி வீடு பிடிக்கறதில்லையே..

பாதுகாப்பு கருதி யாரும் வாடகைக்கும் வரதில்லையே..


இவங்களும் இதை பார்த்துட்டு

 எப்படியும் வேண்டாம்னு சொல்லப் போறாங்க..' 

 

நம்பிக்கை துளி கூட இல்லாமல்..

ரமணன் அந்த வீட்டின் வாசலில் நிற்க..


"ஆஹா...வெளிப்புறமே..இத்தனை ஆர்டிஸ்டிக்கா இருக்கே..'

அவர் சொல்லவும் ..ரமணனுக்கு ஒரே ஆச்சரியம்.


நல்ல காற்றோட்டம், வெளிச்சம், சுத்தி மரங்கள்..

இம்மி இம்மியாக அவர்கள் அந்த வீட்டை ரசிக்க..


அங்கிருக்கும் கிண்ற்றையும், தோய்க்கும் கல்லையும், மரங்களையும் ஆசையாய் சுற்றி வந்தபடி..


"எங்களுக்கு வீடு ரொம்ப பிடிச்சுப் போச்சு..அட்வான்ஸைப் பிடிங்க..

 மீதி பேப்பர் வேலையெல்லாம் நாளைக்கு செய்யலாம். '..அவர் பேசிக் கொண்டே போக..


 "எப்படி சார்..? உங்க டேஸ்ட் புரியாமல் ..நான் இரண்டு நாளா உங்களை அலைக்கழித்து விட்டேனே..மன்னிச்சுக்குங்க' 

 ரமணன் சொல்ல..


"அது உங்க தப்பில்லை..இப்போ இருக்கிற ட்ரெண்ட் , மக்களின் ரசனை....ஆனால் எங்களுக்கு நெடுநாளாக  ஆசை..

எங்களுக்கு நவீன வசதிகளோட இருக்கும் வீடுகளில் இருந்து அலுத்துப் போச்சு..

அதனால் தான்..

இந்தியாவில் இப்படி ஒரு வீட்டில் வந்து வாழணும்' என்று..


சரளமான ஆங்கிலத்தில் 

பேசியபடி..அந்த வெளிநாட்டுத் தம்பதி..

குட்டிக்கதை

 #கை_கொடுக்கும்_கை

#குட்டிக்கதை.


"அம்மா..bye..'

"ஆல் த பெஸ்ட் கண்ணா..சர்டிஃபிகேட்ஸ், ஐடி கார்ட், காலேஜ் லெட்டர் எல்லாம் கரெக்டா வெச்சிருக்கியா...தைரியமா ஹேண்டில் பண்ணு அவசரப்படாமல்,தெளிவா பதில் சொல்லு..' அம்மா புவனா அட்வைஸ் அடுக்கிக் கொண்டே போக..

"ஒகே..ஒகே..வேண்டிக்கோ சாமி கிட்ட..'

பறந்து விட்டாள்..மீரா.


மீரா..கல்லூரி மாணவி.

கேம்ப்பஸ் இண்டர்வியூ வில் இன்று அவளுடைய ட்ரீம் கம்பெனியிலிருந்து வருகிறார்கள்..

வாசலுக்கு வந்தவள்.


"ஆட்டோ..ஆட்டோ..'

எவ்வளவு கை காட்டியும் ஒருத்தரும் நிற்காமல் போகும் அந்தக் காலை வேளை ட்ராஃபிக்.

"சே..இன்னிக்குனு ..ஓலா..ஊபர் யாருமே அக்ஸ்ப்ட் பண்ண மாட்டேன்கிறாங்களே..'

பரபரப்பில் இருக்கும்போது..

' மேடம் எங்கே போகணும்?'..ஆட்டோவந்து நின்றது..

இடத்தைச் சொன்னாள்.


'ஐயோ..நேரமாச்சே..டிரைவர் கொஞ்சம் சீக்கிரம் போகறீங்களா?..

"ட்ராஃபிக் பாருங்கம்மா..நான் என்ன செய்யட்டும்?..

டிரைவர் சொல்ல..

அவள் அவசரத்தை புரிந்து கொண்டவன் சந்து பொந்தில் எல்லாம் புகுந்து அந்த காலேஜ் வாசல் முன் நின்றான்.


காலேஜ் பையையும் ,சர்டிபிகேட் வைத்திருந்த ஃபோல்டரும்  எடுத்துக்கொண்டு காலை கீழே வைக்க..  'பட்'டென்று ஒரு சத்தம்.


 அவள் செருப்பு தான்..

 

 " ஐயோ ராமா இப்போ நா என்ன பண்ணுவேன்.. இன்டர்வியூக்கு வேற டைம் ஆகிவிட்டதே..'

  பரபரப்பில் ஒன்றும் புரியவில்லை .

  

" இன்னிக்கி போயி இப்படி செருப்பு காலை வாரி விட்டதே'..பயமும் பதட்டமும் தொற்றிக் கொள்ள..


 சுற்று முற்றும் பார்த்தாள்.

  "இந்த பிஞ்ச செருப்பை சரி பண்ண இங்க யாரும் ஆள் இல்லையே.. என்ன செய்யறது?'

  

   பக்கத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை இருப்பதை கண்டாள் .

   அந்தக்கடை ..கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த விலையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கும் கடை ஆகும்.

    அங்கே போய் கடைக்காரரிடம் ..

  "  அண்ணா...quickly fix  இருக்கா?'

      கேட்டு வாங்கினாள்.

      கடையில் கூட்டமில்லை..இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

   தன் பையை ஒரு கையில் வைத்துக்கொண்டு ..உட்கார இடம் இல்லாததால் காலில் இருக்கும் செருப்பை மற்றொரு கையில பிடித்துக்கொண்டு .

 தடுமாறிக் கொண்டிருந்தாள்.

    

      அங்கே கடையில் நின்று கொண்டிருந்த  இருந்த அந்த இரண்டு பேர்..

     "குடும்மா.'.  ..


"இல்ல சார் வேண்டாம்.. நானே செஞ்சுக்கறேன்' மறுத்தாள்.


'அட போம்மா .. யூனிஃபாரம் எல்லாம் கசங்கிடும். கொடும்மா..'


     இருவரில் ஒருவர் செருப்பை பிடித்துக்கொள்ள ..

     மற்றொருவர் அந்த செருப்பை சரி செய்ய முனைந்தார்.

      மீராவுக்கு ஒரே ஆச்சரியம்.

   அவர்கள் சில நொடிகளில் அவள் செருப்பை தற்காலிகமாக  உபயோகப்படுத்த  சரி செய்துவிட்டார்கள்.

   

" எவ்வளவு ரூபா  தரணும் அண்ணா..?'

கடைக்காரரிடம் ..மீரா கேட்க..


 ' போம்மா.. போய் நல்ல படி ..

 நல்ல வேலை தேடு நல்லா இரு ..

 ஆசீர்வதித்தார்.

 

 அங்கிருந்த மற்ற இருவரும் ..

 காலேஜ்ல இப்போ இண்டர்வியூ நடக்குதில்ல.. நல்லா செய்யுங்க ..வாழ்த்துக்கள் ' மனதார சொன்னார்கள்.

 

 

"ரொம்ப ரொம்ப நன்றிங்க..'.கண்ணில் அவளை அறியாமல் குபுக்கென்று வந்தது கண்ணீர்..


  மீராவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை இப்படிக்கூட முகம் தெரியாத ஒருவருக்கு அதுவும் முகம் சுளிக்காமல் தன் செருப்பை பிடித்து சரி செய்து கொடுத்தது அவளை என்னவோ செய்தது.

  

 காலேஜ் நுழைவாயில் வந்தது .

 ஏதோ ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அவளுக்குள் தோன்றியது .

 அவளுடைய முறை வந்தபோது அவளால் முடிந்தவரை எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னாள்.

 எல்லாரும் ரவுண்டும் முடிந்தது.

 ரிசல்ட் அறிவித்தனர் .

  மீராவின் பெயர் அதில் இருந்தது.

      போன் செய்து அம்மாவுக்கு சொன்னாள்.

       "லெட்ஸ் பார்ட்டி' நட்புகள்..கூப்பிட வேகமாக.

        அந்த ஸ்டேஷனரி கடைக்குள் நுழைந்தாள்.

        'அண்ணா ..ரொம்ப நன்றி.. எனக்கு வேலை கிடைச்சிருச்சு .

        நீங்க செஞ்ச உதவிய நான் மறக்க மாட்டேன் .

        இங்க வந்தாங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க ..'

        சொல்லிவிட்டு கிளம்பினாள்.

        

 வீட்டுக்குப்போய் அம்மாவிடம் ...

 

 'எப்படிம்மா.. இப்படி கூட உதவி செய்வாங்களாம்மா?..

 நானா இருந்தா அது செஞ்சு இருப்பேனா?..அடுத்தவங்க செருப்பை தொட்டிருப்பேனா?..'

 

 

  அவள் அம்மா புவனா அர்த்தமுடன் சிரித்தாள்.

   "இப்படி ஏதோ கொஞ்சம் பேராவது இருக்கறதால் தான்.. மழை அப்பப்ப பெய்யறது.

   இதெல்லாம் நமக்கு ஒரு பாடம் மீரா..

   

    நமக்கு தெரிஞ்சவங்களுக்குத்தான் உதவி செய்யணும் இல்ல ..

    நமக்கு தெரியாதவங்களுக்கு செய்யும்போது கிடைக்கும் ஒரு மனசு திருப்தி இருக்கு பாரேன் ..அது ரொம்ப வித்தியாசமான அனுபவம்.

    

    அதனால நம்ம எப்பவுமே இந்த மாதிரி மத்தவங்களுக்கு உதவி பண்ணுனு  கடவுள்  காட்டிக் கொடுக்கும் சான்ஸை விட்டு  விடக்கூடாது..'..

    

 "போதும்மா ..உன் அட்வைஸ் "என்று அலுத்துக் கொள்பவள் இன்று 

 "ஐ லவ் யூ மா '..சொன்னபடி தன் ரூமுக்குள் சென்றாள்..

குட்டிக்கதை

 #நிம்மதி_நிம்மதி_உங்கள்_சாய்ஸ்

#குட்டிக்கதை


"முருகா..இன்னிப் பொழுது நல்லபடியா இருக்கணும்ப்பா..' ஸ்வாமியை வேண்டிக் கொண்டு ..கிச்சனுக்குள் நுழைந்தாள் சுகன்யா.


வெந்நீர் வைத்து காஃபிப் பொடியை ஃபில்ட்டரில் போட்டு..' குறை ஒன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா' YouTube ல் எம்.எஸ்.அம்மா உருக..

தேதியைக் கிழித்தாள். நாட்குறிப்பை படித்தாள்.

அதில் புன்னகை புரிந்தபடி இருந்த பெருமாளிடம்..' உன் பொறுப்பு எல்லாம் 'என்று வேலை ஆரம்பித்தாள்.


பாலைக் காய்ச்ச கவரை வெட்டினாள்.. 

பால் பொங்கியாச்சு..

ஃபில்டரிலிருந்து டிகாக்‌ஷன் எடுத்து விடலாம்னால்....

ஜோடி பிரிய மனமில்லாமல் ஃபில்டர் அடம் பிடிக்க.." கடவுளே..இன்னிக்கு என்ன இது..காலையிலேயே போராட்டம் ஆரம்பிச்சுடுத்தே..'..புலம்பல் ஆரம்பித்தாள்   சுகன்யா.


ஒரு வழியா..காஃபி குடிக்கும்போதே மணி ஆறரை ஆகி விட்டது.

"இட்லிக்கு ஊறப் போட்டதை எடுத்து அரைச்சுடலாம்.." கிரைண்டரை அலம்பி..உளுந்தைப் போட..டம்முனு ஒரு சத்தம் ..அபார்ட்மெண்ட் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம்..


பொசுக்குனு கரண்ட் கட்..


' போச்சு..இன்னிக்கு எந்த நேரத்தில கண் முழிச்சேனோ..இனிமே ஈ.பி க்காரன் வந்து சரி செய்ய்றதுக்குள்ள..'


ஏதோ ஏடாகூடமா இருக்கும்ப்போல இருக்கே இன்னிக்குனு..


மெதுவா பூனை மாதிரி கிச்சனுக்குள்  வந்தார் சங்கர்.

' இப்ப என்ன..கரெண்ட் வந்தா..வேலையை முடிக்கலாம்'..அவர் சொல்லச்சொல்ல..' "உங்களுக்கென்ன....' கோவத்தில் பொரிந்தாள்..சுகன்யா.


குளித்து முடித்து கோயிலுக்கு கிளம்பினாள்.


பூ வாங்கலாம்னு பைக்குள் தேடினால்..பர்ஸைக் காணும். ஏதோ ஞாபகத்தில வீட்லயே விட்டு விட்டு வந்து விட்டாள்.

" யம்மா..நீங்க..தினமும் தான் வரீங்களே..நாளைக்கு குடுங்க காசு..' பூக்காரி சொல்லவும்..தலையாட்டினாள்.

"ஏன் இப்படி இன்னிக்கு..?


வீட்டுக்கு வந்தவள்..

குக்கரை வைத்து சமைத்து முடித்து பரிமாற.

." அம்மா..are you OK? .பெண் கேட்டாள்..

"ஏன்..எனக்கு என்ன..' 

இல்ல..இன்னிக்கு குழம்பு,ரசம் ரெண்டுத்துலயும் உப்பே இல்லை..அதான் கேட்டேன்'..

பெண் சொல்லி முடிக்கவும்..


" இன்னிக்கு என் நேரமே சரியில்லை போ..'விரக்தியில் பேசினாள்.


" மா..கொஞ்சம் வைஃபை பாஸ்வேர்ட் சொல்லேன்'..மகன் சுரேஷ் கேட்க..

" இருடா..யோசிச்சு சொல்றேன்'..

அவள் சொன்னதும் தப்பு..

" அம்மா..இன்னிக்கு நீ வேணா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..டல்லா இருக்கற மாதிரி இருக்கியே ' பையன் 👦 சொல்ல..

மொபைல்  சிணுங்கியது..


' மேடம்..லேப்டாப்பில் நிறைய  மாத்தணும்..கொஞ்சம் எஸ்டிமேண்ட் விட ஜாஸ்தியாகும்..பரவாயில்லையா?..

அவன் சொன்ன தொகை..ரொம்பவே அதிகமா இருந்தது.

 "என்னங்க இது ...? எல்லாமே இப்படியா? அவள் விசனத்துடன் சொல்ல..

 

 " இதெல்லாம் சகஜம் தானேம்மா..ஒரு நாள் போல ஒரு நாள் இருக்குமா என்ன?'

 

 "அதில்லப்பா..காலம்பற காலண்டர்ல தேதி கிழிக்கும் போது ..என் ராசிக்கு "சோதனை"னு போட்டு இருந்தது..

 

அதுதான்..இன்னிக்கு இப்படி ஒண்ணு பின்னாடி ஒண்ணு பிரச்சனை'..


அவள் சொல்லவும்..

" ஒரே ஒரு ராசி பலன் வார்த்தை..ஒரு நாளோட நிம்மதியே கெடுத்து விட்டதே'..


முதல் வேலையாக..

கிச்சனிலிருந்த காலண்டரை இடம் மாற்றினார்.


நாளையும் பிரச்சனைகள் வேறு விதமாக வரும்தான்.. ஆனால்..இப்படி தேவையில்லாமல் நிம்மதி ஏன் கெடுத்துக் கொள்ளணும்..?

குட்டிக்கதை- அப்பா

 #அப்பா

#குட்டிக்கதை


' இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு..நீயும் அம்மாவும் என்னோட பெங்களூருக்கு கிளம்புங்கோப்பா.

அம்மாவுக்கு உடம்பே முடியல..உங்களுக்கும் ஏதோ ஒண்ணு படுத்தறது..எங்களுக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் பெங்களூருக்கும் ஷட்டில் அடிக்க முடியலை'..

மகன் சிவா ..அவன் பிறந்து வளர்ந்த அந்த "சுகவிலாஸ்' வீட்டின் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தன் விண்ணப்பத்தை வைத்தான்..


"ஆமாம்ப்பா..இப்போ ..ஸ்வாதியும் 11 வது போயாச்சு.. ஸ்கூள்,ட்யூஷன், இத்யாதினு..ஒரு சனி ஞாயிறு கூட ஃப்ரீ இல்ல..நீங்களும் அம்மாவும் எங்க கூட இருந்தால்..உங்களுக்கும் நல்லது ப்பா..'மருமகள் ரேவதி சொல்லி கொண்டிருந்தாள்..


" அவா சொல்றதும் சரிதான்.. பாவம் மாசம் பதினைஞ்சு நாள் டூர் வேற போக வேண்டியிருக்கு அவனுக்கு..இங்க வருவானா..ஆபீஸ் வேலையை பார்ப்பானா..? ' அம்மா வசந்தா தன் பங்குக்கு பேசினாள்..


" போடி போ..எதோ இந்த காவிரிக் கரையில என் கடைசி மூச்சு விடணும்னு ஒரு ஆசை..அந்த ரங்கநாதன் இருக்கற ஊரை விட்டு என்னை கிளப்பறியா?" கோபத்தில் விருட்டென்று உள்ளே சென்று விட்டார் ராமநாதன்.


" நான் அப்பாவை சமாதானப் படுத்தறேன்..நீங்க ஊருக்கு கிளம்புங்கோ' அம்மா தைரியம் கொடுத்தாள்.


பாவம் .ஓடியாடி வேலை செய்த அம்மாவுக்கு, ஒரு வருஷம் முன்னாடி பாத் ரூமில் வழுக்கி விழுந்ததிலிருந்து ஒன்று மாற்றி ஒன்று படுத்திக் கொண்டே இருக்கு.

வெளிச் சாப்பாடும் பிடிக்க வில்லை..


ஒருவழியா..அப்பா அம்மாவும் பெங்களூர் வந்தார்கள்.


அபார்ட்மெண்ட் வாழ்க்கை..


அப்பா கீழே போய் பார்க்கில் உட்கார்ந்து ,குழந்தைகள் விளையாடறதைப் பார்ப்பார். சாக்லேட் எடுத்துண்டு போய்டுவார்.

சாக்லேட் தாத்தா..அவருக்கு அது தான் பேர்.


இருந்தாலும்..அவருக்கு ஸ்ரீரங்கம் நினைப்பு தான். தினமும் யாராவது ஒரு ஃப்ரண்டுக்கு ஃபோன் பண்ணி, பெருமாளுக்கு அலங்காரம் , கடைத்தெரு பத்தி பேசாமல் இருக்க முடியாது.


பெங்களூர் குளிர். ஒத்துக் கொள்ளவில்லை அவருக்கு..

அடிக்கடி இருமல்,சளி கட்டல்..

சில நாள் கீழே கூட போக முடியாமல் ரூமில் அடைந்து கிடக்க ஆரம்பித்தார்.


ஏன் ஆச்சு..எப்படி..?

கண் சிமிட்டும் நேரத்தில் ..மூச்சு விட கஷ்டப்பட்டவர்..தன் இறுதி மூச்சை விட்டார்.


"ரெடியா இருங்கோ நாளைக்கு..ஸ்ரீரங்கப்பட்டினம் போய் அப்பாவோட அஸ்தியைக் கரைக்கணும்..'..


" மாமா..இங்கேயே பண்ண முடியாதா?'


" அங்கே பண்ணால் விசேஷம்..என்ன ஒரு மூணு மணி நேரம் கார்ல போய்ட்டு வந்துடலாம்' வாத்தியார் சொல்லிவிட்டு கிளம்பிட்டார்.


அங்கே..பொங்கும் காவிரியில்..ஆதிரங்கம் தல வாசலில்..அவர் அவனோடு கலந்தார்.


வீட்டுக்கு வந்தவனை..சிரித்தபடி அவர் ஃபோட்டோ வரவேற்றது..

" நீ லக்கிப்பா' ..நீ ஆசைப்பட்ட காவிரிக்கரையில் அந்த ரங்கனோட சேர்ந்திட்ட'/என்று அழ ஆரம்பித்தான் சிவா..

குட்டிக் கதை-மன_நிறைவு

 #மன_நிறைவு

#குட்டிக்கதை


அந்த ரிஸார்ட்டை நோக்கி கார் கிளம்பியது. ஸ்டியரிங்கை பிடித்திருந்த லாவண்யாவுக்கு ஒரே டென்ஷன்.


"இந்த வேலை நமக்கு தேவையா? எத்தனையோ பேரை பார்க்கிறோம்..இவனிடம் மட்டும் எனக்கு ஏன் இப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?


நாம் செய்யறது பைத்தியக்காரத்தனமோ?

அங்கே போய்ட்டு அவன் இல்லனா..?

சிட்டியை விட்டு இவ்வளவு தூரம் ஓட்டிண்டு வந்தது வேஸ்ட்டாப் போய்டுமே?


அவன் சொன்ன இடத்தில் இருப்பானா?

அவனுக்கு என்னை ஞாபகமாவது இருக்குமா?


கூகிள் மேப் வழி சொல்ல..எங்கே செல்லும் இந்தப் பாதை பாட்டு கூட வர..


இவ்வளவு தூரம் போகிறேன் என்றால் அம்மாவும் விட மாட்டாள்.

பகவானே..பத்திரமா போய்ட்டு திரும்பணுமே..


போன மாதம்..

 இதே நாள் அவள் இங்கு வந்திருந்தாள்.

இந்த ரிஸார்ட்டில் தான் அவள் நெருங்கிய தோழியின் திருமணம்.

லாவண்யா உள்ளே நுழைந்ததுமே..

"ஹைய்யா..நம்ம குடும்ப ஃபோட்டோகிராஃபர்  லாவா வந்தாச்சு ' என்று பட்டுப் புடவையிலும் நகை ஸ்டாண்டிலும்.ஜொலித்தவர்கள் இவளைச் மொய்க்க ஆரம்பித்தனர்.


ஆம்..லாவண்யாவுக்கு போட்டோ எடுப்பது ரொம்ப பிடிக்கும். எந்த கல்யாணம் , பார்ட்டி என்றாலும் அவளை எல்லாரும் எதிர்ப்பார்ப்பார்கள்.

"நான் இப்படி நிக்கட்டுமா..இங்கே ஓக்கே வா..என் ஸ்மைல் ஓகேவா.. புடவை சரியா இருக்கா?'

ஆயிரெத்தெட்டு கேள்வி கேட்டாலும் புன்னகையோடு ஆசை ஆசையாய் எல்லாருடைய ஃபோட்டோவும் எடுப்பாள்.


அவளோட ஸ்பெஷாலிட்டியே..ஃபோட்டோ எடுத்த சூட்டில் எல்லாருக்கும் அழகாக ஆல்பம் செய்து அனுப்பி விடுவாள்.


கல்யாண ஃபோட்டோகிராஃபர் ஒரு மாதம் கழித்து , 

"சார்..இதிலேர்ந்து ஒரு நூறு ஃபோட்டோ செலக்ட் பண்ணி கொடுங்கனு சொல்லும்போது மாப்பிளைக்கும் பெண்ணுக்கும்  ஸ்வாரஸியமே இருக்காது.

candid pics எல்லாம் ஏற்கனவே வாட்ஸப்பில்லும் face book லயும் வலம் வந்து கொண்டு இருக்கும் ..லாவண்யா உபயத்தில்..


அன்றும் அப்படித்தான்..கல்யாண சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு..அங்கேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு..அப்போது எடுத்த ஃபோட்டோக்களையெல்லாம் ரசித்தபடி..அவரவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்..


திடீரென்று..தன் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தாள்.

' ரொம்ப அழகா இருக்கு இந்த ஃபோட்டோ எல்லாம்' கண்கள் விரிய பேசினான்.


தன்  கசங்கிய வெளுத்துப் போன சட்டையை சரி செய்தபடி..

" என்னை ஒரு ஃபோட்டோ புடிப்பீங்களா? என்று கேட்டான்.


"அவ்வளவுதானே..இங்கே நில்லு..தலைய லேசா சாய்..கையைக் கட்டாதே..கொஞ்சம் சிரி..' ஆணைகளை பிறப்பித்து க்ளிக்கினாள்.

 ..' ..எனக்கு இந்த போட்டோ வேணுமே'..

 

 "உன் மொபைல் நம்பர் கொடு..அனுப்பிடறேன் ' லாவண்யா அவன் நிலைமை புரியாது பேச..

 

 "மொபைலா..அதெல்லாம் எங்கிட்ட ஏது?' அவன் பதில்.

 

" சரி..உன் அட்ரஸ் கொடு..நான் போஸ்ட்ல அனுப்பறேன்..'


 "அ..ட்...ரஸா.?


" அதோ அங்க கோயில் தெரியுது இல்ல..அதுக்கு எதிர்த்தாப்பல இருக்கு இல்ல..அதுதான் எங்க குடிசை..அனுப்பிடுவ இல்ல..' 

 ஆணை இடுவது போல பேசினான்.

 

 

 உன் பேரு?

 ' விஷ்ணு'..

 "அங்க வந்து கூப்டீங்கன்னா நான் வந்துடுவேன்..'

 

 " அழகா ..கண்ணாடிக்குள்ள இருக்கற மாதிரி ..செவுத்தில மாட்டற மாதிரி..செஞ்சு தாரீகளா..?

 

 சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்து ஓடினான் அந்த குட்டி வாண்டு விஷ்ணு..

 

 இன்று அவனைத் தேடித்தான் லாவண்யா வந்து கொண்டிருக்கிறாள்.

 

 அவள் கார் அங்கே நின்றதும் வேடிக்கை பார்க்க கூடி விட்டனர்.

 "விஷ்ணு..விஷ்ணு.." இங்க தானே விஷ்ணு வீடு? அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ...தலை தெறிக்க ஓடி வந்தான் விஷ்ணு.

 

 "இந்தா..நீ கேட்ட..உன்னோட ஃபோட்டோ.."

 கண்ணாடிச் சட்டத்திற்குள் கண் சிமிட்டியது அவன் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு.

 

 வெட்கத்துடன் சட்டைப் பொத்தானைத் திருகியபடி .."டேங்க்ஸ் " என்று  நாணிக் கோணி நின்ற அவனை..

 அந்த அழகான தருணத்தை க்ளிக்கினாள் லாவண்யா..தன் ஆல்பத்தில் சேர்த்தாள்..

 

இந்த ஃபோட்டோவும்..அதன் ஃப்ளாஷ் பேக்கும் எப்போது நினைத்தாலும்  அவளையறியாமல் ஒரு புன்னகையும் சேர்ந்து வரும்..


எதிர்ப்பாராத ஒன்று ..நம் கைக்கு கிடைக்கும் சந்தோஷமே அலாதி தானே?

அத்தகைய  சந்தோஷம் பெறுவதை விட..தருவது இன்னும் சிறப்புதானே?


(அது லாவண்யா கதை..அவள் கொடுத்து விட்டாள்..

இங்கே விஷ்ணுப் பிரியாவுடன் அகிலா...அடுத்த முறை போகும்போது தருவதற்கு ..ரெடியாக..😃)

எழுபதிலும்_ஆசை_வரும்

 #எழுபதிலும்_ஆசை_வரும்..

#குட்டிக்கதை


" இந்த மனுஷர் போக்கு கொஞ்ச நாளாவே சரியில்லை..எந்த வேலைன்னாலும் பர்ஃபக்ட செய்யறவருக்கு ..இப்போ என்ன ஆச்சு'.. யோசனையில் இருந்தாள்  காந்திமதி அம்மாள்.


" இவ கிட்ட எப்படி சொல்றது..சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவாள். இந்த வயசில இப்படி ஒரு ஆசையானு திட்டுவாளோ'..

மனசுக்குள் எத்தனை ஒத்திகை பார்த்தும்..காந்திமதியைப் பார்த்ததும் ..வேண்டாம் வேண்டாம் எதுக்கு?  கடந்து போக ஆரம்பித்தார் வெங்கடாசலம்..


" என்னங்க..காய்க்காரம்மா கிட்ட சொல்லி கொஞ்சம் தாராளமா பச்சை மிளகாய் கொடுக்கச் சொல்லுங்க..கத்திரிக்காயும் , வெண்டைக்காயும் வாங்கிண்டு வந்துடுடுங்க'..

அப்படியே..வர வழியில் பால் பூத்திலிருந்து அரை லிட்டர் எக்ஸ்ட்ரா பால் வாங்கிண்டு வாங்க'


காலை வாக்கிங் புறப்படவருக்கு..கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள் காந்திமதி.


ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தவர்..பையைக் கொட்ட..

" ஏங்க..கொஞ்சம் நல்ல பிஞ்சா பத்து எடுத்துட்டு வரக்கூடாதா..பாதியும் முத்தல்..


கோவமாக வந்தது அவளுக்கு..

நீங்க முன்னாடி மாதிரி இல்லீங்க..இப்படி ஏனோதானோனோனு செய்ய மாட்டீங்களே?

அது சரி..பால் ..எங்கே?

" ஓ..மறந்துட்டேன்ம்மா'..

"சரி..சரி..சாயங்காலம் போகும்போது மறக்காம  வாங்கிண்டு வாங்க..'


காந்திமதி வெங்கடாசலம் தம்பதி..

ஒரே பையன் தான் அவர்களுக்கு . கல்யாணமாகி குழந்தையுடன் நாக்பூரில் இருக்கிறான்..

இவர்களுக்கு சென்னை தான் சுகம்.


அங்கே இருக்கும் குளுரும் வெய்யிலும் தாக்குப் பிடிக்க முடிவதில்லை.


 "அப்பா..உங்களுக்கு எழுபது ஆயாச்சு..இன்னும் இப்படி எதுக்கு தனியா இருக்கணும்?'

 பையன் பேச்சுக்கு இவர்கள் ஏதோ காரணம்  சொல்லி கடத்திக் கொண்டிருந்தார்கள்.


 காந்திமதி அம்மாள்..நாள் முழுதும் பிஸி தான்..கிச்சன், பூஜை,டீவி, சீரியல் இப்படியே நேரம் முடிந்து விடும்.

வெங்கடாசலம் தான் வெளி வேலை எல்லாம் பார்ப்பார்.


" இந்தாங்க காஃபி'..நல்லா தூங்கற மனுஷனை எழுப்பி காஃபி குடிக்க வைப்பதில் அவளுக்கு எப்படி என்னதான் அலாதி சந்தோஷமோனு..நொந்து போவார்..


ஒரு வாரமாக..எப்படி இவகிட்ட பேச்சை ஆரம்பிக்கிறது என்ற யோசனையிலேயே..எந்த வேலையிலும் மனசு செல்லவில்லை..


சாயங்காலமும் வாக்கிங் போய்ட்டு வந்தவர்..சுரத்தே இல்லாமல் இருப்பதைக் கண்டாள்..

" என்ன ஆச்சு உங்களுக்கு..டாக்டர் கிட்ட போகலாம் வாங்க' கொஞ்சம் பயம் வந்தது காந்திமதிக்கு..


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நான் நல்லாத்தான் இருக்கேன்'..அடக்கினார் அவளை..

' நீங்க இப்படி சிடுசிடுனு பேசவே மாட்டீங்களேங்க..என்னதான் ஆச்சு?.'..


" உன் கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்னு ஆசை..கோவிக்க மாட்டியே?'

தயங்கித் தயங்கி கேட்க..

" சொல்லுங்க..எதுக்கு இத்தனை பீடிகை?'.


"நாளையிலேர்ந்து என்னோட காலையில் வாக்கிங்...வாயேன்....


கேட்டவர்..தொடர்ந்தார்..


 "அப்படியே காலாற நடந்து ,என்னென்னெ வேணுமோ வாங்கிட்டு நிதானமா வரலாம். கடைகண்ணிக்கும் நாம சேர்ந்தே போவோமா..?  '..கண்ணில் ஆசை..


" வீட்டு வேலை' ..அவள் இழுக்க..


" இருக்கறது நாம ரெண்டு பேர்..சிம்ப்பிளா எதாவது செய்..முடிஞ்சவரை சேர்ந்து கடைக்கு போவோம், கோயிலுக்கு போவோம்..எனக்கும் தனியாவே வெளில போய் போய்..அலுப்பா இருக்கும்மா..'..


கண்ணில் நீர் பொசுக்கென்று வர..பதிலேதும் சொல்லாமால் படுக்கச் சென்றவள்..


காலையில் காஃபி குடித்த கையோடு..அவர் காய்ப்பையை எடுக்க..

" இரண்டே நிமிஷம்..நானும் கிளம்பிடறேன்'..


காந்திமதி..தான்..ரெடி ..


இத்தனை வருஷங்களில்...முதன்முதலாக அவருடன் வாக்கிங்கிற்கு வந்தாள்.


" இதுதான் என் வைஃப்..' 

பெருமையாக அவளை எல்லாரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் வெங்கடாசலம்.

Madhyamar- topic

 மார்க்குக்கு உண்டோ மன்னிப்பு


உலக மகா நடிப்புடா மூணு பதிவு போட்டுட்டு..மூச்சை இழுத்து விட..இன்னும் மூணு போடலாம்நு அட்மின் சொல்ல..அகிலா விடாதே சான்ஸைனு மனசு குதிக்க..நானோ..பழனி மலை முருகனைப் பார்க்கப் படியேறிக் கொண்டிருந்தேன்..


முருகா..நமக்கு காமெடியும் வராது..கண்ணீரும் விடத் தெரியாது..படியேறி வந்திருக்கேன்..பரிசு கிடைக்க வழி காட்டுனு நான் சொல்ல..


' உலக மகா நடிப்புடா சாமி..எங்கிட்டேயேவா என்று எள்ளி நகையாடும் முகபாவத்தில் முருகன்.


சரி..இப்போ யார் மாதிரி செய்யலாம்.

வடிவேலு..யப்பா அவரு..கண்ணு மூக்கு வாய் கை எல்லாம் ஒரே நேரத்துல பேசுதே..ம்ஹூம்..walk out பண்ணிட்டார் வடிவேலு..

"ஆத்தா.ஆடு வளத்துச்சுனு நான் ப்ராக்டிஸ் பண்ண..என் பொண்ணு..என்னையும் வளத்ததை சேர்த்துக்கோனு கிண்டல்..


சரி..இப்போ நம்ம ஹீரோயின்ஸ் பக்கம் போலாம்னா..

சிம்ரன்க்கா..ஸ்லிம் ஆ இருக்கறவங்க தான் இவங்க பக்கம் போகமுடியும்

ஜோ..சூர்யா கோச்சுப்பார்..

ரேவதி..ரொம்ப சூட் ஆகும் எனக்கு.

.ஒரு தென்றல் புயலாகி வருமேனு நான் நடிக்க ஆரம்பிக்க..ஜன்னல் வழியா என்னைப் பார்த்த எதிர்த்த வீட்டு குட்டி க்கு ஜன்னியே வந்துடுத்துனு அவங்க அம்மா கம்ப்ளெயிண்ட்

நயனு..நோ..நோ..அவங்க மேக்கப் ரொம்ப ஜாஸ்தி..

சமந்தா...மந்தமா என்ன நடிக்க?

சுஹாசினி.. டயலாக்கே பேசக் கூடாதுனு மணி சார் சொல்லிடுவாரே..


என் கால்ஷீட் உனக்குத்தான்னு இவங்க எல்லாம் என்னைக் கெஞ்ச..


கடைசில..

என்னோட ஹீரோயின் தேர்வில் செலக்ட் ஆனது..ஆனது..யாரு தெரியுமா..?


நம்ம பைரவி அக்கா..அதேன்..

நம்ம சுலக்ஷணா க்கா..


அக்காக்கு ரொம்ப சந்தோஷம்..இத்தனை க்யூவில என்னை செலக்ட் பண்ணியே..உன் நல்ல மனசுக்குனு ..அவங்க செண்டி போட ஆரம்பிக்க..


அவங்க டெல்லி கணேஷ் கிட்ட பாட்டு கத்துக்கற சீன்..செலக்ட் பண்ணிட்டேன்.


Lighting seating arrangement எல்லாம் செய்து ..காமெராவை அட்ஜஸ்ட் செய்து ..நடிக்க ஆரம்பிக்க..அடடா..அகிலா..பின்னிட்டனு பாலச்சந்தர் சாரே வந்து அசரீரியா சொல்ல..

நம்ம வீடியோவை ப்ளே பண்ணலாம்னு பார்த்தா..அப்போதான் தெரிஞ்சது ரெகார்ட் பட்டனை தட்டவே மறந்திருக்கேனு..அப்படி ஒரு involvement ல நடிச்சிருக்கேன்..


முதல்லேயே சகுனம் சரியில்லாம போக..

ராகுகாலம் எமகண்டம் ஹோரை எல்லாம் பார்த்து ரெக்கார்டிங்க்கு உட்கார்ந்து எல்லா டயலாக்கும் பேசி முடிச்சு..

அப்பாடா..இப்போ அப்லோட் பண்ணலாம்னு பார்த்தா..face book ல மத்யமர் பக்கம்...மூச்சு நின்ன ECG மாதிரி ஓடிண்டே இருக்க..


மார்க்கு.."எங்கே மத்யமர்..எங்கே மத்யமர்னு"..நான் பாட ஆரம்பிக்க..


திறக்காத பேஜிலிங்கு ...தென்படட்டது கீர்த்தி சாரின் போஸ்ட்டுனு 'உன்னி கிருஷ்ணன் வாய்ஸில் .' போட்டி முற்றிற்று என்று மனசை ஒடிச்சார் .


எந்த சுவத்துல நான் இப்போ போய் முட்டிக்க..என் சொந்த சுவற்றிலா..இல்ல மத்யமர் சுவற்றிலா..?


மார்க்கு..பழி வாங்கிட்டியேனு சாபம் கொடுக்க..

எல்லா தீமையிலும் ஒரு நன்மை உண்டுனு உண்மை புரிஞ்சது..

21000 மத்யமர் மெம்பர்களை என்னோட வீடியோலேர்ந்து காப்பாத்தின மார்க்குக்கு..

நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தையில்லையேனு சுவர்ணலதா பாட்டு உங்க மை.வாய்ஸில் ஓடறது எனக்கு கேட்காமல் இல்லை..


அடுத்த வருஷ competition க்கு advance ஆ இப்போவே ஒரு வீடியோ ரெடி பண்ணிட்டேனே எனும் சந்தோஷத்துடன்..

உங்களிடமிருந்து விடை பெறுவது..


Madhyamar-sweer corona coffee

 #ஸண்டே_ஸ்பெஷல்

#ஸ்வீட்_கொரோனா_காஃபி


#post_3


#Peanuts_பிரதாபம்


பெங்களூர் வந்த புதுசு.  பாஷையே புரியாது....

பேக்கரி, snacks கடைகளில் என்ன ஐட்டம் இருக்குனு பேந்தப் பேந்த முழிச்சுண்டு பார்ப்பேன்..


ஒருநாள் அப்படித்தான்.. என் செல்ல ஸ்கூட்டியை நிறுத்திட்டு..பேக்கரிக்குள் நுழையும் போது..பொண்ணு கிட்ட இருந்து ஃபோன்.

அவ சொன்னது சரியா காதுல விழல.


எதோ.....'ட்ரஸ்..ட்ரஸ் நு என் காதில் விழ..


கண்ணா.. நான் மால்ல இல்லடா..மைதா மாவு ஐட்டம் இருக்கிற பேக்கரில இருக்கேண்டா..


" அம்மா..can't you hear me..

Congress வாங்கிண்டு வாம்மா....


ஐய்யயோ..என்னாச்சு இவளுக்கு..?காங்கிரஸ் ..பி.ஜே.பி நு ..இது என்ன ரகளை?


"செல்லம்..காங்கிரஸ் எல்லாம் கடைல வாங்க முடியாதுடா..🤔


கையும் ஓடல..காலும் ஓடல..நல்லாத்தானே இருந்தா..ஒரே கவலை..


அந்தக் கவலையிலும்..ப்ரெட்,பட்டர் 🍩🍮🍪🍫🍰 பிஸ்கட், சிப்ஸ், சமோசா எல்லாம் பார்த்து ஜொள்ளிண்டே இருக்க..

" அம்மா..லைன்ல இருக்கியா இல்லையா..

திருப்பி சொல்றேன் கேளு..


அவ சொன்னது எனக்கு எனக்கு எப்படி கேட்டதுன்னா..' 

"காங்கிரஸ் கடைல பீஜ்ஜா..'


"கண்ணப்பா.. அவாளும் இப்போ பிட்ஸா🍕🍕 விக்க ஆரம்பிச்சுட்டாளானு ..


நான் அழற நிலைமைக்கு போக.

கேக்கலடா சரியானு ..நான் சொல்ல..


"உனக்கு கேக் காதா..ம்மா"..என்று கடுப்பில் அவள் கத்த..


ஓ..இவ பெங்களூர் வந்து கன்னடம்.கத்துக்காமல் தெலுங்கு பேச ஆரம்பிச்சுட்டாளே என்று..ஒரே குஷியில்..


"ஓ..கேக் ..காதா..". 'வேண்டாமாடா.'.( தெலுங்கில காது means வேண்டாம்)


நான் கேட்டது தான் மிச்சம்..

ஃபோன் கட்டாச்சு..

டொங்குனு மண்டையில் அடிக்கிற மாதிரி வந்து விழுந்தது மெசேஜ்.


Please buy Congress kadelakai beeja..


" படிக்கவே தெரியலையே..இதை எப்படி அவருக்கு புரிய வைக்கிறது..'


கடையில ஒரே கூட்டம்..

பேர் எழுதி வெச்சிருக்கிற பதார்த்ததில் இது இருக்கானு பார்த்தால்..அப்படி ஒண்ணுமே தெரியலை..


உத்து உத்து பார்த்தப்பறம் புரிஞ்சது..இது ஏதோ விடலை..சாரி..கடலை சம்பந்தப்பட்ட விஷயமோனு ....


ஐயோ..கடவுளே..அடுத்தது என் turn..


"என்னவென்று சொல்வதம்மா..வஞ்சி அவள் want அதனை'/னு  யோசிச்சிண்டே..


Bhaiy...yaa.......mobile ஐ (நடுங்கிண்டே)..நீட்டினேன்..

"இது பேக்கு'...என்று பேக்கு மாதிரி நான் முழித்தபடி.


"என்ன கொடுப்பான்..எவை கொடுப்பான்' பாட்டு ஞாபகம் வர..


அந்த கடைப் பையர்..கண் முன்னாடி முழிச்சிண்டிருந்த..

ஒரு பாக்கெட்டை நீட்டி ..70 rupees..பில் மாடப்பா..குரல் கொடுக்க..


எட்டப்பா..கிட்டப்பா..இது யாரு இந்த மாடப்பா..

Payment முடிச்சதும்..என்கையில் ..

என் கையில்...


Peanuts பொட்டலம்...சாமி..இதுக்கா இத்தனை பில்டப்பு..


இதைப் போய் வாங்கிண்டு வர கஷ்டத்துக்கு..வீட்ல பண்ணிடலாம்னு முடிவோட..

#Congress_kadlekai..நம்ம மனையில் மணக்க ஆரம்பிச்சது..


இதுவும், வேக வெச்ச வேர்க்கடலை,வேக வெச்ச கொத்துக்கடலை..

அப்படி lightbஆ மாங்காய் துருவல், பச்ச மிளகாய்..கொத்தமல்லி..


#பீச்_சுண்டல் ...#மாங்காய்..ஆஹா ஜொள்ளிங்..


பீச்சுக்கு இப்போ போகமுடியாது..ஆனால்..பீச்சு சுண்டலும் ..மாங்காயும் வீட்ட்லயே ..


என்ன ..🏖 கடல் காத்து, காலில் ஒட்டும் மணல், கரைக்கு வந்து வந்து எதையோ தேடி..மீண்டும் உள்ளே போகும் அலைகள்..


அதெல்லாம் ரொம்ப மிஸ்ஸிங் தான்.


மீண்டும் ..இதெல்லாம் கிடைக்கும் நமக்கு.


அவற்றின் அருமை உணர்ந்த நாம்..


இயற்கையை ரசித்து அனுபவித்து விட்டு வருவோம்..

நசுக்கி அழித்து வர மாட்டோம்னு சபதம் எடுப்போம்.


ஒருவழியா..எழுதி முடிக்க..பொண்ணு சூடா இஞ்சி ஏலம் டீ..என்..கையில் கொடுக்க..


" அன்பு மழை பொழிகிறது..ஒவ்வொரு sip யிலும்  உன் கைமணம் தெரிகிறது' என்று பாடிக் கொண்டே..

இந்த 3 வது போஸ்ட்டை முடிச்சுட்டேன்.🙏


பொட்டலம் ரெடி😀😀

Madhyamar-மதிப்பு (இழப்பு)

 மதிப்பு (இழப்பு)


hurricane Florence ..live ஆ இப்போது சில  சானல்களில் ஒளிப்ரப்பாகிக் கொண்டிருக்கிறது.


இரண்டு நாள் முன்பு இதை பத்தி நியூஸ் வர ஆரம்பித்த போது..நம்மூரு புயல் மாதிரி தான்னு ஒரு அசால்ட்டா இருந்து விட்டேன்.


அன்று நடு இரவில் மகளிடம் வந்த live update தூக்கக் கலக்கத்தில பார்த்து விட்டு இழுத்து போர்த்தி தூங்கிட்டேன்.


அடுத்த நாள் காலையில கண் முழிக்கும்போது அவளிடமிருந்து இன்னொரு செய்தி..

" நான் இங்கேயே தங்கிடவா..இல்ல கிளம்பி வேறெ எங்கியாவது போகவா'?


இப்போதான் கொஞ்சம் சொர்ருனு மண்டைக்கு ஏற.கூகுள் ஆண்டவரின் உதவி நாடிய போது தீவிரம் புரிந்தது.

கொஞ்ச நேரத்தில் பெண்ணே வந்தாள் வாட்சப்பில்.'

 அம்மா....இரண்டு முறை கடைக்கு போனேன். குடிக்க தண்ணீர் கிடைக்கலை.bread,biscuit ,fruits வாங்கி வந்துட்டோம்.

பவர் கட் ஆகும்மாம்..அதனால் வீட்ட்ல இருக்கிற சின்ன உத்தரணி ல கூட தண்ணி ரொப்பி வைச்சாச்சு..( எப்புடி நம்ம training நு collar உசத்தினேன்..இருந்தாலுல் மனசில ஒரு உதைப்பு)


என் ஃப்ரண்டஸ் எல்லாரும் almost கிளம்பிட்டா..college லேர்ந்து விடாம hurricane update  msg with precautionary warnings  வந்தபடி இருக்கு .ஆனா இப்போ டிக்கட் எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கே..என்ன பண்ணட்டும்? என்றாள்.


'காசு பத்தி கவலை விடு.முதல்ல எந்த டிக்கட் கிடைக்கிறதோ அதில் கிளம்பிடு. சொல்லிட்டேன்.

அடுத்த அரை மணியில் சோக ராகம் பாடியபடி.' வாங்கிட்டேன்ம்மா..ஆனால் இத்தனை செலவு பண்ணி போகணுமா..can't i manage by myself here நு கேட்டாள்.


இயற்கை சீற்றம், இத்தனை முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தும் அந்த இடத்தை விட்டு நகர வில்லை என்றால் அது நம்மோட முட்டாள்தனம். பைசா போனால் போகட்டும். 


எப்போதும் போல கட கடநு instruction தர ஆரம்பித்தேன்.


முதல்ல முக்கியமான records கையில் எடுத்துக்கோ. 

மீதி things எல்லாம் neat aa pack பண்ணி raised stool or table ல வை.

less luggage ..more comfort. திடீரென்று பயண ரூட்டில் மாற்றம் வந்தாலும் prepared aa இருக்கணும்..


blah..blah..blah..


நீ கிளம்பறங்கறதால..உனக்காக வாங்கி வெச்சிருக்கிற supplies ஐ..உன்னோட ஃப்ரண்ட்ஸ் இங்கேயே stay பண்ணுபவர்களுக்கு கொடுத்துட்டு கிளம்பு (ஆஹா..நானே எனக்கு ஒரு ஷொட்டு கொடுத்து கொண்டேன்)


ஒகே..மா..நான் ரெடி ஆகிட்டு கூப்பிடறேன்னு ஃபோன் கட் செய்யும் அந்த micro second ல் என்னையும் அறியாமல் வந்து விழுந்த கேள்வி..


' Indian rupees ல எவ்வளவுடா டிக்கட் விலை'. 72 rupees ஆ? 

Local flights கூட இத்தனை விலையா


ஏன் கேட்டேன்..?

எப்படி கேட்கலாம்..?

எத்தனை முரண்பாடு சில நொடியில்..என் எண்ணத்தில்..?

என்னைப் பத்தி என்னை நினைச்சிருப்பாள்?

உடனே ஃபோன் செய்து sorry கேட்க..

அம்மா..இப்படி நீ கேட்டால் தான் நீ நார்மல் என்று அர்த்தம். chill maa ..எப்போதும் போல் அவள்.


நம் மூளையில் எண்ண முடியாத அளவு விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

நாம் நல்லவராக இருக்கும் அந்த நொடியிலேயே..வேறொரு கோபமோ..பொறாமையோ, கற்றலோ,அனுபவமோ பற்றிய சிந்தனையும் செயலும் ஓடிக் கொண்டே தான் இருக்கு.

ஒரு குழந்தையை அதட்டும் அதே நொடியில்..இனிமெ செய்யாதே ..சமத்து இல்ல என்று வாரி அணைத்து கொஞ்சுகிறோம்.

மனித இயல்பு அதுதான்.


ஃப்ரண்ட்ஸ் வீட்டில் பத்திரமாக இப்போது.

என் மனதுக்குள் தோன்றியது.." இந்த மனசு இருக்கே'!??


this is in other words called " mutual possession of worlds'

Madhyamar mango recipes

 வேறென்ன..வேறன்ன வேண்டும்..

மாம்பழம் இருந்தால் போதும்னு..

மாம்பழப் பிரியர்கள் எல்லாரும் கொண்டாடும் சீஸன் இது..


" மேடம்..மாம்பழம் வந்துருக்கு..வாங்கிட்டு போங்க" ..எங்க ரெகுலர் கடைக்காரர் கூப்பிட கூப்பிட..


காத்திருந்தேன் நான்..அந்த சில மாம்பழங்களுக்காக..


அதுவும் எந்த வித கெமிக்கல்ஸும் சேர்க்காமல்..

இயற்கை முறையில் பயிரிட்டு..கவனித்து..

கிடைக்கும் பழங்களின் ருசியே அலாதி தானே.


Thanks to Waygreen Mohan


இவர் நம்ம #மத்யமர்_தாங்க..


போன வருஷமும் இப்படி அருமையா மாம்பழம் சாப்பிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.


சுவை கண்டாச்சு..


இந்த வருஷமும் விடுவேனா என்ன?


Organic products என்றாலே கொள்ளை விலை என்னும் நம் எண்ணத்தை மாற்றும் வகையில்....மிக நியாயமான விலையில் ..பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட பழங்கள் அத்தனையும்..

சுவையோ சுவை.


டப்பாவைத் திறந்ததும்..கமகம வாசனை..

பேப்பரில் சுத்தி பழுக்க வைக்க..


ஆகா..' உனக்கெனத்தானே இந்நேரமா..நானும் காத்திருந்தேன்னு" மனசுக்குள் பாட்டு ஓட.


மாம்பழம் சாப்பிடும் ஃபீல் இருக்கே..

சொர்க்கம் தான் போங்க..


நமக்குள் இருக்கும் #செஃப் முழித்துக் கொள்ள..


அப்படியே சாப்பிட கொஞ்சம்..

அழகா நறுக்கி கொஞ்சம்..

#mango_jam கொஞ்சம்

#mango_pudding கொஞ்சம்..

#மிளகாய்ப் பொடி தூவி கொஞ்சம்..


இப்படி "மாங்கோ இல்லாமல் நானில்லைனு' ..


"எனக்கு சாதம் கம்மியா வை.. மாம்பழம் சாப்பிட்டுடறேன்" ..அப்பா "எங்கே அவள்..என்றே மனம்னு" ..மாம்பழத்தோட ஐக்கியம்.


நம் #மத்யமர்_சந்தையில் இவர் மாம்பழமும் இடம் பெற்றால்..


 ' யான் பெற்ற இன்பம்..பெருக இம்மத்யமர் தளம்" என்பதற்காவே இந்தப் பதிவு.

 

இப்படி ஒரு இடம் இருக்கு என்று எனக்கு அறிமுகப்படுத்திய மத்யமர் Vidhya Suresh க்கு என் நன்றிகள் பல..


அவர் farm பற்றி குறிப்புகள்;


Location of the farm:


The farm (waygreen) is near Puttur (Andhra Pradesh) place named “NARAYANAVANAM – famous Shri Kalyana Venkateswara Swami Temple is in the same place.


Narayanavam - Marriage Venue of Lord Venkateswara - Padmavathi was bought up in Narayanavam.Moreover, it was here the marriage of Lord Venkateswara was celebrated.


 


We are cultivating without any fertilizers and pesticides for the past 6 years and growing following


1.       Mangoes


2.       Groundnut (Process groundnut to groundnut oil using wooden churner)


3.       Sesame seeds (Process groundnut to groundnut oil using wooden churner)


4.       Paddy ( store paddy for 6 months and then process to produce rice)


5.       Started to do vegetables in very small scale to check feasibility


Thank you

Madhyamar meet

 (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா மெட்டில் கொஞ்சம் முயற்சி செய்தேன்..

மத்யமர் சந்திப்பு..ஒரு மெகா event ஆக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்)


மீட் எல்லாம்..

மத்யமர் கூடும்

மீட் ஆகு..மா....?


மெம்பர் எல்லாம் 

மத்யமர் மெம்பர் 

போலா..கு.மா..?


போஸ்ட் எல்லாம் 

மத்யமரின் 

போஸ்ட் ஆகு..மா..?


ஜெம் எல்லாம்

மத்யமர் தரும்

ஜெம் ஆகுமா..?


சங்கர் Shankar Rajarathnamஅவர்.       .( கன்னித் தமிழ் ..)

தந்த தொரு

மத்யமர் ...

தளம்.


சங்கம் பல தோன்றுமொரு

மத்யமர் தளம்...


கீர்த்தி வாசன் Keerthivasan Rajamani இங்கே ஒரு.

 su(o)n அல்லவா..ஜொலிக்கும் 

sun அல்லவா..?

நாளும் புது பொலிவு தரும்

creative Vasan அல்லவா?

crea..tive ..Vasan அல்லவா?


மின்னல் போல் அப்ரூவ்

செய்யும்..பெண்ணல்லவா?

மதுரைப் பெண்ணல்லவா..?


மீனாக்‌ஷி பெயருடனே..புயலும்

உண்டல்லவா..?..புயலும்

உண்டல்லவா?

Meenakshi Olaganathan


காமெடியும் 

கருத்தும் சொல்லும்

கண்ணா...த்தா...எங்க

கண்ணா..த்தா..


நட்சத்திரம் போல மின்னும்

அந்த

ரோஹிணி ..

அல்லவா..?

அந்த ..

ரோஹிணி அல்லவா?

Rohini Krishna


கார்ட்டூன் போட்டு..

கலக்கித் தள்ளும்

செல்லமல்லவா..?

எங்கள் செல்லமல்லவா?

ரேவதி என்ற பேரு கொண்ட

சொக்கத் தங்கம்

உண்டல்லவா..?

சொக்கத் தங்கமல்லவா?

Revathi Balaji


சத்தமில்லாமல்..

சூப்பர் 

போஸ்ட் போடும்..

சங்கரன் அல்லவா..?

சுந்த..ரேசன் அல்லவா..?

சிந்தனையைத் தூண்டும்..

சிங்கை சிவா

அல்லவா?

சிங்கை..சிவா 

அல்லவா..?

Sivasankaran Sundaresan


பதிவு போட்டு 

பதக்கம் வாங்கும்

படை அல்லவா..?

நாங்க..

பெரிய..

படை அல்லவா?


பகையுமில்லா..

புகையுமிலா..

நட்பு ..வட்டம்..

அல்லவா?

மத்யமர்..

நட்பல்லவா?..

( மீட் எல்லாம்..மத்யமர் மீட் ஆகுமா?)

Madhyamar-ஓர்_உயிரின்_வரவு

 #ஊரடங்கில் 

#ஓர்_உயிரின்_வரவு..


காலையில் ..

பால் எடுக்க கதவைத் திறந்தால்..

பட்டது என் முட்டைக் ( சோடா பாட்டில்) கண்ணில்..

பட்டுப்போன மரத்தின் அடியில்..

முட்டையொன்று..அழகாய்..


இப்போ வருவோம் கதைக்கு..


என் எதிர் வீட்டு அம்மணி..

மெத்தப் படித்தவங்க..மேல்நாடு சென்றவங்க..

பறவை க்ளப்பு, பட்டாம் பூச்சி க்ளப்பு..எல்லாத்திலும் active மெம்பருங்க..

பாதி நாள் சுற்றுப் பயணம்..வெளிநாட்டு

சுற்றுலா பயணிகளுக்கு ..நம்மூர் பூச்சி பொட்டு காண்பிக்க..


அபார்ட்மெண்ட் அரை அடி அறையில்

ஆலமரம் வளர்க்க ஆசையுண்டு..


வீட்டுக்குள் வெளிச்சம் இல்லையென்று..

வராண்டாவில் கொண்டு வந்து வைத்தார்..

வளர்ந்த மரமொன்றை....சிறையாய்..

சின்னத் தொட்டியிலே..

வாசம் செய்தன பூச்சிகள் அதன்..இலைகளில்..

 


குட்டி வாண்டுகள் அதை தொட முயலும்

கிளைகளோ..முறையின்றி வளரும்

கண்ணைக் குத்த ரெடியாக இருக்கும்..

கவனிப்பார் யாருமின்றி..கலங்கிக் கிடக்கும்.


Garden ல் வையுங்களேன்னு சொன்னால்..

கர்வமாய் ஒரு பார்வை.

என் மரம்..நான் எங்க வேண்டுமானாலும் வைப்பேன்னு பதில்..


காய்ந்து போகிறதே ..தண்ணி விடட்டுமானு கேட்டால்..

உங்க தண்ணி காட்டற வேலையெல்லாம் இங்கே வேணாம்னு ஒரு லுக்கு..


கர்ஃப்யூ வந்தப்பறம்..பொண்ணு வீட்டிலேயே இப்போ வாசம்.

கவனிக்க ஆளில்லாமல்..அந்த மரம்..


பேசுவேன் மரத்துடன்..உரம் கொடுப்பேன் வார்த்தையில்..


"போட்டு உடைக்கவா உன்னிடம் ..மனதில்

பொத்தி வைத்த பாரத்தை...

பேச ஆரம்பித்தது..அம்மரம்..


"இலையெல்லாம் உதிர்ந்து போய்

இருக்கேன் எதற்கு இங்கே?

இருக்கும் தொட்டிக்குள்ளேயே..என்

இறுதிப் பயணம் நடக்கட்டுமென்று..

இருளில் இருக்குமெனக்கு ..விடிவேது? என்றது.


"உன் பிறப்புக்கும் ஒரு அர்த்தம் உண்டு..

உணர்வாய் நீயும்  ஒருநாள்..என்

உள்ளுணர்வு சொல்கிறது..

உறுதியாய் இரு 'என்றேன்.


அதிசயம்..நடந்தது..


அடைக்கலம் கேட்டு வந்தது..

அந்த ஜோடிப் புறாக்கள்..

அன்பிலே ஒரு கூடமைத்து.

அமைதியாய் வாழ்ந்தது..


பெண்புறாவின் பிரசவ வேளை..

பறந்து பறந்து அலைந்தது ஆண்புறா..

வேளை வந்தது..

வெளியே வந்தது..வெண்முட்டை ஒன்று..


ஆசையாய்..பார்த்தோம் ..

நானும்..மகளும்..

அம்மா..அப்பா..அன்பு..

அனைவருக்கும் ஒன்றுதான் என்று.


"அம்மா..கதவை சத்தமா திறக்காதே "..என்று பொண்ணு..ஆர்டர்.

அடை காக்க..அம்மா புறா அந்த காய்ந்த 🌲மரத்தொட்டியில் அமர்ந்திருக்க..


" யாருக்கும் பயனில்லாமல்..அழிந்தே போகுமுன்.. தொட்டியிலே..உருவாச்சே..

குட்டி உலகம் ஒன்று '

அந்த..பெயர் (எனக்கு) தெரியாத மரம்..

கடைசியில்.. 

பாடம் புகட்டியதோ எனக்கு?


Everyone has a wonderful mission in life. And everyone comes to your life for a reason.


அன்பு சூழ் உலகு..ஒவ்வொரு 

"அடி'யிலும் ..உணர்த்தும் அவன் செயல்..

Madhyamar-ஆன்மீகம்

 #ஆன்மீகம்

(மிக தாமதமாக பதிகிறேன். ஆனால் மனதில் உள்ளதை மத்யமர் நண்பர்களிடம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?)


பூஜையெல்லாம் உண்டா உன் வீட்ல? நீ Buddhism க்கு மாறிவிட்டயாமே? இப்படி ஒரு சிலர்.Buddhism follow பண்றேன்னு சொல்ற..எங்கே வீட்டில் ஒரு புத்தர் படமும் காணோமே?.


இளக்காரத்தின் உச்சத்தில் பலர்..

இருக்காதா பின்னே? கேட்டவருக்கு சொல்கிறேன்..என்னிடமும் இருக்கு..உன்னிடமும் இருக்கு அந்த்க Buddha nature. அதைத்தான் நான் காண்கிறேன் என்பேன்.


பிள்ளையாரோடு பேச்சு வார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் அம்மா..

அருகம்புல் வைத்து அனுதினமும் பூஜை செய்வாள்.

அம்பாளின் பூரண அனுக்கிரஹம் பெற்றவள்..

அப்படிப்பட்டவளின் பெண்ணாகிய நான்..ஜப்பானிய மொழியில் ஒரு மந்திரம் chant செய்ய ஆரம்பித்தபோது அதிர்ந்தாள்.


இது என்ன நம்ம குடும்பத்தில் இல்லாத ஒரு நம்பிக்கை திடீர்னு உனக்கு எப்படி? தெய்வ குத்தம் ஆகிடும்..எனக்கு பயமா இருக்கு என்று புலம்ப ஆரம்பித்தாள்.

நீங்களும் என்னடாநு யோசிக்கறது புரிகிறது.


 நம்ம மதத்தில் இல்லாத எதைத் தேடி ..ஏன் அங்கே போகணும் ..இப்படி பல கேள்விகள் எழலாம்.

என்னைப் பொறுத்தவரை..என்றுமே வந்த வழி, வழிபட்ட தெய்வங்கள் என்றுமே என் துணை..

இந்த Buddhism என்பது எனக்கு philosophy of life புரிய வைத்தது. அதுவும் நான் வணங்கும் எல்லாத் தெய்வங்களின் செயல்தான் என்னை இந்த புத்த மதம் இழுத்ததற்கும் காரணமோ என்று நினைப்பேன்.


எந்த ஒரு பூஜையும் புனஸ்காரமும் நிறுத்தவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையம் உணர்கிறேன். 


ஒவ்வொரு நாளும் ஒரு புத்துணர்ச்சி யுடன் தொடக்கம். 


what is the purpose of life? வேறென்ன..மகிழ்ச்சியான வாழ்க்கை..

அது எப்போது கிடைக்கும்? 


inner transformation is the key to human revolution என்று ஒவ்வொரு நாளும் என் சொல்,செயல்,எண்ணம் fine tune செய்கிறேன். 

கெஞ்சி கூத்தாடி இதைத் தா அதைத் தா என்று கேட்டது போக..win or lose ,i determine to fight till the my last breathe என்ற மன உறுதி தருகிறது இந்த philosophy. 


why me ? என்ற எண்ணம் போய்  try me என்ற எனர்ஜி.


குழப்பம்,கோபம் எல்லாம் இருந்தாலும் உடனே வெளியே வரச் செய்யும் என்னுடைய இந்த Nichiren Daishonin Buddhism practice.


lotus sutra வின் சாராம்சங்கள் படிக்க படிக்க மனம் லேசாக..

இப்போது முன்னை விட எல்லாவாற்றிலும் சிரத்தையாக ..பக்தியும் பூஜையும் அதிகமாக ..

வாழ்க்கை ஒட்டம்.


உலகம் பூராவும் ஒரு extended family எனக்கு.

Madhyamar-ஒரு_அலர்ட்_பதிவு

 #பொது

#ஒரு_அலர்ட்_பதிவு


smoking மட்டுமல்ல  erratic  sleeping ம் கூட injurious to health தான்.

அதை விட..எதுவுமே செய்யாமல் நமக்கென்ன என்று வாழ்க்கை நடத்துவதும் injurious to health தான்.


எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு குஜராத்தி குடும்பம். uncle ம் Aunty ம் இங்கே செட்டில் ஆகிவிட்டார்கள். ஒரே பெண் US ல்.

குடும்பத்தலைவரான போதும் சரியாக ஒரு வேலைக்கும் போனதில்லை. அப்படியே போனாலும் நிலைப்பதில்லை.

நல்ல chain smoker. ரொம்ப கோவக்காரர்..

ஆனா..நல்ல மனுஷர் தான்.


aunty தான் ஸ்கூலில் வேலை பார்த்து.. 60+ லும் ட்யூஷன் எடுத்து ஜீவனம். 

பொறுமை..பொறுமை..அப்படி ஒரு பொறுமை.


ரொம்ப லேட்டாக தூங்கும் பழக்கமுள்ளவர் எஜமானர்.

விடி காலை 3 மணிக்கு ஒரு டீ போட்டு குடித்து விட்டு தூங்கப் போனார் என்றால் 11 மணிக்கு பள்ளியெழுச்சி..3 மணிக்கு லஞ்ச். அவர் தூங்கும்போது யாரும் தப்பித் தவறி எழுப்பக் கூடாது. அவர் கத்தலுக்கு பயந்து இந்தம்மாவும் எப்போ அவரே எழுந்து வரட்டும்னு காத்திருப்பாள்..


போன வாரம்..இதே மாதிரி தான். கிச்சனில் காலி டீ கோப்பைகள் ..அவர் உள்ளே தூங்கிக் கொண்டிருக்க இந்தம்மாவும் வேலை முடிச்சு..11 மணி ஆகியும் எழுந்திருக்கலையே என்று குரல் கொடுக்க..பதிலில்லை..மீண்டும அரை மணி கழித்து ் வந்து கூப்பிட்டும் அசையாமல் இருப்பதைக் கண்டு.பக்கத்தில் போய் பார்க்க..பகீர்..அசைவில்லை.


பக்கத்து வீட்டார் துணையுடன் டாக்டரை அழைக்க..அடுத்த இடி..uncle இறந்து 6 மணி நேரம் ஆகிவிட்டது. கொஞ்சம் பார்த்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என்றும்

.தூக்கத்திலேயே massive attack என்றும் சொன்னபோது..

மனசு உளைச்சல் மிக அதிகமாச்சு..


சில வாழ்க்கைப்ப்பாடங்கள் கற்காமலேயே சென்று விட்டார்.

பொறுப்பே ஏற்காத வாழ்க்கை.

புகையுடன் வாழ்க்கை..

ஆணாதிக்கம் என்று கூவ நான் இதை பதியவில்லை..ஆனால் பாவம் தான்.

ஐயோ..அந்தம்மா பாவம்னு பரிதாப அலை எழுப்ப இல்லை இந்தப் பதிவு. 

தட்டி எழுப்பவே இல்லை அவரை எப்போதும்..

அவர் போக்கில் விட்டது எதில் கொண்டு போய் விட்டது?


என்ன சாதித்தார் இப்படி இருந்து என்று உறவினர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அங்கே வந்த ஆண்ட்டி..' நான் உனக்கு செலவு வைக்காமல் செத்துப் போய்டுவேன்.கவலைப் படாதே' என்று அடிக்கடி சொல்வாராம். அதை மட்டும் கடவுள் அவருக்கு தந்து விட்டார் என்று அழ ஆரம்பித்துவிட்டார்..

அடுத்து..

அவர் ஒரே மகள்.." நான் தான் அவருக்கு கடைசி மரியாதை செய்வேன். வேறு யாரும் வந்து செய்ய வேண்டாம்' என்று அப்பாவுக்கு ஈமக் கிரியை செய்தாள். 

எண்ணங்களின் மாற்றம்.மனதுக்கு நிறைவைத் தந்தது.


அவரின் இந்த சிகரெட் பழக்கமும்  மிகத் தவறான sleeping pattern ம்..ஒரு உத்வேகம் இல்லாத வாழ்க்கையும்.. விழிக்காமலேயே ஒரு வாழ்க்கை முற்றுபெற்றது..சரியா?


் கடைசி மூச்சு வரை கடமையைச் செய்வோம்.் குடும்பம் என்ற அழகான கூட்டில்..கோவம் என்னும் முள்ளை ஏன் வைத்து கஷ்டப்படணும்?

தீய பழக்கம் என்று தெரிந்தும் ..தீயில் வேகும் வரை தேவையா?

இருக்கும் நாட்கள் வரை இன்பமாய் இருக்க ..தடுத்தது முன் ஜென்ம கர்ம வினையா..

இதை எல்லாம் மீறி..

ரொம்ப கஷ்ட்டபடாத முடிவும்.

பெண்ணின் கையால் காரியமும்..

அவர் வாங்கி வந்த வரமா?

இன்னும் யோசித்தபடி இருக்கேன். விடை தெரியவில்லை

Madhyamar- akshaya tritiyai

 #what's_your plan பரம்பொருளே..


காலையில் கண் விழிக்கும்போதே என் தோழியிடமிருந்து வாட்ஸப்பில் மெசேஜ் ' திவ்யா  hospitalised. blood transfusion is going to be done please pray..please'.


தொண்டைக்குள் ஒரு பந்து வந்து அடைத்தது.


திவ்யா..என் தோழியின் 30 வயது பெண்.

சில மாதங்களுக்கு முன்பாக கேன்சரில் ஒரு வகை தாக்கியிருப்பது தெரிய வர..

உடல் ,மனம்..எல்லா வகையிலும் போராட்டம் ஆரம்பம்.


" அம்மா ஏன் என்கூட விளையாட வர மாட்டேங்கிறாள்' என்று அழதும்,சோர்ந்தும் போகும் சின்ன பெண் குழந்தை.

எந்த வேலை செய்யப் போனாலும் மனசு பூரா அந்தப் பெண்ணின் நினைவும் ப்ரார்த்தனையும்..


கொஞ்ச நேரத்தில் என் மிக நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து ஃபோன்.

விசும்பல் சத்தம் மட்டும் அந்த முனையிலிருந்து..

' நான் இன்னும் எதுக்காக உயிரோட இருக்கேன்?'..

பதில் பேசவொ..ஆறுதல் வார்த்தை சொல்லவோ எனக்கு மனசில் தைரியமில்லை..


சில காலமாகவே ஏதோ ஒரு உடம்பு படுத்திக் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு..

sugar ஜாஸ்தி,கிரியாட்டினைன் ஏணி வைத்து ஏற்ற்ம், கொலஸ்ட்ராலோ கொள்ளையாய், இரத்த அழுத்தம் இஷ்டம்போல் ஏற்ற இறக்கத்தில்..

இப்போது கிட்னியும் வேலை செய்வதைக் குறைக்க..

ஒரு காலத்தில் ஓட்டமும் நடையுமாய் ஊர் பட்ட வேலை செய்த உடம்பும் காலும் இப்போது..ஒத்துழைக்க மறுக்க..


அடுத்தடுத்து வந்த செய்திகள்.." எப்படியாவது என் மகளுக்கு உயிர் பிச்சை கொடு ' என்று வேண்டும் ஒரு தாய்.

' வாழ்ந்தது போதும்..வழி காண்பியேன் உன்னை அடைய ' என்று அல்லல் படும் ஒரு உயிர்.


'அவரவர் கர்மா ' என்று ஒரு வார்த்தை ..எல்லாரும் சொல்லக் கேட்கிறோம்.


இந்த அக்ஷயத் திருதியை நாளில் எதுக்கு இப்படி ஒரு பதிவு என்று நினைக்கலாம்.

எது கேட்டாலும் நடக்குமாமே இன்று?

அதுதான்..


மனசு சந்தோஷம் என்றாலும் மத்யமர் ..

கஷ்டம் என்றாலும் ஷேர் பண்ண மத்யமர்.


நகையோடு நோயாற்ற வாழ்வும் பெற..வேண்டுவோம் இந்த நாளில்..


'

Madhyamar-படம்_பார்த்து_கதை

 #படம்_பார்த்து_கதை

#பதிவு_2

#வாலிபங்கள்_ஓடும்...


"பாட்டி இன்னுமா ரெடியாகலை நீங்க..? தாத்தா ..எப்படி சூப்பர் ஸ்மார்ட்டா வந்து உட்கார்ந்துண்டு இருக்கார் பாருங்க..'..

பேத்தி சுஜி குரல் கொடுக்க..


"இதெல்லாம் இப்போ எங்களுக்கு தேவையா..காடு வா..வாங்கறது ..வீடு போ போ போங்கறது..:

பாட்டி சொல்லவும்..


" குழந்தை ஆசைப்படறா..அவ பிறந்தநாள் அதுவுமா..அவ மனசு நோகடிக்காதே.. ஆச்சு..இன்னும் இரண்டு மாசத்தில் மேல் படிப்புக்கு கிளம்பிப் போய்டுவா'..


பாட்டி எங்கியாவது ப்ரோக்ராமை கேன்ஸல் செய்து விடுவாளோனு பயத்தில் ..தாத்தா பேசிக் கொண்டிருந்தார்..


அந்தப் பெரிய வீட்டில் மகனும் மருமகளும் இருந்தாலும்..பேத்தி ஹாஸ்ட்டலில் இருந்து வந்ததுமே வீடே கலகலப்பாகிடும்.


எப்போதும் அவரவர் அறையில் வாசம்..கொஞ்சம் சலிப்பாகத் தான் இருக்கும் தாத்தாவுக்கு.


"இவர்கள் ரெண்டு பேரும் பேசிக்கறதே இல்லையே...தாத்தா மொபைலுடனும்,பாட்டி சீரியலுடனும் இப்படி பொழுதைக் கழிக்கிறாங்களே.."..

யோசித்ததன் விளைவு தான்..இந்த அவுட்டிங்..


ஆச்சு..பாட்டி..செம்ம க்யூட்டா ..அந்தக் கால ராணி போல எளிமையா அழகா ட்ரெஸ் பண்ணி ரெடியாகி வந்தாள்.


" ஆஹா..இது எனக்கு புடிச்ச பிங்க் கலர் டாப்ஸ் ஆச்சே..அடடே..அந்த ப்ரேஸ்லெட், கடிகாரம்....கொஞ்சம் கொசு வர்த்தி தாத்தா மனசில் சுத்த..

காரில் ஏறினவர்களை ஆசையாகப் பார்த்தாள் சுஜி.


தாத்தாவும் பாட்டியும் முதன்முதல்ல மீட் பண்ண அந்த ஃபோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றாள்..

" ஒரு ரவுண்டு சுத்திட்டு வரலாம் வாங்க'..

சுஜி சொல்ல..

" காலு...' இழுத்தாள் பாட்டி.

"அதெல்லாம் நான் உன்னை பிடிச்சு கூட்டிண்டு போறேன்..நீ வா.."

தாத்தாவின் உற்சாகம்..

அடடா..பார்க்கவே ரம்மியமாக இருந்தது.


ஒவ்வொரு தூணிலும் நின்று..ஆயிரம் கதைகளை..கண்ணால் பேசிக் கொண்டார்கள்.


ரொம்ப நாள் கழிச்சு அவர்கள் இப்படி சிரித்துப் பேசுவதை தன் காமிராவுக்குள் ரொப்பித் தள்ளினாள்.. சுஜி.


சுஜி ஊருக்கு கிளம்பி விட்டாள். 

காலேஜ்,படிப்பு, மற்ற வேலைகள்..

அப்படி மூழ்கிய நேரம்..


கண்ணில் பட்டது..அந்த போட்டி விளம்பரம்..

ஒரு பெரிய புகைப்பட நிறுவனம் நடத்தும் போட்டி..

" வயோதிகத்தில் வாலிபம்' ..இந்தத் தலைப்பில் புகைப்படம் அனுப்புமாறு இருந்தது..


தன் புகைப்பட கலெக்‌ஷனில் அவளுக்கு மிகவும் பிடித்த இந்த 

 வெட்க முகப் பாட்டியும்..வாலிபம் திரும்பிய தாத்தாவின்  ஃபோட்டோ..

 அனுப்பினாள்..

 

. சர்வதேச அளவில் முதல் 🎁 பரிசு பெற்றது அவள் புகைப்படம்.


அந்தப் படத்துக்கு பலர் கதை எழுதினார்கள்..கவிதை எழுதினார்கள்..


ஃபோனில் சொன்னபோது தாத்தா..பாட்டிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.


ஒரு வருடம் வேகமாக ஓடியது

லீவுக்கு ஊருக்கு வந்தாள். 


வீட்டில்..இப்போது.. அவளை வரவேற்றது

பாட்டி தாத்தாவின்  ஃபோட்டோ மட்டுமே..

 


ஃபோட்டோவிலிருந்து அவர்கள் சொன்ன..' தேங்க்ஸ்" இவளுக்கு மட்டும்  கேட்டது.


அழத் தொடங்கினாள்..சுஜி

Madhyamar- சமையல்_பாடம்

 #சமையல்_பாடம்


"மாமி..பாயசம், தயிர் பச்சடி,ஸ்வீட் பச்சடி, கோஸ்மல்லி, கறி, அவியல்,போளி, துவையல் மாங்காய் பிசறல்..எல்லாம் வரிசையா வெச்சிருக்கேன். மிஸ் பண்ணாமல் பரிமாறுங்கோ'

 அஸிஸ்டெண்ட் ஆணை பிறப்பிக்க ..சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பரிமாறும் படலம் ..


இலை ரொம்பியாச்சு..சிக்னல் கிடைச்சாச்சு..அட்டாக் ஆரம்பம்..


என்னை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் ஒரு மை.வாய்ஸ்.


பாயஸத்தில் கை வைக்கும் நேரம்...

ஒன்பது கஜப் புடவை லேசாக தெரிய..காலில் இட்ட மஞ்சளும் குங்குமம் ஜொலிக்க..கதவோரத்திலிருந்து ரெண்டு கண்கள் மட்டும்..தேர்வு எழுதிய மாணவனாய்..


புரிந்தது..அவள் தவிப்பு..

சமைத்து கொடுத்து விட்டு...சாமியை வேண்டியபடி நின்றவள் உள்ளத்தை...

' கண்டு கொண்டேன் ..கண்டு கொண்டேன்'

அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூஜிக் தான்..


"பாயஸம் மதுரமா இருக்கு' ஆரம்பித்தேன் நான்.


பக்கத்திலிருந்த என் அத்தை பெண் ' மாமி போளி என் favourite . சூப்பரா இருக்கு' .


எதிரில் உட்கார்திருந்த ஒரு வயதான மாமி..' பருப்பு உசிலி வாயில போட்டு பார்...ஏக ஜோர்'


'மாமி..அந்த பைனாப்பிள் பச்சடி ரெசிபி எனக்கு கொடுங்கோ.

.'மாமி..இப்படி தெளுவா எப்படி ரசம் வெக்கறேள்'..

#Ripple_effect


வெந்து புழுங்கும் வெயிலில் பொங்கி போட வந்தவள்..மனசு  இன்பத்தில் வழிய..


' மாமி..உங்க அட்ரஸ் கொடுங்கோ' பரிமாறல்கள் ஆரம்பம்.


வெத்தலை பாக்கு வாங்கி கிளம்பும்போது.. 'மாமி.. இந்தாங்கோ ரெண்டு வடையும் போளியும் எடுத்துண்டு போங்கோ உங்க அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ' என்று special கவனிப்பு எனக்காக்கும்.


#பாராட்டு. .இது வாங்கும்போது சந்தோஷப் படறோம். 

கொடுக்கும்போது ஏன் கஞ்சத்தனம் படறோம்?


யார்  எதை எப்போது  செய்தாலும் ஒரே ஒரு சின்ன பாராட்டை கொடுத்துப் பாருங்க..

வ்டையும் போளியும் மட்டுமல்ல.

கூடை கூடையா அன்பும் கிடைக்கும்.


என்னடா இது..சனிக்கிழமை காலையில் சமாராதனை சாப்ப்பாட்ட்டுக்கு போயாச்சானு நினைக்கிறீங்களா..?

உள்ளே இருக்கும் அகிலானந்தமயி கொஞ்சம் வெளியே தலை காட்டினாள்..நீங்க மாட்டிக்கிட்டீங்க அம்புட்டுதேன்.😀😀

Madhyamar- curfew சமையல்

 #Curfew_kitchen.

மொறு மொறு போதும்..கொஞ்சம்

மருந்தும் சாப்பிடுவோமே..


#சுக்கு_மல்லி_காபி..


"என் ஜீவன் பாடுது .

உன்னைத்தான் தேடுதுனு..


காலையில் தினமும் கண்விழித்தால்

நான் கை தொழும் தேவதை யம்மா..

என் ஃபில்டர் காஃபியம்மா..

இப்படி பாடிக் கொண்டிருந்த நான் எப்படி மாறிட்டேன்..


காஃபி இல்லாத வாழ்க்கை என்னதுனு சொன்னது போய்..

இப்போ சுக்கு மல்லி காஃபி இல்லாத வாழ்க்கை என்னதுனு பாட ஆரம்பிச்சிட்டேன்..


கோயம்பத்தூர் ஸ்டேஷனில்..கம கம..சுட சுட இந்த காஃபி குடிக்காமல்..

நான் ட்ரெயின் வாசப் படி ஏறினதோ இறங்கினதோ இல்ல..


அதனால் ..வீட்டில் எப்பவும் கிடைக்கும் ஒரு வஸ்துவாக..என்னை..வஸ்த்தாது ஆக்கியது..

இந்த காஃபி..


இப்போ இந்த அகிலாவுக்கு வந்த சோதனை..

டப்பா காலி..

என்ன செய்யலாம்னு தோணித்து..

நாமே செய்தால் என்ன?


அம்புட்டுதேன்..

அந்த பாட்டிலில் எழுதிய ingredients எல்லாம் என்கிட்ட டப்பாவுக்குள் தாச்சி தூங்கீ..


'நீ வருவாய் என நான் நினைத்தேன்" ..

மருந்து சாமான் எல்லாம்..

மகிழ்ச்சியில் துள்ள..

அப்புறமென்ன..


கடை பொடி..இனிமே நம்மகிட்ட..வாலாட்ட முடியாது..💪

செம்ம டேஸ்ட்..😋


பாருங்க..

இது மாதிரி எத்தனையோ விஷயங்கள் நம்ம ஃப்ரிட்ஜுக்குள்ளும், ஷெல்ஃபிலும் 

காலாவதியாகும் முன் எனக்கு கதி உண்டோனு பாட்டு பாடிக் கொண்டு இருக்கும்..


நிதானமா எடுத்து பாருங்க..

கரெக்டா..அதை உபயோகப்படுத்துங்க..


இந்த நேரம் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.


கொத்தமல்லி விதை..2 ஸ்பூன்

கண்டந்திப்பிலி..2 or 3

அரிசி திப்பிலி..2

ஏலக்காய் 7 or 8

மிளகு..4 

கிராம்பு 2

சுக்கு.. ஒரு விரல் நீளம்

நாட்டுச்சக்கரை 3 spoon

கல்கண்டு..1 ஸ்பூன்

பனங்கல்கண்டு 1 ஸ்பூன்..


( எனக்கு sweet கொஞ்சம் தூக்கலா வேணும். I am sweet person you know😁)


எல்லாம் சேர்த்து லேசா வறுத்துக் கொண்டேன்..

சுக்கு..திப்பில் எல்லாம் கொஞ்சம் தனியா பொடி பண்ணிட்டு மிக்ஸியில் போட்டு சுத்தினேன்..


'மல்லி..மல்லி..

சுக்கு மல்லி..

காஃபி மணக்குதடினு' 

ஆடிப் பாடி ஆரோக்கியமா இருப்போம்..

Madhyamar-என்ன_பொருத்தம்

 #படம்_பார்த்து_க(வி)தை

#பதிவு_1


#என்ன_பொருத்தம்


மெட்ரோ ரயிலில் சந்திப்பு

மேட்ரிமோனி எதுவும்  இல்லாத ..

மேட்ச் மேக்கர்ஸ் மூக்கு நுழைக்காத..

மனசு மட்டுமே பொருந்திய மேரேஜு..


Match நல்ல match என்று

அட்சதை போட்டு வாழ்த்து..


மூட்டையும் கட்டியே...

"Mail" ல்  ஊரை விட்டு கிளம்பியாச்சு..

"Express" போல வாழ்க்கை..

"Duronto" வேகத்தில் நிற்காமல்..நீர் ஓட

துரத்தித் துரத்தி நானுமிங்கே..


March past ல் ஓடி ஓடி..என்

மூச்சும் நின்னுடும் போல இருக்கே..


"சப்தபதி'யையே..

"சதாப்தி" வேகத்தில் சுத்தினவரு நீரு..

இப்போ..சஷ்டி 

அப்தபூர்த்தி வரப்போகுது..

அட்டகாசம் ஓயலையே..


 பைக்கை தேடி ஓடுறீரே..

 கைப்பையைத் தூக்கி ..

 வைஃப் நானு ஓடியாறேன்..

 லைஃப் பார்ட்னரே..நில்லும்மையா..


மனசுக்குள்ளே சிரிச்ச மச்சான்.

மனக்கணக்கு  போட்டாரே..


" பாரியாள்" உன் பாதம் நோக..

பர்த்தா நானும் விடுவேனா..?


வேகமாக போவேனே..

வாகனத்தில் வருவேனே..

பாதி தூரம் நீ கடக்குமுன்னே..

பில்லியனில்.. உன்னை அமர வைப்பேனே..😀😀


எப்படி என் ஐடியா..என்றே..

ஐயாவும் ....கேட்க..

அசடு ரொம்ப வழியாதீரும்..

ஆடு ஒண்ணு பாக்குதங்கேனு..

அம்மணியுஞ் சொன்னாளாம்..

பத்து வரிக் கதை

 #பத்து_வரிக்_கதை.


என்ன மத்யமர் நட்புகளே..

Popular ஆக்குவோமா..நம்ம bala hariன்

பத்து வரிக் கதை..


 எடுத்து நாம் விடலாம் நம் கதையை தோழா..தோழி.


என் கதை

#வலி


சார்..இந்த மாதிரி வீடு இந்த ஏரியாவிலேயே உங்களுக்கு கிடைக்காது.

வீட்டை சுற்றிக் காண்பித்த படி பேசினார்  சுந்தரம்..


தண்ணீ..கஷ்டமே கிடையாது பாருங்க..லைட் போடாமலே ரூம்ல எத்தனை வெளிச்சம்..


இந்த கொய்யா மரம் என் பொண்ணு ஆசையா நட்டது.ஒரு விதை கூட இருக்காது..அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். பூச்செடியெல்லாம் என் வூட்டுக்காரி பார்த்து பார்த்து வளர்த்தது.பூஜைக்கு வெளியே பூவே வாங்க வேணாம் நீங்க..


பக்கத்து வீடெல்லாம் ரொம்ப நல்ல மனுஷங்க..எதுனாலும் ஓடி வந்துடுவாங்க..


தனி வீடா இருந்தாலும் திருட்டு பயமே கிடையாது இந்த இடத்தில..


வாசல்ல் வந்து இப்படி ஊஞ்சல்ல உட்கார்ந்தால் எப்படி காத்து பாருங்க..இந்தக் காலனில மட்டும்தான் எல்லா வீட்டு வாசல்லயும் மரம் நட்டு இருக்கும்.


கடையெல்லாம் பக்கத்திலேயே இருக்கு..நீங்க ஃபோன் பண்ணினால் கூட வந்து சாமான் கொடுத்துடுவாங்க..


வாடகை எல்லாம் பார்க்காதீங்க..ரொம்ப ரொம்ப ராசியான வீடு சார் இது..

சொல்லும்போதே சுந்தரம் கண்ணில் கண்ணீர்.


இந்த வீட்டுக்கு நிறைய டிமாண்டு சார்..

நல்ல வேளை உங்களுக்கு நல்ல நேரம்..

இந்தாங்க புடிங்க சாவி..


வாடகை வீடானாலும் தான் வாழ்ந்த வீட்டை விட்டு செல்லும் வலியுடன் விடை பெற்றார் சுந்தரம்

Madhyamar- summer camp

 Summer camp..

Summer vacation வரும் பின்னே.. summer camp வரும் முன்னே..


காலங்கார்த்தால இப்போ எல்லாம் நியூஸ் பேப்பர் எடுத்தா.. உள்ளேயிருந்து கொத்து கொத்தா pamphlets. ( நல்ல வழ வழ பேப்பர்.. எண்ணெய் பாத்திரம் அடிலயும், சாமி விளக்கு கீழ வைக்க நன்னா யூஸ் ஆகும்..அல்பை.. மைண்ட் வாய்ஸ்) . ஸ்கூட்டியை நிறுத்திட்டு சாமான் வாங்கிண்டு வரதுக்குள்ள ஒர் bundle  advertisement leaflets  breakல சொருகிஇருக்கு.மரம்,லைட்கம்பம்,வேலி,

சுவர் எங்கே பார்த்தாலும் தூக்கில தொங்கும் banners


Summer camp.. summer camp..  அபார்ட்மெண்ட்டில் இப்போ ரொம்ப ஹாட் டாபிக் இதுதான். இந்த வாண்டுகளை இல்லாட்டி எப்படி மேய்க்கிறது இந்த பொசுக்கும் வெயில்லில்..அம்மாக்களின் புலம்பல்ஸ்.


அம்மாவெல்லாம் அஞ்சு மணிக்கே ரெடி ஆகி ரெண்டு,நாலு சக்கர வாகனங்களோட சாரதி தொழில் ஆரம்பம். கொஞ்சம் லேட்டோ , கோச்சிங் மாஸ்டர் அரை கிரவுண்டை ஆறு தடவை சுத்த விட்டுடுவார். ட்ராப் பண்ணிட்டு சைக்கிள் gap ல வந்து breakfast பண்ணி வச்சுட்டு ஓட்டமாய் ஓடி வீட்டுக்கு கூட்டிண்டு வர.. குளிக்க வைச்சு ,பண்ணி வைச்சதை ஒரு அடை அடைச்சு அடுத்த கிளாசுக்கு ஒட்டம். டான்ஸ் ,பாட்டு, கிராஃப்ட் இன்னும் எத்தனை வகை.. நாள் முழுக்க ஒட்டம்..இதுக்கு நடுவுல ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்விம்மிங் சூட், கண்ணாடி, skating  ஷூ, ball,bat இத்யாதி..இத்யாதி..Shopping..


அம்மாக்களுக்கு நிறைய நட்பு கிடைக்கும் காலம். நம்மால் வாயை மூடிண்டு சும்மா இருக்க முடியாதே.. லேசா புன்னகையில் ஆரம்பிச்சு, போன் நம்பர் மாத்திண்டு.. 

சமையல், அரசியல், புடவை, வெய்யில் எல்லா அரட்டையும். Phone contact லிஸ்ட் பெரிசாகும்..

வருஷா வருஷம் இந்த மேளா நடப்பதால் , யோகா கிளாஸ் யோகிதா 2017,  ஸ்விம்மிங் கிளாஸ் சிம்ரன் 2017.. இப்படி ஒரு பெரிய வட்டமாகும்..’


”எங்க காலத்திலனு” சொல்லக்கூடாதுனு சத்தியப் பிரமாணம் எடுத்தாலும் ..


இந்த ஓட்டை வாய் சும்மா இருக்காதே.


பாண்டியும், பரம பதமும், கேரம் போர்டும் கல்லாங்காயும் ,சீட்டுக் கட்டும், பல்லாங்குழியும் கண்ணாமூச்சியும், காவலாய் வடாமுக்கும், கடைக்குப் போய் ..கூட மாட ஒத்தாசையும் ,குச்சி ஐஸ் வண்டியும் ,குளுகுளு நுங்கும் ,காத்து வாங்க பீச்சுக்கும், காலார நடையும் கை நிறைய தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும்..


என்னமா சந்தோஷம்..


பாட்டி வீடு என்பது ஒரு சொர்க்க பூமி..


ஆனால் இப்போ யமன் வந்தாலும் .. இருப்பா கொஞ்சம் இன்னியோட episode பார்த்துட்டு வரேனு பெரியவர்கள் எல்லாம் மெகா சீரியலுடன் ..


 அப்பாவுக்கோ எப்பவும் ஆபீஸ்.. conference call கையில் laptopம்.. வீட்டுக்குள்ளே எல்லாரும் இருந்தும் தனிமை தான் .. அந்த் தனிமைய் போக்கும் இந்த குட்டீஸ் camps.


Vacation  ல தான் physical,mental and creative abilities புரிந்து கற்றுக்கொள்ளணும்.. 

there is no second opinion about this. நானும் இந்த phase ல் ஓடி இருக்கேன்..


Permission வாங்காம பக்கத்து வீட்டுக்கு க்கூட போகமுடியாது..

ஒரு phone பண்ணிட்டு வந்திருக்கலாமே  என வரவேற்கும் இக்காலம். 


everything has become very formal and coated with luxury . 

The role of the parents and elders is very crucial.

முதல் அடி எடுத்து வைப்பது நாமாக இருப்போம். 

நம் குழந்தைகளுக்கு உறவுகளையும் நட்புகளையும் அறிமுகப் படுத்துவோம். அதன் மதிப்பு என்னு சொல்லி தருவோம்..


பெற்றோருக்கும் பசங்களுக்கும் இது நல்ல புத்துணர்ச்சி தரும்.. அடுத்த லீவ் எப்போ வரும்னு காக்க ஆரம்பிச்சிடுவாங்க..


உன்னைச் சொல்லி குற்றமில்லை..

என்னைச் சொல்லிக் குற்றமில்லை..

காலம் செய்த கோலமடி

Camp செய்த குற்றமடி… 

இப்படி யாராவது எச போடுமுன் முழித்துக் கொள்வோம்.

Summer camp களோடு சுற்றங்களையும் 

கொஞ்சம் அறிந்து கொள்வோம்...அறிய வைப்போம்.


Gen next ….let them master in strengthening human bonds too.

Happy holidays to the kids

Madhyamar-தண்ணீர்_சிக்கனம்_தேவை_இக்கணம்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#தண்ணீர்_சிக்கனம்_தேவை_இக்கணம்


( மன்னிச்சு..மன்னிச்சு..எப்போதும் போல last minute submission)


#அந்த_யமுனா_நதியோரம்..அம்மா..அம்மா..


 டெல்லி ஸ்டேஷனில் வலது காலை எடுத்து வைக்கும் முன்னே..வூட்டுக்காரர் சொன்னார்..' பாஷை கத்துக்கறயோ இல்லயோ .."பானி' பத்திரமா சேமிக்க கத்துக்கோ" என்பதுதான்.


தலைநகரில் எனக்கு தலையில் விழுந்த கொட்டு..

'மோட்டார் டாலோ' ( மோட்டார் போடு என்பதன் ஜுனூன் effect) நாம் ஹிந்தியில் பேசிய முதல் sentence. . ஹவுஸ் ஓனரம்மா 'மோட்டார் சலாதோனு' சொல்லச் சொல்லு உன் பீவியை என்று பயமுறுத்தல்.


பணிக்கர் டிராவல் பக்கத்து வீடு. "வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த வீட்டில் தண்ணியேதுனு' ..உத்தரணி முதல் கொண்டு பானி ..பானி தான்.


அடுத்து போனோம்..

 #அந்த_நர்மதை_நதியோரம்

 ஆஹா..வாசலில் விந்தியமலை தரிசனம் 

 வேலைக்கு போவார் வூட்டுக்காரர் நர்மதை நதி ப்ராஜக்ட்டுக்கு..வீட்ட்ல பக்கெட் பக்கெட்டா தண்ணி ரொப்பி வைச்சு தாவித் தாவிதான் நடக்கணும் பாத் ரூமுக்குள்ள..

 மூட்டை அடுத்து கட்டினோம்..


 டேஹ்ராடூன்..

#அந்த_கங்கைக்_கரையோரம்

 கங்கைக் கரை வாசம்னு போக..அங்கே கங்கா வாட்டர் சப்ளைனு லாரி லாரியா தண்ணீர் வாங்கணும் வெயில் காலத்தில்..

 சரி..கேதார் அடிவாரத்தில் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்த வீட்டுக்காரரை பார்க்கப் போனால்..கங்கை ப்ரவாகமா வீட்டு சுவர் ஒட்டி அப்படி ஒரு சத்தத்தோடு ஓடும். ஆனால்..வீட்டுக்குள் பக்கெட் தண்ணிக்கு படாத பாடு..

' கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண் மானிவள்"னு சோக கீதம்.


 #அந்த_பாலாற்றங்கரையோரம்..

 லீவுக்கு சென்னை வந்தால் ,gate போட்டு மூடிய கிணறு.. பாலைவனமான பாலாறு தண்ணீர் தொட்டி..

 இப்போ சோகத்தையெல்லாம் கொட்டிட்டேனா..


 #தண்ணீர்_சிக்கனம்.

 எல்லாரும் நிறைய பாயிண்ட்ஸ் சொல்லிட்டீங்க..

 Adding some extra here;


• இப்போதெல்லாம் வாஷிங் மெஷின் இருப்பதால்..தோய்க்கும் தண்ணீர்னு கிடைக்கறதில்லை. அதனால் பாத் ரும்களை துணியால் துடைத்து விடுகிறோம். சுத்தமாகவும் இருக்கு.யாரும் வழுக்கி விழும் அபாயம் இருக்காது.


• பசங்க ஸ்கூல் வாட்டர் பாட்டில் மீந்த  தண்ணீரை வீட்ல இருக்கும் பக்கெட்டிலோ pot லயோ ஊற்றணும.


டம்ளர் டம்ளரா தண்ணீர் வைப்பதை நிறுத்தி ..டைனிங் டேபிளில் ஒரு கூஜாவில் தண்ணீர். ஒரு டம்ளருடன்.

வேண்டுமென்ற அளவு குடிக்கலாம்.


ஹோட்டலுக்கு போனாலும் வாங்கின வாட்டர் பாட்டிலில் இருக்கும் மீதமுள்ள தண்ணீரை எடுத்து கொண்டு வந்துடுவேன். ( செம்ம திட்டு ஒரு காலத்தில் விழுந்தது. இப்போ திட்டினவங்களும் ..திருந்திட்டாங்க)


•அபார்ட்மென்ட்களில் லான்களை பசுமையாக வைத்திருக்கணும்னு அவ்வளவு தண்ணீர் போகிறது. 


•அதே போல ஒவ்வொரு அபார்ட்மென்ட் டிலும் swimming pool இருப்பதை குறைத்து..common swimming pool for each lane or area வுக்கு வகை செய்யணும்.


•இந்த முறை பெங்களூரிலேயே தண்ணீர் கஷ்டம் என்பதால்..water sense taps உபயோகிக்க சொல்லி உத்தரவு வந்தது எங்கள் அசோசியேஷனிடமிருந்து.


•எங்க வீட்டுக்கார்ர் ஆஃபிஸில்  

•waste  water treatment செய்த நீர்தான் floor cleaning and in wash rooms.


#கடைசியா_ஒண்ணு..

நம்மளோட எந்த பப்புவும் வேகாத இடம் நம் வலது கரம்.

' தண்ணி தான் வருதில்லனு' தா..ரா..ளமா செலவழிப்பவர்கள்.

கிச்சன் பைப்பை slow ஆ வரும்படி செய்து விட்டேன். 

Daily class தான்..lecture தான். ஐயோ அம்மணி..நான் தண்ணியை கம்மியாவே செலவழிக்கிறேன்னு கை கூப்பல்😀😀


#நம்ம_பக்கமும்_கொஞ்சம்_ திருத்திப்போமே..


வெய்யில் நேரம் பாத்திரம் காய்ந்து போகும். So..kitchen sink ல் outlet ஐ ஒரு துணியால் அடைத்துவிட்டு , கொஞ்சம் தண்ணீர் ரொப்பி பாத்திரத்திரத்தை ஊறப் போட்டு எடுக்க..தேய்த்து அலம்பும்போது தண்ணீர் consumption குறையும்.


அடுத்து..நாம் எத்தனை பாத்திரம் உபயோகிக்கிறோம்.


அடுப்பில வைக்க ஒண்ணு டேபிளில் வைக்க ஒண்ணு ஓவனில் சூடு பண்ண ஒண்ணு..கடைசியா..ஃப்ரிஜ்ட்க்குள் தள்ள ஒண்ணு..

#கடாய்_to_குளிர்சாதனம்_வரை

சொப்பு சொப்பாய் எத்தனை பாத்திரம். So ..cut the usage of vessels.


ப்ளாஸ்டிக் containers...air tight நு வாங்கிட்டு அதுல இருந்து வரும் மசாலா வாசனை போக்க..எத்தனை தேய்க்க வேண்டியிருக்கு.

Let's go back to stainless steel again.


நம் சந்ததிக்கு water tablet கொடுக்க வேண்டாம். Water table ஐ உயர்த்த நம்மால் ஆன எல்லா வழியும் மேற்கொள்வோம்.


நதிகள் தானாகவே இணைகிறது..

நாம் யார் தடுக்க அதை.


மார்க்கம் தெரிந்தும் ..மனம் இல்லாத கொடுமை..மாந்தர்கள் படும் அல்லல்.


வழி பிறக்கணும்..🙏🙏

Madhyamar- movie review

 சினிமா..சினிமா


தமிழும் ஹிந்தியும் கொஞ்சூண்டு இங்கிலீஷ் படமும்..பார்க்கும் என்னை..


சினிமா பார்க்க மொழியே தேவையில்லை என்று ..செளகரியம் பண்ணிக் கொடுத்திருக்கு.. Amazon prime, net flix  எல்லாம்.


கிச்சன் வேலை முடிஞ்சதும்..நம்ம வீட்டு டெண்ட்கொட்டாய் ஆரம்பம்..


பக்கத்தில தட்டை, பிஸ்கட், தண்ணி பாட்டில் சகிதம் ..ஆஜராகிடுவேன்..


இன்னிக்கு நாங்க பார்த்த படம் '

#mogra_phulala " என்னும் #மராட்டி படம்.


சினிமா ஆரம்பிச்சது..

ஹீரோ intro..அவரோட குடும்பம்,அவரோட ஸ்கூட்டர்....


வீட்டுக்காரர்: செலவே இல்லாமல் படம் இல்ல..

நானு: ஆமாம்..ஆமாம்..

வீ.கா( கொஞ்ச நேரம் கழித்து): back ground score ரொம்ப soothing இல்ல..

நானு: ஆ..மாம்..


இன்னும் சில நிமிஷம் கழித்து..

வீ.கா; இந்த லோகேஷன்..simple இல்ல.

நானு;.ம்ம்ம்..

வீ.கா: ஹலோ..தூங்கறயா? அப்பொ நான் இங்லீஷுக்கு மாறிக்கவா?


அப்போதான்..அங்கே ஹீரோயின் entry..

ப்ளூகலர் கார் ஓட்டிக் கொண்டு கருப்பு கலர் புடவையில்..steering பிடித்தபடி, கார் ஜன்னலிலிருந்து எட்டிப் பார்க்கிறாள்..

அம்புட்டுதேன்.

Bean bag லேர்ந்து bounce ஆகி ..

நிமிந்து உட்கார்ந்தவதான்..


வீ.கா: இந்த மாதிரி நிறைய தமிழ் படம் இருக்குல்ல..

நான்; உஸ்..சும்மா நோய் நொய்னு...(மை.வா)

வீ.கா: அந்த பாட்டு என்ன ராகம்னு கண்டுபிடிக்க முடியறதா?..

நான்: silent mode ல்..


படம் முடிஞ்சது...

வீ.கா: நல்ல மெசேஜ் இல்ல..' Learn to say no and live for yourself' . ..அதுவும் for a change..ஹீரோ உணரும் தருணங்கள்..


என் கிட்டேர்ந்து வர reaction க்காக என் முகத்தையே அவர் பார்க்க..


நானு: ஆமாம்ப்பா..அந்த ஹீரோயின் Sai deodhar பார்த்தீங்களா?..


எல்லா ஷாட்டிலயும் plain sarees  with design blouse. Combination எவ்வளவு அழகா இருந்தது இல்ல..? கடை யெல்லாம் திறக்கட்டும் ..நானும் இப்படி ஒரு கலெக்‌ஷன் பண்ணலாமானு யோசனையில் இருக்கேன்..😀

ஆனா..ஹீரோயின் ..எது கட்டினாலும் நன்னா இருக்கும் ? எனக்கு சூட் ஆகணுமே? 🤔

கவலையில் நான் பேச..😭


வீ.கா: இத்தனை நேரம் இதையா பார்த்துண்டு இருந்த? கதை என்னனாவது தெரியுமா?

நானு: அது ..அது..!!!?


நல்ல படம்..சிம்ப்பிள் படம்..பாருங்க..

வாழ்க்கை தத்துவத்தை பக்கம் பக்கமா வசனம் பேசாமல்..அழகா சொன்ன படம்.

Madhyamar- அன்னையர் தினம்

 அம்மானா..சும்மாவா?


பிறந்தநாள் உனக்கு

பாயசம் வெச்சியா என்றால்

பழக்கமே இல்லை என்பாள்.

எப்போது பேசினாலும்

எடுத்தவுடன் கேட்பாள்

சாப்பிட்டியா நீயென்பாள்

சாம்பார் பொடி இருக்கா

ரசப் பொடி காலியாயிருக்குமே

எங்கோ இருந்தபடி

எடை போடுவாள் எல்லாம்

குரல் வைத்தே கண்டுபிடிப்பாள்

கோபமா..குதூகலமா என்றே

அப்பறம் பேசறேன் என்பேன்

எப்போவுமே நீ இப்படி என்பாள்

உற்றார் உறவினர் கதையெல்லாம்

ஒன்று விடாமல் சொல்வாள்

பேத்திகளுக்கு பிடித்ததெல்லாம்

அத்துப்படி அவளுக்கென்றும்

பார்த்து பார்த்து செய்வதில்

பரம சந்தோஷம் அடைவாள்

அன்னையர் தினமெல்லாம்..

அவளும் கொண்டாடியதில்லை..

எடுத்துச் சொன்னாலும்

எதுக்கிந்த ஆரவாரமென்பாள்..

சண்டை பல பொழுது

சலிக்காமல் நடந்தாலும்

சமாதானக் கொடி பிடித்து

சரி சரி விடென்பாள்.

என்னை விட்டு நீ சென்றாலும்

எங்கம்மா இப்படித்தான் பண்ணுவானு

என்னை நான் நிலை நாட்டிக்க

அடிக்கடி வரும் உன் நினைவு

அன்னையர் தினத்தில் 

மட்டும் தானா என்ன..?

Madhyamar-தலை தீபாவளி

 #சண்டே_ஸ்பெஷல்

#தலைதீபாவளி


எங்கம்மாவுக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப அட்வான்ஸா ப்ளான் பண்ணனும். 


நவம்பரில் தீபாவளி.

 quarter century க்கு முன்னாடி ஃபோன் பேசறதே luxuryநு நினைச்ச காலம்.


ஆகஸ்ட் மாசத்திலிருந்து ஒவ்வொரு லெட்டர்லயும் 'மாப்பிளைக்க்கு என்ன காய் பிடிக்கும்,என்ன ஸ்வீட் பிடிக்கும், அரிசி மாவு பட்சணம் பிடிக்குமா கடலை மாவா..

குழம்பு ரசத்தில வெல்லம் போட்டா தான் சாப்பிடுவாரா. ஹார்லிக்ஸா..காஃபியா.பூஸ்ட்டா..எல்லாமே வாங்கி வெச்சுடட்டுமா?

நான் அதுக்கு ஒரு பதில் எழுதினால்..' இல்லையே..கல்யாணம் முடிஞ்சு நீங்க சாந்தா ஆத்துக்கு சாப்பிடப் போனப்போ..அவர் இதுதான் சாப்பிட்டாராமே' நு counter attack பண்ணுவா..


அவர் பிடிச்சு தலையாட்டறாரா பிடிக்கலைனு சொல்றாரானு புரியாத புதிரா இருந்த காலம்.


அடுத்த பெரிய கவலை..' symphony கேட்டுட்டு லேட்டா தூங்கற மாப்பிள்ளை சுப்ரபாததுக்கு முழிச்சுப்பாரா என்று..' அதெல்லாம் பட்டாசு சத்தத்தில் எழுந்துடுவார்மா..cool நு பதில் போட்டேன்.


அடுத்த லெட்டர்..' சங்கு மார்க் லுங்கியோட கங்கா ஸ்நானம் பண்ண முடியாதே ...சொல்லி வெச்சுடு முன்னாடியேனு ஒரு குண்டு போட்டாள் 

கஷ்ட்டமான task இதுதான். 


முக்கியமா ஒண்ணு கேட்க மறந்துட்டேனேனு ஒரு நாள் ஃபோன்.

' அவர் வெத்தலை பாக்கெல்லாம் போட்டுக்க மாட்டாரே..எப்படி அவர்கிட்ட காலங்கார்த்தால வெத்தலையை மெல்லுனு கொடுக்கறது என்று முன்னூறு ரூபாய் செலவு பண்ணி கேட்டாள்.

இப்படி நாளொரு லெட்டரும் பொழுதொரு கேள்வியுமா என் மண்டை வெடிச்சது.

ஓகே.ஓகே..கவலைப் படாதேனு பதில் போட்டபடி நான்.


guest யார் யார் வருவார் என்று லிஸ்ட் ரெடி.

சமையல் மட்டுந்தான் பண்ணல.


இங்கே இவருக்கோ tension mounting.

எங்க பட்டாளத்தை எப்படி face பண்ணப்போறோம்னு திகில் அவர் face ல தெரியும்.


count down started.

அந்த நாளும் வந்தது..

எல்லாம் தடபுடலாக ..

ஒன்றே ஒன்று மிஸ்ஸிங்..

my வூட்டுக்காரர் presence..

திடீர்னு ஆஃபிஸ் டிரைனிங்னு 3 மாசம் ஸ்வீடனுக்கு ஜூட் விட்டுட்டார்.

இப்படியாக ஒரு தலை தீபாவளி..


எப்படியும் இரண்டு மாப்பிள்ளைகள் வருவாங்க எனக்கு.

கலாய்ச்சுட மாட்டேன்..

Madhyamar-மங்கையாராய்_பிறப்பதற்கே

 #மங்கையாராய்_பிறப்பதற்கே..


இவள் ஒரு time keeper.

அலாரத்துக்கே ஆப்பு வைப்பவள்.


இவள் ஒரு master chef.

மனு போடாமலே மெனு தயாராக்குபவள்.


இவள் ஒரு advisor

அருவியாய் அறிவுரை கொட்டுபவள்.


இவள் ஒரு engineer.

உறவுப் பாலம் கெட்டியாய் அமைப்பவள்.


இவள் ஒரு HR.

வலையில் தேடி பல க்ரூப்பில் இருப்பவள்.


இவள் ஒரு store keeper.

ஷெல்ஃபும் பரணியும் கைவசமாக்கியவள்.


இவள் ஒரு CBI officer.

ஆதாரத்தோடு அமுக்கி பிடிப்பவள்.


இவள் ஒரு finance minister

debit credit தெரியாமலே deficit காட்டுபவள்


இவள் ஒரு defence minister.

கராத்தே, குங்ஃபூ கற்காமலே குடும்பத்தைக் காப்பவள்.


இவள் ஒரு சுறுசுறு transporter

சாரதி வேலையில் சலிக்காதவள்.


இவள் ஒரு saviour.

அஞ்சறைப் பெட்டியிலும் பதுக்கி urgent க்கு உதவுபவள்.


இவள் ஒரு நடமாடும் encyclopedia.

விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பவள்.


எல்லாவற்றுக்கும் மேல்..


இவள் ஒரு திறமையான artist.

வீட்டையே கோவிலாக மாற்றுபவள்.


வீட்டிலோ,வெளியிலோ, வேலையிலோ

 portfolio எதுவானாலும்

பின்னிப் பெடல் எடுக்கும் 

பெண்மணிகள்..என்றும்

கண்மணிகள்...கண்ணின்..மணிகள்.


மைசூர்ப்பாவோ..

Mandala ஆர்ட்டோ..

மண்டை உடைக்கும் டாஸ்க்கோ..

Risk எனக்கு rusk நு சொல்லும்..

எல்லா மத்யமர் மகளிருக்கும் என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்💪💪💪💪💪

Madhyamar- நெஞ்சம்_மறப்பதில்லை

 #நெஞ்சம்_மறப்பதில்லை.


#குட்டிக்கதை..என் கதையும் கூட


"லிஸ்ட் படி எல்லாம் எடுத்துக்கணும். அங்கே போய் திண்டாடக் கூடாது. கடை கண்ணிக்கு ஒரு குறைச்சலில்லை..

ஆனா நேரம் எங்கே?. போனவுடன் ஒரு காப்பி ☕குடிக்கணும் .

காப்பி பவுடர் ஒரு நாலு ஸ்பூன் எடுத்து வெச்சாச்சு. ஃபில்ட்டர் ஞாபகமா எடுத்துக்கணும். சக்கரை அங்கே எப்படியும் இருக்கும். 


வெளில கிளம்பறத்துக்கு முன்னாடி ஒரு ஸிம்ப்பிள் டிஃபன் சாப்பிடணும்.


 வெண்பொங்கல் கூட ஒரு பருப்பு கொத்சு பண்ணிடலாம். ஒரு டம்ளர் அரிசி, பயத்தம்பருப்பு, இஞ்சி,பச்சை மிளகா, இரண்டு வெங்காயம்,தக்காளி கடுகு,ஜீரகம்,மிளகு ஒரு குட்டி பாட்டில்ல எண்ணெய், நெய் எல்லாம் மூட்டை கட்டியாச்சு. கிளம்பியாச்சு . 

 

விடியகாலம் ஊர் வந்து சேர்ந்தாச்சு.

 plan பண்ணினபடி ஒவ்வொரு வேலையும் செஞ்சு ரொம்ப நாளா பட்டினியா ் காத்திண்டு இருக்கும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணிட்டு காக்காவை கூப்பிட ஒண்ணு கூட திரும்பிப் பார்க்கலை. 


 பழக்கமான காக்கா எல்லாம் இப்போ எங்கே போச்சு. என்னோட குரல் மறந்து போச்சா..என்ன? விஜிக்கு சங்கடமாக இருந்தது.

 

அவள் கரைஞ்சது தான் மிச்சம் .  


வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த சுந்தரம் ஐயாவைக் கூப்பிட்டு டிஃபனையும்  கொடுத்து அவரோட ஆஸ்தான கப்பில் காப்பி கொடுத்த போது..


'எம்புட்டு நாளாச்சும்மா.. இப்படி கூப்பிட்டு சாப்பாடு போட ஆளே இல்லாம போச்சு.


 " நான் அருகம்புல் பறிச்சு வெக்கற நேரம்..

 "சுந்தரம் காஃபி ,பிஸ்கட் வெச்சுருக்கேன்னு' குரல் வந்துடும்.

 

  அதெல்லாம் ஒரு காலமா போய்டிச்சு.

   இப்போ கூட இங்கே நம்ம அம்மா நடமாடற மாதிரியே இருக்கும்மா..அவர் சொல்லவும் மளுக் கென்று அவள் கண்ணில் நீர்..

   

ஆமாம்..அம்மா இல்லா அம்மா வீட்டுக்கு வருவது ..இப்போ பழகிப் போனாலும் ..அவள் சுற்றி சுற்றி வந்த வீடு, அவள் சுவாசம் நிறைந்த வீடு,

அவள் குரல் எதிரொலித்து கொண்டிருந்த வீடு,அவள் தொடாமல் ஏங்கிக் கொண்டிருந்த பாத்திரங்கள்...

 கலைக்க மனமில்லாமல் சிந்தனைகளுடன் விஜி.

 


தோட்டத்தில் வளர்ந்திருந்த துளசியும், அதில் அமர்ந்த்திருந்த பட்டாம்பூச்சியும் ..எப்பவும் போல சந்தோஷமாய்..