Thursday, June 17, 2021

Madhyamar- கோடை மீட்

 #கோடை_விழா

தான் ஆடாட்டாலும் தன் தசை ஆடும்..இது பழமொழி.

மீட்க்கு போகா விட்டாலும் நம் muscles கூட  மத்யமர் மத்யமர்னு சொல்லும் இது புதுமொழி.


"  பார்த்தும்மா..மொபைல் மோர்க்குழம்புல வுழுந்தடப் போறதுனு ' சந்துல சிந்து பாடிட்டு போனார் அப்பா.


.புறப்பட்டாச்சு..புறப்பட்டாச்சுனு போஸ்ட்டை பார்க்க பார்க்க 'போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் புகையை கிளப்பி விட்டு'னு மைண்ட் வாய்ஸில் சுவர்ணலதா சோகத்தை பிழிந்தெடுக்க.

. "ஏதோ தீயற வாசனை வரதே' ..

பொண்ணு தூபம் இன்னும் கொஞ்சம் போட..ஒரே புகை மயம்.


பரபரனு பறந்து பறந்து வேலை முடிச்சாச்சு..


மொறுமொறுனு பக்கோடா ரெடி.


"ஷேக்" கிழார்களை (just kidding😀)

 டயர்ட் ஆகாமல் கண்டு ரசிக்க மாங்கோ மில்க் ஷேக் ரெடி.


கோத்தாஸ் காஃபி..நீங்க மட்டுந்தான் குடிப்பீங்களா..நம்ம பெங்களூராக்கும்..

flask ல் full ஆ ரொப்பி வெச்சாச்சு..


2.30 - 6 மணி வரை #kitchenல்_kitten போர்டு மாட்டியாச்சு.


' யாராவது வந்தால் நான் ரொம்ப ஜுரத்தில படுத்துண்டு இருக்கேனு சொல்லிடுங்கோ.. வூட்டுக்காரரருக்கு ஆர்டர் போட்டாச்சு.


"அப்பாடா .ஒரு நாலு மணி ' நிம்மதி நிம்மதி என்னோட சாய்ஸ்னு' அவர் மனசுக்குள் மத்தாப்பு.


கலகலனு கல்யாண மண்டபமே ஒரு புதுக் களையோடு.

சம்மந்தி சண்டை இல்லாமல் ஒரு பெரிய கல்யாண விழா.


பாட்டு பாடி பரவசப்படுத்திய பாடகர்கள்

போடுங்க ஒரு step என்று ஆடவரலாம்..ஆட வரலாம்னு ஆட்டி வைத்த டீம்.

சுத்தி சுத்தி வந்து கவனித்துக் கொண்ட volunteers.

அடடா..இதுவல்லவோ மத்யமர்னு பெருமையில் அட்மின் டீம்.


போட்டோகளும் போஸ்ட்டும் பார்த்து நான் குதித்துக் கொண்டிருக்க..


' சத்தம் போடாதே..உன் கிட்ட ரெசிபி கேட்க வந்திருக்கிற பக்கத்து வீட்டு மாமியை சமாளிச்சுண்டு இருக்கேன்னு' வூட்டுக்குள்ளேயே வூட்டுக்காரர் room to room watsapp message.

( அந்த பயம் இருக்கட்டும்).


" ஏன் காஃபி flask ல இருக்கு..அவளுக்கு என்ன உடம்பு' அப்பா டென்ஷனில் அங்குமிங்கும் நடக்க..


என் அலப்பறை தாங்க முடியாமல் என் பொண்ணு என் கையில் வந்து கொடுத்தாள்..

 ஒரு டப்பா..#gonemadchocolate.

' கண்ணா..அம்மாவுக்கு

 #gone_madhyamar_mad" chocolate தாண்டா கொடுக்கணும்.


' அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்னு டி.எம்.எஸ் காரு பாட்டு ஞாபகம் வர..

"மத்யமர் டா...கோடை மீட்டுடா'..நான் தனியா புலம்பிக் கொண்டிருக்க..


ஆயிரம் வசதிஇருந்தும் 

நோ..satisfaction. எல்லாரோடயும் சேர்ந்து கும்மி அடிக்கிற ஜாலி வருமா?நினைத்துக் கொண்டிருக்கும்போதே..


என் பொண்ணு..' அப்பா..நெக்ஸ்ட் மீட்டுக்கு இரண்டு நாள் முன்னாடியே அனுப்பி வச்சுடுப்பா.லொள்ளு தாங்கலை..

அவள் recommendation என் செவியில் தேனாகப் பாய்ந்தது..


big big thank you to all the posts by many members and kudos to the admin team for such a marvellous effort.

No comments: