Summer camp..
Summer vacation வரும் பின்னே.. summer camp வரும் முன்னே..
காலங்கார்த்தால இப்போ எல்லாம் நியூஸ் பேப்பர் எடுத்தா.. உள்ளேயிருந்து கொத்து கொத்தா pamphlets. ( நல்ல வழ வழ பேப்பர்.. எண்ணெய் பாத்திரம் அடிலயும், சாமி விளக்கு கீழ வைக்க நன்னா யூஸ் ஆகும்..அல்பை.. மைண்ட் வாய்ஸ்) . ஸ்கூட்டியை நிறுத்திட்டு சாமான் வாங்கிண்டு வரதுக்குள்ள ஒர் bundle advertisement leaflets breakல சொருகிஇருக்கு.மரம்,லைட்கம்பம்,வேலி,
சுவர் எங்கே பார்த்தாலும் தூக்கில தொங்கும் banners
Summer camp.. summer camp.. அபார்ட்மெண்ட்டில் இப்போ ரொம்ப ஹாட் டாபிக் இதுதான். இந்த வாண்டுகளை இல்லாட்டி எப்படி மேய்க்கிறது இந்த பொசுக்கும் வெயில்லில்..அம்மாக்களின் புலம்பல்ஸ்.
அம்மாவெல்லாம் அஞ்சு மணிக்கே ரெடி ஆகி ரெண்டு,நாலு சக்கர வாகனங்களோட சாரதி தொழில் ஆரம்பம். கொஞ்சம் லேட்டோ , கோச்சிங் மாஸ்டர் அரை கிரவுண்டை ஆறு தடவை சுத்த விட்டுடுவார். ட்ராப் பண்ணிட்டு சைக்கிள் gap ல வந்து breakfast பண்ணி வச்சுட்டு ஓட்டமாய் ஓடி வீட்டுக்கு கூட்டிண்டு வர.. குளிக்க வைச்சு ,பண்ணி வைச்சதை ஒரு அடை அடைச்சு அடுத்த கிளாசுக்கு ஒட்டம். டான்ஸ் ,பாட்டு, கிராஃப்ட் இன்னும் எத்தனை வகை.. நாள் முழுக்க ஒட்டம்..இதுக்கு நடுவுல ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்விம்மிங் சூட், கண்ணாடி, skating ஷூ, ball,bat இத்யாதி..இத்யாதி..Shopping..
அம்மாக்களுக்கு நிறைய நட்பு கிடைக்கும் காலம். நம்மால் வாயை மூடிண்டு சும்மா இருக்க முடியாதே.. லேசா புன்னகையில் ஆரம்பிச்சு, போன் நம்பர் மாத்திண்டு..
சமையல், அரசியல், புடவை, வெய்யில் எல்லா அரட்டையும். Phone contact லிஸ்ட் பெரிசாகும்..
வருஷா வருஷம் இந்த மேளா நடப்பதால் , யோகா கிளாஸ் யோகிதா 2017, ஸ்விம்மிங் கிளாஸ் சிம்ரன் 2017.. இப்படி ஒரு பெரிய வட்டமாகும்..’
”எங்க காலத்திலனு” சொல்லக்கூடாதுனு சத்தியப் பிரமாணம் எடுத்தாலும் ..
இந்த ஓட்டை வாய் சும்மா இருக்காதே.
பாண்டியும், பரம பதமும், கேரம் போர்டும் கல்லாங்காயும் ,சீட்டுக் கட்டும், பல்லாங்குழியும் கண்ணாமூச்சியும், காவலாய் வடாமுக்கும், கடைக்குப் போய் ..கூட மாட ஒத்தாசையும் ,குச்சி ஐஸ் வண்டியும் ,குளுகுளு நுங்கும் ,காத்து வாங்க பீச்சுக்கும், காலார நடையும் கை நிறைய தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும்..
என்னமா சந்தோஷம்..
பாட்டி வீடு என்பது ஒரு சொர்க்க பூமி..
ஆனால் இப்போ யமன் வந்தாலும் .. இருப்பா கொஞ்சம் இன்னியோட episode பார்த்துட்டு வரேனு பெரியவர்கள் எல்லாம் மெகா சீரியலுடன் ..
அப்பாவுக்கோ எப்பவும் ஆபீஸ்.. conference call கையில் laptopம்.. வீட்டுக்குள்ளே எல்லாரும் இருந்தும் தனிமை தான் .. அந்த் தனிமைய் போக்கும் இந்த குட்டீஸ் camps.
Vacation ல தான் physical,mental and creative abilities புரிந்து கற்றுக்கொள்ளணும்..
there is no second opinion about this. நானும் இந்த phase ல் ஓடி இருக்கேன்..
Permission வாங்காம பக்கத்து வீட்டுக்கு க்கூட போகமுடியாது..
ஒரு phone பண்ணிட்டு வந்திருக்கலாமே என வரவேற்கும் இக்காலம்.
everything has become very formal and coated with luxury .
The role of the parents and elders is very crucial.
முதல் அடி எடுத்து வைப்பது நாமாக இருப்போம்.
நம் குழந்தைகளுக்கு உறவுகளையும் நட்புகளையும் அறிமுகப் படுத்துவோம். அதன் மதிப்பு என்னு சொல்லி தருவோம்..
பெற்றோருக்கும் பசங்களுக்கும் இது நல்ல புத்துணர்ச்சி தரும்.. அடுத்த லீவ் எப்போ வரும்னு காக்க ஆரம்பிச்சிடுவாங்க..
உன்னைச் சொல்லி குற்றமில்லை..
என்னைச் சொல்லிக் குற்றமில்லை..
காலம் செய்த கோலமடி
Camp செய்த குற்றமடி…
இப்படி யாராவது எச போடுமுன் முழித்துக் கொள்வோம்.
Summer camp களோடு சுற்றங்களையும்
கொஞ்சம் அறிந்து கொள்வோம்...அறிய வைப்போம்.
Gen next ….let them master in strengthening human bonds too.
Happy holidays to the kids
No comments:
Post a Comment