Monday, October 16, 2023

Happy navratri 2023

 கொலு என்றாலே..கொண்டாட்டம் தான்..

வரிசையாய் அடுக்கப்பட்ட பொம்மைகளும் ..

வரவேற்பும், வாழ்த்துக்களும்..

வரம் தரும் தேவியின் நாமமும்..

வாய்க்கு சுவையான உணவும்..

வேறென்ன வேணும்..

ஒன்பது நாளும்..

ஒரு நொடியில் பறப்பது போல இருக்கும்..


அவள் நினைவில் ..

அவள் பாதம் பணிந்து..

அவளருள் பெறுவோம்..


அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்..


Happy navratri dears.🙏🙏🙏


வீட்டில் கொலு வைக்காவிட்டாலும்..

வீடியோ உண்டு..😄😄

வரவேற்பு உண்டு..😄😄😄


Saturday, October 14, 2023

கோலத்துவம்

 இதெல்லாம் நமக்கு ஜுஜுபினு சில வேலை ஆரம்பிச்சால்..


அது நம்மள ஜூப்பரா சுத்த விட்டுடும்..😄😄😄


அப்படித்தான் இன்னிக்கும்..

அட இது என்ன..சின்ன வயசிலேர்ந்து போடற கோலம்னு அசால்ட்டா ஆரம்பிக்க..


கலர் கொடுக்கும்போது..

கைகலப்பு ஏற்பட்டு..

கசா முசா ஆகிடுத்து..😭😭


Confidence வேணும் எல்லாத்துக்கும்..

Over confidence நம்மள சில சமயம் ஓரமா தள்ளிடும்..

( எனக்கு நானே சொல்லிக்கறேன்)💪💪💪


அரைக்கிழம் ஆன பிறகும்..

ஆழம் புரியாமல் கால் விட்டுட்டேனோ..moment..😄😄


திங்களை வரவேற்போம்


வாழ்க்கை பாடம்

 #கோலத்துவம்.


மூணே புள்ளிதான்..

மூளையை கொஞ்சம் கசக்க..

மலர்ந்து விரிந்தது..


மலர் மேல் விளக்கு..


சின்னச் சின்ன புள்ளிகள் தான்..

சிந்தனையும் தூண்டிடுமே..


விரிக்க விரிக்க விரிந்தது..

வாசல் தான் போதவில்லை..


மனம் எனும் வாசல் விரிய

மகிழ்ச்சி எல்லை விரியுமே..


வாசலில் போட்ட கோலம்..

வாழ்க்கைப் பாடம் உணர்த்திடுமே..


சின்னச் சின்ன அன்பும்தான்

சிதற உதவும் புன்னகையே..


இந்த நாள் இனிய நாளாகட்டும்

கோலக்கதை

 #கோலக்கதைத்துவம்


இந்த ரங்கோலி மனசில் வந்ததும்..ஒரு குட்டிக் கதையும் எழுதலாமானு தோணித்து..😄😄


Bird 1- அந்த மரம் எத்தனை அழகா இருக்குல்ல..வாயேன் அங்கே போகலாம்.🐦🐦


Bird -2 : no.. no..என் dress எல்லாம் அழுக்காகிடும். அந்த மரம் ஒரே colorful aa இருக்கே🕊️🕊️

Bird -1: அட பைத்தியமே..கலர் போய் ஒட்டுமா..அழகழகா பூவும் பழமும் இருக்கே..போகலாமே..( கெஞ்சலுடன்)


Bird -2: சொன்னால் புரியாதா..இந்த மாதிரி மரத்தில தான்  வேடர்கள் வலை விரிச்சிருப்பாங்களாம்..

நான் வரலைப்பா..👀


Bird-1 : ஐயோ..அப்படியா..ஆனால் எனக்கு ஆசையா இருக்கே..


Bird-2: ஆசைப்படறது சில சமயம் ஆபத்தில் முடியும்னு தெரியும் தானே உனக்கு...வேணும்னா..

அங்கே கீழே விழுந்திருக்கே..அதை எடுத்து சாப்பிடு..🍋🍋🍋


Bird-2: ரிஸ்க் எடுக்காம எப்படி ரஸ்க் சாப்பிடறதாம்..நீ போ.நான் ஜாலியா இந்த மரத்தில் enjoy பண்ணிட்டு வரேன்..😄😄😄


Bird -2 : அடிபட்டால் தான் உனக்கு புத்தி வரும்னு நினைக்கிறேன்..bye..bye.🙏🙏


Bird 1 ..சந்தோஷமா பறந்து அந்த மரத்தில் உட்கார்ந்து தான் நினைச்சதை சாதித்ததா??

இல்ல..bird 2 சொன்னது போல வேடன் கிட்ட மாட்டிண்டதா..


எப்புடி கண்டுபிடிக்கறது..??


நம்ம வாழ்க்கையிலும் இப்படித்தானே..


தூரத்தில் இருந்து பார்த்து judge பண்ணி ..

சிலவற்றை கோட்டை விடறோம்..


கோடு தாண்டலாம் வான்னு போகும்போது ..கோட்டைக்குள் சிக்கிக்கறோம்..


வாழ்க்கையே ஒரு நாடகம்..

அதில் wisdom தான் முக்கிய பாத்திரம்..


சரியா..😄😄😄


மார்கழி கோலம்

 ஹையா..pink teddy எனக்கு பிடிக்கும்னு எப்படி தெரியும் உனக்கு..Santa?..அதுவும் ஒரு அழகான heart உடன்❤️❤️❤️


வாசல்ல வந்து ஜம்முனு உட்கார்ந்திருக்கியே..😘


எத்தனை வயசானாலும் இந்த Teddy bears தரும் happiness..I love it.


Soft ஆ..கஷ்க்கு முஷ்க்குனு..


#Teddyத்துவம் ...1

உள்ளுக்குள் இருக்கற குழந்தையை ..அப்பப்ப..வெளியே கொண்டு வரணும்..

Correct aa😄😄


#Teddyத்துவம் 2

பிங்க் கலர் ரங்கோலி ..ரொம்ப நைஸா இருந்தது. White சேர்த்தும்..நைஸ் அவ்வளவா குறையல..


சரி..சரினு..போட ஆரம்பிச்சால்..ஆஹா..அப்படியே ஒரு soft Teddy impact கொடுத்தது..நல்லவேளை..இன்னும் கொர கொர மாவு சேர்க்காமல் விட்டது நல்லதாப்போச்சு


இப்படித்தாங்க..இது நல்லாவே இருக்காதுனு நினைக்கிற விஷயம்..best ஆ..மனசுக்கு திருப்தியா அமையும்.😄😄😄


கடைசியா. 

Base color.. எடுத்துக் கொடுக்கணுமே..

நேத்து கோலத்தின் collected மாவு..


Daily collect பண்ணி வைக்க..different shades கிடைக்கும்.


எப்புடி ஐடியா💪💪💪😄


Post எழுதிண்டு இருக்கும்போது ...paper பையன் வந்தார்..


மேடம்..இது..ஸ்டிக்கரா.?


இல்லப்பா..நான் போட்ட 

கோலம்.


ரொம்ப ரொம்ப அழகா இருக்கு .."..


ஆஹா..you made my day தம்பி..😄😄😄


பிள்ளயார் பிள்ளையார்

 பிள்ளையார்..பிள்ளையார்


பேஷ் பேஷ் ..

எல்லாம் நன்னா இருக்கே❤️❤️

இன்னும் ஒரு கொழுக்கட்டை..

வேணும் எனக்குனு சொன்னாரே..🤤


அலங்காரம் ஜோரா இருக்கே..

பூவெல்லாம் பிரமாதமா இருக்கே..🪴🌺


களிமண் கணேஷாவும்

கொழுக்கட்டை கணேஷாவும்

கொள்ளை அழகா இருக்காளே..😍


குழந்தைகளின் ஆரத்தியில்..

நெஞ்சம் நன்னா நிறைஞ்சதே...❤️❤️


நேரே வந்தால் இதெல்லாம் சொல்லி இருப்பாரோ..!!!


ஆசைதான் மனசுக்குள்..

அவன் ஒருநாளாவது வர மாட்டானா என்று..

ஏக்கம் உண்டு எப்போதும்


எதிரில் வந்தால் தானா..

என்னுள்ளேயே..இருப்பவன் நீயன்றோ..🙏🙏🙏


விஷ்வ விநாயகா ..சரணம் சரணம்🙏🙏🙏


கணக்கு போட்டு கோலம் வந்தது

 கணக்கு போட்டு..

கோலம் வந்தது..

கச்சிதமாய்..

வாசல் நிறைத்தது..


கணித மேதை ராமானுஜம் அவர்கள் பிறந்த தினம் இன்று.

National mathematics day.

கணக்கின் மீது பலருக்கு காதல் கொள்ளச் செய்தவர்.


கணக்கு..பிணக்கல்ல..

வாழ்க்கையோடு பிணைந்தது. ..சரிதானே..💪💪😄


ஆனா..இப்போ வருவோம் நம்ம தத்துவத்துக்கு.🙄


மேலே இருக்கற ஒருத்தர் போடற கணக்கு இருக்கே..


ஒரு பூவிலும் .. Petal லிலும் கூட..அம்புட்டு கணக்கு போடறவரு...நம்ம வாழ்க்கையின் கூட்டல் ,கழித்தல், வகுத்தல் ,பெருக்கல்..

எல்லாமே அவன் கையில் தான்.🙏🙏🙏


என்னவோ இருக்கட்டும்.


கணக்கு பாருங்க..no objection.


அன்பு காட்டுவதில் மட்டும்..

கணக்கு பார்க்க வேணாமே❤️❤️


இத்துடன் இன்றைய தத்துவம் நிறைவடைந்தது.

நாளை மீண்டும் ஒரு #கோலத்துவத்துடன் சந்திப்போம்.


அதுவரை ..விடைபெறுவது..


Happy birthday mallika mam

 Happy birthday Mallika Ponnusamy  mam.


சிக்கு கோலம்..

சிக்கலில்லாமல் ..போடும் 

சகல கலா வல்லி..


சிரித்த முகம் ..

சிந்தனையில் தெளிவு..


மல்லிகா மேம் என்றாலே

மரியாதை மனதில் கூடும்..


மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  mam💐💐💐💐


பெங்களூர் மீட்டில் எடுத்த ஃபோட்டோ..


அப்பவே எங்களுக்கு advance ஆ sweet கொடுத்துட்டாங்க😄😄😄


பஜ்ஜி puzzle

 பஜ்ஜி puzzle


எனக்கும் எங்க neighbour க்கும் always ஒரு barter exchange உண்டு.


என்னோட உளுந்து வடைக்கு ஈடா..

அவங்க உலகத்தையே....


No..no..

ஒரு தட்டு full of ...பஜ்ஜி ..பஜ்ஜி செஞ்சு கொடுத்துடுவா..


சும்மா..அதிருதில்லனு..

செம்ம டேஸ்ட்டா இருக்கும்.


அப்படியே அந்த மேல் கடலை மாவு கவர்..கரகர ..மொறு மொறுனு..சுவையோ சுவையா இருக்கும்.


நமக்கு தான் உடனே ரெசிபி கேட்காட்டி மண்டை வெடிச்சுடுமே..

கஜினி முகமது படையெடுப்பு மாதிரி..

அவங்க ஒவ்வொரு தடவையும் பஜ்ஜி தட்டு நீட்டும் போது..

" கொஞ்சம் அந்த பஜ்ஜி ரகசியம் சொல்லுங்களேனு ..கேட்டுக் கொண்டே இருப்பேன்.


அவங்களும்..

"அது என்ன பெரிய proportion..

 கடலை மாவு,அரிசி மாவு, கொஞ்சம் எண்ணெய் காய விட்டு சேர்த்தால்..தானா வரும் '..


நமக்கு மட்டும் இந்த டேஸ்ட் ஏன் வரலைனு ..எப்பவும் ஒரு சோகம்.


அன்னிக்கு எதேச்சையாக provision வாங்கும்போது , ஒரு பஜ்ஜி இன்ஸ்டண்ட் மிக்ஸ் ..என்னை வாங்கு வாங்குனு கெஞ்சித்து.

சரி ..ஒரு பாக்கெட் வாங்கிண்டு வந்து..


கத்திரிக்காய்,வாழைக்காய்  நறுக்கி மாவில் தோய்த்து போட..


ஆஹா..கண்டேன் ..

கண்டேன்..

அதே எதிர்த்த வீட்டு பஜ்ஜி மணம்,சுவை...


மாமி....இதுதானா secret.

இதைச் சொல்லி இருக்கப்படாதோ முன்னாடியே..😄😄😄😄


எப்படியோ..பஜ்ஜி puzzle solved.😄😄😄😄💃💃💃


கோலங்கள்

 மூச்சு விடாம ..பாட முடியுமா?

முடியாது..

கை எடுக்காம கோலம் போட முடியுமா?..


ம்ஹூம்..🙄


இருந்தாலும்..ஒரு try.

எல்லாம் எங்க #kola_queen Mallika Ponnusamy  mam கொடுக்கும் ஊக்கம் தான்.💪


ஆனால்..இந்தக் கோலம் போடும் போது..ஒரு #தத்துவம் தோணித்து.😀


கையெடுக்காம..புள்ளி இழுத்துப் போகும் பாதையில் சரியா ...கவனமா போக..correct aa முதலும் முடிவும் meet ஆகுது.💪


அதே போல தான்..நம்ம லைஃபும்.


ஆண்டவன் சொல்றான்..நம்பள்  கேட்கிறான்னு ..

அப்படியே ..அவன் கைப்பிடித்து..செல்ல..சரணாகதி செய்ய..


வாழ்க்கை ஜிங்கலாலா தான்..💃💃💃


தம்மாத்தூண்டு கோலத்துக்கு..

உங்க மை வா புரியறது.😀😀😀


கோலத்தை எடுத்துக் காட்டற மாதிரி..ஒரு super back drop..

Super இல்ல..😀😀😀


Friday, October 6, 2023

Madhyamar-backup

 P(B)ack Up


ஒரு காலத்தில ஊருக்கு போறதுன்னா..வெறும் pack பண்ணி தான் போவோம்.

இப்போ ..back up இல்லாமல் போகமுடியுமா?


ஒரே நாள் தங்கறது என்றாலும்..ஒரு இரண்டு extra dress... எப்போ ஸ்ட்ரைக் வரும்..எப்போ ஊருக்கு போக முடியும்னு எந்த ஜோசியரும் சொல்ல முடியாது.


கணக்கா எப்படி பணம் எடுத்து போறது? 

ஏதாவது அவசர செலவு வந்தால்..

ATM எல்லாம் இழுத்து மூடிட்டால்?


பர்ஸுக்குள்ள..புடவை மடிப்புக்குள்ளே..அது தனி back up..


பிஸ்கட்டுக்கு back up chips..

chips க்கு..ஒரு கடலை உருண்டை..


கண்ணாடி போடற..கண்ணம்மாக்கள்..(என்னை மாதிரி) கண்டிப்பா ஒரு எக்ஸ்ட்ரா கண்ணாடி வெச்சே ஆகணும்..எப்போ ஃப்ரேம் லேர்ந்து பிச்சுண்டு லென்ஸ் விழும் நு தெரியாது.


contact lens ..அது ஒரு எக்ஸ்ட்ரா pair.

அதுக்கு ஒரு liquid..(உஸ்..அப்பா).


எங்க வூட்டுக்காரர் மாதிரி முன் ஜாக்கிரதை முத்தண்ணா வீட்ல இருந்தா ..கேட்கவே வேணாம்.


மொபைல்..அதுக்கு ஒரு ஸ்டெப்னி மொபைல்..

அது ரெண்டிலும் இருக்கும் காலாவதியாகாத data pack..

அதுக்கு back up ஒரு dongle.

battery charger ரெண்டு.

சார்ஜ் பண்ணவே முடியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது..? அதுக்கு ஒரு power bank.


நமக்கு எந்த ஊர் போனாலும்..கோயில் போய் பார்த்துடணும்..

அப்போ..பிரசாதம்..?

அது போட்டு வெச்சுக்க கொஞ்சம் zip lock..


அந்த ஒரு நாள்ள தான் நமக்கு ஏதோ பெரிய வியாதியெல்லாம் வந்துடும்னு பயத்தில் ஒரு செட் எல்லா மருந்தும்..


வீட்டில..அது தனி கதை..

எங்கியாவது லேட்டா போச்சுனா என்ன செய்யறது..?

back up க்கு தோசை மாவு..அடை மாவு..

( இதுக்கு நீ இங்கேயே இருனு என் வலக்கரம் இடி வேற..)


முக்கியமா..சொல்ல விட்டேனே..

வீட்டுச் சாவி🔑

handbag ல ஒண்ணு..ட்ரஸ் பையில் யாருக்கும் தெரியாம ஒளிச்சு ஒண்ணு..

ரெண்டுமே காணாமல் போனால் என்ன செய்யறது..?

எதிர்த்த வீடு..கீழ் வீடு..

இப்படியாக..back up உடன் நான் pack செய்ய..


"ஒரு நாள் trip தானே..? ..ஐயோ..அது சொல்ல மறந்தேனே..😱

இப்போ பஸ்ல வாங்கின டிக்கட்ல  போறதா..

எங்கியாவது காவேரி ப்ரச்சனைனு பஸ் ஓடாட்டி என்ன செய்யறதுநு back up.ஆக வாங்கி வெச்ச train ticket ல போகறதா?...


over make up ம்...over back up ம்..என்னிக்கும் worry தான் தரும்.( சும்மா..டி.ஆர்.ஷ்டைல்)

சரிதானே?

Madhyamar- happy teachers day

 #happy_teachersday.


"good morning teacher" .குதூகலக் குரல் ஒலிக்கும் பள்ளிகளின் காலை நேரம்.


miss .miss..,நான் தூக்கிட்டு வரட்டுமா?..டீச்சரின் சுமையை சுளுவாக்க நினைக்கும் சிட்டுக்கள்.


டீச்சரின் புடவையை அவளறிய மாட்டாள் என்று தொட்டு பார்த்து தோழிகளிடம் சமிக்ஞை செய்த தருணங்கள்..


கொஞ்சம் முகம் வாடி இருந்தால்..' டீச்சருக்கு என்னவோ மனசு சரியில்லை போல இருக்கு'.கற்பனை செய்து கவலைப் படும் கண்மணிகள்..


பிறந்த நாளுக்கு முதல் சாக்லேட்டை தனக்கு பிடித்த டீச்சருக்கு கொடுத்து மகிழும் மகிழம்பூக்கள்..


சில டீச்சர்களின் உச்சரிப்பில் மயங்கி அவர்கள் சொல்லும் வார்த்தையை திருப்பி திருப்பி சொல்லிப் பார்க்கும் ரசிகர்கள்


பரீட்சை,ப்ராஜக்ட், மதிப்பெண்கள் என்று பல கிலி தந்தாலும்..டீச்சர் என்றால் ஒரு ஜாலி தான்.


பிரியா விடை கொடுத்து பெரிய ஆளா வரணும்னு ஆசீர்வதிக்கும் ஆசிரியர்கள்.


தன்்கிட்ட படிச்சவன்(ள்) இப்போ நல்ல நிலையில் இருப்பதை நினைத்து் பெருமை கொள்ளும் ஆசான்கள்.


அற்புதப் பணி..


என்னுடைய.. என் மகள்களுடைய டீச்சர்களோடு பல வருடம்..


டீச்சராய்..ஒரீரு வருடம்..


can't stop thinking of Helen Keller and Anne Sullivan this day. what a wonderful bond that was?


happy teacher's day sankari , Santhavel Kpm sir, Ruku Jey Saraswathi Gayathri and all those great teachers of madhyamar.

Madhyamar- சிறுகதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


#என்_ஜீவன்_நீதானே..


"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் . மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.


"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..


நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.


சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும்.

 பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான்.


 பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.


தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள். 


அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.


மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள். 


சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..


" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.." 

மருமகள்கள் பேச்சுக் குரல்..


ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.


"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..

" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".


அவர்கள் எப்போதும் காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..


"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

Madhyamar- சிறுகதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை

கொடுப்பினை


"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.

இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"ச்கலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.

டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.

அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

"ஏய் கிரிஜா் ..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.


தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..

யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.

இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.

அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..


மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம் ...பார்த்து போங்க ரெண்டு பேரும்..அன்புக் குரல்கள்.


அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..

"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.


"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

Madhyamar-கடை பலகாரம்

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


கடை(கலப்பட) பலகாரம்


"ஏய் புள்ள..என்ன மச மசனு நிக்குற.சனிக்கிளமை..வியாபாரம் சூடு புடிக்கிற நேரம் எங்கின போய்ட்ட.?"

"இருய்யா..ஒரு மாசமா பஜ்ஜி போடற எண்ணெய் ..ஒரே கசடு..கருப்பா ஆகி கிடக்கு..கொஞ்சமாவது வடிகட்ட வேணாமா..?

கஸ்ட்டமர் பார்த்தாங்கன்னா என்னாவுறது..?


அவள் பேசிக் கொண்டே இருக்க...

வேலு ..மஞ்சூரியனுக்கு காலிஃப்ளவர் வெட்ட ஆரம்பிச்சான். 

நறுக்கும்போதே கப்புனு ஒரு வாடை..நல்ல வளர்ந்த புழுவெல்லாம் மிளகாய்ப் பொடி ,உப்பு மசாலாவோடு சுடும் என்ணெயில் ..


அங்கே வந்த பக்கத்து கடை ரமேஸு..

"அண்ணே உங்க கடையில் சரக்கு எப்பவும் சூப்பருண்ணே ".என்றான் ஜொள் விட்டபடி.


"யக்கா...மீன் வறுவல் ரெடி ஆவலையா?..உன் கடை ஸ்பெசல் அதானே..எனக்கும் ஒண்ணு சூடா கொடுக்கா.".என்றான்.

'எலேய்..அப்பால வா..உனக்கு எடுத்து தனியா வெக்குறேன் "என்று வேலு விரட்டினான்..

எங்கியாவது தன்னோட வியாபார் யுக்தி கண்டுபிடிச்சிடுவானோனு பயத்தில..


வண்டியில் ் அடுக்கி இருந்த  ஒரு பையிலேர்ந்து சின்னதும் பெருசுமா..மீன்..( டேய் ..டேய்..அழுகிப் போய் ..நாறுதுடா..தள்ளு வண்டயின்  மை.வா)

"ஏ..புள்ள ..அந்த கலர் பொடியை கொட்டு இதுல..

அங்கே கிடக்கு பாரு..மைதா..கார்ன்ஃபளோர் ..

(ஐயோ..அதுல வண்டும் பூச்சியும் இருக்கேனு..வண்டி மை.வாய்ஸில்)


கடலலை பாக்க வந்த யாரும் வேலுவோட தள்ளு வண்டில சாப்பிடாம போக முடியாது..


முக்க்கால் வாசி வித்துப் போச்சு. 

"காசு மேல  காசு வந்து கொட்டுகிற நேரமிது" பாட்டை.விசிலடித்தபடி மூட்டைக் கட்ட ஆரம்பித்தான் மீதி இருந்த எல்லாத்தையும்.


 நாளைக்கு இதைக் கொஞ்சம் சரி செஞ்சு ஒப்பேத்திடலாம். ஞாயித்துக் கிழமை கூட்டத்தில் எல்லாம் வித்து போய்டும்.


ப்ளாஸ்டிக் பைகளில் மிச்சம் மீதி ..வெந்ததும்..வேகாததும்..வண்டியை பத்திரமாக மூடி கட்டினான். கல் வைத்து தடை ஏற்படுத்தினான்.


நகரவே முடியாத தள்ளு வண்டி.. 


நாற்றம் பிடுங்குதே..கடவுளே..

கடல் தாயிடம் வேண்டியது...

"ஒரே ஒரு பெரிய அலை என்னை மட்டும் வந்து அடித்து செல்ல அனுப்பு தாயே..'

நிறைவேறி இருக்குமா..இந்த வேண்டுதல்?

Madhyamar- படம் பார்த்து கதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.


அப்பா..ப்ளீஸ்ப்பா..ப்ளீஸ்ப்பா..அம்மாகிட்ட பேசி பர்மிஷன் வாங்கி தர வேண்டியது  உன்னோட பொறுப்புப்பா.. மகள் அனிஷா சொன்னதும் ஆடித்தான் போனான் அர்ஜுன்.


' baby ..நான் சொல்றதைக் கேளுடா

எங்க இரண்டு பேராலயும்.உன்னை விட்டு எப்படி இருக்க மு்டியும் சொல்லு..அதுவும் அம்மாவுக்கு எல்லாமே நீ தாண்டா..உடைஞ்சு போய்டுவா.. தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தான்.


அப்பா..அதனால தான் சொல்றேன். காலம்பற எழுந்ததுலேர்ந்து..எனக்கு சாப்பாடு, என் துணிமணி சரி பண்றது, எங்கே போனும்னாலும் அலுக்காமல் என்னை கொண்டு போய் விட்டு கூட்டிண்டு வந்து....நான் எப்போ கத்துப்பேன் வெளி உலகம்?.நீங்க எத்தனை தியரி சொன்னாலும் எனக்கு அந்த experience வேணும்ப்பா

ஹாஸ்ட்டல இருந்தா..எல்லாம் கத்துக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்ப்பா..


2 மணி நேரம் ..காரை எடுத்தால் நீங்க அங்கே வந்துடலாம்ப்பா.. நானும் weekend ஓடி வந்துடுவேன்..ஓகேயா என்றாள்.

அதெப்படி ம்மா..பழைய பல்லவி ஆரம்பித்தான் அர்ஜுன்.

பொறுமை இழந்த அனிஷா..கோபத்துடன்

"அப்பா.....உனக்கு தெரியுமா ..அம்மா பேர் இப்போ என்னனு?

Mrs Arjun னு சொன்னால்தான் இங்கே எல்லாருக்கும் தெரியும். அங்கே என் ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள், ஸ்கூல் எல்லாத்திலும் அனிஷாவோட அம்மா..

எங்கேப்பா...காணாமல் போச்சு...'ஸ்வாதி'ங்கற

அழகான பேர்?

 இருபத்தினாலு மணி நேரமும் நம்மைச் சுத்தியே இருக்காப்பா..

அம்மாவுக்கு ஒரு புது உலகம் காண்பிக்க வேண்டியது நம்ம கடமையில்லையா.. அவளுக்கு பிடிச்சது செய்ய ஆரம்பிக்கணும்.. அதுக்கு அவளுக்கே அவளுக்குனு ஃப்ரீ டைம் கிடைக்கணும். கரெக்டாப்பா...?


ஹாஸ்டல் வாழ்க்கை ஆரம்பித்து 2 மாதம் ஓடிப்போச்சு. 

அம்மாவிடமிருந்து குட்மார்னிங்குடன் அனிஷா செய்ய வேண்டிய வேலைகளின் லிஸ்ட் வந்து உள்டப்பியில் விழும். 

 அதோடு சேர்த்து அம்மா volunteer ஆக இருக்கும் NGO  வின் அன்றைய schedule வந்து விழும்.

சாயங்காலம் ..கண்டிப்பா அம்மா எடுத்த ஃபோட்டோக்கள் அனிஷா அர்ஜுன் ஃபோனின் மெமரியை நிரப்பும். 


அப்பாவுக்கு ஸ்மைலியுடன் மெசேஜ் அனுப்புவாள் .." எப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்' என்று .

Madhyamar-இதுக்கு போய் அலட்டிக்கலாமா

 இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

"சொன்னபடி கேளுு மக்கர் பண்ணாதே"னு பாடினப்பறமும் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை.

எந்தக் கிக்குக்கும்..கிக்கே ஆகாமல்..மெளனமே பார்வையாய்..

'ஸ்கூட்டி இல்லாத வாழ்வு என்னது.?.என்று ரேவதி ஸ்டைலில் என் மை.வா. பாட..

"நான் அசைந்தால் அசையும் அகில(லா)மெல்லாமும்'னு என் ஸ்கூட்டி எச பாட..

என் சோகத்தை பார்த்த பக்கத்தில் கருமமே கண்ணாய் கார் துடைத்தபடி இருந்த பையன்..'என் கிட்ட மோதாதேனு'  வீரமா ஸ்கூட்டியை உதை உதைனு உதைக்க ஆரம்பிச்சான்.

'உனக்கும் பெப்பே..உங்க அப்பாவுக்கும் பெப்பேனு ' என் 'pep'.. நக்கலாய் ஒரு சிரிப்புடன்.

hato  hato..mein karunga நு நேபாளி செக்யூரிடி வந்து ஒரே கிக்..வண்டி வேதனையில் முனக ஆரம்புச்சது..அடுத்த அடியில்.."பறந்து செல்லவா..பறந்து செல்லவா" நு பாட்டு பாட ஆரம்பிச்சது..


செக்யூரிட்டி ஒரே குஷியில் ' mere paas maa hai' என்று கழுத்தில் போட்ட டாலரை கண்ணில் ஒற்றியபடி..கார் துடைத்த பையனுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

பாவம்..அந்தப் பையன்..கால் மணி நேரம் போராடியதன் பலனை செக்யூரிட்டி தட்டிச் சென்றார். இவன் செக்யூரிட்டி இல்லை..சகலகலா வல்லவன்னு அந்த வழியா போன மாமா..கொஞ்சம் ஐஸ் வெச்சுவிட்டு போனார்.


நன்றி சொல்லவே எனக்கு ஒரு வார்த்தையில்லையேனு சுவர்ணலதா என் மன BGM ல் ..

ஃப்ரண்டுக்காக காத்திருந்த வேளையில்..இப்படி எத்தனை பல்பு வாங்கியிருக்கோம்னு ஒரு 

மண்டையில் flash back ஓடியது..


'பா'ட்டில் மூடியே தாழ் திறவாய'்னு  தட்டிப் பார்த்து..திருகு திருகுனு திருகினப்பறம் கழற்ற வராத மூடி..

வூட்டுக்காரர் 'திறந்திடு சீசே(சா)'நு சொல்றதுக்கு முன்னாடியே..வாயைப் பிளக்க..

அதெல்லாம் ஒரு technique நு சொல்லிண்டே போக  .நானோ..'உன்  பார்வையில் ஓராயிரம்  சயின்ஸ் நான் தெரிஞ்சுப்பேன்..வாழ்வில் தானேனு '  அம்மன் கோயில் கிழக்காலே ராதா மாதிரி ஆனந்தக் கண்ணீருடன் .


flash back வளையம் இன்னொரு முறை சுற்றியது. இப்போ..பெண்ணோட turn.


பெண்ணின் கட்டுரைப் போட்டிக்கு கண் முழிச்சு..நோட்ஸ் எடுத்து ..கருத்து கொப்பளிக்க எழுதி கொடுக்க..அங்கே வந்த தோழி..ஒரே ஒரு quote  சொன்னாள்.

ஸ்கூல் போய்ட்டு வந்த பெண்..Amma..aunty சொன்ன quote...made my day என்று சொல்ல.. heart ல லேசா  crack விழற சத்தம்..

'பெத்த மனசு..பித்தத்திலும் பித்தமடானு..அடுத்த போட்டிக்கு நோட்ஸ் ரெடி செய்ய துவங்கினது..ஞாபகம் வர..


ஹலோ..எந்த உலகத்தில இருக்கே? எத்தனை தடவை ஃபோன் பண்ணியிருக்கேன் பாருனு..என்ன மத்யமருக்கு எழுத ஏதேனும் topic கிடைச்சுடுத்தா.. வா கிளம்பலாம்னு வண்டியை கிளப்ப..

அங்கே ஒரு scene.் என் அபார்மெண்ட்டின் குட்டி வால்..அவன் குட்டி சைக்கிளின் செயின் கழன்று..அவன் கூட இன்னும் சில வாண்டுகள் பிரம்ம பிரயத்தனத்தில் செயினை மாட்ட..

அப்போது அங்கே வந்த அபார்ட்மெண்ட்டின் அண்ணங்கள் ரெண்டு பேர்..அசால்ட்டா மாட்டிக் கொடுத்துவிட்டு போக...'அண்ணா சூப்பர் ண்ணா..' வாழ்த்து மழை


' இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..' என்ற SPB யின் குரல்..எங்கிருந்தோ காதில் வந்து விழுந்தது.

Madhyamar-வெள்ளம்

 #வெள்ளம்_ஸ்பெஷல்

மடை திறந்து பாயும் (கங்கை) நதி  நான்..


geometry, geography,geology எல்லாத்துக்கும் மேல் GK ..இந்த எல்லா G யும் நமக்கும் ரொம்ப தூரம்.


 ஆனா..வாழ்க்கைத் துணைவரோ hydro engineering ,dam construction நு வேலை.

டெல்லியில் இருந்தபோது முதல் முதலா பூகம்பம் எப்படி இருக்கும்னு அறிந்தேன். எல்லாரும் கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று விட்டு , ஒண்ணுமே நடக்காதது போல வீட்டுக்குள் போய் விடுவோம்.


தேஹ்ராதூன் வாழ்க்கை ஆரம்பம். ஜூன் மாசம் ஆரம்பித்தால் newspaper முழுதுமே..மழையில் நனைந்தபடி, cloud burst ,landslide நு வந்தபடி இருக்கும். பேய் மழை கொட்டறதுனு என் வீட்டுக்காரர் ukimath லேர்ந்து சொல்லுவார். புரண்டு பெருகி ஓடும் கங்கையின் சத்தம் நிசப்தமான ராத்திரியில் ஃபோன் வழியாக கேட்கும்போது..நித்திரையோடு..நிம்மதியும் தொலையும்.


ஒரு வாரம் லீவ் கிடைச்சாலும்் உடனே மூட்டை கட்டிடுவோம் . சில சமயம் ஜோஷிமத்,பத்ரிநாத் சிலசமயம் ukimath. 

எப்போது மழை கொட்டும் , மலையும் சரியும், பாதை மூடுமென்று சொல்ல முடியாது.


இப்படி ஒரு ஆகஸ்ட் மழையில்..மாட்டிக் கொண்டோம் மலைப் பாதையில்.

சின்னக்கோடாக ஹிமாலயத்திலிருந்து வழிந்த நீர்..சீறிப் பாய ஆரம்பிக்க..

கங்கை..கலங்கி ஓட..கலக்கம் வயிற்றில்..இரண்டு பெண்களுடன் நடு ரோடில்( ரோடு மறைந்து மண் பாதை).


கண்ணெதிரில் பட படவென்று சரியும் மண்ணும் கல்லும்..ஒற்றை வழிப் பாதை தான் அங்கே..

ரெண்டு பக்கமும் வாகனங்கள். 

ஒரு பக்கம் மலை..இன்னொரு பக்கம் கங்கை சீறும் மடு..

நாம் கிளம்பிந வண்டி எப்போது போய்ச் சேரும் என்று யாருக்கும் தெரியாது.


ஆனால் அங்கே பார்த்தேன்..மனித மனம். உதவும் குணம்.crisis management.

ஃபோன் எல்லாம் வேலை செய்யாது. chalo bhai..hum karlenge..இப்படி குரல்களுடன் களத்தில் இறங்கிய எல்லா வயது ஆண்கள். ஆச்சரியம். இவர்கள் செய்யும்போதே ஒரு வழியாக அரசு உதவி வண்டிகள் வர..அவர்கள் தான் வந்தாச்சே என்று கைகட்டி நிற்காமல்..வேலையை சுளுவாக்கிய வேகம்.


ஒரு இடம் இப்படி தாண்ட. கொஞ்ச தூரம் நகரவும் மீண்டும் ரோடே மறைந்து ..கங்கை ஜாலியா ஜாகிங் பண்ணியபடி..

இனிமேல் இங்கேயே தான்..வழி கிடையாது.


hemkund sahib தீர்த்த யாத்திரை போகும் நேரமாதலால் எங்கு பார்த்தாலும் ஒரு டெண்ட் அமைத்து langar எனப்படும் free kitchen. ரொட்டிகளும் பன்னீர் சப்ஜியும் டாலும்..அத்தனை சுறுசுறுப்பாக ரொட்டி செய்து வந்தோர் பசியாற்றிய அத்தனை சீக்கியப் பெண்களும் ஆண்களும் அவர்களுக்கு உதவி புரிந்த வழியில் மாட்டிக்கொண்ட அத்தனை நல்ல் உள்ளங்களும்..


மதமாவது..மொழியாவது..பசியும் தாகமும் வந்தால் பத்தும் பறந்து போகும்.

அவரவர் பைகளிலிருந்து எல்லா ஊர் திண்பண்டமும் distribution. 


ஒரே ஒருத்தர் ரெண்டு பேர் ஃபோன் வேலை செய்ய..தகவல் சொல்ல தன் கைப்பேசி கொடுத்து உதவியவர்கள்.

குழந்தைகள் குழப்பம் புரியாமல் புது நண்பர்கள் கிடைத்த சந்தோஷத்தில் கும்மாளம்.

ஆனாலும்..எல்லார் மனதிலும் நம் வீட்டை திரும்பிப் போய் பார்ப்போமா..என்ற திகில்.

ரோடிலே 20/மணி நேரம். எப்போது மலை சரியும் என்ற திகில். 

பேரிடர் குழுக்கள்..உயிரைப் பணயம் வைத்து ஊருக்கு போக வழி செய்ய..


உள்ளூர் மக்கள் இது எப்பவும் நடக்கிறதுதானே என்பது போல எந்த வண்டிக்கும் காத்திராமல் நடராஜா சர்வீஸில்...தம் வழிக்கு சாப்பிட வைத்திருந்த ரொட்டிகளை குழந்தைகளுக்கு கொடுக்க..


அங்கே ஒரு புது இந்தியா கண்டேன்..காண்பித்தேன் என் குழந்தைகளுக்கு.


வரைபடம் பார்க்கத் தெரியாத எனக்கு..விரிந்த சிந்தனையும் எண்ணமும் தர ஆரம்பித்தது இந்த மாதிரி பல சம்பவங்கள்.


கான்கிரீட் காட்டுக்குள் வந்து ஒடுங்கி..அந்த கங்கையையும் கேதாரனையும் பத்ரிநாதனையும் இன்னொரு முறை போய்ப் பார்ப்பேனா..ஆதங்கத்தில் நான்..


இங்குள்ள படங்கள்..நான் எடுத்ததுதான்

pic1..கொட்டும் கற்கள்

pic 2. ..you can see the difference in the color of water alaknanda and mandakini at karnayaprayag

pic 3..water water everywhere

pic 4..rescue

pic5..ரொம்ப முக்கியம்..langar..லங்கணத்திலிருந்து காத்த லட்சியவாதிகள்

pic 6..கல்லும் பாறையும் கங்கைக்கு மெத்தை

pic 7..men in action.

Madhyamar-attitude

 #சுதந்திரதின_ஸ்பெஷல்.

இந்தியாவின் பிரச்சனை..

attitude..


ஒரே ஒரு தடவை..

அந்த க்யூவை விட்டு சைட் வழியா நுழைஞ்சால் என்ன?

ஒரே ஒரு தடவை லஞ்சம் கொடுத்தால் என்ன?

ஒரே ஒரு தடவை இந்த சாலை விதியை மீறினால் தான் என்ன?

ஒரே ஒரு தடவை வரிப் பணத்தை கட்டாமல் ஏமாற்றினால் என்ன?

ஒரே ஒரு தடவை கஜானாவை கொள்ளை அடித்தால் என்ன?

ஒரே ஒரு தடவை  குப்பையை ரோடில் வீசி எறிந்தால் என்ன?

ஒரே ஒரு தடவை கலப்படம் செய்தால் என்ன?

ஒரே ஒரு தடவை ஜாதிக் கலவரம் செய்தால் என்ன?

ஒரே ஒரு தடவை வன்முறையைத் தூண்டினால்  என்ன?

ஒரே ஒரு தடவை பதவியில் அமர்ந்தால் என்ன?

ஒரே ஒரு தடவை காசு கொடுத்து சீட் வாங்கினால் என்ன?

இப்படி..

ஒரே ஒரு தடவை ..ஒரே ஒரு தடவை என்று கோடிக் கணக்கான மக்களின் ஒரே ஒரு ஒரு முறை செய்தால் என்ன பெரிதா தப்பாகிடப் போகிறது என்ற எண்ணத்தை ஒழிப்போம்.


தூண்டும் யாரையும் நம்மைத் அண்ட விடாமல் ஆணவமாய் ஒரு "no' சொல்வோம்.


இவன் பெரிய நியாயஸ்தன் என்று கேலி பேசினாலும்..ஒரே ஒரு முறை தலை நிமிர்ந்து 

குறுக்கு வழியில்லா நேர் வழியில் சென்று வெற்றி காண முயல்வோம்.


சின்னப் புள்ளிகள் தான் ஒரு பெரும் கோலம் உருவாக்கும்.

சின்ன சின்ன மழைத்துளிகள் தான் பெரு வெள்ளமாகும்.


ஒரே ஒரு முறை.. let's change the attitude. 


take a 'vow' ..

i will be the pillar of this nation. I will be the eyes of this nation. this is my vow and i will never forsake it' 

சபதம் எடுப்போம் ..சகதியில் வீழோம் என்று.


நாம் எடுக்கும் vow..ஒரு நாள் நம்மை ஏய்ப்போரையும் ஏளனம் செய்வோரையும் 

" wow' என்று சொல்ல வைக்கும்..

வைக்கணும்.

ஜெய் ஹிந்த்

Madhyamar-ஆரஞ்சு மிட்டாய்

 #சுதந்திரதின_ஸ்பெஷல்


ஆரஞ்சு மிட்டாய் to Adidas bag.


வீழ்ச்சி வீழ்ச்சி என்ற வார்த்தை காதில் விழுந்தபடி இருக்கும்போது வளர்ச்சி..அதுவும் ஒரு சிறு வளர்ச்சி பற்றி எழுத வாய்ப்பு கொடுத்த அட்மினுக்கு வந்தனம்.


80 களில் ..ஊரை விட்டு வெளியே ஒரு ப்ளாட்.. அதில் சின்னதா ஒரு வீடு. பஸ் ஸ்டாண்டிலிருந்து தெரியும் வீடு. 


இரவானால் வோல்டேஜ் குறைந்து அழுது வடியும் விளக்குகள்.

சரக் சரக் செருப்பு சத்தம் .. கிழிக்கும் நிசப்தம்.


சின்ன காலனிக்குள் ஒரு மைதானம். மழைக்காலத்தில் புதர் மண்டி இருக்கும்.

ஒரே ஒரு ஊஞ்சல் ( பேய் படத்தில் வருமே) ஆடியபடி இருக்கும். 

குப்பை கொட்டுவோர்க்கு வசதியான இடம்.

சாயங்கால நேரம் புதுசாய் புகைபிடிக்க கற்றுக் கொண்ட road side ரோமியோக்களின் புகலிடம்.

 அவர்களிடமிருந்து வெளிவரும் புகையுடன் ..பேச்சும்..கேலியும். 


காத்திருப்போம் காலனி மக்கள் சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும்.


பளிச் விளக்குகள், எல்லார் வீட்டிலிருந்தும் கொண்டு வரப்படும் நாற்காலிகள், மேசைகள்.

சட்டையில் குத்த கொடி ரெடியாகும். பாட்டு ப்ராக்டிஸ் நடக்கும்.பூக்கள் அலங்காரம் , கோலம் எல்லாம் களை கட்டும்.


அந்தந்த வருஷம் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவருக்கு பரிசும் உண்டு.


பேனா வேண்டுமா..பை வேண்டுமா என்று செக்ரட்டரி மாமா கேட்க..கனவோடு வாய் பிளந்து ..ஜிப் வைத்து மழையில் நனையாத  adidas bag வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். வரிசையில் நின்று மிட்டாய் வாங்கித் தின்று..

இரண்டு நாள் காலனியே ஜக ஜோதியாய்.

எல்லா வீட்டிலும் தன் வீட்டு விசேஷம் போல சின்ன சின்ன வேலைகள் செய்து கொடுப்போம்.


எல்லாம் முடியும்..மீண்டும் அதே இருள் சூழும்.


இப்படியே சில வருடம் போக..


ரிடையர் ஆகி வீட்டில் உட்கார ஆரம்பித்த சில அரசு ஊழியர்கள்.. ' ஏதாவது செய்வோம் நல்லது இந்தக் காலனிக்கு ' என்று நாயகன் ஸ்டைலில் களத்தில் இறங்கினர். எங்கே தட்டினால் கதவும் திறக்கும் உதவி கிடைக்கும் என்று அரசுப் பணிகளில் இருந்த நேர்மையான அனுபவம் கைக் கொடுக்க..


புல்லும் புதரும்..பதர்களும் இருந்த மைதானம் புதுசாக புதுப் பொலிவு பெற ஆரம்பித்தது. 

காம்பவுண்ட் சுவர்களில் திருக்குறளும் விவேகானந்தரின் வார்த்தைகளும் வண்ணமயமாக எண்ணத்தை தூண்ட எழுதப்பட..

ஒற்றை ஊஞ்சல் போய்.. ஊஞ்சல்களும் ,சறுக்கு மரமும் கலர் கலராக..கண்ணைக் கவர..

சின்ன சின்ன பாத்திகளில்  பூக்கள் மலர..

காலாற நடக்க அழகான நடை பாதையும், அசதி போக்க அமரும் இருக்கைகள் அமைக்கப்பட

குழந்தைகள் ஒரு பக்கம் விளையாட..பேச்சும் நடையுமாய் பெற்றோரும் ,பேரன் பேத்திகளுடன் தாத்தா பாட்டிகளும்..


இப்பொழுது எல்லா நாளும் சுதந்திர தினம் தான்.


சுதந்திரமாய் கால் வீசி நடக்க..சுதந்திரமாய் குட்டீஸ் விளையாட, சுதந்திரமாய் அரட்டை அடிக்க..உருவாகி இன்று ஒரு மாடல் பூங்காவாக திகழும் எங்கள் காலனிப் பூங்கா.

ஓடி ஓடி இதற்காக உழைத்த என் அப்பா..( எப்பவும் என்ன தெரு முனையில் கூடிக் கூடிப் பேச்சு என்று அம்மா ஏசலையும் மீறி)

தலைவரே..எங்க வீட்டில தண்ணீ வரலை..குப்பை எடுத்து போகலை..இப்படி சின்ன சின்ன வேலையிலிருந்து மனம் கோணாமல் அப்பாவும் அவர் நண்பர்களும் செய்த ப்ராஜக்ட்.


வாலிபத்தில் வருமானத்துக்காக ஓடி..

வயது முதிர்ந்த போது..ஒரு சின்ன வளர்ச்சிக்காக உழைத்த இவர்கள் ..


"என்னால் என்ன உபயோகம்?" வயது காரணமாக அப்பா விரக்தியில் பேசும்போது..

நான் உபயோகிக்கும் ஒரு எனர்ஜி அஸ்திரம்..இந்த பார்க்கின் ஃபோட்டோ.


இன்று ஆரஞ்சு மிட்டாய் மறைந்து  mothi choor லட்டுவும் மிக்ஸர் பாக்கெட்டும் ..

adidas bag மறைந்து அழகாய் certificate ..


எப்போது சென்றாலும் என் வீட்டுத் திண்ணையில் நின்றபடி..இந்த வளர்ச்சியை ரசிக்கும் ஒரு சாதாரண நான்.


ஜெய் ஹிந்த்

Madhyamar-ஓம் நமசிவாய

 #ஆன்மீகம்.

( புத்தனை பற்றி எழுதிய எனக்கு ..அந்தப் பித்தன் எனை் காத்ததை எழுதாவிட்டால் ..அவ்வுலகம் கிட்டாது)

மீள் தான்..ஆனாலும் இன்றும் மெய் சிலிரிக்கும் அனுபவம்


(உயிர்)பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றேன்..ஐயனே..என் ஐயனே..


உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.


2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.

ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..


gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.

குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.


பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..

குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து.


 counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.


குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி  குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..


மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.


கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.

மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.


மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை. அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.


திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.


ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை). 


இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..


வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.

வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.


மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..


மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aao maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன். 

என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான்.


 வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா  காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ  தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..


நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.


cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும்  செய்திகள்.. 

கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.


காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம். 

எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே

அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..


எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும்  பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன். No prayers go unanswered


வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.

Madhyamar-இரண்டு கைகள்

 #பெண்_ரொம்ப_பாவம்

எச to Shankar Rajarathnam


இரண்டு கைகள் நான்கானால்…


அப்பாடா.. ரெண்டு வண்டிய கிளப்பியாச்சு..இனிமே ஒரு walking..ஜோல்னா பையுடன் … வர வழியில் கிடைச்சதை வாங்கிப் போட்டு வந்தால்.. ஒரு பெரிய வேலை முடியும்.. சாமான் வாங்கி வந்துடலாம்.. அதை எடுத்து வைக்க ஒரு பெரிய பொறுமை வேணும்.. அரிசி பருப்பை டப்பால கொட்டணும்.. காய்கறி ஒண்ணொண்ணும் பார்த்து cover la போட்டு.. பச்சை மிளகாயை காம்பு கிள்ளி , கொத்தமல்லி , புதினா எல்லாம் ஆய்ந்து தனியா பிரிச்சு.. (இப்படி எடுத்து வைக்கலைனா என்னனு என் பெண்கள் கேட்கும் போது.. குல வழக்கம் டா.. குல வழக்கம்னு ஒரு dialogue விட்டு). 


….ஒரு பக்கம் grinder.. இன்னொரு பக்கம் ரொம்ப பத்திரமா சேர்த்து வைச்ச பாலாடையை எடுத்து வெண்ணை எடுக்கல்.. ஐயோ மணியாச்சே.... cooker வைத்து, குழம்பு ஏற்றி…..இதுக்கு நடுவுல நமக்கு எப்பவும் துணையா இருக்கிற MSS ல ஆரம்பிச்சு..


 ராஜா ,ரஹ்மானோடு.. பாரதி பாஸ்கர் ,TTR speech, இவர்களை எல்லாம்  you tube தேடி..  FB ல என்ன update , watsapp ல என்ன profile pic போடலாம்னு ஒரு குழம்பு குழம்பும் வேளையில்.. ஒரு பக்கம் cooker விசிலோ விசிலாய் அடித்து என்னை கூவ.. அதற்குள் தொலைபேசி அழைக்க..”எவுரம்மா நீவு”னு ஒரு குரல்.. அம்மா பகவதி.. நீங்க தானே phone பண்ணிணீங்கனு.. நான் சொல்ல.. தேவுடானு.. நான் சொல்ல வேண்டியதை அந்த அம்மா சொல்லி இணைப்பைத் துண்டிக்க..

ரொம்ப நேரமா உன் ஃபோன் பிஸியாவே இருக்கே.. 


வூட்டுக்காரர் ஃபோன் வரும். 

அந்த OTP வந்திருக்கு பாரு..என் சம்பந்தப்பட்ட மெசேஜ் எதுவுமே உன் கண்ல படாதேனு ஒரு கோபமும் கவலையும் தோய்ந்த குரல். 

எந்த மொபைல்னு தேட..OTP time out நு சொல்ல..

சரி சரி..விடு என டொக் என துண்டிக்கபடும் லைன்.


 ஐயோ குக்கர்னு ஓடிப் போய் ஆஃப் பண்ண.. ..

 மாவு மாஆஆவாக..

இதோ வரேன் உன்னை கவனிக்கனு மாவை எடுக்க ஆரம்பிக்க.. சொல்லி வைத்தாற்போல  காலிங் பெல் அடிக்க.. வாசலில் ப்ரசன்னம்.. துணி இருக்கானு கேட்டு இஸ்திரி போடும் பெண்....


நாளைக்கு ப்ராஜக்ட் டே க்கு யூனிுஃபார்ம் ரெடி பண்ண சொல்ல..


 அப்போனு பார்த்து கையில் ஒட்டிய மாவு பாசமாய் என் கையை விட்டகல மறுக்க.. ஒரு வழியாய் அவளை வழியனுப்பி…கட கடனு மாவை டப்பால போட்டு, வர மறுத்த வெண்ணையை.. விடாப்பிடியா வரவழைத்து.. காய்ச்சி எடுத்து முடிச்சு.. final touch up கொடுத்து சமையல் முடித்து.. சாதம் பறிமாறி.. பாத்திரம் ஒழித்து..


 அப்பாடா … வேலை முடிஞ்சது… சோபாவில் சாய்ந்து … நிம்மதி பெருமூச்சு விட்ட வேளை.. ஒரு ஃபோன்கால்.. ஐயோ இப்பொ ஏன் கூப்பிடறா.. என்ன சொல்லப் போறாளோனு.. மனம் பதை பதைக்க.. என் ஆருயிர்.. என் உடன் பிறவா வின் குரல்..”madam.. aaj mein kaam pe nahi aa rahi hoon.. “ என் வலக்கரம்.. என் வீட்டு வேலைக்கு உதவும் நேபாளி சகோதரியின் குரல்.. அவளிடம் “koi baath nahi..”  சொல்லி விட்டு.. மீண்டும் நுழைந்தேன்.. விட்ட இடத்திலிருந்து வேலை தொடங்க.. 


 FM ரேடியோவைத் திருக..”வேலை இல்லாதவன் தான்.. வேலை தெரிஞ்சவந்தான்.. வீரமான வேலைக்காரன் “ பாட்டு timing ஆ வர.. அப்பறம் என்ன… 

ஆவி புகுந்த வேகத்தில வேலை செஞ்சு முடிக்க…  என் வேலை பா “உனக்கென்னம்மா... ஜாலியா tv பார்த்துண்டு இருப்பேனு” லஞ்ச் டைமில் காத்து வாங்க வந்த வீட்டுக்காரர் சொல்ல..


இப்படியே..இப்படியே..இடியுடன்..

Madhyamar-ஆன்மீகம்

 #ஆன்மீகம்

(மிக தாமதமாக பதிகிறேன். ஆனால் மனதில் உள்ளதை மத்யமர் நண்பர்களிடம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?)


பூஜையெல்லாம் உண்டா உன் வீட்ல? நீ Buddhism க்கு மாறிவிட்டயாமே? இப்படி ஒரு சிலர்.Buddhism follow பண்றேன்னு சொல்ற..எங்கே வீட்டில் ஒரு புத்தர் படமும் காணோமே?.


இளக்காரத்தின் உச்சத்தில் பலர்..

இருக்காதா பின்னே? கேட்டவருக்கு சொல்கிறேன்..என்னிடமும் இருக்கு..உன்னிடமும் இருக்கு அந்த்க Buddha nature. அதைத்தான் நான் காண்கிறேன் என்பேன்.


பிள்ளையாரோடு பேச்சு வார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் அம்மா..

அருகம்புல் வைத்து அனுதினமும் பூஜை செய்வாள்.

அம்பாளின் பூரண அனுக்கிரஹம் பெற்றவள்..

அப்படிப்பட்டவளின் பெண்ணாகிய நான்..ஜப்பானிய மொழியில் ஒரு மந்திரம் chant செய்ய ஆரம்பித்தபோது அதிர்ந்தாள்.


இது என்ன நம்ம குடும்பத்தில் இல்லாத ஒரு நம்பிக்கை திடீர்னு உனக்கு எப்படி? தெய்வ குத்தம் ஆகிடும்..எனக்கு பயமா இருக்கு என்று புலம்ப ஆரம்பித்தாள்.

நீங்களும் என்னடாநு யோசிக்கறது புரிகிறது.


 நம்ம மதத்தில் இல்லாத எதைத் தேடி ..ஏன் அங்கே போகணும் ..இப்படி பல கேள்விகள் எழலாம்.

என்னைப் பொறுத்தவரை..என்றுமே வந்த வழி, வழிபட்ட தெய்வங்கள் என்றுமே என் துணை..

இந்த Buddhism என்பது எனக்கு philosophy of life புரிய வைத்தது. அதுவும் நான் வணங்கும் எல்லாத் தெய்வங்களின் செயல்தான் என்னை இந்த புத்த மதம் இழுத்ததற்கும் காரணமோ என்று நினைப்பேன்.


எந்த ஒரு பூஜையும் புனஸ்காரமும் நிறுத்தவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையம் உணர்கிறேன். 


ஒவ்வொரு நாளும் ஒரு புத்துணர்ச்சி யுடன் தொடக்கம். 


what is the purpose of life? வேறென்ன..மகிழ்ச்சியான வாழ்க்கை..

அது எப்போது கிடைக்கும்? 


inner transformation is the key to human revolution என்று ஒவ்வொரு நாளும் என் சொல்,செயல்,எண்ணம் fine tune செய்கிறேன். 

கெஞ்சி கூத்தாடி இதைத் தா அதைத் தா என்று கேட்டது போக..win or lose ,i determine to fight till the my last breathe என்ற மன உறுதி தருகிறது இந்த philosophy. 


why me ? என்ற எண்ணம் போய்  try me என்ற எனர்ஜி.


குழப்பம்,கோபம் எல்லாம் இருந்தாலும் உடனே வெளியே வரச் செய்யும் என்னுடைய இந்த Nichiren Daishonin Buddhism practice.


lotus sutra வின் சாராம்சங்கள் படிக்க படிக்க மனம் லேசாக..

இப்போது முன்னை விட எல்லாவாற்றிலும் சிரத்தையாக ..பக்தியும் பூஜையும் அதிகமாக ..

வாழ்க்கை ஒட்டம்.


உலகம் பூராவும் ஒரு extended family எனக்கு.

Madhyamar-சுய பர்சோதனை

 #சுயபரிசோதனை


நானே நானா..யாரோ தானா..மெல்ல மெல்ல மாறினேனா..

சுயபரிசோதனை செஞ்சு முடிச்சதும் இந்த பாட்டு பாட ஆரம்பிச்சுடுவேனா ..தெரியல..


ஆள் காட்டி விரல் யாரையோ காட்ட..மீதி நாலு விரலும் அமைதியா மடங்கி நம்மையே குறி வைக்க..மகளே..முதல்ல உன்னை சரி பண்ணு..அப்பறம் எதிராளியை.என்று அங்கேயே மண்டையில் அடிக்கும்.


சுய பரிசோதனை..


ஒரு பேப்பர் பென்சில் எடுத்து என்னோட ப்ளஸ் என்ன..மைனஸ் என்னனு எழுதலாமுனு முதல் அடி எடுத்து வெச்சேன்.

நீ நல்லவரு, வல்லவரு ..எல்லாம் தெரிஞ்சவருநு எழுதி முடிக்க..

இப்போ வா..மகளே..உன்னோட மைனஸ் எழுத..

"மைனஸா..எனக்கா..கண்ணுல மட்டுந்தாங்க மைனஸ்..மத்தபடி எல்லாம் ப்ளஸ்ஸுனு ஒரு ego . இதுதான்னுங்கோ ..நம்மை கொஞ்சம் ஆட்டிப்படைக்கிற ..படைத்த அசுரன்..

நம்மள சுத்தி வர ஈ யை..ஓட ஓட விரட்டறமாதிரி..இந்த ego வையும் U  GO ..என்று விரட்ட ப்ரம்ம ப்ரயத்தனம்.


அமைதிக்கு பெயர்தான் சாந்தி ..இந்த பாட்டை..

"அமைதிக்கு பெயர் தான் ராமசாமி..அந்த 

அலம்பலுக்கு பேர்தான் அகிலா" நு பாடலாம்..

அப்படி நாங்க..


"கேள்வியை நீங்க கேட்கிறீங்களா..நானே கேட்கட்டுமானு" ..நானே நானு என்று கேள்வியை கேட்பேன்.. ரொம்ப சிரத்தையா அவர் பதில் சொல்லும்போது..மண்டையில்..குழம்பை இறக்கணுமெ..குக்கர் ஆஃப் பண்ணனுமே..சித்திக்கு ஃபோன் பண்ணனுமே என்று அலை பாயும்.

நாள் ஆக ..நாள் ஆக..அவர் சொல்றதை குறைத்த போது தான் ..அடடே தப்பு எங்கேனு தோண.. இப்போ ..correction mode ல ..


2. இதுக்கு பணம் கட்டினியா..top up செஞ்சியா...

இப்படியே நம்ம conversations ஆகிவிட்ட காலத்த்தில்..romantic ஆ பேசாட்டாலும் வெறும் reminders ஆக மட்டும் இல்லாமல் நம்ம பேச்சு இருக்க வேண்டாமேனு  ஒரு fine tuning.


3. எல்லாரும் ஒரே மாதிரி perfectionist ஆ இருக்க முடியாது. பொறுமை என்னும் நகை அணிந்து ..பாட்டு அப்பப்போ மனசுக்குள் ஓட..

சுருக் கோவம், துடுக்குனு பேச்சு ..எல்லாம் குறைக்க ப்ரம்ம ப்ரயத்தனம். 


இப்படி லிஸ்ட் பெரிசா இருக்க..லைஃப் ஓடுகிறது.

ஒவ்வொரு நாளும் i am better than yesterday என்று சொல்லிக் கொண்டு ..


கடைசியில மாத்தி யோசி ஸ்டைலில்..

'உன்னைக் கேட்டுப் பார் நீ யாரென்று.. உன் வீட்டுக்காரர் சொல்வாரே நீ எப்படியென்று'

ராஜா சார் பாடலுடன் ..என் சுயபரிசோதனை தொடரும்...தொடரும்..தொடரும்

Madhyamar- சிறை

 வாங்க போகலாம்..'ஜெயிலுக்கு'


book a prison..feel the jail..


என்னப்பா பயந்துட்டீங்களா..

book my show 

book a villa for your happiness

book a hotel for a trouble free holiday

book a resort (கூவத்தூர் இல்லப்பா) 


இதெல்லாம் மட்டுமே தெரிந்த இந்த சின்ன மூளைக்கு நேற்று செய்தித்தாளில்.வந்த

'book a prison' என்ற  விஷயம் சுவாரஸியமாக பட்டது.


'feel the jail ' என்று ஒரு ப்ராஜக்ட்.


சுதந்திரம் என்பதின் மகத்துவம் உணர வேண்டுமா..

ஒரே நாள் .. ஒரே ஒரு 24 மணி நேரம்.ஒரே ஒரு 500 ரூபாய்..

ஒரு நாள் போதுமா..இன்றொரு நாள் போதுமானு பாடியபடி செல்லலாம்..


வருகிறோம்..வருகிறோம் ..இந்த மாதத்தில்னு..ஜெயில் அதிகாரிகளுக்கு அட்வான்ஸ் அறிவிப்பும் பணமும் கட்டிட்டா போதுமாம்.


மணி அடிச்சா சோறு எல்லா வேளையும் தந்துடுவாங்களாம்.

தட்டு,டம்ளர்,டிரஸ்ஸும் ஈயப்படுமாம்.

நீங்க இருக்குற செல்லை சுத்தம் செய்யணும்..


ஆனா..நோ செல் ஃபோன்..நோ கணிணி..


கம்பி எண்ணுவதோடு..கொஞ்சம் (மரக் ) கன்றுகளும் நடலாமாம்.


இது எங்க இருக்குனு கேட்கறீங்களா.?

ஆந்திராவில் தெலுங்கானாவில் sangareddy jail ல் ஆரம்பிக்கப்படதாம்


 இந்த 'கூண்டுக்கிளி ' adventure.

இங்கே வெளிநாட்டவர் சிலரும் வந்து தங்கி இந்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.


இதை தொடர்ந்து கேரளாவிலும் viyyur prison இலும் இந்த 'experience the jail ' programme ..approval க்கு காத்திருக்காம்.


இதை பற்றி தெரிஞ்சுக்க கூகிள் ஆண்டவர் துணை நாடவும்.


ஏற்கனவே..வீட்டுக்குள்ளேயும் வெளியேயும்..இதே சிறையில் தான் இருக்கிறோம் என்று புலம்பும்..கொதிக்கும் மக்களே..

ஒண்ணே ஒண்ணு சொல்லி முடிக்கிறேனுங்க..


இந்த artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) வளர்ந்து.யாராவது தப்பு செய்ய நினைக்கும்போதே..இந்த ஜெயிலுக்குள் தானா போகாம..நானே தள்ளி விட்டுடுவேன்னு பயமுறுத்தணும்..


காசு ஆட்டோமேட்டிக்காக அக்கெளண்ட்டிலிருந்தோ..paytm இலிருந்தோ deduct செய்யப்படும். 

எதுவுமே இல்லியா.உள்ளே வா 

வேலை செய் ..கடனை அடை..

அதுக்குள்ள செய்ய நினைச்ச தப்பு ..மறந்து போகும்.. ஒரு நம்பிக்கைதான்.


'fear the jail 'என்பது போக 'feel the jail'..


jail museum..இனிமேல் இதுக்கும் மக்கள் அலை மோதுவாங்களா?

Madhyamar-செயற்கை நுண்ணறிவு

 செயற்கை நுண்ணறிவு..காப்பாற்றுமா?

(Artificial Intelligence).


அப்படி என்றால் என்ன?

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்ச நிலையாம் இது இப்போது.


ஒரு கம்யூட்டர் கோர்ஸ் சேர்க்க என் பெண்ணுடன் போனபோது அங்கிருந்த ஒருவர் இந்த AI பற்றி technical.ஆக பேசிக் கொண்டே சென்றார்.


சார்..கொஞ்சம் புரியும் படி சொல்ல முடியுமா என்று கேட்டேன்.

அவர் சொன்னது..


உங்க ஃப்ரிட்ஜல என்ன என்ன பொருள் அதிகமா அழுகிண்டு இருக்கு..

எதோட stock குறையறது..

உடனே ஆர்டர் செய்வது..

நீங்க லைட் சுவிட்ச் எப்போ போடுவீங்கனு கூட தெரிஞ்சு செய்யும்.

இப்படி ஆராம்பிச்சு..


நீங்க வெளியூர் போய் இருக்கீங்க..பக்கத்து வீட்ல சாவியை கொடுத்து இதைச் செய் அதைச் செய்னு சொல்வீங்க..

அதெல்லாம் தேவையில்லாமல் ஆக்கிடும் இந்த தொழில் நுட்பம்.


வெளியூரில் இருந்துகொண்டு, உங்க ் வீட்டை நிர்வகிக்கவும் காவல் செய்யவும் முடியும். 

உங்க  வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியும். 

செடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியும்.

 வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறக்கவோ, மூடவோ முடியும். குளிர்சாதனம், மின் விசிறிகளை இயக்க முடியும். 

'மைக்ரோ வோவன்', துணி துவைக்கும் இயந்திரம் போன்றவற்றை இயக்கலாம்.

 வீட்டினை முழுவதுமாகக் கண்காணிக்க முடியும். இவை அனைத்தும் கைபேசிக் கருவி (Mobile Phone) வாயிலாகச் சாத்தியம்.


இன்னிக்கு வெளிவந்து இருக்கும் ஒரு குழந்தையின் அவலம்..

இந்த செயற்கை நுண்ணறிவு ..பெண் குழந்தைக்கு ஒரு பாதுக்காப்பும்..

அவங்க குடும்பத்துக்கு ஒரு அபாய அலாரமும்..

கிராதகர்களை நெருங்க விடாமல் செய்யும்.ஒரு நெருப்பு வளையமாக மாறுமென்றால்..


ஓலா ஊபரில் ஏறும்போதே ஓட்டுவது ஓநாய் ..இறங்கிடுனு சொல்லிடுமா?


வாட்ச்மேன் இல்லை..வல்லூறு என்று சொல்லிடுமா?


அம்மாவுக்கு புரிய வைக்குமா..பெண் சொல்லாத/சொல்ல முடியாத ஒன்று?


இப்படி எல்லாம் செய்யும் என்றால்..

 

இந்த தொழில் நுட்பம் முதல்ல நம்ம நாட்ல சீக்கிரம் வரணும்னு நினைக்கிறேன்.


( என் சிறிய அறிவுக்கு எட்டியதை பகிர்ந்தேன்.

Keerthivasan Rajamani போன்ற கம்ப்யூட்டர் ஜாம்பவான் கள் தான் சொல்லணும் என் பதிவு சரியா என்று?

Madhyamar- சந்தை

 #சந்தை


#அம்மி குத்தலையோ..ஆட்டுக்கல் குத்தலையோ ..


இந்தக் குரல் நம் வீடு ,தெரு வாசல்களில் கேட்டு எத்தனை நாளாச்சு.


கரண்ட் இல்லை என்று எந்த ஒரு பதார்த்தம் செய்வதும் நின்றதில்லை சில வருடங்கள் முன் வரை.


அம்மி இருக்க..அருமையான சட்னி


ஆட்டுக்கல் இருக்க..அளவளாபியபடி இட்லி மாவு, அடை மாவு....


இந்த ருசி மறக்கடிக்க வந்தது மிக்ஸியும் கிரைண்டரும்.


அடுத்து நம் திருமணகளில் இன்றும் பின்பற்றப் படும் ஒரு சடங்கு.

அம்மி மிதிப்பது:

மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். 

எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.


சரி..சரி..நேரம் யாருக்கு இருக்கு என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது.


ஆனால்..மீண்டும் பழைய சுவைக்கு நாக்கு ஏங்க..எல்லாக் கோயில் வாசலிலும் மார்க்கெட்களிலும் இப்போது அம்மி ஆட்டுக்கல் வியாபாரம் அபாரமா நடக்கிறது.


கிச்சனும் இவைகளைப் பொருத்த வடிவமைக்கப் படுகிறது.

உடம்புக்கு நல்ல பயிற்சி..எந்த ஜிம்முக்கும் போக வேண்டாம்.


என்ன..சின்ன சைஸ் பெரிய விலை.

நேரம் கிடைக்கும் போது இதில் அரைத்து..நம்ம குடும்பத்துக்கு நல்ல சுவையும் காண்பிப்போமே.


சந்தையில் கிடைக்கும் வாங்குவோம்..மீண்டும் ஆரோக்கிய அறுசுவை வாழ்வுக்கு திரும்புவோம்.


(இந்தப் முதல் படம்..என் அம்மா வீட்டில் தலை குப்புற படுத்து கிடக்கும் ஆட்டுக்கல்..

அரைக்க ஆள் தேடும் அம்மி..)

Madhyamar-சேவை

 சேவை.

ரொம்ப வேலை வாங்கும்..

ருசியில..

'உன்னை விட ..இத உலகத்தில உசந்தது ஒண்ணுமில்லைனு" பாட வைக்கும்.

புழுங்கலரிசியை ஊற வைத்து மைய்ய அரைத்து இட்லி தட்டில் வெச்சு வேக வைத்து..( அதுவும் ஆட்டுக்கல்லில் அரைக்க..அப்பப்பா..)

அடுப்பை அணைக்காமல் சின்னதா வெச்சு இட்லியை சேவை நாழியில் போட்டு பிழிய..

ஆஹா..அப்படியே வெறுமனே சாப்பிட்டறேனு அள்ளிக் கொண்டு போகப்படும்.

வெந்த பொருள் ..உடம்புக்கு ஒரு கேடும் கிடையாது.


அதைவிட..நம்ம பண்டங்களின் சிறப்பே..ஒன்றே பல உரு பெறும்.


தேங்காய் சேவை, எலுமிச்சம் சேவை, உளுத்தம் சேவை,தயிர் சேவை வெல்ல சேவை..


இப்போ நம்ம குட்டீஸ்க்கு கொடுக்க வெஜிடபிள் சேவை..


மோர்க்குழம்பு சூப்பரா இருக்கும்.

ஆனா..நான் வத்தல் குழம்பு தொட்டு சாப்பிடுவேன்.


சில சமயம் " அரைச்சவங்களுக்கு ஆட்டுக்கல் தான் என்னும் கதையாகி..ஒட்ட வழித்து ஒரு ஸ்பூன் கிடைக்கும்.


கடைசியா..இந்த 'திங்க' திருவிழா எப்படி முடியும் ஒரு  தயிர் சாதம் மாவடு இல்லாமல்?

எல்லா நதியும் கடலில் சேரும்..

என்ன சாப்பிட்டாலும் கடைசியில் ..மனம் தயிர் அல்லது மோர் சாதம் தேடும்.


அதுவும் அந்த நாள் மாதிரி எல்லாரும் வட்டமாய் உட்கார..கையை குழி செய்து..அதில் ஒரு உருண்டை சாதம்..ஒரு கிள்ளு மாவடு கடித்து..

பிசைந்த சாதமெல்லாம்...பறக்க..

ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?

இத்துடன் என் சேவை முடிந்தது..மீண்டும் மத்யமரில் நாளை ஒரு புது தலைப்புடன் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது ..

Madhyamar-chinese food

 #பாரம்பரியஉணவு_சீனா

நம்ம அடுத்த தலைமுறை சொல்லப் போகிற பாரம்பரிய உணவு இதுவாகத் தானிருக்கும்நு நினைக்கிறேன்.வேறென்ன..?


நம்ம சமையல் போரடிக்கும் போது பக்கத்து வீட்டிலேர்ந்து ஒரு உத்தரணி காயோ..கூட்டோ கொண்டு வந்து கொடுத்தா..ஆஹா..ரொம்ப சொர்க்கமா இருக்கும். இல்லையா?

உப்பு புளி இருக்கோ இல்லையோ இப்போ இது இல்லாத வீடே இல்லை..

பக்கத்து வீடு இல்ல..பக்கத்து தேச பாரம்பரிய உணவு..அதாங்க சைனீஸ் நூடுல்ஸ்..


sample மாதிரி வந்து இப்பொழுது staple food ஆக ஆகிடுமோனு ஒரு கவலைதான்.


பல ஆயிரம் வருஷமா சீனர்களின் பாரம்பரிய உணவு..ஆனால் இப்போது நம்ம வீட்டு குழந்தைகள் பறந்து பறந்து சாப்பிடும் உணவாகியாச்சு.


கேதார் மலை உச்சியில் குதிரைக்கு அழகா கொள்ளு கிடைச்சத்துப்பா..

ஆனால்..இந்த குழந்தைக்கு கூப்பிட்டு கூப்பிட்டு வித்த் நூடுல்ஸ் தான் கிடைச்சது..


எல்லா நாடுகளின் master chef program பார்க்கும்போதெல்லாம் ..இந்த நூடுல்ஸ் செய்ய சொல்ற வேலை இருக்கே..சாதாரண விஷயமில்லை..

அந்த கரெக்ட் பதத்தில் மாவு,கரெக்ட் அளவு பொருட்கள்..நூல் நூலாய் கட் செய்யும் லாவகம்..

டென்சனில் சோஃபா நுனி வரைக்கும் வந்துடுவேன்.

அதையும் நம்ம பாணியில் எல்லா காயும் போட்டு அசத்தலா செஞ்சு கொடுத்தா..

தேவையில்லாத ingredients தவிர்த்து..ஒரு desi noodles செஞ்சு தந்து அசத்த வேண்டியது அம்மாவோட கடமை இல்லையா..?

( நூடுல்ஸே கெடுதல்..இதைப் பத்தி பதிவு வேறயானு குமுறாதீங்க..இங்கே இருக்கும் நூடுல்ஸ் பிரியர்களுக்கு ஒரு dedication.

அவ்வளவுதான்)


இன்னிக்கு 'திங்க' கிழமை..

தீங்கு இல்லை..ஒருநாள் சாப்பிட்டால்.


ஆனால் ஆதிக்கம்னு ஆரம்பிச்சு அடிமையான சரித்திரத்தில் இது எழுதப் படாமல் இருக்கணும்.


நம்ம பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கணும்.


தாய் மொழி கற்ற் குழந்தை போல..வேரைத் தேடி மீண்டு மீண்டும் வரணும் நம்ம தலைமுறை.


ஆதங்கத்துடன் அவ்வப்போது இந்த அலையில் விழுந்து நூடுல்ஸ் செஞ்சு தரும் ஒரு சாதாரண அம்மாவின் புலம்பல்

Madhyamar-பாரம்பரிய உணவு

 #பாரம்பரியஉணவு


"இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்ததாம்..

ஈரோட்டு மாமனுக்கு தொந்தி வந்ததாம்.."

இதுதான் குடும்ப பாட்டு இட்லிக்கு எங்க வீட்ல..


இட்லி தோசையில்லா வாழ்வு என்னது?

சட்னி சாம்பாரில்லா வாழ்வு என்னது?

இதுதான் பாரம்பரிய உணவா?

இதயம் சொல்லி விட்டதா?

சொல் மனமே.....


இட்லி மாவில்லாவிட்டால் ஏதோ கை ஒடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு..

ஃப்ரிட்ஜில் இவர் இல்லாட்டா..வீட்டில் கலாட்டா தான்.


நடுவில் கொஞ்சம் ரூட்டை மாத்தி எல்லாரும் உஜாலாவுக்கு போய்..விவேக் சொல்ற மாதிரி ஜல்லி மாதிரி ஒரு kellogs..அதை பாலில் ஊற வைச்சு தின்னோம்.


எங்க பாட்டி சொன்னா..எங்கம்மா சொன்னா..இப்போ டாக்டரும் அதே தான் சொல்றாங்க..ஒழுங்கா பழையபடி இட்லி தோசைக்கு வாங்க என்று.


இட்லியின்றி இன்பம் ஏது

தோசை இன்றி துள்ளல் ஏது

ஊத்தப்பம் தருமே உற்சாகம்..

மசாலா தோசை மயக்குமே எல்லாரையும்

குழி அப்பம் ..இதுக்கு கூட்டம் ஏராளம்.

சட்னியும் சாம்பாரும்..

சக தோழமைகள்..ஆனால்..

மிளகாய்ப் பொடி இட்லிக்கு

மவுசுதான் என்றுமே..

சத்தெல்லாம் மொத்தமாய் இதிலிருக்க

சொத்தை அழிக்கும்..

வெளி நாட்டு உணவு நமக்கு எதுக்கு?


இன்பம் இன்பம் இட்லி தோசை இன்பம்

படையே வந்தாலும் படைக்க..

சம்படம் மாவிருந்தால் போதும்.

இதுக்கு நான் என்ன ரெசிபி போடறது?

நீங்க எல்லாருமெர் இதில் experts.


புதியன புகட்டும்..

பழமை..என்றும் இனிமை..


வேறென்ன..வேறென்ன வேண்டும்?

வெந்த இட்லியும் சட்னியும் வேண்டும்

மொறு மொறு தோசை வேண்டும்னு..

பாட்டை மாத்துவோம்..

ரூட்டையும் மாத்துவோம்

அளவாய் சாப்பிட்டு ஆரோக்கியமாய் இருப்போம்.

Madhyamar- லேகியம்

 #பாரம்பரிய_உணவு..

மெனுக்கள் ரெடியாக..

'திங்க'கிழமை..


லேகியம் சாப்பிடலையோ லேகியம்..


 மத்யமர்  ஐயா..அம்மா..வாங்க வாங்க..

பல தலைமுறை சாப்பிட்டு ரசித்து வந்த அற்புத லேகியம் இது.

நாளைக்கு 'திங்க' கிழமை திருவிழாவில்..

விடிய விடிய கண் முழிக்க போறவங்களே..

எடத்தை விட்டு நகராமல் போஸ்ட் படிக்கப் போறவங்களே..

லைக்கும் கமெண்ட்டும் போட்டு விரல் வீங்கப் போறவங்களே

கடகட குடுகுடுனு உருளப் போகும் வயிற்றுக்கு  சொந்தக்கார்களே..

இதோ..ஒரு அற்புத மருந்து..

காடு மலை போக வேணாம்.

கண்டன் திப்பிலி அரிசி ்திப்பிலி,ஓமம்,கசகசா  இஞ்சி மிளகு வெல்லம், தேன் ..எல்லாம் சேர்த்து பக்குவமான கலவை இது.

ஒரு உருண்டை போதும்...கலகலனு ஆகும் உடம்பு..

இது தீபாவளிக்கு மட்டுமல்ல.

.'திங்க' திருவிழாவிலும் தின்னனுமிங்க.


அஜீரணம்..அரண்டு ஓடும்..

பொருமும் வயிறு பொறுமையாகும்.

சளி ..ஓடிப் பிடிச்சு விளையாடாமல் ஓட்டமாய் தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக நாளைக்கு எந்த பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.

இனிப்பு,காரம்,மசாலா...படிக்கும் போதே வயிறு நிரம்பி..வாயுக் கோளாறு வரும் அபாயம் இருக்குங்கோ.

வாங்க..எல்லாரும் ஒரு உருண்டை எடுத்துப்போம்..தீபாவளி காலையில் முதல்ல மருந்துடன் ஆரம்பிக்கற மாதிரி..இந்த திருவிழாவையும்..லேகியத்துடன் துவக்குவோம்.

Madhyamar-சமூக நோக்கம்

 #மகளிர்_மட்டும்

#அரசியல்

#சமூக_நோக்கம்


கடையின்  கதவு ஷட்டர் பாதி இறக்கி..மூடு விழா நடத்தும் நேரம்..' இருப்பா..இருப்பா..நான் கொஞ்சம் குனிஞ்சு உள்ளே வந்துடறேன்னு சொல்ற மாதிரி தான்..எங்கள ப்ராஜக்ட் வாழ்க்கையும்.நாங்க சாமான் செட்டெல்லாம் தூக்கிண்டு போய் செட்டில் ஆகும்போது ..மூடு விழா ஆரம்பிக்கும்.


இரண்டு ப்ராஜக்ட்..

1. முதல் முதலில் தனியான் நிறுவனம் எடுத்துக் கொண்ட hydel power project ..

ரம்மியமான நர்மதை நதிக் கரையில் வாசம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமா andolan நடக்கும்.

வூட்டுக்காரர் சீக்கிரம் வந்தா..' வேலை போய்டுத்தா ? ' என்று அவரோட டென்சனை ஏத்தி விட்டு விடறது.

நிறைய குளறுபடிகள்..அரசாங்க தரப்பில்..கம்பெனியின் தரப்பில்..

ஆனால்..என் பார்வையில்..


1. பாரத விலாஸ் மாதிரி ..ஒரு மினி இந்தியா ..பல மொழி..பல கலாச்சாரம்.. பலவகை உணவு..ஒரே குடும்ம்பமாய் கும்மியடித்த நாட்கள்

2. ஒரே பள்ளி இருந்தது போய்..சின்ன சின்ன பள்ளிகள் முளைப்பு

3. படித்த , கற்றுக் கொடுக்க ஆர்வம் இருந்த ப்ராஜக்ட் வாழ் பெண்கள் , பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிவர். (நானும் போனேன்..பாவம் பசங்க தான்)

4. ஒரே ஒரு சந்தை நாளை நம்பி இருந்த கிராம மக்கள், வியாபாரிகள் எல்லா நாளும் கடை விரித்தனர். புது புது பொருள்கள் கிடைக்க ஆரம்பித்தது.( நீங்க எல்லாம் வந்ததில் இங்கே விலை ரொம்ப கூடிப் போச்சு என்ற குற்றச் சாட்டு உண்டு)

5.சலூனிலிருந்து ..browsing centre வரை ..எல்லாம் புதுப் பொலிவுடன் 

6. பஸ் வசதி கொஞ்சம் ஆரம்பித்தது.

ஆனால்..கரையோர வாழ் மக்களுக்கு தகுந்த ஈடு தர முயலாததால்..வேறு பல அரசியல் காரணங்கள்..

ப்ராஜக்ட் மூடும் விழா தொடங்க..

அங்கே சேர்ந்த பறவைகள்..வேறு வேறு பாதையில் இரை தேடி பயணம் ஆரம்பிக்க

மெதுவாக களையிழக்க தொடங்கியது..அந்த இடம்..


மூட்டைக் கட்டி..அடுத்த முகாமுக்கு நாங்கள்.

மந்தாகினி நதிக் கரையில் முதல் hydel project.

BOOT (build -own-operate-transfer)project நு என் வூட்டுக்காரர் சொல்ல..ஏம்ம்ப்பா..அங்கே பெரிய முட்டி வரைக்கும் பூட்ஸ் போட்டுண்டு போகணுமானு கேட்கும் அம்மணி நான்.


குப்த் காசி கோயிலுக்குள் நுழைந்தேன்..டொனேஷன் சீட்டுக்கு காசு கொடு என்று ஒருத்தர் என்னை பிடுங்க.. திடீரென்று உரத்த குரலில்..' என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க எல்லாம்.. dam கட்டணும்னா விட்டுடுவோமா என்று கத்த ஆரம்பிக்க..குலை நடுங்கி குழந்தைகளோடு தப்பிச்சோம் பிழைச்சோம்னு என்னைக் கூட்டிச் சென்ற டிரைவர் காப்பாற்ற ஓடி வந்தேன்.


நான் கண்ட வளர்ச்சி அங்கே

1. நிறைய வேலை வாய்ப்பு. skilled,semi skilled ,in skilled labourers ..எல்லாருக்கும்

2. மலைவழி சாலை- எப்போது cloud burst ஆகும்..எப்போது landslide ஆகுமென்று கணிக்க முடியாத இடம். container லாரிகள் வந்து செல்ல செப்பனிடப்பட்ட சாலைகள்.(/அதுவும் செய்யக் கூடாது என்றும் சிலர்)

3. மலைப் பகுதி என்பதால் பல பொருட்கள் கிடைக்காது..கிடைக்க பல நாளாகும். போக்குவரத்து வசதி கொஞ்சம் வரத் தொடங்கியதால் வியாபாரிகள் கொண்டாட்டம். ( எல்லாம் மூன்று மடங்கு விலையில்)

4. தொலை தொடர்பு வசதி கொஞ்சம் பெருகியது.


இப்படி பல இன்னல்களும் :


1.பள்ளிகள் அங்கே மேல் வகுப்புக்கு கிடையாது.

so பாதி குடும்பம்..இங்கும் அங்கும்...

2. சரியான compensation தர மறுப்பு என்று குற்றச் சாட்டு.

3.சுற்றுச் சூழல் பாதிக்கும் என்று எப்போதும் கொடி தூக்கல்

இப்படியே இழுத்து..ஒரு வழியா இழுத்தே மூடிடலாம்னு முடிவு..மீண்டும் முகாம் தேடி..கூடு விட்டு அப்பா பறவைகள் ஓரிடம்..அம்மா தன் குஞ்சுகளுடன் ஓரிடம்.

ஆனால்..புத்தகத்தில் கற்றுப் புரியாத பாடம் நாங்கள் கற்றோம் இங்கெல்லாம்.

அரசியல்வாதியும் .சமூக ஆர்வலரரும் ஆதாயம் தேடும் இடங்களாக இந்த பெரிய பெரிய வேலைகள் ஆரம்பிப்பத்தும், நின்று போவதும்..


நஷ்ட்டம் பல கோடி என்று பேச்சு..

இதெல்லாம் ஏன் தீவிர ஆலோசனைக்கு பிறகு, மக்களுக்காக என்றால்..நல்ல முறையில் ..பாதகமில்லா முறையில் எடுத்துச் சென்றால்..

பல இல்லங்கள்,கிராமங்கள் ஒளியூட்டப்படலாமோ?


கொடி தூக்குபவர் யாருடைய கொட்டகை கூட இல்லை அங்கெல்லாம்.

நல்லது நடக்கும் என்றால்..நல்லபடியா யோசிச்சு நன்மை செய்யலாமே?

ஆரம்பிக்க வைத்து ,நட்டாற்றில் கை விடுவதால் யாருக்கு லாபம்?


நெஞ்சு பொறுக்குதிலையே..

Madhyamar-வாழ்த்து

 வாழ்த்துவோம் வாங்க..


இந்தப் பெயர் உச்சரிக்காத பேரோ , நாளோ ஒரு எந்தவொரு வீட்டிலும் இல்லை..

அவரு எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி..இந்த வாக்கியத்தில் இடம்பெறும் ் நபர்.

' காசெல்லாம் அப்பறம்..முதல்ல இதைக் கொடுத்து சரி பண்ணு' என்று குடும்பத்தின் நிலை கண்டு ஆபத்பாந்தவர்களாக.இருந்தவர்கள்/பலர் இன்றும் இருப்பவர்கள்


கடவுள் மாதிரி நீங்கனு...எத்தனையோ முறை நாமோ..நம்மைச் சூழ்ந்தவர்களோ உச்சரிக்கும் வார்த்தைக்கு சொந்தக்காரர்கள்

 

வேற யாருங்க நம்ம..டாக்டர்கள் தான்.

இன்னிக்கு டாக்டர்கள் தினம்.

கொஞ்சம் டைம் ஒதுக்கி அவங்களுக்கு ஒரு சின்ன வாழ்த்து தெரிவிப்போமே.


இந்த தினம் எதனால் இன்று கொண்டாடுகிறோம் என்று கூகிள் செய்து பாருங்கள்..புரியும் இந்த நாளின் மகத்துவம்.


மத்யமரில் இருக்கும் டாக்டர் நட்புகளுக்கும் , மருத்துவ துறையில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


அன்றொரு நாள் எங்க பல் டாக்டருக்கு நான் எழுதிய 'பா' 


பல் டாக்டருக்கொரு 'பா'..


பல்லு புடுங்கப் போகனும்னா

பல்ஸ் எறங்கிப் போகிடுமே

சொத்தைப் பல் பிடுங்கனும்னா

சொத்தையுந்தான் கேட்பாங்களே..

பல்லு டாக்டர் பலருமிருக்க

பில்லுப் போட்டு கொல்லாமல்

சள்ளு புள்ளுனு விழாமலொரு

சொல்லில் அன்பும் காட்டுமிவர்


பாரில் அரிய டாக்டரிவர்..எங்க

பல்லு டாக்டர் இவர்தானே

 

ஆனை முகத்தோன் பேரோடு

ஆரவார மில்லா டாக்டரிவர்

அனைவரும் விரும்பும் மனிதரிவர்

அமைதி அறிவின் இருப்பிடமிவர்


மாநகரச் சந்தடி நடுவினிலே

மாபெரும் மருத்துவமனை இல்லையிது

மோதும் கூட்டம் இங்கில்லை

போதும்டா சாமினு புலம்பலில்லை


ஃபினாயில் வாசம் இல்லாது

பீத்தோவன் இசை மணக்குமிங்கே..


மருத்துவம் மனிதம் ஆன்மீகமென

மண்டிக் கிடக்கும் புத்தகங்கள்

 மனதுக்குத் தருமே புத்துணர்ச்சி..


பல்லும் வரிசை ஆகியதால்

 புன்னகை யரசிகள் உருவாக்கல்

நிரப்பப் படுமே இடைவெளிகள் செய்யப்படுமே ..

வேருக்கும் மருத்துவம்..

குழந்தை ,குமரி ,கிழவர் வரை

கூடும் உந்தன் நட்பு வட்டத்திலே


வசை பாட பலரிருக்க

வாழ்த்தொன்று சொல்ல

விழைந்தது என்மனம்

வளமாகட்டும் உன் வாழ்வு

(கை) வரிசை காட்டி நீயும்

கை ராசி டாக்டரென

கிட்டிய நற் பெயரையுமே

கட்டிக் காக்க வாழ்த்துக்கள்.


happy doctor's day Rohini Krishna and others in this profession in madhyamar

Madhyamar-அவர் அப்படித்தான்

 அவர் அப்படித்தான்...


கொஞ்ச நாளாகவே காலையில் வாக்கிங் கிளம்பி  போகும் வழியில் அந்த மனிதரைப்் பார்ப்பேன்.


என்னடா..இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்கனு பெண்ணிடம் புலம்பினேன். 

'உனக்கு இதே வேலையாப் போச்சு..போனோமா வந்தோமானு இல்லாம யாரையாவது பார்த்து CID வேலை பண்ணாதே' என்று வெடுக்கென்றாள்.


அன்றும் அப்படித்தான்..கீழே இறங்கியதும் கண்ணில் பட்டவர் அவரே..அவரே..


' அவர் கையில் வெச்சு ஆங்கிள் பார்க்கறதை பாரு..

வர எரிச்சலுக்கு நாலு கேள்வி போய் கேட்கப் போறேன்னு கூட வந்த என் தோழியிடம் சொல்ல..' ஊர் வம்புக்குனே அலைவ .

நீ ஏதாவது சொல்லப் போய் அவர் கன்னடத்தில் உன்னை திட்ட ஆரம்பிச்சா என்ன செய்வே..ஒழுங்கா வீட்டுக்குள்ள போனு என்னை விரட்டிட்டு விர்ருனு கிளம்பிட்டா..

'என்னடா இது ..எப்படி இந்த மனுஷனுக்கு பாடம்.சொல்லித் தரதுனு ஒரே கவலை மண்டையில..


"பின்ன என்ன காலங்கார்த்தால கடுப்பேத்தினா ..கோவம் வராதா எனக்கு? எவ்வளவு பிஸி ஏரியா? 


இன்று புத்திரியுடன் கீழே இறங்க..

அதே போஸில்..இப்படி அப்படி நடந்து..இங்கும் அங்கும் நோட்டம் விட்டபடி அந்த ஆள்.


இன்னிக்கு ஒரு வழி பண்ண போறேன்..அவர் கையில் இருக்கிறதை 'பிடுங்கி'..


'பிடுங்கி...'? 

பேந்தப் பேந்த என் பெண் விழிக்க..😱

.....

பின்ன என்னடா.?

ஒழுங்கா பெருக்க வேண்டாம்.

தரையிலேயே ஒட்டாமல் இப்படி 'துடப்பத்தை 'ஆட்டி ஆட்டி நடந்தா..?

கோவம் வராதா.. எனக்கு? 

எந்த வேலையும் ஒழுங்கா செய்ய வேணாம்?


"அவரு அப்படிதானாம் ' 

பல வருஷமா அந்த 99 வெரைட்டி தோசை கடையில் வேலையாம். பாவம் பிழைச்சு போட்டும் விடுங்கனு பக்கத்தில் இருந்த டீ குடித்தபடி ஒருவர் சொல்ல..


எப்புடி..கடைசியில டைட்டிலுக்கு வந்தேன் பாருங்க...😀

😝

Madhyamar-memes

 பார்க்கும் படங்களெல்லாம்..நந்தலாலா..இங்கு

மீம்ஸ செய்ய தூண்டுவதேன்்..நந்தலாலா..


"மீம்ஸு"..  "மீம்ஸு". னு நான் அரைத் தூக்கத்தில் முதல் மரியாதை ராதா ஸ்டைலில் உளற..


உனக்கு 'மீம்ஸோஃபோபியா" வந்துடுத்துமா..பெண் சொன்ன நொடியில்

உடனே நான் வீரபாண்டி கட்டபொம்மினி குரலில்.."

'எனக்கு app இறக்கி கொடுத்தாயா?..concept சொல்லித் தந்தாயா?..caption க்கு ஐடியா கொடுத்தாயா?..

இல்ல ஒரு சிங்கிள் டீ போட்டு குடுத்தாயா..' நு நான் பாய..

ஓவரா எதோ நடக்கிறதுனு கப்சிப்னு என் பொண்ணு ஒரங்கட்டிட்டா..


மீம்ஸ்..யப்பா..என்ன வேலைப்பா இது?

என்னமா யோசிக்க வேண்டி இருக்கு?


அதை விட காமெடி..சின்னக் குழந்தைக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தால் அதையே செய்தபடி இருக்கும்..அது மாதிரி தான்..

இரண்டு நாளாக..மண்டைக்கு வேலை..விரலுக்கு வேலை..எத்தனை creativity ஒவ்வொரு த்தரோட மீம்ஸிலும்.

முக்கியமா..கோடு தாண்டாமல்..


special mention to Anuradha Viswesan mam and Mythili Varadarajan mam. 

எத்தனை கற்றுக்கணும் இவர்களிடமிருந்து.


சலிப்பே காட்டாத அட்மின் "ஆறு"முகங்கள்.


மீம்ஸ் மேளா முடிந்திருக்கலாம்..

but this is not the end. it has paved way for new beginning of creatively thinking.


எதுவுமே அளவுக்கு மிஞ்சக் கூடாது..

மீம்ஸுக்கு கொஞ்சம் break கொடுத்துடுவோம்.

இது எனக்கு வராது என்று ஓடிப் போன என்னை புடிச்சு இழுத்து வந்து..

MEMES brought out the hidden 'ME' in 'ME'.


Special thanks to Keerthivasan Rajamani and admin team for tirelessly approving the posts.

Madhyamar-ஜாக்கிரதை

 #பயனுள்ள_செய்திகள்


ஜாக்கிரதை ஜாக்கிரதை..


SBI customer keys in wrong account number, loses 49k. Bank says, customer not eligible for refund.

இன்றைய Times of India news.


(என்னடா இது ..இன்னொரு பதிவா ஒரே நாளில்னு நினைக்காதீங்க..காலையில் times of India வில் வந்த செய்தி..மத்யமருக்கு உபயோகமாக இருக்கணும் என்று பதிகிதேன்)


SBi customer ஒருவர் ் cash deposit through cash deposit machine வழியே செய்திருக்கிறார். இரண்டு நாள் பிறகும் பணம் அக்கெளண்ட்டில் வரவில்லை. வங்கி கிளையை அணுகி, புகார் பதிவு செய்திருக்கிறார். 


அவர் கர்னாடக்காவில் போட்ட பணம் தெலிங்கானாவில் யாருக்கோ வரவு வைக்கப் பட்டிருக்கு என கண்டுபிடித்தனர்.


காரணம்..

பணம் டெபாஸிட் செய்தவர் அக்கெளண்ட் நம்பரில் 0 எழுதுவதற்கு பதில் 8 என்று எழுதி விட்டார்.


அவரும் தான் தவறாக நம்பர் எழுதியதை புகாரில்  குறிப்பிடவில்லை.


ஏற்கனவே..தப்பான அக்கெளண்ட்டிற்கு போன பணம்..அதன் உரிமையாளரால் சாமர்த்தியமாக 16 நாள் கழித்து withdraw செய்யப்பட்டு விட்டது.


consumer court dismissed his plea saying that its a human error.


ஏன் bank officials அந்த receiving customer ஐ request செய்யவில்லை?

அவர்கள் தரப்பில் உள்ள ID , name எல்லாம் செக் செய்வதில்லையா?


2 நாளில் புகார் கொடுத்து 16ம் நாள் யாரோ ஒருவர் அவர் பணம் அது இல்லை என்று தெரிந்த போதும் எப்படி withdraw செய்ய மனம் வந்தது?


human error என்று சொல்லி பணம் refund செய்ய மறுத்த வங்கி, அனுபவிக்கும் யாரோ..அலையும் யாரோ?


தவறுதான். account number சரியாக எழுதாதது. ஆனால் எத்தனையோ check points வைத்திருக்கும் banking system எப்படி கண்டுபிடிக்காமல் போச்சு.


so ..மத்யமர்களே..ஜாக்கிரதை

Madhyamar-காலை நேர ராகமே

 காலை நேர ராகமே..


கோயில் மணி யோசை..

குயில்களின் குக்கூ..


பூவெல்லாம் ..கேட்டுப்பார் என் விலை

என்று பெருமையில்..


மூட்டையிலிருந்து  விடுதலை மூச்சு விட  ..

உருண்டோடிய உருளையும் கோஸும்.

களை கட்டிய.. காலை மார்க்கெட்.


அருகம்புல்லும்  அலோவேராவும் 

அதிகாலைப் பானமாய்..பாண்டத்தில்

முளை கட்டிய பயறு

மும்முரமாய் வியாபாரம்.


ஓலாவும் ஊபரும்..ஒட்டமாய் ஓட்டம்.

கம்பெனி பஸ்ஸுக்கு காத்திருக்கும் கூட்டம்.

காண்ட்ராக்டர் வேலை தருவாரா என

கவலையுடன் தினக் கூலி ஆட்கள்.


ப்ராஜக்ட் ..PTA .

படு கவலையில் அம்மாக்கள்

வண்டியில் பசங்களை இறக்கிவிட்டு

வெயிட்டைக் குறைக்க.

ஜாகிங் போறேன்னு 

ஜகா வாங்கும் அப்பாக்கள்


அம்பது ரூபாய்க்கு பூ வாங்கின பின்னும்

அடுத்த வீட்டு காம்பவுண்டிலிருந்து

அலாக்காய் பறிக்கும் செம்பருத்தி

அம்பாளுக்கு உகந்ததென்று

அசட்டுச் சிரிப்புடன் ..மாமி.


இதெல்லாம் எப்போதும் தானே..

இழுத்து நிறுத்தியது ஒரு காட்சி.


' அங்கே சரியா குப்பையை பெருக்குங்க'

வாக்கருடன்..வயது முதிர்ந்த பாட்டி

அவர் ஆணைப்படி ..

' சொல்லு வேற எங்க குப்பை இருக்குனு '

சுவற்றைப் பிடித்தபடி..வாசலை

சுத்தம் செய்த தாத்தா..


மனசும் உடம்பும் புத்துணர்வு பெற..

வீட்டுக்குள் நுழையும் போது..எதிர்த்த வீட்டு 90 வயது மாமா..பையுடன் வெளியே கிளம்பிண்டடிருந்தார்.

இது மாமி ட்யூட்டி ஆச்சே..என்ன நீங்க இன்னிக்கு என்றேன்.

'கண்ணே திறக்காமல் படுத்தபடி இருக்கா..அதான் நான் போய் பால் வாங்கப் போறேன் 'என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அவர்களைப் பார்க்க போனேன்.

மாமா ஒரே புலம்பல் ..எதாவது சொல்றதை கேட்டால் தானே..அவ்வளவு பிடிவாதம்நு ..சொல்ல ஆரம்பிக்க..

மாமியோ..என்னப் பத்தி குத்தம் சொல்லலைனா உங்களுக்கு தூக்கம் வராதேனு வலியின் அவஸ்தையிலும் ..விவாதம்

.நான் சமைச்சு தரேன்நு மாமியிடம்  சொல்லவும்..மாமாவுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் லிஸ்ட் போட்டு..அவருக்கு ஒரு ரசமும் காரமில்லாமல் அவரைக் காய் கறியும் செஞ்சு கொடு என்று சொல்லிண்டிருந்த போது..

இந்தா..குடி..இஞ்சி கஷாயம்னு..ஒரு டம்ளர் கொண்டு வைத்தபடி மாமா..


ஒவ்வொரு விடியலும் ஒரு சேதி தரும்.

இன்று ஒரு சேதி எனக்கு கிடைத்தது..

உங்களுக்கு?

எத்தனை வாதம்..விவாதம்..விவாகம் பற்றி..

வாழ்க்கைப் பாடம்..கற்றுத் தரும் ஆசான் கள்..இவரன்றோ

Madhyamar- அமானுஷ்யம்

 அமானுஷ்யமா..தெரியவில்லை..

எனக்கு ஒரு அனுபவம் என்றே சொல்வேன்


1993. டிசம்பர் கடைசியில் ஒரு மத்தியானம்.

சுருக் சுருக்னு லேசா வலி.. ஒண்ணும் புரியல.


இன்னும் 15 நாளிருக்கு டெலிவரிக்கு என்று இரண்டு நாள் முன்னாடி கூட டாக்டர் சொன்னாரே? கொஞ்சம் கலவரம்.


அம்மா ஆஃபீஸ் போய்ட்டதால் துணைக்கு இருந்த சித்தி ஜீரகக் கஷாயம் கொடுத்தும் ஒண்ணும் முடியல.


அப்போதெல்லாம்..அஸ்தினாபுரத்திலேர்ந்து ஒரு ஒரு ஆட்டோ கிடைக்கணும்னா..உலக மகா கஷ்டம்.

டிராவல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மியும் கூட

ஒரு வழியா ஒரு ஆட்டோ கிடைக்க குலுக்கலுடன் ஒரு பயணம்.


MIT gate ..மூடினால் திறக்கவே திறக்காது. எங்க சித்தி எல்லா ஸ்லோகமும் சொல்லிண்டே வர..கேட்ட வரம் கிடைத்தது .'கேட்டு'ம் திறந்தது.


குண்டும் குழியும் ரோட்டில்  ஆடி ஆடி..ஒரு வழியாக st.Thomas Mount gate வந்தாச்சு. பழவந்தாங்கலில் இருக்கும் ஒரு மகப் பேறு மருத்துவமனைக்கு போகணும்.


அங்கே..இம்மி கூட நகர முடியாமல் அப்படி ஒர் traffic. gate repair என்பதே நாங்கள் இருந்த தூரத்திலிருந்து அறிய ஒரு மணி நேரம் ஆச்சு. நேரம் கடக்க..கடக்க..படு பயம் .


இதுவரை போன போதெல்லாம் பழவந்தாங்கலுக்கு train ல போய் இறங்கி அங்கேர்ந்து பொடி நடையில் போய்டுவேன். இந்த Mount வழி ஆட்டோக்காரருக்கும் தெரியல.


சைடில் ஒரு ஆட்டோ.. அதுக்குள்ள ஒரு மத்திய வயது பெண்மணி. சித்தியுடன் பேச்சு கொடுத்தார்கள். 

நிலைமை பார்த்து ..' ஒண்ணும் கவலைப் படாதீங்கோ..அந்த அம்பாள் ஒரு குறையும் வெக்க மாட்டா..கேட்டு திறந்திடும் ..என் பின்னாலேயே வந்துடுப்பா..நான் வழி காண்பிக்கிறேன் என்று சொன்னபடி.


சிறிது நேரத்தில் வண்டிகள் நகரும் சலசலப்பு. இன்னிக்கு திறக்கவே திறக்காது என்ற கேட் திறந்து..அந்த மாமியின் ஆட்டோ முன்னே..நாங்கள் பின்னே.

கொஞ்ச தூரம் பயணம் அவர்கள் வழிகாட்டலில். 

ஆட்டோவிலிருந்து தலையை வெளியே நீட்டி..' இதோ ஆஸ்பத்திரி அடுத்த கட்டடம் தான்.

பொண்ணு பிறந்தா மறக்காம 'ராஜேஸ்வரி' நு.பேர் வெச்சுடுங்கோ காற்றில் மிதந்த பெயர்.


thanks maami என்று தலை நீட்டி என் சித்தி சொல்ல ஒரு நொடியில் எந்த சந்தில் நுழைந்தது் அவர்கள் சென்ற ஆட்டோ புரியலை..


இதெல்லாம் சரி.. 

புண்யாஹ வாசனம் நாள்.

மாமியார் வந்தார்கள் ஊரிலிருந்து. 

அம்மா கேட்டாள் ' மாமி பேத்திக்கு என்ன பேர் வைக்கப் போறேள்.?

அவள் சொன்ன பெயர்..?

' ராஜேஸ்வரி'..!!!

( இப்போது போல ஃபோனில்லை..அம்மாவுக்கு நடந்த எந்த விஷயமும் தெரியாது..அவர்கள் பழவந்தாங்கல் போனது கூட இல்லை..

எப்படி?

இன்னும் கேள்வி என் மனசில் உண்டு?

Madhyamar-father's day

 #தந்தையர்தினம்

அப்பாவும் நானும்..


வெளியே போய்விட்டு வந்து விட்டெறியும் ஸ்கூட்டி சாவியும் வீட்டு சாவியும் மீண்டும் அதற்கான தூக்கில் தொங்கும்.

படித்து விரிச்ச புத்தகம் சரியா அடுக்கப்படும்.

நான் வெளியே கிளம்பும் முன் வானிலை அறிக்கை படித்து குடை எடுத்துக்கோ என்று நீட்டும் கை.

'குடை எங்கே ? ' வெளியேயிருந்து வந்ததும் தேடும் கண்கள்.

'தலையை துடைச்சுக்கோ' துவாலையை ரெடியா நீட்டும் கைகள். 

மத்தியானம் கொஞ்சம் கண் அயர்ந்தால்..ஜுரமா என்று தொட்டுப் பார்க்கும் வாத்ஸல்யம்.

'அம்மா பண்ற கூட்டு பண்றியா? கேட்கும் போது அவர் இழப்பின் காயம்.

'ஒரே ஒரு அப்பளம் சுட்டுத் தரியா? கேட்கும் அந்த கண்கள்.


அப்பா..live the present நு நான் லெக்சர் அடிக்க..

கொஞ்சம் past க்கும் போவேன் அவ்வப்போது.

இப்படியும் இருந்தோம்..இருக்கிறோம் இன்னும்.


மோட்டார் ரிப்பேரா..

த்ண்ணீர் ஊற்றி அவர் air lock சரிபண்ண..

தண்ணீர் வருதானு மொட்டை மாடியில் நான் பார்ப்பேன்.


TV ல கோடு கோடாய் வரும்..

திருப்பிச் சரி செய்வார் ஆண்ட்டெனாவை..

இன்னும் கொஞ்சம் திருப்பு..தெளிவா இல்லையென்பேன்.


சைக்கிள் துடைத்தால்..

துணியோடும் எண்ணெய்யோடும்

துணையாய் இருப்பேன்..


புதிதாய் செடி வைத்தால்..

அழகாய் அவர் குழி தோண்ட

அதில் உரமும் நான் இடுவேன்.


பரணியில் சாமான் எடுத்தாலோ

படுகெட்டியாய் ஏணியைப் பிடித்திடுவேன்.


ட்யூப் லைட் மாற்றயிலே

டார்ச்சாய் நான் இருப்பேன்


இரண்டு சக்கர வாகனத்தில்

இருவரும் வலம் வந்தோம்..

அன்று கற்றது

இன்றும் கைக்கொடுக்குது.


பழுதென்றவுடன் பதறாமல்

பார்ப்போம் ஒருகையென்று

மராமத்து வேலையெல்லாம்

மகிழ்ச்சியாய் செய்வேனிங்கே


மழையும் ரசித்தோம்..

மாட்சும் ரசித்தோம்.

எதிரணி அடித்தாலோ

எகிறிடும் இவர் ரத்த அழுத்தம்

இந்தியா விளையாடையிலே

இருப்புக் கொள்ளாமல் தவிப்பு.


எண்பதை தாண்டினாலும்

இளமை திரும்பும் இவருக்கு

இந்தியா- பாக் மாட்ச் என்றாலே..


arguments இருந்தாலும் அதில் மேலோங்கி நிற்பது அன்பு ஒன்றே.


இன்னொரு கொசுறு தகவல். 

என் வூட்டுக்காரரையும் நான் 'அப்பா'னு தான் கூப்பிடுவேன். 

எல்லாப் பெண்களுக்குமே தன் அப்பா மாதிரி வாழ்க்கைத் துணை கிடைக்கணும்னு ஆசை உண்டு.

பொறுமை, எளிமை எல்லாம் சேர்ந்த என் பெண்களின் அப்பா..

எனக்கு என் இரண்டு பெண்களோடு அப்பாவையும் சேர்த்து மூன்று குழந்தை என்றால்..

என் கணவருக்கும் அதே தான். 

என் ரெண்டு பெண்களோடு சேர்த்து நானும் ஒரு வளர்ந்த குழந்தை.

எனக்கு வாழ்வைத் தந்த, என் வாழ்வில் வந்த அப்பாக்களுக்கு அன்பைத் தவிர தர வேறொன்றுமில்லை் என்னிடம்.

happy father's day

Madhyamar-நற்றமிழ் துணுக்குகள்

 #நற்றமிழ்த்துணுக்குகள்


மத்யமரில் எல்லாரும் தமிழில் புகுந்து விளையாடுறீங்க.


 தமிழ் வார்த்தைகள் வெச்சு ஒரு விளையாட்டு. 


இங்கிலீஷ் , தங்கிலீஷ் எல்லாம் கூடாது.


இரட்டை அர்த்தம் ஆபாசம் கூடாது.


நற்றமிழ்த் துணுக்குகள் .

 ஒரு சொல்..பல வித அர்த்தம் உண்டு தமிழில்.


இதோ சில உங்களுக்காக.


ஓடிப்போய் 'பெருங்காயம் 'வாங்கிண்டு வான்னு சொன்னா..இப்படி பெருங்'காயம் '  பண்ணிண்டு வந்து நிக்கறயே..


மனைவி: ஏங்க லிஸ்ட்டில 'துண்டு' போட்டிருந்தேனே..எங்க காணும்?

கணவன்: பட்ஜெட்டில் 'துண்டு' விழுந்து போச்சு..அதான் வாங்கலை..


'பூவை'த் தொடுத்தாள் 'பூவை'


முதலீடு பற்றி விவாதிக்கும் நண்பர்கள்..

' நான் 'முதல் 'போட்ட..

 'முதல் 'நிறுவனம் இதுதான் '


பாட்டியுடன் பலசரக்கு கடைக்குப் போனேன் உதவி செய்ய சிறுவயதில் . 

எண்ணெய்த் 'தூக்கு'  பார்த்துத் 'தூக்கு' என்றாள்.


'கடை'க்கு போக ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டு 'கடை'க்குட்டிக்கு.


' வங்கி'யில் அடகு வைத்தாள் அவள் 'வங்கி'யை.


'காட்டு 'வழியில் 'காட்டு' எனக்கு வழி


என்ன நட்பூஸ் ரெடியா?

கலக்குங்க.

நற்றமிழில்  விளையாடலாம் வாங்க

Madhyamar- சிறுகதை

 #சிறுகதை

காலம் செய்த கோலமடி...


"அவளை தயவு செஞ்சு என் முகத்தில முழிக்க வேண்டாம்னு சொல்லுங்க..இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்திருக்கா..

நம்ம பரம்பரையில் யாருக்கும் வராத தைரியம் இவளுக்கு மட்டும் எங்கிருந்து வந்ததுங்க..

சொல்ற பேச்சே கேட்காமல் இப்படி ஒரு பொண்ணு நமக்கு ' எரிமலையா வெடித்த்படி வசந்தி.


'அம்மா இதெல்லாம் இந்த காலத்துல சகஜம்மா..இப்போ என்ன ..யாரும் பண்ணாத தப்பையா பண்ணிட்டா..கணேசன் உள்ளே புகுந்தான்.

ஆமாம்டா..நீயும் நல்லா வந்து உன் தங்கைக்கு வக்காலத்து வாங்கு..கோபம் இன்னும் கொம்பு வெச்சு ஏறியது வசந்திக்கு.


'எனக்கு மானமே போய்டும் போல இருக்கு. ஒண்ணு மட்டும் அவகிட்ட சொல்லிடு..இந்த Facebook ,watsapp எல்லாத்திலியும் profile pic மாத்தி ஊரே என்னைப் பார்த்து சிரிக்க வைக்கப் போறா..

"செஞ்சுக்கப் போறேன்..செஞ்சுக்கப் போறேன்னு சொன்னா..இப்படி திடு திப்புனு சொல்லாம கொள்ளாமல் இப்படி பண்ணுவானு நான் நினைக்கவே இல்லை.." ஒப்பாரி வைக்காத குறைதான்.

'எதுக்குடீ..இப்படி பொலம்பறே..ஆனது ஆச்சு..கொஞ்ச நாள் போக நமக்கு பழகிடும்.. வீணா மனசைப் போட்டு குழப்பிண்டு..BP ஏத்திக்காதே.." ராம்னாதன் 

பொண்ணை எப்பவும்  சப்போர்ட் செய்யும் அப்பா..

'உங்களுக்கென்ன ஈஸியா சொல்லிட்டீங்க்..நான் என் வாயை வெச்சுண்டு சும்மா இருக்காம எதிர்தத வீட்டு பக்கத்து வீட்டு தெருவில போற பொண்களையெல்லாம் குத்தம் சொல்வேன். எனக்கு இப்படி வந்து வந்து வாய்ச்சாளே..'இதுக்கு மேல நம்ம சாதி சனம் வாயை மூட முடியாதே.."


போர்ட் எக்ஸாமுக்கு படித்துக் கொண்டிருந்த சின்னப் பெண் சரயூ இவர்கள் லொள்ளு தாங்க முடியாமல்...' "இப்போ என்னங்கற மா..நீ.

.நானும் அக்கா மாதிரி தான் பண்ணிக்கப் போறேன். 

நாளைக்கு பரீட்சை முடிஞ்ச கையோட போக appointment கூட வாங்கியாச்சு.

ஆனா அக்கா மாதிரி மொக்கை கலர் இல்லை . இப்போ latest trend hair coloring செலெக்ட் பண்ணி இருக்கேன்.cash தரப் போறியா..card ஆ?

சரயூ பேசப் பேச ..

Madhyamar- காவேரி

 என்ன செய்யப் போகிறோம்?


'அடடே..பொழுது விடியப்போகுது எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்களே. எல்லாப் பக்கம்மும் சுத்தமா இருக்கா...ஒரு வருசம் ஓடிப் போச்சு...

அட..யாரது அங்கனே..புதுப் பவுனு பளபளனு..நம்ம பொன்னாத்தாவா.

ஆளே அடையாளம் தெரியாமா பெருத்து கிடக்காளே..

அதோ அவ கூட யாரு...செவந்தியா.. கூட யாரு..புது மாப்பிள்ள.. சரி சரி..தாலி பிரிச்சு கட்ட வந்திருக்காக போல இருக்கு..

என் கால்ல விழுந்து கும்பிட்டப்போ..அடுத்த வருசம்..கையில் ஒண்ணு கூட கூட்டியானேன்..வெக்கபட்டு போச்சு... 

அதுக்குள்ள ஒரு பரிச்சயமான குரல்..என்ன ஆத்தா..என்னை மறந்துட்டியா..போன தபா வர முடியாம போச்சு..உடம்புக்கு முடியாம கிடந்தேன்..இந்த தடம் எப்படியும் உன்னை பார்த்தே ஆவணும்னு புள்ளைய கூட்டிகிட்டு வந்தேன்.


 ஆத்தா..அடுத்த முறை இந்த கட்டை இருக்குமோ..இருக்காதோ..புலம்பியபடி நாச்சியம்மை..

எல்லாம் நல்லா இருப்பே போ..சீக்கிரம் மவனுக்கு ஒரு கால் கட்டு போடு...ராசா..கால்ல விழுந்து கும்பிட்டுக்கப்பா...

அங்கிட்டும் இங்கிட்டும் குழந்தங்கள  ஓட.. துரத்தியபடி மாடசாமி.. .. .


 எலேய்..நில்லுங்கடா...கூட்டத்தில எங்கினாச்சும் தொலஞ்சு போயிறப்போறீக...அத்தை ,மாமா எங்கேடா..சாமிகும்பிட்டு ..பொறவு..கொண்டு வந்த சோத்தை தின்னுட்டு..ஊரப் பாக்க போவனுமப்பா..சோலி இருக்கில்ல..

எப்பவுமே இவனுக்கு அவசரந்தான்.. இருப்பா..ஒரு நா..கொஞ்சம் என் கூட இருந்திட்டு போயேன் ...காதில் விழவில்லை யாருக்கும்.


ஈ எறும்பு க்கு கூட இடமில்லாம கூட்டம்..

வெளக்கு ஏத்தி, .பூ,தாம்பூலம் ,கலந்த சோறு எல்லாம் வச்சு படயலாச்சு..

. சனம் பூரா ஒத்துமையா..வந்துட்டு போறத பார்க்க ..இன்னொரு நாள் இருந்துட்டு போமாட்டாங்களானு ஏக்கமாச்சு..

பொழுது சாய ஆரம்பிக்க... அவுங்கவுங்க..ஊருக்கு பஸ் ஏறி புறபட்டாச்சு..

ஒரே வெறிச்சோடி போச்சு..


என்னை சுத்தி இப்பொ இருக்கறது...இவுக எல்லாம் விட்டறிஞ்சிட்டு போன ...குப்பை தான்

எம்புட்டு சுத்தமா காலைல  இருந்த இந்த இடம்..

கும்பிடத்தானே வந்தீக..

என்னை..இப்படி குப்பை மேடாக்கிட்டு போக ..எப்படி மனசு வந்துச்சு..


 குமுறலில்..காவிரித்தாய்...

ஆடிப் பெருக்கு சந்தோஷம் எல்லாம் அடியோடு மறைந்து ..விசும்பியபடி..


இது நான் எழுத முயற்சித்த கதை.

(Disclaimer...just used the names that came to my mind..)


இன்னிக்கு உலக சுற்றுச்சூழல் தினம். 


என்ன செய்தோம்? என்ன செய்யப்போகிறோம்?

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை..போகுமிடமெல்லாம் குப்பை மேடாக்கி வருவேன்னு சத்திய பிரமாணம் செய்த மாதிரி ஏன் நடக்கிறோம். 


morning walk கை வீசி நடக்க முடிகிறதா?.ஒரு கை மூக்கை மூட வேண்டியிருக்கே.

காரில் வந்து கண்டுக்காமல் குப்பை பையை ஓரமா வீசி எறியும் மக்கள்..


பானி பூரி வண்டிகள் ..பக்கத்தில் போராய் குவிந்த குப்பைகள்


ஆங்காங்கே வீசி எறியப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள்..ஒரு சின்ன தூறலுக்கே வெள்ளக் காடாக மாறும் தெருக்கள்..


அமெரிக்கனை பார்..ஐரோப்பியனை பாருனு இன்னும் எத்தனை நாள் சொல்லப்போறோம்.


பனி மலைகள் எல்லாம் ப்ளாஸ்டிக் மலையாகிடுமோனு பயம்..

நதிகளெல்லாம்..நஞ்சாய் மாறிடுமோடுனு பெரிய கவலை..


உலகம் பிறந்தது எனக்காக..

ஓடும் நதிகளும் எனக்காக..

மலர்கள் மலர்வது எனக்காக..

அன்னை மடியை விரித்தாள் எனக்காக..

பாடல் வரி எல்லாருக்கும் பிடிக்கும் . மடி விரித்த அன்னை..கண் முன்னே மடிவதைக் கண்டு எப்படி சும்மா இருக்கிறோம்?

ஒரு ப்ரதிக்ஞை எடுப்போம். மத்ய்மராய் நம் பொறுப்பு உணர்வோம். உணராதவருக்கு நம் நடத்தையால் முன்மாதிரியாய்  விளங்குவோம்.


குப்பைக்கு ஒரு big good bye சொல்லுவோம்.

சுந்தரமயமான சுற்றுசூழலுக்கு பட்டுக்கம்பளம் விரிப்போம்.


#உலக_சுற்றுச்சூழல்தினம்.

Madhyamar-project

 இந்தாம்மா..என்னோட மொபைல ஒரு 2 hours க்கு என்கிட்ட காண்பிக்காதே.

வெளில போனா கூட எடுத்துண்டு போய்டு..எனக்கு வேண்டாம் கொஞ்ச நேரத்துக்கு.

கொஞ்சம் கோமாவில் போய்ட்டு ' நான் எங்கே இருக்கேனு' கேட்க..

ஹலோ....ஹலோ அம்மா..ஓவரா ஆக்ட் இப்போ எதுக்கு ..?

just இந்த ப்ராஜக்ட் முடிக்கற வரைக்கும் உன்கிட்ட இருக்கட்டும்னு தரேன்..


நான் ரொம்ப பவ்யமா..' கண்ணா..இது உனக்கு எப்போ குடுத்த ப்ராஜக்ட்..ஒரு 15 நாள் முன்னாடியே சொன்னியே அதுவா..இது...கொஞ்சம் முன்னாடியே முடிச்சிருக்கலா...மே...'


வாக்கியம் முடிக்கல..'நீயா" ..படம் expression ஞாபக படுத்திக் கோங்க இந்த இடத்தில..


'அம்மா..உன்னை மாதிரியா..மத்யமர்ல "மண்டே ஸ்பெஷல்" போஸ்ட்டுக்கு announcement வந்ததுமே எழுத ஆரம்பிச்சு..ஊருக்கு முன்னாடி over enthu ஆ Sunday ராத்திரியே போஸ்ட்டை போடறத்துக்கு... ?

அது வந்து...நான் இழுத்தபடி..' உனக்கென்னடா.இது ஒரே ஒரு ப்ராஜக்ட் ..இப்போ பாரு ..மண்டே ஸ்பெஷல் முடிச்சிட்டேனா..எல்லார் பதிவும்  படிக்க வசதியா இருக்கும்.. கமெண்ட் எழுதி எழுதி என் விரலே வீங்கி போச்சு பார்னு சோகமா என் முகத்தை ..வைக்க..

பளீரென ஒரு பல்பு..

ஐயோ மறந்துட்டேனே..' post of the week ' க்கு nomination வேற குடுக்கணும்....

  நீ போய் வேலையை முடி' நான் சொல்ல..

உன்...னை........திருத்தவே ..சொல்லியபடி ரூமுக்குள் தஞ்சம்.


என்ன நட்பூஸ்.. எல்லாரும் கொஞ்சம் போய் போன வார சிலபஸ் படிக்கலாமா?

Madhyamar- my days

 #மத்யமர்_என்_பார்வையில்..


கி.மு , கி.பி....எல்லாருக்கும் தெரிஞ்சது தானே..?

இப்போ நான் ஒண்ணு சொல்லப் போறேன். கவனமாப் படியுங்க.


முகநூலில் என் பயணத்தை நான் 

"ம.மு,  "ம .பி  னு  பிரிச்சுட்டேன் .


அது என்ன 'ம'..?

அதாங்க.. " ம" for மத்யமர்.

so..மத்யமருக்கு முன் ..மத்யமருக்கு பின். 


the talk of Facebook. the new face of facebook.

மத்யமர் ..சரிதானே?


குரூப்னு சொன்னாலே குதிச்சு ஓடிய நான்..இப்போ ஒரு மாபெரும் குரூப்பில் ஒரு அங்கமாக..

அப்படி என்ன வேறெங்கிலும் இல்லாதது இந்த மத்யமர்ல இருக்குனு கேக்கறீங்களா?


* மிகப் பொறுப்புடன் வரம்பு மீறாத பதிவுகள்.

எத்தனை எழுத்துச் சிற்பிகள் இங்கே.


* ஆஹா ..எனக்கு ஏன் தோன்றவில்லை என வியக்க வைக்கும் பதிவுகள்.


* திசை எட்டிலிருந்து தெறிக்கும் சிந்தனை தூண்டும் பதிவுகள்.


* செய்திகளாய் சொல்லும் விஷயங்கள்

சேமிக்கத் தோன்றும் பொக்கிஷங்கள்.


*ஒரே ஒரு தளம். எழுத்துக்களின் களம். போர்க்களம் இல்லை. bore கொஞ்சம்கூட அடிக்காத தளம்.


* home away from home மாதிரி இங்கே ஒரு extended family atmosphere. 


வெறும் பதிவுகள் தானானு..வேற என்ன ஸ்பெஷல் இங்கேனு கேட்கிறீங்களா?


உங்க யாருக்காவது திங்கட்கிழமை பிடிக்குமா?..

a big no தானே?

but madhyamar is a group with a difference. 

"மண்டே ஸ்பெஷல்" இங்குண்டு. சூப்பர்

் தலைப்புகள் தரப்படும். அதில் எல்லாரும் தாங்கள் கற்றதும் ,பெற்றதும், அனுபவமும் எழுதி பட்டையை கிளப்புவாங்க..


'வெளிச்சம் ' என்று ஒரு நேர்காணல் நிகழ்ச்சி.


மாதம் ஒரு முறை நடக்கும். 

குழுமத்தில் உள்ள experts in field அழகா நம்ம கேள்விக்கு தெளிவா பதில் சொல்லி நமக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறாங்க.


post of the week ..


போட்டி போடுவோம் என்ன நல்ல topic எழுதலாம் என்று. ஒரு healthy competition . ஒன்றை ஒன்று மிஞ்சும் எண்ணக் குவியல்கள்.


இங்கே எனக்கு முதல் முதலா post of the week கிடைச்சப்போ , சின்ன குழந்தை ஸ்டார் வாங்கிண்டு வந்து அம்மாக்கிட்ட காண்பிக்கும் போது ஒரு சந்தோஷப்படுமே..அப்படி குஷியாகி இருக்கேன்.


கவிதையென்ன, கார்ட்டூனென்ன,காரசார விவாதம் என்ன...dhool கிளப்பும் இடம்..தளம்.


லைக்கும் கமெண்ட்டும் ஒரு பக்கம் இருந்தாலும்.. like minded people இந்த முகநூல் சமுத்திரத்தில் கிடைத்த திருப்தி.


ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து ஒரே குடும்பம் போல ,அவரவர் தனித் தன்மையும் இழக்காமல், ஒரு பாதுகாப்பான இடமாக ஒருமித்த கருத்துடன் , பதிவுகள் மட்டுமன்றி பல புதிய பாதையும் நோக்கிச் செல்லும் மத்யமரில் நானும் ஒருத்தி என்று நினைக்க சந்தோஷம் ஊற்றாகிறது.


நிதானத்துடன் செல்வதால் நிச்சயம் பல மைல்கல் கடக்கும்..

முகநூலில் ஒரு புது முத்திரை படைக்கும் இந்த மத்யமர் என்பதில் துளி சந்தேகமில்லை.


'இன்னிக்கு மத்யமர்ல என்ன விசேஷம்னு' என்னை பார்க்கும் எல்லாரும் கேட்கும் அளவுக்கு பிரபலம் . அதிலும் இதில் வரும் நல்ல பயனுள்ள செய்திகள் குழந்தைகளுடன் பகிர முடிகிறது. 


அரசியல், அறிவியல்,ஆன்மீகம், இசை, சமையல், சமுதாய விழிப்புணர்வு, நாட்டு நடப்பு ...இதில் இடம்பெறாத செய்திகளே இல்லை.


என்னைப்போல இன்னும் 11000 முகனூல் மக்களுக்கு மத்யமர் இப்போ  " life line".


The 3 C's of Madhyamar... The  captain, the  crew and the Comrades.. ஒற்றுமையோடு ஒரு புது இயக்கமாக உருவாக்க ஒரு  பயணம்.


கடலின் கொந்தளிப்பும் , அலைகளின் வேகமும்.. அசைக்க முடியாது சீரான ஓட்டத்துடன் செல்லும் இந்த மத்யமர் கப்பலை.


"எங்கெங்கு காணிணும் மத்யமரடா " என்று பாடும் நாள் வெகு தூரமில்லை..

proud to be a part of madhyamar.

Madhyamar- இளையராஜா

 ராஜா..ராஜாதி ராஜா எங்கள் ராஜா


ராக தீபம் ஏற்றிய ராகதேவன் ராஜா சாருக்கு  நாளைக்கு 75 வது பிறந்தநாள். 

நம் வாழ்வில் ..இதயத்தில் நுழைந்து உயிரில் கலந்த அற்புத  இசையை அள்ளித்தந்த இமயத்திற்கு மத்யமர் எல்லாரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமே.


உனக்கு ரொம்ப பிடிச்ச ராஜாவின் பாட்டு எது?..

உடனே பதில் சொல்ல முடியுமா ...யாராவது..?

இது இல்ல..அது..

ஐயோ.. அந்த பாட்டு இதை விட பிடிக்கும்.

இப்படியே..அடுக்கிண்டே போவோம்..

ஏனா..நாம எந்த mood ல இருக்குமோ..அந்த situation க்கு ஒரு பாட்டு உண்டு..ஒரு BGM உண்டு..

இப்படி யாதுமாகி நம் வாழ்வில்..ஒரு இசைப் பிணைப்பு..


ஒரு ஜீவன் நீ அழைத்தாய்...

உன் இசையால்..

ஓராயிரம் உள்ளம் இணைந்தோம்..


அகத்துள் நுழைந்து..

ஆவியுடன் கலந்தது...உன்னிசை..

வரிக்காக பாடல் கேட்டது போய்..

வாத்தியங்கள்...வருடும் மாயம்..

விந்தையாய்..உணர்வு..


பின்னனி இசையோ..

பேசி மாளாது..

வருடங்கள் போனாலும்

வருடல் உன் பாடல்..


 நம்முடனே..நடை போடும்..ராஜ நடை..அது ராஜாவின் இசை..


உன் இசையில் தொடங்கும்..

எம்

புத்தம் புது காலை..

நித்தமும் புதுசாய்த் தெரியும்

பொன்மாலைப் பொழுதுகள்..


டூயட்டோ..டப்பாங்குத்தோ..

rock ம்யூஸிக்கோ

ராக ஆலாபனையோ

பக்திப் பாடலோ பாப் பாடலோ

நாட்டுப்புறப் பாட்டோ நக்கல் பாட்டோ


மழைப் பாட்டோ குயில் பாட்டோ

தாலாட்டுப் பாட்டோ துள்ளல் பாட்டோ

சோகப் பாட்டோ சுகப் பாட்டோ


சொக்க வைக்கும்..சொல்லி லடங்கா

சொர்க்கம் என்றும்.

செவிக் குணவு .பிணிக்கு மருந்து

தனிமைக்கு தோழமை

தனித்துவம் என்றும்

ஞானி உனது இசைதானே.


கீபோர்டுகள் கீர்த்தி பெற்றன

கேட்டறியா புது நோட்டுகளால்( notes)

கிடார்கள் ..கிடுகிடுக்க 

chorus கொள்ளை கொள்ள

தாளம் தலையாட்ட வைக்க..


ராகமும் நானறிஞ்சேன் ராஜா உன் இசையாலே.

சங்கீத ஸ்வரங்கள் சொர்க்கம் காட்ட

சொக்கிப் போனோமே .


சத்தத்தின்  நடுவில் ஒர் நிசப்தம் (silence) .மெளனமும் புது மெட்டிசைக்கும் உன் இசையில்.


உயிராய் உறவாய் என்றும்

உன்னிசை கூட வர

உள்ளங்கள் வாழ்த்துமிங்கே

உலகிலுள்ள இன்பமெல்லாம்

உன்னை வந்தடைந்திடவே.


ராக தேவனே..

உன் நாள் இன்று..

சங்கீத மேகம் தேன் சிந்தட்டும்..

ஆகாயம் பூக்கள் தூவட்டும்..

என்னாளும் பொன்னாளாய்..

உன்..

பொழுதுகள் விடியட்டும்..

வாழ்த்த வயதில்லை..

வணங்குகிறேன்..

Advance Happy birthday raaja sir..