Friday, October 6, 2023

Madhyamar-சேவை

 சேவை.

ரொம்ப வேலை வாங்கும்..

ருசியில..

'உன்னை விட ..இத உலகத்தில உசந்தது ஒண்ணுமில்லைனு" பாட வைக்கும்.

புழுங்கலரிசியை ஊற வைத்து மைய்ய அரைத்து இட்லி தட்டில் வெச்சு வேக வைத்து..( அதுவும் ஆட்டுக்கல்லில் அரைக்க..அப்பப்பா..)

அடுப்பை அணைக்காமல் சின்னதா வெச்சு இட்லியை சேவை நாழியில் போட்டு பிழிய..

ஆஹா..அப்படியே வெறுமனே சாப்பிட்டறேனு அள்ளிக் கொண்டு போகப்படும்.

வெந்த பொருள் ..உடம்புக்கு ஒரு கேடும் கிடையாது.


அதைவிட..நம்ம பண்டங்களின் சிறப்பே..ஒன்றே பல உரு பெறும்.


தேங்காய் சேவை, எலுமிச்சம் சேவை, உளுத்தம் சேவை,தயிர் சேவை வெல்ல சேவை..


இப்போ நம்ம குட்டீஸ்க்கு கொடுக்க வெஜிடபிள் சேவை..


மோர்க்குழம்பு சூப்பரா இருக்கும்.

ஆனா..நான் வத்தல் குழம்பு தொட்டு சாப்பிடுவேன்.


சில சமயம் " அரைச்சவங்களுக்கு ஆட்டுக்கல் தான் என்னும் கதையாகி..ஒட்ட வழித்து ஒரு ஸ்பூன் கிடைக்கும்.


கடைசியா..இந்த 'திங்க' திருவிழா எப்படி முடியும் ஒரு  தயிர் சாதம் மாவடு இல்லாமல்?

எல்லா நதியும் கடலில் சேரும்..

என்ன சாப்பிட்டாலும் கடைசியில் ..மனம் தயிர் அல்லது மோர் சாதம் தேடும்.


அதுவும் அந்த நாள் மாதிரி எல்லாரும் வட்டமாய் உட்கார..கையை குழி செய்து..அதில் ஒரு உருண்டை சாதம்..ஒரு கிள்ளு மாவடு கடித்து..

பிசைந்த சாதமெல்லாம்...பறக்க..

ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?

இத்துடன் என் சேவை முடிந்தது..மீண்டும் மத்யமரில் நாளை ஒரு புது தலைப்புடன் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது ..

No comments: