Friday, October 6, 2023

Madhyamar -சுமை தாங்கி

 இது vacation time.. இங்கிருக்கும் பெண்களுக்கெல்லாம் இந்த அனுபவம் உண்டுனு நினைக்கிறேன்..


சுமை தாங்கி சாய்ந்தால்...சுமை என்ன ஆகும்?


அம்மா..hand bag எடுத்துண்டியா..ரொம்ப பவ்யமா கேட்பா பொண்ணு.. வூட்டுக்காரரும் ரொம்பக் கரிசனமா..பையில எல்லாம் எடுத்து வெச்சாச்சா..சாவி ஞாபகமா வெச்சுண்டியா..


ம்ம்ம்ம்..என் பைக்குள் பர்ஸ்,கண்ணாடி டப்பா,சீப்பு,வாஸலின்,விக்ஸ்,அம்ரிதாஞன்,கைக்குட்டை,கார்டுகள்,ஒரு hand towel,zip lock ( கோயில் பிரசாதம் எல்லாம் போட்டுக்க),first aid kit,பாக்கு,சின்ன perfume, ....உஸ் அப்பாடா.பைக்குள்ள் அடுப்பு தவிர எல்லாம்..ஐயோ அப்பறம் என் செல்ல Sony cam. ....


அம்மானு ஒரு அன்பு ஆறாக ஓட அணுசரணையா  கூப்பிட்டாலே.ஏதோ ஆப்புனு அர்த்தமாக்கும்..

என்னோட சின்ன மேக் அப் கிட்டும்,லென்ஸ் டப்பா, face tissue மட்டும் வெச்சுடறேன்..என் ஸ்வீட் அம்மானு கன்னத்தை தட்டி என் தலையில் முளகா அரைச்சா..


அடுத்து வருவார் வீட்டுக்காரர்..

'எப்படி இருக்கு இந்த t- shirt.? சொல்லிண்டே இருந்தியே போட்டுக்கறதே இல்லையேனு..அதான் போட்டுண்டுட்டேன்..

நான் அப்படியே என் கால் தரை விட்டு நழுவ அவரைப் பார்க்க..

அதுல பார்..ஒரு பிரச்சனை..pocket ஒண்ணு தான் இருக்கு.இந்த..என் கண்ணாடி டப்பா,mobile charger,power bank,  கொஞ்சம் உன்னோட handbag ல போட்டுடறேன்..சும்மா சும்மா பெரிய பையை தேடிண்டு இருக்க வேண்டாம் இதுக்காக எல்லாம். 


அதுவும் சரிதான்..போடு எல்லாத்தையும் உள்ள..

அப்பா அவர் பங்குக்கு அங்கேருந்து..அம்மாடி இந்த பிஸ்கட் பாக்கெட் உன் பைல வெச்சுக்கோ..வயிறு காலியானா..ஏப்பம்வரும்.

வேணுங்கும்போது வாங்கிக்கிறேன்..


இப்படியாக..எல்லா பையை விட என் கைப்பை பிணம் கனம் கனக்க ஆரம்பிக்கும்.லேசா சாய ஆரம்பிக்கிற தோள் .

 வழியில் வரக் கோயிலெல்லாம் வேறெ நிறுத்தி கன்னத்தில் போட்டுண்டு , விபூதி குங்குமம் சந்தனம் மஞ்சள், பூ, துளஸி,கல்கண்டு zip lock வாயைப் பொளக்கும். பை நிறை மாச கர்ப்பிணி மாதிரி ஆகும்.


இந்த குப்பைக்கெல்லாம் நடுவில இடுக்குல பர்ஸ் மாட்டிக்கும். 

டோலுக்கு காசு எடுத்து குடுக்கறதுக்குள்ள ..உஸ்.. உஸ்..


..ஒரு வழியா ஹோட்டல் வாசல் வர.கை காலெல்லாம் முறுக்கி மடக்கி எறங்கப் போகும் நேரம்..

' கண்ணா..கொஞ்சம் என் hand bag பிடியேனு அடியேன் சொல்ல...கையில் வாங்கினதும்...தும்..தும்..


அம்மா ...ஒரு அல்றல்..இது hand bag aa..இல்ல உள்ள கல்லு எதாவது  வெச்சிருக்கியானு ஆரம்பிக்க..


கூடவே வந்த குடும்பம் மொத்தமும்..என்ன தான் வெச்சிருப்பாளோ இதுல.. வீட்டில எத்தனை விதமான பை..எல்லாமே இப்படித்தான்.. எப்படித்தான் manage பண்றாளோ..

ஆளாளுக்கு அட்வைஸ்  வேற இதுல..

அட..சொகுசு செல்லங்களா..எல்லா பாரத்தையும் என் பையில போட்டுட்டு..

ஃபார்முலாவா பேசறீங்க..

வரேன்..வரேன்..அடுத்த தடவை நானும் sling  bag ஒண்ணு  மட்டும் எடுத்துப்பேன்.. யாருக்கும் அதில் பங்கு கிடையாதுனு மனசுல கறுவிண்டே..

ம்ம்ம்ம்ம்..இருக்கட்டும் பாத்துக்கறேன் உங்களை எல்லாமுனு மங்கம்மா சபதமெடுத்தபடி அடியேன்..


சரி சரி..சீக்கிர ரெடி ஆகிடலாம்.

கொஞ்ச நஞ்சம் இருக்கும் இடத்தை ரொப்ப ஒரு குட்டி ஷாப்பிங் பண்ணனுமே...

#happyholidays

No comments: