Friday, October 6, 2023

Madhyamar-toilet ek prem katha

 toilet ek prem katha ..இல்லையில்லை..

toilet ek  பிரச்சனை கதை..


toilet ..ek prem katha நு ஒரு ஹிந்தி படம். தன் காதல் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டினது அந்தக் காலம். ஆனால் இதில் ஒரு கழிப்பறை கட்டித் தர படாத பாடுபட்டு ஜெயிக்கும் ஒரு கதை.

கல்யாணம் ஆன மறுநாள்..இருட்டு அப்பி இருக்கும் காலையில்..கையில் லோட்டாவுடன்.' கிளம்பு லோட்டா பார்ட்டிக்கு' என்று வெட்கத்துடன் சிரித்து அழைக்கும் கிராமத்துப் பெண்கள்..then the story goes on and on..


கிராமத்தில் இப்படி சீன் என்றால் நகரத்தில் இருந்தும் இல்லை போல இன்னும் பல சீன்கள்.


'ஏம்ப்பா..5.30 மணி பஸ் வந்திருக்கும்ல.இன்னும் இவளைக் காணுமே. பஸ் ஸ்டாப்பில் இருக்கும் அப்பா இவளைப் பார்த்தாரா இல்லையா..

அம்மா , புலம்பியபடி உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

வாசல் கேட் சத்தம் கேட்டு ஓடினாள். ' கண்ணு பஸ் லேட்டா..என்ற அவள் கேள்விக்கு ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்..நகரும்மா...

என்றபடியே வேகமாக ஓடினாள் பாத் ரூமை நோக்கி அவள் பெண். நேற்று சாயந்திரம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவள். ஊர் வந்து சேருவதற்குள் அவஸ்தை. பின்ன nature's call முக்கியமா..மம்மி கேள்வி முக்கியமா?


ஊருக்கு கிளம்பும் நாளும், திரும்பும் நாளும் ,பஸ் பயணம் என்றால் பாதி பட்டினி தான் இங்கு பல பெண்களுக்கு.முக்கியமா தண்ணீர் குடிக்க ரொம்ப பயம்.


இதுதாங்க சீன்.

குஷன் சீட்டோ,குத்தற சீட்டோ பஸ் பயணம் என்றாலே முதலில் பயம் வருவது பாத் ரூமுக்கு என்ன செய்வோம்னு தான்.

வழியில் ஒரு பாடாவதி ஹோட்டலில் பஸ் நிற்கும். பாத் ரூம் எங்கே இருக்கு என்று கேட்டால்..' அதோ அந்தக் கோடியில கும்மிருட்டாய் இருக்கும் இடத்தை கை காட்டுவார்கள். அப்பாடா என்று நினைத்த மனம் ..ஐயோ இருட்டு என்று பின்வாங்கிடும்.குடும்பத்தோடு போகும் பெண்களுக்கு டார்ச் அடிக்க யாராவது நிற்பார்கள். தனியாகப் பயணம் செய்யும் பெண்கள்,யுவதிகள் படும் பாடு இருக்கே..

இவர்கள் யோசிப்பதற்குள் வண்டி விசிலடிக்க ஆரம்பிக்கும். சரி..சரி..அடுத்து ஏதாவது இரு டோல் இல்ல பெட்ரோல் பம்ப்ல நிக்க சொல்ல கேட்டுக்கலாம் என்று அடக்கி அமர்ந்து தொடரும் பயணம்.


அதுக்குள்ள நடுநிசி வந்துடும்.

நம்ம கஷ்டம் உணர்ந்து  டிரைவர் பெட்ரோல் பம்ப்பில் நிறுத்துவார்.

முக்கால் வாசிப் ப்யணிகள் குறட்டையில் இருப்பார்கள். அக்கம் பக்கம் பார்த்து இறங்க ,ட்யூட்டி முடிந்து அங்கேயே படுத்து தூங்கியபடி ஊழியர்கள். இவரகளையெல்லாம் தாண்டி அந்த ரெஸ்ட் ரூம் கண்டுபிடிப்பதற்குள் தொண்டை வரண்டு ஒரு அதீத பயம் கவ்வும்.

பாதி தூரம் போய்விட்டு ..' ஐயோ பயமா இருக்குனு திரும்பி வந்து..மீண்டும் தொடரும் அவஸ்தை.


இது போல அனுபவத்திற்கு பின் , என்ன ஆனாலும் சீட்டோட சீட்டா ஒரே பொசிஷன்ல உட்கார்ந்தே போய்டலாம்னு ஞானம் வந்துடும். பஸ் என்பது ஒரு part and parcel of life for many . அப்படி இருக்கும் போது ஏன் இன்னும் வசதிகள் அதுவும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லை?


( பஸ் பயணம் பிடிக்கும் எனக்கு. அதுவும் தனியாக சில ஊர்களுக்கு செல்ல பஸ்ஸே வசதி என்பதாலும். சில பஸ்கள் தான் பெரிய ரெஸ்டாரெண்ட் வாசலில் நிற்பார். என் அனுபவத்தில் அரசு மற்றும் சில ஆம்னி பஸ் நிறுத்தும் இடங்களெல்லாம் தண்ணீர் கூட குடிக்க முடியாது..)


இன்னொரு சீன்.

வெயில் காலமாயிருக்கு ..பெரிய water bottle எடுத்துண்டு போயேன் ..கண்ட தண்ணீ குடிச்சு பரீட்சை நேரத்தில் உடம்புக்கு வந்துடப் போறது..அம்மா சொல்வதை காதில் வாங்காமல் , பல சமயங்களில் எடுத்துச் சென்ற பாட்டிலும் பாதி அப்படியே கொண்டு வரப் படும்.

ஏனென்று கேட்டால்..பதில் இப்படி வரும்..

' கிடைக்க்றதே பத்து நிமிஷம் ப்ரேக்..சாப்பிடறதா .இல்ல போய் க்யூல வாஷ் ரூமுக்கு நிக்கறதா..அப்படியே போனாலும் தண்ணீர் பாதி நேரம் இருக்காது..என்ன பண்றது. ?


complaint பண்ண வேண்டியதுதானேனு கேட்டா..அதுக்கும் இன்ஸ்டண்ட் பதில் வரும்..'என்ன பெரிய நடக்கப் போகிறது. ரெண்டு நாள் சரியா இருக்கும். அதுக்கப்பறம் அதே பழைய் கதைதான்.

better not to use than getting infectionநு நச்னு ஒரு பதில் வரும்.

எல்லா institutions ம் அப்படினு நான் சாடலை. ஆனால் முக்கால் வாசிப் பேர் இதுக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை என்பதுதான் வருத்தம்.


சரி ..இப்போ மத்யமர் ல இதை போட்டு என்ன சாதிக்கப் போறீங்கனு ஒரு மைண்ட வாய்ஸ் கேட்டால்..

நான் செய்யும் சின்ன உதவி.

என்  கூட வரும் ..கஷ்டம் கண்ணில் தெரியும் யுவதிகளுக்கோ..சக பெண் பயணிக்கோ ..வாங்க சேர்ந்து போகலாம்னு உதவுவேன். 


ஆனால் அப்படி போகும்போது ஜாதகம் எல்லாம் கேட்டு குழந்தைகளை டென்சன் படுத்த கூடாது.  அப்பறம்.அவங்களுக்கு நாம நல்லவரா கெட்டவரானு நாயகன் ஸ்டைலில் கேள்வி உறுத்தும்.


ஸ்கூல் காலேஜில் கொஞ்சம் பெட்டிஷ்ன் பெரியநாயகி ஆவேன். PTA meeting ல் நான் இந்த topic ஆரம்பிக்க..என் பெண்கள் என்னை முறைக்க..ஆமாம் மேம்..ஆமாம்னு ஒரு அப்பா அம்மா கும்பல் சேர்ந்து கோரஸ் பாடுவர். கொஞ்ச நாளைக்கு விடிவு கிடைக்கும் குழந்தைகளுக்கு.


நிறைய குழந்தைகள் இப்போது தங்களின் பர்த்டே பார்ட்டிக்கு செலவு செய்வதை விட்டு இந்த மாதிரி கழிப்பறை கள் கட்டுவதற்கு உதவ முன் வருவது படிக்கும்போது..

நம்பிக்கையும் வருகிறது.


bathroom என்பது basic.. அதுக்காக கட்டியா தர முடியும்..முடியாதுதான்..

ஆனால்...கொஞ்சம் உதவி பண்ணலாம்..

No comments: