#பள்ளிப்பிராயத்திலே
ஞாபகம் வருதே ..ஞாபகம் வருதே..
என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா?
ஆட்டோகிராஃப் தான்.
பன்னெண்டாம் கிளாஸ் முடியப் போறது.
சோகம் கவ்வ ஆரம்்பிச்சது.
இனிமே எப்ப்போ சந்திப்போமோ.
உயிரிலும் மேலான ஃபாத்திமா மிஸ். எப்படி பிரிஞ்சு இருக்கபோறோம்னு அழுகை அழுகையா வரும்.
அக்கெளண்ட்ஸ் சொல்லி தந்த கபிலவதனி டீச்சர்.. விளக்கெண்ணெய் மாதிரி நாங்க உட்கார்ந்திருக்க ..' நீங்க இந்தப் பாடத்தை வேண்டாம்னு சொல்ல நினைக்கும் போதே..அது உங்களை வேண்டாம்னு போய்டும்னு ' வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாலும் பாசமுள்ள டீச்சர்.
ஆசிரியைனு சொன்னாதான் அரை மதிப்பெண்ணாவது போடுவேன்்னு என் தோழி ஜயலக்ஷ்மியை ..சயலக்குமினு கூப்பிட்ட நளினி ஆசிரியை..
போர்ட் முழுக்க கணக்கு போட்டுண்டே..அதை நாங்க காப்பி அடிக்கறதுக்கள்ள அழிச்சிண்டே போகும் ஹில்டா டீச்சர்.
grammar test paper .. எப்பவும் கையில் வெச்சுண்டு சுத்தி சுத்தி எங்களை நெம்பி எடு த்த ருக்மிணி டீச்சர்..
எல்லாரையும் விட்டு..இந்த ஸ்கூல் காம்பவுண்டை விட்டு வெளியே போற நாள் நெருங்கி வந்தபடி இருக்க..
அப்பதான் ஒரு ஃப்ரண்ட் வந்து பீத்திண்டா தான் வாங்கிண்டு வந்த ஆட்டோகிராஃப் புக். இதுல எல்லா டீச்சர் கிட்டேந்தும் நான் கையெழுத்து வாங்கி பத்திரமா வெச்சுப்பேனே..என்று புகை கிளப்பிட்டாள்.
எல்லாரும் வாங்கி அந்த வழு வழு அட்டை போட்ட சின்ன புத்தகத்தை தொட்டு பார்க்க..
' ஏய் அழுக்கு பண்ணிடாதீங்கடீனு' புடிங்கிண்டு ஓடிப் போய்ட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா கிட்ட இதை வாங்கித் தரச் சொல்லணும். அம்மா சொல்லாத வேலையும் சுத்தமா செஞ்சு வெச்சு காத்திருந்தேன்.
அம்மாவின்.ஆபீஸ் வீடு டென்ஸன் எல்லாம் அடங்கினப்பறம் ..
அம்மா..எனக்கு ஒரு ஆட்டோகிராப் புக் வேணும்மா என்றேன்.
பக்கத்தில் கீரை ஆய்ந்தபடி இருந்த என் சித்தி..
"ஆட்டோகிராப் எல்லாம் நம்ம குடும்பத்தில் யார்கிட்டேயும் வாங்கற வழக்கமில்லை என்று."
"ஏதோ ஆடு வெட்டறதெல்லாம் நம்ம குடும்ப வழக்கமில்லைனு "சொல்றாப்போல தூபம் போட்டுட்டு தாச்சி தூங்கப் போய்ட்டா..
இரு இரு சந்திரிகா அக்கா வோட சினிமா போக பர்மிஷன் கேட்ப இல்ல..அப்ப உனக்கு இருக்கு ஆப்புனு கறுவியபடி நான்.
ராத்திரி கண் மூடினா..கலர் கலர் அட்டையோட ஆட்டோகிராப் புக்ஸ்.
ஆட்டோகிராப் புக்..அதில் நான் செய்யப் போகும் டெக்கரேஷன் எல்லாம் சேர்ந்து என் கனவைத் தொடர்ந்தேன்.
என்ன தோணித்தோ தெரில காலையில் கண் விழித்த அம்மா காபியோடு என் வயிற்றிலும் பால் வார்த்தாள்.
பத்து ரூவா தரேன்..வாங்கிக்கோ..
( உஸ் அப்பாடா..ஒரு பத்து ரூவாய்க்கு பட்ட பாடு இருக்கே)
அப்பறமென்ன..ஸ்கூல் வாசல்ல இருந்த கடையில் அலசி எடுத்த அழகா கைக்கடக்கமா..ஒர் ஆட்டோகிராப் புக்.
ஒவ்வொரு டீச்சரும் கிளாஸ் முடித்து போகும்போது ..பின்னாடியே..மிஸ்..மிஸ்னு ஓடி ப் போகும் பெரிய கூட்டம்.
அந்த டீச்சர் கிட்ட வாங்கும்போது இன்னொரு டீச்சர் க்ராஸ் பண்ணினால் அங்கும் பாய்ந்தோடும் கூட்டம்.
அவர்கள் எழுதிய ரெண்டு வரி..அவர்கள் கையெழுத்து..ஒவ்வொரு மாணவிக்கேற்ற மாதிரி எழுதித் தந்த ஊக்குவித்த வார்த்தைகள்..
பொக்கிஷமா இன்னும் இருக்கு.
எத்தனை சேட்டைகளை தாங்கியது இந்த முகங்கள்..தனக்கு ஒரு பேரு வெச்சிருக்காங்க இந்த வால்கள்னு தெரிஞ்சும்..இந்த மாதிரி செட் இனிமே எப்போ கிடைக்கும்னு ஓரத்தில் துளிர்த்த கண்ணீரை கண்டும் காணாமல் துடைத்த கண்கள்..
நீங்க எல்லாரும் பெரிய ஆளா..நல்ல குணத்தோட இருக்கணும்னு மனதார வாழ்த்திய மணிகள்.
இவர்கள் என்னை மறந்திருக்கலாம். ஆனால்..நான் எப்படி மறப்பேன்.
இன்று என் பெண்ணிடம் அழகாக ஒரு பூட்டு போட்ட புக் இருக்கு.. அவள் பொக்கிஷம் அது..
எப்ப வேணுமோ பூட்டைத் திறந்து அந்த உலகுக்கு போய்ட்டு வா ...enjoy என்பேன்.
No comments:
Post a Comment