Friday, October 6, 2023

Madhyamar-எங்கே செல்லும் என் பாதை

 #ஸண்டே_ஸ்பெஷல்


#எங்கே_செல்லும்_என்_பாதை..?  


நீங்கள் சொல்வது போல மனக் குழப்பம் இல்லை Shankar Rajarathnam sir.


 முன்னைவிட இன்னும் கொஞ்சம் தெளிவு..தூசி படிந்த நிலைக் கண்ணாடியை துடைத்து...புற அழகை மீறி அக அழகைக் காணக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே நான் நினைக்கிறேன்.


'எனக்கே..எனக்கா..' என்று ..ஒவ்வொருவரும் ஆளுமை செய்ய ஆரம்பித்த காலத்தில்..

அன்பாகச் சொன்னேன் கேக்கலை..இப்ப அடி தான் ..என்று வாழ்வை புரட்டிப் போட வந்தது இந்த pandemic.


Positive ..என்பது ..நம் thoughts ல் மட்டும் இருக்கணும்..என்று புதுப் பாடம் சொல்லிக் கொடுத்த pandemic.


ஒரு ஃபோன் 📞 போட்டு சொல்லி இருந்தா போதுமே ...இதுக்காகவா என்னைப் பார்க்க வந்தீங்க..என்று தூக்கி எறிந்த காலம் போய்...

எப்போது பார்ப்போம் நேரில்..என்று உறவையும் நட்பையும் பார்க்க. 

 ஏங்க வைக்கும் காலம்..

 

இனி வரும் வாழ்க்கையில் சந்தோஷம் எதில் இருக்குனு கேட்டிருக்கீங்க..?


இப்பவே சந்தோஷமா தானே இருக்கோம்.


வாழ்க்கைச் சக்கரத்தில்.. பஞ்சர்  ஆகாம போகமுடியுமா..?

பஞ்சர் ஒட்டிட்டு மீதி பயணத்தை கரடு முரடானாலும் கடக்க தெம்பு கொடு கடவுளேனு தான் தினமும் பிரார்த்தனைகள்.


திரும்பிப்  பார்க்கும்போது வெற்றிடமா..வெறுமையா இல்லாமல்..வில்லன் களும் வந்துட்டு போனால் தானே..மசாலாப்படம் மாதிரி நல்லா இருக்கும்? 


நம்ம பேரன் பேத்திகளுக்கு சொல்ல எத்தனை விஷயங்கள்?


Every life and every moment is precious என்று சொல்லிக் கொடுத்த கிருமிக்கு..

போனால் போகிறது என்று ஒரு thanks சொல்லி வைப்போம்.


குணம் மாறிக் கொண்டே இருந்து மருந்தே கண்டுபிடிக்கப்பட விடாத.. இந்த இந்த வைரஸ்..மனித இனத்தின் அதே குணத்துக்கும் ஒரு சவாலன்றோ..?


எதிரியின் பலத்தை விட பலவீனம் அறிந்து செயல்பட தெரிந்த மனித மூளை..

தன்னைப் போலவே உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் போட்டியில் இப்போது ..


இந்த pandemic லிருந்து எப்படியும் வெளி வருவோம். 

ஆனால் இந்த pandemic கற்றுக் கொடுத்த பாடத்தை காற்றில் பறக்க விடப்போகிறோமா ?


 .இல்லை..கடைசி வரை கடைப்பிடிக்கப் போகிறோமா..

 

பாதைகள் எப்போதும் ரெடிமேடாக கிடைப்பதில்லை..


கரடு முரடாக இருந்த இடங்கள்..நடக்க நடக்க உருவான பாதைகள் தான்  ஏராளம்.


அந்த பாதையைத் தான் .. இப்போது நாம் இந்த தருணத்தில் உருவாக்குகிறோம்.


இந்தப் பாதை.. கதைகள் பல சொல்லும் பாதை..


கற்றவை சொல்லும் பாதை..


வரும் சந்ததிக்கு ..வழிகாட்டும் பாதை..


போதையிலிருந்து மீண்ட பாதை..


இந்த அடைபட்ட தினங்களில் மனசில் மூடி இருந்த கதவுகளும் ஜன்னல்களும் திறந்து ஒரு புது fresh air ..ஒரு புத்துணர்வு  புகுந்த ஒரு feeling.


பயம்..அப்படீன்னா என்ன என்பதை நொடிக்கு நொடி உணர்ந்தாலும்..

All is well நு தட்டிக் கொடுத்துக் கொண்டு..


Health is wealth....

party செஞ்சது போக..இப்போ 

பாட்டி வைத்தியம் ல இறங்கிட்டோம்..

So..இனி எல்லாம் சுகமே தான்..


மாற்றம் என்ன சார் மாற்றம்..


அதே உப்புமா தான்.. ஆனால்..தப்பிக்க முடியுமா? Jokes apart..


இது நம்ம வாழ்க்கையில் ஒரு internship period மாதிரி..

இதுக்கப்பறம் கிடைக்கப் போகிற project களை ,maturity உடன் deal பண்ண ஒரு training ground....


கலங்கிப் போயிருக்கும் நாம்..

கலக்கப் போவது யாருனு கிளம்புவோம் வாங்க மத்யமர்ஸ்..


Curfew சமையல்

Cut in expenses..

Contentment..அதான் இருக்கிற புடவை போதும்னு...😀😀😀

Cherishing everything ..💐😀


எதாவது வேணுமானு கேட்டா..

வேண்டாம் சாமி..இருக்கறதே போதும்னு

சொல்ல ஆரம்பிச்சுட்டோம்..🙏🙏


2020 மட்டுமல்ல..வரப் போகும் வருடங்களும்..

வெற்றிடமா?..வெற்றியா?..


முடிவு நம்ம கையில்..

வாங்க வாழ்ந்து காட்டுவோம்.💪💪


No comments: