Wednesday, November 30, 2022

MTR idli mix கொழுக்கட்டை

 #appraisal_அலைப்பறைஸ்


போன வாரம் என்னவெல்லாம் செய்தேன் என்று....ப்ராஜக்ட் அப்ரைஸல் பிராண நாதர் செய்ய ஆரம்பிச்சார்..


அந்த ப்ரெட் ஹல்வால..இன்னும் ஒரு ஸ்பூன் ..நெய் சேர்த்து இருந்தால்..heaven ஆ இருந்திருக்கும்..


சொர்க்கமே என்றாலும்..ப்ரெட் அல்வாவைப் போலாகுமானு ' பாடி நான் குடுக்க வேண்டிய மார்க்கு..narrowly miss பண்ணிட்டம்மா..


இன்னொன்னு என்னமோ பண்ணினியே..அந்த ..#🍅#பஜ்ஜிசாட்...


"சாட்டிலே இருப்பதென்ன கன்னி இளமானே..தக்காளியோ..உருளையோ.கன்னி இளமானேனு'..என்னையே குழம்ப வெச்சதால்

"பஜ்ஜிக்கு நான் அடிமைனு' பாட வேண்டிய  நான்.. ..' ஒண்ணுமே புரியல ..பஜ்ஜிக்குள்ளனு'  என்னை புலம வெச்சதால்

but you missed the chance of getting full marks..


#பொள்ளவடை..ஆஹ்ஹா..மொறு மொறுனு..ஆனா..பாரு..அதுக்கு பேரு அரிசி வடை....பேரை மாத்தி plagiarism செஞ்சு ..( மாமி..பழி வாங்கிட்டேளேனு ..என்.மை.வா)..

அதுக்கு நான் உன் சமையலையே ஸஸ்பெண்ட்.செய்யணும்.

ஆனா..ஹஸ்பெண்ட் ஆச்சே..அதனால..

( ஐயா..அடுத்த வேளை சோறு கிடைக்கணுமேனு..😭 பயம்..இருக்கட்டும் ..என் மை .வா)


கடைசியா..அந்த #கடலை....out of the world..

ஆமா..அதுல போட்ட காரத்துக்கு..நாம எல்லாரும் out of the world தான்..

So அங்கே கொஞ்சம் மார்க்கு கம்மி..🤔


So ,...அப்பாவையும் discuss பண்ணி..


சாயந்தரம் என்ன டிஃபன் வேணும்னு சொல்றேன்னு....( ஆஹா..கொரோனா க்கு அப்புறம்..நம்ம crown ஐ..காக்கா தூக்கிண்டு போய்டும் போல இருக்கே..தேவுடா..)


பேசிக் கொண்டே ..தன்னோட மூக்குக் கண்ணாடியைத் துடைக்க..


"மாப்பிள்ளை.. கொடுங்கோ..அதை நன்னா..#பவுடர் போட்டு துடைச்சு தரேன்னு."பாசமழை..ஒரே..

(ஆனாலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே)


இந்தப் பவுடர் இருக்கே..பவுடர்..

எங்கப்பா..அழ அழ..அதை யூஸ் பண்ணுவார்.


கர்ச்சிப்பில் பௌடரைப் போட்டு அலாக்கா அதை fold பண்ணி..சட்டை collar அழுக்காகாமல் போட்டுப்பார்


மழைக்காலம்.முடிஞ்சதும்..குடைக்குள் தூவி வைப்பார்.அடுத்த வருஷம் ' "மழைக்கால மேகமொன்று' வரும்போது..முதல்ல குடையை மழையில குளிப்பாட்டணும்..


Rain coat ம் அப்படித்தான்.. Powder coat க்கு மாறி powerless ஆ pouring எப்போது ஆரம்பிக்கும்னு பீரோல தாச்சி தூங்கும்..


கீ போர்ட் வாசிக்க ..தொட்டுக்க contact lens  டப்பால..cuticura powder இருக்கும்..


பவுடர் பத்தி யோசிக்க..பளிச்சுனு ஒரு பல்பு..


ஆஹா..சாயந்திரம் என்ன டிஃபன்னு எனக்கு ஐடியா வந்தாச்சுனு நான் குதிக்க..


ஐயோ..பாண்ட்ஸ், சாண்டல்..இப்படி எதையாவது போட்டு 

" என்ன செய்யப் போகிறாய்னு' வூட்டுக்காரர் பாவமா பார்க்க..


" ஒரே ஒரு  பவுடர்....ஓராயிரம் வேலை பண்றது தானே'....அப்ப்போ..இந்தப் பவுடரும்..


நான் காண்பிச்ச பவுடரைப் பார்த்ததும் தான் அவருக்கு போன உயிர் வந்தது..


'MTR rava idli ' mix..


என் வழி தனி வழி..நகருங்கோ..

கிச்சனில் நுழைந்தேன்..


கொதிக்க வைத்தேன்..2 டம்ளர் தண்ணி..

கலந்தேன்..1 டம்ளர் மிக்ஸ்.

கிளறினேன்..கொஞ்சம் உப்பும் மிளகும் சேர்த்து..

தூவினேன்..தேங்காயும் கருவேப்பிலையும்..

பிடித்தேன் கொழுக்கட்டை.

வைத்தேன் ஆவியில்....

பரிமாறினேன்..instant கடலை மாவு மோர்க்குழம்புடன்..

#ரவா_இட்லிமிக்ஸ்_கொழுக்கட்டை


" மாத்தி யோசி boss'..

மாத்தி யோசி..


அடுத்த முறை..இதை ஒரு bread crumbs coating கொடுத்து fry பண்ணிஅசத்தலாம்..

Fried கொழக்கட்டையை..உதிர்த்து..உ.கி

சேர்த்து..ஊ..ல..லானு..chat செஞ்சுடலாம்..


கடைசில..மார்க்கு...?

உனக்கு  appraisal  பண்ணினா..இப்படி

Surprise எல்லாம் கிடைக்குமா ?

  So..மீண்டும்..அடுத்த டிஷ்லேர்ந்து அப்ரைஸல் ஆரம்பிக்கலாம்னு அவர் சொல்ல.


  ' திருப்பியும் முதல்லேர்ந்தா..சாமி..நான் ஜீட்'.


( பாவம்..என் வூட்டுக்காரர்..நான் எது செஞ்சாலும் "அமைஞ்சுடுத்தும்மானு'/சாப்பிட்டுடுவார்..சாரி..முழுங்கிடுவார்)


Tuesday, November 29, 2022

அம்மாவின்_கிச்சன்

 சாப்பிடலாம் வாங்க அடை மாவு குணுக்கு


#அம்மாவின்_கிச்சன்..


#நான்_செய்த_குணுக்கு..

#உண்டாச்சு_வியப்பு..😁😁


அது என்னமோ தெரில..

அம்மா கிச்சன் ல நுழைஞ்சதும் ..என் சமையல் கூட சூப்பர் டேஸ்ட்டா இருக்கற மாதிரி இருக்கு..


"எப்ப்பாரு என்ன கிச்சனல வேலைனு" அவளிடம் சிடுசிடுத்த நாட்களுண்டு..


யாருக்கோ சொல்ற மாதிரி..கருமமே கண்ணாயினாராய் இருப்பாள் ... அம்மா..


இன்னிக்கு கூட..

அடைக்கு அரைத்ததில்..

ஒரு ரெண்டு எண்ணெயில் போட்டு பொரித்தேன்.


ஆஹா..கரகர மொறுமொறுனு..

"அம்மா நீ பண்ற மாதிரியே இருக்கு.".

பேசினேன் அவள் படத்துடன்..

ஏனோ ..அணை போட முடியவில்லை..அழுகைக்கு..


#Amma_is_there


very_easy_vadai

 #வாங்க_சாப்பிடலாம்

#very_easy_vadai


உளுந்து ஊற வைக்கணுமா?

No..

அரைச்சு எடுக்கும் வேலை இருக்கா?

No.

தண்ணி ஜாஸ்தியா..கம்மியா? டென்ஷனா?

No..No..

அப்போ என்னதான் செய்யணும்?

சொல்றேன் சொல்றேன்.


நம்ம கிச்சன்ல , ஃப்ரிட்ஜில இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க..

கலக்குங்க..

காட்டுங்க உங்க creativity😋


For 15 vada

Soft dosai  -2 ( fresh ஆ ரெண்டு பண்ணுங்க)

Bread -2

புளிக்காத தயிர் ஒரு 2கரண்டி

தோசையும் ப்ரெட்டும் தயிரில் ஊறவைக்கவும்.( thanks Raghupathy N sir for the idea 🙏)

உளுத்தம் மாவு - ஒரு கரண்டி

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உருளை ஒன்று சின்னதா வேகவைத்தது

(Optional)

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

தேங்காய்ப் பல்

மிளகு

கொத்த்மல்லி

தேவையான உப்பு.

எலாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்க.


( உளுத்தம் மாவு last ஆ சேர்க்கணும்.)

எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுங்க..

Crispy tasty vada ready😀


இதை உதிர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்ட 

#வடை_உப்புமா ரெடி Bala Hari


உளுந்துக்கும் உண்டே ..உள்ளம்.

 உளுந்துக்கும் உண்டே ..உள்ளம்.


.


"ஊறத் தெரிஞ்சிகிட்டேன்..

உருவம் பல எடுப்பேன் ..

கண்மணி ..என் கண்மணி..😄😄😄


எங்க வீட்டு உளுந்தெல்லாம்..

எசப்பாட்டு பாடும் பார்...🎵🎵🎵🎵


பந்து போல வரணும்..

பந்தியிலே செல்லுபடியாக..வடையும்..


பஞ்சு போல இட்லிக்கு..

பக்குவமா அரைக்கோணும்..


பூரண உசிலிக்கோ..

பொர பொரனு இருக்கணும்..


பார்த்து செய்யும்மா...

பிள்ளையாரு வருவாரு..

அள்ளிக் கொடுப்பாரு...

வெள்ளமாய் வரங்களையும்..


விநாயகனை வரவேற்போம்..

விக்னமெல்லாம் நீங்க..

வேண்டுவோம்..🙏🙏🙏🙏


அது சரி..

உங்க வீட்டுக் கவியும் ..கொட்டட்டுமிங்கே

ரவா தோசை

 #MM_DINNER


Tippu ஒண்ணு வெச்சுருக்கேன்..

ரவா தோசைக்கு..

டிப்பு ஒண்ணு வெச்சுருக்கேன்..


கரைச்ச மாவை கரண்டியால் தோசைக்கல்லில் விடாமல்..

கையில்  எடுத்து மாவை தெளிக்க..


ஓட்டை ஓட்டை ரவா தோசை..

ஹோட்டல் தோசை மாதிரி இருக்குமே..


ஜோடிக் கிளியாக காரச் சட்னி இருக்க..

ஜோராய் இருக்குமே..ரொம்ப..

ஜோராய் இருக்குமே


Bake..ஓ....beku..

 Bake..ஓ....beku..


அம்மா..can we bake something today?..

கேட்டுக் கொண்டேன் கிச்சனுக்குள் பெண் நுழைய..

டேய்....நானே ஒரு பேக்கு....

So..நீயே..பேக்கு..

நான் ..only ' நோக்கு:.. என்று நகர..


அம்மா..சொல்லாதே..சாக்கு

போதும் உன் 'talku'

காட்டாதே போக்கு..

 உன் கைப்பட்டால் ஆகும் ஷோக்கு...

 You always 'rocku'நு ..என்னை கொக்கிபோட..

 

Let's start #mug_cake நு அவள் சொல்ல.


டேய்..டேய்..அப்போ பேக்குனு சொன்ன..இப்போ மக்குனு சொல்ற..


"அம்மா..makku இல்ல..mug .."


சரி..சரி...

வேணும் உன்னோட ஹெல்ப்பு..இல்லாட்டா

வாங்கட்டுமா...பக்கத்து விட்டு anuty's  dishhunu..

குண்டைப் போட..


ஐயோ..சாமி..நாமளே பண்ணலாம்..

போன வாரம் ..பொல்லாத 6 கப் கேக்குக்கு 300 ரூவா வாங்கிட்டாளேனு நான் புலம்பினதை..எடுத்து விட்டாள் ஒரு ட்ரம்ப் கார்டு..


இப்போ நீயே செய்யறயா..நான் செய்யட்டுமானு கேட்டாள்..


நான் ரொம்ப புத்திசாலி மாதிரி ..நீயே செய்னு நழுவ..


ஹலோ..இரும்மா..: "தள்ளிப் போகாதே எனையும்னு' sid  குரலில்..


இப்போ..we are going to make 

#Banana_mug_cake..


#2வாழைப்பழம் இருக்கா.. அந்த fork ஆல மசிச்சுடும்மானு சொன்னதும்..

மகுடிக்கு அடங்கின பாம்பா..நான் சிரத்தையா செஞ்சுட்டு நகரப் பார்க்க..

இரு..இரு..

Yellow color microwave cup எங்கே..

Wash பண்ணித்தாம்மானு அவள் கேட்க..

Wash பண்ணிட்டு விடலாம் ஜீட்டுனு நினைச்ச என் நினைப்புக்கு வெச்சாள் வேட்டு.

#மைதா_3_டேபிள்ஸ்பூன் கொடு பார்ப்போம்..

(ஓடிப்போய் ஃப்ரிட்ஜுக்குள் ளேர்ந்து மைதாவை எடுத்து தர்)

அந்த #sugar_powder ஒரு இரண்டு ஸ்பூன் தரியா.. 

அப்படியே சைட்டில்.. #2_ஸ்பூன்_unsalted butter கொஞ்சம் melt பண்ணுடறியா..

#Half_spoon_baking_powder போடறியா....

#பால் ..ஒரு #3_spoon விடு..

இன்னும் சொட்டு விடு..அப்போதான்..நன்னா தோசை மாவு மாதிரி ஆகும்..


Last ஆ..அப்படி கொஞ்சம் #walnut ஐ..பொடியா கட் பண்றியா..

எல்லாம் மிக்ஸ் பண்ணினாள்..


 அந்த microwave கொஞ்சம் திறக்கறியா..

 1min 30 seconds போதும்..நடுவுல கொஞ்சம் திறந்து பாரு..ஒரு two minutes ..fan காத்துல நின்னுட்டு வரேன்..

 

இப்படியாக..

"Mast ஆ இருக்குல்ல mug cake நு சொன்னவ..

மடமடனு....ஒரு pineapple..

ஒரு kesar mug cake

Fresh mango mug cake and finally

Chocolate mug cake..

Vennila cake

செஞ்சு முடிக்க..

கமகம..சுடச்சுட..


மொத்தமாவே..15 spoon maida

1 tumbler க்க்கும் குறைவாக பால்..

100 gm க்கும் குறைவா butter..


Most important ..அதே கப்பில் ஒவ்வொரு flavour ம் மிக்ஸ் பண்ணி.. அப்படியே microwave ல் வெச்சு எடுத்ததால் பாத்திரம் விழலை..விழவே இல்லை.


எப்போ..நாக்கு கேக்கறதோ..அப்ப்போ ஒரு 5 நிமிஷத்தில் ..ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ரெடி பண்ணி ..சாப்பிடலாம்..😀


அரை மணியில் அரை டஜன் கேக்..


குறைந்த செலவில்..குறையே இல்லாத...கமகம கேக்...


இனிமே அவள் கேக்காமலேயே..

பேக்கா கேக்குனு..பேக்கிடலாம்னு முடிவுடன்..😀😀


Unlock_1.0 #குட்டிக்கதை

 #Unlock_1.0

#குட்டிக்கதை

"ஏங்க..அடுத்த திங்கள் முதல் வேலைக்கு வர ஆரம்பிக்கணும்னு மெயில் வந்திருக்கு..'

 மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்த கோபி குட்டியின் தலையை வருடியபடி கவலையில் ஆழ்ந்தாள் சரயு.

 

" எப்படி இருந்தாலும் வேலைக்கு போய்த் தானே ஆகணும்ப்பா..இப்படி வீட்லயே உட்கார்ந்து இருக்க முடியுமா?'

அவள் கணவன் க்ருஷ்.


"இல்லங்க..இந்த மூணு மாசமா வீட்லயே இருந்திட்டேனா..இவன் இப்ப என்னை விடவே மாட்டேங்கிறான்..எல்லாம் நானே செஞ்சு செஞ்சு பழகிட்டான்ங்க..இப்போ பழையபடி  விட்டுட்டு போனால்..உடம்புக்கு எதுனாச்சும் வந்துடுமோனு பயமா இருக்கு'..

ஒரு அம்மாவின் கவலையில் சரயு..


உள்ளிருந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார் பாக்கியம்..

" நான் தான் இருக்கேன்ல..ஒரு ரெண்டு நாள்ள சரியாகிடுவான்' என்றாள்.


சரயு ஒரு பெரிய மாலில் பில்லிங் செக்‌ஷனில் வேலை பார்க்கிறாள்.

காலையில் கிளம்பினால் ராத்திரி ஆகிடும் வீட் வந்து சேர.அவள் கணவன் கிருஷ்...மெடிக்கல் ஷாப் வைத்து இருக்கிறான்.

அவ்வப்போது வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவான்.


அவர்கள் உலகமே கோபிதான்.


நான் ஒரு ஐடியா சொல்றேன் ஆரம்பித்தான் க்ருஷ்..


" நாளையிலேர்ந்து நீ என்ன செய்வியாம்..சும்மா பையைத் தூக்கிட்டு அவனுக்கு டாட்டா காட்டிட்டு வெளியே போற மாதிரி போ.. 

எப்படியாவது இந்த ஒரு வாரத்துக்குள்ள அவனை ட்ரெயின் பண்ணிடுவோம்" சமாதானப் படுத்தினான்.

'ஆனால்..மாஸ்க் போட்டுக்ககணும் கண்டிப்பா' என்று சொல்லி கண்ணடித்தான்.


அடுத்த நாள் காலை..


"கோபி..செல்லம்..அம்மா டாடா போய்ட்டு இதோ வந்துடுவேனாம்..சமத்தா நீ இருப்பியாம்'

சரயு சொல்லிக் கொண்டே

ஹேண்ட் பேக்கை மாட்டிக கொண்டாள்..


"டாடா...அம்மா ..டாடா.." அவள் கையசைக்க..


 கோபி குட்டி வேக வேகமாக அவளோட வெளியே கிளம்ப  தாவினான்.

 

 பாவம்..அவனுந்தான் வெளியே போய் எவ்வளவு நாளாச்சு..ஆனால் குழந்தைகளும் பெரியவர்களும் வெளியே தலை காட்டக் கூடாது என்ற தடையை மீற முடியாதே..


"அவனும் என்  கூட வரணுமாம் பாருங்க.".சிரித்தபடியே சரயு..


" நீ பாட்டி  கிட்ட கொஞ்ச நேரம்.இருப்பியாம்..சரியா..?என்று மழலையில் கொஞ்சினாள்.


ஒவ்வொரு நாளும் வெளியே இருக்கும் நேரத்தை அதிகரித்தாள்.

கிளம்பும் முன்னமே அவனுக்கு கொஞ்சம் வயிற்றை ரொப்பினாள். பக்கத்தில் அவனுக்கு பிடித்த விளையாட்டு சாமானெல்லாம் பரத்தி வைத்தாள்.


" அம்மா..அவன் மேல ஒரு கண் வெச்சுக்கோங்க' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு கிளம்புவாள் சரயு..


' இது ஒண்ணுதுக்கே இந்தப் பாடா?


பாக்கியம் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்..


சரயு வெளியே இருந்து வருவது தான் தாமதம்..

இத்தனை நேரம் அவளைக் காணாத ஏக்கத்தில்  அவளை விடவே மாட்டேன்னு ஒரே அடம் பிடிப்பான் கோபி..


இப்போது ..கொஞ்சம்.கொஞ்சம் மாமியாரிடம் செல்ல ஆரம்பித்திருக்கிறான்


ஆச்சு..எதிர்ப்பார்த்த திங்கட் கிழமை வந்தது....

க்ருஷ் காலையிலேயே போய் விட்டான்..


சரயுவும் ..வேலைக்கு கிளம்பி விட்டாள்..

"பத்திரமா பார்த்துக்கோங்கம்மா.. எதுவானாலும் ஃபோன் பண்ணுங்க". சரயு சொல்லிக் கொண்டே புறப்ப்ட்டாள்.

மனசெல்லாம் வீட்டிலேயே இருந்தது..


அடிக்கடி வீட்டுக்கு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டே இருந்தாள்..


அப்பாடா..ஒரு வழியா வேலை முடிஞ்சு கிளம்பினாள்..


" அம்மா..கோபியை உள்ளேயே வெச்சிருங்க..நான் குளிச்சுட்டு சானிடைஸர் எல்லாம் போட்டுட்டு வர வரைக்கும் என்னை பார்க்க வேண்டாம் அவன்'..


பூனை போல வீட்டுக்குள் நுழைந்து சுத்தம் செய்து ஹாலுக்கு வந்த போது..


ஒரே ஓட்டமாக வந்து அவள் மேல் ஏறி துகைத்து கொஞ்சி..மடியில் படுத்துக் கொண்டு ..அவள் முகத்தையே பார்த்தான் கோபி.


' பாட்டி கிட்ட சமத்தா இருந்தியா ..? Good boy..'

அவள் தன்னோட செல்ல நாய்க்குட்டி கோபியை கொஞ்ச..


 'சீக்கிரமே இவனோட விளையாட ஒரு கேசவ் பொறக்கணும் ...கிருஷ்ணா.. கண் திறப்பா'.🙏🙏.மனதுக்குள் நினைத்தபடி..

 தோசை தட்டை நீட்டினாள்  பாக்கியம்.

உப்மா

 நெட்ல பார்த்த ரெசிபி நாக்கில் ஊற..நாமும் செஞ்சு பார்ப்போமே இத்தனை சிம்ப்பிள் தோசை தானேனு ஜொள்ளுடன்..


millet மூணு மணி நேரம் ஊறினா போதும் கோதுமை ரவையும் ஒரு மணி நேரம் ஊறினா போதும். வெய்யிலில் சீக்கிரம் ferment ஆகி brunch க்கு வித்தியாசமா சாப்பிடலாம்னு ஐடியா.


நடு ராத்திரி எழுந்து ஊற வெச்சாச்சு.

காஃபி குடிச்சு எனெர்ஜி ஏத்தி, மிக்ஸில மில்லட்டை போட..


நேற்று பெய்த சொட்டு மழை..கரண்ட் கட் வேலை நடக்கிறது எப்போ கரண்ட் வரும்னு சொல்ல முடியாதுனு அபார்ட்மென்ட் எலக்ட்ரீஷியன் ஜாலி மூடில்.


சோக கீதம் நான் பாடும் வேளையில் டொக்கென்று விழுந்த watsapp msg.


"'never tell anyone your plans

show them your results ''


என் plan அப்பளமாய் நொறுங்க ..வேறொறு டிஷ் ரெடி ..


அதாங்க உப்புமா..

கைகொடுக்கும் கை..

( உப்புமா breakfast க்கு தான் சாப்பிடணும்நு இல்லை..சரிதானே..)


#holidaymood


வெண்டை கொண்டை வெந்தய தோசை..

 வாங்க சாப்பிடலாம் ..

.வெண்டை கொண்டை வெந்தய தோசை..

VKV dosa..

வழ வழா குழ குழானு இருக்குமோனு பயந்தேன்..வாகாய் எடுக்க வந்த very tasty dosai. (Priya Venkatakrishnan athai..

Raji அத்தை சொல்லித்தந்தது .)

என் சித்தியின்  sister in law சொல்லித் தந்த ரெசிபி....experiment பண்ணலைனா நமக்குத்தான் மண்டை வெடிச்சிடுமே..

வெட்டிப் போட்ட வெண்டை தலையை வைத்து எதாவது ஒரு ஷேப் பண்ணுவோம்..

அந்த வெட்டின தலையை மிக்ஸியில் அரைத்து , ஒரு பாகம் மாவு தனியா எடுத்து இந்த குழகுழாவை கலக்க..

பொங்கி வரும் மாவு..பெரும் சுவையோடு தோசையாச்சு.

ஊத்தப்பமும் சூப்பர்..

வெண்டை வாசம் சுத்தமா வரலை தோசையில்..

#சாப்பாட்டுராமி


soup_dosa

 வாங்க..வாங்க.


சைட் டிஷ் இல்லாமலேயே

அப்படியே சாப்பிடலாம்..


#நான்_கண்டுபிடிச்ச_தோசை.


#soup_dosa



இருந்ததோ ஒரே ஒரு கப்பு தோசை மாவு..

என்ன செய்யலாம்னு யோசிக்க...


சேர்த்தேன்..

1 spoon rava, 2 spoon அரிசி மாவு, 1 spoon கடலை மாவு..

மிக்ஸ் பண்ணியாச்சு


இப்போதான் வருது கதையில twist.


Soup செய்ய வேக வைத்து அரைத்து வைத்திருந்த கோஸ், காரட், வெங்காயம் ,தாக்காளி போட்டு கலக்கினேன் இதை மாவுடன்.


தாளித்தேன் கடுகு,ஜீரகம் ,மிளகு.

கிள்ளிப் போட்டேன் கருவேப்பிலை, கொத்தமல்லி..


கொண்டா..கொண்டா..என்று..

அண்டா காலி😁

பாரம்பரியஉணவு

 #பாரம்பரியஉணவு


"இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்ததாம்..

ஈரோட்டு மாமனுக்கு தொந்தி வந்ததாம்.."

இதுதான் குடும்ப பாட்டு இட்லிக்கு எங்க வீட்ல..


இட்லி தோசையில்லா வாழ்வு என்னது?

சட்னி சாம்பாரில்லா வாழ்வு என்னது?

இதுதான் பாரம்பரிய உணவா?

இதயம் சொல்லி விட்டதா?

சொல் மனமே.....


இட்லி மாவில்லாவிட்டால் ஏதோ கை ஒடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு..

ஃப்ரிட்ஜில் இவர் இல்லாட்டா..வீட்டில் கலாட்டா தான்.


நடுவில் கொஞ்சம் ரூட்டை மாத்தி எல்லாரும் உஜாலாவுக்கு போய்..விவேக் சொல்ற மாதிரி ஜல்லி மாதிரி ஒரு kellogs..அதை பாலில் ஊற வைச்சு தின்னோம்.


எங்க பாட்டி சொன்னா..எங்கம்மா சொன்னா..இப்போ டாக்டரும் அதே தான் சொல்றாங்க..ஒழுங்கா பழையபடி இட்லி தோசைக்கு வாங்க என்று.


இட்லியின்றி இன்பம் ஏது

தோசை இன்றி துள்ளல் ஏது

ஊத்தப்பம் தருமே உற்சாகம்..

மசாலா தோசை மயக்குமே எல்லாரையும்

குழி அப்பம் ..இதுக்கு கூட்டம் ஏராளம்.

சட்னியும் சாம்பாரும்..

சக தோழமைகள்..ஆனால்..

மிளகாய்ப் பொடி இட்லிக்கு

மவுசுதான் என்றுமே..

சத்தெல்லாம் மொத்தமாய் இதிலிருக்க

சொத்தை அழிக்கும்..

வெளி நாட்டு உணவு நமக்கு எதுக்கு?


இன்பம் இன்பம் இட்லி தோசை இன்பம்

படையே வந்தாலும் படைக்க..

சம்படம் மாவிருந்தால் போதும்.

இதுக்கு நான் என்ன ரெசிபி போடறது?

நீங்க எல்லாருமெர் இதில் experts.


புதியன புகட்டும்..

பழமை..என்றும் இனிமை..


வேறென்ன..வேறென்ன வேண்டும்?

வெந்த இட்லியும் சட்னியும் வேண்டும்

மொறு மொறு தோசை வேண்டும்னு..

பாட்டை மாத்துவோம்..

ரூட்டையும் மாத்துவோம்

அளவாய் சாப்பிட்டு ஆரோக்கியமாய் இருப்போம்.

பொறாமை_பாதி_பெருமை_பாதி

 #பொறாமை_பாதி_பெருமை_பாதி



வாட்ஸப்பை பாரு கொஞ்சம்

வார்க்கணும் ரவா தோசை

சேர்க்கணுமா மைதா என்றே

சீக்கிரம் சொல்லு நீயும்..

சீமந்த புத்திரியின் ..குறுஞ்

செய்தியும் வந்ததுவே.


போடு என்றதும்..

போட்டுத் தள்ளிடுவாளே..

பக்குவம் சொல்ல யோசிக்க

ஃபோட்டோவும் வந்தது..பட்டு

பட்டாய் முறுகல் ரவா ..


ஹெல்ப்புக்கு எனக்கு..

ஹெப்பார் கிச்சன் இருக்கு..

ஹாப்பியாய் அவள் சொல்ல

ஹார்ட்டே வெடிச்சதுவே..


என் இடத்தை பிடித்தது

இன்ஸ்டண்ட் ரெசிபிகளுமே..

பொறாமையில் புகைந்தாலும்..

பெருமையாய் இருந்ததுவே.


பின்னோக்கிப் போனேன்.. நானும்

அம்மாவின் குறிப்புகள்

அழகான டயரிக்குள்..

அப்படியே செய்வேன்..

அதிலவள் சந்தோஷம் கண்டேன்.


பிறிதொருனாள்..

மாமியார் சொல்லித் தந்தாரென்று

" வத்தல் குழம்பில்..

வெல்லம் சேர்த்தேனே..நீயும்

செய்து பாரு..சுவையிலே

அது ஜோரு என்றேன்.


வற்றிப் போனது ..அவள்

வதனம் என்றாலும்

வருவோர் போவோரிடம்

பெருமை பேசக் கண்டேன்..


இன்னும் என்ன டிப்பு எல்லாம் கற்றாய்

இன்முகத்துடன் கேட்டாலும்..அங்கே

பெருமையோடு..சிறு பொறாமை கண்டேன்..


கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து moment..

அன்றும் இன்றும்.


அம்மா..அம்மா..தான்

ஹல்வாவுக்கே

 #MMSWEET


ஹல்வாவுக்கே


..ஹல்வா குடுப்போமே நாங்க..


அன்று..

அல்வா கிண்டுவாள் அம்மாவும்

அஞ்சு மணி நேரம் கை விடாமல்..

அவள் பெண் அகிலாவோ..

அஞ்சு நிமிஷத்தில் ..

அசத்திடுவாளே😃


அப்பாவுக்காக வறுத்தேன்

அபாரமாக கஞ்சி மாவு..


கோதுமையை வறுத்து ..பொடிக்க..

கம கமனு வாசனை..


1 டம்ளர் கோதுமைப் பொடி

2 டம்ளர் சக்கரை

1/4 டம்ளர் நெய்...( if you want add extra )


நெய்யில் கோதுமைப் பவுடரை வறுத்தேன்..

சக்கரையும் சேர்த்து பிரட்டி தனியாக வைத்தேன்

Boiled water..

மாவைக் கொட்டிக் கிளறினேன்..


Organic food color , elaichi, cashew add செய்தேன்..


Halwa ready..

வாங்க சாப்பிடலாம்.

 வாங்க சாப்பிடலாம்.

ரொம்ப நாளாச்சு கிச்சன்ல ஒரு experiment பண்ணி..

காலைல breakfast க்காக செஞ்ச சப்பாத்தி மீந்து முழி பிதுங்கி என்னை பார்க்க..

Idea..🙋

சப்பாத்தியை பிச்சு போட்டு ..Mixie ல் ஒரு grind. மோரில் கொஞ்ச நேரம் ஊறல். 

எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பெருங்காயம்,கருவேப்பிலை போட்டு மோர் மிளகாய் நாலைக் கிள்ளிப் போட்டு நல்லபடியா பாத்திரத்தை விடும் வரை கிளற..

சூப்பர் டிஷ் ரெடி.

கூலிங் கிளாஸ் போட்ட மாதிரி ஒரு decoration.

#dishoftheday

#cravingforfoodclub


 Prasadham today- day 2


Gulkhand sweet poha.


அவல் புட்டு பண்ண ஆரம்பிச்சு..


அப்படிக்கா ஒரு U turn எடுத்தேன்.


கொதிக்கும் வெந்நீரில் துள்ளிய அவல் ( ள்)


கொத்து பன்னீர் ரோஜாவில்..

கொஞ்சம் dry fruits சேர்த்த குல்கந்து என்னைப் பார்த்து சிரிக்க..


வா..கண்ணே ..வா..

வரம் தரேன் உனக்கு..

வாய்க்கு ருசியாவாய் எனக்குனு ...சொல்லி..


கலக்க..

..அப்புறம் என்ன?..


கொண்டா..கொண்டா..தான்..நம்ம..

குண்டக்க மண்டக்க டிஷ்ஷுக்கு....


பாயசத்திலும் போடலாம்..கேசரியிலும் போடலாம்..


குல்கந்து..ஒரு குட்டி பந்து..😄😄😄😄😄🌹🌹🌷🌹


இனிப்பரக்கன்

 இனிப்பரக்கன்


..


முதல்ல்...உங்களுக்கு எல்லாம்.ஒரு quiz..

 இது என்ன ஸ்வீட்டுனு சொல்லுங்க பார்ப்போம். ( ஓ..இது ஸ்வீட்டானு உங்க மை.வாய்ஸ் எனக்கு கேட்கிறது)

 ஏதாவது குண்டக்க மண்டக்கனு செஞ்சாலும் மத்யமர்ல ஷேர் பண்ணலைனா..மண்டை வெடிச்சுடுமே நமக்கு..

 

 சரி..சரி..கண்டுபிடிச்சாச்சா..என்ன ஸ்வீட்னு


இனிப்பு..இப்போ பாதி பேருக்கு பெரிய எதிரி..


என்னதான் நாட்டுச்சக்கரை ,வெல்லம் போட்டு adjust பண்ணினாலும்..என் நாக்கு இருக்கே..அது.." சக்கரை ..சக்கரை சக்கரை..போதும் உன் மேல அக்கறைனு" பாட்டு பாடும்.


நேற்று கோயிலுக்கு போய்ட்டு வந்தபோது..

வண்டிக்காரன் கூவிக் கூவி-------------- 

எடுத்துக்கலையோனு கூட்டம் கூட வைத்துக் கொண்டிருந்தார்..என் ஃப்ரண்டு போணியை முடிச்சுட்டு போ..நீயும்..வாங்கு ஒரு பையில் போனால் வராது இது போல டேஸ்ட்டு என்றாள்..

ஐயோ...சாமி..நம்ம வூட்ல ..இது விலை போகாதேனு ..யோசித்த வேளை. பல்பு ஒண்ணு எரிஞ்சது..

Raw வா கொடுத்தால் தானே நோ சொல்லுவாங்க..

'Wah re wah " நு சொல்லற மாதிரி ஒரு டிஷ் பண்ணிடுவோம்..

War ஆரம்பித்தது..நீயா..நானா என்று..


( என்ன கண்டுபிடிச்சாச்சா..)😁


சரிசரி..போஸ்ட்டை முடிக்கணும்..நானே சொல்லிடறேன்..


கோதுமை அல்வா சாப்பிட்டு இருப்பீங்க..

இது..இது..

கொய்யாப்பழ அல்வாங்கோ..( உங்க மை.வா..கேட்கிறது எனக்கு)


2 கொய்யாப்பழம்..( கட் பண்ணிட்டு கொஞ்சமா தண்ணி விட்டு ,குக்கரில் ஒரு விசில் விடவும்)

ஆறினதும்..நடுவில் இருக்கும் seeds  எல்லாம் எடுத்துடணும். மிக்ஸியில் நல்ல நைஸா அரைக்கணும்.

1 கப் பழ விழுதுக்கு 1 டம்ளர் சக்கரை.

4 or 5 teaspoon ghee.

கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் வறுத்து எடுத்து தனியா வைக்கணும்.

இப்போது விழுது+ சக்கரை+ 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறணும்.

Add food color of your choice.

Keep adding ghee. கடாயை ஒட்டாமல் வரும்போது ..greased plate ல் போடவும்.

Half an hour ..cooking time.


அடுத்தது..வேறென்ன..டேஸ்ட் பார்க்கும் முன்னே..டேக்கிடணும் ஒரு ஃபோட்டோ..

முந்திரியும் பாதாமும் என் பொஸிஷன் எது என்று பொலம்ப ஆரம்பிக்க..

வந்தது ஐடியா..

இன்னிக்கு உனக்கு அரக்கன் வேஷம்..

இனிப்பரக்கன் வேஷம்..

( அடப்பாவி..லபக் லபக்கு முழுங்கிட்டு..இப்படி அரக்கன்னு பேர் வைப்பியா?) .


சென்னையில் ஒரு கல்யாண முகூர்த்த சாப்பாட்டில்..இலையில் விழுந்த இந்த டிஷ்.

போய் ரெசிப்பியை கேட்டு வந்தது..இன்னிக்கு உபயோகமாச்சுதில்ல😁

உலக_உணவு_தினம்

 #உலக_உணவு_தினம்


 


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..அது கிடைத்த பின்னாலே பேச்சு வரும்..

சரிதானே..என்னது அதுனு யோசிச்சீங்களா?

Correct ...உணவு ..அதுதாங்க..


காலையில் எழுந்ததிலேர்ந்து ஒரே கேள்வி..

இன்னிக்கு என்ன சமையல்..

இன்னிக்கு என்ன சாப்பாடு..

ஃபோனை எடுத்தாலோ..பக்கத்து வீட்டோடு பேசினாலும்..முதல்ல கேக்கற கேள்வி..' சாப்புட்டாச்சா' ..


இன்னிக்கு உலக உணவு தினம்..

இதைப் பற்றி எல்லாரும் கூகுள் ஆண்டவர் துணையோட வரலாறு கண்டிப்பா தெரிஞ்சிண்டு இருப்பீங்க..


உணவு என்பது ஒரு basic right .

அது இல்லாமல் எத்தனை பேர் கஷ்ட்டப்படறாங்க..

எல்லாம் தெரியும் நமக்கு..


இந்த வருஷ theme.. 

“#Our_Actions_Are_Our_Future.

இதைப் படிச்சதும் எனக்கு தோன்றியது..

சின்ன வயதிலிருந்து நாம் கற்ற ஒரு விஷயம்..' உணவை எக்காரணத்தை கொண்டும் #waste பண்ணக்கூடாது..


எல்லாமே use and throw இப்போது. ஆனால் , காசின் அருமை தெரிந்தவர்கள்,ஒரு விவசாயியின் உழைப்பை அறிந்தவர் யாரும் ஒரு குந்துமணி கூட வீணாக்க மாட்டார்கள்.


எல்லா வீடுகளிளுமே..ரச வண்டியோ..குழம்பு கூட்டு என்று எது மீந்தாலும்..எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி ஒரு சூப்பர் சைட் டிஷ் தோசை இட்லிக்கு ரெடி பண்ணிடுவார்கள் பாட்டி அம்மா எல்லாரும்.


இப்போது மீண்டும் அந்த awareness நிறைய வீடுகளிலும் இடங்களிலும் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.


இந்த வருஷ நவராத்திரியில் நான் கற்றுக் கொண்ட சிலவற்றை ஷேர் பண்றேன்.


நவராத்திரி வந்தது..

எங்கே பார்த்தாலும் சுண்டல் பாக்கெட், 

கலந்த சாத வகைகள், .

என் அபார்ட்மென்ட் தோழிகள் எல்லாரும் மண்டை உடைச்சுண்டோம்..

ஒவ்வொரு பிரசாதமும் பிரமாதம்.

எப்படி வேஸ்ட் பண்றது?

வந்தது ஐடியா..


#சுண்டல்_தோசை புது ரெசிபி கண்டுபிடிச்சோம்.

Collection sundal  and mixed rice எல்லாத்த்கையும் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து..கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து சூப்பர் சுண்டல் தோசை பண்ணி சாப்ப்ட்டோம்.


#வெத்தலை..

அதை கூட விடலை..

வெத்தலையை ஓவனில் வெச்சு எடுத்து

சோம்பு, கல்கண்டு, ஏலக்காய் ,கிராம்பு, எல்லாம் சேர்த்து..மிக்ஸியில் அரைத்து பொடி ரெடி பண்ணி.. 

குல்கந்த் இருந்தால் சேர்க்கலாம்

சூப்பர் #paan ready.


அடுத்து ..நிறைய #எலுமிச்சம்பழத்தோல் சேர ஆரம்பிச்சது..

ஊறுகாய் ஐடியா ரெடி..


ஒரு டப்பால உப்பும் மஞ்சப் பொடியும் சேர்த்து போட்டு ..அதில் இந்த எலுமிச்சம் தோலை போட்டுக் கொண்டே வரணும்.

நல்லா ஊறும்.

பின்..வெந்நீர் ல இந்த எலுமிச்சை போட்டு கொதிக்க வைத்து..ஆறினதும் நிறைய பச்சை மிளகா , இஞ்சி சேர்த்து அரைத்து..

தாளித்து கொட்டி நன்றாக வதக்கி எடுத்து வைக்க..

வகை வகையாய் சாப்பிட்ட வாய்க்கு..தயிர் சாதத்துடன் தேவாமிர்தமாகும்..


இப்படி சின்ன சின்ன டிப்புகள்..நம்மை டாப்புக்கு உயர்த்தும்.

Charity மட்டுமல்ல..conservation also begins at home.


இந்த உலக உணவு தினத்தில்..

உற்பத்தி எவ்வளவு முக்கியமோ..

உட்கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ..

அதை விட முக்கியம்..

உணவில் ஊதாரித்தனமாக இல்லாமல் இருப்பது..


Taste bhi..health  bhi and no waste bhi..

Curfew_சமையல்

 #Curfew_சமையல்..


'க' வும் "கொ'வும்..சேர்ந்த கர்ஃப்யூ சமையல்..


அது என்ன க..கொ..

கடலை மாவு..

கொத்தவரங்காய்..

அதான்..


"கொதிக்கும் எண்ணெயில் என்னைத் தவிக்க விடுவாய்..

கொஞ்சம் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசுவாய்..

இதற்குத்தானா நான் ஆசைப்பட்டேன்..

காயிலும்,குழம்பிலும் என்னைச் சேர்த்து ..

கரையேற்ற மாட்டாயானு 

கடலை மாவு கண்ணீரும் கம்பலையுமா..ஒரு பக்கம்..


ஏற்கனவே..நான் வத்தல் தொத்தல்..

இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்துண்டு இருக்கணுமோ..தெய்வமே என்று..

கொத்த"வரங்"காய்..வரம் கேட்க..


"கொத்தவரங்காய். ..அதுக்கு டிமாண்டு இல்ல..


என் மனசு ஒண்ணும் ரொம்ப கல்லு இல்லை..' 


என்று ஆறுதலாய் நான் எச பாட..


இந்த #க வும் ,#கொ வும் கைக்கோர்த்து..

கூட்டணி அமைத்து..


கொத்தவரங்காய்..இனி..

நம் குடும்பத்தில் ..

ஓர் காய்னு... ஆன நாளிது..


வித வித size ல் நறுக்க..

வெரைட்டி..guarantee..


நீளவாக்கில் கொஞ்சம்..

பொடிப் பொடியா மீதி..


#கடலைமாவு கரைச்சு விட்ட #கொத்தவரங்காய்_மோர்க்குழம்பு

#கடலைமாவு_கொத்தவரை_பொரியல்..

#கொத்தவரை தேங்காய் பொரியல் (அப்பாவுக்கு)


#மோர்க்குழம்பு


நீள வாக்கில் நறுக்கினதை..லேசா உப்பும்,சக்கரயும் ,மஞ்சளும் சேர்த்து கலந்து வைத்து..

ஒரு அரை மணி கழிச்சு..தாளிப்பில் நன்றாக fry பண்ணி ,தனியாக வைத்து விடவும். ( உங்க கிட்ட வத்தல் இருந்தால் ஓகே..ஆனால். Fresh fry இன்னும் 😋 )


இப்போ தயிரை தண்ணி விடாமல் கடைந்து..அதில் 

#ஒரு_ஸ்பூன்_கடலைமாவு, ஒன்றரை ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகி தயிரில் கலக்கி..

பின் கடாயில் , தாளிப்பிற்கு பின் இந்தக் கலவையை தண்ணி கொஞ்சம் தாராளமா ஊற்றி கொதிக்க விடணும்..

1 டம்ளர் தயிருக்கு...ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.

கடைசியில் ..வறுத்து வைத்து இருக்கும் கொத்தவரங்காய் அப்படியே மேலே தூவ..

கர கர மொறு மொறு ..மோர்க்குழம்பு ரெடி


#கடலைமாவு_கொத்தவரை_கறி..

எங்க பாட்டி special.

தாளித்து, வெங்காயம்  வதக்கி விட்டு,

வெந்த கொத்தவரையையும் சேர்த்து கடலை மாவை கொஞ்சம் semi solid பதத்தில் கரைத்து வைத்து..

அப்படியே அந்த காயில் சேர்த்து நன்றாக கலப்பாள்..


ஆஹா..கொத்தவரையும் கடலை மாவும்..


"நீயும் நானும் இன்று

 கைகள் கோர்த்துக் கொண்டுனு" டூயட் பாடிண்டே..

"வாழ்வின் எல்லைக்கே' நம்மை கொண்டு போகுமாக்கும்.


#தேங்காய் போட்ட பொரியல் எப்போதும் போல..


பருப்பு உசிலி பண்ணலாம்..பக்கோடா பண்ணலாம்..பொரித்த கூட்டு பண்ணலாம்..புளியிட்ட கூட்டு பண்ணலாம்

புளிக்குழம்பில் போடலாம்..இன்னும் இன்னும்..


எது செய்தாலும் இப்போ கொண்டா கொண்டானு சாப்பிடும் நேரம்.

இது தான் சமயம் நமக்கு..

Fast food லேர்ந்து மீண்டு..

நம் பாரம்பரிய feast food க்கு 

நம் குடும்பத்தினரை கூட்டிச் செல்வோம்..


Curfew ஒன்றே..

Cuisine ம் ஒன்றே..


"


சவாலே_சமாளி

 #crisis_management

#சவாலே_சமாளி

#அம்மா_கணக்கு


கல்யாணம் ஆகி டெல்லி போன புதுசு. வீட்டுக்காரர் bachelor accommodation ல் தங்கி சங்கரன் என்பவர் போடும் தயிர் சாதம் இட்லி பொட்டலத்தோடும் காலையும் மத்யமும் போக, சாயந்தரம் அவர்கள் நள பாகம். 


" பீட் ரூட், கோஸ், டிண்டா நு ஊரில் இருக்கும் அத்தனை காயும் போட்டு ஒரு ஓஹோ சாம்பார் இவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த நேரம்..


' மணமகளே..மணமகளே' நு டில்லி ஸ்டேஷனில் வந்து என்னை ஒரு பெரிய நட்பு வட்டம் வரவேற்றது.

எனக்கு at a stretch அஞ்சு பேருக்கு தான் சமைக்க தெரியும்.

அதுவும் வூட்டுக்காரர் ரொம்ப நல்லவரு. எதை போட்டாலும் சாப்பிட்டுடுவார். 


so எல்லா ஞாயித்துகிழமையும் turn போட்டு , காய்ந்து போன வயிறில் ஒரு ஐந்து வயிறு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் படும் ,என் சின்ன கரோல் பாக் வீட்டில் "சாப் பா டுப்போ டப்படும்". 


மாமி..நாளைக்கு நம்ம வீட்ல பூஜை.திருநெல்வேலி லேர்ந்து எங்க குரு வரார். சமையல் நீங்க தான்."

ஃபில்டர் காஃபியை உறிஞ்சபடி இவர் ஃப்ரண்ட் சுந்தரம் ஒரு சனிக்கிழமை சாயந்திரம் வந்து சொல்ல..


அந்த மாமி வேற யாரு..சாட்சாத் நாந்தேன். (என்னை விட பெரியவர் எல்லாம் என்னை மாமினு கூப்பிட்டு என் இதயம் சுக்கு நூறாக வெடிக்கும்.. )

என்னடா இது ..இந்த அகிலாவுக்கு வந்த சோதனைனு சிவாஜி மை.வா வில் டயலாக் அடிக்க..

ஆஹா..பேஷா பண்ணிடலாமேனு கொஞ்சம் நடுக்கத்தோட தலை ஆட்டியாச்சு.


ஞாயிற்றுகிழமை காலையில் ..அவங்க வீட்டுக்கு போனால்..ஒரு ரூம் ஃபுல்லா கோஸும்,காரட்டும், கத்திரி,உருளை 🍅, பச்சை மிளகாய் நு ஒரு சின்ன கொத்தவால் சாவடி பார்த்ததும் ஒரே திடுக்.

"சுந்தரம்..எத்தனை பேர் சாப்பட போறாங்கநு கேட்க..

மாமி..just ஒரு 50 இல்ல 60 பேர் தான். casual  ஆ சொல்லிட்டார்..

நான் causality போய் admit ஆகிடுவேனோனு ஒரே டென்ஷன்.


எங்கேர்ந்து ஆரம்பிக்கறதுனு புரிலை.

சரி..பாயசத்திலேர்ந்து ஆரம்பிப்ப்போம்நு யோசிக்க..ஒரு 20 பாக்கெட் (பக்கெட்)் பால்..ஒரு 5 பாக்கெட் சேமியாவை நீட்டி ..' இது போதுமா..மாமி..இது போதுமானு கேட்க..

நமக்கு ஒரு குண்டானுக்கு மேல செய்ய்த் தெரியாது.ஆனால் இவங்க ஒவ்வொருத்தரும் ஒரு குண்டான் குடிப்பாங்களே..அம்பாளே என்னைக் காப்பாத்துனு களத்தில் குதிச்சேன்.. 


so கணக்கு போட ஆரம்பிச்சேன். 4 பேர்ருக்கு இத்தனை பால், சக்கரை, சேமியா,ஏலக்காய் போட்டு பண்னணும்னா என்ன அளவோ ..அதை 60 க்கு மாத்தினேன்.

அரை கிலோ முந்திரி மிதக்க ..ஒரு சூப்பர் பாயசம் ரெடி.


பெரிய டென்ச்ன் காய்கறிதான்.ஃபோன் எல்லாம் இப்ப மாதிரி கிடையாது ..

அப்புறமென்ன..

எப்படி செய்யப்போறேன்னு நினச்சப்போ..ஒரு அறிவு பல்பு எறிஞ்சது..

அதுதான் " அம்மா..கணக்கு'.


கூட்டுக்கு, கறிக்கெல்லாம் அம்மா சூப்பரா கூறு கட்டுவா..பத்து பேர் சாப்பிட வராங்க என்றால்..

கறி செய்யணும்னா..ஒரு கப் அளவுக்கு ஒருத்தருக்கு காய் ..with added தேங்காய்..


அதே கூட்டு. என்றால் பாதி காய் போதும் மீதி பருப்பு தேங்காய் அரைச்சு விட.. கரெக்டா இருக்கும்னு அம்மா கன கச்சிதமா..மீறாமல் அதே சமயம் எல்லாரும் நிறைவா சாப்பிடற மாதிரி செய்யறது ஞாபகம் வந்தது.


அடி தூள்..

பாயசம், பச்சடி, தண்ணி காண்பிச்ச வடைக்கு..கொஞ்சம் உருளையும்,கோஸ் காரட் போட்டு வெஜிடபிள் வடையாக்க..

பெரிய அண்டாவில் சாம்பார் ரசம், அப்பளம்..


பூஜை நடக்க..நடக்க..டென்ஷன்..

இலை போடப் போறோமே..taste பண்ணாத சாப்பாடு..


பரிமாறி முடிஞ்சு குருஜி பாயசத்தை ஒரு சொட்டு வைத்தவர் ' மதுரமாயிட்டு' என்றார். நான் சுந்தரத்தை பார்க்க..' மாமி..ஜெயிச்சுட்டேள்..அகிலா..நீங்க ஜெய்ச்சுட்டேள்' நு ஒரே பாட்டு பாட.. குருஜி "அந்த அம்பாளே வந்து பிறப்பாள் உனக்கு'னு ஆசிர்வாதம் செய்தார்.


அப்பொ என் பெரிய மகளை conceive ஆன நேரம். எப்படி இப்படி வேலை செஞ்சேனு எனக்கே ஆச்சரியம்


ஒரு சொட்டு மீதியாகாமல்..எல்லா. ஒட்ட காலி பண்ணியாச்சு.


இது ஜூலை மாதம் நடந்தது. சுந்தரம் செப்டம்பர் மாதம்  சென்னை போய் எங்கம்மாவை பார்த்தபோது..' எங்கம்மா ..தன் சமையல் technique எல்லாம் பேச்சு வாக்கில் எடுத்துவிட..ஒரு look விட்ட அவர்..

' அங்கே வந்து பாருங்க..எங்க மாமி ஒன்ணு இல்ல..ஒரு படைக்கே சமைச்சு போடறாங்க என்று சொல்ல..


' அன்று சாயந்திரமே பக்கத்து வீட்டு ஃபோனில் கூப்பிட்ட அம்மா..அடிப்பாவி.. மாசமா இருக்கும்போது இப்படி ஏதாவது பண்ணலாமா என்று ஏகமாய் திட்ட..


.ஒவ்வொரு நாளும் ஒரு சவாலோடு வாழ்க்கை..


பல ஊர்களில்..பல நெருக்கடிகளில்..


ஆனால்..ஒரு extra பெயருடன்..அகிலா என்றால் அன்னபூரணி என்று.


"

மாத்தி_யோசி

 #curfew_சமையல்..

#மாத்தி_யோசி


..


பிரிக்க முடியாத எது?

சேர்ந்தே இருப்பது எது..?

அகிலாவும் கிச்சனும் தான் ..வேறென்ன..?


"நாளை ..நாளை ..நாளை என்று என்னை வெறுக்காதே..என்னை வெறுக்காதேனு.."

ரஹ்மான் பாட்டிலே..முட்டை கோஸ் முகாரி பாட..


இரு..மாத்தி யோசிக்கறேன்ப்பானு சொல்றதுக்குள்ள..


"என்னை கண்டாலும் தொடுவாரில்லைனு'

விஜயகுமாரி மாதிரி..விம்மி விம்மி  கோஸ் அழ ஆரம்பிச்சது..


"எனக்கொரு identity வேணுமடானு..' போர்க்கொடி  வேற தூக்க ஆரம்பிச்சது..


#மாத்தி_யோசி..

வந்தது ..மத்தாப்பாய் ஐடியா..


Curfew இருந்தாலும் இல்லாவிட்டாலும்..

கைகொடுக்கும் கோஸே..

கொடுப்பேன் உனக்கொரு அட்ரஸே..என்று அகிலா சூளுரைத்தேன்..


கோஸ்னு  சொன்னதுமே..

டோஸ் விழும் நமக்கு..


Cabbage நு சொன்னதுமே.

Baggage தூக்கி கிளம்பிடுவாங்க..


கோஸ் கறி இன்னிக்குனு சொன்னதுமே..

Cold war ஆரம்பிக்கும்..


கோஸா...கோச்சுண்டு..வெளினடப்பும் நடக்கும்..


சரி..#சூப் செஞ்சு கொடுத்தால்...பசியை அது கிளறிவிட்டு..பகாசுரனாகிடுவார்.


#பொரிச்ச_கூட்டு தட்டில் நீட்டும் முன்னே..

பொரிஞ்சு தள்ளுவார்.


#மோர்க்கூட்டு....#yeh_DIL_nahi_maange  more நு..போருக்கு ரெடியாவார்..


#Cabbage_rice நு பெயர் சூட்டி விழா எடுக்க..கொண்டா கொண்டானு காலியாகும்..


#Cabbage_வடை..தடையில்லாமல் உள்ளே தள்ளப்படும்..


#கோஸ்_தயிர்_பச்சடி..இதுக்கு கொஞ்சம் அடிதடி உண்டு..


#கோஸ்_துவையல்..உப்பு,புளி, தேங்காய்..சொட்டு வெல்லம் வெச்சு அரைக்க...முட்டைக் கோஸ் மேல ஒரு மையல் வரும்..


 ஒரு புது முகவரி கிடைத்தது ..

 முட்டைக் கோஸுக்கு..

#கோஸ்_besan_curry.


(Besan- கடலை மாவு😀)


கோஸ்..நீளவாக்கில் நறுக்கி

Onion...நீள வாக்கில்

Carrot..நீளமா துருவி..


உப்பும் கொஞ்சம் சக்கரை மஞ்சப் பொடி போட்டு கலந்து வெச்சேன்.


அரை மணி நேரம் கழித்து..


1 spoon ..besan

Mirch powder, 1 spoon suji, (if you like ..add garam.masala, ginger paste)

Mix all these.

Now add the cabbage mix in this .


Then in non stick kadai..with less oil..you will get yummy sabzi.


அப்படியே சாப்பிடலாம்..you can eat with rice, chapathi, chapaththi roll..

or spread on dosai.

Stuff and make bonda.

So, கோஸ்னு ..சொன்னதும்..இப்போ பேஷ் பேஷ் தான்.


கோஸுக்கொரு மவுஸு வந்ததென்ன..!!

கொண்டா கொண்டானு சாப்பிட்டதென்ன?

Monday, November 28, 2022

குணம்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#குணம்..


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்..


கரெக்ட் தாங்க..இதுல பிரச்சனை என்னன்னா..

நானு.. மத்தவங்க  குணம் என்னதுனு நாடி பிடிச்சு பார்க்கற வர்க்கமுங்க..

அதனால் தான் என்னவோ..


என் குற்றம் என்னனு..நாடி பிடிச்சு பார்க்கறவங்களையும்..கடந்து போக முடியுது..


உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்கும்..

" எதுக்கு ரியாக்ட் பண்ற..உன் குணத்தை ஏன் மாத்திக்கறனு.."..

கரெக்ட்தானே..!!!


பாராட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..சின்னச் சின்ன சந்தோஷங்கள் தரும் பாராட்டுக்களை அள்ளி வீசுவதில் கஞ்சத்தனமே கிடையாதுங்க..அதுனால் எப்பவுமே குட்டீஸ் எல்லாம் என்னை சுத்தி வருவாங்க..ஜாலி ஜாலிதான் எப்பவும்..😃👍


பணத்தை அள்ளிக் கொடுக்கறேனோ இல்லையோ..நான் பண்ணும் பண்டங்களை 🍩🍰🍰🍿🍜🍛அள்ளிக் கொடுப்பேன்..யான் பெற்ற இன்பம்..கொடுமைக்கார குணம்ங்க..😀


வீட்டில திட்டு வாங்கும் ஒரு கெட்ட குணம்..'

ஏதாவது விஷயம் யாராவது சொல்லவந்தால்.. "அதான் தெரியுமேனு'.. சொல்லிட்டு..கொஞ்ச நேரம் கழித்து..

" என்னம்மோ சொன்னீங்களே ..' திருப்பி சொல்லுனு கேட்பேன்..

ரொம்ப கெட்ட குணம்..


Learn to say no..கண்டிப்பா இந்தக் குணம் தேவையென்றாலும்..சுட்டு போட்டாலும் வர மாட்டேங்கிறது..


என்னோட நாற்பதாவது வயதுக்கு வாழ்த்து சொல்ல அப்பா ஃபோன் பண்ணினார்.. ' இது பாரும்மா..இனிமே தான் உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு..அமைதியா இருக்கணும், அவசர புத்தி கூடாது..ஆழ்ந்து யோசித்து எந்த முடிவும் எடுக்கணும்..அகலக்கால் எடுத்து வைக்கக்கூடாது..' 

அன்று புரியாதது..நாளாக நாளாக சுர்ருனு உரைக்க ஆரம்பிச்சது..

உன்கிட்ட இதெல்லாம் சரி பண்ணனும்னு அப்பா சொல்லி இருந்தால் சண்டை தான் வந்திருக்கும்..ஆனால் அவர் சொன்ன விதம் இருக்கே..என்னோட எத்தனையோ குணங்களை எடை போட்டு..பலம் பலவீனம்னு பிரிக்க உதவியது.


குணம்..சில மாறும்..சில மாறவே மாறாது.


எந்த மாற்றமும் நன்மைக்காக இருக்கணும்..


எது மாறினாலும்..unconditional அன்பு மட்டும் மாறக்கூடாது என்று பிரார்த்தனை எப்போதும் உண்டு..


அரக்க குணம் கிடையாதுங்க..

ஆசை அளவோடு உண்டுங்க

இரக்க குணம் உண்டு..

ஈகையும் கொஞ்சம் உண்டு..

உண்மை பேசும் குணம் உண்டுங்கோ

ஊக்கமளிப்பதும்..உண்டுங்கோ

எதிர்ப்பார்க்கும் குணமுண்டுங்கோ..

ஏளனம் செய்யும் குணமில்லைங்கோ..

ஐஸ் வைக்கும் குணமில்லங்கோ

ஒத்துப் போகும் குணமுண்டுங்கோ..

ஓசியில் குளிர்காயும் குணமில்லங்கோ..

ஒளவியம் பேசற குணமில்லைங்கோ..


நம்ம குணம் எது..குற்றம் எது என்று தெளிவு பிறக்கவே காலம் போதவில்லை என்ற நிலையில்..


தெரிந்த முகங்கள் பல என்றாலும்..தெரியாத குணங்கள் ஏராளம் இருக்கும் நிலையில்


எப்பப்பாரு ஒரு weighing machine தூக்கிட்டு அலையக்கூடாதுங்க..

எல்லாரையும்.அவங்க அவங்க ப்ளஸ் மைனஸுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்  வளர்த்துக் கொள்ள..

நம்ம இந்தக் குணம்..சில மாற்றங்களை அவர்களிடத்தில் தானாகவே உருவாக்கும்.


அவ்வளவுதான்..

குணம்..nature


பிறவிக்குணம் சிலவற்றை மாற்ற முடியாது என்றாலும்..

பிறகு வந்து ஒட்டிக் கொள்ளும்.குணங்களை..கொஞ்சம் கவனித்தால் ..வாழ்க்கை சொர்க்கம்ங்க..


பூதக் கண்ணாடிகள் கொண்டு..மற்றவர் குணம் குற்றம் காணுமுன்..

ஒரேஒரு முறை..நிலைக் கண்ணாடி முன் நின்று..' என் குணம் சரியா?' ..என்று கேட்டுக் கொள்வோமே..

சென்னை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#சென்னை

காவேரிக்கரையில் பிறந்து..கூவம் நதிக்கரை வந்து சேர்ந்தபோது குழப்பம் தான் ரொம்ப அதிகம்.


படபடக்க வைத்த பட்டிணம் தான்..கூட்டுக்குள் புழுவாய் இருந்த என்னை..பட்டாம்பூச்சியாய் பறக்க வைத்தது நம்ம மெட்ராஸ் தானுங்கோ..


குரோம்பேட்டை ராதா நகருக்குள் ஒரு #மினி_இந்தியா

#பாரத_விலாஸ்


 குருவிக்கூடு வீடு தான் எங்கள் சொர்க்கம்.

சுருள் மாடி வீடு  ..சிம்ப்பிள் அடையாளம்.

மூன்றடுக்கு மாடி..


One India அப்போதே கண்டேன் அங்கிருந்த ஒன்பது வீடுகளில்..


சுந்தரத் தெலுங்கு கேட்கும் ஒரு வீட்டில்..

மலையாள மணம் வீசும் ஒரு வீட்டில்

மார்வாடி ஆண்ட்டியின் சப்பாத்தி சப்ஜியின் மணம் இன்னொர் வீட்டில்..

தம் ஆலு காந்தமாய் இழுக்கும் ஒரு வீட்டில்..

பிஸுபேளா..ப்ளேட்டில் தருவர் ஒரு வீட்டில்..

அன்புக்கு பஞ்சமில்லை..

பயமொன்று இருந்ததே இல்லை..


#கற்றதும்_பெற்றதும்_ஏராளம்.


வீடு பெரிசா இருந்தாலும் மனசு சின்னதாக இருக்கும் இந்த உலகத்தில்..

வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தகளை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி தன் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட வீட்டுக்கார மாமியின் #வாத்ஸல்யம்.


பாட்டியின் புடவைத் தலைப்பில் ஒளிந்திருந்த நாட்கள் போய்..

வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்த பட்டணம் இது.. என் வாழ்வில் #பட்டறையாய்..


பரீட்சையில் மார்க்கு வரதுக்கு முன்னாடி..ராமாஞ்சனேயர் கோவிலும்..ஸ்டேஷன் ரோட் பிள்ளையார் கோயில் என வளர்ந்தது #பக்தி.


மாம்பலம் போவது என்றால் #Manhattan போன ஸ்ரீதேவி மாதிரி..ட்ரெயின் ஏறி..foot board நின்று காற்று வாங்கிய #சந்தோஷம்.


சங்கீதம் என்பது ஸ்வரங்களின் ஜாலம் மட்டுமல்ல...அது ஒரு #தியானம்

என்று சொல்லிக் கொடுத்த வீணை மாமி.


வடாம்களுக்கு காவலோடு..விடலை அக்கா அண்ணாக்களுக்கு.. மெசெஞ்சர்..ஸ்பை..எல்லாமே எங்க வாண்டு க்ரூப்பு தான்.

அந்தக் கால 'அஞ்சலி' படம் போல எங்கள் அட்டகாசமான கூட்டம்.


நட்பு வட்டம்..நட்பு சங்கிலி..துவங்கியது இங்கே தான்.


Restaurants அப்போதெல்லாம் ஒன்று கூடகிடையாது..swiggy க்கு எதிர்பாக்காது ரெஸ்ட்டே எடுக்காமல் ..

அம்மாக்களின் கைமணத்திலும் காரியங்கள் கற்றபடி #வளர்ப்பு.


'வெற்றி'யின் வாசலில் அடிக்கடி நின்றதாலோ என்னவோ..

MIT..மண்ணைக் கூட மிதிச்சதில்லை.


முக்கியமாக..

வாழ்க்கையில் கடல் தண்ணீர் தவிர..உப்பு தண்ணீர் என்பது பைப்பிலும் வரும் என்ற உண்மை புரிய ..

ஒரு குடம் நல்ல தண்ணிக்கு...நடையாய் நடந்தது...தண்ணீர் சேமிப்புக்கு வித்தானது..


கிரோம்பேட்டை ..குறும்புடன் கூடிய கதம்ப வன வாச எண்ணங்களுடன் இன்றும் மனசில் .


எத்தனை வரவேற்புகள், எத்தனை வழியனுப்பதல்..கண்ட இந்த எங்க குடும்பத்து ஸ்டேஷன் இந்த கிரோம்பேட்டை ஸ்டேஷன்.


என் வாழ்க்கைப் பயணமும் தடம் புரளாமல்  சில நேரம் கூட்ஸ் வண்டி போலவும், சில நேரம் தடக் தடக் பயணமாக இருந்தாலும் இலக்கை அடைந்தே தீரணும்னு திடம் தந்த புடம் போட்ட இடம்.


புலம்பலில்லை..பொழுது போனதே தெரிந்ததில்லை.


க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்ததால்  இந்தப் பெயர் வந்தது என்றால்..அவர்கள் தள்ளி விட்ட கழிவு நீர் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஒரு காலத்தில் என்பது ஒரு வருத்தமே..இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.


கிரோம்பேட்டை க்கு #கும்மி அடித்து ஒரு #குறவஞ்சி பாடிட ஆசையும் தோணுது..

என்(அவர்)பேச்சிலர்_டேஸ்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#என்(அவர்)பேச்சிலர்_டேஸ்


ஏங்க..ஏங்க உங்க் பேச்சிலர் டேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...ஏதாவது விஷயம் மாட்டுமானு ஜொள்ளு விட்டபடி நான் கேட்க..


படு உஷாரு. ஐத்தான் படு உஷாரு..😄


கரோல் பாக்கில..அந்த கரோல் பாக்கில..எங்க பேச்சிலர் மேன்ஷன்ல..


ம்ம்ம்ம்..மேல சொல்லுங்க..கறுப்பா செவப்பா..சீக்கிரம் சொல்லுங்க..


இரும்மா..உனக்கு எல்லாத்துலயும் அவசரம்.

எங்க  ரூம்லே அஞ்சு  பேர் இடுக்கி இடுக்கி படுக்க..ஒருத்தர் எழுந்தா தான் நடக்கவே இடம் கிடைக்குமா..அப்போ..

காலையில் அந்த ரூம் ஜன்னல்லேர்ந்து....


ஜன்னல்லேர்ந்து..ஜன்னல்லேர்ந்து..


..பஞ்சாபியா..உ பி யா..டில்லியா..???


இரும்மா..முதல்ல சுந்தரம் எழுந்து எட்டிப்பார்ப்பானா..டேய் நகருடா..நான் பார்க்கறேன் நீ போய் உன் வேலையைக் கவனினு ராகவன் வெரட்டுவானா..?


ஏங்க..இப்ப அதுவா முக்கியம்?


சொல்ல விடலைனா எப்புடி..?


அதாங்க..அந்த விடலைப் பருவம்..சொல்லுங்க..சொல்லுங்க...


உன் டைம் ஸ்லாட் ஓவர்..noida பஸ்ஸு போய்ட்டா அப்பறம் நாய் பாடு தான்....என் டர்ன் இப்பொ..டிப் டாப்பா ராஜகோபால் சார் வந்து அவரோட கூலிங் க்ளாஸை அட்ஜஸ்ட் பண்ணி உட்காருவாரா....


" இவருக்குத் தான் இன்னிக்கு அதிர்ஷட்டம் அடிக்கப்போறதுனு..

கற்பூர ஆரத்தியுடன்..மூர்த்தி  வருவானா? 


வியாழக்கிழமை..கண்டிப்பா இன்னிக்கு மஞ்ச கலர் தான்..ஒரு பெரு மூச்சுடன் எட்டிப் பார்ப்பானா?..

" டேய்..டேய்..நேத்துதானே டா..அது..இன்னிக்கு பார்..மல்டி கலர்ல சும்மா தகதகனு...'..

" இல்லவே இல்ல..பெட் கட்றேன் ..இன்னிக்கு என் ஃபேவரிட் கலர் வொயிட் தான்..'..சுந்தரராஜன் சூ மந்திரக்காளி சொல்வானா..


ம்ம்ம்ம்ம்..சீக்கிரம்..சீக்கிரம்....எனக்கு ஹார்ட்டே வெடுச்சும் போல இருக்குப்பா.


எட்டடிக்க இன்னும் only 60 seconds இருக்க..

அந்த ரூமில்..லப் டப் லப் டப் சத்தம் மட்டுமே. கேட்க...

கடிகார முள் எட்டு நெருங்க..

சரக் சரக் சத்தம்...

வந்தாச்சு..வந்தாச்சு..

பல கண்கள்..அந்த ஜன்னல் ஓரத்தில் எட்டிப் பார்க்க..

யார் மீது  வீசப் போகிறதோ...இன்று..


ஐயோ.சஸ்பென்ஸ் தாங்கலைப்பா..

கடைக்கண் பார்வைதனை கன்னியர் காட்டி விட்டால்.மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்..இல்ல.....

சே..என்ன லைஃப் ப்பா..


இரு..இரு..ஸ்டாப் ஸ்டாப் ..

இங்கே கன்னியர் எங்கே வந்தா..?..ஒரு பெரிய குண்டை அவர் போட..

.' இல்லயா பின்ன..இன்னும் என்ன ஒளிவு மறைவு?..


" எங்கே நிறுத்தினோம்..ஜன்னல் பின்னாடி...?..


ம்ம்ம்ம்ம்ம்..அப்புறம்..

" சார்..தயிர் சாதம்,புளி சாதம்,லெமன் இருக்கு..


மையலோடு ஏதோடு சொல்லப் போறார்னு பார்த்தால்....

பார்த்தால்..


வேற யாரு..நம்ம சாப்பாடு பொட்டலம்  சங்கரன் ..

 அங்க நிப்பாம்மா..'..


நீ வேற வீணா எதேதோ கற்பனை பண்ணிண்டு..


"இட்லி போடவா சார்..?'


"சங்கரா..உன் இட்லியை தூக்கிப் போட்டு..இந்த செவுத்துள்ள ஓட்டை போட்டுடாதேப்பா..வூட்டுக்காரனுக்கு பதில் சொல்லணும்னு.. ராகவன் ஓடி வந்து மிஸ் பண்ணாமல் அந்த பொட்டல கேட்ச் புடிப்பாரா..ஏன் கேக்கற..


பொட்டலம் கையிலே..புத்தியோ..பஸ்ஸை பிடிக்கும் ஓட்டத்திலே.


இதுல ஃபிகரு எங்க..கலரு எங்க..?  கட்டபொம்மன் வசனம் பேசிக் கொண்டே போக..


அதுசரி..டபாய்க்காதீங்க..அத்தனை கண்ணிலும் உங்க கண் மிஸ் ஆறதே..அப்போ..அப்போ...நீங்க..நீங்க..

நான் கண்ணை கசக்கி..சந்திரமுகியாக..


" அப்படியெல்லாம் என்னை முறச்சு பாக்காதேம்மா..நான் ரொம்ப நல்லவன்..'. 


கரெக்டா அந்த நேரம்..

' பச்சை நிறமே..பச்சை நிறமே.." என் மொபைல் பாட..


ஆஹா..கரோல் பாக் பாலாஜி..

" பாலாஜி ..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்னு ' ..முதல் மரியாதை ஸ்டைலில் நான் பேசிக் கொண்டே போக..

' மாமி..ராமசாமி சார் பத்தி அப்படியெல்லாம் நினக்காதீங்க..இத்தனை களேபரத்திலும் அவர் இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருப்பார்..

சங்கரன் குரல் கேட்டதுமே..ஃபாக்டரி சங்கு ஊதினாப்போல..பத்து நிமிஷத்தில ரெடியாகி..சார்ட்டர்ட் பஸ்ஸுக்குள்ள போய் உட்கார்ந்துடுவாரு..அவரைப் போய் நீங்க..'...


ஏம்ப்பா..கரோல் பாக்,அஜ்மல் கான் ரோடு..ஆயிரம் வசதிகள் இருந்தும் உனக்கு ஒரே ஒரு ஆள் மாட்டலையாப்பா..நான் கேட்டது தான் தாமதம்..

" ஊர்ல ஜோஸியர் அம்மாகிட்ட  சொல்லிட்டாராம்..சிங்கப்பல்லோட சிங்கப் பொண்ணு ஒண்ணு வரப்போறா உன் குடும்பத்துக்கு மருமகளானு.. அப்புறம் எங்க..மானு மயிலுனு தேடறது..'..


என்னப்பா இது..உங்க பேச்சிலர் லைஃப் இப்படி சப்புனு போச்சு..'..


என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலைனு அவரோட எக்ஸ்பிரஷன்..😄😄😄😄


ஆனால் ஒண்ணுங்க..

அந்த பேச்சிலர் மேன்ஷன் நுழைஞ்சதுமே..

அப்படியே மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கும்..


ஒரு பெரிய அலுமினிய அண்டால..கோஸ் ,பீட்ரூட்,வெங்காயம் ,தக்காள்,முருங்கை,கீரை,பூசணி பரங்கி.. ஒரு மார்க்கெட் காய்கறியுமே ஒரே சாம்பாரில் மிதக்கும்..


பூண்டும் மாங்காயும் ரசமாக ..கொத்தமல்லி கருவேப்பிலையுடன் மிதக்கும்..


கிண்டலும் கேலியும் கும்மாளம் கலகலப்புனு  வெளியே தெரிந்தாலும்.


தங்கை கல்யாணம் செய்யணும்,அம்மாவை கவனிக்கனும், வீடு கட்டணும், மனைவிக்கு பணம் அனுப்பணும், அதைவிட ஊருக்குப் போக பணம் சேர்க்கணும்னு ..அவர்கள் மனக் கவலைகள் எப்போதாவது வெளியே வரும்..


சரி இந்தக் கதை தான் புஸ்ஸுனு போச்சு..

தம்பிக்கு மெசேஜ் பண்ணினேன்..

' டேய்..உன் பேச்சிலர் டேஸ் பத்தி....' 


பேச்சிலர் டேஸ் பத்தியா..எனக்கு பத்திக்கிட்டு வருது..

காலேஜ் டேஸ்லயும் உனக்கு காவலாப் போயே நேரம் போச்சு..

வேலை கிடைச்சு டெல்லிக்கு போனால்..எனக்கு முன்னாடியே அங்கே போய் நீ செட்டிலாகிட்ட.. இதுல பேச்சிலர் லைஃபா..பிச்சு புடுவேன் பிச்சு..'..


ஆத்தா..இறங்குனு..நான் மெசேஜை நிறுத்த..


' என் வாழ்விலே நீ வந்தது விதியானால்...நீ எந்தன் உயிரன்றோ'...பாட்டு ..டீவில வூட்டுக்காரர் பார்த்துக்கிட்டு இருக்காரு..😄😄😄😄


.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..

 #சும்மா_ஒரு_ஜாலி_போஸ்ட்


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..


POTW கிடைத்த சந்தோஷத்தில் ஊ..ல..லா.லா பாடிக் கொண்டே..

பெரிய பொண்ணுக்கு மெசெஜ் அடிச்சா..

அம்மா..its midnight here நு சொல்லிண்டே..

ஒரு dancing girl emoji அனுப்பிட்டு அவ மீண்டும் அவ dream தொடரப் போய்ட்டாள்..

சின்னவகிட்ட  சொன்னதும்..i know amma..you will get .. Appa க்கு போய் thanks சொல்லுனு என்னை விரட்ட..


வூட்டுக்காரரை தேடிப் போனால்...

....


கிச்சன் மேடையில் ..கைப்பற்றிய ஆயுதங்களை வரிசையாக மக்கள் பார்வைக்கு வைத்திருப்பது போல..

தேய்த்த கரண்டி,ஸ்பூன்களுடன் வூட்டுக்காரர்..


நான்: ஆஹா..என்னமா..பளபளனு தேய்ச்சு வெச்சிருக்கேள்..சூப்பர்ப்பா நீங்க..🤔

சொல்லிக் கொண்டே போக..


'அவர்; ' எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்'  ..முதல் மரியாதை செங்கோடன் போல சிவந்த கண்களுடன்..😠


" நான் வாங்கிய POTW காண்பிக்க வந்த என்னை..இப்படி கேள்வி கேட்கலாமானு'

நான் கண்ணை கசக்க.😭.( நோ..நோ..கண்ணை கசக்காதே..'கொ" ..வந்துடப் போறதுனு பதற..

உஸ் அப்பா..அவரை divert பண்ணியாச்சுனு நான் நகர..


அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த நம்ம கவுண்டமணி...அவரை உசுப்பி விட்டார் பாருங்க..


அவர்:' இன்னிக்கு எத்தனை ஐட்டம் நம்ம் வீட்ல?


நானு; என்ன..எல்லாம் கர்ஃப்யூ சமையல் தான். புடலங்காய் பொரிச்ச கூட்டு,உருளையும் ப்ரெட்டும் சேர்த்து காய், மிளகு ரசம்..சாப்ட்டு முடிச்சு இதென்ன கேள்வி?


அவர்; (கவுண்டமணி ஸ்டைலில்)..அப்போ எத்தனை கரண்டி இருக்கணும்?

நானு: சாதம் மோரும் சேர்த்து..1..2..3....


அவரு: மொத்தம் 5 கரண்டி.. ..கர்ஜனையுடன்👹


நானு;...🤒


அவர்: இப்போ ஸ்பூன் கணக்கு சொல்லு..


ஐயோ ராமா.. கணக்கு பாடத்துக்கே டிமிக்கி கொடுக்கும் எனக்கு..

இதென்னடா சோதனை தெய்வமே காப்பாத்துனு..


அவரு: நீ எண்ணறயா..இல்ல நானே எண்ணட்டுமா? என்று கர்ஜிக்கிற மாதிரி ஆரம்பிக்க..இல்ல..இல்ல...கனிவா..கேட்க..


நானு:  விரல் விட்டு எண்ண ஆரம்பிச்சேன்..

Only ஒரே ஒரு  டஜன் ஸ்பூன் தான் இருக்கு..

(இதுக்கு போய் அலட்டிகலாமானு நான் ரஜினி ஸ்டைலில் பேச.)


அவரு: ஒரே ஒரு ஐட்டமுக்கு ..ஒரே ஒரு ஸ்பூனு..( ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரே ராஜா..) பாடிக் கொண்டே..

வரிசையா சொல்லு..எதுக்கு எந்த ஸ்பூன்?


நான்: இது கதக்கு..இது பரத நாட்டியம் ,இது ஒடிஸி..

 கமல் பாஷையில் சொல்லிக் கொண்டே போக..


அவரு; tally ஆக மாட்டேன்கிறதே..திருப்பி சொல்லு..

நானு; (ரொம்ப பாவமா)..திருப்பி..1..2...3..


அவரு: என்னமோ போ.. நம்ம வீட்டு balanced sheet ம் tally ஆகாது....பத்து பாத்திரமும் tally ஆகாது..


நல்லவேளை கத்திரிக்கோல், கத்தி,peeler பத்தி கேட்டால் ..ஏதாவது பீலா விடலாம்னு இருந்தால்..


அது அவருக்கு out of syllabus..so ....me..escaped..


நானு; இதெல்லாம் daily யாராவது tally பண்ண முடியுமா..இருங்கோ..என் மத்யமர் ஃப்ரண்ட்ஸையே கேக்கறேன்..கரெக்டா சொல்வா..


சரிதானேப்பா..

சிங்க்கில் விழும் பாத்திரத்துக்கெல்லாம்..

"ஆடிட்" ஆரம்பிச்சால்..

நான் "ஆடிப் "போய்டமாட்டேன்..

தீராத_விளையாட்டுப்_பிள்ளை

 #ஸண்டே_ஸ்பெஷல்


#தீராத_விளையாட்டுப்_பிள்ளை..


நானா..இல்லவே இல்லை..


மிஸ்..எனக்கு இன்னிக்கு வயத்து வலி மிஸ்.. லேசா தலவலி மிஸ்..

மிஸ் மிஸ்..நளினி ஆசிரியை( தமிழ் டீச்சரை அப்படித்தான் கூப்பிடணும்) வினாத்தாள் திருத்தினதை எல்லாருக்கும் கொடுக்கணும் மிஸ்..' இப்படி பொய் சொல்லி சொல்லி..PT க்ளாஸுக்கு டிமிக்கி கொடுத்த நமக்கு ஸ்போர்ட்ஸ் எப்புடி வரும்?


அப்படியும் வேற வழியில்லைனு வந்தா..

ரொம்ப பிடிச்ச விளையாட்டு..சொன்னா நம்ப மாட்டீங்க..

#Lemon_and_spoon race தான்..😀

அப்பவே பாருங்க..நமக்கும் சமையலுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருந்திருக்கு ..


செலவே இல்லாத விளையாட்டு..

மத்த ஸ்போர்ட்ஸ் க்கு ஸ்கூல்ல ப்ராக்டீஸ் பண்ணனும்..இது நம்ம வீட்டிலேயே ப்ராக்டீஸ் நடக்கும்..


" ரெண்டு எலுமிச்சம் பழம் வெச்சிருந்தேனே..ஒண்ணு தானே இருக்கு..இன்னொன்னு எங்க?

அதான் இதுனு..கவுண்டமணி டயலாக் பேசிட்டு..பைக்குள் நைஸா ஒரு பழத்தை எடுத்து வெச்சுக்கறது..

இருக்கற 10x10 ரூமுல ஸ்பூன்ல 🍋 வைச்சு நடக்க..

' எச்சல் பத்து..ஒண்ணுமே கிடயாது இந்த வீட்லனு' ஆசாரப் பாட்டி அங்கலாய்ப்பாள்.


அந்த நாளும் வரும். அதான்..ஸ்போர்ட்ஸ் டே..


ஒச்சம்மா டீச்சர்..📚 விசில் ஊத..


ஸ்பூனை வாய்க்குள்ள கெட்டியா பிடிக்க..

அத்தனை நாள் சமத்தா ஸ்பூனுக்குள் உட்கார்ந்த லெமன்..விசில் சத்தம் கேட்டதும் டிஸ்கோ ஆட ஆரம்பிக்கும்..

கையை வேற பின்னாடி கட்டிக்கணும்..


போங்காட்டம் ஆடவே முடியாது..அது தான் கையும் வாயும் கட்டிப் போட்டு இருக்கே..


நம்ம க்ளாஸ் cheer girls வேற உசுப்பி விட..

'அகிலா..இன்னும் என்ன..உன் வீரத்தைக் காட்டுனு' மை வாய்ஸ் சொல்ல..


"மக்கு..ஒழுங்கா balance பண்ணுனு' லெமன் என்னைப் பார்த்து முரைக்கும்..

ஸ்பூனை இறுக்கிப் பிடிக்க வாய் வலிக்கும்..


பத்து தப்படி தாண்டறதுக்குள்ள..தாகம் எடுக்கற மாதிரி இருக்கும்..தொண்டை வறளும்..

என் லொள்ளு தாங்காத லெமன்..


ஆடி அடங்கும் வாழ்க்கையடா.இதில் ஆறடி நிலமே சொந்தமடானு..தத்துவப் பாடல் பாடியபடி..


இதோ..விழப் போறேன் விழப்போறேன்..விழுந்துட்டேன்னு பாண்டிய ராஜன் கார் சீன் மாதிரி..தொபுகடீர்னு லெமன் ..land ஆகிவிட..


அப்புறமென்ன..கொடுத்த பில்டப்பெல்லாம் பொடி பொடியாக..retired hurt ஆக pavilion க்குள் வந்து..

மீதி ஸ்போர்ட்ஸ் க்கு..cheer girls ஆகிட வேண்டியது..


" என்னடி..இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே ஆச்சே..  கப்பு  கிப்பு உண்டானு ' ஆபீஸிலேர்ந்து களைச்சுப் போய் வரும்  சித்தி கேட்க..' இந்தா..ரொம்ப களைச்சு போயிருக்கே..ஒரு கப் லெமன் ஜூஸ் போட்டு வெச்சிருக்கேனு' சொல்லி..சொல்லி..

என் 😢 சோகக் கதையைக் கேளு தாய்க்குலமேனு நான் புலம்ப..


"போனாப்போறது விடு..lemon and spoon game ல ஒரு அழகான தத்துவம் இருக்கு தெரியுமா..நம்மளோட வாழ்க்கையை எப்படி balance பண்ணனும்.. அந்த 🍋 கீழே விழாம இருக்க ,எத்தனை concentration and practice வேணும்'..இதெல்லாமாவது கத்துண்டியா ' that's more important அவள் சொல்லச் சொல்ல..


எப்பவும் ஸ்பூனும் லெமனுமா..ப்ராக்டீஸ்


அடுத்த தடவை try பண்றேனுனு சொல்லிட்டு..

அடுத்த வருஷம் பேர் கொடுக்கலாம்னு மிஸ் கிட்ட கேட்டால்..

" இந்த ரேஸ் இந்த வருஷம் event ல இல்லனுட்டாங்க'..


உன் குத்தமா..என் குத்தமா..யாரை நான் குத்தம் சொல்ல..

ஒரு நல்ல லெமன் and ஸ்பூன் ரேஸ் வின்னரை இந்த நாடு இழந்தது..😀😀


நாம ஃபோட்டோ புடிக்கற அளவுக்கு ஒண்ணும் சாதிக்கலை..அதான் ..இந்த அம்மா ஃபோட்டோ..

மன்னிச்சு🙏

Diet. Diet .diet..🍫🍬🍧🍒🥝🥦🥒🌽

 Diet. Diet .diet..🍫🍬🍧🍒🥝🥦🥒🌽



கட்டுவோமே bettu..🤦

வாயைக்....

கட்டி இருப்போமே டயட்டு🧘

வைப்போமே டார்கெட்டு..

வாங்க மாட்டோமே ஸ்வீட்டு.🥞🧇

வாங்கிக் குவிப்போமே ப்ராடக்ட்டு..🍈🍒🫐🍇🌽🍠🧅

குறையாதே வெயிட்டு..

கரையுமே wallettu..

ஆவோமே அப்செட்டு..

புரியுமே ஒரு secret tu..


Diet என்பது ..

உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல..

உள்ளத்தோடும் ஒன்றி இருப்பதென்று..


லேசா இருக்கணும் மனசு..

ஏசாதிருக்கணும் எவரையும் 

பேசாதிருக்கணும் ..தேவையில்லாததை..

காசா பணமா செலவு இதுக்கு?..😃😃😃😃


இதை உணர்ந்தால் ..

இனி இருக்காது regret ttu..

வாழ்க்கை ஆகுமே brighttu..☀️☀️☀️🦩

வழி எங்கும் விரிக்கப்படுமே..red carpettu.


அன்புடன்..

😃😃😃👍😃😃👍


திங்கட்கிழமை காலையிலே..

தொடங்கியாச்சா?

உங்க மை.வா கேட்கறது..😃😃😃😃


The word  diet actually comes from the Greek word “diaita,” which means “way of life.” 


அதுதான்..அதுதான்..அதுவே தான்..💪💪💪

Tuesday, November 22, 2022

Vihan

 A cute little new member arrived in our family..so happy for you vidya Shrividhya Harish

God bless you both and our family's  little prince..love and wishes from Akila Ramasami perimma


நீ வருவாய் என..


காக்குருவி கூட்டினிலே..

குட்டிக் குருவி ஜனனமின்று...

காத்திருப்பு பல நாளாய்..

கலி தீர்க்க வருவாய் என..


கவி யொன்று புனைந்திங்கே

காலமும் ஆச்சு கண்ணே..

கண் துஞ்சா காத்திருப்பு..

கனவோடு பல ராவும்..


கவலை போக்க வந்த

குலக்கொழுந்தே..

கோமேதகமே..


கண்ணீர் இனியில்லை..

காக்கும் கரம் உன்வரவால்..


குலமெம் தழைக்க வந்த..

குட்டிக் குருவியே..

குதூகல குடும்ப வலைக்குள்

கூடி  உனை வரவேற்கிறோம்..


குட்டிக் கிளை உனக்கும்...நம்

குடும்பமெனும் பெருமரத்தில்..

கூவி  நீ அழையாமலே..

கூடி உனைக் காப்போமே..


பெரியம்மா...நானானேன்

பிடிபடவில்லை..என்

பெருமையின்று..

பேணி உனைக் காப்போமே..

பேரோடும்.புகழும்..

பண்போடும்..அன்போடும்..

பல்லாண்டு வாழ்ந்திடவே..

பாமாலை..சூடுவேனே...

Sunday, November 6, 2022

Happy_birthday_appa 2019

 #Happy_birthday_appa


..


எங்க வீட்டு சூப்பர் ஸ்டார்

நடக்கும் எங்களுக்குள் அடிக்கடி "war"


செல்லமாய் எல்லார்க்கும் இவர் "அப்பு'..

வைக்கத் தெரியாது யாருக்கும் 'ஆப்பு'


(புதுக்)கோட்டையில் பிறந்த மகாராஜா

(குரோம்)பேட்டையில் வாழ்ந்த தனிக்காட்டு ராஜா..


வேலையில் எப்போதும் புலி..

வூட்டுக்கார அம்மாவைப் பார்த்தால் எலி..


பேத்திகள் தான் இவரின் pet

 அவர்கள் பேச்சுக்கு ஆடும் puppet.


அவரின் சிறு உலகில்..

எல்லாம் நாங்கள் தான்..


Kids ..cake கொடுக்க..

Kheer ம்..பூரியும் நான் சமைக்க..

கடந்து போகணும் கடைசி நாட்கள்

கவலை கண்ணில் தோன்ற..

கண்ணீரை மறைத்து..

கலகலப்பாய் என் அப்பா..


வாழ்த்தோடு நான் சொல்வேன்..உன்னை

விடமாட்டேன் என்றும் என்று..

Happy_birthday_Appa 2020

 இன்னிக்கு எங்க வீட்டு ஹீரோ..என் அப்பாவின் birthday..


#Happy_birthday_Appa..


புதுக்கோட்டை புத்திரனுக்கு..

பிறந்த நாள் இன்னிக்கு..

பாரதியின் பாட்டுதான் 

பொருந்தும் என் அப்பாவுக்கு..

என்னனு கேக்கறேளா..?


காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..

மாலை முழுதும் விளையாட்டு 

என் வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா..


இது தான் என் அப்பாவும்..

காலையில் எழுந்ததும்..

படிப்போ படிப்பு..நியூஸ் பேப்பர்..

பின்பு கனிவு கொடுக்கும் ..

நல்ல கர்னாடிக் பாட்டு..காதோடு பேசிக் கொண்டே இருக்கும்..

மாலை முழுதும்..

சப்த ஸ்வரங்களோடு..விளையாட்டு..


அப்பு ..அப்புனு..அவரைச் சுற்றி ஒரு 

அன்பு வட்டம்..

அதனால் இல்லை அவர் வாழ்வில் வாட்டம்..


அப்பா..என் தோழன்..

மழையும் மாட்சும் 

ஒண்ணா ரசிப்போம்..

மராமத்து வேலையும்

மகிழ்ச்சியாய் செய்வோம்..


அப்பா என் ஆசான்..

எதிலும் இருக்கும் ஒழுங்கு..

வயதோ எண்பத்தி நான்கு..

வாழும் பாங்கோ மிக அழகு..


அப்பா..ஒரு ஞானி..

அவருக்கென்று ஒரு தனி பாணி..

அவருக்குள்ளே அமர்ந்த 'வாணி'..

இன்னும் கொஞ்சம் வெளியே வா..நீ..


Appa is a wonderful guide

And i always love to abide


வார்த்தைகள் வரிசையில் நிற்கிறது..

வாழ்த்தொன்று உனக்கு சொல்ல..

வயது என்பது just a counttu..

நாங்க கொடுப்போம் ஒரு big soundu..

அதைக் கேட்டு நீயும் மயங்கு..


Happy happy birthday to you Appu..


அப்பாவுக்கு பிடிச்ச பாட்டை keyboard ல் try பண்ணினேன்..

என்ன பாட்டுனு கண்டுபிடிக்க முடியற அளவு வாசிச்சு இருக்கேனா?😀


https://youtu.be/mzGSAmI01iQ


இந்த YouTube link click செய்தால்..அவர் மாப்பிள்ளையும் ..அதான் என் வூட்டுக்காரரும்..அவரோட பேத்தியும் அட்டகாச performance கொடுத்திருக்காங்க...


https://youtu.be/Ge0qkXKiUuQ


Have a musical birthday Appa

Happy birthday Keerthivasan Rajamani 2020

 Happy birthday Keerthivasan Rajamani sir


பேரிலேயே இருக்கும் கீர்த்தி..

ஸ்ரீலக்ஷ்மியின் பதி

இருக்கு நிறைய இவருக்கு மதி..

இருப்பார் கொஞ்சம்  fb ல் கதி..


இவர் பதிவுகளில் இருக்கும் பல சேதி..

மின்னும் இவர் தலையின் பின்  ஒரு ஜோதி..( அதான்..ஒளி வட்டம்).

சிலசமயம் வேதாந்தி..

மிளிரும் இவர் எழுத்தில் தேசபக்தி..


செய்யும் வேலையில் நேர்த்தி..

இவர் எழுத்து என்றும் எனக்கு ப்ரீத்தி..

இவர் கற்றுத் தந்த  பல யுக்தி..

தந்ததே பலருக்கு சக்தி..(technical aspects you have taught us so much sir)


காணணும் இவர் பல அப்த பூர்த்தி

என் அன்பைச் சொன்னேன் இவரை வாழ்த்தி..🙏

செய்து தருவோம் இனிப்பு பாசந்தி..

வாழ்க நீ என்றும் கீர்த்தி..💐


( உங்களோட ஒரு ஃபோட்டோவும் எடுத்ததில்லை சார்..

மஹா பெரியவா அனுக்கிரகம் எப்பவும் உண்டு உங்களுக்கு)

Happy birthday Keerthivasan Rajamani sir 2021

 Happy birthday Keerthivasan Rajamani sir


கீர்த்தி என்ற பெயரைச் சொல்லும் போதே...

கீற்றாய் புன்னகை மலரும்.

வீற்றிருப்பார் என்றும் ஸ்ரீலஷ்மி மனதில்..

பெற்றவர் பெற்ற பே(ரு)று

பெற்ற பிள்ளைகளுக்கோ பெரும் பேறு


கற்றுத் தெளிந்ததை..

காற்றில் பறக்க விடாமல்..

மற்றவருக்கும் புரியச் செய்வார்..

வற்றாத அறிவுக் களஞ்சியம் இவர்.


சிற்றிளங்காலையும்..

சிறகடிக்கும் பறவைகளும்..

சிற்றாடை கட்டிய சாராதாவும்..

சுற்றி வரும் அனந்துவும்..கேமரா

சிறைக்குள் அடையும்..

சிறப்பும் அடையும்..


மேற்கோள்கள் பல தந்து

சுற்றமும் நட்பும் வாழ்த்த..

போற்றப்படும் ஒருவன் நீ..

ஏற்றமிகு நண்பன் நீ..


எட்டி நின்று காத்திருக்கேன்..

என் வாழ்த்தையும் ஏந்தியபடி..

இன்று போல என்றும் வாழ்க

இன்பங்கள் கூடை கூடையா பெருக..


உனக்கென்று பரிசொன்று 🎁 அனுப்பவில்லை..

உள்ளம் உருக வேண்டினேன்..

உலகிலுள்ள இன்பமெலாம் தா இவனுக்கென்று..

குருவருளும் குவியட்டுமென்று..


Happy Birthday sir.


என் வீட்டு அனுஷ பூஜை..அவர் அனுக்கிரகம் உங்களுக்கு ஸ்பெஷலாக உண்டு .

Happy birthday appaa..🎉🎁🎁🎁🎂🌟 2021

 Happy birthday appaa..🎉🎁🎁🎁🎂🌟



அப்பா..என்ற மூன்றெழுத்து..

இதில் அடங்கும் என் மூச்சு..

இவரில்லாமல் ..முடியாது என் பேச்சு..


இவரைப் போல அச்சு நானு..

சுற்றி வரும் அச்சும் அவரு..

பேச்சில் இல்லை பூச்சு..

ராகமும் தாளமும் இவர் மூச்சு..


என்னை எப்போதும் செயவார் வாட்ச்சு..

என் குட்டித் தப்புகளை பிடித்திடுவார் கேட்ச்சு..

பார்க்கப் பிடிக்கும்  மாட்ச்சு.

பொழுதை இனிமையாய் கழிப்பார்..கீ போர்டு வாசிச்சு..🌟🌟🌟


முத்துப் பற்கள் மின்னும் இன்னும்..

தங்கம் போல heart. ( stent வெச்ச்சாலும்  stunt பண்ணும்)

Demand எதுவுமில்லா diamonduu..

"க"ம்மு'னு இருக்கும் மாணிக்கம்.


எங்க வீட்டு செல்லம் என் அப்பா..

பேத்திகளின் ..pettu இந்த தாத்தா..

மாப்பிள்ளைக்கும் எப்போது இவர் மேல் குறையாத ❤️ அன்பு..♥️♥️♥️


அப்பு அப்பு என்று ..

அன்பு சூழ் அண்ணா, அக்கா, தங்கைகளுடன்..

அப்பாவுக்கென்ன..?

அன்றும் இன்றும்.

புதுக்கோட்டை ராஜாதான்..

ராஜகோபால்தான்..


ஆரோக்கியத்துடன் ..

ஆண்டுகள் கடக்கணும்..

அகிலாவின் பிரார்த்தனை 

இது ஒன்றே..


Happy birthday appaa..