Saturday, September 10, 2022

என் அம்மா..பிரேமா..

 என் அம்மா..பிரேமா..


உன் வீட்டுத் தோட்டத்தின்..

எலுமிச்சையும் கேட்டுப்பார்..


உன் பெயர் ..சொல்லுமே அம்மா..


ஆறாவது வருடம்..

ஆறவில்லை இன்னும்..


பாசம் என்றால் பிரேமா..

பாதாம் அல்வா என்றால் பிரேமா..


கறார் பேர்வழி பிரேமா..

கர கர தட்டைக்கு பிரேமா..


Punctualityக்கு பிரேமா

பச்சை இங்க்கில் கையெழுத்து போட்ட பிரேமா..


சுத்தத்துக்கு மறுபெயர் பிரேமா..கடைகண்ணி..

சுத்தவும் அலுக்காத பிரேமா..


மீசையில்லாத பாரதி பிரேமா..நம்ம

தோசை பாட்டியும் பிரேமா..


Sister களின் master பிரேமா..

Mr.அப்புவின் ..ring master பிரேமா.


பேரன் பேத்திகளின் pet பிரேமா..

பிள்ளையாருடன் பேரம் பேசும் பிரேமா


அகிலாவே அகிலம் என்ற பிரேமா.

அகம் முழுதும் அன்பே பிரேமா..


அகலாமல் அவளைக் காக்க..கடைசிக்

காலத்தில் வாய்ப்பு தந்தாள்..


உலகமாக இருந்தவள்..வேறு

உலகம் சென்ற நாள் இது..

உள்ளத்தின் பாரத்தை..

உங்களுடன் இறக்கி வைத்தேன்..


அவள் ஆசி நமக்கு என்றும் உண்டு.

அவள் ஆவியான பின்னும் கூட..


அன்புடன் அகிலா..

எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..

Thursday, September 8, 2022

அம்மா பொண்ணு

 'ஏய் அம்ம்மா'......( என் பெண் அழைக்கவும்..என்னடா இது இந்த அகிலாக்கு வந்த சோதனைனு மைண்ட் வாய்ஸை சொன்னதை தள்ளிட்டு..)

'சொல்லுடா..என்ன வேணும்?'

'எனக்கு நாளைக்கு ஒரு group assessment இருக்கு.. இப்போதான் watsapp group ல mam topic post பண்ணியிருக்கா..வேற இன்னிக்கு ஒரு வேலையும் உனக்கு இல்லையே.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் நீ என்றாள். 

டேய்..group project ல நான் எங்கடா வந்தேனு அலற..

அம்மா..உன்னை விட்டா எனக்கு யாரும்மா இருக்கானு ..ஒரே senti dialogue..

நாமதான் உடனே உருகி ஓடா தேய்வோமே..

புதுத் தெம்போடு..சொல்லுடா..என்ன பண்ண்ணும் ..அவள் லிஸ்ட் ஆரம்பிச்சது..அம்ம்மா..(இப்படி  ஒரு அழுத்தம் கொடுத்தா அந்த அம்மாக்குள்ள ஆயிரம் அர்த்தமாக்கும்).

business studies project...you have to write quotes on stereotypes, self- fulfilling prophecy and perception . we have to be creative. 

கண்ணே இதெல்லாம் நான் படிச்சதே இல்லையேடா..இதுல எப்படி..

அவள் தொடர்ந்தாள். கூகிள் ப்ண்ணி நான் quotes எடுத்து வெச்சுடறேன் ...ஆமா..chart paper and black sketch இருக்கில்ல வீட்டில..அவள் பேசப் பேச...கண்ணே நீ தான் டா படிக்கிற..இதெல்லாம் என்னக் கேட்டுண்டு..

chill maa..shelf clean பண்றேனு இடத்தை மாத்தி மாத்தி வைக்கிறது நீதானே..நான் என்ன பண்ண..சொல்லிண்டிருக்கும் போதே செல்லில் டொடங் டொடங்னு மெஸேஜ் வந்து விழுந்த வண்ணம் இருக்க..அம்மா..please white chart வாங்கிண்டு வந்துடேன்நு ஒரு அன்புக் கட்டளை வேற.. சரினு பை தூக்கிண்டு கிளம்பியாச்சு.. ஒரு வாயா வார்த்தையா சொல்லிட்டு கிளம்பினேன்.' வேற ஏதாவது ஞாபகம் வந்தா ஃபோன் பண்ணு'

stationery shop ல் chart வாங்கிண்டு இருக்கற நேரம்..புதை குழி (அதான் என் பர்ஸ்ஸில் )இருந்த மொபைல் பாட ஆரம்பிச்சது..அவளே தான்..அம்ம்மா..black sketch ஒண்ணுதான் இருக்கு..50 quotes எழுதணும்.. ஒரு 2 வாங்கிடு..

சரி..சொல்வதற்குள் செல் கட்..

அந்த கடைக்காரந் கிட்டே ஒண்ணே ஒண்ணு கண்ணேகண்ணுனு ஒரு black sketch மட்டும் இருக்க அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன். வாங்கிண்டு வெளியே வரேன்..திருப்பியும் அவளே அழைப்பு.. அம்ம்மா...ஒரு decorative thread ம் வாங்கிடு..சரி..சரி..வாங்கறேன்..வேற எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லு..திருப்பி வரமாட்டேன்..

இப்படியே  வீடு வந்தாச்சு.

நுழைஞ்சதும்...மீண்டும் அதே tone ல் ..அம்ம்ம்மா...எனக்கு ஒரு ஐடியா..

இந்த quotes எல்லாம் palm script மாதிரி பண்ணா ..நல்லா இருக்கும் இல்ல என்றாள். டேய்..ஓலைச் சுவடில business quotes aa.. இதுவும் நன்னா இருக்கே..சரி பண்ணிடு..நான் போய் டின்னர் பண்றேன் என்றேன். 

அம்ம்மா..அம்மா..அப்படியே ஒரு tea decoction போட்டு கொடேன்..சார்ட்ல ஒலைச் சுவடி effect கொடுத்துடலாம் ..ப்ளீஸ் மா..ப்ளீஸ் மா..

டிகாக்‌ஷன் ரெடி ஆச்சு.. ஆற வைச்சு தர..அழகா அவள் brush வெச்சு light ஆ ஒரு எஃபக்ட் கொடுக்க..

இப்போ அடுத்த கட்டம்..கோடு கட்டம் போட்டு ஒரே அளவுக்கு ஓலை வெட்டி..முதுகு லேசா பெண்டாக..போறுமா..நான் போகட்டா..permission கேட்டபடி நான் .

அதுக்குள்ள எங்க போற..அந்த போன வருஷம் பண்ண ப்ராஜக்ட் ல ஒரு மெழுகுவர்த்தி எரிச்சு ஒரு பொசுங்கின effect கொடுத்தோமே..அதை கொஞ்சம் பண்ணித் தாயேன்...ப்ளீஸ் மா..

உருகி ஓடானேன்.. ஒரு  so called chart paper ஓலைச் சுவடி ஓரத்தை பொசுக்கி டிசைன் பண்ணியாச்சு..

இப்போ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து டும் டும் டும் முடிச்சு போட்டு தாலி கட்டணுமே.. விடிய விடிய வேலை செய்யறதப் பார்த்து விசனத்துடன் வந்தார் அப்பா. ..நான் என்ன பண்ணட்டும் சொல்லு ..காத்திருந்த நான்..ஒரே பாய் பாஞ்சு..அப்பா..இதெல்லாம் ஒழுங்கா அடுக்கி கட்டணும்ப்பா..

தலையாட்டிண்டே..பொறுமையா..ஒவ்வொண்ணா ஓட்டை போட்டு..கோர்த்து ஒரு அழகா ஓலைச் சுவடி கட்டு ரெடி.

ஒவ்வொரு quotes ம் ஒரு சின்ன பாடம்.


காசிக்கு போனாலும்.......விடாது என்பது மாதிரி..

காலேஜ் போனாலும் இந்த கோடு கட்டம், project work விடாது போல இருக்கேனு சலிப்பில் ஆரம்பித்த வேலை..

முடிச்சு நிமிரும் போது சந்தோஷம் தந்தது காற்றில் படபடத்த அந்த ஓலைச் சுவடிகள்..

group project ..குடும்ப project..

எனக்கு கோபம் வந்தால்...

 எனக்கு கோபம் வந்தால்...



சப்பாத்தி...

அப்படியே பூரி மாதிரி உப்பி வரும்போது..

கிடைக்கிற சந்தோஷம் இருக்கே..😃😃😃😃


ஆஹா..அகில் நீ ஜெயிச்சுட்டேனு..

"ஆட்டா ".. சொல்லும்..

ஆட்டோகிராப் ஒண்ணு வாங்கி..

போட்டோகிராஃப் கலெக்‌ஷனில் சேர்க்கத் தோணும்..


அதே..கொஞ்சம்..சப்பாத்தினு பேருக்கு ஏற்ப...சப்பட்டையானால்..


உடனே மனசுக்குள் ஒரு லிஸ்ட் ரெடியாகும்.


இந்த தடவை வாங்கின மாவு சரியா இல்லை..

தண்ணி ஜாஸ்தியா போச்சு..


எதோ சொல்லி escape ஆக தோணும்..


"உன் குத்தமா..என் குத்தமா..யாரை நான் குத்தம் சொல்ல.."

சோகப் பாட்டு பாடும்..🎶🎶🎶🎼


இப்போ ஒரு ஐடியா..💡💡💡💡


Phulka ஆகாத ரொட்டியே.

பொறுமை சோதித்த ரொட்டியே

பாரு உன்னை என்ன பண்றேன்னு..கோபத்தில்

கிள்ளு கிள்ளுனு கிள்ள...மாறிடுமே..

கோபத்தில் ..அது

#Khoba_roti... ஆக..


யாரு கிட்ட..💪💪💪💪💪


இப்போ ..பாருங்க..

எனக்குத்தான் ..எல்லாமே எனக்குத்தான்னு..

இலையில் போடப் போட காலியாகும்..


உருமாறினால் என்ன..

உள்ளே போச்சுதானே..😄😄😄


இதுதான்..அமைஞ்சதுனு compromise ஆகாமல்..

கொஞ்சம்..

Courage எடுக்க..


Life jinga la la..💃💃💃💃

அன்புடன்

Wednesday, September 7, 2022

நாமளும்_புலம்புவோம்

 #நாமளும்_புலம்புவோம்.

பாத்திரத்தில் இருக்கறதை ஒட்ட வழித்து போடுடா என்றால் பொண்ணு முரைக்கறா..


பைப்பில் இருக்கறதை ஒட்ட விடுப்பா..என்றால்

பெட்ரோல் பம்பு பையன் முரைக்கிறான்..


உன் குத்தமா..என் குத்தமா..( ராஜா சார் மை.வாய்ஸில்)

bulb பலவிதம்

 💡💡💡💡💡💡 bulb பலவிதம்


..series


ஒரு சின்ன zucchini..அதான் ஜுக்கினி....

என்னை தலைகுனிய வைத்ததே..


எப்பவும் போல நேத்திக்கி..

காய்கார ராஜேஸ்வரி அம்மாகிட்ட லிஸ்ட் சொல்லிண்டிருந்தேன்..


Corn,capsicum, coconut..கத்திரி வெண்டை..

கடகடனு சொல்லிண்டு வந்த எனக்கு..

சட்னு மறந்து போச்சு..பொண்ணு சொன்ன காய் பேரு..


என்ன செய்யலாம்?

எப்படி புரிய வைக்கலாம்?..

ஏகத்துக்கு யோசனை..


ஒரு நிமிஷம் அவளைக் கேட்டிருக்கலாமேனு..நீங்க கேட்கறது எனக்கு காதில் விழுகிறது..

ஆனால்..விடிய காலையில இதுக்கா எழுப்பினே..கேள்விக் கணைக்கு பயந்து..


அடையாளம் சொல்ல ஆரம்பிச்சேன்..

அது ஒரு அன்னிய நாட்டு காய் ஆண்ட்டி..

Lettuce இல்ல..

பீர்க்கை மாதிரி இருக்கும்..

ஆனால்..டேஸ்ட் மண்ணு மாதிரி இருக்கும்..


நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள..

அட..ஜுக்கினி தானே..ஒண்ணா ரெண்டா..


போட்டாங்களே ஒரு போடு..


 இதை விட காலையில பல்பு ஒண்ணு கிடைக்குமா?..


வயசானால் மறதி..

ஒத்துக் கொண்டே ஆகணும்..


இன்னொன்று..

வெளிநாட்டு காயை சமைச்சு கொடுத்தால் மட்டும் போதாது..

வாய்க்குள் நுழையுதா..

மண்டைக்குள்ள நிக்குதா அது பேருனு செக் பண்ணிக்கணும்..

ஆமாம்..


பல்பு வாங்கினாலும்..

வீட்டில....புரையேறும் அளவுக்கு சிரிச்சு..

என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டிட்டாங்கப்பா..😄😄😄😄


படிப்பதனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு..🎵🎵🎵🎵

எம்.எஸ் .ராஜேஸ்வரி குரல் எங்கியோ கேட்டது..


அன்புடன்

🤦😄😄😄😄😄😄