'ஏய் அம்ம்மா'......( என் பெண் அழைக்கவும்..என்னடா இது இந்த அகிலாக்கு வந்த சோதனைனு மைண்ட் வாய்ஸை சொன்னதை தள்ளிட்டு..)
'சொல்லுடா..என்ன வேணும்?'
'எனக்கு நாளைக்கு ஒரு group assessment இருக்கு.. இப்போதான் watsapp group ல mam topic post பண்ணியிருக்கா..வேற இன்னிக்கு ஒரு வேலையும் உனக்கு இல்லையே.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் நீ என்றாள்.
டேய்..group project ல நான் எங்கடா வந்தேனு அலற..
அம்மா..உன்னை விட்டா எனக்கு யாரும்மா இருக்கானு ..ஒரே senti dialogue..
நாமதான் உடனே உருகி ஓடா தேய்வோமே..
புதுத் தெம்போடு..சொல்லுடா..என்ன பண்ண்ணும் ..அவள் லிஸ்ட் ஆரம்பிச்சது..அம்ம்மா..(இப்படி ஒரு அழுத்தம் கொடுத்தா அந்த அம்மாக்குள்ள ஆயிரம் அர்த்தமாக்கும்).
business studies project...you have to write quotes on stereotypes, self- fulfilling prophecy and perception . we have to be creative.
கண்ணே இதெல்லாம் நான் படிச்சதே இல்லையேடா..இதுல எப்படி..
அவள் தொடர்ந்தாள். கூகிள் ப்ண்ணி நான் quotes எடுத்து வெச்சுடறேன் ...ஆமா..chart paper and black sketch இருக்கில்ல வீட்டில..அவள் பேசப் பேச...கண்ணே நீ தான் டா படிக்கிற..இதெல்லாம் என்னக் கேட்டுண்டு..
chill maa..shelf clean பண்றேனு இடத்தை மாத்தி மாத்தி வைக்கிறது நீதானே..நான் என்ன பண்ண..சொல்லிண்டிருக்கும் போதே செல்லில் டொடங் டொடங்னு மெஸேஜ் வந்து விழுந்த வண்ணம் இருக்க..அம்மா..please white chart வாங்கிண்டு வந்துடேன்நு ஒரு அன்புக் கட்டளை வேற.. சரினு பை தூக்கிண்டு கிளம்பியாச்சு.. ஒரு வாயா வார்த்தையா சொல்லிட்டு கிளம்பினேன்.' வேற ஏதாவது ஞாபகம் வந்தா ஃபோன் பண்ணு'
stationery shop ல் chart வாங்கிண்டு இருக்கற நேரம்..புதை குழி (அதான் என் பர்ஸ்ஸில் )இருந்த மொபைல் பாட ஆரம்பிச்சது..அவளே தான்..அம்ம்மா..black sketch ஒண்ணுதான் இருக்கு..50 quotes எழுதணும்.. ஒரு 2 வாங்கிடு..
சரி..சொல்வதற்குள் செல் கட்..
அந்த கடைக்காரந் கிட்டே ஒண்ணே ஒண்ணு கண்ணேகண்ணுனு ஒரு black sketch மட்டும் இருக்க அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன். வாங்கிண்டு வெளியே வரேன்..திருப்பியும் அவளே அழைப்பு.. அம்ம்மா...ஒரு decorative thread ம் வாங்கிடு..சரி..சரி..வாங்கறேன்..வேற எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லு..திருப்பி வரமாட்டேன்..
இப்படியே வீடு வந்தாச்சு.
நுழைஞ்சதும்...மீண்டும் அதே tone ல் ..அம்ம்ம்மா...எனக்கு ஒரு ஐடியா..
இந்த quotes எல்லாம் palm script மாதிரி பண்ணா ..நல்லா இருக்கும் இல்ல என்றாள். டேய்..ஓலைச் சுவடில business quotes aa.. இதுவும் நன்னா இருக்கே..சரி பண்ணிடு..நான் போய் டின்னர் பண்றேன் என்றேன்.
அம்ம்மா..அம்மா..அப்படியே ஒரு tea decoction போட்டு கொடேன்..சார்ட்ல ஒலைச் சுவடி effect கொடுத்துடலாம் ..ப்ளீஸ் மா..ப்ளீஸ் மா..
டிகாக்ஷன் ரெடி ஆச்சு.. ஆற வைச்சு தர..அழகா அவள் brush வெச்சு light ஆ ஒரு எஃபக்ட் கொடுக்க..
இப்போ அடுத்த கட்டம்..கோடு கட்டம் போட்டு ஒரே அளவுக்கு ஓலை வெட்டி..முதுகு லேசா பெண்டாக..போறுமா..நான் போகட்டா..permission கேட்டபடி நான் .
அதுக்குள்ள எங்க போற..அந்த போன வருஷம் பண்ண ப்ராஜக்ட் ல ஒரு மெழுகுவர்த்தி எரிச்சு ஒரு பொசுங்கின effect கொடுத்தோமே..அதை கொஞ்சம் பண்ணித் தாயேன்...ப்ளீஸ் மா..
உருகி ஓடானேன்.. ஒரு so called chart paper ஓலைச் சுவடி ஓரத்தை பொசுக்கி டிசைன் பண்ணியாச்சு..
இப்போ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து டும் டும் டும் முடிச்சு போட்டு தாலி கட்டணுமே.. விடிய விடிய வேலை செய்யறதப் பார்த்து விசனத்துடன் வந்தார் அப்பா. ..நான் என்ன பண்ணட்டும் சொல்லு ..காத்திருந்த நான்..ஒரே பாய் பாஞ்சு..அப்பா..இதெல்லாம் ஒழுங்கா அடுக்கி கட்டணும்ப்பா..
தலையாட்டிண்டே..பொறுமையா..ஒவ்வொண்ணா ஓட்டை போட்டு..கோர்த்து ஒரு அழகா ஓலைச் சுவடி கட்டு ரெடி.
ஒவ்வொரு quotes ம் ஒரு சின்ன பாடம்.
காசிக்கு போனாலும்.......விடாது என்பது மாதிரி..
காலேஜ் போனாலும் இந்த கோடு கட்டம், project work விடாது போல இருக்கேனு சலிப்பில் ஆரம்பித்த வேலை..
முடிச்சு நிமிரும் போது சந்தோஷம் தந்தது காற்றில் படபடத்த அந்த ஓலைச் சுவடிகள்..
group project ..குடும்ப project..
No comments:
Post a Comment