Sunday, January 30, 2022

Guruve saranam..

 Guruve saranam..



அனுஷத்தில் அவதரித்த

அமைதியின் உருவே..

அன்பருளம் அதையறிந்து

அருள் பொழிந்த கடலே..


ஆசி தரும் அற்புதமே

ஆசை துறந்த மாமணியே


காஞ்சி மகானிவரின்

கண்கள் சுடரொளியே

கண்டு வணங்குவோரின்

கவலைகள் யாவையுமே

கரைந்ததே கற்பூரமாய்..


கண்டதில்லை உம்மை..

களித்தோம் தெய்வத்தின் குரலை..

கரம் குவித்து வணங்கிடுவேன்..

காமகோடி குரு உனையே..

Happy and a peaceful week ahead

செல்ல பெ(ப)ட்டு

 செல்ல பெ(ப)ட்டு


என் ஃப்ரண்டு ஃபோன் பண்ணி ' நீ ஃப்ரீ தானே இப்போ? வா நம்ம ரைடரோட  ( அவ செல்ல பெ(ப)ட்டு..) ஒரு வாக் போய்ட்டு வரலாம்னு சொன்னாள்.


இப்போதான் கொஞ்சம் பயம் போய், நானும் ரைடரும் கை குலுக்க ஆரம்பிச்சிருக்கோம்.


சரினு கிளம்பியாச்சு.

முதல்ல ரொம்ப சமத்தா கையைப் பிடிச்சுண்டு வர குழந்தை மாதிரி வந்தது.

ஆஹா...ஒரே சந்தோஷம்.


அந்த சந்தோஷமெல்லாம் எங்க சந்து முனை வந்ததும் சங்கு ஊதிப் போச்சு.


ரைடர் இழுத்த இழுப்புக்கு அவள் ஓட..

ஏற்கனவே..ரோடில் நடக்கும்போது கூட ஸ்கூட்டியில் போற நினைப்புல indicator இல்லாத குறையை என் வலது இடது கரமும் செய்ய..

நெசமாவே அது rider தான்..என்னை என்னமா ஓட்டிப் பார்த்துது.


புஸ்ஸு..புஸ்ஸுனு மூச்சு வாங்கும்போது ஒரு பல்பு எரிஞ்சது..

' வாழ்க்கையும் இப்படித் தானோ..

நம்ம கையில் அடக்கம்னு நாம் நினைக்கும் போதே..நமக்கே தெரியாம..புரியறதுக்குள்ள எங்கெல்லாமோ இழுத்துக் கொண்டு போய்டுமோ'.


ரைடர்..நல்ல பேர்..

Keep calm

 Keep calm..its a weekend ம்மா..


பொண்ணு சொன்னாலும்..


அடப் போடா ..

எத்தனை #काम ..

Queue ல நிக்குது..

 

Calm..calm.calm.நு ஒரு பக்கம்..

काम..काम..काम நு வேலைகள் இன்னொரு பக்கம்..


இந்த काम களை முடிச்சால் அப்புறம் வந்து

 .com களில் மூழ்கணும்..


இப்படி நான் சொல்லிக் கொண்டே போக..


Calm ஆ இருக்கற என்னை..

பேசிப் பேசியே காளியாக்கிடாதே ம்மானு..சொல்லலை..😄😄😄

ஒரே ஒரு லுக்கு மட்டும் விட்டுட்டு போய்ட்டா..😄😄😄😄


என்ன டிசைனோ..போங்க😄😄😄

Monday, January 24, 2022

Curfew_சமையல்

 #Curfew_சமையல்..


'க' வும் "கொ'வும்..சேர்ந்த கர்ஃப்யூ சமையல்..


அது என்ன க..கொ..

கடலை மாவு..

கொத்தவரங்காய்..

அதான்..


"கொதிக்கும் எண்ணெயில் என்னைத் தவிக்க விடுவாய்..

கொஞ்சம் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசுவாய்..

இதற்குத்தானா நான் ஆசைப்பட்டேன்..

காயிலும்,குழம்பிலும் என்னைச் சேர்த்து ..

கரையேற்ற மாட்டாயானு 

கடலை மாவு கண்ணீரும் கம்பலையுமா..ஒரு பக்கம்..


ஏற்கனவே..நான் வத்தல் தொத்தல்..

இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்துண்டு இருக்கணுமோ..தெய்வமே என்று..

கொத்த"வரங்"காய்..வரம் கேட்க..


"கொத்தவரங்காய். ..அதுக்கு டிமாண்டு இல்ல..


என் மனசு ஒண்ணும் ரொம்ப கல்லு இல்லை..' 


என்று ஆறுதலாய் நான் எச பாட..


இந்த #க வும் ,#கொ வும் கைக்கோர்த்து..

கூட்டணி அமைத்து..


கொத்தவரங்காய்..இனி..

நம் குடும்பத்தில் ..

ஓர் காய்னு... ஆன நாளிது..


வித வித size ல் நறுக்க..

வெரைட்டி..guarantee..


நீளவாக்கில் கொஞ்சம்..

பொடிப் பொடியா மீதி..


#கடலைமாவு கரைச்சு விட்ட #கொத்தவரங்காய்_மோர்க்குழம்பு

#கடலைமாவு_கொத்தவரை_பொரியல்..

#கொத்தவரை தேங்காய் பொரியல் (அப்பாவுக்கு)


#மோர்க்குழம்பு


நீள வாக்கில் நறுக்கினதை..லேசா உப்பும்,சக்கரயும் ,மஞ்சளும் சேர்த்து கலந்து வைத்து..

ஒரு அரை மணி கழிச்சு..தாளிப்பில் நன்றாக fry பண்ணி ,தனியாக வைத்து விடவும். ( உங்க கிட்ட வத்தல் இருந்தால் ஓகே..ஆனால். Fresh fry இன்னும் 😋 )


இப்போ தயிரை தண்ணி விடாமல் கடைந்து..அதில் 

#ஒரு_ஸ்பூன்_கடலைமாவு, ஒன்றரை ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகி தயிரில் கலக்கி..

பின் கடாயில் , தாளிப்பிற்கு பின் இந்தக் கலவையை தண்ணி கொஞ்சம் தாராளமா ஊற்றி கொதிக்க விடணும்..

1 டம்ளர் தயிருக்கு...ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.

கடைசியில் ..வறுத்து வைத்து இருக்கும் கொத்தவரங்காய் அப்படியே மேலே தூவ..

கர கர மொறு மொறு ..மோர்க்குழம்பு ரெடி


#கடலைமாவு_கொத்தவரை_கறி..

எங்க பாட்டி special.

தாளித்து, வெங்காயம்  வதக்கி விட்டு,

வெந்த கொத்தவரையையும் சேர்த்து கடலை மாவை கொஞ்சம் semi solid பதத்தில் கரைத்து வைத்து..

அப்படியே அந்த காயில் சேர்த்து நன்றாக கலப்பாள்..


ஆஹா..கொத்தவரையும் கடலை மாவும்..


"நீயும் நானும் இன்று

 கைகள் கோர்த்துக் கொண்டுனு" டூயட் பாடிண்டே..

"வாழ்வின் எல்லைக்கே' நம்மை கொண்டு போகுமாக்கும்.


#தேங்காய் போட்ட பொரியல் எப்போதும் போல..


பருப்பு உசிலி பண்ணலாம்..பக்கோடா பண்ணலாம்..பொரித்த கூட்டு பண்ணலாம்..புளியிட்ட கூட்டு பண்ணலாம்

புளிக்குழம்பில் போடலாம்..இன்னும் இன்னும்..


எது செய்தாலும் இப்போ கொண்டா கொண்டானு சாப்பிடும் நேரம்.

இது தான் சமயம் நமக்கு..

Fast food லேர்ந்து மீண்டு..

நம் பாரம்பரிய feast food க்கு 

நம் குடும்பத்தினரை கூட்டிச் செல்வோம்..


Curfew ஒன்றே..

Cuisine ம் ஒன்றே..


"


ஆஹா..காந்தி மகான்..

 Thanks Shiv K Kumar Sir..


 எச to Your morning post

ஆஹா..காந்தி மகான்..


அஹிம்சை எல்லாம்

இம்சை என்றோம்..

non violence என்பதை

'நான் violent 'என்றோம்..

சாந்தி என்ற சொல்லே

சங்கடமென நினைத்தோம்


தூளி ஆட்டி ..

தாலாட்டுப் பாடி

தட்டிக் கொடுத்தோம்..

தூங்கட்டுமே ..

உண்மையென்றோம்..


பொய் பேச

கூச மாட்டோம்..


காந்தி ஜயந்தியன்று

காந்தி புகழ் பாடுவோம்..

ஆஹா.

காந்தி மகான் என்போம்..


காகத்தின் உறைவிடமாம்

காந்தி சிலையெல்லாம்..

காணுமே புதுப் பொலிவு..

கலர் கலர் மாலையிலே


தேடாதே..சிலை ஓடி..

தோண்டி எடு ..உன்னுள்ளே

தூங்கிக் கிடக்கும் 

காந்தி மகானை..

வெள்ளம்_ஸ்பெஷல்

 #வெள்ளம்_ஸ்பெஷல்


மடை திறந்து பாயும் (கங்கை) நதி  நான்..


geometry, geography,geology எல்லாத்துக்கும் மேல் GK ..இந்த எல்லா G யும் நமக்கும் ரொம்ப தூரம்.


 ஆனா..வாழ்க்கைத் துணைவரோ hydro engineering ,dam construction நு வேலை.

டெல்லியில் இருந்தபோது முதல் முதலா பூகம்பம் எப்படி இருக்கும்னு அறிந்தேன். எல்லாரும் கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று விட்டு , ஒண்ணுமே நடக்காதது போல வீட்டுக்குள் போய் விடுவோம்.


தேஹ்ராதூன் வாழ்க்கை ஆரம்பம். ஜூன் மாசம் ஆரம்பித்தால் newspaper முழுதுமே..மழையில் நனைந்தபடி, cloud burst ,landslide நு வந்தபடி இருக்கும். பேய் மழை கொட்டறதுனு என் வீட்டுக்காரர் ukimath லேர்ந்து சொல்லுவார். புரண்டு பெருகி ஓடும் கங்கையின் சத்தம் நிசப்தமான ராத்திரியில் ஃபோன் வழியாக கேட்கும்போது..நித்திரையோடு..நிம்மதியும் தொலையும்.


ஒரு வாரம் லீவ் கிடைச்சாலும்் உடனே மூட்டை கட்டிடுவோம் . சில சமயம் ஜோஷிமத்,பத்ரிநாத் சிலசமயம் ukimath. 

எப்போது மழை கொட்டும் , மலையும் சரியும், பாதை மூடுமென்று சொல்ல முடியாது.


இப்படி ஒரு ஆகஸ்ட் மழையில்..மாட்டிக் கொண்டோம் மலைப் பாதையில்.

சின்னக்கோடாக ஹிமாலயத்திலிருந்து வழிந்த நீர்..சீறிப் பாய ஆரம்பிக்க..

கங்கை..கலங்கி ஓட..கலக்கம் வயிற்றில்..இரண்டு பெண்களுடன் நடு ரோடில்( ரோடு மறைந்து மண் பாதை).


கண்ணெதிரில் பட படவென்று சரியும் மண்ணும் கல்லும்..ஒற்றை வழிப் பாதை தான் அங்கே..

ரெண்டு பக்கமும் வாகனங்கள். 

ஒரு பக்கம் மலை..இன்னொரு பக்கம் கங்கை சீறும் மடு..

நாம் கிளம்பிந வண்டி எப்போது போய்ச் சேரும் என்று யாருக்கும் தெரியாது.


ஆனால் அங்கே பார்த்தேன்..மனித மனம். உதவும் குணம்.crisis management.

ஃபோன் எல்லாம் வேலை செய்யாது. chalo bhai..hum karlenge..இப்படி குரல்களுடன் களத்தில் இறங்கிய எல்லா வயது ஆண்கள். ஆச்சரியம். இவர்கள் செய்யும்போதே ஒரு வழியாக அரசு உதவி வண்டிகள் வர..அவர்கள் தான் வந்தாச்சே என்று கைகட்டி நிற்காமல்..வேலையை சுளுவாக்கிய வேகம்.


ஒரு இடம் இப்படி தாண்ட. கொஞ்ச தூரம் நகரவும் மீண்டும் ரோடே மறைந்து ..கங்கை ஜாலியா ஜாகிங் பண்ணியபடி..

இனிமேல் இங்கேயே தான்..வழி கிடையாது.


hemkund sahib தீர்த்த யாத்திரை போகும் நேரமாதலால் எங்கு பார்த்தாலும் ஒரு டெண்ட் அமைத்து langar எனப்படும் free kitchen. ரொட்டிகளும் பன்னீர் சப்ஜியும் டாலும்..அத்தனை சுறுசுறுப்பாக ரொட்டி செய்து வந்தோர் பசியாற்றிய அத்தனை சீக்கியப் பெண்களும் ஆண்களும் அவர்களுக்கு உதவி புரிந்த வழியில் மாட்டிக்கொண்ட அத்தனை நல்ல் உள்ளங்களும்..


மதமாவது..மொழியாவது..பசியும் தாகமும் வந்தால் பத்தும் பறந்து போகும்.

அவரவர் பைகளிலிருந்து எல்லா ஊர் திண்பண்டமும் distribution. 


ஒரே ஒருத்தர் ரெண்டு பேர் ஃபோன் வேலை செய்ய..தகவல் சொல்ல தன் கைப்பேசி கொடுத்து உதவியவர்கள்.

குழந்தைகள் குழப்பம் புரியாமல் புது நண்பர்கள் கிடைத்த சந்தோஷத்தில் கும்மாளம்.

ஆனாலும்..எல்லார் மனதிலும் நம் வீட்டை திரும்பிப் போய் பார்ப்போமா..என்ற திகில்.

ரோடிலே 20/மணி நேரம். எப்போது மலை சரியும் என்ற திகில். 

பேரிடர் குழுக்கள்..உயிரைப் பணயம் வைத்து ஊருக்கு போக வழி செய்ய..


உள்ளூர் மக்கள் இது எப்பவும் நடக்கிறதுதானே என்பது போல எந்த வண்டிக்கும் காத்திராமல் நடராஜா சர்வீஸில்...தம் வழிக்கு சாப்பிட வைத்திருந்த ரொட்டிகளை குழந்தைகளுக்கு கொடுக்க..


அங்கே ஒரு புது இந்தியா கண்டேன்..காண்பித்தேன் என் குழந்தைகளுக்கு.


வரைபடம் பார்க்கத் தெரியாத எனக்கு..விரிந்த சிந்தனையும் எண்ணமும் தர ஆரம்பித்தது இந்த மாதிரி பல சம்பவங்கள்.


கான்கிரீட் காட்டுக்குள் வந்து ஒடுங்கி..அந்த கங்கையையும் கேதாரனையும் பத்ரிநாதனையும் இன்னொரு முறை போய்ப் பார்ப்பேனா..ஆதங்கத்தில் நான்..


இங்குள்ள படங்கள்..நான் எடுத்ததுதான்

pic1..கொட்டும் கற்கள்

pic 2. ..you can see the difference in the color of water alaknanda and mandakini at karnayaprayag

pic 3..water water everywhere

pic 4..rescue

pic5..ரொம்ப முக்கியம்..langar..லங்கணத்திலிருந்து காத்த லட்சியவாதிகள்

pic 6..கல்லும் பாறையும் கங்கைக்கு மெத்தை

pic 7..men in action.

இது மட்டும் போதும்😀

 இது மட்டும் போதும்😀😀


வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..


இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..


கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..


ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)


தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.


படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..


மழையோ குளிரோ..fan சுத்தணும்..


எம்.எஸ் அம்மாவின் ' குறை ஒன்றும் இல்லை'  காலையில் என்றும் வேண்டும்.


ராஜாவும் ரஹ்மானும் இசையாய் வேண்டும்.


கிச்சனில் எப்போதும் என்னோட பேசும் பாரதி பாஸ்கரும் க்ரேஸி மோஹனும் வேண்டும்..


உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.


பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.


செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..

என்கூட என் காமெராவும் இருக்கணும்..


வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..


முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..


எல்லாவற்றுக்கும் மேலே நீங்க கோரஸா சொல்றது கேட்கிறது..

வேறென்ன..' மத்யமர் எப்பவும்.வேணும்'..

சரிதானே..😀


லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..


உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

அப்பா

 #ஸண்டே_ஸ்பெஷல்..

எனக்கு...

இரண்டு அப்பாங்க..என்ன ஷாக் ஆகிட்டீங்களா?


என்னோட அப்பா..

என் பெண்களோட அப்பா..

அதாங்க என்ற வூட்டுக்காரர்.😀


என்னோட சேட்டைகள், ஓவர் அன்பு, என் சமையல், என் கோபம், என் சிரிப்பு,என் அழுகை ..எதுவாக இருந்தாலும் என்னைப் பொறுத்துக் கொள்ளும் ஜீவன்கள் இவர்கள்.


#அப்பாவும்_நானும்

ஆண்பிள்ளை இல்லையே என்ற குறையே வைக்காமல்..

சைக்கிள் ரிப்பேரா..அழுக்குத் துணியோடு நிற்பேன்.

ட்யூப் லைட் மாட்டணுமா..ஸ்டூலைப் பிடிச்சுப்பேன்.

பூக்களோடு அவர் பேசும்போது ..பக்கெட் தண்ணீரோடு நிற்பேன்.

வெளியே நான் கிளம்பணும் என்றால்..வானிலை ரமணன் ஆகிடுவார் அப்பா.

நனைந்து வரும்போது துவாலை நீட்டுவார்.

நான் தூக்கி போடும் சாவியை ..தூக்கில் சரியா தொங்க விடுவார்.

நியூஸ் பேப்பர்..நியூவாகவே இருக்கணும்.அவருக்கு..

மழையும் புயலும் மெழுகு வர்த்தி ஒளியில் ரசித்தோம் ஒரு காலத்தில்.

இருமல் வரும்போது..இருக்கேன் எதற்கென்பார்.

அம்மா கோபிக்கும்போது அரணாய் வந்து நிற்பார்.

லேசாய் முகம் சோர்ந்தால் கூட..' அலையறியேம்மா ' என்று அரற்றுவார்.

"ஒரே ஒரு அப்பளம் சுட்டுத் தரியா" என்று கேட்கும் அழகு..


எந்தப் பிரச்சனை என்றாலும் ..முதலில் உன்னால் சரி பண்ண முடிகிறதா என்று பார் .என்று சொல்லிக் கொடுப்பதில் என் ரெண்டு அப்பாக்களும் எனக்கு ஆசான்.


#வூட்டுக்கார_அப்பா

ப்ராஜக்ட் சைட்டிலேயே வாழ்வதால் .பெரிதாய் எதிலும் எதிர்பார்ப்பில்லாத குணம்.


முழு சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது இந்த அப்பா என் வாழ்க்கையில் வந்தததும் தான்.


அவர் சொல்றதற்கெல்லாம்  வேகமா மண்டையாட்டினாலும் என்  மனசு "அணில் வால் உள்ளே இன்னும் கொஞ்சம் நுழையணும்னு ' எங்கோ சிந்தனையில் இருப்பது தெரிந்தும் விடா முயற்சியில் இருப்பவர்.


நான் எப்படி சமைத்தாலும் ,வாயில் போடும் முன்பே "சூப்பர்" நு சொல்லும்.மகானுபாவர்.


ராஜா சார் இசைதான் அவருக்கு உலகம்.

கத்திரிக்காய் கிலோ என்ன விலை எனும் சிந்து பைரவி  சுலக்ஷணா என்னை ..

 music என்றால் மிரண்டு ஓடியவளின் மைண்ட் செட்டை மாற்றியவர்.


 என் வூட்டுக்காரரையும் நான் 'அப்பா'னு தான் கூப்பிடுவேன். 

எல்லாப் பெண்களுக்குமே தன் அப்பா மாதிரி வாழ்க்கைத் துணை கிடைக்கணும்னு ஆசை உண்டு.


பொறுமை, எளிமை எல்லாம் சேர்ந்த என் பெண்களின் அப்பா..


எனக்கு என் இரண்டு பெண்களோடு அப்பாவையும் சேர்த்து மூன்று குழந்தை என்றால்..

என் கணவருக்கும் அதே தான். 

என் ரெண்டு பெண்களோடு சேர்த்து நானும் ஒரு வளர்ந்த குழந்தை அவருக்கு


ரெண்டு அப்பாக்களுக்கும் பொண்ணுன்னா உசுரு..

Cricket Match ம் ..music ம் இவர்களை இணப்பது போக இப்பொ கூட சேர்ந்திருக்கு இன்னொரு 'm"..அதான் மொபைலு😀


என் உலகம்...என் அப்பாகள்.


புதுக்கோட்டை ராஜாவும் கோயமுத்தூர் ராமும் சேர்ந்தால் ..நான் என்ன ஆகறது?


Happy father's day dears.


சமூக_நோக்கம்

 #மகளிர்_மட்டும்

#அரசியல்

#சமூக_நோக்கம்


கடையின்  கதவு ஷட்டர் பாதி இறக்கி..மூடு விழா நடத்தும் நேரம்..' இருப்பா..இருப்பா..நான் கொஞ்சம் குனிஞ்சு உள்ளே வந்துடறேன்னு சொல்ற மாதிரி தான்..எங்கள ப்ராஜக்ட் வாழ்க்கையும்.நாங்க சாமான் செட்டெல்லாம் தூக்கிண்டு போய் செட்டில் ஆகும்போது ..மூடு விழா ஆரம்பிக்கும்.


இரண்டு ப்ராஜக்ட்..

1. முதல் முதலில் தனியான் நிறுவனம் எடுத்துக் கொண்ட hydel power project ..

ரம்மியமான நர்மதை நதிக் கரையில் வாசம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமா andolan நடக்கும்.

வூட்டுக்காரர் சீக்கிரம் வந்தா..' வேலை போய்டுத்தா ? ' என்று அவரோட டென்சனை ஏத்தி விட்டு விடறது.

நிறைய குளறுபடிகள்..அரசாங்க தரப்பில்..கம்பெனியின் தரப்பில்..

ஆனால்..என் பார்வையில்..


1. பாரத விலாஸ் மாதிரி ..ஒரு மினி இந்தியா ..பல மொழி..பல கலாச்சாரம்.. பலவகை உணவு..ஒரே குடும்ம்பமாய் கும்மியடித்த நாட்கள்

2. ஒரே பள்ளி இருந்தது போய்..சின்ன சின்ன பள்ளிகள் முளைப்பு

3. படித்த , கற்றுக் கொடுக்க ஆர்வம் இருந்த ப்ராஜக்ட் வாழ் பெண்கள் , பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிவர். (நானும் போனேன்..பாவம் பசங்க தான்)

4. ஒரே ஒரு சந்தை நாளை நம்பி இருந்த கிராம மக்கள், வியாபாரிகள் எல்லா நாளும் கடை விரித்தனர். புது புது பொருள்கள் கிடைக்க ஆரம்பித்தது.( நீங்க எல்லாம் வந்ததில் இங்கே விலை ரொம்ப கூடிப் போச்சு என்ற குற்றச் சாட்டு உண்டு)

5.சலூனிலிருந்து ..browsing centre வரை ..எல்லாம் புதுப் பொலிவுடன் 

6. பஸ் வசதி கொஞ்சம் ஆரம்பித்தது.

ஆனால்..கரையோர வாழ் மக்களுக்கு தகுந்த ஈடு தர முயலாததால்..வேறு பல அரசியல் காரணங்கள்..

ப்ராஜக்ட் மூடும் விழா தொடங்க..

அங்கே சேர்ந்த பறவைகள்..வேறு வேறு பாதையில் இரை தேடி பயணம் ஆரம்பிக்க

மெதுவாக களையிழக்க தொடங்கியது..அந்த இடம்..


மூட்டைக் கட்டி..அடுத்த முகாமுக்கு நாங்கள்.

மந்தாகினி நதிக் கரையில் முதல் hydel project.

BOOT (build -own-operate-transfer)project நு என் வூட்டுக்காரர் சொல்ல..ஏம்ம்ப்பா..அங்கே பெரிய முட்டி வரைக்கும் பூட்ஸ் போட்டுண்டு போகணுமானு கேட்கும் அம்மணி நான்.


குப்த் காசி கோயிலுக்குள் நுழைந்தேன்..டொனேஷன் சீட்டுக்கு காசு கொடு என்று ஒருத்தர் என்னை பிடுங்க.. திடீரென்று உரத்த குரலில்..' என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க எல்லாம்.. dam கட்டணும்னா விட்டுடுவோமா என்று கத்த ஆரம்பிக்க..குலை நடுங்கி குழந்தைகளோடு தப்பிச்சோம் பிழைச்சோம்னு என்னைக் கூட்டிச் சென்ற டிரைவர் காப்பாற்ற ஓடி வந்தேன்.


நான் கண்ட வளர்ச்சி அங்கே

1. நிறைய வேலை வாய்ப்பு. skilled,semi skilled ,in skilled labourers ..எல்லாருக்கும்

2. மலைவழி சாலை- எப்போது cloud burst ஆகும்..எப்போது landslide ஆகுமென்று கணிக்க முடியாத இடம். container லாரிகள் வந்து செல்ல செப்பனிடப்பட்ட சாலைகள்.(/அதுவும் செய்யக் கூடாது என்றும் சிலர்)

3. மலைப் பகுதி என்பதால் பல பொருட்கள் கிடைக்காது..கிடைக்க பல நாளாகும். போக்குவரத்து வசதி கொஞ்சம் வரத் தொடங்கியதால் வியாபாரிகள் கொண்டாட்டம். ( எல்லாம் மூன்று மடங்கு விலையில்)

4. தொலை தொடர்பு வசதி கொஞ்சம் பெருகியது.


இப்படி பல இன்னல்களும் :


1.பள்ளிகள் அங்கே மேல் வகுப்புக்கு கிடையாது.

so பாதி குடும்பம்..இங்கும் அங்கும்...

2. சரியான compensation தர மறுப்பு என்று குற்றச் சாட்டு.

3.சுற்றுச் சூழல் பாதிக்கும் என்று எப்போதும் கொடி தூக்கல்

இப்படியே இழுத்து..ஒரு வழியா இழுத்தே மூடிடலாம்னு முடிவு..மீண்டும் முகாம் தேடி..கூடு விட்டு அப்பா பறவைகள் ஓரிடம்..அம்மா தன் குஞ்சுகளுடன் ஓரிடம்.

ஆனால்..புத்தகத்தில் கற்றுப் புரியாத பாடம் நாங்கள் கற்றோம் இங்கெல்லாம்.

அரசியல்வாதியும் .சமூக ஆர்வலரரும் ஆதாயம் தேடும் இடங்களாக இந்த பெரிய பெரிய வேலைகள் ஆரம்பிப்பத்தும், நின்று போவதும்..


நஷ்ட்டம் பல கோடி என்று பேச்சு..

இதெல்லாம் ஏன் தீவிர ஆலோசனைக்கு பிறகு, மக்களுக்காக என்றால்..நல்ல முறையில் ..பாதகமில்லா முறையில் எடுத்துச் சென்றால்..

பல இல்லங்கள்,கிராமங்கள் ஒளியூட்டப்படலாமோ?


கொடி தூக்குபவர் யாருடைய கொட்டகை கூட இல்லை அங்கெல்லாம்.

நல்லது நடக்கும் என்றால்..நல்லபடியா யோசிச்சு நன்மை செய்யலாமே?

ஆரம்பிக்க வைத்து ,நட்டாற்றில் கை விடுவதால் யாருக்கு லாபம்?


நெஞ்சு பொறுக்குதிலையே..

பாக்கெட்_உலகம்

 #குறுங்கதை_போட்டி


#பாக்கெட்_உலகம்



சனிக்கிழமை...காற்றைக் கிழித்துக் கொண்டு பைக்கில் வேக வேகமாக  நிறைய இடங்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் போய் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் ரகு.


ஒவ்வொரு ரெஸ்டாரெண்ட்டிலும் டெலிவரி பாய்ஸ்களின் கும்பல்தான் அதிகமாக இருந்தது.


அந்த சைனீஸ் ஹோட்டலில் ஆர்டருக்க்காக நின்று கொண்டிருந்த போது அவன் செல்லப் பெண் காவ்யாவிடமிருந்து ஃபோன். ' "அப்பா..அப்பா..எனக்கு chilly garlic noodles வாங்கிண்டு வரியா..ப்ளீஸ்ப்பா..'


அதற்குள் இவன் டோக்கன் வந்துவிட அங்கிருந்து டெலிவரிக்கு கிளம்பினான்.


வெயில் என்பதால் ஐஸ்க்ரீமுக்கு ஏக டிமாண்ட். வேகமாக கொண்டு போய். கொடுக்கணும்.

வேலைப் பளுவிலும் மகனின் பெயர் தாங்கி வந்த குறுஞ்செய்தி யை ஆவலுடன் திறக்க.. 'அப்பா..don't forget ப்பா..my favourite chocolate mint fudge from 'corner house'.

 "ஓகே கண்ணா " பதிலளித்துவிட்டு தொடர்ந்தான் தன் வேலையை.


 மனைவியின் மிஸ்ட் கால் இருப்பதை கண்டு ..அவன் தொடர்பு கொள்ள..' என்னங்க ..எங்க அக்கா வந்திருக்காங்க..

 எனக்கும் அவளுக்கும் பார்ஸல் வாங்கிண்டு வந்துடங்க' சொல்லி முடித்தாள்.

 

ஏதோ மன உளைச்சல் காலையிலிருந்தே..

இப்போதெல்லாம் யார் வீட்டிலும் சேர்ந்தே உட்கார்ந்து சாப்பிடறதில்லையா? அவங்கவங்க வேண்டுமென்பதை  வாங்கிக்கிறாங்க..வேற வேற நேரத்தில..

ஏன் இப்படி ஆச்சு நம்மூர்? "


எப்படியோ எல்லா வேலையும் முடித்து

மேனேஜரிடம் சொல்லி விட்டு ..எல்லாரும் ஆசையாய்க் கேட்ட உணவுகளோடு வீட்டின் கதவைத் த்ட்ட..


ஓடி வந்பெண்..'ஹாய்ப்பா..தாங்க்ஸ்ப்பா' அவன் கையிலிருந்த பேக்கை வாங்கியபடி  சிட்டாகப் பறந்து சென்று விட்டாள்.


 சத்தம் கேட்டு ஓடி வந்த மகன் .' என் ஃப்ரண்ட்டும் காத்துக் கொண்டிருக்கான்ப்பா..' பிடுங்காத குறையாக அவன் ஐஸ்க்ரீமை வாங்கி ஓடிப் போனான்.

 

 அடுக்களையிலிருந்து வெளியே வந்த அவன் மைத்துனி..' வாங்க ரகு..எப்படி இருக்கீங்க? கேட்டபடி அவன் கையை நோட்டம் விட ..குறிப்பறிந்த ரகு ,அவர்களுக்காக வாங்கிய உணவைக் கொடுத்தான்.

 

 "கை கால் அலம்பிட்டு , இட்லி  உங்களுக்கு வெச்சிருக்கேன் ஹாட் பேக்கிலே சாப்பிடுங்க..நானும் அக்காவும் ரொம்ப நாளாச்சு இப்படி சேர்ந்து அரட்டை அடிச்சு" என்று மனைவி..வேகமாக விட்ட கதையை தொடரச் செல்ல..


காலியாக கிடந்த  டைனிங் டேபிள்  பரிதாபமாக அவனைப் பார்த்தது.😥

தேடல்

 06-12-18

#மனதில்_தோன்றிய_முதல்_வார்த்தை.

#தேடல்

மூக்கு கண்ணாடி எங்கேனு தேடலோட ஆரம்பிக்கும் விடியல்.

மூக்குக்கு மேல இருந்தாலும்..துழாவித் துழாவி..எங்கே வெச்சேன்னு சில சமயம்..

கண்ணுக்கெதிரிலேயே இருக்கும் சாவி கொத்தை கண்ட இடமெல்லாம் தேடல்.

வீட்டிலும் தேடல்..வெளியிலும் தேடல்..


தேடல் இல்லாத் வாழ்க்கை...தொய்ந்து போன ஒரு நடைப் பயணம்.


" அம்மா..என்னோட நோட் எங்கனு பாரு' இது கேட்காத வீடு இல்லை..சரினு தேடப் போனால்..எப்பவோ தொலைந்து போனது என்று முடிவு கட்டின முக்கியமான பொருள் ஒண்று கிடைக்கும்.


தேடல் ..ஆனால் நிறைய பாடம் கற்றுத் தரும்.

முதலில் எதைத் தேடறோம் என்கிற தெளிவு வேண்டும்.

அடுத்து, சில தேடல்கள்..பழசை தூசி தட்ட வைக்கும். புதுசாவும் வழிகாட்டும்.


இரையைத் தேடும்போது கொஞ்சம் இறையையும் தேடுவோம்.


" நான் இங்கிருக்கேன்..நான் இங்கேயும் இருக்கேன் ' என்று நம்மை கூப்பிட்டபடி இருக்கும் இறைவனைக் காண்போம்.


கடுமையா பேச நினைக்கும் போது இனிமையான வார்த்தை தேடுவோம்.


' உனை எங்கேத் தேடுவேன்..'என்று சும்மா இருக்காமல்..சுறுசுறுப்பாக இருப்போம்.

தேடிக் கொண்டே இருங்கள் எதையாவது.

வாழ்க்கையின் பக்கங்கள் வழி காட்டும் தேடல் வரிகளால் நிரம்பட்டும்.


#அதுசரி..இன்னிக்கு உங்களுக்கு தோன்றிய முதல் வார்த்தை என்ன மக்களே?

காணி நிலம் வேண்டும்..

 #பாரதி_நினைவுநாள்_கவிதை.


காணி நிலம் வேண்டும்..


பாரதியே உன் பாணியே தனி..

பரந்து விரிந்த சிந்தனை.. உன்

பாட்டிலெ ல்லாம் கண்டேன்..

பரவசம் மிகக் கொண்டேன் .


காணி ..என்ன அது?

கணக்கு.. நான் போட

கை விரல் வலித்தது..தலை

கிறுகிறு வென்று சுற்றியது..


பஞ்சம் தலை விரித்தாடினாலும்....உன்

பாட்டால் நெஞ்சம் நிறைந்திடுமே..

பட்டா இல்லை..சிட்டா இல்லை..

பாட்டில் சொல்லி விட்டாய்..மிகச்

சுலபமாக..

காணி நிலம் வேண்டுமென்று..


காணி நிலம் வாங்க..

கோடிகள் வேண்டுமிங்கே..மனக்

கோட்டை யொன்று கட்டினேன்..

குடி புகவும் ஆசைக் கொண்டேன்..


மனைகள் பல அங்கிருக்க..இந்திய

மாநிலத்தவ ரெல்லாம்  குடியிருக்க..

மினி இந்தியா ஒன்று உருவாக்குவேன்..

மதம் மொழி இனமென்ற...

'மத'ங்க ளில்லா மனங்களுடனே..


பாரதிக்கும் ஆசை வரும்..

பார்த்து வரட்டுமா ஒருமுறை என்று..

பரமனிடம் கேட்பான்..

பரவசத்தில் திளைப்பான்..


கனவு மெய்ப்பட்ட தென்று..

கண்ணீர் ஆனந்தமாய் வழிய..

கவலை இனி எனக்கில்லை..

களிப்பில் ஆடுவான்..பாடுவான்..


கலையுமே என் கனவும்...

காணியு மில்லை ..அங்கே

காண வந்த பாரதியுமில்லை .

கண்கலங்கி நின்றேன்..

கைவிட்டதே.. கனவும் கூட என்னை என்று..

திண்ணை_villa_in_Texas

 #குறுங்கதைப்_போட்டி


#திண்ணை_villa_in_Texas



" என்னால உன்னோடெல்லாம்.வந்து இருக்க முடியாதுடா..வேணுன்னா.. எப்போ உனக்கு லீவு கிடைக்கிறதோ வந்து பாரு' கறாராக சொல்லி அனுப்பி விடுவாள் ரகுவின்  அம்மா லக்ஷ்மி.


அப்பா காலமாகி அஞ்சு வருஷமாகியும் அந்தக் கிராமத்தையும் முக்கியமா அவளுக்கு பிடிச்ச திண்ணையையும் விட்டு வர மாட்டேன்னு ஒரே அடம்.


நாலே தெரு உள்ள கிராமத்தில் ..தன் வீட்டு திண்ணையிலே அந்த ஊர் பொண்களுக்கு கை வேலை, சமையல் குறிப்புகள், கைமருந்து எல்லாம் சொல்லிக் கொடுப்பாள். அவளைத் தேடி யாராவது வந்த வண்ணமிருப்பார்கள் .


ரகுவுக்கு எப்போதும் அம்மா பற்றி கவலை தான்.  அவன் மனைவி பைரவிக்கும் நல்ல வேலை. பையன் கள் நல்லபள்ளியில்.படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது வீடும் டெக்ஸாஸில் கட்டிக் கொண்டிருக்கிறான்.


பைரவிக்கு பட்டென்று ஒரு ஐடியா வந்தது. " ஏங்க ..இந்த திண்ணை..இந்த கிராம செட்டப் ..அம்மா ரூம் ..அங்கே இருக்கிற மாதிரி நம்ம ஆர்க்கிடெக்ட் கிட்ட சொல்லி பண்ணிட்டா என்ன? என்று கேட்க..

அவர்கள் 'திண்ணை வில்லா' ..

வீட்டின் ஒரு பக்கம் இந்த  டிசைன் உருவானது.


இந்த முறை அழுது புரண்டு ஒரு ஆறு மாசத்துக்கு அம்மாவை  அங்கே வர சம்மதிக்க வைத்தான்.


'நான் "டேக்ஸா" கிளம்பறேன்..என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அம்மா..அது டெக்ஸாஸ் ம்மா.."ரகு எத்தனை முறை சொல்லியும் அவள் டேக்ஸா என்றே சொன்னாள்.

"ஏண்டா..பேரே வாய்ல நுழையாத ஊருல நான் என்னத்த குப்பை கொட்டப் போறேன்னு ஒரே கவலை அவளுக்கு.


ரகு வீட்டில் முதலில் அவளை வரவேற்றது..அந்த அழகான விசாலமான மிகப் பெரிய  திண்ணை.

" என்னடா ரகு இதெல்லாம்?' கலங்கியவளை கட்டிக் கொண்டான்.

ஸ்வீம்மிங் பூல் பார்த்ததும்.' ஏண்டா ஆத்துக்குள்ள குளம் வெட்டி வெச்சிருக்கே..பொது எடத்தில் இருந்தாலும்..நாலு பேருக்கு வசதியா இருக்கும்னு விசனப்பட்டாள்.


அடுத்த நாள் காலை..

டொப்பு டொப்புனு ஒரே சத்தம்.

அலறி அடித்து ரகு போய்ப் பார்க்க..அம்மா ஸ்வீம்மிங் பூலில் துணியை அடிச்சு தோச்சுண்டிருந்தா ஒருவழியா ..சமாதானம் பண்ணி..உஸ்..அப்பாடா என்பதற்குள்..

சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கந்த சஷ்டி கவசம் கணீர்னு பாட ஆரம்பிக்க..கிணி கிணி மணி சத்தத்துடன் அம்மாவின் பூஜை ..

" ஏம்மா.. பூஜை பண்ணும்போது..எதுக்கு சூலமங்கலம் சஷ்டி கவசம் சொல்றா..நீ உள்ளே சஹஸ்ரநாமம் சொல்லிண்டிருக்கே' என்று கேட்க.."அதெல்லாம் நம்ம குடும்ப வழக்கம்டா' என்று சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.


வீடே மணக்க மணக்க..டிஃபன் சாப்பாடு.. பைரவிக்கும் பசங்களுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு லக்ஷ்மியை..

கடை கண்ணியெல்லாம் தானே போக ஆரம்பிச்சுட்டா..

' நீங்க லக்ஸ்ஸோட புள்ளதானே' ..இப்படி அறிமுகம் ஆனார் பலர்.

பக்கத்து பங்களா கேத்ரீனாவை அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் ரகு.


"ஹேய்..லக்ஸ் " என்று அவள் சொல்ல.." "டேய் ..என்னை என்னடா  லக்ஸு,மார்கோனு கூப்பிடறா..இவ சங்காத்தமே வேண்டாம்டா ' என்றாள்.


"அவா பேரு கேத்ரீனா..ரொம்ப நல்ல மாதிரி " என்றான் ரகு.


"என்னது.."கதறினாவா?..இப்படியெல்லாம் பேர் வெச்சுப்பாளாடானு ரொம்ப அப்பாவியாய் கேட்ட அம்மாவை என்ன செய்யறதுனு புரியல ரகுவுக்கு.

ஆனால்..என்ன மாயமோ,மந்திரமோ..செம்ம ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டா அவங்க ரெண்டு பேரும்.

 ஒன்றரை மணி நியூஸ் ஸ்டைல்ல மணிக்கணக்கா திண்ணையிலே  பேச்சு.

 இவர்கள் கூட அரட்டை அடிக்க சேர்ந்து கொள்ளும் பல சீனியர் சிட்டிசன்ஸ்.

 

மருமகள் கார் நிறுத்தும் சத்தம் கேட்டவுடன் காஃபி கலந்து ரெடியா அவள் கையில் கொடுப்பாள்..அம்மா..

"ஏன்ம்மா உங்களுக்கு சிரமம் "என்று பைரவி சொன்னால்.. அவள் தலையை அன்பாகத் தடவி.. களைச்சு போய் வர..இது கூட செய்ய மாட்டேனா உனக்கு' லக்ஸ்ஸின் ஆசையைப் பார்த்து ஆச்சரியமாகும் கேத்துக்கு.


எப்படி இப்படி மாமியாரும் மருமகளும் பேரன் களும் இவளை சுத்தி சுத்தி வரா' என்று.. பொறாமையுடன் பார்ப்பாள் கேத்.

மஃப்பின்ஸ் கூட ஸ்விக்கி யிலிருந்து ஆர்டர் செய்து சுகம் கண்ட அவள்..


லக்ஸைப் பார்த்து..தானும் ஏதாவது தன் மகனுக்கும் மருமகளுக்கும் தன் குட்டிப் பேத்திக்கும் செய்து வைக்க ஆரம்பித்தாள்.

பேத்தியை கண்டாலே ஓடுபவள் குழந்தையோடு நிறைய நேரம் செலவழித்தாள்.

சோர்ந்து போய் வரும் மருமகளை சிடுசிடுப்புடன் வரவேற்ற காலம் போய்..சுடச்சுட அவளுக்கு ஏதாவது செய்து வைத்தாள்.


' இந்த ஜெயிலில்இருக்கமாட்டேன்.

என்னை ஏதாவது ஹோமில் கொண்டு போய் விடு என்று கத்திக் கொண்டிருந்தவள்..லக்ஸோடு பழகிய சில நாட்களிலேயே..குடும்பம் என்பது..வெளியில் சென்று தேட வேண்டிய ஒன்றல்ல என்று புரிந்து கொண்டாள். 

வாழ்க்கைப் பாதையே மாறிப் போனது கேத்ரீனுக்கு. அவள் கொடுக்காத வரை கிடைக்காத அன்பு..இப்போது மகனிடமிருந்தும் மருமகளிடமிருந்தும் கிடைக்க..நன்றி சொன்னாள் லக்ஸுக்கு.


.லக்ஸும் கேத்தும் எல்லாரும் வேலைக்கு போனதும்..

வாரத்தில் இரண்டு நாள்..  ஒரு rehabilitation centre க்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டார்கள்.


லக்ஸ் அங்கே ஆதரவிழந்த பெண்களுக்கு சிறுசிறு கை வேலைகள் சொல்லித் தர ஆரம்பித்தாள்.

கேத் ..பெர்சனாலிடி டெவலப்மெண்ட் பற்றி நிறைய வொர்க்‌ஷாப் நடத்துவாள்.

அங்கே..சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் பெயரே வாயில் நுழையாத குறைகளுடன் இருப்பதைக் கண்டு..

அவர்களுக்கெனவே தன் நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

குழந்தைகள் அவளோடு ஒட்டிக் கொண்டது. கை தட்டக்கூட சேராத கைகளுள்ள குழந்தைகளின் மனது இவளோடு ஒட்டிக் கொண்டது.


கேத்தும் லக்ஸும் ...அந்த ஏரியா முழுதும் பிரபலம் ஆனார்கள்..

நாமே ஏன் இப்படி ஒரு மையம்.ஆரம்பிக்கக் கூடாது என்று யோசிக்க..அந்த திண்ணை..பலர் வாழ்வுக்கு திருப்பு முனை தரும் ஒரு தளமாக அமைந்தது.


அமெரிக்காவில் ஒரே ஒரு நாள் தான்

thanks giving day..


ஆனால் ..நம்ம லக்ஸ் வீட்டு திண்ணையிலே தினமும் ஏதாவது ஒரு க்ரூப் வந்து உட்கார்ந்து செல்லும் .' "திண்ணை living day' கொண்டாட..


கேத் லக்ஸ் இருவரின் சமூகத் தொண்டு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.


லக்ஷ்மி தன் கிராமத்து வீட்டையும் ஒரு புனர்வாழ்வு மையமாக மாற்றினாள்.

கிராமத்தில் ஆறு மாதம்..பிள்ளையுடன் ஆறு மாதம் என்று கழித்தவள்..

அங்கும் இங்கும் தன் பொது நலப் பணிகளைத் தொடர்ந்தாள். எத்தனையோ குடும்பங்கள் இவளை வாழ்த்தினர்.


க்ரீன் கார்டும் கிடைச்சாச்சு  லக்ஸுக்கு.


இப்போவும் காத்துக் கொண்டு இருக்கா..கேத்ரீனுக்காக..

இங்குள்ள புகழ் பெற்ற பொதுநலத் தொண்டு நிறுவனம் அவர்கள் இருவருக்கும் அளிக்க இருக்கும் பெரிய விருதை வாங்கச் செல்ல..


#திண்ணை_வில்லா என்றால் தெரியாதவர்களே இல்லை அங்கும் இங்கும் இப்போது.


"பேரே வாய்ல நுழையலடா'..என்று வெளிநாடு வந்தவளின் பெயர் ..


இப்போது இங்கும் அங்கும் எல்லாரின் மனதிலும் பதிந்த பெயரானது..

அன்பு சூழ் உலகு..

அப்பாவும் நானும்..

 அப்பாவும் நானும்..


மோட்டார் ரிப்பேரா..

த்ண்ணீர் ஊற்றி அவர் air lock சரிபண்ண..

தண்ணீர் வருதானு மொட்டை மாடியில் நான் பார்ப்பேன்.

TV ல கோடு கோடாய் வரும்..

திருப்பிச் சரி செய்வார் ஆண்ட்டெனாவை..

இன்னும் கொஞ்சம் திருப்பு..தெளிவா இல்லையென்பேன்.

சைக்கிள் துடைத்தால்..

துணியோடும் எண்ணெய்யோடும்

துணையாய் இருப்பேன்..

புதிதாய் செடி வைத்தால்..

அழகாய் அவர் குழி தோண்ட

அதில் உரமும் நான் இடுவேன்.

பரணியில் சாமான் எடுத்தாலோ

படுகெட்டியாய் ஏணியைப் பிடித்திடுவேன்.

ட்யூப் லைட் மாற்றயிலே

டார்ச்சாய் நான் இருப்பேன்

இரண்டு சக்கர வாகனத்தில்

இருவரும் வலம் வந்தோம்..


அன்று கற்றது

இன்றும் கைக்கொடுக்குது.


பழுதென்றவுடன் பதறாமல்

பார்ப்போம் ஒருகையென்று

மராமத்து வேலையெல்லாம்

மகிழ்ச்சியாய் செய்வேனிங்கே


மழையும் ரசித்தோம்..

மாட்சும் ரசித்தோம்.

எதிரணி அடித்தாலோ

எகிறிடும் இவர் ரத்த அழுத்தம்

இந்தியா விளையாடையிலே

இருப்புக் கொள்ளாமல் தவிப்பு.


இன்றும் அப்படியே

மழையும் இங்கே..

மாட்ச்சும் அங்கே.

எண்பதை தாண்டினாலும்

இளமை திரும்பும் இவருக்கு

இந்தியா- பாக் மாட்ச் என்றாலே..

காரிலிருந்து ஒரு க்ளிக்

 காரிலிருந்து ஒரு க்ளிக்



மேகத்திலும் தெரிகிறதே..🇮🇳 இந்தியா

Mapம் என் கண்ணிலே..


#One_India ..என்று

ஒன்றுபட்டு நாமிருக்க..


#Won_India..என்று

ஒருவரும் சொல்லிடுவரோ..


இந்திய நாடு என் வீடு..

இந்தியன் என்பது என் பேரு..

Sunday, January 23, 2022

வாங்க_சாப்பிடலாம்

 #வாங்க_சாப்பிடலாம்


ஏதாவது புதுசா ஒரு டிஷ் செஞ்சால் அதை நம்ம் நட்பூஸிடம் ஷேர் செய்வதில் ஒரு அலாதி சந்தோஷம்..


இவளுக்கு இதே வேலையாப் போச்சு..உங்க மை.வாய்ஸ் கேட்கறது..😃😃😃😃


இருந்தாலும்...


எப்பப்பாரு ..

 டிஷ்ஷு.

சைட்..டிஷ்ஷுனு..

தப்பிக்க முடியாத சுழலில் மாட்டியாச்சு..


இந்த ஃபோட்டோல என்ன இருக்கு?..


ஃபுல்கா ரொட்டி..

பக்கத்துல ..கப்பில..😋😋😋😋😋 குலோப்ஜாமூன்..

இதுக்கு போய் ஸ்வீட்டா?..


வரேன் வரேன்..

அது பக்கத்தில side dish இருக்கே..அது என்ன கண்டுபிடிக்க முடியறதா?..


#gulabjamun_kofta 😄😄😄😄😄


Kofta நு சொன்னாலே அதுல இருக்கற வேலையை நினைச்சு ஜூட் விட்டுடுவேன்..

But this is very simple😃😃


குலாப்ஜாமுன் உருண்டை பண்ணி..பொரிச்செடுத்து..


Usual சப்பாத்தி gravy இல் போடுங்க..


#Tips


ஒரு கப்பில் தயிர்+மஞ்சள்பொடி+ தனியா பொடி+ மிளகாய்பொடி கலந்து வெச்சுக்கோங்க..


Gravy செய்யும்போது.. வெங்காயம் 🍅 அரைச்சு விட்டு..அது நல்லா எண்ணெயில் பிரியும்.போது..

தயிர் மிக்ஸை சேருங்க..

Consistency சூப்பரா கோஃப்தாவுக்கு வர மாதிரி வரும்..


ரொம்ப கெட்டியா gravy இருந்தால்..வேண்டுமெனில் கொஞ்சம் வெந்நீர் விட்டுக்கலாம்..

Last ல பொரிச்ச உருண்டை போட்டு .ஒரு கொதி விட்டு.கொத்தமல்லி தூவ..


#Gulabjamun_kofta ready


குலாப்ஜாமுன் மிக்ஸ் இல்லையா..

No worries..


1 cupMilk powder+ maida கொஞ்சம்+1 spoon ரவை + சொட்டு ஏலக்காய் பொடி+ pinch cooking soda..

உங்க குலாப்ஜாமூன் மிக்ஸ் ரெடி..


சாதமா..சப்பாத்தியா?..


சூப்பரா ஒரு side dish ready.


ஒரு குஜராத்தி தோழி சொன்னது..இன்னிக்கு விழா எடுத்தாச்சு😃😃😃😃


Sunday, January 16, 2022

கனுப் பிடி

 கலர்கலராய் உருண்டைகள்

குங்கும சாதம் ,மஞ்சள் சாதம்

பழைய பொங்கல்..

பல தான் போட்ட கூட்டு 

கரும்புத் துண்டம் துண்டமா வெட்டி

( எப்படி நான் துன்னுவேன் இதை…!!!)

வெத்தலை பாக்கு வாழைப்பழம்

காய்ஞ்சு போன மஞ்சள் இலையை..

(…க்கும்…வாழையிலைப் போட்டு வகையா சோறு உனக்கு..)

கஷ்டப்பட்டு சுருக்கம் எடுத்து..

காக்கா புடி கணுப் புடி..

கா..கா..கா..னு கரையோ கரைனு நான் கத்த

கண்டுக்காம காக்கா பார்வை பார்த்துண்டு..

கலிகாலம் …கலிகாலம்..

காக்கா கூட சீந்தலையே..

காலைத் தூக்கத்தை தொலைச்சு

கணுப் பிடி நான் வெச்சதை..

என்ன சமாச்சாரம்..

ஏனிந்த கோபம்னு கேட்க..

கொந்தளித்த காக்கா..

கொண்டைக்கடலை மசாலா

கிளறி எடுத்து வெச்ச புளியோதரை..

கடலையும் முந்திரியும் மிதக்கும் தேங்காய் சாதம்

கடலைப் பருப்பு மசால் வடை..

கிச்சன்ல இத்தனை மெனு ரெடியாகும்போது

கிழிஞ்ச இலையில் பழைய சோறு..

கிழியுது வாய் மட்டும் உனக்கு.

காக்கா குரோதமாய் பாக்க..

இரு இரு எனக்கும் காலம் வரும்

பிட்சாவும் பர்கரும் நூடுல்ஸும்

பாஸ்டாவும் பச்ச இலைதழையும்..

ஓம்பூர்புவஸ்வ கோகோகோலாவில்

ஒன்னோட பொண்ணு படைப்பா

ஓடி நான் அப்போ வறேன்..

ஓடிடு இப்போ உன் கணுப்புடி எடுத்துண்டு

ஓரப் பார்வையில் என்னைப் பார்க்க..

உஜாலாவுக்கு மாறிய உனக்கு

உண்டு படையல் அடுத்த பண்டிகைக்கு..


காக்கா

 நான்: இன்னிக்கு என்ன ரொம்ப சத்தம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. 

( மை.வா.' சே ..இந்த காக்காவுக்கு தான் எத்தனை பாசம்..எப்படி கூப்பிட்டு கூப்பிட்டு அழைக்கிறது?)


காக்கா: யக்கா..இந்தப் பக்கம் யாரும் வந்துடாதீங்க..ரூட்டை மாத்துனு சிக்னல் கொடுக்கத்தான் இங்கே இன்னிக்கு எனக்கு deputation..

நான்: 😯😱😢😀


(காக்காவோட கூட நீ பேச ஆரம்பிச்சிட்டியா ம்மா..என் பெண்கள் இப்போ கவலையில் 😢)


சரி..சரி..போய் எல்லாரும் காக்கா பி(பு)டிங்க..


Happy கனு 


(ஒரே ஒரு டவுட்டு..க'னு' வா..இல்ல க'ணு'வா..சொல்லுங்கப்பா)

காக்கா

 "கலர் கலர் ரைஸ் தவிர ஏதாவது இருந்தா watsapp பண்றேன்னு சொல்லிண்டு இருக்கேன் என் கூட்டத்துக்கு..

இங்கேயும் அதே மெனுவா..இல்ல வாய்க்கு ருசியா எதாவது கிடைக்குமா?'


காக்கா வாய்ஸ் கூட கேக்க ஆரம்பிச்சுடுத்தே அகிலா உனக்கு..🤔


Thursday, January 13, 2022

பொங்கலோ பொங்கல்

 Happy pongal to all my friends here


pongal..a festival of 'feasting to fasting'

bhogi..poli and masala vada

pongal..pongal and ulundu vada

KANU..puliyogare with aviyal..

fourth day..vetha kuzhambu sutta appalam..

விருந்தில் ஆரம்பித்து விரதத்தில் முடியும் சூப்பர் பண்டிகை..

பொங்கலோ பொங்கல்

போகி

 Happy போளி...sorry sorry போகி வாழ்த்துக்கள் friends..

சமைச்சிண்டே status போட்டா இப்படித்தானோ..

#mykitchen


வெண்டைத்துவம்

 #வெண்டைத்துவம் 


#எச_to Radha Sriram


தலையே போனாலும்

தளிகைக்கு தனிச்சுவை

கொண்டையிழந்த வெண்டையே

வாணலியில் வதங்கும் நேரம்

வலையில் மாட்டி முழிக்குமே

தயிரும்  கொஞ்சம் சேர்க்க

தடையும் தாண்டி வெளிவருமே

தீயும் கூட்டிக் குறைக்க

தன் அடையாளம் மீட்குமே..

வெண்டையும் வாழ்வும் ஒன்றே

வழவழப்பு வறுவலாய் மாற

வாழ்க்கைப் பாடம் புரியுமே.

பிணையிலிருந்து விடுபடவே

பெரு முயற்சி தேவையே..

வடைமாலை

 எந்த வித agendaவும் கிடையாது..

ஆஞ்சுவுக்கு.. 

ஆசையாய் வடை மாலை கோர்க்க..

 Unconditional அன்பு கொண்டவன்..


ராம நாமம் சொல்ல..

ராப்பகல் பாராமல்..

ரோந்து செய்து எனைக் காப்பவன்..


மலை போல வருந்துயரம்..

பனி போல நீங்கணும்னு ..

மாருதியை வேண்ட..

மனக் கஷ்டமெல்லாம் போக்குபவன்..


Vada  மாலை சாத்தணும்னு நான் டேஹ்ராடூன் கோயிலில் கேட்டதை..

Bada mala என்று பண்டிட் காதில் விழ..

அமோகமா பெரிய மஞ்சள் மாலையுடன் ..

அன்று அலங்காரத்தில் ஜொலித்த ..

அந்த ஹனுமார்..கற்றுக்கச் சொன்னதுதான்..

இந்த வடை மாலை..

என்னே அவன் லீலை🙏🙏🙏


எங்கெல்லாம் ராம ஜபம் ஒலிக்கிறதோ.அங்கெல்லாம் வந்து விடுவான்..

அருளை அள்ளித் தருவான்🙏🙏🙏


மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு

 மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு


 ஓ ஹோய்


நாளைக்குத்தான் தை பொறக்கும்


தேதியாச்சு ஓ ஹோய்...


இந்தப் பாட்டு இல்லாத போகிப் பண்டிகை உண்டா?..


வழியனுப்புதலும்..வரவேற்பதும்..

நம் வாழ்வின் அங்கமன்றோ?..


கூடிக் கொண்டாடுவது அழிந்த போதிலும்..

நாடி அவன் முன் நிற்போம்..

நாளை விடியல்..

நல்ல சேதி கொண்டு வரணும் என்றே..🙏🙏🙏


கழியட்டும் ..மனக்

கசடுகள் எல்லாம்..

ஒழியட்டும்..நம்மை 

ஒடுங்கச் செய்த சக்திகள்..

பிறக்கட்டும் ..ஒரு

புது வழி....


அவன் தாளைப் பற்ற..

தடைகள் எல்லாம் தூளாகும்..


இந்த நாள் இனிய நாள்..

இனி வரப் போகும் நாட்கள் 

இன்பமும் வளமும் நிரம்பி

இனிமை சேர்க்கட்டும்..


போளியும் வடையும் உண்டு..

ஃபோட்டோ மட்டும்..😃😃😃😃

மத்தியானம் உண்டு😃😃😃😃


அன்புடன்😃😃😃

Wednesday, January 12, 2022

Save girls

 படம் சொல்லுமே பாடம்..


Save🙏🙏🙏🙏🙏🙏🙏


அன்புடன்😃😃😃


Tuesday, January 11, 2022

புருவம்_ரொம்ப_தூரமில்லை

 #புருவம்_ரொம்ப_தூரமில்லை.


என் கண்ல படாம எதுவும் இருக்காதுனு ஒரு அம்மா பஸ்ல பெருமையா சொல்லிக் கொண்டு வந்தார்கள்.


போய் கேட்கலாமானு தோணித்து ' மேடம்..உங்க கண்ணு மேல புருவம்னு ஒண்ணு இருக்கே . அது ஜஸ்ட் கண்ணுக்கு மேல தானே இருக்கு .

அதை  கண்ணாடி முன்னாடி நிக்காமல் 

உங்க கண்ணால பார்த்திருக்கீங்களா?


சரிதானே..

யோசிங்க

Rangoli

 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

#நாடு_புகழும்_பரிசினால் நன்றாகச்

#சூடகமே_தோள்வளையே_தோடே #செவிப்பூவே

#பாடகமே_என்றனைய #பல்கலனும்_யாம் #அணிவோம

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


ஆண்டாள் கேட்டாள் அன்று..

அவளடியார் நாமும் கேட்போம் இன்று😃😃😃😃


ஆனால் ஒண்ணு..


எத்தனை பொன்னகை அணிந்தாலும்..

புன்னகை ஒன்று இருந்தால்..

🌏 புவியில் இன்பம் தானே😃😃😃😃


எதுக்கும் கேட்டு வைப்போம்னு நாம் இருக்க😃😃


Status போட்ட பின் உன் stand ஐ மாற்றாதேனு ..வூட்டுக்காரர் சொல்ல..😃😃😃😃


என்ன செய்யலாம்..🤔🤔


பொன்னோடு..புன்னகையும்..

எல்லார் வாழ்விலும் நிரம்பி வழிய

வாழ்த்துக்கள்..💎💎💎💎💎


அன்புடன்😃😃


Sunday, January 9, 2022

ரங்கோலி

 வாங்கப்பா..ஒரு கப் ☕ குடிச்சுட்டு..

அப்படியே..

ஒரு வாழைக்காய் பஜ்ஜி, சமோஸா, உளுந்து வடை ,cookies சாப்பிட்டு வரலாம்..


கோலத்துக்கு  எத்தனை புள்ளினு காபி அடிச்சேன்..

அப்புறம் நம்ம creativity தான்..


காபிக்கு நடுவுல அவங்க பூ வெச்சா..

நாங்க buffet இல்ல வைப்போம்😀😀😋😋


கப் மேல இருக்கற ☕ powder

ஒரிஜினல் ☕ powder😀😀😀😀


லாக்டவுன் டைம்ல..

பச்சை லேபில் காரன்..மரத்தூளை காபித்தூள்னு கொடுக்க..


அப்படியே எடுத்து வெச்சேன்..

மார்கழி கோலத்துக்கு😀😀😀


So..கமகமகமனு....


அகிலா வீட்டு கோலத்தில் இருக்கும் ☕ யும்..மணக்குதே😀😀😀😀💪💪💪💪


Smileys 😃😃😃 எல்லாம்

கப்புக்குள் வந்து உட்கார்ந்துடுத்து😁😁😁😁


காபி அடிக்கலாம்..

ஆனால்..copy right வாங்கக்கூடாது..


கள்ளங்கபடமில்லாமல் இருக்கணும்..

கலப்படம் அன்பில் வேண்டாமே💪💪💪💪


அது பஜ்ஜியா..அது பேர் வடையானு எல்லாம் கேட்கப்படாது..ஆமாம்..சொல்லிட்டேன்😁😁😁


அன்புடன்😃😃😃😃


Saturday, January 8, 2022

இயற்கை

 ஆசை ஆசை இப்பொழுது..

பேராசை இப்பொழுது..

ஆசை தீரும் காலம் எப்பொழுது..?


மலையும்..முகிலும்..

மரமும் செடியும்..

மகிழ்ச்சியாக இருக்கோ..🤔🤔

👨 மனித நடமாட்டம் இல்லாமல்..


Plastic குப்பை குறைய..

Fantastic view இருக்கு இப்போ..

Drastic change வரட்டும் நமக்குள்ளே..

அதுவரை..

Artistic இயற்கையை ரசிப்போமே..🌹🌷🌸🌻


Friday, January 7, 2022

கோலம்

 Aahaa..

புள்ளிகள் நான் வைக்க..

துள்ளி ஓடி வந்ததே

வெள்ளை வெளேர் முயல் குட்டிகள்..

துணைக்கு நானும் வரேன்னு 

Teady ம் சொல்ல..

Carrot party ஒன்று..

கலகலப்பாய் நடந்தது...


கலர் கொடேன் எனக்கென்று..

கள்ள முயல் கண்ணைக் கசக்க..


உன் originality போய்விடுமே..

போட்ட சாயம் வெளுத்து போகும்..

உன் புன்னகையும் கூட போகும்..

கஷ்டமெல்லாம் உனக்கெதற்கு..

உன் கலரே..உனக்கு சிறப்பு...


சரிதானே நட்பூஸ்😀😀😀


அவங்க எல்லாம் மீட் பண்றாங்க..ம்ம்ம்ம்🤔😀😀😀

அன்புடன்😀😀


Thursday, January 6, 2022

வேஷ்டி தினம்

 


இன்னிக்கு வேஷ்டி தினமாமே😀😀


அதான் புடவையும் பூவும் வெச்சு கோரிக்கை..


திருப்பித் திருப்பி அதே வேஷ்டி தானே..

அதனால...ல..ல..


நம்பள்க்கி ஒகே ஒக்க புடவை..😀😀😀😀


யாராவது bed sheet நு சொன்னீங்கோ😀😀


கொஞ்ச நாளில் இப்படியும்.வேஷ்டி வரலாம்..


ராமராஜுக்கே வெளிச்சம்😀😀

Wednesday, January 5, 2022

Happy birthday bhuma

 Happy birthday Bhuma Shyamsundar 


வாசலிலே போட்டேன் ஒரு கோலம்..

வாழ்த்தொன்று உனக்கு சொல்லவே..


வார்த்தைகளும் வந்து விழுந்தனவே..

வாழ்த்துப்பா..நான் பாடவே..


Happy birthday பூமா..


உன் மனசு ஒரு #பூ 🌹🌹🌺🌻🌻 .#மா.

உன்..நட்பு..மணம் வீசும் செண்பக..மா?

உம் பேச்சு மதுர..மா?..


நீ ஒரு சூப்பர் அம்...(mom)மா..

இருக்க மாட்டாள் சும்..மா..

போட்டுத் தள்ளுவாள் கோல..மா

உன் சமையலோ சூப்பர் yum..ma..


இருப்பாள் மனதில் ஒட்டி gum..மா

நீ..எங்கள் எல்லாரின் செல்லம்..மா


நட்பூஸ் எல்லாரும் வாங்கம்மா..

பிறந்த நாள் பாட்டு பாடுவோமா?..


இந்த வாழ்த்து போது..மா..

இன்னும் கொஞ்சம் வேணுமா?..

மீட்டு ஒண்ணு போடுவோமா?

மீண்டும் ஆடிப் பாடி கொண்டாடுவோமா..?💃💃💃😀😀😀


கை போன போக்கிலே..

 கை போன போக்கிலே..

கோலம் போடலாமா?..


மனம் போன போக்கிலே..

டிஸைன் போடலாமா?.


டிஸைன் போன போக்கிலே..

கலர் தூவலாமா?..


கலர் போல வாழ்க்கையை..

களித்து ரசிப்போமா..?😀😀😀😀


Mangal var இன்று..

மங்களங்கள் அனைத்தும் நம் வீட்டு வாசல் தேடி வர..பிரார்த்திப்போம்..